Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசுகுவும் அபிலாசைகளும்.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்... ப்ளீஸ், ரென்சன் வேண்டாம்.
நீங்கள், நல்ல கருத்தாளர் என்பதை, நாமறிவோம்.
ஆனால்... வெந்த புண்ணில், வேலைப் பாச்சுவது போன்று.. உங்கள் கருத்துகள் இருக்கும்.
அதனை... நீங்கள், செப்பனிட்டால்...... முதலில் மகிழ்சி அடைவதும், யாழ் கள உறவுகள்  தான். :)

  • Replies 77
  • Views 7.4k
  • Created
  • Last Reply

துளசி

உங்களுக்கு என் உதாரணம் விளங்கவில்லைபோலுள்ளது.

புருசனும் அத்தானும் போட்டு பின்னி எடுக்க - கணவனே கண்கண்ட தெய்வம் என்று இருக்கும் அக்கா

இந்த அக்கா, அடிக்கும் புருசனையும் அத்தானையும் விட மோசமானவள்.

நாம் கொத்துக்கொத்தாக அழிந்தபோது, லண்டனை, ரொடாண்டோவை சிட்னியை போராடி திகிலடித்தோமே? 7 கோடி பேர் என்னத்தை கிழிச்சார்கள்?

நான் யாரையும் முகம், குலம் கோத்திரம் பார்த்து கருத்து வைப்பதில்லை. தமிழகத்தை குறை சொன்னா ராஜவன்னியன் முகம் கோணுவார் என்பதற்காக உண்மையை பேசாமல் விட முடியுமா?

கருத்தாடலுக்காக நான் டூ என்று எல்கேஜி பிள்ளை மாரி ஓடுபவராக ராஜவன்னியனை நான் நினைக்கவில்லை.

நீங்கள் தான் ஓவர் செண்டிமெண்டாகிறிஉர்கள்.

அப்பொழுது தமிழக மக்கள் போராடவில்லை என்று யார் சொன்னது?

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள் எதுவும் தமிழக பத்திரிகைகளில் கூட வெளிவராமல் தடுத்த காலப்பகுதிகளில் எவ்வளவு தமிழக மக்களுக்கு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு பற்றி தெரியும். அதையும் மீறி அங்கு நடப்பது தெரிந்து கொதித்தெழுந்து போராடியவர்கள் மீது கருணாநிதி அடக்குமுறைகளை பிரயோகித்தது உங்களுக்கு தெரியாதா? புலம்பெயர் தேசங்களில் போராடுவதற்கு அவ்வாறான அடக்குமுறைகள் எதுவும் இருக்கவில்லை. எனவே போராடினார்கள்.

என்னமோ ஈழ மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை, எமக்கு இந்தியா தான் முக்கியம் என்று தமிழக மக்கள் எல்லோரும் முரசறைந்து சொன்ன கணக்கா கதைக்கிறீர்கள்.

சரி அதை விடுங்கள்.

எம்மக்களின் துயர் தீர்க்க நீங்கள் ஆயுதமேந்தி போராட சென்றீர்களா? இல்லை தானே? மக்கள் அழியும் போது வேடிக்கை பார்த்த உங்களை போல் என்னைப்போல் பலர் இன்று அங்குள்ள மக்கள் மேல் அக்கறைப்பட முடிந்தால் அதே அக்கறையை தமிழக மக்களும் காட்ட முடியும் தானே.

தமிழர்களை அழிக்க துணை போன இந்தியாவுடன் 13+ க்காக கூட்டமைப்பு கதைக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக தமிழக உறவுகள் குரல் கொடுத்தால் மட்டும் அவர்கள் அன்று அப்படி இன்று இப்படி என்று ஆதாரமற்று புலம்புவதேனோ?

நீங்கள் தமிழகத்தை குறை சொல்வதாக இருந்தால் அனைத்து தமிழக மக்களையும் சேர்த்து குறை சொல்லக்கூடாது. கருணாநிதி போன்று அன்று அடக்குமுறைகளை பிரயோகித்தவர்களை குற்றம் சாட்டி கருத்து கூற வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் குற்றம் சாட்டினால் அதற்குள் ஈழத்தை நேசிக்கும் தமிழக உறவுகளும் அடங்குவார்கள்.

அத்துடன் அடிக்கடி ராஜவன்னியன் அண்ணாவை மேற்கோள் காட்டி தமிழகத்தை குற்றம் சாட்டும் கருத்துகளை எழுதுகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது தெரிந்தோ தெரியாமலோ அவரை மனம் நோக வைக்கும் செயல் மற்றும் அவர் போல் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து கூறுவோரை விலக வைக்கும் செயல்.

கோசான் சே அண்ணா .மாற்றுக்கருத்துக்கு பயப்பட்டு ஓடும் ஆள் இல்லை நம்ம  விசுகு அண்ணா அவரை நேரடியாக சந்தித்தவன் என்ற வகையில் .அறிந்தவன் .ஆனால் நல்ல மனச்சாட்சி உள்ள மனிதனாய் வந்து நமக்குள் மாட்டுப்பட்டுவிட்டார் .அதுதான் அவருக்குள் உள்ள பிரச்சனை ..............நான் பேசுவது மனித மனம் சம்பந்தப்பட்டது .நீங்களும் மனிதர் என்ற வகையில் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் ..................இங்கே சத்தி எடுக்க வேண்டாம் என்பதே என் அன்பான வேண்டுகோள் சகோ . :)

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு.... கோசானின்,
கருத்துக்களில் இன்னும்,  மனதை வதைக்கும் விடையம்......
யாழ்ப்பாணத்துக்கு வந்த, "யாழ் தேவி"  என்ற தலைப்பில்;
ராஜவன்னியன் எழுதிய கருத்துக்கு,  நீங்கள்.... ##### கட்டுங்கள்.
என்று, சொன்னது பிடிக்கவில்லை.  <_<

விசுகர் மாற்று கருத்துக்கு பயப்பிடும் ஆளில்லை 

ஆனால் பல பாச்சாக்கள்  இப்ப பலிக்குதில்லை :o சனம் முந்தியமாதிரி இல்லை  இப்ப நல்ல விளக்கம் :lol: ,இப்படி இங்கும் பலர் இப்ப முட்டாக்குடன் திரியினம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

திரு.கோசான்,

நீங்கள் கூறிய அக்காள் தங்கை, எதிர் வீடு, பக்கத்து வீட்டு உதாரணங்களையும், அதற்கான பதில்களையும் பலமுறை இங்கே விவாதித்தாகிவிட்டது. புதிதாக நீங்கள் வந்திருப்பதால் மறுபடியும் சொல்லிகொண்டிருக்க இயலாது.. இந்தியா, தமிழகம் பற்றி எதையும் எழுதிச் செல்லுங்கள், அது உங்கள் விருப்பம். ஆனால் தனிமனிதனின் பெயரைச் சொல்லி, தாக்குதலும், கருத்தையும் பொதுமை படுத்தவேண்டாம். இதுவே ஈழம் சார்ந்த விடயத்தில் உங்களுக்கு நான் அளிக்கும் இறுதி பதில்.

நன்றி.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசவன்னியன்,

நான் ஒரு போதும் உங்களை தனிமையாக தாக்ககி கருத்து எழுதவில்லை. இனியும் எழுதப்போவதில்லை. பதில்இடுவது உங்கள் தனியுரிமை.

துளசி,

மேற்குலகுக்கு நிகரான ஐடி வசதி, சகல செள்பாக்கியங்களோடும் 2009 இல் இருந்தது தமிழகம். எதோ தமிழகத்தின் 7 கோடி பேரும் எழுதப் படிக்க தெரியாதவர்கள் போலும் அவர்கள் எல்லாரும் வீட்டுக்காவலில் இருப்பதுபோலவும், கதையளக்கிறீங்க?

நெடுமாறனைத்தவிர அங்கே யாரும் விசுவாசமானவர்கள் இல்லை.

கருணாநிதி, ஜெ, ராமதாஸ், வைகோ, வீரமணி, இவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் சொல்லும் 7 கோடிப் பேரில் 5% வீதியில் இறங்கி வீதி மறிப்பு, சிறை நிரப்பு இதர அகிம்சை (மட்டும்) போராட்டங்களை செய்திருந்தாலே முள்ளிவாய்க்காலை தடுத்திருக்கலாம்.

நான் சண்டை பிடியாமல் ஓடி வந்ததுக்கு 2 காரணங்கள்.

1) சின்ன வயதில் நான் ஒரு கோழை ( இப்பவும் தான்) என்னால் இயக்கத்துக்கு போய் சண்டை பிடிப்பதை நினைதுப்பார்க முடியவில்லை.

