Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி

Featured Replies

.! அவர்கள் புரிந்து கொண்டாலும்  தமிழர்கள் சிலர் இன்னும் புரிய மாட்டேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? 
 
தூங்குவதைப் போன்று பாசாங்கு செய்கின்றவர்களை எழுப்ப முடியாது நிதர்சன்.  ஆணவம், தற்பெருமை, காழ்ப்புணர்வு என்பன இருப்பவர்கள் காலம் பூராவும் தூங்குவது போன்று பாசாங்கு செய்யத் தான் முடியும். அவர்களை பொருட்டாக மதிக்காமல் செய்ய வேண்டியவற்றை செய்தால் போதும் நாம்.

  • Replies 69
  • Views 5.4k
  • Created
  • Last Reply

நிதர்சனுக்கு வீட்டிற்கு போய் ஆறுதலாக பதில் எழுதுகின்றேன் .

உண்மையாக வாழ்வது வேறு அப்படி நடிப்பது வேறு .போலிகளின் முகம் கிழிப்பது எனக்கு மிகவும் பிடித்த விடயம் .போனவாரமும் பிரபல உணவு வியாபாரி முகம் பலர் மத்தியில் உடைத்தேன் .

நிதர்சன் ,

யாழ் புலிகளின் ஆதரவு களம் அதில் புலிகளை பற்றி விமர்சனம் வைத்தால் என்ன நடக்கும் என்று நான் அறியாதவன் அல்ல ,

விடுதலை போரட்டத்தில் அனைத்து இயக்கங்கள் விட்ட தவறுகளை விமர்சிப்பது போலத்தான் புலிகளையும் விமர்சிக்கின்றேன் . மற்ற அமைப்புகளின் போரட்ட வரலாறே நாலு ஐந்து வருடங்கள் தான் புலிகளின் வரலாறு மிக நீண்டது .அதனால் அவர்கள் விட்ட வரலாற்று தவறுகளும் மிக நீண்டது .

அதை ஏன் மீண்டும் மீண்டும் எழுதுகின்றீர்கள் என்று ஒரு கேள்வி வரும் ? புலிகள் இருந்திருந்தால் இந்த குற்றங்கள் நடத்திருக்காது ,புலிகள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடியது என்று ஒருவர் எழுதும் போது அவர்களுக்கு உண்மையை நடந்ததை எழுத வேண்டிவருகின்றது .இதை மாற்றுக்கருத்தாளர்கள் மட்டும் எழுதவில்லை அல்லது  புலிவாந்தி எடுக்கும் நான் மட்டும்  எழுதவில்லை மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளும் உள்நாட்டு வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் அறிக்கையும் காலம் காலமாக சொல்லிவந்த விடயம் .போருக்கு பின்னர் கதைகள் ,நாவல்களாக புலிகளில் இருந்தவர்களால் இப்போ எழுதப்படுகின்றது .இதில் எதையாவது இங்கு புலிவேசம் போட்டுக்கொண்டு வயிறு வளர்ப்பவர்கள்  ஒப்புகொள்வார்களா ?

அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் அரசிடம் விலை போய்விட்டார்கள் என்பதுதான் .இது அனைத்து புலி விமர்சர்களையும் பற்றி புலிகளை வைத்து வயிறு வளர்க்கும் கூட்டம் வைக்கும் விமர்சனம் .

அடுத்து மாவீரர் தினம் பற்றி ,நான் இங்கு வீரமக்கள் தினத்திற்கும் போனேன் நாபாவின் அஞ்சலி கூட்டதிற்கும் போய்வருகின்றேன் .மாவீரர்கள் தினம் பற்றி அவர்களே தங்களுக்குள் அடிபடுவது உண்மையா இல்லையா ? மாவீரர்கள் நினைவு நாளை வியாபராமக்கிவிட்டார்கள் என்று யாழிலேயே பலர் பதிவு வைக்கவில்லையா ? சாமியில் யாரும் குற்றம் சொல்லவில்லை காசடிக்கும் பூசாரிமாரில் தான் குற்றம் காண்கின்றார்கள் .

புலம் பெயர்ந்த தேசங்களில் புலிகள் வியாபார அமைப்பாக மாறி பலவருடங்கள் ஆகிவிட்டது .வன்னியால் கூட அதை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது .அவர்களே தங்களுக்குள் அடிபட்டு இப்போ பலவிடயங்கள் வெளிவந்துவிட்டது உங்களுக்கே தெரியும் .இந்த வியாபாரிகளை இனம் காட்டுவது மிக தேவையான விடயம் .

