Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோர் தங்களின் சுய குற்றப்பத்திரிகைகளையும் ஒரு தடவை புரட்டிப்பார்க்க வேண்டும்.

 

அமெரிக்கா மீது ஒரு குற்றப்பத்திரிகை எழுதினால்.. ஈராக்.. ஆப்கானிஸ்தானை மட்டுமே வைச்சு.. ஆயிரம் பக்கத்துக்கு எழுதலாம். அதற்காக அமெரிக்காவை யாரும் பயங்கரவாத நாடு என்று சொல்வதில்லை.

 

ஒட்டுக்குழுக்களின் அராஜகங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால்.. அவர்களின் இருப்புக்களே கேள்விக்குறியாக இருக்கும்..!! இதெல்லாம் அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. எப்பவும் புலி மீது குறை பிடிப்பதில் மட்டுமே உள்ளார்கள்.

 

இவர்கள் என்ன தான் உருண்டு புரண்டாலும்.. மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ள புலிகளின் பின் தான் மக்கள் எப்போதும் நிற்பார்கள். அதுதான் யதார்த்தம். அதனை உலகம் இன்று உணர ஆரம்பித்திருக்கிறது..! எனவே மக்கள் தெளிவோடு இருந்தால்.. விவேகத்தோடு செயற்பட்டால்.. இந்த ஓலமிடல்களுக்கு செவிமடுக்கத் தேவையில்லை. இவை வழமையான சுடுகாட்டு.. நாலு கால் ஜீவராசிகளின் ஓலமிடலுக்கு ஒப்பானது..!! :):icon_idea:

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply

எவர் என்ன கூறினாலும் புலிகள்தான் தமிழ்மக்களின் உண்மையான, நேர்மையான, பணத்திற்கோ, பதவிகளுக்கோ சோரம் போகத இலட்சியவாதிகள். போலி அரசியல்களுக்கும், தமிழ்மக்களிற்கு எந்தவித அரசியல் உரிமை கொடுக்காது இதுவரை தமிழ்மக்களையும் உலகையும் ஏமாற்றும் சிங்கள அரசுக்களுக்கும், புலிகளை தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்த நினைத்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்,இலட்சியங்களை கைவிட்டு தமிழ்மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒட்டுக்குழுக்களுக்கும் புலிகள் சிம்ம சொப்பனமாகவும்,பயங்கர எதிரிகளாகவும் இருந்தார்கள். புலிகளை அழிப்பதற்கே எல்லா சாத்தான்களும் ஒன்றுபட்டு சதிதிட்டங்கள் தீட்டின. இதில் ஒன்றுதான் பூச்சாண்டிகாட்டி புலிகளைதடைசெய்ய வைத்தது. உடனே வெளி நாடுகளில் இதற்கு எதிராக செயல்பட்டு தடையை எடுத்து இருந்தால் இவ்வளவு அழிவு நேர்ந்து இருக்காது. பரவாயில்லை இப்போதவது செயல்பட்டுள்ளார்கள். அடுத்து 3 மாதங்களிலும் இலங்கையின் செயல்பாடுகளை உண்ணிப்பாக கவனிக்கவேண்டும். அதற்கேப்ப தெளிவுபடுத்தல்களை உடன் செய்யவேண்டும் இல்லையேல்..பழைய குருடிதான்

அண்ணை அடுப்படிய விட்டு வெளியில் வருவதில்லை போலிருக்கு ,புலிகள் கை நீட்டிய வாங்கிய பண பட்டியல் ரொம்ப நீளம்.எல்லாரையும் எல்லா நேரமும் சுத்த முடியாது என்பதற்கு அவர்கள் அழிவும் ஒரு உதாரணம் .

மேலே ஒருவர் ஆசை தீர ஒருமையில் பலரை திட்டி தீர்த்திருக்கின்றார் .தமிழனின் அரசியல் தீர்வுவிற்கு பெரும் இடையூறாக இருந்தவர்களை அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் .சர்வதேசத்தில் கால் வைக்க முடியாத நிலை இனி அடுத்த கட்டம் காலம் தான் பதில் சொல்லும் .