2) விசயம் தெரியும் வயதில் ஆயுதபோராட்டம் வேலைக்கு ஆகாது என்று விளங்கி விட்டது.

ஆனாலும் முள்ளிவாய்க்காலை தடுக்க என்னால் இயன்ற மட்டில் முயற்சித்தேன்.

2009 புலத்தில் நான் செய்த முயற்சியில் 10 வீதத்தை 5 வீதம் தமிழக மக்கள் செய்திருந்தாலே பேரழிவை தடுத்திருக்கலாம்.

99.9% தமிழக மக்கள் எம்மை பற்றி ஒரு வித கவலையும் இல்லாமலே இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள். தமிழ் இன உணர்வு, எல்லாம் சும்மா மேடப்பேச்சோடு சரி.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்தியன் என்று மார்தட்டி, இந்திய குடிமகனாய் வாழும் தமிழகத்தவர்களிடம் போய் இந்தியாதான் இலங்கைத்தமிழரின் முதல் எதிரி என்றோ, இலங்கை ராணுவம் செய்த பாலியல் வதைகளை விட உங்கள் ராணுவம் செய்தது அதிகம் என்றோ சொல்லிப்பாருங்கள். என்ன ரியாக்சன் வரும் எண்டு பாருங்கள்.

இவ்வளவு ஏன்? இங்கே இந்திய படைகள் செய்த அட்டூழியங்களை நினைவுகூறும் பதிவுகளில் இங்கே எத்தனை பேர் பதிவிட்டிருக்கிறார்கள்?

தாயும் பிள்ளையும் எண்டாலும் வாயும் வயிறும் வேறு, வேறு.

கையறு நிலையில் இருக்கும் நாம் இந்தியா என்ன, சோமாலியாவிடம் கெஞ்சியாவது எமக்கான உரிமைகளை பெற்றாகத்தான் வேண்டும்.

அப்பொழுது தமிழக மக்கள் போராடவில்லை என்று யார் சொன்னது?

ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த அவலங்கள் எதுவும் தமிழக பத்திரிகைகளில் கூட வெளிவராமல் தடுத்த காலப்பகுதிகளில் எவ்வளவு தமிழக மக்களுக்கு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு பற்றி தெரியும். அதையும் மீறி அங்கு நடப்பது தெரிந்து கொதித்தெழுந்து போராடியவர்கள் மீது கருணாநிதி அடக்குமுறைகளை பிரயோகித்தது உங்களுக்கு தெரியாதா? புலம்பெயர் தேசங்களில் போராடுவதற்கு அவ்வாறான அடக்குமுறைகள் எதுவும் இருக்கவில்லை. எனவே போராடினார்கள்.

என்னமோ ஈழ மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை, எமக்கு இந்தியா தான் முக்கியம் என்று தமிழக மக்கள் எல்லோரும் முரசறைந்து சொன்ன கணக்கா கதைக்கிறீர்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தது 1950களில் இல்லை. தனிய பத்திரிகைகளை மட்டும் வாசித்து செய்தி அறிந்து கொள்ள. 1 நிமிடத்திற்கு முதல் நடந்த ஒரு சம்பவம் 5000 மைல் தாண்டி இருப்பவருக்கு இணையம் மூலம் தெரிவிக்கும் காலம் இது. இன உணர்வு 7 கோடி பேரில் ஒரு 10% விகிதத்திற்கு இருந்திருந்தால் இந்திய அரசை மாற்றி இருக்க முடியும். அதை விடுத்து அடக்கு முறை செய்த கருணாநிதியை காசு வாங்கிக்கொண்டு மீண்டும் 2009 தேர்தலில் வெல்ல வைத்தவர்கள் யார்? 
 
அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும் என்பது தான் எனது விருப்பமும். ஆனால் அதற்காக நடந்தவற்றை மறைத்து சப்பைகட்டு கட்ட கூடாது. 

துளசி,

மேற்குலகுக்கு நிகரான ஐடி வசதி, சகல செள்பாக்கியங்களோடும் 2009 இல் இருந்தது தமிழகம். எதோ தமிழகத்தின் 7 கோடி பேரும் எழுதப் படிக்க தெரியாதவர்கள் போலும் அவர்கள் எல்லாரும் வீட்டுக்காவலில் இருப்பதுபோலவும், கதையளக்கிறீங்க?

நெடுமாறனைத்தவிர அங்கே யாரும் விசுவாசமானவர்கள் இல்லை.

கருணாநிதி, ஜெ, ராமதாஸ், வைகோ, வீரமணி, இவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் சொல்லும் 7 கோடிப் பேரில் 5% வீதியில் இறங்கி வீதி மறிப்பு, சிறை நிரப்பு இதர அகிம்சை (மட்டும்) போராட்டங்களை செய்திருந்தாலே முள்ளிவாய்க்காலை தடுத்திருக்கலாம்.

நான் சண்டை பிடியாமல் ஓடி வந்ததுக்கு 2 காரணங்கள்.

1) சின்ன வயதில் நான் ஒரு கோழை ( இப்பவும் தான்) என்னால் இயக்கத்துக்கு போய் சண்டை பிடிப்பதை நினைதுப்பார்க முடியவில்லை.

2) விசயம் தெரியும் வயதில் ஆயுதபோராட்டம் வேலைக்கு ஆகாது என்று விளங்கி விட்டது.

ஆனாலும் முள்ளிவாய்க்காலை தடுக்க என்னால் இயன்ற மட்டில் முயற்சித்தேன்.

2009 புலத்தில் நான் செய்த முயற்சியில் 10 வீதத்தை 5 வீதம் தமிழக மக்கள் செய்திருந்தாலே பேரழிவை தடுத்திருக்கலாம்.

99.9% தமிழக மக்கள் எம்மை பற்றி ஒரு வித கவலையும் இல்லாமலே இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள். தமிழ் இன உணர்வு, எல்லாம் சும்மா மேடப்பேச்சோடு சரி.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்தியன் என்று மார்தட்டி, இந்திய குடிமகனாய் வாழும் தமிழகத்தவர்களிடம் போய் இந்தியாதான் இலங்கைத்தமிழரின் முதல் எதிரி என்றோ, இலங்கை ராணுவம் செய்த பாலியல் வதைகளை விட உங்கள் ராணுவம் செய்தது அதிகம் என்றோ சொல்லிப்பாருங்கள். என்ன ரியாக்சன் வரும் எண்டு பாருங்கள்.

இவ்வளவு ஏன்? இங்கே இந்திய படைகள் செய்த அட்டூழியங்களை நினைவுகூறும் பதிவுகளில் இங்கே எத்தனை பேர் பதிவிட்டிருக்கிறார்கள்?

தாயும் பிள்ளையும் எண்டாலும் வாயும் வயிறும் வேறு, வேறு.

கையறு நிலையில் இருக்கும் நாம் இந்தியா என்ன, சோமாலியாவிடம் கெஞ்சியாவது எமக்கான உரிமைகளை பெற்றாகத்தான் வேண்டும்.

இந்தியா ரொக்கட் விடுகிறது என்பதற்காக இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் மிக வசதியுடன் உள்ளார்கள் என்றில்லை. அது போல் தான் தமிழகத்தில் IT துறை வளர்ச்சி உள்ளது என்பதற்காக அங்குள்ள மக்கள் எல்லோரும் அவ்வசதியை கொண்டவர்கள் என்று அர்த்தப்படாது. வீட்டில் கணணியோ கைத்தொலைபெசியோ இல்லாமல் சுவரொட்டிகளை பார்த்தும் தமது பகுதியிலுள்ள தலைவர்கள் போராட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதும் அதை உள்வாங்கியும் ஒன்றுகூடும் மக்களே அதிகம். முக்கியமாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் அல்லது மாணவர்களிடம் ஓரளவு கணணி பாவனை இருந்தாலும் அவர்கள் வாசிப்பது தமிழக ஊடகங்களில் வரும் செய்திகள். பார்ப்பது தமிழக தொலைக்காட்சிகள்.

இவற்றில் போர்க்காலத்தில் ஈழத்தமிழின அழிப்பு பற்றிய செய்திகள் வருவது தடுக்கப்பட்டிருந்தது எனும் போது தமிழக மக்கள் எவ்வாறு ஈழத்தில் நடப்பதை அறிய முடியும்?

அதை மீறி தகவல் தெரிந்த சிலர் போராடிய போது அவர்களை கைது செய்வதும் அடக்குமுறைகளை பிரயோகிப்பதும் என அன்று கருணாநிதி நடந்தார்.

