Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்றலினால் ஆன பயன் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் புலி தாக்கி இறந்த அந்த வாட்ஸ் அப் காணொளியை பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது... !!!
..
மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.
..
அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்...!
என்னுள் எழும்பிய அந்த ஒரு கேள்வி ??
..
கற்றலினால் ஆன பயன் என்ன?
..
எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்..கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்..அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்..விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்..டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம்.
எல்லாம் சரிதான்.
..
ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன?
ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..
..
ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே..
..
அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..
கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம்.
..

ஆனால் ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?
..
அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.
ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.
..
ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
..
அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.
இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
..
காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.
மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.
..
கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.
..
இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல் (a+b)2 =a2 + 2ab + b2 என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?
..
ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?
..
அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.
..
இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?
..
தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.
..
மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?
..
விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?
..
மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?
..
இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?
..
இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே.. 
..
ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது.
..
மெக்சூத்தே.. இளம் வாலிபனே-
..
என்னை.. எங்களை மன்னித்து விடு..!

https://www.facebook.com/photo.php?fbid=779880468717004&set=a.294893433882379.65618.100000851739832&type=1

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் புலி தாக்கி இறந்த அந்த வாட்ஸ் அப் காணொளியை பார்த்த பிறகு, இரவு தூக்கம் இல்லாமல் தவிக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ஒரே ஒரு கேள்விதான் என் மனதில் நின்றது... !!!

..

மெக்சூத் என்ற அந்த வாலிபர், 10 நிமிடமாக, விஜய் என்று பெயரிடப்பட்ட வெள்ளைப் புலியைக் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டிருந்த காட்சி பார்க்கிற எல்லோரையும் கண்ணீர் வர வைத்துவிடும்.

..

அந்த வாலிபன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன்...!

என்னுள் எழும்பிய அந்த ஒரு கேள்வி ??

..

கற்றலினால் ஆன பயன் என்ன?

..

ஆபத்து நேரத்தில் எப்படி செயல்படுவது என்பதை அறிந்து வைத்திருக்கிறோமா?

..

அந்த வாலிபன், அந்த இடத்தில் அமைதியாய் எழும்பி நின்றிருந்தால் அந்தப் புலி ஒருவேளை தன் உயரத்தை விட வளர்த்தியாய் இருக்கிறானே..இவனை எப்படி எதிர் கொள்வது என்று அமைதியாகத் திரும்பிப் போயிருந்திருக்கும்.

ஏனென்றால் அது பசியினால் அவனைத் தாக்கவில்லை. அப்படித் தாக்கியிருந்தால் அவன் சரீரத்தை அங்கு விட்டு விட்டுப் போயிருக்காது. அதுமாத்திரமல்ல..10 நிமிடங்கள் அவனை அப்படியே பார்த்துக்கொண்டேயிருக்கிறது. தாக்க முனையவேயில்லை.

..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது. பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.

..

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

..

காரணம்..அறிவின்மை.. என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

..

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

..

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்.. அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன்?

..

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

..

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன?

..

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

..

மற்றவர்களை மதிப்பது எப்படி.. மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி? சாலை விதிகள் என்ன? ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்? அடிப்படைச் சட்டங்கள் என்ன? நமக்கான உரிமைகள் என்ன? காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

..

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது? விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது? மாரடைப்பு வந்தால் என்ன செய்வது? நோய்களை எவ்வாறு கண்டறிவது? எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

..

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது? கணவனிடம் எப்படி நடந்து கொள்வது? மற்றவர்களை நேசிப்பது எப்படி? நேர்மையாய் இருப்பது எப்படி?

..

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

...

நியாயமான கேள்வி, நல்லதொரு பதிவு பெருமாள்.

இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே பார்த்து அதிர்ந்த ஒரு விடயம் கையெடுத்து கும்பிட்டு மன்றாடத் தெரிந்த இளைஞனுக்கு தற்காப்பு ரீதியாக எதனையும் செய்யத் தெரியாத நிலை...மேலே அதனை படம் பிடித்துக் கொண்டிருந்த பலர் சரியான முறையில் புலியிடம் இருந்து உயிரைக்காப்பாற்ற புத்திசாலித்தனமாக எம்முயற்சியையும் செய்யாத முட்டாள்த்தனம்......