அடுத்து யாழில் இருக்கும் மிக பெரிய மனநோய் ,இங்கு பலர் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடி வந்து வீடு ,வாசல் ,கார் ,குடும்பம் ,குட்டி என்று இருந்து கொண்டு போராட்டத்தை நியாயப்படிதினால் பரவாயில்லை தங்களும் ஏதோ போராளிகள் கணக்கு கதை விடுவார்கள் .அவர்களுக்குள்ளேயே தாங்கள் போராட போகவில்லையே ஒரு தாழ்வுமனப்பான்மையும் குற்றஉணர்வு இருக்கு  அதை அவர்கள் அதீதமாக விசுவாசிகளாக தங்களை காட்ட எடுக்கும் வேஷம் தான் எங்களில் கொட்டப்படும் வக்கிரமும் காழ்ப்பும் .நான் போராட போகவில்லை நாட்டை விட்டு ஓடிவந்தனான் என்ற உண்மை அவர்களை ஒவ்வொரு பதிவிலும் அடையாளம் காட்டுகின்றது .

சிங்களவன் செய்த அநியாயங்கள் எனக்கு தெரியாது போலவும் அதைவிட இயக்கத்தில் குடித்து கும்மாளம் இட்டோம் என்று எல்லாம் அதிகம் வசை பாடுவது இவர்கள் தான் .

எமது போரட்ட வரலாறுகள் யாழில் பதியப்படும் போது (அனேகமாக கிருபன் இணைப்பவை) யாழில் இருக்கும் பலருக்கு அவர்களில் எவரையுமே தெரியாது சம்பவங்களும் தெரியாது .பலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் ஆனால் பின்னர் நடந்த சம்பவங்கள் கூட பல அவர்களுக்கு தெரியாது .காரணம் சொந்த வாழ்க்கையில் முழு நேரத்தையும் விட்டுக்கொண்டு இணையங்களில் வந்து புர்ட்சி செய்வதுதான் இப்போதைய பலரின் நிலை .

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அர்ஜீன் அண்ணா,
 
யாழ் புலிகளுக்கு ஆதரவான தளமா இல்லையா என்பது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. இங்கும் மாற்றங்கள் நிகழ்துள்ளன. ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுதல் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தொடர்ந்தும் அவர்களைப் பற்றி எழுதி என்னத்தை சாதிக்க முடியும்? 
 
அது மட்டுமன்றி, வெளிப்படையாகவே சொல்கின்றேன். ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடப்புறப்பட்ட அமைப்புக்களில் ஒன்றின் சார்பானவரின் கருத்தாகவே உங்கள் கருத்து பார்க்கப்படுகின்றது. விமர்சனம் என்பதற்க்கு அப்பால் இது ஒரு அமைப்பு சார்பானவரின் அரசியல் கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. 
 
அது மட்டுமன்றி, புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பாக இயங்குபவர்களை எப்படி புலிகள் என்ற வரையறைக்குள் நீங்கள் கொண்டுவருகின்றீர்கள்?  அவர்கள் தங்களைத் தாங்களே அப்படி சொல்வதாலா? இல்லையேல் அவர்கள் தான் புலிகள் என்று நீங்கள் நம்புவதாலா?  போராட்டத்தின் ஆரம்பம் பற்றி அறிவு எனக்கு குறைவு…! ஆனால் போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த காலம் அதிகம். அது வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள்ளோ, அல்லது வவுனியாவில் புளொட், ரேலோ, ஈ.பி.ஆர்.எல.எப் (சுரேஸ் அணி, வரதர் அணி ) போன்றோரின செல்வாக்கு நிறைந்த காலத்திலும். 
 
ஆனால் என்னை கேட்டீர்கள் என்றால் நான் வவுனியாவில் வாழும் போதே மிக அச்சத்தோடு வாழ்ந்திருக்கின்றேன்… (உண்மையை சொன்னால் இலங்கை அரசாங்க படைகள், காவல்துறை புலனாய்வுத்துறையினரை விட தமிழ் அமைப்புக்கள் மீதே)  
 
