Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாய்.... இன்று இந்தியா வென்றிருந்தால்....
லட்டு, அல்வா எல்லாம்.... தெருத்தெருவாக... பரிமாறப் பட்டிருக்கும்.
இந்திய தொலைக்காட்சிகள் எல்லாம்.... கமறி இருக்கும். :D

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply

சிட்னியில் வைத்து இந்தியா சட்னியாக்கப்பட்டது :o  :D  :lol: . இனி டோனி கங்காரு புரியாணியோடு தோணியில் ஏறி நாடு திரும்ப வேண்டியது தான்  :o  :D  :lol:


வாழ்த்துக்கள் அவுஸ்!!!  :D


Animated-fireworks-changing-colors.gif

  • கருத்துக்கள உறவுகள்

11076149_675102262602186_42520453_n.jpg?

இந்த சுதாகருக்கு இப்போது நாக்கு காணாமல் போயுள்ளது.. இதுக்கு முன்னம் மூளையே காணாமல் போய்விட்டது.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுதாகருக்கு இப்போது நாக்கு காணாமல் போயுள்ளது.. இதுக்கு முன்னம் மூளையே காணாமல் போய்விட்டது.. :o:D

 

சுதாகர், கட்டில்லை படுத்திருந்திருந்து....

ஆவெண்டு... வாயை, திறந்து கொண்டு இருக்கிறதை... பார்க்க பாவமாயிருக்கு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுதாகருக்கு இப்போது நாக்கு காணாமல் போயுள்ளது.. இதுக்கு முன்னம் மூளையே காணாமல் போய்விட்டது.. :o:D

 

இந்தியாவை நம்பிய இவருக்கு நாக்கு  வெட்டிப்போட்டுது

இந்தியாவை நம்பிய எனக்குக் கை சுட்டுப்போட்டுது :D

 

  • தொடங்கியவர்

பெருந்தன்மையுடன் கோப்பையைத் திருப்பிக் கொடுத்த இந்தியா!
 

 

சமீபகால தொடர் தோல்விகள், ஒட்டுமொத்தமாக சீர்குலைந்த ஆட்டத்திறன், பலவீனமான பந்துவீச்சு... இத்தகைய சுமைகளுடன் 2015 உலகக் கோப்பை போட்டிகளைச் சந்தித்தது தோனி தலைமையிலான இந்திய அணி.

லீக் ஆட்டங்களில் தாங்குமா? என்று எழுந்த எள்ளல்களுக்கு தனது எழுச்சியால் பதில் சொல்லி, அரையிறுதி வரை அபாரமாக முன்னேறி, ஆஸ்திரேலியாவை இறுதிக்கு அனுப்பியிருக்கிறது இந்தியா.

 

இந்த உலகக் கோப்பையில் ஒட்டுமொத்தமாக, இந்திய அணியின் செயல்திறனைப் பார்க்கும்போது, கோப்பையை பெருந்தன்மையுடன் திருப்பிக் கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

 

அரையிறுதியில் அடைந்த தோல்விகளினால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம். காரணம் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய இந்நாள், முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாக வார்த்தைகளை அள்ளி வீசினர். அதற்கு பதிலடி கொடுக்கவாவது இந்திய அணி கரியைப் பூச வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதனால் இது ஒரு ஏமாற்றமே தவிர, வருந்துவதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.

உலகக் கோப்பை போட்டிகளில் 11 தொடர் வெற்றிகளைச் சாதித்துள்ளது தோனி தலைமை இந்திய அணி. இன்று அதிக தீவிரம் காட்டிய சிறந்த ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி தழுவியுள்ளது.

 

 

ஆஸ்திரேலிய தீவிரத்துக்கு இணையாக தீவிரம் காட்டாத இந்திய அணி:

பரபரப்பாக தொடங்கிய சிட்னி அரையிறுதியில் டாஸில் மைக்கேல் கிளார்க் வென்றவுடனேயே ஒரு ஆயாசம் எழுந்தது. டாஸில் தோற்றதே, போட்டியில் தோல்வியடைவதற்கான முன் அறிகுறியாக பலராலும் நோக்கப்பட்டது.

 

பிட்ச் பற்றிய அனைத்து எதிர்பார்ப்பும் உடைந்தது. ஸ்பின்னுக்கு லாயக்கற்ற பிட்ச் இது என்று ஷேன் வார்ன் காலையிலேயே கூறிவிட்டார். மிகவும் கடினமான தரை அது. இதில் பந்துகள் திரும்பாது என்றார் ஷேன் வார்ன். இந்தியாவுக்கு சாதகமான பிட்ச் என்றெல்லாம் கிளப்பிவிட்டு கடைசியில் ஆப்பு வைத்தது ஆஸ்திரேலியா.

