Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவுக்கு ஜாமீன்

Featured Replies

-பெங்களூர் விரைகிறார்கள் அதிமுகவினர்

-ஜெயலலிதாவை வரவேற்க பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு தொண்டர்கள் குவிய வாய்ப்பு -சிறையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது பெங்களூர் போலீஸ்

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி-ராம் ஜெத்மலானி

-ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது-ராம் ஜெத்மலானி

-தீர்ப்பு தேதியன்று சென்னையில் இருந்து ஜெயலலிதா வந்த சிறப்பு விமானம் பெங்களூரிலேயே நிற்கிறது

-பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா

-தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு ஜெ. கட்டளையிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

-தமிழகத்தில் நடைபெற்ற வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

-2-3 மாதத்துக்கு வீட்டை விட்டு ஜெ. வெளியே செல்லமாட்டார்- ஜெ. வழக்கறிஞர் உத்தரவாதம் -விதித்த கெடுவுக்கு மேல் ஒருநாள் கூட இழுத்தடிக்காமல் ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

-கறுப்பு சட்டையை கழற்றிவிட்டு வெள்ளைச்சட்டை போட்ட அதிமுகவினர்

-போயஸ் கார்டனில் அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம்

-ஜெ. தரப்பில் 35,000 பக்க பதில் மனுவை டிசம்பர் 18க்குள் கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்

-1 நாள் தள்ளிப் போனாலும் ஜாமீன் ரத்தாகும்- சுப்ரீம் கோர்ட்

-ஜாமீன் காலத்தை மருத்துவ வசதிக்கு மட்டுமே ஜெ. பயன்படுத்துவார்- பாலி நரிமன்

-ஜெ.வுக்கு எதிரான 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

-கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீட்டு மனு மீது 3 மாதத்தில் விசாரணை முடிய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

-தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும், எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது- சுப்ரீம் கோர்ட்

-அசம்பாவிதம் ஏதும் நடந்தால் ஜாமீனை மறுபரிசீலனை செய்வோம்- சுப்ரீம் கோர்ட்

-சு.சுவாமி மீதோ, நீதிபதிகள் மீதோ களங்கம் கற்பித்தாலும் ஜாமீன் மறுபரிசீலனை ஆகும்

-ஜெ.வுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய கோரி கர்நாடக ஹைகோட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது

-இந்த வழக்கில் டிசம்பர் 18க்குள் ஜெ. தரப்பு விவர மனு தாக்கல் செய்ய வேண்டும்- சுப்ரீம் கோர்ட்

-டிசம்பர் 18ம் தேதி வரை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியே போக தடை

-ஜெ. மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்துக்குள் முடிக்க கர்நாடகா ஹைகோர்ட்டுக்கு உத்தரவு

-ஜெயிலுக்குப் போன 21வது நாளில் ஜாமீன் கிடைத்தது -அதிமுகவினர் உற்சாகக் கொண்டாடம்.

பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி -அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் பெங்களூரு பயணம்

-6 தமிழக அமைச்சர்கள் திடீர் பெங்களூர் பயணம் -சி்றையில் இருந்து இன்று அல்லது நாளை வெளியே வருவார் ஜெயலலிதா -ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/supreme-court-hear-jayalalithaa-s-bail-plea-today-213108.html

  • தொடங்கியவர்

ஜெ.க்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதிகள் கூறிய தீர்ப்பு விவரம் என்ன?
 
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் கடுமை காட்டியும் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அளித்த உறுதி மொழியை மட்டும் நம்பி ஜாமீன் வழங்கியுள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்து ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
 
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
 
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவ உள்ளிட்டோரின் 4 ஆண்டு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு 18.12.2014 வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.
 
ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது.
 
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 18.12.2014 க்குள் மேல்முறையீட்டு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் அது 35 ஆயிரம் பக்கமோ 40 ஆயிரம் பக்கமோ தாக்கல் செய்தாக வேண்டும்.
 