அண்ணை அடுப்படிய விட்டு வெளியில் வருவதில்லை போலிருக்கு ,புலிகள் கை நீட்டிய வாங்கிய பண பட்டியல் ரொம்ப நீளம்.எல்லாரையும் எல்லா நேரமும் சுத்த முடியாது என்பதற்கு அவர்கள் அழிவும் ஒரு உதாரணம் .

மேலே ஒருவர் ஆசை தீர ஒருமையில் பலரை திட்டி தீர்த்திருக்கின்றார் .தமிழனின் அரசியல் தீர்வுவிற்கு பெரும் இடையூறாக இருந்தவர்களை அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் .சர்வதேசத்தில் கால் வைக்க முடியாத நிலை இனி அடுத்த கட்டம் காலம் தான் பதில் சொல்லும் .

 

தமிழனின் அரசியல் தீர்வு வந்தீட்டுது! தமிழனின் அரசியல் தீர்வு வந்தீட்டுது!! தமிழனின் அரசியல் தீர்வு வந்தீட்டுது!!!

 

எங்கை..?!

யாழ்தேவீல!!!!!!!!!!!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேசிக்கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கும் போராட்ட பணத்தை சுருட்டிய பினாமிகளுக்கும் மத்தியிலும், வெடிக்கும் முழங்கும் என்று கதை விடும் நடிகர்களுக்கு நடுவிலும் சாத்தியமான வழியில் நகர சிந்தித்த இன்னுமொரு தமிழன்... One of the initiators of the legal move against the eu ban on ltte. Rajeev Sreetharan 

 

 

1656304_10152510467339891_85337706338559

  • கருத்துக்கள உறவுகள்

http://curia.europa.eu/jcms/upload/docs/application/pdf/2014-10/cp140138en.pdf

 

மேலே உள்ள இணைப்பில் தீர்ப்பின் முழு விபரமும் உள்ளது.

என்னடா இன்னும் காணேல்லேயே எண்டு பார்த்தால் இண்டைக்கு பரவலா ஆரம்பிச்சிருக்காங்க TCCதான் வெட்டி விழுத்தினதாம்.. இன்னும் எத்தினை அமைப்புக்கள் வரிசையாக வரப்போறிங்க வேகமா வாங்க... தமிழண்டா... :D

---------

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக திறமையாக வழக்காடிய தாடைகளை உடைத்தவர்களுக்கு - உலகத்தமிழர்கள் நன்றிகளை தெரிவிப்போம்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (TCC ) தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் . தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக திறமையாக வழக்காடிய மூன்று வழக்கறிஞர்கள் Victor Koppe , Thamara Buruma, மற்றும் A.Marike van Eik ஆகியோர்களுக்கு உலகத்தமிழர்கள் நன்றிகளை தெரிவிப்போம்.

https://www.facebook.com/photo.php?fbid=836514686393155&set=a.104106339633997.2670.100001038951448&type=1&theater

http://www.pathivu.com/news/34632/57//d,article_full.aspx

சுபேஸ் அண்ணாவுக்கும் TCC க்கும் ஆகாது என்பது முன்பே தெரியும். :D

நீங்கள் இணைத்த கருத்தை எழுதியவர் இந்த கருத்தையும் நேற்று முகநூலில் இணைத்திருந்தார்.

"ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் 2011ம் ஆண்டு மனுவொன்றை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு சார்பாக தாக்கல் செய்தார்."