ஆனால், தொடக்க ஓவர்களை இந்திய அணி சீராகவே வீசியது. அதுவும் உமேஷ் யாதவ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதனை வார்னர் மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடிக்க, சரி, இன்று சாத்துமுறைதான் நடக்க போகிறது என்று நினைத்த தருணத்தில் அருமையான ஒரு பந்தை பிட்ச் செய்து எழுப்ப புல் ஆட முயன்ற வார்னரின் மட்டையின் விளைம்பில் பட்டு கவர் திசையில் கோலியிடம் தஞ்சமடைந்தது. வார்னர் விக்கெட் மிகப்பெரிய விக்கெட்.

 

ஒரு முனையில் ஏரோன் பின்ச் தடவிக்கொண்டிருந்தார். இந்நிலையில் வார்னர் விக்கெட் விழுந்தது. தொடக்கத்தில் உமேஷ் வீசிய பந்து 148 கிமீ வேகம் வர பிஞ்சை அந்தப் பந்து ‘ஸ்கொயர்’ ஆக்கியது, எட்ஜ் நேராக கல்லி வழியாகச் சென்றது. தோனி, கல்லியில் ஆளை நிறுத்தியிருந்தால் அது கேட்ச் ஆகியிருக்கும்.

ஃபிஞ்ச், ஸ்மித் ஜோடி சேர இந்தியா தனது தீவிரத்தை அதிகப்படுத்தவில்லை. ஸ்மித்துக்கு சோதனைகள் கொடுக்கவில்லை. இதனால் அவர் உடனேயே உமேஷ் யாதவ் வீசிய 10-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.

 

மொகமது ஷமி, மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சு ஏமாற்றமளிக்க அந்த பார்ட்னர்ஷிப் பரிமளிக்கத் தொடங்கியது. இடையில் ஜடேஜா பந்தில் ஃபிஞ்ச் எல்.பி. என்று தவறாக ரிவியூ செய்யப்பட்டு ஒரு ரிவியூவையும் இழந்தோம்.

பிறகு மோஹித் சர்மா பந்தில் பிஞ்ச் காலில் வாங்கினார். ரிப்ளேயில் பந்து ஸ்டம்பைத் தாக்கியது தெரிந்தது. ஆனால் நாட் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டது.

32 ஓவர்களில் ஸ்கோரை இருவரும் இணைந்து 167 ரன்களுக்கு உயர்த்தினர். இந்தப் பகுதிகளில் இந்தியா தீவிரம் காட்டாததால் ஸ்மித், ஃபிஞ்ச் ஆதிக்கம் தலைதூக்கியது.

பவர் பிளேயில் ஆட்டத்தை இழந்த இந்திய அணியின் பந்துவீச்சு; ஸ்மித்தின் அபார சதம்

33-வது ஓவரில் பவர் பிளே எடுக்கப்பட்டது. ஷமி முதல் ஓவரை மோசமாக வீச ஸ்மித் 2 பவுண்டரி 1 சிக்சர் விளாசினார். 14 ரன்கள் வந்தது. ஸ்மித், ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதத்தை எடுத்தார். இந்த தொடரில் இந்திய அணியை காய்ச்சிய ஒரு பேட்ஸ்மென் உண்டென்றால் அது ஸ்மித் என்பதில் மறுகேள்விக்கு இடமில்லை என்றே கூற வேண்டும்.

 

105 ரன்களில் உமேஷ் யாதவ் வீசிய தலை உயர பவுன்சருக்கு ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன் பிறகு நடந்ததுதான் கொடுமை. மேக்ஸ்வெல் களமிறங்கி பிய்த்து உதறத் தொடங்கினார். யாதவ்வை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர். 14 பந்துகலில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து ஸ்கோரை 400-க்கு கொண்டு செல்வேன் என்று மிரட்டிய மேக்ஸ்வெல் அஸ்வின் பந்தில் அவுட் ஆனார். அஸ்வினின் அருமையான பிளைட் பந்து அது.

 

 

உமேஷ் பாய்ச்சல்:

231/2 என்ற நிலையில் உமேஷ் யாதவ் புகுந்தார். முதலில் 81 ரன்கள் எடுத்த பிஞ்சிற்கு ஒரு கூர்மையான ஷார்ட் பிட்ச் பந்தை வீச மார்புயரம் வந்த பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். ஸ்மித், பிஞ்சை வீழ்த்தி உமேஷ் மிரட்டினார்.