சீமான் அண்ணா, வைகோ ஐயா, திருமுருகன் அண்ணா மற்றும் பலரது பிரச்சாரங்களே இன்று முன்னைவிட ஈழத்தமிழர்களின் பிரச்சினை பற்றி பலர் அறிய வழி வகுத்தது.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ஓரளவு தளர்வு போக்கு உள்ளதால் இப்பொழுது குரல் கொடுக்கிறார்கள். 2013 இல் ஏற்பட்ட தமிழக மாணவர் போராட்டத்தின் பின் தமிழக உறவுகள் பலரை ஈழத்தமிழர்கள் முகநூலில் நண்பர்களாக்கி கொண்டுள்ளார்கள்.

போராட்டங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் போது இணையதள, முகநூல் வசதிகள் இல்லாத மக்களுக்காக சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள். தமிழின படுகொலை பற்றி இன்னமும் தெரியாத பல தமிழக மக்கள் அங்கு உள்ளார்கள். போன வருடம் மாணவர்கள் எடுத்த பேட்டியில் சிலர் அதை தெரிவித்தும் இருந்தார்கள். அன்றைய செய்திகளை நான், பையன் அண்ணா, தமிழரசு அண்ணா, நுணா அண்ணா மற்றும் பல கள உறவுகள் இணைத்து வந்திருந்தோம். தேடிப்பார்க்க எனக்கு நேரமில்லை. வேண்டுமானால் நீங்கள் இதற்குள் சென்று தேடிப்பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/119014-இனப்படுகொலையாளி-ராசபக்சேவை-தண/

(சில போராட்ட செய்திகள் வேறு திரிகளிலும் இணைக்கப்பட்டன. அதற்குள் உள்ளதோ என்றும் தெரியவில்லை)

இப்பொழுதும் போராடுவோர் கைது செய்யப்படுவதும் அவர்கள் மேல் பொய் வழக்குகள் போடப்படுவதும் நடந்தே வருகிறது. ஆனாலும் இன்றைய போராடும் நிலை கூட கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.

அடக்குமுறைகள் இல்லாத நாட்டில் நீங்கள் இருந்து கொண்டு புலம்பெயர் போராட்டத்தில் கலந்து விட்டு அடக்குமுறைக்குள் இருந்த மக்களை பார்த்து நான் முயற்சி செய்தேன். நீங்கள் எத்தனை வீதம் செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறீர்கள்.

ஆயுதமேந்தி போராடினால் பயனில்லை என்பது தவறு. ஆயுத போராட்டத்தின் போது மரியாதை தந்த உலகநாடுகள் இன்று ஆயுதமிழந்த தமிழினத்தை கண்டுகொள்வதில்லை, தமது தேவைக்கேற்ப எமது பிரச்சினையை பயன்படுத்துவது தான் நடக்கிறது. இதை வைத்தே ஆயுத போராட்டத்தின் வலிமையை கணக்கிடலாம். இன்று ஐ.நா வரை எமது பிரச்சினை பற்றி பேசப்படுவது கூட ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்தமையும் அவர்களின் மற்றும் மக்களின் உயிர்த்தியாகமும் தான்.

அப்படி என்ன தான் முயற்சி செய்தீர்கள்? நீங்கள் செய்த அந்த செயற்பாட்டால் மக்களின் அழிவை தடுக்க முடிந்ததா? இல்லை தானே? இதுவே இலங்கையிலுள்ள போராடாத தமிழ் மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் புலம்பெயராமல் அங்கு ஆயுதமேந்தி போராடியிருந்திருந்தால் சமாதான காலத்துக்கு முன்பே தமிழீழம் கிடைத்திருக்கும். ஆனால் தமிழீழம் என்ற நாட்டை ஏதும் உலக நாடு அங்கீகரித்தால் தான் சர்வதேச ரீதியில் தமிழீழ நாட்டிற்கான அங்கீகாரமும் கிடைக்கும்.

இந்திய படைகள் ஈழத்தில் செய்த அட்டூழியங்கள் பற்றி தமிழக மக்கள் பலர் முகநூலில் கருத்துப்பகிர்பவர்கள். யாழில் எழுதாவிட்டால் யாருமே எழுதவில்லை என்று கூறும் உங்கள் அறிவு வியக்க வைக்கிறது. அத்துடன் கருத்து எழுதாவிட்டால் யாரும் இந்திய படையின் அட்டூழியத்தை கண்டிக்கவில்லை என்று அர்த்தப்படாது.

எம்மை அழிக்க துணை போன இந்தியாவிடம் எமது உரிமைகளை பெறுவதற்காக கெஞ்சுவதற்கு உரிமை உள்ளது என்றால் தமிழக உறவுகள் தற்பொழுது எமக்காக குரல்கொடுப்பதை ஏற்பதற்கான உரிமை அதை விட அதிகமாக எமக்கு உண்டு.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசி,

என்னமோ 1880 தமிழ்நாட்டை பற்றி கதைப்பது போல் கதைக்கும் உங்களிடம் கதைத்துப் பயனில்லை. வீடு பெருக்குபவரிடம் இருந்து பழங்குடியினர் வரை 2009 இல் செல்போன் இருந்தது.

2008 நான் போனபோது அவசரத்துக்கு ஒரு STD பூத் இல்லை. காரணம் எல்லார் கையிலும் மொபைல்.

என்ன அடக்குமுறையை பிரயோகித்தார் கருணாநிதி ? சிறையில் அடைத்தார்? புலம்பெயர் நாடுகளிலும் அதைச் செய்தார்கள்தானே?

நாம் போராடவில்லையா?

ஒரு 50,000 பேர் சிறைநிரப்பு போராட்டம் நடத்தி இருந்தால் மிகுதிப்பேரை எங்கே அடைத்திருப்பார்?

2009 போராட்டங்களில் புலத்தமிழரை குறை சொல்ல ஏதுமில்லை. 100% முயற்சி எடுத்தோம்.

குறைந்த பட்சம் ஆட்சியையாவது மாற்றி இருக்கலாம்.

செய்தார்களா இல்லையே?

காங்கிரஸ் கூட்டணிக்கு 40ம் அள்ளி அல்லவா கொடுத்தார்கள்.

உண்மை என்னவெனில் தமிழகத்துக்கு, கேவலம் கெட்ட நேரு குடும்பத்தின் மீதிருக்கும் பற்றில் 1 சதவீதம் கூட எம்மீது இல்லை.

அடித்தாலும், நீச சாதி என்று திட்டினாலும், அடக்குமுறை செய்தாலும் இந்தியாவின் முந்தானையில் தொங்குவதிலேதான் அவர்களுக்குப் பெருமை.

சிலநேரம் இலங்கையில் முக்குலத்தோரை அடிக்கிறார்கள், நாடாரை அடிக்கிறார்கள், வன்னியரை அடிக்கிறார்கள், நாயக்கரை, பிள்ளைகளை அடிக்கிறார்கள் எண்டு பிரச்சாரம் செய்தால் வேர்க் அவுட் ஆகக்கூடும். தமிழரை அடிக்கிறாங்க எண்டு சொன்னா உச்சுக்கொட்டி விட்டு கலைந்துபோவார்கள்.

ராஜீவ் கொலை இந்த மனநிலையை மேலும் உக்கிரப்படுத்தியது.

இலங்கை தமிழர் மட்டும், தமிழராய் இலாமல் மலையாளிகளாய் இருந்திருந்தால் இப்போ இலங்கையில் இரு நாடுகள் இருந்து இருக்கும்.

போரை நிறுத்த புலத்தில் கொடிபிடிக்கும் பிடிக்காத கூட்டம் எல்லோரும் சேர்ந்தே போராடினோம்.

சொல்லுமாப்போல் பலனில்லை. ஆனால் இதைவிட வேறு எதையும் செய்திருக்க முடியாது 48 மில்லியன் வாழும் யூகேயில், 1 லட்சம் தமிழர் ஏதும் செய்ய முடியாது. அதிலும் இந்திய தமிழர் அமைப்புகள் ஒதுங்கியே இருந்தன.

தமிழகத்தில் அப்படியில்லை. நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து 24 மணி நேரத்தில் போரை நிப்பாட்டி இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இலங்கை தொடர்பான விவரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், தவறாகச் சித்தரிக்கப்பட்டும் வந்தன. ஊடக அடக்குமுறை இருந்தது. அப்படி இருந்தும் 2009 இல் ஒரு எழுச்சி ஏற்பட்டது.

அதை உணர்ந்த கருணாஸ் களத்தில் குதித்தார். மனிதசங்கிலிப் போராட்டம் அறிவித்தார்.. கட்சி ஆதரவுடன் அது மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டமாக அமைந்தது.

