Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

 

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம்.

தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள்.

மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது.

கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)

100 –ஆண்குழந்தைகள் 12வயதிற்கு உட்பட்டோர்.

150 குடும்பங்கள்.

மொத்தம் 572 பேர் தங்கியுள்ளனர்.

உனகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

41 பெண் குழந்தைகள்

33 ஆண் குழந்தைகள்.

மொத்தம் 297 பேர் தங்கியுள்ளனர்.

எங்கள் சகோதர உறவுகளான இம்மக்களின் துயர் துடைக்க நேசக்கரம் தருமாறு வேண்டுகிறோம். ஓவ்வொருவரும் தங்களால் இயன்றள உதவியை நல்குங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்.

குழந்தைகளுக்கு தேவையான போர்வைகள். ஒருபோர்வையின் விலை – 600ரூபா.

256 குழந்தைகளுக்கு – 153600.00ரூபா. (அண்ணளவாக யூரோ 930€)

பால்மா – ஒன்றின் விலை – 375.00ரூபா

256 குழந்தைகளுக்கு – 96000.00ரூபா. (அண்ணளவாக யூரோ 581€)

பிஸ்கெட் – ஒரு பெட்டி விலை – 500.00ரூபா.

256 குழந்தைகளுக்கு – 128000.00ரூபா(அண்ணளவாக யூரோ 775€)

நூடுல்ஸ் – 256பெட்டி – 64000.00ரூபா (அண்ணளவாக யூரோ 387€)

கடலை 256 கிலோ – 46080.00ரூபா ((அண்ணளவாக யூரோ 280€)

மொத்தம் தேவையான உதவி :- 2944€.

உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்வரும் வங்கியிலக்கம் அல்லது பேபால் ஊடாக உதவ முடியும்.

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

http://nesakkaram.org/ta/nesakkaram.3695.html

 

நாளை காலையில் நான் 100 டொலர்கள் அனுப்புகின்றேன் சாந்தி.  என் ஒரு சில நண்பர்களும் உதவுவார்கள் என்று நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 923.12€

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

$100 PayPal மூலம் அனுப்பியுள்ளேன்; கிடைத்ததும் உறுதி செய்யுங்கள்.

நன்றி

சாந்தி,

 

யாழ் இணையத்தின் சார்பாக 100 டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் எமக்கு கிடைத்த விளம்பரங்களினூடாக பெறப்பட்ட சின்ன வருமானம் இது.

 

 

நன்றி,

யாழ் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

என‌து குடும்பத்தின் சார்பில் $150 அனுப்பி வைத்துள்ளேன் (paypal). நன்றி உங்கள் காலமறிந்த சேவைக்கு. என்னுடைய உண்மைப் பெயரை போட்டிடாதீங்க.. :D

நானும் என் நண்பர்கள்

 

1. நகுல்

2. சேது மாதவன்

 

ஆகியோர் இணைந்து தலா 100 கனடிய டொலர்கள் படி மொத்தமாக 300 டொலர்கள் என்  பேபால் கணக்கின் மூலம்  அனுப்பியுள்ளோம். கிடைத்தவுடன் அறியத் தரவும்.

 

எம் நண்பர் குழாமில் இருக்கும் கார்த்திசா கனகசபை ஏற்கனவே உங்களுக்கு ஒரு சிறு தொகை அனுப்பியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ், நிழலி மற்றும் நண்பர்கள் ,இசைக்கலைஞன் , யாழ் இணையம் மோகன் அனைவரின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது. மிக்க நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 660.84€

 

 

Edited by shanthy

கள உறவுகள் தங்கள் முகநூலிலும் இவ் உதவி தொடர்பாக பதிந்தால் உரிய இலக்கினை எட்ட முடியும்.

 

 

அங்கு அழிந்ததும், அழுவதும், அநாதைகளாக்கப்பட்டதும் எம் சக தமிழர்கள் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகள் தங்கள் முகநூலிலும் இவ் உதவி தொடர்பாக பதிந்தால் உரிய இலக்கினை எட்ட முடியும்.

 

 

அங்கு அழிந்ததும், அழுவதும், அநாதைகளாக்கப்பட்டதும் எம் சக தமிழர்கள் தான்!

 

கண்டிப்பாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..அனேகமான உறவுகளுக்கு இப்படி ஒரு பகுதி இணைக்கபட்டு இருக்கிறது என்பது தெரியாமல் கூட இருக்கலாம்.ஆகவே அடிக்கடி இந்தப் பகுதியை பலரின் பார்வைக்கு உட்படுத்துவது நன்று.

 

 

 

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

amazon gift card/voucher வடிவில் தந்தால்.. அதற்குரிய யூரோ..பெறுமதியை.. நேசக்கரம்.. வழங்குமா..??! அறியத்தாருங்கள். paypal வழியாக அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது... அதுதான்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி... நானும் ஒரு $100 அவுஸி டொலர்கள் அனுப்பி வைத்துள்ளேன்!

 

காலமறிந்து, நேரமறிந்து... உதவும் நேசக்கரத்தின் பணிகள்... நீண்ட காலங்களுக்கு.. நிலைக்க வேண்டும்!

 

தங்களின் தளராத முயற்சிக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கை உங்கள் உதவி கிடைத்தது மிக்க நன்றிகள்.இன்று வந்து தகவல் :- 75மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். மிகுந்த வறுமையில் வாழ்ந்தவர்களின் இந்தக் குழந்தைகளை காலம் இனி எந்த வகையில் வாழ வைக்கப்போகிறது தெரியவில்லை. 


amazon gift card/voucher வடிவில் தந்தால்.. அதற்குரிய யூரோ..பெறுமதியை.. நேசக்கரம்.. வழங்குமா..??! அறியத்தாருங்கள். paypal வழியாக அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது... அதுதான்.  :icon_idea:

மன்னிக்கவும் தம்பி அத்தகைய வசதி இல்லை. விரும்பினால் ஊருக்கு வங்கியிலக்கம் தரலாம் அதற்கு அனுப்புவீங்களென்றால் தரலாம்.