அடுத்ததாக மைக்கேல் கிளார்க் 10 ரன்களில் மோஹித் சர்மாவின் ஷார்ட் பிட்ச் பந்தை அருகிலேயே ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

43 ஓவர்களில் 250/5 என்று இருந்த ஆஸ்திரேலியாவை அடுத்த 7 ஓவர்களில் 40-45 ரன்களுக்கு மட்டுப்படுத்த வேண்டிய இந்திய அணி 7 ஓவர்களில் 78 ரன்களை விட்டுக் கொடுத்தது. இதில் வாட்சன் 28 ரன்களையும், பாக்னர் 21 ரன்களையும், அனைத்துகும் மேலாக ஜான்சன் 9 பந்துகளில் 4 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 27 ரன்களையும் விளாச ஸ்கோர் வெற்றி ரன்களான 328 ரன்களுக்குச் சென்றது.

 

மத்திய ஓவர்களில் எப்போதும் விக்கெட்டுகள் எடுத்து வந்த இந்திய அணி; இந்தப் போட்டியில் அதனைச் செய்யத் தவறியது. ஆனால் ஸ்மித் ஆட்டமும் இதற்கு ஒரு காரணம், ஆனால் பிஞ்சை வீழ்த்தியிருக்கலாம். தீவிரமில்லாததால் முடியவில்லை.

 

ஷமி, ஜடேஜா நிரம்ப ஏமாற்றமளித்தனர். மோஹித் சர்மா 10 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக் கொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாக ஷமி, மோஹித் சர்மா கொஞ்சம் எச்சரிக்கையாக வீசியிருந்தால் ஸ்கோர் 300 ரன்கள்தான். ஆனாலும் இந்தியா, ஆஸ்திரேலியாவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியது என்றே கூற வேண்டும்.

அபாரத் தொடக்கத்துக்குப் பிறகு ஆஸி. பந்துவீச்சுக்கு சரணடைந்த இந்திய பேட்டிங்:

329 ரன்கள் இலக்கு இந்தக் காலக்கட்டத்தில் எட்ட முடியாத ரன்கள் அல்ல. ஆனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சு, அவர்கள் பீல்டிங் எப்போதும் கடினங்களைக் கொடுக்கும். அதுதான் இன்று நடந்தது.

 

ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் அருமையான வெற்றித் தொடக்கத்தை கொடுத்தார்கள் என்றால் மிகையாகாது. 77 பந்துகளில் 76 ரன்கள் இதைவிட என்ன தொடக்கம் வேண்டும்.

ஆனாலும் 45 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்த நிலையில் எக்ஸ்ட்ரா கவர் பீல்டர் கையில் குறிபார்த்து அடிக்க வேண்டிய தேவை தவனுக்கு இல்லை. ஆனாலும் முயன்றார் ஆட்டமிழந்தார்.

 

ஏமாற்றமளித்து ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான விராட் கோலி:

இந்த உலகக்கோப்பயில் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சதத்திற்குப் பிறகு குறைந்த ரன்களில் அவுட் ஆகி வந்த கோலியை இன்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஏனெனில் விரட்டலில் விராட் சிறந்த வீரர் என்ற நம்பிக்கையே காரணம்.

ஆனால், அவரோ வந்தது முதல் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. தடவினார் 13 பந்துகளில் 1 ரன் எடுத்து ஜான்சன் வீசிய ஊர்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை ஹூக் செய்கிறேன் என்று டாப் எட்ஜ் செய்தார். அது தூரம் செல்லவில்லை. ஹேடினே சென்று பிடித்த்து விட்டார். ஆட்டம் உண்மையில் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பிய கணம் இது.

இந்தச் சூழலில் இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் வந்தவுடன் 145 கிமீ வேகப்பந்தை சுலபமாக புல் ஆடும் அளவுக்கான தன்னம்பிக்கையில் அவர் இல்லை. 25-30 பந்துகளை அவர் ஆடியிருக்க வேண்டும், இன்னிங்ஸை கட்டமைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. அவரது இந்த ஷாட்டிற்காக அவர் வாழ்நாள் பூராவும் வருந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் கோபத்துக்கும் அவர் ஆளாகியுள்ளார்.

ஷார்ஜாவில் சேத்தன் சர்மா, ஜாவேத் மியாண்டட்டிற்கு கடைசி பந்தில் சிக்ஸ் கொடுத்த போது இருந்த ரசிகர்களின் கோபத்தை விட கோலி மீது கோபம் அதிகமாக உள்ளது. ட்விட்டரில் அவரை ஏற்கெனவே கிழிக்கத் தொடங்கி விட்டனர்.