18.12.2014ஆம் தேதிக்குப் பின்னர் ஒருநாள் கூட கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது. மேல்முறையீட்டு வழக்குக்காக ஆவணங்களைத் தாக்கல் செய்வதோடு மட்டுமல்லாமல் தலைமை நீதிபதியிடம் சென்று வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றையும் அளிக்க வேண்டும்.
 
இந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கின் விசாரணையை கர்நாடகா உயர்நீதிமன்றம் மூன்றே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
 
நீதிபதி குன்ஹா கன்னடர் என்பதால் தீர்ப்பளித்துவிட்டதாக எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது.
 
நீதிபதி குன்ஹா மட்டுமல்ல நானும் (தத்து) ஒரு கன்னடர்தான். நீதிபதிகள் மீதோ, சுப்பிரமணியன் சுவாமி மீதோ எந்த ஒரு விமர்சனத்தையும் அதிமுகவினர் முன்வைக்கக் கூடாது.
 
தமிழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களும் சகிக்க முடியாதவை. வன்முறை சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று அதிமுகவினருக்கு ஜெயலலிதா உத்தரவிடவேண்டும்.
 
இதற்கு மேலும் நீதிபதிகளை விமர்சிப்பது, சுப்பிரமணியன் சுவாமியை விமர்சிப்பது, மிரட்டுவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது அப்படி விமர்சனங்களை முன்வைப்பது அல்லது வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதியதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் நாங்கள் ஜாமீன் பற்றி மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
 
பாலிநாரிமன் மூத்த வழக்கறிஞர் என்பதால் அவரது உறுதிமொழிகளை நம்பி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

 

http://tamil.oneindia.com/news/india/sc-grants-bail-jayalalithaa-da-case-asks-her-ensure-aiadmk-workers-dont-create-law-213148.html

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவா கொக்கா? அதுசரி ஜெ வெளிய வரும் படத்தை போட்டல்தான் நம்புவோம்....

  • தொடங்கியவர்

தண்டனை நிறுத்தி வைத்தும், ஜாமீன் கிடைத்தும் கூட ஜெயலலிதாவுக்கு பயனில்லையே!

 

டெல்லி:

 

ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதே தவிர அவர் 'குற்றவாளி' என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. எனவே கர்நாடகாவில் மேல் முறையீடு விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்று கூறும் வரை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது, அவரது பதவி பறிப்பும் தொடரும். உச்சநீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்குவது என்றால், தண்டனையை நிறுத்தி வைப்பது என்று அதற்கு மற்றொரு பெயரும் உண்டு என்பது சட்டம் அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே.

 

எனவேதான் ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தண்டனை அனுபவிக்கும் ஒருவர் எப்படி ஜாமீனில் வெளியே போக முடியும் என்ற சின்ன லாஜிக் இதன் பின்னால் ஒளிந்துள்ளதால், தண்டனையை ரத்து செய்துவிட்டு ஜாமீன் வழங்குவதாக அறிவித்துள்ளனர் நீதிபதிகள்.

 

ஆனால் தண்டனை ரத்து என்பதை சிலர், குறிப்பாக ஆளும்கட்சியினர் தவறாக புரிந்துகொண்டிருப்பது அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தெரியவருகிறது. பேட்டிகளிலும் தவறான புரிதலுடனே பேசிவருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்துதான் 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம் விதித்தது சிறப்பு நீதிமன்றம். இந்த தண்டனையை நிறுத்தக்கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு வரும் 27ம்தேதி விசாரணைக்கு வருகிறது.

 

ஆனால், இவர்கள் ஜாமீன் கோரி போட்ட மனுதான் ஹைகோர்ட்டில் தள்ளுபடியானது. ஹைகோர்ட் தள்ளுபடி செய்ததால் ஜெயலலிதா தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுள்ளது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையிலுள்ளதால், அதில் சுப்ரீம்கோர்ட் தலையிட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது. எனவே கர்நாடக ஹைகோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை முடிந்து ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொல்லும்வரை அவர் குற்றவாளி என்ற அவப்பெயருடனே இருப்பார். குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடியும்.