பெருமாள் உயிர்காப்பு என்று வரும்போது கெஞ்சி மன்றாட முடியாத இடத்தில் எதிர்ப்பையாவது அந்த இளைஞன் வெளிப்படுத்தவில்லை கும்பிட்டு மன்றாடி நின்ற கணம் இன்னும் கண'களுக்குள் மறைய மறுத்தபடிதான் இருக்கிறது.  

நியாயமான கேள்விகளும் அதற்கான சரியான பதில்களும் எதிர்காலத்திலாவது இத்தகைய நிகழ்வை தவிர்க்க வாய்ப்பளிக்கும்.

இவ்வருடம் ஹம் அம்மன் தேர்த் திருவிழாவுக்கு செல்லும்போது, எங்களுடன் நோர்வேயில் இருந்து ஒரு குடும்பமும் வந்திருந்தது. ஒரு இடத்தில் கும்பலாக காவடி ஆடிக் கொண்டிருந்தார்கள். 'இதுதான் காவடி' என தனது பத்து வயது மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தார் நோர்வேயில் இருந்து வந்திருந்த அம்மா.

அங்கே காவடி ஆடியவர்களுக்கும் ஆடத் தெரியவில்லை.. செடில் பிடிப்பவர்களுக்கும் பிடிக்கத் தெரியவில்லை. காவடி ஏந்தியவர்கள் மாடு இழுப்பதுபோல இழுக்க.. செடில்பிடிப்பவர்கள் முதுகில் பிணைத்த கயிற்றை ஒத்தி இழுத்துக் கொண்டிருந்தார்கள். 

அதை சிறிதுநேரம் உற்றுப் பார்த்த அந்த பத்து வயதுச் சிறுவனின் விழிகள் பிதுங்கி வெளியே வருவதுபோல உருண்டு... மயக்க நிலைக்குப் போய்விட்டான்.

உடனே தாய்க்காரி அவனின் முகத்தை மறைத்தவாறு கத்த.. சனங்கள் சுற்றிக் குழுமி மூடி... அந்தப் பிள்ளைக்கு சுவாசிக்கும் வழிகளை அடைத்துக் கொண்டு இருந்தார்கள்.

இப்படி ஒரு மூச்சு திணறலால் அவதியுற்ற அனுபவம் எனக்கிருந்ததால்... அவர்களை விலத்த "போடா அங்காலை" என்ற வார்த்தைகளைக்கூட பிரயோகிக்க வேண்டி இருந்தது.

அதற்காக அவர்களுக்கு ஒழுங்கான கல்வி இல்லை என்றோ அல்லது அறிவு இல்லை என்றோ கூற முடியாது. அந்த நேர உணர்ச்சிக்கு ஆளாகி, செயற்திறனை இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அடுத்தவனுக்கு எதையும் சொல்லலாம்.
தனக்கென வரும்போதுதான் அதன் பரிமாணங்கள் புரியும்.

அறிவு என்பதைவிட.. உணர்வுகளை சமாளித்து செயற்படும் துணிவும் சமயோசிதமுமே இப்படியான சந்தர்ப்பங்களில் முக்கியம்.

80களில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் பயணம் செய்யும் யாழ்தேவியில் ஆகக் கூடியது பதினைஞ்து பேர் அடங்கிய காடையர் குழு வன்முறையில் ஈடுபடும். அதற்காக அதிலிருந்து தப்பக்கூடிய அறிவோ பலமோ உள்ளவர்கள் அங்கில்லை என்பதல்ல காரணம். அந்த நேரம் ஏற்படும் உணர்வு அவர்களின் செயற்பாடுகளைக் கட்டிப்போடுகிறது என்பதுதான் உண்மை.

Edited by sOliyAn

வெறும் புண்ணாக்கு கட்டுரை ,

தற்செயலாக பெடி ஓட வெளிக்கிட்டு புலி அடித்திருந்தால் பெடி அசையாமல் இருந்திருந்தால் தப்பியிருக்கும் என்று எழுதுவார்கள் .புலி என்ன நினைத்து பெடியை அடித்ததென்று புலியிடம் தான் கேட்கவேண்டும் .

இனி புலி கூட்டுக்க விழுந்தால் என்ன செய்யவேண்டும் பூனை பதுங்கினால் என்ன செய்யவேண்டும் என்று கல்வி திட்டத்தை மாற்றவேண்டும் போலுள்ளது .