 

அப்போது முதல் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தீவிரம் பிடித்துக் கொண்டது. ரோஹித் சர்மா, மிட்செல் ஜான்சனை அபாரமாக சிக்ஸ் ஒன்றை அடித்தார். ஆனால் அடுத்த பந்து நல்ல வேகத்தில் உள்ளே யார்க்கர் லெந்த்தில் வர மட்டையை மெதுவே கீழே இறக்க பந்து உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது.

ரெய்னாவுக்கு 7 ரன்களில் பாக்னர் அவருக்கு ஒவ்வாத பந்தை வீசினார். சற்றே எழும்பியது எட்ஜ் செய்து வெளியேறினார். இந்தியா 108/4 என்று ஆனது.

 

ரஹானே, தோனி அளித்த மெலிதான நம்பிக்கை:

அதன் பிறகு தோனியின் வழிகாட்டுதலில் ரஹானே ஆட இருவரும் ஸ்கோரை அடுத்த 13.2 ஓவர்களில் 178 ரன்களுக்கு உயர்த்தினர், இருவரும் 70 ரன்களைச் சேர்த்தனர். அப்போது ரஹானே ஸ்டார்க்கின் அற்புதமான ஆஃப் திசை பந்துக்கு இரையானார். கிளார்க் மிக அருமையான ஒரு ரிவியூவை கேட்டார். ஏனெனில் அது சாதாரண கண்களுக்குத் தெரியாத அவுட். தொழில்நுட்பத்தின் தீர்க்கமான லென்ஸ்கள் ரஹானே எட்ஜைக் காண்பித்துக் கொடுத்தது.

அதன் பிறகு, ஜடேஜா, ஸ்மித்தின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

தோனியினாலேயே துரத்த முடியாத அளவுக்கு ஓவருக்கு 15.45 ரன்கள் தேவைப்பட்டது. அவர் வாட்சனை இரண்டு அபாரமான சிக்சர்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். கிளார்க், ஒரு கேட்சையும் தோனிக்குக் கோட்டைவிட மீண்டும் இந்திய ரசிகர்களுக்கு ஒரு நப்பாசை, தோனி எப்படியும் வெற்றி பெறச் செய்து விடுவார் என்று. ஆனால் அவரும் 65 ரன்களில் ஒரு ரன் எடுக்க ஓடி மேக்ஸ்வெலின் த்ரோவுக்கு இரையானார்.

அவர் ஆட்டமிழந்த பிறகு சம்பிரதாயங்கள் 2 ரன்களில் தெளிவாக முடித்து வைக்கப்பட இந்தியா 233 ரன்களில் சுருண்டது. நிச்சயம் பலமான ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வி தழுவி வெளியேறியது என்றே கூற வேண்டும்.

இந்திய அணியின் பவுலர்களையும் பேட்ஸ்மென்களையும் இந்த 4 மாத காலங்களில் அதிகம் பார்த்துள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள். பலவீனங்களை சரியாகப் பயன்படுத்தினர் என்றே கூற வேண்டும்.

 

உலகக் கோப்பையை நியூசிலாந்து முதன் முதலில் வெல்வதற்கு நாம் வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

நம் ஊரில் நாம் வெற்றி பெற்றோம். அவர்கள் ஊரில் அவர்கள் வெற்றி பெறுவதுதான் இப்போதைய டிரெண்ட் போல. ஒருவேளை 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து இறுதிக்குச் சென்றாலும் செல்லக் கூடும்!
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article7036117.ece

  • தொடங்கியவர்

'எனக்கு 33 வயதுதான் ஆகிறது..'- 2019 உலகக் கோப்பைக்கு தோனி அச்சாரம்
 

 

முற்றிலும் புதிய வீரர்களுடன் 2015 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை தொடர் வெற்றியுடன் வந்த இந்திய அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.

 

ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் தோனியிடம், ‘இதுதான் உங்களது கடைசி உலகக்கோப்பையா?’ என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தோனி, “எனக்கு வயது 33தான் ஆகிறது. நான் இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறேன். நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது.

 

அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு வேண்டுமானால் 2019 உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவது பற்றி யோசனைகள் ஏற்படலாம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது.” என்றார்.

 

அரையிறுதிப் போட்டி பற்றி கூறிய தோனி, “300 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்துவது எப்போதும் கடினமே. ஆனாலும் நாங்கள் ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்தினோம் என்றுதான் கூற வேண்டும், ஒரு நேரத்தில் 350 ரன்கள் வரை அவர்கள் செல்லும் நிலை இருந்தது. மேட்சிற்குள் நன்றாக வந்தோம்.

