Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வந்தது முதலாவது புற்தரை மைதானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

43f606fd801fda757b1b2f4a6ca79343.jpg

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்களான சனத் ஜெயசூரியா ,சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ,உபுல் சந்தன ஆகியோர் அடங்கிய அணியினர் இன்று யாழ்.வருகை தந்து  யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து  வைத்தனர்.
 
இந்த நிகழ்வு இன்று காலை 10மணியளவில் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபர் ஜெறோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
 
 
மேலும் இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை வருகை தந்து யாழில் அமையப்பெற்ற முதல் புற்தரை மைதானத்தை ஆரம்பித்து வைத்தார்.
 
 
 
மேலும் வடக்கு கிழக்கு இணைந்த 23வயதுப்பிரிவு அணிக்கும்,தேசிய அணியின் முன்னாள் வீரர்களுக்கும் இடையில் நட்பு ரீதியிலான 12 ஓவர்கள் கொண்ட ஆட்டம் இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தேசிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது.அதன்படி வடக்கு கிழக்கு இணைந்த 23வயதுப்பிரிவு அணியினர் 12ஓவர்கள் நிறைவில் 92ஓட்டங்கள் பெற்று 6விக்கெட்டுக்களை இழந்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தேசிய அணி 11.2ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுக்களை இழந்து 95 ஓட்டங்கள் பெற்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
வடக்கின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்தப் புற்றரை மைதானம் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
இதில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி உதயபெரேரா,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
8(46).jpg
 
6(47).jpg
 
4(88).jpg
 
3(117).jpg
 
5(69).jpg
 
2(133).jpg
 
1(164).jpg
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=629443591129640316

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப இருந்து சென் பற்றிக்ஸ்.. இராணுவ பயிற்சிக் கல்லூரியானது. இராணுவ அதிகாரிகள் தான் நிகழ்வில் முன்னுக்கு நிற்கிறார்கள்..!! ஏன் எதுக்கு என்ற கேள்வி எழுப்ப ஆக்கள் இல்லை என்றோ..????! கூட சனத்.. முரளி.. சிவில் உடை இராணுவ அதிகாரிகள் போல நிற்கிறார்கள்..!!! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா மைத்தானத்தில மண்ணு தான் இருக்கு புல்ல காணோம்? இதை திறந்து வைக்க இம்புட்டு ஆர்ப்பாட்டம் தேவையா....

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா மைத்தானத்தில மண்ணு தான் இருக்கு புல்ல காணோம்? இதை திறந்து வைக்க இம்புட்டு ஆர்ப்பாட்டம் தேவையா....

 

விளையாடினாத்தான் புல்லு முளைக்கும்

ஒரு சாதாராண பாடசாலையில் புற்தரை மைதானம். மாகாண கல்வி அமைச்சு நிதி ஒதுக்க பாடசாலை நிர்வாகத்தின் மேற்பார்வையில் செய்து முடிக்கபடவேண்டிய சிறிய வேலை.  இதற்கு இத்தனை ஆர்பாட்டமா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உங்கள் பலருக்கு என்ன நடக்குது எண்டு விளங்கவில்லை.

செய்தியின் மொழியாக்கத்திலும் குறைபாடு.

இங்கே மைதானம் புற்தரை யால் ஆக்கப்பட்டது பற்றி இல்லை செய்தி. கிரிகெட் மைதானத்தின் நடுவில் இருக்கும் pitch புல்லாலாக்கப்பட்டுளது.

Pitch கள் இரு வகைபடும்.

1) மண்ணில்/புல்லுக்கு மேல் "மெட்டின்"எனும் கயித்து பாயை விரித்து விளையாடுவது

2) 5அடி ஆழமாக கிண்டி கொங்ரீட் வேறு வகை மண் இட்டு செப்பனிட்டு, அதன் மேல் புல்லையே பாய் போல வளர்த்து அதன் மேல் விளையாடுவது. Turf pitch என்பர்.

2vவது முறைதான் professional தர்ச் விளையாட்டில் பயன்படும். வெளிநாட்டில் எல்லாம் 1 வது முறையில் 10 வயது பிள்ளைகளே விளையாடாது.

1ம் முறையில் விளையாடி விட்டு 2ம் முறைக்கு மாறுவது மிக மிக கடினம்.

இலங்கையின் கொழும்பு கண்டியின் முண்ணணி பாடசாலை எல்லாம் 2ம் முறையை கொண்டிக்கிறன.

வடகிழக்கில் இதுவரை இப்படி ஒரு மைதானம் இருக்கவில்லை.