விபத்துக்கள் நடந்தே தீரும் அந்த நேரம் சமயோசிதமாக முடிவெடுத்து தலை தப்பினால் புண்ணியம் அல்லது மரணம் தான் .

முன் கூட்டி தெரிந்த விடயங்களுக்கே பிழையாக முடிவு எடுக்கும்போதுஎதிர்பாராமல் ஒன்று திடிரென்று நடக்கும் சரியான முடிவு எடுப்பது மிகக்கஸ்டம் .

Edited by arjun

அப்படி  எழுதினால் இப்படி என்பீர்கள்

இப்படி  எழுதினால் அப்படி என்பீர்கள்

கிட்டத்தட்ட இதே போல் ஒரு கட்டுரையை இணைத்து

சினிமாப்படத்தில் வந்தது போல் நெருப்பை கொழுத்தி   போட்டிருந்தால் புலி  ஓடியிருக்கும்  என நீங்கள் இங்கு எழுதியதாக ஞாபகம்...

இங்கு கட்டுரை  சொல்வது

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்பதே....

தொடர்ந்து படியுங்கள்

படிப்பதை  நிறுத்தினால் இப்படித்தான் வரும்  உங்களுக்கு??

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அண்ணன் அர்யூனுக்கு பசியுடன் கூடிய புலி உள்ள மிருகக்காட்ச்சிசாலை ஒன்று ரெடி பண்னுங்கள் .................. :D

வழக்கமாய் புலியை யாரோ புகழ்ந்து கட்டுரை எழுதிட்டாங்கள் என நினைச்சிட்டார் போல் இருக்கு விசுகன்னை பாவம் விடுங்க இந்த புலிகசப்பு மட்டும் இல்லையென்டால் ஆளை அடிக்கேலாது கண்டியளோ.

இத்தாலில ஒரு யாழ்ப்பாணத்தான் சேர்கஸ் கொம்பனீல வேலை கேட்டு போனானாம். சேர்க்கஸ் முதலாளியும், வேலை ஒன்றும் இல்லை.. வேணுமானால் ஒரு குரங்கு செத்துப்போச்சு.. நீ குரங்குமாதிரி வேசம்போட்டு சனத்தை சந்தோசப்படுத்துவியெண்டால் அந்த வேலையைச் செய் எண்டாராம்.. 

ம்ம்.. ஏதோ காசு வந்தால் சரிதானே... 

அந்த வேலைக்குச் சம்மதிச்சு... குரங்குக் கூட்டுக்குள்ளை குரங்கு மாதிரி நிண்டு சனத்தை சந்தோசப்படுத்திக் கொண்டு இருந்தானா.. சனமும் நிசமான குரங்கு வேடிக்கை காட்டுது எண்டு நம்பி கைதட்டி உற்சாகப்படுத்த..

பொடிப்பயலுக்கு கண்மண் தெரியாத புளுகம்... தன்னைவிட்டால் ஆளில்லை எண்ட நினைப்பில ஒரு துள்ளு துள்ளினாரா...

பக்கத்தில இருந்த சிங்கக் கூட்டுக்குள்ளைபோய் விழுந்து போனார்.

சிங்கம் அவனை நெருங்கி வந்திச்சு.
வேர்த்து விறுவிறுக்க.. ஐயோ என்ரை கடவுளே.. என்னைக் காப்பாத்து.. எண்டு கத்த...
 
பக்கத்தில வந்த சிங்கம், "நீயும் யாழ்ப்பாணமோ.. அங்கை எந்த இடம்?" எண்டு கேட்டிச்சாம்!! 

அர்ஜுனுக்கு வாற புலி இப்பிடித்தான் இருக்கும்!!   :o   :lol:

Edited by sOliyAn

ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு தான் நான் எழுதியபதிவு ,

எல்லாவற்றையும் எல்லோருக்கும் படிப்பித்துகொண்டு இருக்க முடியாது .

வாழ்க்கை பாடங்கள் மற்றவர்கள் அநுபவங்ககள் ஊடாக  கற்று கொள்வது இவையெல்லாம்  படிக்க பாடசாலை தேவையில்லை ...