 

வேகப்பந்து வீச்சாளர்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து வீசியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் அணியின் ஆட்டம் திருப்தி அளிக்கக் கூடியதாக அமைந்தது. தொடர் தொடங்கும் போது இந்த அணி மீது பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. ஆனால், வீரர்கள் சிறப்பாக எதிர்வினையாற்றினர்.

ஆஸ்திரேலியாவுக்கு லேசாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இன்று நல்ல தொடக்கம் கண்டோம், ஷிகர் தவன் கடைசியில் மென்மையாக அவுட் ஆனார். அந்த நேரத்தில் பெரிய ஷாட்கள் ஆட வேண்டிய தேவையில்லை. ஆனால் பெரிய ஸ்கோர், அழுத்தம் அது போன்ற தவறுகளை இழைக்கச் செய்யும். 300 ரன்களுக்கும் மேலான இலக்கு எப்போதும் நாம் செய்ய விரும்பாததைச் செய்யப் பணிக்கக் கூடியது.

 

அணியின் கீழ் வரிசை பேட்டிங் இந்தச் சூழ்நிலைகளில் பங்களிப்பு செய்ய முடியாது. நல்ல அணிகள் அனைத்தும் கடைசி வரை பேட்டிங்கை வைத்திருக்கும்.

ரஹானே ஒருவர் இந்தத் தொடரில் நிச்சயம் முன்னேற்றம் அடைந்த ஒரு வீரர் என்று கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று அவர் நல்ல மேம்பாடு அடைந்துள்ளார்.

 

ரசிகர்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன், இந்தியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். கிரிக்கெட் ஆடுவதன் பயன் என்ன? மக்கள் நேரில் வந்து பார்ப்பதுதானே...எங்களுடன் பயணித்த ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.” என்றார்.

 

அதன் பிறகு மைக்கேல் கிளார்க், தோனியை ஆரத் தழுவி ஏதோ பேசினார்.

பிறகு பரிசளிப்பு மேடைக்கு வந்த கிளார்க், “கடந்த 4 மாதங்களாக இந்தியா இங்கு செய்த பங்களிப்புக்கு தோனிக்கும் இந்திய அணிக்கும் நன்றி.

தோனியிடம் நீங்கள் கேட்டீர்கள் அடுத்த உலகக்கோப்பையில் ஆடுவாரா என்று, நிச்சயம் அவர் ஆடுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. இன்னமும் அவரிடம் நிறைய கிரிக்கெட் திறன்கள் மீதமுள்ளன.” என்றார் மைக்கேல் கிளார்க்.”

 

தோனியின் வெற்றிப் பயணம்: 2007 டி20 உலகக்கோப்பை வெற்றி, 2008 ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதன் முதலாக வெற்றி, 2011 உலகக்கோப்பை வெற்றி, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, தற்போது 2015 உலகக்கோப்பை அரையிறுதி, உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 11 வெற்றிகள்...
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-33-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2019-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article7036198.ece

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=5WvxRfIJIdE

 

இந்தியாவின் தோல்வியால்.... தமது தொலைக்காட்சி பெட்டிகளையே... உடைக்கிறார்கள். :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

கூல் கேப்டன் டோணியை கண்கலங்க செய்த தோல்வி.. வைரலாகும் போட்டோ!

21b6p9e.jpg

சிட்னி: ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்ற பிறகு டோணி கண் கலங்கிய போட்டோக்கள் வைரலாகியுள்ளன. உலக கோப்பையை வெல்ல தகுதியுடைய அணியாக கணிக்கப்பட்ட நடப்புச் சாம்பியன் இந்தியா, தொடர்ந்து ஏழு போட்டிகளிலும் வென்று, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. கூல் கேப்டன் டோணியை கண்கலங்க செய்த தோல்வி.. வைரலாகும் போட்டோ! ஆனால், அரையிறுதியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோற்றது. கேப்டன் டோணி கடைசிகட்டம்வரை நின்று போராடியும், வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு கம்பெனி கொடுக்கவில்லை.