 

ஒருவேளை ஹைகோர்ட் அவரை குற்றவாளிதான் என்று அறிவித்து, கீழ்கோர்ட் தீர்ப்பை தூக்கிப்பிடித்தால், ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றம் செல்லமுடியும். அங்கு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று கூறி ஜெயலலிதாவை விடுவித்தால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெறுவார். எனவே இந்த விசாரணைகள் முடியும்வரை, ஜெயலலிதா எந்த பதவிக்கும் வர முடியாது, தேர்தலிலும் போட்டியிட முடியாது. இப்போது விடுதலையாகி ஜெயலலிதா சென்னை வந்தாலும் அவரால் முழு நேர அரசியல்வாதியாக எதிலும் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.com/news/india/jayalalitha-s-sentence-suspended-but-conviction-not-stayed-213147.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

da3e3b3a4c609ee2e8b3062fc791090a.jpg

மூன்றாம் இணைப்பு
 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் (இந்திய ரூபாய்) விதித்தது. 
 
இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்தது. 
 
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர் ஜெயலலிதாவை பிணையில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
 
மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா பிணையில் இன்று மாலை அல்லது நாளை சிறையிலிருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணை மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளது.
 
பிணை வழங்கப்பட்டதை அறித்த ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் கொட்டும் மழையிலும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
 
17-admk-celebration4-6001.jpg
 
fasvivel%201.jpg
 
 
 
இரண்டாம் இணைப்பு
 
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் ஜாமீன் மனுக்களையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான குழுவினரே விசாரணை செய்து வருகின்றனர் தற்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதங்களை தொடங்கினார்.
 
அவர் தனது வாதத்தில் ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, .உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.
 
இதேவேளை 18 ஆண்டு வழக்கை இழுத்தடித்தால் ஜாமீன் கொடுத்தால் இன்னும் எத்தனை ஆண்டு இழுப்பீர்களோ? தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் தொடர்ந்து வாதம் இடம்பெறுகிறது
 
பா.ஜ. க தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வழக்கை 27ம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அந்த மனுவில், ''ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தாம் மனுதாரர் என்பதால் தம்முடைய கருத்தையும் கேட்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார் எனவே இன்றைய தினம் ஜெயலலிதா ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
முதலாம் இணைப்பு
 
இன்று விடுதலையாவதில் சிக்கல் 
 
ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கினாலும் இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாவது கடினம் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
மன்றுக்கு மனு வரும் போது ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைக்கும். குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு கேட்கும். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றுள்ளதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து ஜெயலலிதா இன்றே ரிலீஸ் ஆவதில் சிக்கல் இதனால் மாலை வரை இந்த விவாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதன்பிறகும் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று நீதிபதி கூற வாய்ப்பு உள்ளது. அவ்வாறின்றி, ஜாமீன் கொடுக்க முன்வரவும் வாய்ப்புள்ளது. 
 
 
ஒருவேளை ஜாமீன் அளித்தால், அந்த தீர்ப்பின் பிரதி, கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டும். கர்நாடக ஹைகோர்ட் அதை பரிசீலித்து உத்தரவிட்டபிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு உத்தரவு அனுப்பும். அந்த அந்த உத்தரவு மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும். 
 
எனவே இன்று ஜாமீன் அளிக்கப்பட்டாலும், கர்நாடக ஹைகோர்ட், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் கோர்ட் மற்றும் சிறை நிர்வாகம் மாலையுடன் அலுவலக வேலைகளை முடித்துக்கொள்ளும். எனவே இன்று ஜாமீன் கிடைத்தாலும் ஜெயலலிதா இன்று விடுதலையாவது சந்தேகமே.
 