புலிகளின் வரலாற்றுத்தவறுகளாக நீங்கள் சொல்லும் விடயங்கள் நிச்சயமாக திருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போதே புலிகளை இல்லாதொழிக்க முயன்றனர். ஆனால் இன்று புலிகள் ஒரு இயங்கா நிலையில் இருக்கும் போது அவர்களின் பெயரில் அறிக்கை விடுவோர், அவர்களின் பெயாில் பணம் சம்பாதிப்போர், அவர்களது சொத்துக்களை அபகரித்தோர், இன்னும் அவர்களின் பெயரை பாவிக்கும் தனி நபர்களையும், அவர்கள் சார்ந்து இயங்கும் அமைப்புக்களையும் விமர்சிக்கலாமே? 
அது மட்டுமன்றி, மாவீரர் நாளை அனுஸ்டிப்பது என்பது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை அதை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் வீரமக்கள் தினம் பற்றி குறிப்பிட்டேன்… அனைவரும் தமிழீழத்துக்காக போராட புறப்பட்டவர்கள் சந்தர்பவசத்தால் மாற்றங்கள் நிகழ்ந்து அந்த கொள்கையிலிருந்து விலகியது அவர்களின் தலமையே அன்றி, மண்ணுக்காக போராடிய வீரர்கள் அல்ல என்பதை அறியாதவன் அல்ல…!
 
ஆனால் அண்ணா, நீங்கள் இங்கு புலிப்படம் காட்டுபவரை விமர்சிக்க விரும்பின் அவர்களை விமர்சியுங்கள் அதற்க்குள் புலிகளை கொண்டு வராதீங்க.. 
 
 சில எழுத்துப்பிழைகளை திருத்தியுள்ளேன்.

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

வுணக்கம் அர்ஜீன் அண்ணா,
 
யாழ் புலிகளுக்கு ஆதரவான தளமா இல்லையா என்பது பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. இங்கும் மாற்றங்கள் நிகழ்துள்ளன. ஆனால் ஒரு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் அமைப்புக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுதல் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி தொடர்ந்தும் அவர்களைப் பற்றி எழுதி என்னத்தை சாதிக்க முடியும்? 
 
அது மட்டுமன்றி, வெளிப்படையாகவே சொல்கின்றேன். ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடப்புறப்பட்ட அமைப்புக்களில் ஒன்றின் சார்பானவரின் கருத்தாகவே உங்கள் கருத்து பார்க்கப்படுகின்றது. வுpமர்சனம் என்பதற்க்கு அப்பால் இது ஒரு அமைப்பு சார்பானவரின் அரசியல் கருத்தாகவே பார்க்கப்படுகின்றது. 
 
அது மட்டுமன்றி, புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்ப்hக இயங்குபவர்களை எப்படி புலிகள் என்ற வரையறைக்குள் நீங்கள் கொண்டுவருகின்றீர்கள்?  ஆவர்கள் தங்களைத் தாங்களே அப்படி சொல்வதாலா? இல்லையேல் அவர்கள் தான் புலிகள் என்று நீங்கள் நம்புவதாலா?  போராட்டத்தின் ஆரம்பம் பற்றி அறிவு எனக்கு குறைவு…! ஆனால் போராட்ட சூழலுக்குள் வாழ்ந்த காலம் அதிகம். அது வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குள்ளோ, அல்லது வவுனியாவில் புளொட், ரேலோ, ஈ.பி.ஆர்.எல.எப் (சுரேஸ் அணி, வரதர் அணி ) போன்றோரின செல்வாக்கு நிறைந்த காலத்திலும். 
 
ஆனால் என்னை கேட்டீர்கள் என்றால் நான் வவுனியாவில் வாழும் போதே மிக அச்சத்தோடு வாழ்ந்திருக்கின்றேன்… (உண்மையை சொன்னால் இலங்கை அரசாங்க படைகள், காவல்துறை புலனாய்வுத்துறையினரை விட தமிழ் அமைப்புக்கள் மீதே)  
 
புலிகளின் வரலாற்றுத்தவறுகளாக நீங்கள் சொல்லும் விடயங்கள் நிச்சயமாக திருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போதே புலிகளை இல்லாதொழிக்க முயன்றனர். ஆனால் இன்று புலிகள் ஒரு இயங்கா நிலையில் இருக்கும் போது அவர்களின் பெயரில் அறிக்கை விடுவோர், அவர்களின் பெயாபில் பணம் சம்பாதிப்போர், அவர்களது சொத்துக்களை அபகரித்தோர், இன்னும் அவர்களின் பெயரை பாவிக்கும் தனி நபர்களையும், அவர்கள் சார்ந்து இயங்கும் அமைப்புக்களையும் விமர்க்கலாமே? 
அது மட்டுமன்றி, மாவீரர் நாளை அனுஸ்டிப்பது என்பது நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை அதை கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதனால் தான் வீரமக்கள் தினம் பற்றி குறிப்பிட்டேன்… அனைவரும் தமிழீழத்துக்காக போராட புறப்பட்டவர்கள் சந்தர்ப வசத்தால் மாற்றங்கள் நிகழ்ந்து அந்த கொள்கையிலிருந்து விலயது அவர்களின் தலமையே அன்றி, மண்ணுக்காக போராடிய வீரர்கள் அல்ல என்பதை அறியாதவன் அல்ல…!
 
