Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் வடக்கு கிழக்கை பிரிக்குமாறு நீதிமன்றத்தில் தீர்ப

Featured Replies

judici.gif

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஜே.ஆர்.ஜெயவர்தன 1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணமாக இணைத்தமையினால் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கவேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலதிக விபரங்கள் விரைவில்...

http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews

  • தொடங்கியவர்

NorthEast merger "illegal," rules SL Supreme Court

[TamilNet, Monday, 16 October 2006, 07:04 GMT]

Sri Lankan Supreme Court Chief Justice Sarath L Silva Monday ruled that the merged Northeastern province was unconstitutional, invalid and "illegal." The de-merger campaign, launched by the Sinhala natioanlist JVP and the extremist all monks party, received a legal recognition by the five-bench Sri Lankan Supreme Court ruling. The northern and eastern provinces were merged according to the Indo-Sri Lanka agreement signed in 1987 by the then Sri Lankan President, J.R.Jayawardene, and the then Indian Prime Minister, Rajiv Gandhi.

The temporary merger of the two provinces, with a condition that a referendum should be held to merge the provinces permanently, still continues and a Governor who has been appointed by the President is now administering the North East Provincial Council established under the 13th Constitutional Amendment.

The ruling by the Sri Lankan SC also scuttled the Post-Tsunami Joint mechanism, P-TOMS, between the Liberation Tigers of Tamil Eelam and the Government of Sri Lanka.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19927

  • கருத்துக்கள உறவுகள்

உப்புச்சப்பற்ற மாகாண சபைத் திட்டத்தை திணித்த இந்திய வல்லாதிக்க அரசு தமிழ் மக்களை ஏமாற்றியதன் அடுத்த படி நிலையும் வெளி உலகுக்கு நிதர்சனமாகி உள்ளது.

அதிகார வலுவற்ற சட்டவிரோத அரசியலமைப்புக்கு முரணான திட்டங்களை அரசியலமைப்பில் தகுந்த மாற்றங்கள் செய்யாமல் திணிக்க முடியும் என்பதை தமிழ் மக்களை அன்று உணர வைக்க புலிகள் கொடுத்த விலை மிகப் பெரியது.

இத்தீர்ப்பு நிச்சயம் சிங்கள இனவாதிகளுக்கு மட்டுமன்றி அரசுக்கும் தமிழர் தாயகத்தை கூறுபோட சர்வதேசத்தின் முன் தனது சட்ட நியாயத்தை தூக்கிப் போட வழி சமைத்துக் கொடுத்துள்ளது. ராஜீவ் காந்தி என்ற அரசியல் தெளிவற்ற மனிதர் ஜே ஆர் என்ற குள்ள நரியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு செய்ய துரோகத்தில் இதுவும் அடங்கும்.

இந்த தீர்ப்பை இட்டு சிலர் கவலைப்படுகினம் போல கிடக்கு :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வட்hது பிரிக்க சோ டோன் வொரி...

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒரு தடவை, வடக்கு-கிழக்கை பிரிக்க கூடிய சக்தியோடு தமிழருக்கு தீர்வு கொடுப்பதாக ஏமாற்றி விட்டது என்று சொன்னபோது, சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்படிப்பட்ட ஒரு தீர்வினைத் தலையில் கட்டி, தமிழர் பிரச்சனை தீர்ந்து போச்சு என்று படம் காட்டினவர்கள் குறித்து நல்லதொரு பாடம் அவர்களுக்கு கிடைக்கும்.

இந்த வகையில் சிறிலங்கா நீதிமன்றுக்கு ஒரு வகை நன்றி சொல்லத் தான் வேண்டும். உண்மையைப் போட்டு உடைத்ததற்கு!