 

எனவே, 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்க வேண்டியதாயிற்று. இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியில், இரு அணிகளின் கேப்டன்கள் கருத்தை நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டார். டோணியின் கருத்தை கேட்க அழைத்தபோது, டோணியின் கண்கள் கலங்கியிருந்தன. இதை டிவியில் பார்த்த ரசிகர்களும், செல்போன்களில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

 

அது தற்போது வைரலாக சுற்றிவருகிறது. கூலான கேப்டன் என்று அழைக்கப்படும் டோணியே கல் கலங்கிவிட்டார் என்பதுதான், ரசிகர்களின் பெரும் ஆதங்கமாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான, அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்றபோது, அந்த அணியின் மோர்க்கல், கேப்டன் டி வில்லியர்ஸ் போன்றோர் அழுததும் ரசிகர்களை மிகவும் பாதித்திருந்தது. சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ள கருத்து இது: "டி வில்லியர்ஸ் கண்கள் கலங்கியபோது, எங்கள் கண்களும் கலங்கின.. டோணியின் கண்கள் கலங்கியபோது, எங்கள் இதயமும் கலங்கியது".

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/indian-captain-dhoni-was-tears-223466.html

  • தொடங்கியவர்

இந்தியா தோத்ததுக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? - சவுரவ் கங்குலி

 

அரை இறுதியில் இந்திய அணி தோற்றதற்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் என்ன சம்பந்தம்... எல்லார் மாதிரியும் அவரும் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போனார். அதற்காக அவரை விமர்சிப்பது அரைவேக்காட்டுத்தனம், என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். விராட் கோஹ்லியும், அவர் காதலி அனுஷ்கா சர்மாவும்தான் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரது மோசமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

 

அனுஷ்கா சர்மா சிட்னி மைதானத்துக்குப் போனதால்தான், விராட் கோஹ்லி சரியாக ஆடவில்லை என முதலில் கிண்டலாகக் கூறியவர்கள், பின்னர் அதையே ரொம்ப சீரியஸாகக் கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியா தோத்ததுக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? - சவுரவ் கங்குலி அனுஷ்கா சர்மா படங்களைப் புறக்கணிக்க வேண்டும், அவர் வீட்டு மீது கல்லடிக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு கோஷ்டி கிளம்பியுள்ளது. இதனால் அவர்கள் இருவருக்குமே பலத்த பாதுகாப்பு தரவேண்டிய சூழல்.

 

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி இருவருக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சவுரவ் கங்குலி. இதுகுறித்து அவர் கூறுகையில், "இரண்டு பேர் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது? எல்லாரையும் போல இந்த மேட்சை பார்க்க விரும்பி அனுஷ்கா ஆஸ்திரேலியா போனார். கோஹ்லி சரியாக விளையாடாததற்கு அனுஷ்காவைத் திட்டுவது முட்டாள்தனம். நமது அணி சிறந்த அணிதான். சில பொதுவான பலவீனங்கள் உள்ளன. அவற்றைச் சரி செய்தால், அடுத்த உலகக் கோப்பையில் இன்னும் சிறப்பாக விளையாட முடியும்," என்றார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/what-wrong-anushka-sharma-has-done-asks-sourav-ganguly-223472.html

  • கருத்துக்கள உறவுகள்
அனுஷ்கா சர்மாவுக்கும்
இந்த நடிகை எங்கன்ட தமிழ்படத்தில வார அனுஸ்காவா?
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நடிகை எங்கன்ட தமிழ்படத்தில வார அனுஸ்காவா?

 

அது அனுஷ்கா செட்டி. :)  :lol:

 

இதுதான் இவா..

 

actress-anushka-sharma-hairstyle-3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அது அனுஷ்கா செட்டி. :)  :lol:

 

இதுதான் இவா..

 

கையோடை... "அனுஷ்கா செட்டியின்" படத்தையும் போட்டு விடுங்கோவன்.

என்ன வித்தியாசம் எண்டு, நாங்களும் பாப்பமெல்லொ.... :lol:  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

இந்த நடிகை எங்கன்ட தமிழ்படத்தில வார அனுஸ்காவா?

 

புத்தனுக்காக சிட்னியில் இருந்து நேரிடையாக அனுஷ்காவின் படம் :D:lol:

அதுசரி புத்தன் அனுஷ்காவின் படம் தேடுவது வீட்டில் தெரியுமா? :lol:

 

nb9cud.jpg

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

டோணி 'பைட்' பண்ணவே இல்லையாம்.. விஷம் கக்கும் ஆஸி. மீடியாக்கள்!

 

சிட்னி: அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்வதற்கு கொஞ்சம் கூட பைட் செய்யவே இல்லை இந்தியா என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் டோணி உறுதியாக போராடவில்லை என்றும் விஷம் கக்கியுள்ளன. உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவை 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 328 ரன்களைக் குவித்தது. பின்னர் விளையாடிய இந்தியா 46.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது. டோணி 'பைட்' பண்ணவே இல்லையாம்.. விஷம் கக்கும் ஆஸி. மீடியாக்கள்! இந்த போட்டி குறித்து டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை சேஸ் செய்வதற்கு டோணி, கோஹ்லி போன்றோர் தீவிரமாக பாடுபட்டிருக்க வேண்டும்.