un-3.jpg

un-2.jpg

un-1.jpg

https://m.facebook.com/story.php?story_fbid=836056279772329&id=100001038951448

ஆனால் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது என்பதால் இது தொடர்பான பதிவை யாழில் இணைத்திருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட நிதிகளை சொத்துக்களை சுருட்டப்பட்டது போல் இனியொரு தடவை நிகழ சாதாரண ஒரு தமிழ்க்குடிமகனாக இனியும் நிகழ விரும்பவில்லை உழைப்பும் அதற்கான ஊக்கப்படுத்தல்கலும் உரியவர்களை சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன் அவ்வளவுதான் பெரிய பெரிய திமிங்கிலங்கள் இளையவர்களின் உழைப்பை சுரண்ட பாத்துக்கொண்டிருக்க தேவை இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருக்கு ஒரு நீதிமன்ற தீர்ப்பை வாசித்து விளங்கும் அளவுக்குக்கு கூட மேல்மாடியில் சரக்கில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த தீர்ப்பு புலிகள் பயங்கரவாதிகளா இல்லையா என்பதை ஆராயவில்லை. புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது ஆரிய தவறா எனும் ஆராயவில்லை. புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்த போது கையாண்ட நடைமுறை சரியானதா இல்லையா என்பதே தீர்ப்பின் எடுபொருள்.

அதாவது முடிவு சரியோ பிழையோ - முடிவை எடுத்த முறை பிழை என்பது மட்டுமே தீர்ப்பு.

ஈயூ விற்கு 3 மாதாகாலம் வழங்கப்பட்டுள்ள அவகாசம் - முடிவை மாற்ற அல்ல. சரியான முறையில், தக்க ஆதாரங்களை பாவித்து ( வேண்டுமானால் அதே முடிவையும்) முடிவை உறுதி செய்ய வழங்கப்பட்டுள்ள அவகாசமே இது.

இதன் விழைவு 2 மாதிரியாக அமையலாம்.

1 - தாமே சுயாதீன அறிக்கையை தயாரித்து அதன் அடிப்படையில் ஈயூ தடையை உறுதி செய்யலாம். இதுக்கே 70% வாய்ப்புள்ளது.

2 - புலிகள் இப்போ ஆற்றலுடன் இல்லை, அவர்கள் பற்றி இனி விசாரிக்க வேண்டியதில்லை எனவே தடைக்கான முகாந்த்ஹிரம்மும் இல்லை என்று சொல்லி ஈயூ தடையை விலக்கலாம். இதுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. என் கணிப்பில் 30%.

மீள புலிகள் அமைப்பாக, காரியாலயம் அமைத்து, 90 களில் செயல்பட்டது போல் ஈயூவில் செயல்பட எந்த உறுப்புரிமை நாடும் தயாரில்லை.

அடுத்தது தமிழரை பொறுத்தவரை - யாரை புலிகள் என்று இப்போ அடையாளம் காண முடியும். சரியோ தப்போ, 09 க்கு முன் ஒரு புலிதான் ஒரு தலைமைதான்.

இப்போ யார்? யார் அந்த இடத்தை எடுத்தாலும் மக்கள் இப்போ நம்பதயாரில்லை.

ஆகவே தான் சொல்கிறேன் மக்களும் காலமும் புலிகளை கடந்து போய் விட்டாயிற்று. புலிகள் மீதான தடையை நீக்குவதும், சுபாஸ் சந்த்ஹிரபோஸ் மீதான தடையை நீக்குவதும், வீரபாண்டிய கட்டப்பொம்மனின் குற்றறத்தை இல்லாது செய்வதும் ஒரே மாதிரியான செயல்களே.

தொடர் தோழ்விகளால் துவண்டு கிடக்கும் புலம்பெயர் உண்மை புலிவிசுவாசிகளுக்கு இது தெம்பை கொடுக்கும்.

தமிழ்த்தேசிய யாவாரிகள்ளுக்கு இப்பவே வாயூறத்தொடங்கியிருக்கும் - அடிக்கப் போகும் கொள்ளையை நினைத்து.

நிலத்து மக்களுக்கோ, தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கோ இந்த காலம் கடந்த வெற்றுத்தீர்ப்பால் ஒரு பயனுமில்லை.