யாராவது விடயம் தெரிந்தவர்கள் இதன் நன்மை தீமை பற்றி விளக்கமாக சொல்ல முடியுமா? வடக்கு கிழக்கு ஒன்றாக இருப்பதால் தமிழருக்கு என்ன நன்மை, பிரிவதினால் என்ன தீமை? எனக்கு ஒன்டுமா விளங்கவில்லை. :cry:

ஏனென்டால் இளைய சந்ததியினருக்கு இது பற்றிய தெளிவான விளக்கம் இல்லை என்டு நினைக்கிறேன் (என்னையும் சேர்த்து தான் :oops: )

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லவிடயம். சிங்கள அரசு தமிழர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மிகக் குறைந்த தீர்வைக்கூடத் தரமாட்டாது என்று உலகுக்குப் புரியும். மேலும், 18 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தட்டிக் கழிப்பதானது, எதிர்கால ஒப்பந்தங்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.

தமிழீழத்தைத் தவிர்ந்த எந்த ஒரு தீர்வும் நிரந்தரத் தீர்வல்ல என்பதை தமிழர்கள் முதலில் புரியவேண்டும்..

  • தொடங்கியவர்

ஒம் நானும் கையை உயர்த்திறன்...எனக்கும் வடிவாத் தெரியாது...! களப் பெரியவை கொஞ்சம் விளக்குங்கோவன் Please....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமப்பா, எனக்கும் ஒண்ணும் புரியவில்லை. வடக்கு கிழக்கு பிரிவதால் தமிழர்களுக்கு நன்மையையா அல்லது இன்னும் மேலும் தீமையையா தரும்? :?

ஐயா சாணக்கியா, விஷயம் ஒலுங்கா தெரியமால் செய்தியை மட்டும் இணைத்து போட்டீங்கள். :lol: உங்களுடைய படத்தை மாத்தினால் தான் என்ன? ரொம்ப பயமா இருக்கு. :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி...நன்மை தராது என்று புரிந்துவிட்டது.

முக்கியமாக வடகிழக்கை தமிழர் தாயகப் பிரதேசமாக ஏற்றுக் கொள்வதனை தடுக்கவே இந்தப் பிரிப்பு. இனி வருங்காலங்களில் சிங்களவரை கிழக்கு மாகணத்தில் குடியேற்றி விட்டு அங்கேயும் தமிழரின் விகிதாசாரத்தைக் குறைத்து இதனையும் சிங்களவன் ஆக்கிரமிக்கும் செயலுக்கு இது உதவும். தமிழர் தாயகம் இணைந்திருந்தால் அது தமிருக்கும் தமிழீழத்திற்கும் ஓர் பெரும் பலமாக இருக்கும். பிரிப்பதனால் சிங்களவருக்கே அதன் நன்மைகள் அதிகம் என எண்ணுகின்றேன்.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • தொடங்கியவர்

ஒலுங்கா தெரியாததால தான் இங்க கொண்டுவந்து ஒட்டினனான்... யாராவது வடிவா விழக்கம் தருவினமெண்டு...ஒருத்தருக்கும

இங்க விளங்கபடுத்த யாரும் இல்லை போல.பேசாமல் இன்டெர்னெட்டை செஅர்ச் பன்னி பார்பம். வெர என்ன செய்வது? History படிக்க கொஞ்சம் பஞ்சியா தான் கிடக்கு. :roll:

Sanakiya and Black Tiger இந்த முகமூடிகள் போட்டுகொன்டிருகிக்றதை விட்டு வறாலாறு புத்தகங்கள் எடுத்து படியுங்கோ, அப்படியே படித்தவற்ரை இதில் போட்டால், நானும் கொஞ்சம் தெரிந்து கொள்வேன் :lol:

இந்திய கொள்கை வகுப்பளர் இலங்கை மேல்வைத்திருக்கும் அன்பிற்கு கிடைத்த பரிசு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வழக்கை போட்டது யார் என்று தெரிந்துக் கொள்வீர்களேயானால் எல்லாத்திக்கும் பதில் கிடைக்கும்.

