Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலி துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றயத்தினம் லைனில் நின்றவன்களுக்கு கொஞ்சம் கிலி பிடித்திறுக்கும்...

p1-index.jpg

ஹபரணையில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு கொஞ்சப் பேர் போய் லைனில நின்றிருக்கிறாங்க SLN யில சேர

  • Replies 54
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா நிதர்சனத்தின் புழுகை இணைச்சது? 7.40ற்கு சுவாலை பிரகாசமாகத் தெரிஞ்சதாம்! பின்னேரம் எண்டால் சூரியன் மேற்கில தெரியுது என்று சொல்லலாம். விடியப்புறம் எப்படி பிரகாசமான ஒளி? இவர்களின் ஊடகவியளாளர் கடலில் இருந்து செய்தி கொடுத்தாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan Naval base in Galle attacked

[TamilNet, Wednesday, 18 October 2006, 03:25 GMT]

Three explosions were reported inside Galle naval base, Dakshina, located 105 km southeast of Colombo Wednesday morning around 7:45 a.m., Sri Lankan military officials in Colombo said. Exchange of gunfire was reported for more than 1 hour. 15 wounded sailors were admitted at Karapittiya hospital and a naval trooper was reported killed. Colombo Galle Road has been closed down.

At least 2 boats inside the naval base were destroyed by the attackers who entered into the naval base in gunboats.

Galle is the southern most city of Sri Lanka.

Further details are not available at the moment.

- Tamilnet

காலி இனிக்காலி.

ஐ... ஜாலி.

காலி கடற்படைத் தளம் மீது அதிரடித் தாக்குதல் - கடற்படைப்படகுகள் பல அழிப்பு

சிறீலங்காவின் தென்பகுதியில் உள்ள காலித்துறை முகம் மற்றும் அதனோடு இணைந்த கடற்படைத்தளம் என்பவற்றின் மீது இன்று காலை பாரிய தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்கா கடற்படையின் படகுகள் பல அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரங்கள் இணைப்பு)

காலை 7.45 மணிக்கு அடுத்தடுத்து பாரிய குண்டு வெடிப்புக்களுடன் தொடங்கிய மோதல்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடுமையான துப்பாக்கிச் சமருடன் தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்களின் படகுள் போன்று பாவனை காட்டிய தாக்குதலாளிகள் காலித்துறை முகத்தினுள் திடீரென பிரவேசித்து அதிரடித் தாக்குதலை ஆரம்பித்ததாக படைத்தரப்பின் தகவல்கள் மூலம் அறியப்படும் அதேவேளை தரையாலும் தாக்குதலாளிகள் கடற்படைத்தளத்திற்குள் ஊடுருவியதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அத்தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

துறைமுகத்திற்குள் ஊடுருவிய தாக்குலாளிகளின் படகுகள் சில கடற்படைப் படகுகள் மீது மோதி வெடித்ததைத் தொடர்ந்து மற்றைய படகுகளில் சென்றோர் துறைமுகத்தினுள் தரையிறங்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கடற்படையினருக்கும் தாக்குதலாளிகளிற்கும் இடையே துறைமுகத்தினுள் கடும்மோதல்கள் இடம்பெற்றன.

தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை துறைமுகப்பகுதிக்கு அண்மையில் வசித்த மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு காவல்துறையினரால் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்றதாக ஊடகச்செய்திகள் மூலம் அறியப்படுகிறது.

காலி துறைமுகத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சிறிலங்கா அரச தரப்பு இதுவரை முழுயான தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. ஆனால் துறைமுகப் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்ததாக வீரகேசரி நாளேட்டின் இணையத்தளம் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடற்படைக்கு ஏற்பட்டுள்ள முழுமையான சேதவிபரங்கள் அறியப்படவில்லை.

http://sankathi.org/news/index.php?option=...id=892&Itemid=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலி கடற்படைத்தளத்தின் மீது தற்கொலை தாக்குதல்

வீரகேசரி இணையத்தளம்

நிலைமையை கட்டிப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவ மற்றும் அதிரடிப்படைவினரது உதவிகள் பெறப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாலர் பிரகேடியர் பிராசத் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பொலிஸார் அந்த பகுதியில் பெரிய ஒலிபரப்பு சாதனங்கள் மூலம் மக்களின் அந்த பகுதியில் வெளியேறுமாறு தெரிவித்தார்.