இதுதான் யதார்த்தம். ஆனால் இங்கேதான் சிலருக்கு யதார்த்ததை கண்டால் ஒவ்வாதே. யாழ்பாணிக்க்கு ஜப்பான் மீனை கண்டமாரி ;)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீர்ப்பு பிரித்தானியாவுக்கு பொருந்தாது. யாருக்காவது சந்தேகம் இருந்தால் ஒரு பொது நிகழ்வை நடத்தி வெளிப்படையாக புலிக்கு நிதிசேர்த்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம். ;)

பேசிக்கொண்டு மட்டும் இருப்பவர்களுக்கும் போராட்ட பணத்தை சுருட்டிய பினாமிகளுக்கும் மத்தியிலும், வெடிக்கும் முழங்கும் என்று கதை விடும் நடிகர்களுக்கு நடுவிலும் சாத்தியமான வழியில் நகர சிந்தித்த இன்னுமொரு தமிழன்... One of the initiators of the legal move against the eu ban on ltte. Rajeev Sreetharan

1656304_10152510467339891_85337706338559

லதன், ரஜீவன் ஆகியோர் TAG (Tamils against genocide) என்ற அமைப்பில் உள்ளவர்கள் என்றும் அந்த அமைப்பு ரீதியாகவே சட்டப்போராட்டங்களை பதிந்து முன்னெடுப்பவர்கள் என்றும் "உமர் சென்னை" அவர்கள் டென்சி அண்ணாவின் பதிவின் கீழ் பின்னூட்டமிட்டிருந்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=10152445751818354&id=507153353

எனவே இணைந்து முயற்சி செய்பவர்களுக்கும் பாராட்டுக்கள் உரியது. மற்றும் புலிகளின் தடை நீக்கப்பட பாடுபட்ட / பாடுபடும் அமைப்புகளுக்கும், நபர்களுக்கும் பாராட்டுக்கள் உரியது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டுக்கும் உதவாத இந்த தீர்புக்கே உரிமை கோரி சண்டை தொடங்கியாச்சு.

80 களில் இயக்கங்களிடம் காணப்பட்ட அதே பொறாமை மனப்பான்மை. வெளிநாட்டுக்கு வந்தாலும் பரவணிக் குணம் மாறாது.

தமிழனின் அரசியல் தீர்வு வந்தீட்டுது! தமிழனின் அரசியல் தீர்வு வந்தீட்டுது!! தமிழனின் அரசியல் தீர்வு வந்தீட்டுது!!!

 

எங்கை..?!

யாழ்தேவீல!!!!!!!!!!!  :o  :lol:

அண்ணைக்கு தமிழ் தெரியாதோ . :icon_mrgreen: 

தீர்வு வந்துவிட்டது என்று எந்த மடையன் சொன்னான் ,புலி கிண்டி விட்டு சென்ற கிடங்கை நிரவவே பல வருடங்கள் எடுக்கும் 

தண்டவாள சிலிப்பர் கட்டைகளை கழட்டியவர்களை விட்டு யாழ்தேவியை விட்டார்கள் என்று இப்போதைக்கு திருப்திபடுங்கள் .

நீங்கள் ஹைவேயில்  சென்று மக்களை நடந்து செல்லவிட்ட பாவம்தான் எங்களை இந்த நிலையில் விட்டது . :o

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கு தேசிய தலைவர் பக்கத்தில் இருக்கனுன்னு அவசியம் இல்லை.

 

மக்கள் புலிகளை ஜனநாயக ரீதியில் அங்கீகரிக்கத் தயாராக உள்ளதோடு.. தேசிய தலைவரின் வழிகாட்டலோடு.. அதே இலட்சிய உறுதியோடு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு அரசியல் சூழலையே இன்று விரும்பி நிற்கிறார்கள். அந்த இடத்தை புலிகளை ஜனநாயக மயப்படுத்துவதன் மூலம்.. சில மேற்கு நாடுகள் இந்தியா - சிறீலங்கா மீது அழுத்தங்களை பிரயோகித்து தமது பிராந்திய நலன்களை அதனூடாக நகர்த்த முனையலாம்.