வடக்கு-கிழக்கு பிரியுமேயானால் அது முதலாவதாக 'தமிழ் ஈழம்' என்ற கோரிக்கையை மழுன்கடிக்கப் செய்யும். தமிழ் ஈழம் என்பது வடக்கும் கிழக்கும் ஒன்ருசேர்ந்தே.

இந்த் கோட்பாட்டை மழுங்கடிக்கவே சமாதானக் காலத்தில் கருனா வுக்கூடாக ஒர் பிரிவினையை எற்படுத்தப் பார்த்தார்கள்.

தொடர்ந்து திருகோணமலையையும் பின் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிக்கும் இடையேயான் பகுதியை ஆக்கிரமித்து அதை சிங்கள மயமாககவும் தொடர்ந்து முயற்ச்சி செய்கிரார்கள். அப்பகுதியில் நடந்த சில சம்பவங்கள் யுத்தங்கள் அதை விளககப்படுத்தும்.

இதை இன்றுமாத்திரம் இல்லை இலங்கை சுத்தந்திரமடைந்த காலம் துடக்கம் சிங்கள அரசு வெகு பிரயாசத்துடன் செயட்பட்டு வருகிறது. சிங்கலவர்களை கொண்டுவந்து இந்த இடங்களிலே பெருமளவில் குடியமத்தினார்கள்.

அனால், துயரமிக்க காரியம் என்னவென்றால், அந்நாட்களில் எமது தமிழ் தலைவர்களுக்கோ, யாழ்ப்பாணத்திலுருந்த உயர்குடி மக்களுக்கோ இந்த இடங்களை தக்கவைத்துக்கொள்ள மனம் வரவில்லை.

தமிழன் எப்பொழுதுமே காலம் தாழ்த்தியே சிந்திக்கிறவனாகவும் செயற்படுகிறவனாகவும் இருந்து வருகிறான் என்று கண்ணீரோடு சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது....

எனக்கு தோன்றியவன்னமாக சொல்லிவிட்டேன்....

நான் சரித்திரம் படித்தவனுமல்ல... அரசியல் அறிந்த்வனுமல்ல...ஆனால் நான் சொன்னவற்றில் முற்றிலும் உன்மையுண்டு...

வருகிற நாட்களில் அனேக விரிவுரைகளை தளங்களிலே காணலாம் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

norteast2.jpg

norteast3.jpg

வழக்கை வென்ற பின் மாவீரர்கள் பேச்சு கொடுக்கிறார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் படங்கள் உங்களுக்கு ஞபகம் வருகிறதா?

Sinhala nationalists launch de-merger campaign in Trinco

petition_sinhala_435.jpg

Sinhala nationalists participate in signature campaign in Trincomalee demanding de-merger of northeast province

[TamilNet, August 20, 2003 15:11 GMT]

Sri Lanka's President, Ms. Chandrika Kumaratunge, issued a warning through her media spokesman, Mr.Harim Peiris, Wednesday that she would not hesitate to de-merge the northeast province if the United National Front government failed to quell the violence and restore peace in the east, media sources said.

வடக்கு கிழக்கை இப்பிடி வழக்குப்போட்டு உச்ச நீதிமன்றத்தின்ரை தீர்ப்பின்படி ஒரு அநீதியான முறையிலை பிரிக்கலாமெண்டால் உதேமாதிரி நாங்களும் வழக்குப்போட்டு தமிழீழத்தையும் சிங்களத்தையும் ஏன் பிரிக்கேலாது? ஏதோ ஒரு காலகட்டத்திலை வெள்ளைக்காறனாலை தமிழனுக்குப் பாதகமாச் செய்யப்பட்ட ஒரு அநீதியான செயல் தானே. இல்லையே?

அது ஒருபக்கம் கிடக்கட்டும் இப்ப ஜே.வி.பி காரன் இதாலை சிங்களவனிட்டை நல்லா ஆதரவு தேடப்போறான். அதை எப்பிடிச் சால்வைக்காரனாலை ஜீரணிக்க முடியுமெண்டு தெரியேல்லை.