எம்பிள்ளையள் மெட்டினில் எப்படி சுழட்டி அடித்தாலும் turf எனும் புல் pitch இல் சோபிக்க முடியாது போய்விடும்.

இப்போ யாழுக்கு இது வந்த்ஹிருப்பது ஒரு வரப்பிரசாதமே

Edited by goshan_che

மிக நல்ல விடயம் .

 

ஊரில மாட்ச் தொடங்கமுதல் சாக்கு பாயையை(மட்டிங்)  கொண்டுபோய் விரித்து பின்னர் சுற்றிவர ஆணியால் இழுத்து இறுக்கமாக அடிக்கவேண்டும் அதுவே பெரியதொரு வேலை .அதில் பந்து சும்மாவே துள்ளும் .இரண்டாவது புல்லுதான் ஆனால் ஒரு கிளே போல இருக்கும் .இதை தொடர்ந்து பராமரிப்பில் வைத்திருக்கவேண்டும் .பந்து பவுன்சாகும் இடத்தில் உழக்க கூடாது பிறகு பந்து தானாக திரும்பும் .

 

லண்டன் வந்துதான் முதல் முதல் அதில் விளையாடியது .

 

யாழ் இந்து கல்லூரிக்கு ஒன்றை போடுவம் என்று பல வருடங்களாக திட்டம் தீட்டியதுடன் சரி .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சின்ன விடயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது எல்லாம்
வசந்தம்  வடக்கில் வீசுகின்றது எனக் காட்டவே.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உங்கள் பலருக்கு என்ன நடக்குது எண்டு விளங்கவில்லை.

செய்தியின் மொழியாக்கத்திலும் குறைபாடு.

இங்கே மைதானம் புற்தரை யால் ஆக்கப்பட்டது பற்றி இல்லை செய்தி. கிரிகெட் மைதானத்தின் நடுவில் இருக்கும் pitch புல்லாலாக்கப்பட்டுளது.

Pitch கள் இரு வகைபடும்.

1) மண்ணில்/புல்லுக்கு மேல் "மெட்டின்"எனும் கயித்து பாயை விரித்து விளையாடுவது

2) 5அடி ஆழமாக கிண்டி கொங்ரீட் வேறு வகை மண் இட்டு செப்பனிட்டு, அதன் மேல் புல்லையே பாய் போல வளர்த்து அதன் மேல் விளையாடுவது. Turf pitch என்பர்.

2vவது முறைதான் professional தர்ச் விளையாட்டில் பயன்படும். வெளிநாட்டில் எல்லாம் 1 வது முறையில் 10 வயது பிள்ளைகளே விளையாடாது.

1ம் முறையில் விளையாடி விட்டு 2ம் முறைக்கு மாறுவது மிக மிக கடினம்.

இலங்கையின் கொழும்பு கண்டியின் முண்ணணி பாடசாலை எல்லாம் 2ம் முறையை கொண்டிக்கிறன.

வடகிழக்கில் இதுவரை இப்படி ஒரு மைதானம் இருக்கவில்லை.

எம்பிள்ளையள் மெட்டினில் எப்படி சுழட்டி அடித்தாலும் turf எனும் புல் pitch இல் சோபிக்க முடியாது போய்விடும்.

இப்போ யாழுக்கு இது வந்த்ஹிருப்பது ஒரு வரப்பிரசாதமே

 

 

அதைக்கண்ணில் காட்டாமல்  ஒழிப்பது ஏனோ....? :(

நீங்கள் கண்டது   போல் பேசுவதேனோ??? :(

  • கருத்துக்கள உறவுகள்
5%2869%29.jpg
 
ஆயருக்கு மைக் பிடிக்க.. எதுக்கு இராணுவம். எப்ப இருந்து ஆயர் இராணுவ அதிகாரி ஆனவர். இதனை கல்லூரி மாணவர்கள் செய்திருக்க மாட்டார்களோ..???! ஆயர் என்ன அரசியல்வாதியா இல்ல.. இராணுவ உயர் அதிகாரியா.. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்க..????????????! :icon_idea::o

jaff-cri-4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

ஆயரின் காலுக்கு கீழே இருப்பதுதான் turf. 22 யார் தூரத்துக்கு இரண்டு விக்கெட்டுகளிடையே இருக்கும். மிகுதி எல்லாம் சாதாரண மைதானப்புல்.