உண்மையில் மக்களும், 'ஆகா நம்ம தலைவரே இறங்கிட்டாரய்யா' என்று சற்று ஆறுதல் அடைந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து மிரட்டப்பட்டபோது காங்கிரசுக்கு அடிபணிந்தார் தலைவர். அதன் பிறகு போராடியவர்கள் எல்லாரையும் உள்ளே தூக்கிப்போட்டார். அதாவது தன்னைத் தவிர யாரும் தமிழகத்தில் போராடக்கூடாது என்பது செய்தி. தானும் சாப்பாடுகளுக்கு இடையே உண்ணாவிரதம் நடத்தினார். இப்போது ஆட்சியை இழந்து வீட்டில் குந்தியிருக்கிறார்.

ஆக, தமிழக மக்களை குறை சொல்வதென்றால், இத்தகைய அரசியல்வாதிகளை இத்தனைகாலம் விட்டு வைத்திருந்தார்களே என்று குற்றம் சொல்லலாம். தவிர வேறொன்றுமில்லை.

துளசி,

என்னமோ 1880 தமிழ்நாட்டை பற்றி கதைப்பது போல் கதைக்கும் உங்களிடம் கதைத்துப் பயனில்லை. வீடு பெருக்குபவரிடம் இருந்து பழங்குடியினர் வரை 2009 இல் செல்போன் இருந்தது.

2008 நான் போனபோது அவசரத்துக்கு ஒரு STD பூத் இல்லை. காரணம் எல்லார் கையிலும் மொபைல்.

என்ன அடக்குமுறையை பிரயோகித்தார் கருணாநிதி ? சிறையில் அடைத்தார்? புலம்பெயர் நாடுகளிலும் அதைச் செய்தார்கள்தானே?

நாம் போராடவில்லையா?

ஒரு 50,000 பேர் சிறைநிரப்பு போராட்டம் நடத்தி இருந்தால் மிகுதிப்பேரை எங்கே அடைத்திருப்பார்?

2009 போராட்டங்களில் புலத்தமிழரை குறை சொல்ல ஏதுமில்லை. 100% முயற்சி எடுத்தோம்.

குறைந்த பட்சம் ஆட்சியையாவது மாற்றி இருக்கலாம்.

செய்தார்களா இல்லையே?

காங்கிரஸ் கூட்டணிக்கு 40ம் அள்ளி அல்லவா கொடுத்தார்கள்.

உண்மை என்னவெனில் தமிழகத்துக்கு, கேவலம் கெட்ட நேரு குடும்பத்தின் மீதிருக்கும் பற்றில் 1 சதவீதம் கூட எம்மீது இல்லை.

அடித்தாலும், நீச சாதி என்று திட்டினாலும், அடக்குமுறை செய்தாலும் இந்தியாவின் முந்தானையில் தொங்குவதிலேதான் அவர்களுக்குப் பெருமை.

சிலநேரம் இலங்கையில் முக்குலத்தோரை அடிக்கிறார்கள், நாடாரை அடிக்கிறார்கள், வன்னியரை அடிக்கிறார்கள், நாயக்கரை, பிள்ளைகளை அடிக்கிறார்கள் எண்டு பிரச்சாரம் செய்தால் வேர்க் அவுட் ஆகக்கூடும். தமிழரை அடிக்கிறாங்க எண்டு சொன்னா உச்சுக்கொட்டி விட்டு கலைந்துபோவார்கள்.

ராஜீவ் கொலை இந்த மனநிலையை மேலும் உக்கிரப்படுத்தியது.

இலங்கை தமிழர் மட்டும், தமிழராய் இலாமல் மலையாளிகளாய் இருந்திருந்தால் இப்போ இலங்கையில் இரு நாடுகள் இருந்து இருக்கும்.

போரை நிறுத்த புலத்தில் கொடிபிடிக்கும் பிடிக்காத கூட்டம் எல்லோரும் சேர்ந்தே போராடினோம்.

சொல்லுமாப்போல் பலனில்லை. ஆனால் இதைவிட வேறு எதையும் செய்திருக்க முடியாது 48 மில்லியன் வாழும் யூகேயில், 1 லட்சம் தமிழர் ஏதும் செய்ய முடியாது. அதிலும் இந்திய தமிழர் அமைப்புகள் ஒதுங்கியே இருந்தன.

தமிழகத்தில் அப்படியில்லை. நாட்டையே ஸ்தம்பிக்க வைத்து 24 மணி நேரத்தில் போரை நிப்பாட்டி இருக்கலாம்.

ஏற்கனவே நான் விளக்கமாக எழுதியும் விதண்டாவாதத்துக்கு கதைக்கும் உங்களுடன் கதைத்து பயனில்லை.

தமிழக போராட்டங்களை நான் பார்த்து வருபவள் என்ற ரீதியில் தமிழக உறவுகளின் நிலை பற்றி எனக்கு தெரியும். இணைக்கப்படும் போராட்ட படங்கள் கூட அவர்கள் நிலையை காட்டியே நிற்கிறது. என்னமோ தமிழகம் சென்ற போது அனைத்து தமிழர்களும் தொலைபேசி வைத்திருக்கிறார்களா அதுவும் இணைய வசதியுடன் வைத்திருக்கிறார்களா என்று வீடு வீடாக சென்று பார்த்த கணக்கில் கதைக்கிறீர்கள்.

ஏற்கனவே தெளிவாக எழுதியிருக்கிறேன். கணணி, தொலைபேசி போன்றவற்றை வைத்திருப்பவர்களில் கூட பெரும்பாலானோர் தமிழக ஊடகங்களையே பார்த்து வருபவர்கள். அவற்றில் தமிழினப்படுகொலை பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.

நீங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் தமிழக மக்களுக்கு ஈழத்தில் இடம்பெற்ற இனவழிப்பு பற்றி அன்று அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. தெரிந்த ஒருபகுதியில் சிலர் தீக்குளித்தனர். பலர் போராட்டங்களை ஆரம்பித்தனர். ஆனால் போராடியோரை கைது செய்வது சிறையிலடைப்பது என கருணாநிதி அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளும் கருணாநிதியின் ஏமாற்றுவேலைகளும் என பல சம்பவங்கள் அன்று போராட்டங்களுக்கு இடமளிக்கவில்லை.

தமிழகத்தில் இருந்த அடக்குமுறை புலம்பெயர் தேசத்தில் இருக்கவில்லை.

புலம்பெயர் தேசத்தில் நீங்கள் போராடிய போராட்டங்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் இங்கே 100% போராடியதற்கு பதில் ஊரில் ஆயுதமேந்தி போராடியிருக்கலாம்.

யுத்தம் நடந்த போது ஆயுத போராட்டத்தில் பங்கேற்க வேண்டிய நீங்கள் எல்லோரும் அதில் பங்கேற்காமல் புலம்பெயர் தேசத்தில் இருந்து போட்டு என்னை போல் பலர் ஊரில் இருந்தாலும் போராடாமல் இருந்து போட்டு இப்ப தமிழக மக்களை பார்த்து அவர்கள் போராடவில்லை என்று கூறுவது நகைப்பிற்குரியது.

தமிழகத்தில் போராடக்கூடிய நிலை இருந்தது என்றால் 2008 இல் தமிழகம் சென்ற நீங்கள் அங்கேயே தங்கியிருந்து அல்லது 2009 இல் மீள சென்று உங்கள் தலைமையில் தமிழகத்திலிருந்த ஈழத்தமிழர்களை ஒன்று திரட்டி ஏதும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கலாமே?

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக ஒரு தரம் சொல்கிறேன் விளங்குதா என்று பாருங்கள்.

1) நான் ஆயுதம் தூக்காததுக்கு ஏலவே தந்த விளக்கம்தான். நான் யாரையும் ஆயுதமேந்தி போராடச்சொல்கவில்லை.

2) முத்துகுமார் உட்பட தீக்குளித்தவர்கள் எல்லாம் எங்கிருந்து இலங்கை பற்றி அறிந்தார்கள்? அவர்களுக்கு மட்டும் புலிகளின் குரல் கேட்டதா? இல்லையே. 2009 இல் சகல இணையங்களும் யாழ் உட்பட தமிழகத்தில் கிடைத்தது. நெடுமாறன் ஐயாவின் இணைய்தளத்தில் எல்லாம் இருந்தது. 34 கி மி தூரத்தில் என் இனம் படுகொலையாகிறது, புலம் பெயர் தேசமெல்லாம் மக்கள் போராடுகிறார்கள். நாம்மட்டும் சன் டீவி இதை சொல்லாததால் அறியாமல் இருந்தோம் என்பது சின்ன பிள்ளைத்தனமானது.