ஹெலிகொப்பட்டர் மூலம் கடற்படை கப்பல் மூலம் தேடுதல் நடவெடிக்கை முருக்கி விட்டுள்ளதாகவும் இராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கிறார்.

சுமார் 20ற்க்கு மேற்பட்ட பாரிய குண்டுகள் சத்தங்கள் அடுத்தடுத்து துப்பாக்கி வெடிசத்தங்கள் கேட்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்திள்ளனர் இதன் மூலம் பெரும் பதற்ற நிலை காணப்படுகிறது.

காலி கடற்படைத்தளத்தின் மீது தற்கொலை தாக்குதல்

வீரகேசரி இணையத்தளம்

இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் காலித்துறைமுகமும், டக்சினா கடற்படை முகாம் தாக்குதலுக்குள்ளாம்னது இன்று காலை 5 படகுகளில் வந்த தற்லொலைக் குண்டுதாரிகள் கடற்படைத் தளத்தினுள் ஊடுருவ முயன்ற போது படகுகளை சோதனை செய்யும் நிலையத்தில் வைத்து ஒரு படகு கடற்படையினரால் தாக்கியளிக்கப் பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிராசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இதனையடுத்து மூன்று குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ளன . அத்துடன் துப்பாக்கி பிரயோகமும் தொடர்ந்து நடை பெறுவதாக தெரிவித்தார்.

அத்துடன் சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினரின் 3 படையணிகள் அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளதாக இராணுவ பொலிஸ் அதிரடிப்படையை பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெபகே தெரிவித்தார்.

அத்துடன் தாக்குதலில் இருவர் பலியாகியதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன .

எனினும் துப்பாக்கி பிரயோகமும் தாக்குதலும் தொடர்வதாக துறைமுகப் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கக்ப்பட்டிருந்த 5கப்பல்கள் முற்றாக தாக்கியளிக்கப்பட்ட தாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிராசாத் சமரசிங்க தெரிவித்தார். இதனையடுத்து காலி மாத்தரை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும்.

நிலைமையை கட்டிப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவ மற்றும் அதிரடிப்படைவினரது உதவிகள் பெறப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாலர் பிரகேடியர் பிராசத் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கு இடமான தமிழீழ விடுதலைப்பிலிகளே தற்கொலை குண்டுதாக்குதலில் இன்று காகை காளி துறைமுகத்தில் பாரிய தாக்குதலை நடத்தமுயன்றனர் என்றும் தொடர்ந்து அந்த பகுதியில் தாக்குதல் நடைபெற்று வருகின்றது.

என்றும் பாதுகாப்பு விவகரங்கள் சம்பந்தமாக பேசக்கூடிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்கெல தெரிவித்தார்.

பொலிஸார் அந்த பகுதியில் பெரிய ஒலிபரப்பு சாதனங்கள் மூலம் மக்களின் அந்த பகுதியில் வெளியேறுமாறு தெரிவித்தார்.

ஹெலிகொப்பட்டர் மூலம் கடற்படை கப்பல் மூலம் தேடுதல் நடவெடிக்கை முருக்கி விட்டுள்ளதாகவும் இராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கிறார்.

சுமார் 20ற்க்கு மேற்பட்ட பாரிய குண்டுகள் சத்தங்கள் அடுத்தடுத்து துப்பாக்கி வெடிசத்தங்கள் கேட்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்திள்ளனர் இதன் மூலம் பெரும் பதற்ற நிலை காணப்படுகிறது.