ஆனால் அண்ணா, நீங்கள் இங்கு புலிப்படம் காட்டுபவரை விமர்ச்சிக விரும்பின் அவர்களை விமர்சியுங்கள் அதற்க்குள் புலிகளை கொண்டு வராதீங்க.. 

அவர் எழுதுகிறார் ....... இவர் கிழிக்கிறார் 
என்றால் மிஞ்சி மிஞ்சி உலக தமிழ் சனத்தொகையில் 2 வீதம் மட்டும் தமது வயிறு வளர்க்க இப்படி வாழுகிறது என்பதுதான் உண்மை.
 
புலிகள் என்னையே கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள் (என்மீது எந்த தவறும் இல்லை)
அப்போதிருந்த வழிமுறை என்பது அதுதான். அதைவிடவும் தவறுகள் இன்றி செய்திருக்க  முடியும். நாடு என்பது எனது என்ற எண்ணம் குறைந்த பட்சம் 50 வீதத்திற்கு இருந்து அவர்கள் தமது கடமையை செய்திருந்தால். 
 
பிரபாகரன் போராட போனால் .......
அவனது பிள்ளை கருப்பும்புலியாக போகவேண்டும்.
மனைவி குண்டுடன் வெடிக்க வேண்டும்.
 
இவர்கள் வீட்டில் கால் நீட்டிக்கொண்டு இருந்து கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அதை அவர்கள் செய்யவேண்டும்.
 
அதன் பிரதிபலனை ............... முழு ஈழ தமிழனும் இனி வரும் காலத்தில் நன்றாக கால் நீட்டி அனுபவிக்கலாம்.
 
(இவர் தான் ஒரு நாகரீகமானவர் போல் வேஷம் போடுவது இதுதான் முதல் முறையல்ல. நாகரீகத்தை முதலில் எழுதி காட்டவேண்டும். இன்னுமொரு திரி நாளைக்கு திறக்க வேஷம் கலைந்து விடும். புலிகள் தவறு செய்தால் அதை எழுதுவது? யார் வேண்டாம் என்றார். புலிகள் தவறு செய்யவில்லை என்று யார் எழுதுகிறான்?   வாந்திகளைதான் நீங்களே கொண்டுபோங்கள் என்று எழுதுகிறார்கள் )
 
இவர்கள் எதோ 25ஆயிரம் புலிகளையும்  உலக நவீன ஆயுதங்களையும் கொடுத்து பிரபாகரனை விடுதலை வாங்கித்தர விட்டதுபோலவும். அப்படி எடுத்து தருவதாக இவர்களுக்கு அவர் உறுதி கொடுத்ததுபோலவும் எல்லோ பீற்றி வருகிறார்கள்.
கல்லெடுத்து எறிந்ததில் இருந்து ..........
இரவு பகலாக உழைத்து தான் எல்லாம் கட்டினார்கள்.
 
உலகில் நிஜாஜமான கோரிக்கைகள் எங்கே அங்கீகரிக்கபட்டிருக்கிறது ?
நேற்று பயங்கரவாதியாக இருந்த குர்திஷ் போராளிகள். இன்று அமெரிக்காவிடம் ஆயுதம் பெறுகிறார்கள். நாளை மீண்டும் பயங்கரவாதிகள் (இவர்கள் வேலை முடிய). இந்த லட்சணத்தில் அவர் சொல்கிறார் ............. இவர் சொல்கிறார் என்று வேதம் ஓதிக்கொண்டு.
கேட்பவன் என்ன மூளை அள்ளுபட்டவனா ?

மூடிக்கொண்டு இருக்க வேண்டும் - இதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவர் மீது, அவரின் தனி மனித ஒழுக்கம் மீது அவதூறு செய்யமுன், ஆதாரம் இருக்கா என்று யோசிக்க வேண்டும், ஆதாரம் இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும்.

நிர்வாகம் கவனிக்கும் போது ஒதுங்கி இருப்பதாக கூறும் நீங்கள் - அநீதியை சுட்டிக்காட்டிய என்னை மறும் தனிப்பட்ட குரோதத்தால் செயல்ப்படுகிறேன் நெறி ஏன் கூறினீர்கள்?

நிர்வாகம் பார்த்துக்கொள்ளட்ட்டும் என்று இருந்திருக்கலாமே?

இதை அவர் செய்தால் .............. யாழ் களமே நிம்மதி அடையும்.
உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் சொல்லி விளங்க படுத்திவிடுங்கள். 