 

இந்தத் தீர்ப்பை.. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.. கூடிய கவனத்துடன் ஆராயும். புலிகள் ஜனநாயக ரீதியில் செயற்படுவதை இட்டு நாடுகள் ஒன்றும் அதிருப்தி கொண்டிருக்கவில்லை. மீண்டும் ஆயுதப் போராட்டம் என்ற இலக்கை நோக்கி நகராத உத்தரவாதங்களோடு புலிகள்.. ஜனநாயக அரசியலை பலப்படுத்த மேற்குநாடுகள் கரிசணை காட்டியே வருகின்றன. இதனை நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளை அவுஸ்திரேலியா அழைத்துப் பேசி இருந்தமை மற்றும் நியூசிலாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று அழைக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியமை.. நெதர்லாந்தில்.. இத்தாலியில் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்கள் மீதான வழக்குகளில் அவர்களுக்கு சாதகமாக அமைந்த தீர்ப்புக்கள் என்று பலவற்றை சுட்டிக்காட்டலாம்.

 

ஆக.. நுணுக்கமான சட்ட அணுகுமுறைகளுடன் கூடிய மேற்குலக ஜனநாயக வரையறைகளுக்குள் புலிகள் அமைப்பு செயற்பட உத்தரவாதம் அளித்தால்.. அவர்கள் மீதான தடைகளை சர்வதேச சமூகம் நீக்க முன்வரும். அதில் அவர்களுக்கு எந்த இடர்ப்பாடும் இருக்க வாய்ப்பில்லை. புலிகளின் தலைமை 2009 மே யில் அறிவித்த ஆயுதங்களின் மெளனிப்புக்குப் பின்னான சூழலை உலகம் அவதானித்தே வருகிறது. அந்த அறிவிப்பை புலிகளும் தமிழ் மக்களும் உறுதியாக பின்பற்றி வரும் சூழலையும்.. தமிழ் மக்கள் ஜனநாயக வழிமுறைகளில் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள நாட்டம் காட்டுவதையும்.. உலகம் கவனித்தே வருகிறது.

 

இவை விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் ஆதரவு பெற்ற மாபெரும் ஜனநாயக சக்தியாக வளர்க்கப்பட உதவும். அதனை சிறு குழுக்களும்.. ஒட்டுக்குழுக்களும்.. பணத்தாசை கோஷ்டிகளும் நாசம் பண்ணாமல் இருக்க.. மக்களும்.. பிற தாயக நலன்விரும்பி அமைப்புக்களும் கட்டுக்கோப்போடும்.. விவேகத்தோடும் செயற்படுவது அவசியம்.

 

இதில்.. தாயக.. தமிழக.. உலகத்தமிழின.. மற்றும் எமது மக்களின் அரசியல் விடுதலை விரும்பும் நாடுகளின் முன்னாள்.. இன்னாள் தலைவர்களின் வழிகாட்டுதலையும் பெற்று.. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுதல் நல்லது..!!

 

அதைவிடுத்து.. மீண்டும் புலிகள் வந்து அடிபாடு நடத்தி தமிழீழம் மலரும் என்று இந்த தீர்ப்பின் அடிப்படையில்.. மக்கள் நினைக்கவில்லை. ஆனால் ஒட்டுக்குழுக்கள் அப்படி காட்டிக் கொள்ள நினைக்கின்றன. அப்போது தான் அவைக்கு.. எஜமான் காலடியில் இடம் ஒன்று இருக்கும். அதனை புலிகள் நாசம் செய்ய அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அதன் பிரதிபலிப்பை யாழிலும் அவதானிக்க முடிகிறது. :icon_idea::)

ஒண்டுக்கும் உதவாத இந்த தீர்புக்கே உரிமை கோரி சண்டை தொடங்கியாச்சு.

80 களில் இயக்கங்களிடம் காணப்பட்ட அதே பொறாமை மனப்பான்மை. வெளிநாட்டுக்கு வந்தாலும் பரவணிக் குணம் மாறாது.