இது இவ்வாறிருக்க ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கிடைக்க வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
17-1413522839-admk-people345-600.jpg
 
17-1413522770-pooja-600.jpg
 
17-1413522649-admk-prayers36-600.jpg
 
17-1413523346-admk-prayers38-600.jpg
 
17-1413522389-admk-people354-60(1).jpg
 
 
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=625833554117302278

  • தொடங்கியவர்

குன்ஹா வரணும்: ஜாமீன் நடைமுறைகளால் தாமதமாகும் ரிலீஸ்!- நாளைதான் வெளியே வருவார் ஜெ.!!

டெல்லி: ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியிருந்தும் இன்றே அவர் சிறையில் இருந்து விடுதலையாவது கடினம் என்கிறது சட்ட நிபுணர்கள் தரப்பு. ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பு தனது வாதத்தை முன் வைத்தது.

 

குறிப்பாக, ஜெயலலிதாவின் உடல் நிலையை காரணம் காண்பித்து, அவரை ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் பாலி நாரிமன் கேட்டார். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவர்களிடமிருந்து தேவைப்படும் மருத்துவ ஆவணங்களை ஜெயலலிதாவின் வக்கீல்கள் பெற்றதால், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அரசு வக்கீல் இல்லாமலேயே விசாரணையை எதிர்கொண்ட இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

 

ஆனால் அந்த தீர்ப்பின் பிரதி, சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றம் அதை பரிசீலித்து ஜாமீனுக்கு தேவையான நடைமுறைகளை மேற்கொண்ட பிறகு, பெங்களூர் மத்திய சிறைச்சாலைக்கு ஆர்டர் அனுப்பும். அந்த ஆர்டர் மத்திய சிறை அதிகாரிகளின் கைகளுக்கு சேர்ந்த பிறகே ஜெயலலிதாவை விடுதலை செய்ய முடியும்.

 

எனவே சிறப்பு நீதிமன்றம், அங்கிருந்து சிறை என இந்த அலைச்சலுக்கு கால அவகாசம் தேவைப்படும். ஆனால் கோர்ட் மற்றும் சிறை நிர்வாகம் மாலை 6 மணியுடன் அலுவலை முடித்துக்கொள்ளும். எனவே இன்று மாலைக்குள் ஆர்டர் சிறையை சென்றடையாவிட்டால் இன்று ஜெயலலிதா விடுதலையாவது சந்தேகமே. இன்று மாலைக்குள் உச்சநீதிமன்ற ஆர்டர் சிறைக்கு சென்று சேராது என்றே தெரிவதால் நாளை மதியம்தான் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியே வர முடியும்.

 

ஒருவேளை இன்றே ஆர்டர் காப்பி வந்தாலும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க டெல்லி சென்றுள்ளதால் இன்றே அவரால் சுப்ரீம் கோர்ட் ஆர்டரை பரிசீலிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பெங்களூர் திரும்பி வந்த பின்னரே ஜெயலலிதா தரப்பின் ஆவணங்களை ஏற்றுக் கொண்டு அவரை சிறையிலிருந்து வெளியே விட உத்தரவிடுவார்.

http://tamil.oneindia.com/news/india/jayalalitha-can-t-come-from-jail-today-213126.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா வீட்டு சிறையில் இருக்கக் கூட தயார்.. உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த வழக்கறிஞர் நாரிமன்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைக்கக் கூட உத்தரவிடுங்கள் என்கிற தொனியில் மூத்த வழக்கறிஞர் பாலிநாரிமன் வாதிட்டதால் தலைமை நீதிபதி தத்து அதிர்ச்சியடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாத விவரம்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீது ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா சார்பாக இன்று காலை 11.30 மணிக்கு மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜரானார். பாலி நாரிமன் தனது வாதத்தின் தொடக்கத்தில், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காதது தவறு என்று கூறி பல்வேறு வழக்குகளை உதாரணம் காட்டி வாதிட்டார். பின்னர் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏராளமான ஆவணங்களை பரிசீலிக்கத் தவறிவிட்டார். அத்துடன் ஜெயலலிதா மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்பதையும் அவர் கவனிக்கவில்லை என்றும் நாரிமன் வாதிட்டார்.