என‌து குடும்பத்தின் சார்பில் $150 அனுப்பி வைத்துள்ளேன் (paypal). நன்றி உங்கள் காலமறிந்த சேவைக்கு. என்னுடைய உண்மைப் பெயரை போட்டிடாதீங்க.. :D

 

அடப்பாவி மக்கா ஏனப்பா இந்தக்கொலைவெறி ? :D  இசை எப்போதும் இங்கு இசையும் கலையும் சேர்ந்த கலைஞன்தான். 4வருசமாக இசையை பாதுகாத்து வருகிறேன். இரகசியம் எப்போதும் பரகசியமாகாது தம்பி. :lol: கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தம்பி அத்தகைய வசதி இல்லை. விரும்பினால் ஊருக்கு வங்கியிலக்கம் தரலாம் அதற்கு அனுப்புவீங்களென்றால் தரலாம்.

 

யாழ்பொற்கிழி(ளி) தந்த ஊக்குவிப்பு voucher (அமேசன்) போல ஒன்றை நேசக்கர மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உங்களுக்கு கிடைக்கும் தொகைக்கு சமனான தொகையை கொடுப்பீங்களான்னு சொல்லுங்க. ஊருக்கு நேர அனுப்ப முடியுமுன்னா.. அதை உங்களின் வங்கி இலக்கத்துக்கே அனுப்பிடுவமில்ல. முடிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி பறுவாயில்லை. வேறு வழியில் உதவுவது பற்றி சிந்திக்கிறம்.  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பொற்கிழி(ளி) தந்த ஊக்குவிப்பு voucher (அமேசன்) போல ஒன்றை நேசக்கர மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உங்களுக்கு கிடைக்கும் தொகைக்கு சமனான தொகையை கொடுப்பீங்களான்னு சொல்லுங்க. ஊருக்கு நேர அனுப்ப முடியுமுன்னா.. அதை உங்களின் வங்கி இலக்கத்துக்கே அனுப்பிடுவமில்ல. முடிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி பறுவாயில்லை. வேறு வழியில் உதவுவது பற்றி சிந்திக்கிறம்.  :)

மன்னிக்கவும் வேறு வசதிகள் இல்லையப்பா. 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் வேறு வசதிகள் இல்லையப்பா. 

 

இல்லையே. பறுவாயில்லை விடுங்க.  :(  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு உள்ள அதே பிரச்சினைதான் எனக்கும்.

பெயர் விபரம் தெரியாமல் பணம் அனுப்புவது எப்படி? தெரிந்தவர்கள் சொல்லவும்.

paypal மூலம் பணம் அனுப்பினால் உங்கள் வங்கி விபரங்கள் தெரிய வராது. முற்றுமுழுதாக anonymous  ஆக பணம் அனுப்ப விரும்பினால் ஒரு pre-paid visa card ஒன்றை கொள்வனவு செய்யவும். ஒரு புதிய paypal கணக்கை துவங்கி அந்த கணக்கில் இந்த pre-paid visa card ஐ இணைத்து அதன் மூலம் பணத்தை அனுப்பலாம். இந்த முறை மூலம் உங்கள் சொந்த விபரங்களை தெரியப்படுத்தாமலயே உதவலாம். 
உதவி தான் முக்கியம். அதை எந்த விதத்தில் செய்தால் என்ன. 
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தெனாலி. டிரை பண்ணுறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா,

https://www.justgive.org

இதில் நீங்கள் ஏன் சேரக்கூடாது? இவர்கள் anonymous donations ற்கு வழி செய்து கொடுக்கிறார்கள்.

நெடுக்கு மற்றும் கோசான்,


நீங்கள் உங்கள் பெயர் தெரியாமல் இருக்க பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு Paypal கணக்குகளை திறவுங்கள். ஒன்றை உங்கள் சொந்த பெயரில் வைத்திருங்கள்.

மற்றதை என்ன பெயரில் வேணும் என்றாலும் வைத்திருங்கள்.

முதலில் உங்கள் சொந்த பெயரில் உள்ள Paypal கணக்கில் இருந்து மற்ற பெயரில் உள்ள Paypal கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்.

பின்னர் மற்ற Paypal கணக்கில் இருந்து சாந்தியக்காவுக்கு அனுப்புங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பது ஒரு பிரச்சனை தான். திறக்கும் பேபால் கணக்குக்கு காட் விபரங்கள்.. கொடுக்க விருப்பமில்லை. (ஏலவே ஈபேயில் பெற்ற கெட்ட அனுபவத்தின் அடிப்படையில்). அத்தோடு வங்கியில் இருந்து பேபாலுக்கு காசு அனுப்பக் கூடிய வசதி இப்போ இல்லை. அதனால் தான் மாற்றுவழியை தேடினோம். எங்களுக்கு கொழும்பு இந்துமாமன்றம்..விவேகானந்த சபைகளோடு தொடர்பிருப்பதால் அங்குள்ளவர்களின் ஊடாகவும் செய்ய முயற்சித்துள்ளோம்.

 

நன்றி பகலவன் தங்கள் விபரத்துக்கு.  :)

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 923.12€

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா அனுப்பிய 96.16€ உதவி கிடைத்துள்ளது.

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 1019.28€

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.