முத்து குமார் போன்றவர்கள் ஏன் போராடாமல் செத்தார்கள்? அங்கே யாரும் அவர்கள் பேச்சை கேட்க தயாரில்லை. இலங்கை பிரச்சினையா, போய்யா போய் பிள்ளை குட்டியை படிக்க வை எனும் மனநிலைதான் பலருக்கு அப்போதும் இப்போதும். இது இனியும் மாறாது. இந்த indifference பார்த்து வெறுத்துப்போய்- தன் சாவாவது தூங்கி கிடக்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் என்ற நம்பிக்கையில் உயிர் விட்டார் முத்துக் குமார் - ஒரு மானாட மயிலாடவுடன் அந்த உணர்ச்சியும் அம்பேல். இதுதான் தமிழகம்.

Every people get a govt they deserve. இதில் கருணாநிதி தன் மக்களின் மனம் போல செயல்ப்பட்டார் அவ்வளவே.

3) எப்படி போராடுவது என்ற வகையில் எமக்குள் பிளவுகள் இருந்தாலும், புலித்தலைவர் மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கிறார்கள் என்று தெரிந்தும்,போர் நிண்டால் போதும் என்ற ஒரே எண்ணத்தில் வீதிக்கு வந்த பலர் புலத்தில் இருக்கிறோம். புலிகள் தன் தந்தையை அநியாயமாக கொண்டார்கள் என்று நம்பும் ஒருவரை அடிக்கடி இதே போராட்டங்களில் நான் கண்டுள்ளேன்.

போராடும் உரிமையை exclusive rights வாங்கி விட்டதாக பீத்திக் கொள்ளும் உங்களுக்கு எமது மனப்போராட்டங்கள் விளங்க நியாயமில்லை. ஆனால் நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்தவில்லை என்று எம்மை கொச்சைப் படுத்தாதிகள். நாங்கள் 2009 இல் போராடியது தனிநாடு கோரியல்ல - யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டே.

4) முத்துகுமார் போன்ற இந்திய தமிழர்களாலேயே முடியாது எனும் போது 2008 இல் கொலிடே விசாவில் போன நான் என்ன செய்ய முடியும்? இருந்தும் தா பாண்டியன் மற்றும் வை கோவின் சில போராட்டகளுக்குப் போனேன். அங்கே நான் பார்த்ததும் கேட்டதும் தமிழகம் பற்றிய என் பார்வையை மேலும் வலுவாக்கவே உதவியது.

5) தமிழகமும் புலமும் போரை நிறுத்தும் என்று பிரபா பெரிதும் நம்பினார். இரண்டுமே பொய்த்துப் போனது. தமிழகம் இயலுமை இருந்தும் உணர்வற்றுக் கிடந்தது. புலத்தில் உணர்வு இருந்தது ஆனால் போரை நிறுத்தும் இயலுமை இருக்கவில்லை.

ஏற்கனவே நான் விளக்கமாக எழுதியும் விதண்டாவாதத்துக்கு கதைக்கும் உங்களுடன் கதைத்து பயனில்லை.

தமிழக போராட்டங்களை நான் பார்த்து வருபவள் என்ற ரீதியில் தமிழக உறவுகளின் நிலை பற்றி எனக்கு தெரியும். இணைக்கப்படும் போராட்ட படங்கள் கூட அவர்கள் நிலையை காட்டியே நிற்கிறது. என்னமோ தமிழகம் சென்ற போது அனைத்து தமிழர்களும் தொலைபேசி வைத்திருக்கிறார்களா அதுவும் இணைய வசதியுடன் வைத்திருக்கிறார்களா என்று வீடு வீடாக சென்று பார்த்த கணக்கில் கதைக்கிறீர்கள்.

தமிழக தமிழர்களின் நிலை எப்படி உங்களுக்கு தெரியும். ஒரு 4 பேரின் ஃபேஸ்புக் படங்கள் 7 கோடி மக்களின் நிலைக்கு சான்றா? சரி அப்படி இணைக்கப்படுகின்ற போராட்ட படங்களில் எத்தனை பேர் பங்குபெறுகிறார்கள்? ஒரு 10 லட்சம் பேர் கொண்ட ஒரு தமிழக போராட்ட படத்தை காட்ட முடியுமா? ஃபேஸ்புக் படங்கள் பார்ப்பதால் தமிழக உறவுகளின் நிலை எனக்கு தெரியும் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட ஒரு அப்பாவி இருக்க முடியாது. 

ஏற்கனவே தெளிவாக எழுதியிருக்கிறேன். கணணி, தொலைபேசி போன்றவற்றை வைத்திருப்பவர்கள் கூட தமிழக ஊடகங்களையே பார்த்து வருபவர்கள். அவற்றில் தமிழினப்படுகொலை பற்றிய செய்திகள் மறைக்கப்பட்டிருந்தன.

நீங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும் தமிழக மக்களுக்கு ஈழத்தில் இடம்பெற்ற இனவழிப்பு பற்றி அன்று அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. தெரிந்த ஒருபகுதியில் சிலர் தீக்குளித்தனர். பலர் போராட்டங்களை ஆரம்பித்தனர். ஆனால் போராடியோரை கைது செய்வது சிறையிலடைப்பது என கருணாநிதி அரசு மேற்கொண்ட அடக்குமுறைகளும் கருணாநிதியின் ஏமாற்றுவேலைகளும் என பல சம்பவங்கள் அன்று போராட்டங்களுக்கு இடமளிக்கவில்லை.

தமிழகத்தில் இருந்த அடக்குமுறை புலம்பெயர் தேசத்தில் இருக்கவில்லை.

இதை விட தமிழக மக்கள் முட்டாள்கள் என்று யாரும் கூற முடியாது. நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழக மக்களை மந்தைகள் போல வைத்திருப்பது வெகு சுலபம் போல இருக்கு. எமக்கு வெளிநாடுகளில் எப்படி இணைய வசதிகள் இருக்கோ அதே வசதிகள் அங்கும் இருக்கின்றன. சும்மா அவர்கள் தமிழக ஊடகங்களை மட்டும் பார்க்கும் அப்பாவிகள் என்று முட்டாள்தனமாக கதைக்க கூடாது. 
உதாரணத்திற்கு முத்துகுமாரன் ஜனவரி 2009இல் தீக்குளிக்கிறார். மக்கள் இப்படியாவது விளிப்படைய வேண்டும் என்ற நொக்கில் தான் அவர் தீக்குளிக்கிறார். அக்கறை உள்ள ஒரு தமிழக‌ இளைஞன் என்ன செய்திருக்க வேண்டும். யார் இந்த முத்துகுமரன்? அவர் ஏன் தீக்குளித்தார்? தீக்குளிக்கும் அளவிற்கு இலங்கையில் என்ன நடக்கின்றது? என்று குறைந்த பட்சம் எண்ணி இருந்தாலே இணையத்தில் இலங்கை நிலவரங்களை தேடி அறிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் ஃபேஸ்புக்கில் அஜித்தா விஜய்யா என்று சண்டை போட காட்டிய அக்கறையை கூட பக்கத்தில்  செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழன் மேல் காட்டவில்லை. இப்ப வந்து அவர்கள் பாவம் சன்டீவீ மட்டும் பார்பவர்கள் அதில் காட்டாததால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று எங்கள் காதில் நீங்கள் பூச்சுத்துகிறீர்கள். 

புலம்பெயர் தேசத்தில் நீங்கள் போராடிய போராட்டங்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் இங்கே 100% போராடியதற்கு பதில் ஊரில் ஆயுதமேந்தி போராடியிருக்கலாம்.

ரோட்டில நின்டு கொடி பிடிச்ச போராட்டங்களால் ஏதும் பலனில்லாமல் போயிருக்கலாம். காரணம் அங்கு நாங்கள் புலிகளை தான் முன்னிறுத்தினோம் மக்கள் இழப்புகளை அல்ல. ஆனால் சில‌ புலம்பெயர் அமைப்புகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தான் பிரிட்டன் கனடா போன்ற நாடுகளை எம் பக்கம் திருப்ப வைத்தது. 

2) முத்துகுமார் உட்பட தீக்குளித்தவர்கள் எல்லாம் எங்கிருந்து இலங்கை பற்றி அறிந்தார்கள்? அவர்களுக்கு மட்டும் புலிகளின் குரல் கேட்டதா? இல்லையே. 2009 இல் சகல இணையங்களும் யாழ் உட்பட தமிழகத்தில் கிடைத்தது. நெடுமாறன் ஐயாவின் இணைய்தளத்தில் எல்லாம் இருந்தது. 34 கி மி தூரத்தில் என் இனம் படுகொலையாகிறது, புலம் பெயர் தேசமெல்லாம் மக்கள் போராடுகிறார்கள். நாம்மட்டும் சன் டீவி இதை சொல்லாததால் அறியாமல் இருந்தோம் என்பது சின்ன பிள்ளைத்தனமானது.