 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி தத்து, மிஸ்டர் நாரிமன் இந்த வழக்கு முடிவடைய எத்தனை ஆண்டுகாலம் ஆனது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நாரிமன், "பல ஆண்டுகள் நடைபெற்றது" என்றார்.

 

மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தற்போது தண்டனையை நிறுத்தி நான் உத்தரவு போட்டால், நீங்கள் மேல்முறையீட்டு மனுவை முடிப்பதற்கு இன்னும் 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பாலி நாரிமன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை 2 மாதத்துக்குள் முடிக்க எனது கட்சிக்காரர் சார்பாக நான் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்கிறேன் என்றார். ஜெயலலிதா தரப்பில் எந்த ஒரு தாமதமும் ஏற்படுத்தமாட்டார்கள் என்றும் உறுதி அளித்தார்.

 

"இந்த வழக்கு ஆண்டுக்கணக்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது குற்றம்சாட்டப்பட்டோரின் நடத்தையை உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, சிறப்பு நீதிமன்றமோ கருத்தில் கொள்ளக் கூடாதா? என்றார் தலைமை நீதிபதி. இதனைத் தொடர்ந்து தமது கருத்தை நாரிமன் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்றார்.

 

மேலும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா தனது வீட்டிலேயே இருக்கவும் தயார் (வீட்டுச் சிறை போல) என்றார் நாரிமன் இந்த வாதத்தைக் கேட்டு தலைமை நீதிபதி தத்து அதிர்ந்து போனவராக "ஒருவருக்கு ஜாமீன் கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற நடைமுறையில் இல்லாத அசாதராண உத்தரவுகளையெல்லாம் நாங்கள் பிறப்பிக்க முடியாது என்று நிராகரித்துவிட்டார்.

 

 

 

http://tamil.oneindia.com/news/tamilnadu/as-it-happened-minute-by-minute-account-jayalalithaa-bail-hearing-1-213165.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்: தண்டனையும் நிறுத்தி வைப்பு!

 

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Jayalalitha%201a%282%29.jpg

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதேபோல், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரது சார்பிலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''ஜெயலலிதாவின் வயது மற்றும் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

சுப்பிரமணியன் சுவாமி வாதம்

இதேபோல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றம் வந்தார். ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (17ஆம் தேதி) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோகூர், பி.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு முன்னர் நடைபெற்றது.

வாதத்தின்போது சுப்பிரமணியன் சுவாமி, " நீதிமன்றம் அதிமுகவினர் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து அதிமுகவினர் தமிழக்த்தில் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக நீதிமன்றத்தையும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் அவமதித்து வருகின்றனர்.

சென்னையில் அச்சுறுத்தல்

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கன்னடர் என்பதாலேயே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததாகவும் அவதூறு பரப்புகின்றனர். நான், சென்னைக்கு சென்றால் எனக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.

ஜெயலலிதா, அவரது கட்சித் தொண்டர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்தால் மட்டுமே வன்முறைகள் முடிவுக்கு வரும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.


ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதம்

ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், "ஜெயலலிதா முக்கிய பதவி வகித்தவர் என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க சொல்லித்தான் வாதம் செய்தோம். தண்டனைக்கு தடை தடை விதிக்கக் கோரி வாதாடவில்லை. சிறையில் இருப்பதால் மருத்துவ வசதிகளை ஜெயலலிதாவால் பெற முடியவில்லை. ஜாமீன் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.

 

 

வழக்கை தாமதப்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கண்டிப்பு

அப்போது நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைத்தால் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை எப்போது முடிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியதோடு, தண்டனையை நிறுத்தி வைப்போம் என நினைக்க வேண்டாம் என ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.

எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18 ஆம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. மீறினால் ஜாமீன் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது வரும். குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18 ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.

அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.

ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" என்றனர்.

இதைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் சுசில்குமார் ஆஜராகி வாதிட்டார்.

jaya%20supreme.jpg

ஜாமீன் வழங்கி உத்தரவு

இதையடுத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு டிசம்பர் 18 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். வழக்கையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என நிபந்தனை

மேலும் உடல் நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கப்பட்டுள்ள 2 மாத காலத்திற்கும் ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், சாதாரண நபர் போன்று வெளியில் செல்லக்கூடாது என்றும், டாக்டர்கள் மட்டுமே சந்திக்க அனுமதி என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

 

 

அதிமுகவினரின் வன்முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

மேலும் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை தொடர்ந்தும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்தும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்றும், அதிமுகவினர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாமல் ஜெயலலிதா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னதாக ஜெயலலிதாவுக்காக ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் பாலி நாரிமனும் இது தொடர்பான உத்தரவாதத்தை அளித்தார்.

அதிமுகவினர் மகிழ்ச்சி

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு வெளியேயும், ஜெயலலிதாவின் இல்லம் அமைந்திருக்கும் போயஸ் கார்டன், சென்னை அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரண்டிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

 

admk%201%284%29.jpg

இன்றைய தினம் அதிமுகவின் 43 வது ஆண்டு விழா கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஜெயலலிதா சிறையில் இருப்பதால், அக்கட்சியினர் காலையில் உற்சாகமின்றியே காணப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பகல் 12.15 மணி அளவில் ஜாமீன் கிடைத்ததாக தகவல் கிடைத்த பின்னரே அதிமுகவினரிடம் உற்சாகம் காணப்பட்டது.

 

 

விடுதலையில் தாமதம்

 

 

ஜாமீன் உத்தரவாதத்தை சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவிடம் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வழங்க உள்ளனர். இந்த உத்தரவாதத்தை ஏற்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆக முடியும். 

இந்நிலையில் இன்று மாலை நீதிமன்ற அலுவல் நேரம் முடிவடைவதற்கு முன்னதாக உச்ச நீதிமன்ற ஜாமீன் உத்தரவு நக்கலையும், ஜாமீன் உத்தரவாதத்தையும் அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதா நாளை மாலைதான் விடுதலையாவார் என தெரியவந்துள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட  உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் தீர்ப்பு நகல் இன்று மாலைதான் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டதாலேயே இந்த காலதாமதாம் ஏற்பட்டுள்ளது.

 

 

பரப்பன அக்ரஹாவில் 144 தடை உத்தரவு

இதனிடையே பரப்பன அக்ரஹார சிறைப் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னை அழைத்து வர ஏற்பாடுகள் தயார்

 

இந்நிலையில் சிறையில் இருந்து வெளிவரும் ஜெயலலிதாவை விமானம் மூலம் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சென்னை வரும் ஜெயலலிதா நேரடியாக தனது போயஸ்கார்டன் இல்லத்திற்கு செல்வாரா அல்லது உடல் நலக்குறைவுக்காக மருத்துவமனைக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உடல்நலக்குறைவை காரணம் காட்டியே ஜாமீன் பெறப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=33619

இவ்வளவு நிபந்தனைகளுடன் ஜெயல்லிதா வெளியில் வருவதை விட உள்ளுக்கே இருந்திருக்கலாம்.

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்க போய் மாட்டி கொண்டார் என்றே சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்

admk%201%284%29.jpg

 

இப்போ தான்..... இந்தத் தலைப்பை பார்த்தேன்.
கண்டபடி.... அறிக்கை விட்ட... விஜயகாந்த், கருணாநிதி, சுப்பிரமணிய சாமியை...... நினைக்க, கவலையாயிருக்கு.
அம்மா என்றால்... சும்மா இல்லேடா, பக்கிரிகளா..... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

admk%201%284%29.jpg

இப்போ தான்..... இந்தத் தலைப்பை பார்த்தேன்.

கண்டபடி.... அறிக்கை விட்ட... விஜயகாந்த், கருணாநிதி, சுப்பிரமணிய சாமியை...... நினைக்க, கவலையாயிருக்கு.