 

ஆனால் இருவருமே அதைச் செய்யவில்லை என்று கூறியுள்ளது. மேலும் அது கூறுகையில், டோணி கிரீஸில் இருந்தவரை இந்தியாவுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அரை இறுதிப் போட்டியை இந்திய கேப்டன் ஈஸியாக விட்டுக் கொடுத்து விட்டார். டோணிக்கு அனேகமாக இதுவே கடைசி ஒரு நாள் போட்டியாக இருக்குமா என்றெல்லாம் அது எழுதியுள்ளது. சிட்னி மார்னிங் ஹெரால்டு வெளியிட்டுள்ள செய்தியில், டோணியின் 65 ரன்கள் போதுமானதல்ல. அது விசித்திரமான ஸ்கோராகும். கைக்கு எட்டாத வெற்றிக்காக கடுமையாக போராடினார் டோணி.

 

ஆனால் அது போதுமானதாக இல்லை. அவர் ஷான் வாட்சன் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்தாலும் கூட கிளன் மேக்ஸ்வெல் டோணியை அருமையாக ரன் அவுட் செய்து விட்டார். அணியின் வெற்றிக்காக டோணி அதிகம் சிரமப்பட்டது போலத் தெரியவில்லை என்று விஷம் கக்கியுள்ளது இந்த பத்திரிகை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/australian-media-criticises-india-lacking-fight-world-cup-semifinal-223505.html

  • தொடங்கியவர்

மோஹித் சர்மா, ஜடேஜா திறமை மீது கங்குலி சந்தேகம்

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வி தழுவியதையடுத்து இந்திய அணியின் பலவீனங்கள் பற்றி கங்குலி பேசியுள்ளார்.

"இந்திய அணியில் சில ஓட்டைகள் உள்ளன. அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். நாம் விஷயங்களை மூடி மறைக்கலாம். ஆனால் உண்மையில் இந்திய அணியில் பலவீனங்கள் உள்ளன. அடுத்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் சில விவகாரங்களை உடனடியாகச் சரி செய்யத் தொடங்குவது அவசியம்.

வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், உமேஷ் யாதவ், ஷமி அளவுக்கு மோஹித் சர்மா திறமையான பவுலர் அல்ல. ஆனால் பலரும் அவரிடம் பெரிய திறமைகள் இருப்பதாக நினைக்கின்றனர்.

 

இன்னொன்று, ரவீந்திர ஜடேஜா ஒன்று விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் அல்லது ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால் அவர் இரண்டையுமே செய்யவில்லை.

மற்ற அணிகளுக்கும் இந்திய அணிக்கும் உள்ள இடைவெளி இதுதான். ஆஸ்திரேலியாவில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன் போன்றவர்கள் விக்கெட்டுகளையும் கைப்பற்றுகிறார்கள். தேவைபடும் போது ரன்களையும் எடுக்கிறார்கள். இந்திய அணி அப்படியில்லை" என்றார் சவுரவ் கங்குலி.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7040062.ece

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்காக சிட்னியில் இருந்து நேரிடையாக அனுஷ்காவின் படம் :D:lol:

அதுசரி புத்தன் அனுஷ்காவின் படம் தேடுவது வீட்டில் தெரியுமா? :lol:

 

நவீனனையும் பழுதாக்கிப்போட்டினம்..... :icon_mrgreen:  :icon_mrgreen: . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கையோடை... "அனுஷ்கா செட்டியின்" படத்தையும் போட்டு விடுங்கோவன்.

என்ன வித்தியாசம் எண்டு, நாங்களும் பாப்பமெல்லொ.... :lol:  :icon_mrgreen:

 

நீலம்,பச்சை சிவப்பு, கறுப்பு எனக் கலரில் வித்தியாசமாக இருக்கும் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கையோடை... "அனுஷ்கா செட்டியின்" படத்தையும் போட்டு விடுங்கோவன்.

என்ன வித்தியாசம் எண்டு, நாங்களும் பாப்பமெல்லொ.... :lol:  :icon_mrgreen:

சும்மா கும்முனு இருக்கா..