விசுகு அண்ணா எப்பவும் சிலருக்கு எதிராக எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்...நுணா ஒரு மட்டுவாக இருந்து கொண்டு செய்தது பிழை.இப்படி எழுதிப் போட்டு பிறகு எப்படி அவரால் மற்றவர்கள் தனி நபர் தாக்குதல் செய்யும் போது மட்டுறுத்த முடியும்?

நீங்கள் தமிழ் வாசிக்க கற்று கொள்ளவில்லை என்றால் ............
அதுக்கும் அடுத்தவனா? குற்றவாளி !

என்னை பொறுத்தவரை யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை.

சிங்களவர்களை பொறுத்தவரை மகிந்தவின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நினைத்தால் மைத்திரிக்கு வாக்களிப்பார்கள்.

அல்லது இப்பொழுதும் 2009 இல் இலங்கை பெற்ற போர் வெற்றியை மனதில் வைத்து மகிந்தவுக்கு வாக்களிக்கலாம்.

இங்கு யார் வெல்கிறார்கள் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஏதாவது தோ்தல் வருகுதா இலங்கையில்  :rolleyes::lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி

நானும் ஏதோ திரியின் தலைப்புக்கு ஏற்ப கருத்தாடல் நடக்குது என்று பார்த்தால் இது வேற.......

தெளிவா புரிந்து கொள்ளுங்கள் சொல்லி திருந்துபவர்களை திருத்தாலாம் ஆனால் சொல்லியும் திருந்தாதவர்களை.........

சாெல்லியும் செய்யாா் கயவர்.
புனைபெயரில் எழுதியது தவறு, சாெந்தப்பெயரில் எழுதியது துணிவு. உங்கள் தனிமனித மாண்பை நினைத்து  உடல் புல்லரிக்குது. ஆனால் மாண்டவா்களும் மதிக்கப்பட வேண்டியவா்கள். தங்களுக்காக அவா்கள் மடியவில்லை. எங்கள் குலப்பெண்களின் மானங்காக்க எமது சுதந்திரத்துக்காய் கண்விழித்து, அடிபாடு தாெடங்கினால் சாப்பாடு தண்ணீா் நிட்சயமில்லை. சாெப்பிங் பாய்க்கில் மழைநீரை ஏந்தி, இலைகளைச் சாப்பிட்டு பாேராட்டத்தை காட்டிக்காெடுக்காமல் இறுதிவரை களமாடி மாண்டவா்கள். கல்லறையில் கூட அவா்களை உறங்க எதரியானவன் விடவில்லை கிண்டியெறியிறான். நாங்கள் எங்களால் இயன்றவரையும் சேறை வாரியள்ளி இறைக்கிறாேம். நாங்கள் பாேராடவில்லை அவர்களை தூற்றாமல் இருப்பதுவும் பங்களிப்புத்தான். ஆமியாேடு யாழ்ப்பாணத்திலிருந்த எத்தனையாே அப்பாவி இளைஞா்களை கதறக் கதற, கலைத்து கலைத்து சுட்டாா்கள். பெற்றவா்கள் பிள்ளைகளை காப்பாற்றவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் கையறு நிலையில் பாத்துக்காெண்டு நின்றாா்கள். அவா்கள் தமிழா் என்பதுதான் குற்றம். தயவுசெய்து தனிப்பட்ட காழ்ப்புணச்சியால் உங்களை நீங்களே எதிரியாக்காதீா்கள். தங்களால் முடிந்ததை அவா்கள் எங்களுக்குச் செய்தாா்கள் எங்களால் முடிந்ததை எல்லாேரும் சோ்ந்து செய்து எதிா்கால சந்ததியைக் காப்பாேம். நன்மை செய்யாவிடில் தீமையாவது செய்யாதிருப்பாேம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நாம் நம்மை அறிவோம்... ஒரு இணைய கருத்துக்களத்தில் ஒரு மித்த கருத்தைக் கொண்டுவரமுடியாத நாம், எப்படி கோடிக்கணக்கான மக்களை ஒன்றினைக்க போகின்றோம்? எங்களுக்கே நாம் வியாக்கியாணம் பேசிக் கொண்டிருக்கும் போது எப்படி இராஜதந்திரம் செய்ய போகிறோம்...

சிங்களவனிடம் எமது உரிமையை கேட்க்கும் வலிமை எங்களின் ஒற்றுமையிலிருந்தே பிறக்கிறது. ஆனால் அது யாழ் களத்திலும் இல்லை வந்து வாழும் புலத்திலும் இல்லை... ஏன் தாயக தளத்திலும் இல்லை...!