முத்து குமார் போன்றவர்கள் ஏன் போராடாமல் செத்தார்கள்? அங்கே யாரும் அவர்கள் பேச்சை கேட்க தயாரில்லை. இலங்கை பிரச்சினையா, போய்யா போய் பிள்ளை குட்டியை படிக்க வை எனும் மனநிலைதான் பலருக்கு அப்போதும் இப்போதும். இது இனியும் மாறாது. இந்த indifference பார்த்து வெறுத்துப்போய்- தன் சாவாவது தூங்கி கிடக்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் என்ற நம்பிக்கையில் உயிர் விட்டார் முத்துக் குமார் - ஒரு மானாட மயிலாடவுடன் அந்த உணர்ச்சியும் அம்பேல். இதுதான் தமிழகம்.

Every people get a govt they deserve. இதில் கருணாநிதி தன் மக்களின் மனம் போல செயல்ப்பட்டார் அவ்வளவே.

இனவழிப்பு பற்றி தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கவில்லை, ஒரு சிறு பகுதியினருக்கே தான் தெரிந்திருந்தது என்றே எழுதியிருக்கிறேன். தெரிந்தவர்களில் சிலர் தீக்குளித்தார்கள், போராடினார்கள் என்று எழுதியிருந்தேன். அதில் ஒருவர் தான் முத்துக்குமார். ஆனால் பரவலாக தமிழக மக்களிடம் செய்தியை கொண்டு செல்லக்கூடிய நிலை இருக்கவில்லை. பெரும்பாலான தமிழக மக்கள் பார்ப்பது தமிழக ஊடகங்களை தான். தமிழக ஊடகங்களில் தமிழின அழிப்பு பற்றிய செய்தி வரவில்லை. உங்களுக்கு விளங்காததுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. அப்படியே அனைவருக்கும் தெரிந்திருந்தால் பின்னைய காலங்களில் சீமான் அண்ணா, வைகோ ஐயா, திருமுருகன் அண்ணா போன்றவர்கள் மக்களை கூட்டம் கூட்டமாக கூட்டி பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையும் இருந்திருக்காது. யாழ் இணையம் என்ற ஒன்று இருப்பது எனக்கு கூட 2012 இல் தான் தெரியும். அப்படியிருக்க தமிழக உறவுகள் அனைவரும் யாழ் இணையம் போன்றவற்றை பார்த்து தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பீர்கள்.

இப்பொழுது 2014

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் 07.11.2014 அன்று தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டத்தில் அவ் 5 தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் இணையம் பார்த்து இப்போராட்டத்தில் கலந்து கொண்டது போலா தெரிகிறது? கண்டிப்பாக இல்லை. இவர்களிடம் இணைய வசதி இருந்திருக்காது. நாம் தமிழர் கட்சியினர் நேரில் சென்று இவர்களுக்கு அழைப்பு விடுத்தே இவர்கள் கலந்து கொண்டிருப்பார்கள். ஒரு உதாரணத்துக்கு இவர்களிடம் போய் யாழ் இணையம் பார்த்தீர்களா, அந்த இணையம் பார்த்தீர்களா, இந்த இணையம் பார்த்தீர்களா என்று கேள்வி கேட்க முடியுமா?

10603552_300064743518190_642820002526794

1546304_300064836851514_8151031719543442

படம்: நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ஒருவரின் முகநூலில் இருந்து.

முத்துக்குமார் போன்றவர்கள் தமது தீக்குளிப்பிற்கு தமிழக அரசோ இந்திய அரசோ செவிமடுக்கும் என நினைத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அது சாத்தியமில்லை. தீக்குளிப்பின் பின்னர் போராட வெளிக்கிட்ட மக்களையும் கருணாநிதி தடுத்து விட்டார்.

இன்று பெருமளவு மக்கள் ஈழப்பிரச்சினை பற்றி தெரிந்து குரல் கொடுக்கும் நிலை எப்படி வந்தது? சீமான் அண்ணா, வைகோ ஐயா, திருமுருகன் அண்ணா மற்றும் பல ஈழ ஆதரவாளர்கள் மக்களை திரட்டி பிரச்சாரம் செய்து வந்தமை தான். பின்னர் மாணவர்களும் இதில் இணைந்து கொண்டார்கள்.

கருணாநிதி மக்களின் மனம் போல் செயற்படவில்லை. மக்களை ஏமாற்றினார் என்பது தான் உண்மை.

Edited by துளசி

3) எப்படி போராடுவது என்ற வகையில் எமக்குள் பிளவுகள் இருந்தாலும், புலித்தலைவர் மேல் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கிறார்கள் என்று தெரிந்தும்,போர் நிண்டால் போதும் என்ற ஒரே எண்ணத்தில் வீதிக்கு வந்த பலர் புலத்தில் இருக்கிறோம். புலிகள் தன் தந்தையை அநியாயமாக கொண்டார்கள் என்று நம்பும் ஒருவரை அடிக்கடி இதே போராட்டங்களில் நான் கண்டுள்ளேன்.

போராடும் உரிமையை exclusive rights வாங்கி விட்டதாக பீத்திக் கொள்ளும் உங்களுக்கு எமது மனப்போராட்டங்கள் விளங்க நியாயமில்லை. ஆனால் நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்தவில்லை என்று எம்மை கொச்சைப் படுத்தாதிகள். நாங்கள் 2009 இல் போராடியது தனிநாடு கோரியல்ல - யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டே..

போராடும் உரிமையை நான் பெற்றுவிட்டதாக எங்கே எழுதியுள்ளேன்? நானும் ஆயுதம் தாங்கி போராடியிருக்கவில்லை என்று என்னையும் சேர்த்தே குற்றம் சாட்டியிருந்தேன்.

அழிவு நிலையிலிருந்த மக்களை காப்பாற்ற புலம்பெயர் போராட்டங்கள் உதவவில்லை என்பதாலேயே நாம் அனைவரும் ஆயுதம் தாங்கி போராடியிருந்தால் முள்ளிவாய்க்கால் போன்ற அழிவு வந்திருக்காது. தமிழக உறவுகள் ஏன் போராடவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்க வேண்டிய தேவையும் இருந்திருக்காது என்பதற்காக கூறியிருந்தேன்.

காலாகாலமாக அழிக்கப்பட்டு வரும் தமிழின மக்களுக்கு அஹிம்சை வழியும் கைவிட்டு போக தமது உரிமைகளுக்காக ஆயுதம் தாங்கி போராடுவதை தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

4) முத்துகுமார் போன்ற இந்திய தமிழர்களாலேயே முடியாது எனும் போது 2008 இல் கொலிடே விசாவில் போன நான் என்ன செய்ய முடியும்? .

தமிழக மக்கள் போராடவில்லை என்று நீங்கள் குற்றம் சாட்டியதால் நான் கூறியது தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர்களை உங்கள் தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டி போராடியிருக்கலாம் என்று.

எமக்காக நாம் போராடாமல் அவர்களை போராட சொல்வதற்கு எமக்கு என்ன உரிமை இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி துளசிக்கு,

தங்கச்சி மடம் என்பது இலங்கைக்கு படக்கால் போக போர்ட் ஏறும் ஒரு கரையோர கிராமம். பிடிபட்ட அஞ்சும் அந்த ஊர்காரர்.

அவுங்களுக்கே இவ்வளவுதான் கூட்டம்.

இதுவே ஒரு நடிகர் வாறார்னா பின்னி எடுத்திருப்பாங்க.

உங்களுக்கு தமிழகம் பற்றி பேஸ்புக் தவிர பெரிதாக தெரியவில்லை போல கிடக்கு.

பேஸ்புக்கில் இருக்கும் ரொம்ப நல்லவங்களுக்கு அப்பால் - எவன் செத்தா என்னகென்ன, நான் முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன் நெறி சொல்லும் தமிழகம்தான் எண்ணிக்கையில் ஜாஸ்தி.

2012 இல்தான் உங்களுக்கு யாழ் இருப்பதே தெரியும் என்று நீங்கள் சொல்லிய பின், உங்கள் கருத்துக்களின், ஆழமின்மை, அப்பாவித்தனம் போன்றவற்றை எனக்கு நன்கு விளங்க கூடியதாய் இருந்தது. புலிகள் என்று ஒரு அமைப்பு இருந்தது என்பதாவது உங்களுக்கு 2009 க்கு முன் தெரிய வந்திருக்கும் என்று நம்புகிறேன் :)

எமக்காக நாம் போராடாமல் அவர்களை போராட சொல்வதற்கு எமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஒரு உரிமையும் இல்லை. அப்படி இருப்பதாக அவர்கள் என்றுமே நம்பியதில்லை.நம்பி இருந்தால் முள்ளிவாய்காலை நடக்க விட்டிருக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு உரிமை இருக்கிறது என்று அப்பாவித்தனமாய் நம்பாதீர்கள் எண்டுதான் சொல்கிறேன்.