சர்வதேச அரங்குகள் தவிர மொத்த இலங்கையில் இப்படி ஒரு 15 பிட்சுகள் இருக்கும். இப்போ ஒன்று யாழுக்கு வந்திருப்பது ஒன்றும் சின்ன விடயமில்லை. எதிர்கால வடக்கு கிரிகெட்டின் தர வளர்சியிலிலுது

மிகப்பெரிய மாற்றத்தை தரும்.

இதை பராமரிக்க ஒரு படிப்பே இருக்கு. Curator என்று. பற்றிக்ஸ் பாதிரியள் கெட்டிக்காரர் - தொடர்ந்து ஒழுங்கா பரமரிப்பார்கள் என எதிர்பார்கலாம்.

சர்வதேச அரங்குகள் தவிர மொத்த இலங்கையில் இப்படி ஒரு 15 பிட்சுகள் இருக்கும்.

 

. உலகில் கிறிகெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையே 15 ஐ தாண்டாது. அதிலும் பெரும்பகுதி பிச்சைக்கார நாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப்ஸ்,

கீழே பாருங்கள் லிஸ்டை.

http://en.m.wikipedia.org/wiki/List_of_International_Cricket_Council_members

உலகில் மிக வேகமாக பரவி வரும் விளையாட்டு இது. தெற்காசியாவில் கிரிகெட்தான் ராஜா, மற்றதெல்லாம் கூஜா.

இலங்கையில் மட்டும் 7 சர்வதேச தர மைதானங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்துக்கும் ஒன்று வந்து அதில் இலங்கை இந்தியா மட்ச் பார்க்கோணும் என்பது என் கனவுகளில் ஒண்டு. நிச்சயம் நிறைவேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

துல்ப்ஸ்,

கீழே பாருங்கள் லிஸ்டை.

http://en.m.wikipedia.org/wiki/List_of_International_Cricket_Council_members

உலகில் மிக வேகமாக பரவி வரும் விளையாட்டு இது. தெற்காசியாவில் கிரிகெட்தான் ராஜா, மற்றதெல்லாம் கூஜா.

இலங்கையில் மட்டும் 7 சர்வதேச தர மைதானங்கள் உள்ளன. யாழ்ப்பாணத்துக்கும் ஒன்று வந்து அதில் இலங்கை இந்தியா மட்ச் பார்க்கோணும் என்பது என் கனவுகளில் ஒண்டு. நிச்சயம் நிறைவேறும்.

 

ஆனால் அப்போதும் சிங்களவர்கள் மட்டுமே இலங்கை அணியில் இடம்பெறவேண்டும் அப்படித்தானே :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே சரவணமுத்து, சதாசிவம், 80 க்குள் பின், வினோதன் ஜான், முரளீதரன், ரசல் ஆர்னோல்ட், ரவீந்திர புஸ்பகுமார (அரைத்தமிழர்) எண்டு பலர் ஆடியது போல அப்போதும் ஆடலாமே :)

மட்டக்களப்பில் தேசிய நிலையில் முதல் 40 குகள் தேர்வாகியும் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் விட்ட படியால் ஒரு நல்ல வீரன் கொழும்புக்கு போக முடியாமல் போயிற்று 1999இல். அப்படி ஒரு நிலை இராது என்பது மட்டும் திண்ணம்.

உங்களுக்குத்தெரியுமா? பிராமண வீரங்களையும், ராபின் சிங்கையும் தவிர்த்துப் பார்த்தால் இதுவரை ஒரு தமிழன் கூட இந்திய அணிக்கு விளையாடவில்லை.

உலகம் தெரியாத சிறுவனாக இருந்த போது கிறிகெட்டை ரசித்ததுண்டு. யாழ் இந்து கல்லூரியில் படிக்கும்போது கிறிகெட் விளையாடியதும் உண்டு. தற்போது பல்வேறு உயர் தர விளையாட்டுகளை இங்கு பார்த்த பிறகு இந்த போரிங் விளையாட்டை பார்க்க பெரிதாக விருப்பமில்லை கோசான்.  கால்பந்தில் இலங்கை இந்தியா உலக கோப்பைக்கு போனால் உண்மையில் அது பெருமை தான். எனது பிள்ளைகளின் காலத்திலும் அது நடவாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5(69).jpg

 
நாடு ஜனநாயக நாடு எண்டுறாங்கள்??? விளையாட்டு இடத்திலை ஆமிக்கு என்ன வேலையப்பா????  :D
 
படங்கள் வடகொரியா,  முன்னாள் லிபியா.முன்னாள் ஈராக்கை நினைவூட்டுது. :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் கிரிகெட் போரிங் எந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு.