இந்த வசனத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் .புலிகளை விட எந்த வேறு எந்த இயக்கம் மற்றவர்களை பார்த்து பொறாமைப்பட்டது .புலிகளை தவிர வேறு எந்த இயக்கங்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக நான் அறியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா... ஈபிகாரங்களும் புளொட் காரங்களும் மோதுப்பட்டு.. புளொட் காரங்கள் காம்பை மூடிட்டு ஓடினது எங்க ஊரிலையே (யாழ் நகரில்..) நடந்தது. அதுமட்டுமல்ல.. புளொட்.. சுயமுரண்பாடு. ஈபி பிளவின் பின் டக்கிளஸ்.. பத்மநாபா அடிபாடு. பின்னர் ஈ என் டி எல் எவ் அணிகள் உதயம். ஈ பி  - ஈ என் டி எல் எவ் .. பரந்தன் ராஜன்..சுரேஸ்.. வரதர்.. டக்கிளஸ் அடிபாடு. இதெல்லாம் இங்க வாற அண்ணமாருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்தியப் படைகள் காலத்தில் நடந்த அடிபாடுகள் பற்றி அண்ணமார் அறிஞ்சிருக்கவும் வாய்ப்பில்லை. அதேபோல்.. ரெலோ.. தம்பா குறூப் அடிபாடு. ரெலோ சுய முரண்பாடு அடிபாடு. ரெலோ.. ரெலா அடிபாடு. இவர்கள் எல்லாம்.. முளைக்க முதலே தமக்குள் அடிப்பட்டது தான் வரலாறு. ஒரு அண்ணனுக்கு புலிகள் தாயக விடுதலை நோக்கி மக்களின் நலங்கள் கருதி.. போராட்டத்தின் நீண்ட கால நன்மை கருதி.. மேற்கொண்ட ஒட்டுக்குழுக்கள் மீதான.. ஒழுங்காற்று நடவடிக்கைகள் தான் அடிபாடா தெரியுது. :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய இயக்கங்கள் அடிபட்டா சகோதரக் கொலை.

புலிகள் செய்தா "தாயக விடுதலை கருதி, போராட்டத்தின் நன்மை கருதி மேற்கொண்ட நடவடிக்கை".

அவனுக்கு வந்தா தேங்காய் சட்னி, எனக்கு வந்தா ரத்தம்.

வணக்கம் பல கோணங்களில் பலவிதமான குழப்பரீதியான பதிவுகள் .பார்க்கும்போதே யார் ஏன்  என்று புரிகிறது . :)
 
ஒரு விடயம் சொல்லிக்கொண்டு எனது இசை முயற்சியை  ஆரம்பிக்கப்போகிறேன் உறவுகளே .
 
ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை .......?????? நன்றி வணக்கம்  :)

இந்த வசனத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் .புலிகளை விட எந்த வேறு எந்த இயக்கம் மற்றவர்களை பார்த்து பொறாமைப்பட்டது .புலிகளை தவிர வேறு எந்த இயக்கங்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக நான் அறியவில்லை .

 

வரலாறு மிக முக்கியம் அண்ணை...  அதுகள் உங்களுக்கு எல்லாம் தெரியாது எண்டதும் கூட எல்லாருக்கும் தெரியும்... 

 

பொறாமை எல்லாம்  ஏதாவது செய்கிறவர்களை பார்த்து வாறதண்ணை...   உங்களை பாத்து  பொறாமை பட என்ன செய்தனீங்கள் எண்டதை மட்டும் தயவு செய்து  சொல்லுங்கோ ....??   புண்ணியமாய் போகும்... 

 

யாழ் ஆஸ்பத்திரி வீதி வாய்க்காலுக்கை வைத்து தாஸை போட்டதும்  புலிகள் தான் , பச்சை படகு வைத்து உளவாளி எண்டு கடலிலை தாட்டு கொண்டதும் புலிகள் தான்,  போராட வந்த போராளிகளை  கிடங்கு கிண்ட வைச்சு  அதிலை போட்டு தாட்டதும் புலிகளே...   எல்லாம் பொறாமையிலை செய்ததுகள்... 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய இயக்கங்கள்.. மக்களுக்கு என்ன சொல்லி ஆயுதம் தூக்கினவை..???! பெயரில மட்டும் தமிழீழத்தை வைச்சுக் கொண்டு மக்களை ஏய்க்க வெளிக்கிட்டதால தான் அவையை மக்களே ஆதரிக்க முன்வரல்ல..! மக்கள் ஆதரவு பெற்றிருந்தா புலிகள் என்ன.. எவரும் எதனையும் செய்திருக்க முடியாது. மக்கள் ஆதரவை எது தக்க வைக்க முடியாமல் செய்தது.