சிலருக்கு எல்லாம் எழுதி அதைவேறு திருப்பி திருப்பி படிப்பிக்க வேண்டி இருக்கு ,வந்து மாட்டிக்கிட்டோம் இதுதான் விதி என்று நொந்துகொள்ளவேண்டியதுதான் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வனவிலங்கு காப்பகம்.. அதுவும் உல்லாசப் பயணிகளை உள்ளிளுக்கும் காப்பகம்.. எந்த அவசர உதவி முற்காப்பும் இன்றி இருந்துவிட்டு.. இப்போ விலங்கையும்.. மனிதனையும்... கல்வியையும் சாடி ஒரு பிரயோசனமும் இல்லை.

இதே வேறு நாடுகளில் என்றால்.. அலேட் கிடைத்ததும்.. உடனடி மீட்புக்குழு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு.. உயிரை காத்திருப்பார்கள்.

புலிக்கு கல்லால் எறிந்து.. அதனை துரத்த முற்பட்டதால்.. சும்மா பார்த்துக் கொண்டு இருந்த புலியை கடுப்பேத்தி.. கடிவிட்டது முட்டாள் தனம் என்றால் அதைவிட முட்டாள் தனம்.. பயங்கர வனவிலங்குகளை நோக்கி உல்லாசப்பயணிகளை இழுக்கும் ஓர் பூங்கா அவசரகால நிலைக்கு தன்னை தயார்ப்படுத்தாமல் இருந்ததமை.

இது குறித்து விவாதிப்பதும்.. உல்லாசப்பயணிகளை இழுக்கும் வனவிலங்கு காப்பகங்கள் எங்கும் அவசரகால மீட்பு அணி ஒன்றை அங்குள்ள ஊழியர்களில் இருந்து தெரிவு செய்தோரில் பயிற்றுவித்து அவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலமாக.. அவர்கள் சாதாரண பணியோடு.. அவசரகால நிலைமைக்கு செயற்படவும் வாய்ப்புக்கள் ஏற்படும். அதற்குரிய உபகரணங்களையும்.. ரோன் போன்ற தானியங்கி விமானங்களையும் பாவிக்கலாம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு தான் நான் எழுதியபதிவு ,

எல்லாவற்றையும் எல்லோருக்கும் படிப்பித்துகொண்டு இருக்க முடியாது .

வாழ்க்கை பாடங்கள் மற்றவர்கள் அநுபவங்ககள் ஊடாக  கற்று கொள்வது இவையெல்லாம்  படிக்க பாடசாலை தேவையில்லை ...

சிலருக்கு எல்லாம் எழுதி அதைவேறு திருப்பி திருப்பி படிப்பிக்க வேண்டி இருக்கு ,வந்து மாட்டிக்கிட்டோம் இதுதான் விதி என்று நொந்துகொள்ளவேண்டியதுதான் . :icon_mrgreen:

நீங்கள்கள் எப்பவும் ஒருபடி மேலைதான்.... :)

நீங்கள்கள் எப்பவும் ஒருபடி மேலைதான்.... :)

இது அப்பவே விளங்கியிருக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாம் அறிவு உள்ளவர்களுக்கு தான் நான் எழுதியபதிவு ,

எல்லாவற்றையும் எல்லோருக்கும் படிப்பித்துகொண்டு இருக்க முடியாது .

வாழ்க்கை பாடங்கள் மற்றவர்கள் அநுபவங்ககள் ஊடாக  கற்று கொள்வது இவையெல்லாம்  படிக்க பாடசாலை தேவையில்லை ...

சிலருக்கு எல்லாம் எழுதி அதைவேறு திருப்பி திருப்பி படிப்பிக்க வேண்டி இருக்கு ,வந்து மாட்டிக்கிட்டோம் இதுதான் விதி என்று நொந்துகொள்ளவேண்டியதுதான் . :icon_mrgreen:

இதைத்தான்  கட்டுரையும் சொல்லுது....

நான் மேலே என்று நீங்களே உங்களை நினைப்பதால் இவ்வாறு இருக்கலாம்

மற்றவர்கள் சொல்லணும்

அது  தான் நிஐம்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் புத்தகப் படிப்பு வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்று தானே இந்தக் கட்டுரை சொல்கிறது.விசுகு அண்ணா வேறு மாதிரி சொல்கிறார்.நான் தான் கட்டுரையை பிழையாக விளங்கிக் கொண்டேனா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.