தமிழக தமிழர்களின் நிலை எப்படி உங்களுக்கு தெரியும். ஒரு 4 பேரின் ஃபேஸ்புக் படங்கள் 7 கோடி மக்களின் நிலைக்கு சான்றா? சரி அப்படி இணைக்கப்படுகின்ற போராட்ட படங்களில் எத்தனை பேர் பங்குபெறுகிறார்கள்? ஒரு 10 லட்சம் பேர் கொண்ட ஒரு தமிழக போராட்ட படத்தை காட்ட முடியுமா? ஃபேஸ்புக் படங்கள் பார்ப்பதால் தமிழக உறவுகளின் நிலை எனக்கு தெரியும் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட ஒரு அப்பாவி இருக்க முடியாது.

இதை விட தமிழக மக்கள் முட்டாள்கள் என்று யாரும் கூற முடியாது. நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழக மக்களை மந்தைகள் போல வைத்திருப்பது வெகு சுலபம் போல இருக்கு. எமக்கு வெளிநாடுகளில் எப்படி இணைய வசதிகள் இருக்கோ அதே வசதிகள் அங்கும் இருக்கின்றன. சும்மா அவர்கள் தமிழக ஊடகங்களை மட்டும் பார்க்கும் அப்பாவிகள் என்று முட்டாள்தனமாக கதைக்க கூடாது.

உதாரணத்திற்கு முத்துகுமாரன் ஜனவரி 2009இல் தீக்குளிக்கிறார். மக்கள் இப்படியாவது விளிப்படைய வேண்டும் என்ற நொக்கில் தான் அவர் தீக்குளிக்கிறார். அக்கறை உள்ள ஒரு தமிழக‌ இளைஞன் என்ன செய்திருக்க வேண்டும். யார் இந்த முத்துகுமரன்? அவர் ஏன் தீக்குளித்தார்? தீக்குளிக்கும் அளவிற்கு இலங்கையில் என்ன நடக்கின்றது? என்று குறைந்த பட்சம் எண்ணி இருந்தாலே இணையத்தில் இலங்கை நிலவரங்களை தேடி அறிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் ஃபேஸ்புக்கில் அஜித்தா விஜய்யா என்று சண்டை போட காட்டிய அக்கறையை கூட பக்கத்தில் செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழன் மேல் காட்டவில்லை. இப்ப வந்து அவர்கள் பாவம் சன்டீவீ மட்டும் பார்பவர்கள் அதில் காட்டாததால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று எங்கள் காதில் நீங்கள் பூச்சுத்துகிறீர்கள்.

ரோட்டில நின்டு கொடி பிடிச்ச போராட்டங்களால் ஏதும் பலனில்லாமல் போயிருக்கலாம். காரணம் அங்கு நாங்கள் புலிகளை தான் முன்னிறுத்தினோம் மக்கள் இழப்புகளை அல்ல. ஆனால் சில‌ புலம்பெயர் அமைப்புகளின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தான் பிரிட்டன் கனடா போன்ற நாடுகளை எம் பக்கம் திருப்ப வைத்தது.

நீங்கள் 7 கோடி பேரின் நிலையையும் அறிந்து விட்டு தானே இங்கே கருத்து கூறுகிறீர்கள்? இன்றுவரை நடைபெற்ற பல்வேறுபட்ட போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் கூட்டி கணக்கெடுங்கோ. உங்களுக்காக நான் அதை செய்துகொண்டிருக்க முடியாது.

முன்னரை விட இப்பொழுது ஈழ ஆதரவு தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

உங்களை விட அதிகமாக தமிழக உறவுகளின் நிலை எனக்கு தெரியும் என்பதை உறுதியாக என்னால் கூற முடியும். :)

கண்டிப்பாக நான் அப்பாவி அல்ல. அப்பாவியாக இருந்திருந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென நினைத்து தலையாட்டி விட்டு சென்றிருப்பேன். இப்படி உங்களுக்கு எதிர் கருத்து போட்டிருக்க மாட்டேன்.

தமிழக மக்களை முட்டாள்கள் என நான் கூறவில்லை. அவர்களிடம் திட்டமிட்டு செய்திகள் மறைக்கப்பட்டதற்கு அவர்கள் என்ன செய்ய முடியும்? இப்பொழுது உண்மையை அறிந்து வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

புலம்பெயர் போராட்டங்களில் புலிக்கொடி பிடித்தாலும் மக்களின் அழிவையும் சுட்டிக்காட்டியே போராடினார்கள்.

கொடிபிடிப்பவர்களின் போராட்டத்தால் எந்த பிரயோசனமும் இல்லை என்பது என் கருத்து அல்ல. மக்களின் அழிவை தடுத்து நிறுத்த அப்போராட்டங்கள் பயன்படவில்லை என்பதே என் கருத்து. காரணம் உலக நாடுகள் பல சேர்ந்தே தமிழின அழிவிற்கு அன்று துணை போயின. அந்நாடுகள் எதுவும் அக்காலப்பகுதியில் எமது போராட்டத்தை செவிமடுக்கவில்லை. மற்றபடி புலம்பெயர் அமைப்புகள் புலிக்கொடி பிடிப்பவை தான். என்னமோ புலிக்கொடி பிடிக்காத கணக்கில் கதைக்கிறீர்கள். அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

ஆயுத போராட்டம் முடிவடைந்த பின்னர் புலம்பெயர் தமிழர்களின் முயற்சிகள் இன்றியமையாதவை. இன்று காலம் மாறிவரும் நிலையில் தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்கள் ஒன்றிணைந்து போராடுவது நன்மையே.

Edited by துளசி

தங்கச்சி துளசிக்கு,

தங்கச்சி மடம் என்பது இலங்கைக்கு படக்கால் போக போர்ட் ஏறும் ஒரு கரையோர கிராமம். பிடிபட்ட அஞ்சும் அந்த ஊர்காரர்.

அவுங்களுக்கே இவ்வளவுதான் கூட்டம்.

இதுவே ஒரு நடிகர் வாறார்னா பின்னி எடுத்திருப்பாங்க.

உங்களுக்கு தமிழகம் பற்றி பேஸ்புக் தவிர பெரிதாக தெரியவில்லை போல கிடக்கு.

பேஸ்புக்கில் இருக்கும் ரொம்ப நல்லவங்களுக்கு அப்பால் - எவன் செத்தா என்னகென்ன, நான் முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன் நெறி சொல்லும் தமிழகம்தான் எண்ணிக்கையில் ஜாஸ்தி.

2012 இல்தான் உங்களுக்கு யாழ் இருப்பதே தெரியும் என்று நீங்கள் சொல்லிய பின், உங்கள் கருத்துக்களின், ஆழமின்மை, அப்பாவித்தனம் போன்றவற்றை எனக்கு நன்கு விளங்க கூடியதாய் இருந்தது. புலிகள் என்று ஒரு அமைப்பு இருந்தது என்பதாவது உங்களுக்கு 2009 க்கு முன் தெரிய வந்திருக்கும் என்று நம்புகிறேன் :)

ஒரு உரிமையும் இல்லை. அப்படி இருப்பதாக அவர்கள் என்றுமே நம்பியதில்லை.நம்பி இருந்தால் முள்ளிவாய்காலை நடக்க விட்டிருக்க மாட்டார்கள்.

அப்படி ஒரு உரிமை இருக்கிறது என்று அப்பாவித்தனமாய் நம்பாதீர்கள் எண்டுதான் சொல்கிறேன்.

அங்கு கூடியிருந்தவர்களில் ஒரு பகுதி மட்டுமே அந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது. :)

மீனவர்களுக்காக பலர் பல போராட்டங்களை நடத்துகிறார்கள். நீங்கள் நான் சொல்லவந்த கருத்தை விட்டு வேறு பக்கம் திசை திருப்புகிறீர்கள். அப்படத்தில் நான் சுட்டிக்காட்டியவர்களிடம் இணைய வசதி இல்லை என்பது தான் என் கருத்து.

யாழ் இணையம் பற்றி நான் அறிந்து கொண்டது 2012 இல் தான். நான் ஊரில் இருந்த போது இணைய வசதி எம்மிடம் இல்லை. பத்திரிகை தான் வீட்டில் எடுப்பார்கள். இறுதிப்போரின் பின் தான் இலங்கையை விட்டு வெளியே வந்தேன். வெளிநாட்டில் இணைய வசதி கிடைத்ததும் lankasri இணையத்தளம் பார்ப்பேன்.