மைத்திரி - மகிந்த இருவரும் உண்மையிலேயே பிரிந்து நிற்கிறார்களா? அல்லது நடிக்கிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போகிறது..!

மைத்திரி - மகிந்த இருவரும் உண்மையிலேயே பிரிந்து நிற்கிறார்களா? அல்லது நடிக்கிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போகிறது..!

எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது. :o

ஒரு பேச்சுக்கு இறுதி நேரத்தில் ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகாமல் மைத்திரி தேர்தலில் போட்டியிட்டால் கூட தேர்தல் வரைக்கும் தான் எதிரெதிர் கருத்து. அதன் பின் அவர்கள் ஒற்றுமையாக செயற்படலாம்.

ரணில் கூட வெளிக்கு மகிந்தவை எதிர்த்து கருத்து கூறினாலும் உள்ளுக்கு மகிந்தவுக்கு ஆதரவானவர் தான்.

சிலவேளை மைத்திரி ஜனாதிபதியாக வந்தால் தனது பதவி காலத்தில் தான் ஏதாவது செய்தது போல் காட்டுவதற்காக மகிந்தவை உள்ளே தூக்கி போடுவதும் நடக்கலாம்.

மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்த கதி மைத்திரிக்கும் நிகழலாம்.

என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாம் நம்மை அறிவோம்... ஒரு இணைய கருத்துக்களத்தில் ஒரு மித்த கருத்தைக் கொண்டுவரமுடியாத நாம், எப்படி கோடிக்கணக்கான மக்களை ஒன்றினைக்க போகின்றோம்? எங்களுக்கே நாம் வியாக்கியாணம் பேசிக் கொண்டிருக்கும் போது எப்படி இராஜதந்திரம் செய்ய போகிறோம்...

சிங்களவனிடம் எமது உரிமையை கேட்க்கும் வலிமை எங்களின் ஒற்றுமையிலிருந்தே பிறக்கிறது. ஆனால் அது யாழ் களத்திலும் இல்லை வந்து வாழும் புலத்திலும் இல்லை... ஏன் தாயக தளத்திலும் இல்லை...!

மைத்திரி - மகிந்த இருவரும் உண்மையிலேயே பிரிந்து நிற்கிறார்களா? அல்லது நடிக்கிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி வந்து போகிறது..!

ஒருவேளை எதிா்க்கட்சி என்று ஒன்று இல்லாமல் செய்வதற்கு பாேடுகிற நாடகமாே? 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி மகிந்தவுடன் ஒரு அண்டஸ்டாண்டிங்கில் இருப்பதாக சந்தேகிக்கும் அனைவர்க்கும்,

சந்திரனில் மனிதன் இறங்கவே இல்லை, பூமி தட்டைதான், இலுமினாலே எனும் ஒரு குழுவே உலகை ஆளுகிறது, இப்படி இன்னும் இதுபோல, நியாமனா, நம்பக்கூடிய பல சந்தேகங்கள் உலகில் உலா வருகிறது. உங்கள் மேலான நேரத்தை அதிலும் செலவிட வேண்டுகிறேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா, பிரபா, உமா, கருணா,மாத்தையா, நாபா, சிறீ யாருமே உண்மையாக பிரியவில்லை. ஒரு மெகா பிளான் படி பிரிந்தது போலவும், சிலர் இறந்தது போலவும் நடிக்கிறார்கள். கதை முடிவில் எல்லாரும் ஒன்றாய் சேரும் போதுதான் மர்ம முடிச்சு அவிழும்.

மீதியை வெள்ளித்திரையில் காண்க.

தமிழில் ஒரு பழமொழி ஒன்று சொல்லவாங்கள்... முள்ளந்தண்டுக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறது என்று....

அது தான் நினைவுக்கு வருகிறது....  

சிங்களவனை எப்போதும் சந்தேகக் கண்னோடு பார்ப்பதே தமிழர்களுக்கு நன்மை.... 

" சந்தேகப்படு ஏமாற்றப்படமாட்டாய்  "

நாங்கள் எப்போதும் நடந்து முடிந்தவற்றைப்பற்றிப் பேசுவோம் தர்க்க ரீதியில் நடைமுறையில் எம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப்பற்றி பேச மாட்டோம். அப்படிப் பேசுபவர்கள், செயற்பட நினைப்பவர்கள் விமர்சனம் என்று கூறி அவர்கள் மீது சேறடிப்போம்.

திக்கெட்டும் சிதைந்து நிற்போம்... வேசத்துக்கு திசைகள் வேறெனினும் இலக்கு ஒன்று என்று கதை விடுவோம்... 