அம்மா என்றால்... சும்மா இல்லேடா, பக்கிரிகளா..... :D:lol:

விஜயகாந் குடிச்சிட்டு வீட்டுக்க விழுந்து படுக்க வேண்டியதுதான்... :D

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந் குடிச்சிட்டு வீட்டுக்க விழுந்து படுக்க வேண்டியதுதான்... :D

 

பாவம்.... அந்தாளுக்கும், அரசியலுக்கும் வெகுதூரம்.

எல்லா... அரசியல்வாதிகளும், அடக்கி வாசிக்க...

இந்தாள்...  முதன்முதலா... ஆளுநரை சந்திச்சு மகஜர் கொடுத்தது மட்டுமல்லாமல்,

பத்திரிகைக்கு அறிக்கையும் வெளியிட்டிடுருக்கு. :D  :lol:  :icon_mrgreen:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற அரசியல்வாதிங்க,  இவரை...
நீங்க தான்... முக்கிய எதிர்க்கட்சி தலைவர்,
இதுக்கு, முதலில் குரல் கொடுத்தால்....
ஜெயலலிதா இல்லாத, அரசில் நீங்க தான்....

அடுத்த முதலமைச்சர் என்று, பப்பா மரத்தில் ஏத்தி விட்டுட்டுட்டாங்கள் பாவியள்.
எனக்கு... உண்மையிலேயே, விஜயகாந்தை நினைக்க கவலையாய் இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்
ஜெயலலிதாவின் தண்டனை நிறுத்தம்; உடனடியாக அரசியலில் ஈடுபடமுடியுமா?!

 

 

j-jayalalitha-2-300x177.jpgஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் மீண்டும் தேர்தலில் போட்டியிடவோ, முதலமைச்சர் பொறுப்பை வகிக்கவோ ஜெயலலிதாவுக்கு தகுதி உள்ளதா என்பது பற்றி மக்களிடம் பரவலாக விவாதம் எழுந்துள்ளது.

இது குறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் கேட்டபோது, “ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அந்த தீர்ப்பின் மூலம் அளிக்கப்பட்ட தண்டனை மட்டும்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜாமீனில் அவர் விடுதலை பெறலாம். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் அதன் பிறகு உடனடியாக தேர்தலில் போட்டியிடவும், முதலமைச்சர் பதவியை வகிக்கவும் ஜெயலலிதா தகுதி பெற்று விடுவார். எனினும் இப்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவால் அந்த தகுதியை பெற இயலாது” என தெரிவித்தனர்.

நீதிமன்றத்தால் எதற்காக தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை அறிய பொதுமக்களில் பலர் ஆவலாக உள்ளனர்.

இது பற்றி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரசன்னாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

“விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், அதன் பிறகும் கூட தான் குற்றவாளி அல்ல என்பதை மேல்முறையீடு மூலம் நிரூபணம் செய்வதற்கான வாய்ப்பை நமது குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்திலும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை சட்டப்படி அவருக்கு உள்ளது.

கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், சிறையில் சில காலம் தண்டனை அனுபவிக்கும் நிலையில், அதன் பிறகு மேல்முறையீட்டு விசாரணையில் அவர் நிரபராதி என தெரிய வரலாம். அப்போது அவர் விடுதலையாகி விடுவார். எனினும் நிரபராதியாக இருந்தும் கூட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவு தெரியும் வரை, அவர் சிறையில் இருக்க நேரிடும்.

நிரபராதியாக உள்ள ஒருவர் இவ்வாறு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, மேல்முறையீடு செய்வோருக்கு வழங்கப்பட்ட தண்டனயை நிறுத்தி வைக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 389-ல் தேவையான வழிகாட்டு தல்கள் வழங்கப்பட்டுள்ளன. விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை தண்டனை வழங்கும்போது, அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து அவரை ஜாமீனில் விடுவிக்க அதே நீதிமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை விதிக்கப்படும் நிலையில், மேல்முறையீடு செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களை ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் 389-வது பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 389-வது பிரிவின்படியே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தற்போது உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதோடு, அவரை ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது” என்றார்.

http://tamilleader.com/?p=42903

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.