பொறுத்தார் புூமி ஆள்வாரெண்டு சொல்லிப்போட்டு பொறுத்திருந்து பாப்பம் என்ன கூத்து நடக்குதெண்டு.

இவ்வழக்கை வைத்து அழமுடியாது.

மனித வாழ்வை தீர்மானிப்பது விதி. அவ்விதியையே நிர்ணணிப்பது விடுதலைப்புலிகள் அப்படியிருக்கும் போது இதற்கு அழவேண்டியதில்லை.

8) :idea:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு இணைப்பு

அரசமைப்புக்கு முரணானது!

செல்லுபடியற்றது; சட்டவிரோதமானது

உயர்நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்ப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் விதத்தில் 1998 இல் 18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன விடுத்த வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது; செல்லுபடியற்றது; சட்டவிரோதமானது. அத்தோடு, இலங்கை இந்திய ஒப்பந் தத்தையும் கூட இந்த இணைப்பு உத்தரவு மீறுகின்றது.

இவ்வாறு பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற ஆயம் நேற்று ஏகமனதாகத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதி யரசர்கள் நிமால் ஜயசிங்க, நிஸங்க உடலா கம, ராஜா பெர்னாண்டோ, நிமால் காமினி அமரதுங்க ஆகியோரைக் கொண்ட ஆயமே நேற்று 23 பக்கங்களைக் கொண்ட தனது தீர்ப்பில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன எனத் தெரிவித்து ஜே.வி. பியின் திருகோணமலை மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ஜயந்த வீரசேகர, அம் பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் லஸந்த பியதிஸ்ஸ மற்றும் மட்டக் களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்

பிரமுகர் ஒருவர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தனர்.

வடக்கு கிழக்கு இணைப்பு சட்டவிரோதமானது என உத்தரவிடும்படி மனுதாரர்கள் தமது அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் மீறுகிறதாம்

சட்டமா அதிபர், வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர், தேர்தல் ஆணையாளர் ஆகியோர் இந்த மனுக்களில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் தம்மை இடையீட்டு எதிர்மனுதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நல்லரத்தினம் தில்லையம்பலம் உட்பட சில தமிழர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் ஏற்காமல் தள்ளுபடி செய்தது.

அந்த இடையீட்டு மனுக்களில் முன் வைக்கப்பட்ட வாதங்களைத் தாங்கள் நிராகரிக்கின்றார்கள் என நீதியரசர்கள் தமது நேற்றைய தீர்ப் பில் குறிப்பிட்டனர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஒட்டி பதில் மனுத் தாக்கல் செய்த எதிர் மனுதாரர்களில் ஒருவரான தேர்தல் ஆணையாளரின் வாதத்தையும் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் நிராகரித்தது.

தேர்தல் ஆணையாளரின் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் பி.பி. இரட்ணாயக்க, 1988 இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஒருவரின் நடவடிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என அரசமைப்புச் சட்டம் கூறுவதை நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்த அவர், அதன் காரணமாக இவ்விகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்தார்.

ஆனால், அந்த வாதத்தை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் நிராகரித்தது.

ஜனாதிபதியின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிடவில்லை. ஆனால், அவரது நடவடிக்கையின் பெறுபேறாக பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சமயத்தில் அதில் நீதிமன்றம் தலையிட முடியும் என்ற வகையில் நீதிமன்றின் நேற்றைய தீர்ப்பு அமைந்தது.