ஸ்ரீலங்கா அரசு ஆயுததளப்பாடங்களை கப்பல் மூலம் வெளிநாட்டில் இறக்குவதற்கு காலிதுறைமுகத்தினை பயன்படுத்துவது வழமை . சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் காலிதுறைமுக மிக பாதுகப்பானது என கருதி அங்கு பெரும் ஆயுத களஞ்சியசாலை காணப்படுகிறது இந்த ஆயுதகளஞ்சியசாலை தாக்கப்பட்டுள்ளதாகவும் அதனுள் இருந்து குண்டுகள் தொடர்ந்து வெடித்துவாருவதாகவும் இதன் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர் என ஏப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாகவும் காலி பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கீர்த்தி டீ. சில்வா தெரிவித்தார்.

அதே வேளை பாடசாலைக்குச் சென்றுள்ள மாணவர்களை பற்றி பெற்றோர் கவலைப்பட்ட வேண்டியதில்லையெனவும் மாணவர்கள் 30-45 நிமிடங்கலுக்கு வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்படுவர் என காலி பரிதி பொலிஸ மா அதிபர் கீர்த்தி டீ. சில்வா தெரிவித்தார்.

http://www.virakesari.lk/vira/html/head_vi...ew.asp?key=2602

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான செய்தி என்ன??? பாரிய இழப்போ இல்லையோ??? தூயவனும் ஹரிஅண்ணாவும் சும்மா வீட்டுக்குள்ள இருக்கிறதை விட்டு விட்டு ஒருக்கால் வெளில போய் பார்த்து வரலாமே... :roll:

காலி காலி போல :P

  • கருத்துக்கள உறவுகள்

காலி கடற்படைத்தளம் மீது தாக்குதல்

சிறிலங்கா காலி கடற்படைத்தளத்துடன் அமைந்துள்ள "தக்கினா" கடற்படைத்தளம் மீது இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் 5 படகுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதில் சில பீரங்கிப்படகுகளுடன் தாக்குதல் அணியொன்று கடற்படை முகாமுக்குள் நுழைய முயற்சித்ததாகவும் தெரியவருகின்றது.

மூன்று படகுகள் வெடித்துச் சிதறியதாகவும் மற்றைய படகுகளில் வந்தவர்கள், முகாமுக்குள் தரையிறங்கி தாக்குதல் நடத்தியதாகவும் சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அப்பகுதி பொதுமக்களின் தகவலின் படி சுமார் 10 குண்டுவெடிப்புச் சத்தங்கங்கள் கேட்டதாகவும், பாரிய துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இராணுவ அதிகாரிகள் சிலர் தெரிவித்ததன் படி பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டதனை உறுதி செய்ததுடன் அப்பகுதி அடர்த்தியான புகையினால் மூடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்த தகவலின் படி அப்பகுதியிலிருந்து 2 கடற்படையினரின் சடலங்களும் காயமடைந்த 10 பேரையும் அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிந்திய தகவலின் படி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

தமது 2 கடற்கலங்கள் சேதமடைந்துள்ளதனையும் கடற்படையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்த கடற்படை முகாமோடு இராணுவ முகாம் ஒன்றும் அவர்களின் ஆயுதக்களஞ்சிய சாலை ஒன்றும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதலை அடுத்து தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது சிங்கள காடையர்கள் தாக்குதல் மேற்கொள்வதாகவும் அப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

கொழும்பிலுள்ள எனது நண்பனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, காலிப்பகுதியெங்கும் புகைமண்டலமாக இருப்பதாக, கொழும்பில் செய்தியாம். மற்றும் எந்த ஒரு ஊடகவியலாளரையும் காலிப் படைத்தளப் பகுதிக்கு அண்மையிலேயே செல்ல விடவில்லையாம் என்று கொழும்பு வானொலி ஒன்று செய்தி தெரிவித்திருக்காம்.

இப்புகை மண்டலம் படைத்தளத்திலிருந்தோ அல்லது எரியூட்டப்படும் தமிழ் மக்களின் சொத்துக்களிலிருந்தோ வருகிறது என்று தெரியவில்லையாம்.