 

ஆயிரம் இயக்கம் ஆரம்பிக்கலாம்.. ஆனால் மக்களை அதன் பால் இழுக்கவும்.. கவரவும்.. மக்கள் எண்ணங்களை.. பிரதிபலிக்கவும்.. செயற்படுத்தவும் விளையும் அமைப்புத்தான் நிலைக்கும். அதனால் தான் மக்களின் நீண்ட கால.. குறுகிய கால நலன்களை இட்டுச் செயற்படவும் முடியும்.

 

அந்த வகையில்.. புலிகள் அமைப்பு.... மக்கள் ஆதரவை தக்க வைக்கத் தவறி.. மக்களின் நோக்கங்களை சிதைத்து.. சுய இலாப ஆயுத அரசியல் காட்டிக்கொடுப்பு மக்கள் படுகொலை அராஜக அமைப்புக்களை தடை செய்ய முற்பட்டது.. அது ஈழத்தேசிய அரசியலை பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. மக்களும் அதனை அன்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் தான் இருந்தனர். இவங்களை அடிச்சு ஒதுக்கினால் தான்.. நாடு உருப்படும் என்ற நிலையில் தான் புலிகள் செயற்ட வேண்டிய சூழல் எழுந்தது.

 

எதையும் யதார்தத்தோடு பேச முன்வரனும். உண்மைகளை மறைத்து.. காலம் கடந்துவிட்டது..எனி எதையும் கதைச்சு மலுப்பலாம்.. சொதப்பலாம் என்று நினைக்கக் கூடாது. வரலாறுகள் உள்ளபடி பதியப்பட்ட தடங்களும் இந்த போராட்ட நீட்சியில் நடந்தே வந்துள்ளது. அவை இன்று திட்டமிட்டு மறைக்கப்பட்டாலும்.. அவற்றை பேச உணர்த்த மக்கள் இப்போதும் தயாராகவே உள்ளனர்..!! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகலூக்குள் நடக்காத உள்வீட்டுக் கொலைகளா ? நடக்காத காட்டிக் கொடுப்புக்களா ? கருணாவும் கேபியும் பிள்ளையானும் பாப்பாவும் யார் ? எல்லோருமே இந்த விடயத்தில் ஒன்றுதான், ஆனால் ஒரே வித்தியாசம் புலிகள் இறுதிவரை மக்களோடு நின்றார்கள். மற்றையவர்கள் நிற்கவில்லை அல்லது நிற்க அனுமதிக்கப்படவில்லை.

ஏனைய இயக்கங்கள் அடிபட்டா சகோதரக் கொலை.

புலிகள் செய்தா "தாயக விடுதலை கருதி, போராட்டத்தின் நன்மை கருதி மேற்கொண்ட நடவடிக்கை".

அவனுக்கு வந்தா தேங்காய் சட்னி, எனக்கு வந்தா ரத்தம்.

 

தம்பாபிள்ளை மகேஸ்வரனுக்கும் ,  வேலுப்பிள்ளை பாலக்குமாருக்கும்  என்ன சொறிவருத்தமோ தெரிய இல்லை அடிபடாமல் விலகிச்சினம் .. 

 

மாற்று இயக்க காறர் ஒருத்தரும் புலியிலை இணைய இல்லை  எண்டதை  ஆணித்தரமாக சொல்லி கொள்ளுகிறீர்கள்...  அப்படி தானே...??  இல்லை  காசை வாங்கி கொண்டு புலியிலை இணைஞ்சவை எண்ட போறியள் ...

 

உங்கட வியாதிகள் இப்படி தான் வந்து முடியும்.. 

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் உங்கள் குற்றச்சாட்டு.. புலிகளுக்கு மட்டுமல்ல.. உலகில் எல்லா அமைப்புக்களுக்கும் பொருந்தும். ஏன் ஒவ்வொரு குடும்பங்களுக்குக் கூட பொருந்தும்.