இவதான் அனுஷ்கா.. :D

Anushka-Shetty-4.jpg

  • தொடங்கியவர்

நவீனனையும் பழுதாக்கிப்போட்டினம்..... :icon_mrgreen:  :icon_mrgreen: . :lol:

எல்லாம் உங்களை பார்த்துதான்.... :o:lol::icon_mrgreen:

 

  • கருத்துக்கள உறவுகள்

இவா ஏன் முகத்தை மட்டும் மறைக்கின்றா :D :D :lol:

  • தொடங்கியவர்

சும்மா கும்முனு இருக்கா..

இவதான் அனுஷ்கா.. :D

Anushka-Shetty-4.jpg

 

சரி காணும் இனி, இது கிரிக்கெட் திரி :icon_mrgreen::lol::D

இசை படம் போட வெளிக்கிட்டால் பிறகு ஆளை பிடிக்க முடியாது :icon_mrgreen::lol:

 

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் செமி பைனல் ஹீரோ, எலியட்டுக்கு இப்படி ஒரு தர்ம சங்கடம்!

 

மெல்போர்ன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து, நியூசிலாந்தின் ஹீரோவாக உருமாறிய கிரான்ட் எலியட், உலக கோப்பைக்காக தனது செல்ல தங்கை திருமணத்தை மிஸ் செய்யப்போகிறாராம். ஆனால் தங்கையை கோபப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள எலியட், ஹனிமூனுக்கான முழு செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்களித்துள்ளார். உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில், 84 ரன்கள் குவித்து, ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்தார் நியூசிலாந்தின் கிரான்ட் எலியட்.

 

தென் ஆப்பிரிக்க மண்ணின் மகன் தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்தான் எலியட் சொந்த ஊர். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிலவும் இட ஒதுக்கீடு முறை காரணமா, அங்கு ஆட வாய்ப்பு கிடைக்காமல், நியூசிலாந்துக்கு சென்றார் எலியட். இருப்பினும், அவரது பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தார் ஜோகனஸ்பர்க்கில்தான் வசிக்கின்றனர்

 

ஆறு மாசம் ஆச்சு.. இதில், இளைய சகோதரி கேட் எலியட்டுக்கு நாளை, மார்ச் 28ம்தேதி, சனிக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. இந்த தேதி 6 மாதங்கள் முன்பே இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆனால், நியூசிலாந்து உலக கோப்பை அணியில் தனக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கருதிய கிரான்ட் எலியட், அந்த திருமண தேதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 

அண்ணனின் ஆட்டம் அபாரம் இந்நிலையில், நியூசிலாந்து உலக கோப்பை அணியில் இடம் கிடைத்து, அரையிறுதியில் ஹீரோவாகவும் மாறிவிட்ட கிரான்ட் எலியட்டுக்கு, தங்கையின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எலியட் தங்கை கேட் கூறுகையில், "எனது அண்ணன் உலக கோப்பை அணியில் இடம் பெற்றதையும், அரையிறுதியில் அவரது ஆட்டத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை, பைனல் போட்டியை, பெரிய திரை அமைத்து பார்க்க உள்ளோம்" என்றார்.

 

தங்கைக்கு பரிசு கிரான்ட் எலியட் கூறுகையில், "எனது தங்கை திருமணத்தில் பங்கேற்க முடியாதது வருத்தம்தான். ஆனால், உலக கோப்பை முடிந்து ஊர் திரும்பும்போது, தங்கைக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். அவரது ஹனிமூன் செலவு முழுவதையும் நானே ஏற்கப்போகிறேன். தங்கையும், மைத்துனரும், எங்கு ஹனிமூன் செல்ல ஆசைப்பட்டாலும், அதற்கு நான் ஏற்பாடு செய்வேன்" என்றார்.

 

பணம் சேர்த்துவிட்டார் அரையிறுதியில் ஆட்ட நாயகன் விருது மூலம் கிடைத்த பரிசு தொகை மற்றும் உலக கோப்பையை வெல்லும் அல்லது, 2வதாக வரும் அணிக்கு கிடைக்கும் பரிசு தொகை பங்கு போன்றவற்றின் மூலம், தங்கையின் ஆசையை நிறைவேற்றி வைக்கப்போகிறாராம், இந்த பாசக்கார அண்ணன். இந்த நேரத்தில் இணையத்தில் படித்த ரசிகரின் கமெண்ட் ஒன்று நினைவுக்கு வருகிறது. "உலக கோப்பை பைனலுக்குள் போகப்போகும் முதல் தென் ஆப்பிரிக்கர் எலியட்தான், ஆனால் நியூசிலாந்து வழியாக"

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/grant-elliott-will-miss-little-sister-s-wedding-223506.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.