இணைப்பை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது

இலங்கை இந்திய ஒப்பந்தப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டு 72 மணித்தியாலங்களில் ஆயுதக் குழுக்கள் முழுமையாக ஆயுதங்களை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், 1987 ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆயுத ஒப்படைப்புக் குறித்து குறியீட்டு நிகழ்வு ஒன்றில் புலிகள் பங்குபற்றிய போதிலும் உண்மையில் ஆயுத ஒப்படைப்பு நிகழவில்லை. அவ்வாறு ஒப்பந்தத்தின் ஓர் அடிப்படை அம்சம் பூர்த்தியாகாத நிலையில் அதன் வேறு ஓர் அம்சத்தை மேற்கோள் காட்டி அதன் கீழ் இணைப்பை நியாயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த வகையில், இந்த இணைப்பு, இலங்கை இந்திய ஒப்பந்த ஏற்பாடுகளையும் மீறும் அம்சமாகவே கொள்ள வேண்டும். என்று தீர்ப்பில் குறிப்பிட்டது உயர் நீதிமன்றம்.

அடிப்படை உரிமை மீறப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அது குறித்து உயர் நீதிமன்றத்திடம் அடிப்படை உரிமை மீறல் நிவாரணம் கோர முடியும் என்று அரசமைப்புக் கூறுகின்றது. ஆனால், இங்கு வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெற்று பதினெட்டு வருடங்களாகி விட்டன. எனவே, உயர் நீதிமன்றத்திடம் நிவாரணம் கோருவதற்கான கால அவகாசம் காலாவதியாகி விட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், 18 வருடங்களுக்கு முந்திய நடவடிக்கை மூலம் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படத் தொடங்கினாலும், அந்த உரிமை மீறல்கள் மேற்படி இணைப்பு மூலம் இந்தக் கணம் வரைத் தொடர்ந்து கொண்டிருப்பதால் கால அவகாசம் முடிந்து விட்டதாகக் கருத முடியாது. எனத் தீர்ப்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இணைப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது

வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் மூலம், பதின்மூன்றாவது அரசமைப்புத் திருத்தத்தின் கீழ் ஏனைய மாகாணங்களில் வசிக்கும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தின் மக்கள் அனுபவிக்க முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தங்களது மாகாண சபைக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து, தமது பணிகளை முன்னெடுப்பதற்கான உரிமை அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இதனால், நாட்டின் சகல பிரஜைகளும் சமமான அந்தஸ்தும், உரிமையும் உடையவர்கள் என்ற அரசமைப்பின் 12 (டி) பிரிவு, கிழக்கு மாகாண மக்கள் விடயத்தில் இந்த இணைப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீறப்படுகின்றது. என நீதிமன்றம் தனது தீர்ப்பில் விவரித்தது.

ஆகவே, மேற்படி இணைப்புக்கான வர்த்தமானி அறிவித்தலும், அதைத் தொடர்ந்து வருடா வருடம் நீடிக்கும் வகையில் விடுக்கப்பட்ட அறிவிப்புகளும் அரசமைப்புக்கு முரணானவை; செல்லுபடியற்றவை; சட்ட விரோதமானவை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறாதிருக்கும் வகையில் அங்கு விரைந்து மாகாணத் தேர்தல்களை நடத்தும்படியும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தை துண்டாடும் நியாயம் `

வடக்கு கிழக்கு இணைப்பு அதாவது தமிழர் தாயகத் தின் ஒன்றிணைப்பு சட்ட ரீதியாகச் செல்லுபடியற்றது என ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றம் அறிவித்துவிட்டது.

பதினெட்டு வருடங்களாக நீடிக்கப்பட்ட ஒரு நிலைமை தவறானது என்று இப்போது இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

ஈழத் தமிழரைப் பொறுத்தவரை இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணத்துக்கான பொதுக் கட்டமைப்பு ஸ்ரீலங்கா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் செய லிழந்த சமயமே, இந்த நீதிமன்றத்தில் இதே பெறுபேறுகளையே எதிர்காலத்தில் தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும், அதற்கு அப்பால் நீதியை நியாயத்தை எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்றே தமிழர் தரப்புக் கருதி வந்தது. அந்தக் கருத்து சரியானது என்பது இப்போது ருசுப்படுத்தப்பட்டிருக் கின்றது. அவ்வளவே.