ஒருநாள் போட்டி T20 எனும் அரைநாள்ப் போட்டி எல்லாம் வந்தாச்சு.

கால்பந்து என்பது எப்போதுமே சிந்திக்க தெரியாதவர்களின் முரட்டு விளையாட்டு. ரூனி ஆகட்டும், ரொனால்டோ ஆகட்டும், பெக்கம் ஆகட்டும், மரடோனா ஆகட்டும், கண்டோனா ஆகட்டும், ஹென்றி, சிடான் என்று பெரும்பாலான வீரர்கள் முரடர்களாயும், மூளைக்கு வேலை கொடாதவர்களாயும், மனேஜரின் சொல்படி நடக்கும், ஒரு தெளைவான பேச்சாற்றல் அற்ற மனிதர்களாயே பெரும்பாலும் இருக்கிறனர்.

கிரிகெட் அப்படியில்லை, உடலுக்கும் மூளைக்கும், மனித விழுமியங்களுக்கும் பண்பாட்டுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு. கிட்டதட்ட ஒரு மினி வாழ்க்கைப்பாடம்.

வீரர்களும் கனவான்களையே இருப்பர். விளையாட்டின் ரசிகர்களும் அப்படியே.

அதனால்தான் போலோ - ராஜ விளையாட்டு

கால்பந்து - தொழிலாளர்களின் விளையாட்டு

கிரிகெட் - கனவான்களின் விளையாட்டு

என்று சொல்லப் படுகிறது.

சரி கோசான் தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் கனவான்கள் மூளைசாலிகள் .அதனால் கிறிகெட்டும் விளையாடி தமது நாடுகளை எவ்வளவு செல்வம் கொழிக்கும் நாடுகளாக மாற்றி வைத்துள்ள்ளார்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளான் ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் முரடர்கள் அதனால் கால்பந்தை தமது முதன்மை விளையாட்டாக விளையாடுகிறார்கள். (இங்கு வரும் இந்திய கனவான்கள் ஹோட்டல்களை காலி பண்ணியதும் அந்த ஹொட்டல் அறைகளை இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டிய அளவிற்கு அதை நாசம் பண்ணுவதை மறந்து விடுவோம்)

கோசான் அவர்கள் கேள்விகளும் உங்கள் பதில்களும் வெவ்வேறாக இருக்கு .(பிட்ச்களின் எண்ணிக்கை ,உதைபந்து என்று )

 

எனக்கும் யாழ்பாணத்தில் இருந்து ஒரு முதல்தர ஆட்டம் பார்க்க ஆசை .

 

இங்கிலாந்து லார்ட்ஸ்  ,ஓவல், தமிழ் நாடு சேப்பாக்கம், இலங்கை ஓவல் (இப்ப சரவணமுத்து ),டிரினாட் போர்ட்ஸ் of ஸ்பெயின்  எல்லாம் பார்த்தாச்சு .

 

ஆஸியில் சிட்னிக்கும் முடிந்தால் போக ஆசை .

 

இராணுவ பிரசன்னம் முழு தமிழர்களுக்கும் வெறுப்பு உண்டாக்கும் விடயம் தான் ஆனால் சிங்களவனுக்கு பயங்கரவாதிகளை இப்ப தானே அழித்தம் என்ற சாக்கு போக்கு வசதியாகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ் ஆங்கிலத்தில் simplistic thinking என்பார்கள். மிகச் சாதாரணமாக ஒரு விடயத்தை மேலோட்டமாய் விளங்குவது. விளையாட்டையும், பொருளாதாரத்தையும் நீங்கள் பார்க்கும் பார்வை அப்படியாய்தான் இருக்கு.

உலகின் மிகவும் பின்தங்கிய வறிய ஆபிரிக்க தென்னமரிக்க நாடுகளில் எல்லாம் கால்பந்தே பிரதான விளையாட்டு. அதுக்காக அவை பிந்தங்கியதுக்கு கால்பந்தே காரணமானது என்பது எவ்வளவு அபத்தம்.

நான் சொல்ல வந்தது - வீரர்களினை குறிப்பாக மாணவர்களை ஒரு பரந்துபட்ட தலைமை பண்புகள், விழுமியங்கள் நிறைந்தவராகா மாற்றுவதில் கிரிகெட் கால்பந்தை விட சிறப்பானது என்பதே.

இதை கொண்டுபோய் பொருளாதார வளர்சியுடன் தொடர்பு படுத்த முடியாது.