இத்தாக்குதலினால் படைத்தளத்திற்கு சேதம் ஏற்பட்டதோ இல்லையோ, இலங்கைப் பொருளாதாரத்துக்கு பாரிய சேதம் ஏற்பட இருக்கிறது. இன்று தென் பகுதிகளில் முற்றுகையிடும் உல்லாசப் பயணிகள் வரவு பாதிப்புறவும் போகிறது.

"விதைத்தவர்களுக்கு, இது அறுவடைக்காலம்"!!!!!!!

ஏண்டாப்பா நிதர்சனம் எழுதுரது புளுகு ஆனா பிரசாந்த குடுக்கிறதுகள எடுத்து சொல்லுற பிபிசிகாரனும் சீஎன்என் காரனும் சொல்லுரதே உண்மை? ஏறியேக்க வெளிச்சமா எரியாமா என்ன வீட்டுக்குள்ள சமைக்கிரமாதிரியே எரியும். கடற்படையின்ட சேதாரங்கள் இனி பொறுக்கி எடுத்த அளந்து பாத்துத் தான் சொல்லவேனும். அதுக்கு முன்ன புலிகளின்ட சேதராத்த சொல்லி அழுவினம் கேட்டுப்பாப்பம்.

ஈழததிலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலி சிங்களக் கடற்படைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலை அடுத்து, காலிப் பிரதேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை சிங்களப் பொலிஸார் பிறப்பித்ததை அடுத்து சிங்களப் பொலிஸார் மற்றும் இராணுவத்துடன் இணைந்து சிங்களக் காடையர்கள், அப்பகுதிகளில் இருக்கும் தமிழ் மக்களின் சொத்துக்களைச் சுூறையாடுவதிலும், வீடுகள், கடைகளை தீ மூட்டுவதிலும் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றது

தீபம் செய்திகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"விதைத்தவர்களுக்குஇ இது அறுவடைக்காலம்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலி துறைமுகத்தில் தரித்து நின்ற கடற்படை படகுகள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இன்று புதன்கிழமை காலை 8.00 மணியளிவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு டோரா படகு முற்றாக அழிவடைந்துள்ளது.

இதில் ஒரு கடற்படை சிப்பாய் கொல்லப்பட்டும் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதும் தாக்குதல் இடம்பெற்றுவருவதாகவும் காலி கால்துறைக்குட்பட்ட பகுதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவு

காலி துறைமுக கடற்படைத்தளத்தின் மீது கடற்புலிகள் தாக்குதல்

தென்னிலைங்கையில் காலி துறைமுகத்த அண்மித்த கடற்படைத் தளத்தின் மீது இன்று காலை தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், அங்கு சில கடற்படைப் படகுகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது.

காலி கடற்படைத் தளத்தை நோக்கி சுமார் 5 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் கடற்கரும்புலிகள் (தற்கொலையாளிகள்), அங்கு கடற்படையினருடன் சண்டையில் ஈடுபட்டதாகவும், அவர்களால் தளத்தினுள் நுழைய முடியாவிட்டாலும், அவற்றில் இரண்டு தற்கொலைப் படகுகள், அங்கிருந்த இரண்டு அல்லது மூன்று கடற்படைப்படகுகளுக்கு சேதமேற்படுத்தியதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடிய பிசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு கடற்புலிப்படகுகள், கடற்படைப்படகுகளுடன் மோதி தம்மை வெடிக்கவைத்துக் கொண்டதாகவும், ஏனைய மூன்று படகுகளையும் கடற்படையினர் தாக்கி அழித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்தத் தாக்குதலில் ஒரு கடற்படைச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், 2 பேரைக் காணவில்லை என்றும், 11 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

2 கடற்படைப் படகுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், 1 படகுக்கு சிறிதளவு சேதம் ஏற்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்த மோதலில் காயமடைந்த 15 பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

உள்ளூர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும், தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில், அந்தப் பகுதியில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்ததாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