பிரிட்டனிடமிருந்து இலங்கைத் தீவு சுதந்திரம்(?) பெற்ற காலம் முதலே ஸ்ரீலங்கா நாடாளுமன்றம், பெரும்பான்மை இனம் இழைக்கும் கொடுமையின் கருவியாகவே விளங்கி வருகிறது. அங்கு இனவாதமே அரசோச்சுகின்றது. சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்களே அங்கு யாக்கப்பட்டன. அதுவே வரலாறு.

சிறுபான்மையினரான தமிழர்களின் அரசியல் உரிமை களைப் பறிக்கும் இனத் தனித்துவத்தைப் பேணும் விழுமி யங்களைச் சிதைக்கும் அரசமைப்புச் சட்டங்களும், அவற் றின் வழிவந்த சட்டவிதிகளும் சிங்கள மேலாதிக்கத்தினால் இதே நாடாளுமன்றத்தில்தான் ஒரு தலைப்பட்சமாக நிறை வேற்றப்பட்டு தமிழர்கள் மீது திணிக்கப்பட்டு வந்தன; திணிக் கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் பௌத்த சிங்கள மேலாண்மையைத் திணிக்கும் 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பாகட்டும், அதன் பின்னர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டு வந்த 1978 ஆம் ஆண்டின் யாப்பாகட்டும், அவை இரண்டுமே இந்த நாடாளுமன்றத்திலேயே யாக்கப்பட்டன. அவற்றைத் தயாரிப்பதிலோ அல்லது பிரகடனப்படுத்துவதி லோ தமிழர் தரப்பு பங்குபற்றவேயில்லை.

தமிழரின் சம்பந்தமோ, சம்மதமோ இன்றி தயாரிக்கப்பட்டு, பலவந்தமாக அவர்கள் மீது திணிக்கப்பட்ட அரசமைப்பின் கீழ், அந்த அரசமைப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட சட்டங்களின் கீழ், அந்த நீதிமுறையின்படி, சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதில் அர்த்தமேயில்லை.

ஸ்ரீலங்காவின் சட்டமுறைமையும், அதை நெறிப்படுத்தும் அரசமைப்பும் இறுக்கமானவை, நெகிழ்வற்றவை. அரக்கவோ, நகர்த்தவோ, நெகிழ்த்தவோ முடியாத சட்ட அடைப்புக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறது ஸ்ரீலங்காவின் நீதி முறைமை.

இந்த அரசமைப்புச் சட்ட வரம்புச் சுவருக்குள் சிக்கிக் கிடக்கும் ஸ்ரீலங்காவின் நீதி பரிபாலன முறைமை, அதை விட்டு வெளியே வந்து, சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைக்கான வேணவாவைத் தீர்க்கதரிசனத்தோடு நோக்கி, நியாயம் வழங் கும் என ஏங்கிக் காத்திருப்பது பயனற்றது. அது இப்போது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கின்றத

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தாயகத்தில் தன்னாட்சி அரசு ஒன்றை நிறு வும் அவர்களின் போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசு தொடுத்திருக்கும் அரசியல், இராணுவ யுத்தத்தில், அரசுத் தரப் புக்குத் தோள் கொடுக்கும் தமிழர் தரப்பு சக்திகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஒன்று.

ஆனால், தமிழர் தாயகத்தைத் துண்டாடும் துரோகத்துக்கு அக்கட்சி கூடத் துணை போகமாட்டாது என்பது நிச்சயம்.

என்று உதயன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்சி காசுக்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கிறது. இதுவா துணை போக மாட்டாது???. நகைச்சுவையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வழக்கை வைத்து அழமுடியாது.

மனித வாழ்வை தீர்மானிப்பது விதி. அவ்விதியையே நிர்ணணிப்பது விடுதலைப்புலிகள் அப்படியிருக்கும் போது இதற்கு அழவேண்டியதில்லை

.

8) :idea:

Backfire ஆகாமல் இருந்தால் சரி :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.