 

புலிகள் யாரையும் அவர்களின் இலட்சியத்தோடு நின்று மக்களின் விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி தடைசெய்யவில்லை. எப்போது ஒரு இயக்கம் ஆரம்பித்த கொள்கையை விட்டு.. மக்களை ஏமாற்றி.. மக்கள் மீது சவாரி விட ஆரம்பித்தார்களோ.. எப்போது மக்கள்.. இவங்கள் இருந்து என்னத்துக்கு என்று நினைக்க ஆரம்பித்தார்களோ.. அப்போது தான் புலிகள் சிலருக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தார்கள்.

 

இதனை நீங்கள் மறுப்பீர்களா..??????!!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

தல தயவு செஞ்சு விளங்கிற மாரி எழுதித் துலைக்கவும்.

என்னை மேற்கோள் காட்டிப்போட்டு என்னென்னமோ எழுதியிருக்கிறியள்.

எனக்கும் பதில் போட ஆசைதான் ஆனால் உங்கள் தமிழை ஒத்த புதிய பாசை தான் விளங்குதில்லை.

Edited by goshan_che

84இல் நான் ஜேர்மனிக்கு வரும்போது.. எங்கும் புளொட்.. எதிலும் புளொட்... பணமும் அதற்குத்தான் குவிந்தது.

 

இந்தியாவில் அதற்குள் டம்மிங் ஆரம்பிச்சுதா... சந்ததியார் தீப்பொறி பத்திரிகையில் டம்மிங்கில் அகப்பட்டு பலியானோரைப் பட்டியலிட்டார்.

இறுதியில் அவரது மருமகனான சங்கிலியனின் துவக்கிற்கே இரையானார்.

 

அந்த சமயத்தில் உமாவுக்கு BMW கார் அனுப்ப ஜேர்மனியில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!

 

சந்ததியாரின் மறைவுடன் கொஞ்ச ஜேர்மன் புளொடாரங்களும் புதுப் பணக்காரங்களானாங்கள்.
காருக்கு சேர்த்த காசுக்கு பொறுப்பு நின்றவர் பிரபல நகைக்கடை முதலாளியானார்.

 

இதுகளை பார்த்திருந்த சிலர்.. 2009இல் அதையே செய்தார்கள்!!  :o  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

84இல் நான் ஜேர்மனிக்கு வரும்போது.. எங்கும் புளொட்.. எதிலும் புளொட்... பணமும் அதற்குத்தான் குவிந்தது.

 

இந்தியாவில் அதற்குள் டம்மிங் ஆரம்பிச்சுதா... சந்ததியார் தீப்பொறி பத்திரிகையில் டம்மிங்கில் அகப்பட்டு பலியானோரைப் பட்டியலிட்டார்.

இறுதியில் அவரது மருமகனான சங்கிலியனின் துவக்கிற்கே இரையானார்.

 

அந்த சமயத்தில் உமாவுக்கு BMW கார் அனுப்ப ஜேர்மனியில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!

 

சந்ததியாரின் மறைவுடன் கொஞ்ச ஜேர்மன் புளொடாரங்களும் புதுப் பணக்காரங்களானாங்கள்.

காருக்கு சேர்த்த காசுக்கு பொறுப்பு நின்றவர் பிரபல நகைக்கடை முதலாளியானார்.

 

இதுகளை பார்த்திருந்த சிலர்.. 2009இல் அதையே செய்தார்கள்!!  :o  :lol:

 

அப்பவே வியாபாரத்தை ஆரம்பிச்சு காட்டினவை யார் என்று தெரியுது அண்ணா. நீங்கள் எல்லாரும் மெளனமாக இருப்பதால் தான்.. இன்று வரலாற்றை திரிப்பவர்களுக்கு அது உதவியா இருக்குது. உண்மையை பேச அவைக்கு மனசில்ல. ஏன்னா.. தாங்கள் தான் தவறுகளுக்கான உதாரணம் என்பது அவர்களுக்கு தெரியும். மக்களுக்கு தெரியக் கூடாது என்பது அவர்களின் எண்ணம்.

 

நேரம் கிடைக்கும் போது.. தொடர்ந்து எழுதுங்கோ.. கடந்த கால வரலாற்றை..!! :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.