சில தமிழர் கடைகள் தாக்கப்பட்டன

இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து காலி நகரில் கிட்டங்கிப் பகுதியில் உள்ள சில தமிழர்களின் கடைகளை, சில காடையர்கள் தாக்கியதாகவும், அவர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

காலியில் ஊரடங்கு உத்தரவு

அதேவேளை, இந்தத் தாக்குதலை அடுத்து, காலி பிராந்தியத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

அமைதி அமைதி உறவுகளே :P :P

இது மாபெரும் தாக்குதல் அழிவுகள் வெளிவரமாட்டாது இது கடனாய்க்கா விமாணநிலையம் இல்லை அழிவுகள் வெளிவர ஆனா இழப்பு அதைபோன்றதே

சரி கேவியு போட்டுவிட்டார்கள் கள உறவுகள் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் நான் எப்படியும் தப்பி வந்து விடுவேன்,,,,,,

கடற்கபுலிகளின் தாக்குதலில் பெரும் இழப்பை பெற்ற சிங்கள அரசு இப்போது காடைகூட்டதை வைச்சு தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடத்தி இழப்பை சமன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடற்புலிகள் 5 படகில வந்தவையள் என்டேக்க இழப்புக்கள் எப்படி இருக்கனும் என்டு யோசிச்சுப்பாக்கிறன் :lol:

சரி கேவியு போட்டுவிட்டார்கள் கள உறவுகள் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் நான் எப்படியும் தப்பி வந்து விடுவேன்,,,,,,,

உங்களை பற்றி யார் கவலைப்பட்டது?

நீங்கள் உங்களை தியாகம் செய்தெண்டாவது எங்களுக்கு சூடான செய்திகளை தாருங்கள்...!

We want more photos....!!!

We want more figures (25, 50, 100,)....!!!

:twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள பயங்கரவாதத்துக்கு அடிமேல அடி விளுது... 8)

உங்களை பற்றி யார் கவலைப்பட்டது?

நீங்கள் உங்களை தியாகம் செய்தெண்டாவது எங்களுக்கு சூடான செய்திகளை தாருங்கள்...!

We want more photos....!!!

We want more figures (25, 50, 100,)....!!!

கமோன் வினித்... யாழுக்காக/எங்கள்க்காக/எம் நாட்டுக்காக.......... :P

என்ன சங்கதி எரிவாயுக் கப்பல் எரியுதெண்டும், எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது என்று எழுதியிருக்கு. ஆனா, தமிழ்நெட், புதினம் என்பனவே ஏணைய ஊடகங்களே எதுமே தெரிவிக்கவில்லை.

விபரம் அறிந்த வர்கள் சொல்லுங்கள்

தற்பொழுது சீ.என் செய்தி காலிதுறைமுகம் துp பற்றி எரிவதையும் புகை மண்டலம்வாளை சூளும் காட்சியை காண்பித்தது..

இதன் எதிரொலியாக கிழக்கு மீது வான் தாக்குதல் நடைபெற்றுள்ளது..

ஆனால் இராணுவம் இன்னும் தமது இழப்பை தெழிவாக கூறவில்லை...

காட்சியமைப்பை பாக்கும் போது

ஆயுதகுதம் வெடித்தது போலவே தெரிகிறது...

மகிந்தர் பாவம்...கோவிந்தா..கோவிந்தா...

இளந்திரையனின் பேச்சு தற்போது சிங்கள படைகளிற்கு செய்து காட்டி உள்ளது

இதில் தற்போது திரு .வே .பாலகுமார் அவர்களின் வரிகள் ஞாபகம் வருகிறது ..

நாங்கள் இங்கு சந்தோசமாக இருந்தால் தான் நீங்கள் அவ்வாறு இருக்கு முடியும்"" ..ஆகா...

சிங்கள இன துவேசம் பிடித்த அதே இடத்தில் அதே துறைமுகத்தில் மற்றுமொரு தாக்குதல்...

...

நன்றி

வன்னி மைந்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.