Edited by Nitharsan

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டவரை "மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்" என்று தான் சொல்வார்கள். முள்ளந்தண்டு என்பது ஒரு கலைச்சொல், இது 1940 க்குப் பின்பே தமிழில் வழக்கில் வந்திருக்கும், பழமொழியில் இருக்கும் என்று நினைக்கவில்லை.

நீங்கள் சொன்ன மிச்சத்துடன் 100% அக்ரீட். ஆனால் ஓவர் சந்தேகம் ஒரு மனப்பிறழ்வு. நான் நினைக்கிறேன் ஒரு சமூகமாக எமக்கு இந்த ஓவர் சந்தேக நோய்ப் பீடிப்பு இருக்கும் எண்டு.

Edited by goshan_che

சோகமான உண்மை என்னவெனில் தமிழர்களுக்குள்ளேயே எமது போராட்டத்தின் நியாயத்தை தெளிவுபடுத்தவேண்டிய தேவை இன்னும் இருக்கிறதால்... வெளிநாட்டு அல்லது மேற்கு நாடுகளுக்கு எப்படி புரிய வைக்க முடியும்...! அவர்கள் புரிந்து கொண்டாலும்  தமிழர்கள் சிலர் இன்னும் புரிய மாட்டேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன? ----நிதர்சன் .

எமது போராட்டத்தின் நியாயத்தை தமிழர்களுக்கே தெளிவு படுத்த வேண்டிய தேவை இன்னும் இருக்கு ?

மேற்குலக  நாடுகளுக்கு எப்படி புரியவைக்க முடியும் ?

இந்த இரண்டு தரப்புகளுக்கும் மிக தெளிவாக எமது பிரச்சனை தெரியும் ஆனால் நீங்கள் நினைப்பது போல எமது பிரச்சனையை அவர்கள் நினைக்காததால் அவர்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் .

ஒரு மேற்குலக இலங்கைக்கான இராஜதந்திரியை சந்தித்தால் எமது இனப்பிரச்சனையில் அவர்களுக்கு இருக்கும் அறிவும் ,எமது அரசியல் பொருளாதார புவியியல் பற்றிய விபரமும் எப்படி இவ்வளவும் தெரியும் என்று வியப்பீர்கள்.

இரண்டாவது தமிழர்களுக்கே என்று என்னைத்தான் நோக்கி வந்தது -

நான் அமைப்பில் சேர்ந்து சில மாதங்களிலேயே லண்டன் மட்டும் இல்லை இங்கிலாந்திற்குள் நடக்கும் கூட்டங்களில் தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றியும் எமது அமைப்பின் அரசியல் பற்றியும் பேச வைத்துவிட்டார்கள்  .பின்னர் ஒல்லாந்து ,பிரான்ஸ் சென்று கூட எமது அமைப்பின் சார்பில் சில கலந்துரையாடல்கள் வைத்தேன் (1984). பின்னர் இந்தியா செல்ல டெல்கிக்கு அனுப்பி எமது பிரச்சனை பற்றி பிரச்சாரம் செய்ய வெளிநாட்டு ராஜதந்திரிகள் ,பத்திரிகையாளர்கள் ,இந்திய அரசியல்வாதிகள் ,பத்திரிகையாளர்கள் ,பின் சென்னை திரும்பி அரசியல் பாடசாலை வகுப்பு , அதைவிட பத்திரிகையாளர்கள் பலரை சந்தித்தேன் .

பத்திரிகையாளர்கள் -மார்க் ரேலி -பிபிசி ,ஏறிக் சில்வர் -கார்டியன் ,சந்திரசேகர் -பி டி ஐ,  ஜி கே ரெட்டி  -இந்து ,பட்னிஸ் ஸ்டேட்ஸ்மன்,பகவான்சிங் -மலையாள மனோரமா .

பல வெளிநாட்டு தூதுவர்கள்- அமெரிக்க ,இங்கிலாந்து ,கனடா ,பிரான்ஸ் உட்பட 

அரசியல்வாதிகள் -பண்டாரி ,கல்யாணசுந்தரம்  ,வைகோ உட்பட பலர் 

எமது பிரச்சனை என்னவென்று எனக்கு தெரியாமலா இவ்வளவு பேரையும் சந்திக்க என்னை தேர்ந்தெடுத்தார்கள் .

சிலவேளை இனப்பிரச்சனை பற்றி எனக்கு தெரிந்தாலும் புலிகளின் போரட்டத்தின் நியாயம் எனக்கு விளங்கவில்லை என்று சொன்னீர்களோ தெரியாது .