2012 இலேயே யாழ் இணையம் பற்றி என் நண்பர் ஒருவர் சொல்ல அறிந்து வாசகியாகி உடனேயே உறுப்பினராகவும் இணைந்து கொண்டேன். இதை சொல்வதில் ஒரு அப்பாவித்தனமும் இல்லை. :)

இன்னும் பலருக்கு யாழ் இணையம் பற்றி இன்னமும் தெரியாது. :)

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் வேறு ஏதும் இணையதளம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ள போது இன்னொரு இணையதளத்தில் போட்ட செய்தியை சுட்டிக்காட்டி நீங்கள் ஏன் அதை வாசிக்கவில்லை என்று கேட்பது போல் தான் தமிழகத்தில் வேறு ஊடகங்களை பார்க்கும் வழக்கம் கொண்டவர்களை பார்த்து 2009 இல் யாழ் இணையம் போல் பல இணைய தளங்கள் தமிழகத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தன. ஏன் அதை பார்த்து தமிழினப்படுகொலை பற்றி அறியவில்லை என்று நீங்கள் கேட்பது. (அன்றைய காலத்தில் யாழை பார்த்த தமிழக உறவுகளை பற்றி இதில் குறிப்பிடவில்லை)

யாழ் இணையத்தை தெரியாவிட்டால் புலிகள் அமைப்பு இருந்ததென்று 2009 க்கு முன் எனக்கு தெரியாது என்று அர்த்தமா என்ன? உங்கள் நக்கலடிகளை வேறெங்காவது வைத்துக்கொள்ளுங்கள். :)

உங்களை விட அதிகமாக எனக்கு தமிழக மக்களுடன் தொடர்பு இருக்கிறது. அதுபற்றி உங்களுக்கு கவலை வேண்டாம். ஈழ போராட்டங்களுக்கு ஆதரவு நிலை என்பது தமிழகத்தில் அதிகரித்தே வருகிறது.

தமிழக மக்களை எமக்காக போராட சொல்லி நாம் அவர்களை கட்டாயப்படுத்தவோ அல்லது ஏன் போராடவில்லை என்று கேட்பதற்கோ எமக்கு என்ன உரிமை உள்ளது என்று தான் நான் கேட்டேன். மற்றபடி அவர்களாக போராடுவதற்கும் குரல் கொடுப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது. இரண்டையும் போட்டு குழப்பி கருத்து எழுதாதையுங்கோ. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசி, நீங்கள் எழுதுகின்றதைப் பார்த்தால் தமிழக மக்களுக்கு அறிவு [படிப்பறிவு] இல்லை,சுய சிந்தனை இல்லை,முக்கியமாக உணர்ச்சியே இல்லை என சொல்வது போல உள்ளது.அவர்களுக்கு ஆதரவாக கதைக்கிறேன் என வெளிக்கிட்டு அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள். :)

தமிழ்நாட்டு மக்கள் சென்னையிலேயே நடு றோட்டில் வைத்து ஒரு தமிழரை வெட்டினால் கூட பேசாமல் பார்த்திட்டுப் கடந்து போகக் கூடியவர்கள் அவர்களை பார்த்து பக்கத்து நாட்டில் உள்ள ஈழ மக்களுக்காக போராடவில்லை என்று சிலர் கேட்டுக் கொண்டு:lol:

அவர்கள் வீதியில் இறங்குவதற்கு முக்கிய காரணம்; அவர்களுக்கு பிடித்த நடிகர்கள்/அரசியற் பிரமுகர்களுக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும் அல்லது சாதியையை காட்டி கட்சிகளுக்குள் பிளவை உண்டாக்கினால் சரி வரிந்து கட்டிக் கொண்டு வீதியில் இறங்குவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 5%க்கும் குறைவான மக்களுக்குத் தான் மனிதாபிமானம் இருக்கிறது. அதிலும் 3% குறைவான மக்களுக்குத் தான் ஈழ உணர்வும்,பற்றும் இருக்குது.முத்துக்குமார்,செங்கொடி போன்றோர் வீர மரணம் அடையும் போது அதை அங்கிருக்கும் மக்கள் சும்மா ஒரு செய்தியாகத் தான் பார்த்தார்கள்.அதன் வீரியத்தை உணர்ந்திருந்தால் வீதியில் நின்று இருப்பார்கள்.

துளசி,நாங்கள் அவர்களை ஈழம் பெற்றுத் தர வீதியில் இறங்கி நின்று போராடச் சொல்லவில்லை.கடைசி யுத்தத்தை அவர்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்.இது தான் உண்மையிலும் உண்மை.தனிய கருணாநிதி,ஜெ போன்றோரை குற்றம் சாட்டுகிறது என்பது "நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு என்று" சொல்வது போல் இருக்கின்றது.கடலைக் கடந்தால் பக்கத்தில் உள்ள தங்கட மொழியை பேசுகின்ற,அவர்களது இன மக்கள் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் அதைப் பற்றிய உணர்வு தமிழ்நாட்டில் உள்ளோருக்கு வேண்டாமோ!...நீங்கள் சொல்கின்ற படி பார்த்தால் கூட இங்கு இருக்கும் மக்களுக்கு அரசியல்வாதிகள் எல்லாம் மறைக்கின்றார்கள் என வைத்தால் கூட பக்கத்து நாட்டில் யுத்தம் நடக்குது,அதில் என்ன நடக்குது என அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் இருந்தவர்கள் தான் இவர்கள்.ஆர்வமிருந்திருந்தால் வீதியில் இருந்திருப்பார்கள்.

நாங்கள் போராடமல் புலம் பெயர்ந்து கொண்டு அவர்களை போய் எங்களுக்காக போராடுங்கள் என்று சொன்னால் தான் தப்பு.நான்,கோசான் எல்லோரும் சொல்ல வருவது இது தான்;2009 கடைசி யுத்தத்தை நிப்பாட்டச் சொல்லி புலியாதரவாளர்களோடு சேர்ந்து,மாற்றுக் கருத்துக்காரரும் சேர்ந்து தான் வீதியில் இறங்கிப் போராடினார்கள்.எங்களோடு சேர்ந்து தமிழ்நாட்டு மக்களும் வீதியில் இறங்கி இருந்தால் இவ்வளவு மக்கள் செத்திருக்க மாட்டார்கள்.இவ்வளவு அழிவும் நடந்திருக்காது.இவ்வளவு மக்களை நேரடியாக அழித்த சிங்கள அரசு உலக நாடுகளை விட வேடிக்கை பார்த்த தமிழ்நாட்டு/தமிழ் மக்கள் மிகப் பெரிய குற்றவாளிகள் என்பது என் கருத்து

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் வரும் கருத்துக்களைப் பார்த்தால் இனி "விசுகுவும் அபிலாஷாவும்" என்றும் உரையாடல் திசை மாறலாம் போலுள்ளது! :lol:

பல நாட்களுக்கு முன்னர் விசுகு ஐயாவுக்கு ஒரு கருத்து வைத்தேன். பதில் வராது என்று எதிர்பார்த்திருந்தேன். என் கணிப்பு பொய்க்கவில்லை :)

ரதி அக்கா,

எனது கருத்தில் நான் தமிழக மக்களை தவறாக குறிப்பிடவில்லை. நீங்கள் அவ்வாறான கருத்தை உருவாக்க முயல வேண்டாம். :lol:

அடுத்தது,

ஏற்கனவே நான் எழுதியவற்றை திரும்ப உங்களுக்கு கூறுவதை தவிர்க்கிறேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி. நான் நினைக்கிறேன் தங்கச்சி துளசி ஒருக்காலும் தமிழ் நாட்டுப்பக்கம் போகவில்லை என்று. விடுங்கோ இப்பதானே பிள்ளை ஊரை விட்டு வெளிக்கிட்டது. போக போக விளங்கும்.

கிருபர் நான் முன்னமே அடிச்ச ஜோக்க நீர் திரும்ப அடிக்கிறது சரியில்லை சொல்லிப்போட்டன்

நன்றி ரதி. நான் நினைக்கிறேன் தங்கச்சி துளசி ஒருக்காலும் தமிழ் நாட்டுப்பக்கம் போகவில்லை என்று. விடுங்கோ இப்பதானே பிள்ளை ஊரை விட்டு வெளிக்கிட்டது. போக போக விளங்கும்.

இசை அண்ணா தமிழ்நாட்டில் படித்தவர். அவர் கருத்தையும் வாசியுங்கோ. :lol:

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.