அர்யூன் அப்படி ஒரு நிலை வரும் போது உங்கள் மைதான ( பிளைட் அல்ல) டிக்கெட் என் செலவு.

யூதர்கள் இஸ்ரேலில் சந்திப்போம் என்பார்களாம்.

நாங்கள் யாழின் சர்வதேச மைதானத்தில் சந்திப்போம்.

சரி மன்னிக்கவும் கோசான். கிறிக்கெட்ல் உள்ள வெறுப்பை இங்கே கொட்டிவிட்டேன். அவ்வளவு தான்.  ஆனால் கிறிக்டெட் கால்பந்தை விட உன்னதமானது என்பத்தை இப்போதும் ஏற்றுக்கொள்ள எனது மனம் மறுக்கிறது.  கிறிக்கெட் விளையாடும் நாடுகளில் அவ்வீர்ர்கள் ஒன்றும் அவ்வாறு  பரந்து பட்ட பண்புகள் விழுமியங்கள் நிறைந்தவர்களாக யதார்த்தத்தில் காணப்படவில்லை. நீங்கள் கனவான்கள் விளையாட்டு என்று கூறியதாலேயே அந்த கனவான்களை பற்றி கூறினேன்.இந்தியா இலங்கை என்று தென்கிழக்காசிய வட்டத்தில் சிந்திப்பவர்களுக்கு கிறிக்கெட் சிறந்த விளையாட்டு தான். உலக அளிவில் பல முன்னேறிய நாடுகளில் அதை கணக்கெடுப்பதே இல்லை என்பது தான் ஜதார்த்தம். சரி கோசான் எமது உரையாடல் தலைப்பை மீறி செல்கிறது . மன்னிக்கவும்.

எமது விடுதலை போராட்டம் தோற்றதும் இன்று வரை எமக்கு அரசியல் தீர்வு எதையும் தராதையும் நினைத்து ஆயிரம் கோபங்கள் இருந்தாலும் சில விடயங்கள் தவிர்க்க முடியாது ஆகின்றது .

யாழ் இந்து கொழும்பில் பழைய மாணவர்களுக்குள் ஒரு கிரிக்கெட் சுற்று போட்டியும் யாழ்பாணத்தில் 125 வருட விழாவும் பெரிதளவில் செய்ய  ஆயத்தம் செய்கின்றார்கள் .

அதில் கலந்துகொள்ள ஆசையாய் இருக்கு முடிந்தால் போய் விசுக்கிவிட்டுவருவம் .

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து என்பது எப்போதுமே சிந்திக்க தெரியாதவர்களின் முரட்டு விளையாட்டு. ரூனி ஆகட்டும், ரொனால்டோ ஆகட்டும், பெக்கம் ஆகட்டும், மரடோனா ஆகட்டும், கண்டோனா ஆகட்டும், ஹென்றி, சிடான் என்று பெரும்பாலான வீரர்கள் முரடர்களாயும், மூளைக்கு வேலை கொடாதவர்களாயும், மனேஜரின் சொல்படி நடக்கும், ஒரு தெளைவான பேச்சாற்றல் அற்ற மனிதர்களாயே பெரும்பாலும் இருக்கிறனர்.

கிரிகெட் அப்படியில்லை, உடலுக்கும் மூளைக்கும், மனித விழுமியங்களுக்கும் பண்பாட்டுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு. கிட்டதட்ட ஒரு மினி வாழ்க்கைப்பாடம்.

வீரர்களும் கனவான்களையே இருப்பர். விளையாட்டின் ரசிகர்களும் அப்படியே.

அதனால்தான் போலோ - ராஜ விளையாட்டு

கால்பந்து - தொழிலாளர்களின் விளையாட்டு

கிரிகெட் - கனவான்களின் விளையாட்டு

என்று சொல்லப் படுகிறது.

 

 

இது தானே  வேண்டாம் என்பது....??

 

எல்லாவிளையாட்டுமே

பொருளாதாரத்துக்குள்ளும்

சூதாட்டத்துக்குள்ளும் அகப்பட்டு வெகுநாளாச்சு...

 

எந்த விளையாட்டானாலும்

எந்த வீரர்கள் ஆனாலும் 

அவர்கள் தனித்து  சுயமாக விளையாடமுடியாது....

தீர்மானிப்பது பணமாகவும்

தீர்மானிப்பவர்கள் வெளியிலும் இருக்கிறார்கள்

இன்று வெல்வதும் தோற்பதும் கூட முதலே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது....

 

நாமெல்லாம்  முட்டாளாக்கப்படுவதை உணராதவரை............. :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.