அந்த நியாயம் கூட நீங்கள் சொல்லும் நியாயமும் நாங்களும் சர்வதேசமும் சொல்லும் நியாயமும் வேறு வேறு .அந்த புரிதல் தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் .

தமிழ்நெட் எடுத்த பிரங்கஸ் ஹாரிசன் பேட்டி பார்க்கவும் . பேட்டி எடுத்தவர் வாயை கொடுத்து நன்றாக வாங்க்க்கிக்கட்டிகொண்டார் .அவருக்கும் வயது அதிகம் இல்லை அதையெல்லாம் விளங்க இன்னமும் காலம் இருக்குத்தானே .

தமிழ்நெட் எடுத்த பிரங்கஸ் ஹாரிசன் பேட்டி பார்க்கவும் . பேட்டி எடுத்தவர் வாயை கொடுத்து நன்றாக வாங்க்க்கிக்கட்டிகொண்டார் .அவருக்கும் வயது அதிகம் இல்லை அதையெல்லாம் விளங்க இன்னமும் காலம் இருக்குத்தானே? 

உங்கள் அனுபங்களை பார்த்தால் நீங்களும் பெரிய யாம்பவான் மாதிரிக்கிடக்கே? 

எல்லாம் உமைதானா?  :)

கோபிக்கவேண்டாம் சும்மா தான் கேட்டேன்.

உங்கள் அனுபங்களை பார்த்தால் நீங்களும் பெரிய யாம்பவான் மாதிரிக்கிடக்கே? 

எல்லாம் உமைதானா?  :)

கோபிக்கவேண்டாம் சும்மா தான் கேட்டேன்.

எனக்கே எழுத கேவலமாக இருந்தது ஆனால் கடந்த இருபது வருடங்கள் முழுக்க தங்களை விமர்சிப்பவன் அரசுடன் அல்லது எதுவும் தெரியாதவன் என்ற நிலைக்கு அடுத்த புலம்பெயர்ந்த தலைமுறையை உருவாகிவிட்டார்கள் .ஒரு வட்டம் திரும்ப திரும்ப கொடி பிடிப்பதும் மாவீரர் நாள் கொண்டாடுவதும் வாராவாரம் மண்டபம் எடுத்து உணர்சி பொங்க கலை நிகழ்சிகள் வைப்பதுதான் விடுதலை போராட்டம் என்ற நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள் .

பையில காசு வாயில தோசை என்றால் என்னவென்று பாவம் அவர்களுக்கு எப்படி தெரியும் .

வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும்.
 
விடுதலை போரை தான்கியத்தில் இருந்து அதில் இருந்து இன்று மக்கள் மீண்டும் எழுதிருக்கவவும் அவர்கள்தான் பாடு படுகிறார்கள். தம்மால் முடிந்ததை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
 
நீங்கள் 1985இல் இருந்து இப்படியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
  
அதை புடுங்கினேன் ..... இதை புடுங்கினேன் என்று புடுன்குபவர் சொல்லகூட்டது.
ஊர் சொல்லவேண்டும். 

கடந்த 20 வருடங்களாகவே புலிகள் மீதுள்ள எதிர்ப்பு காழ்ப்புணர்ச்சியை மட்டும் இங்கு கொடுப்பவர்கள் தம்மை விமர்சகர்களாம். விமர்சனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா இவர்களுக்கு. புலிகள் இழைத்த தவறுகளை விமர்சிப்பதை விட புலிகள் மீதுள்ள காழ்புணரச்சியால் மட்டும் வக்கிரத்தை கொடுப்பவர்கள் அநாகரீகமானவர்கள் தம்மை விமர்சகர்களாம். விமர்சனம் என்பது ஒரு விடயத்தை அல்லது செயலை, அமைப்பின் நடவடிக்கைகள் குறித்தான நேர்மறை எதிர்மறை கருத்துக்களை கூறி அதை எடை போடுவது ஆகும். தனக்கு ஒரு அமைப்பை பிடிக்கவில்லை என்பதற்காக தனது கோபத்தை கொட்டுவது தனிப்பட்ட ஒருவரின் ஆத்திரமாக இருக்கும். அது எல்லோருக்கும் பொருந்தும். மகிந்தவை அவர் மீதான காழ்புணர்ச்சியால்ஒருவர் திட்டி தீர்த்தால் அவருக்கும் இது பொருந்தும். இதே மகிந்த அல்லது மைத்திரிபால நாளைக்கே தமிழ் மக்களுக்கு உரித்தான கணிசமான உரிமைகளை வழங்கி நீதியான சமாதானத்தை ஏற்படுத்தினால் அவர்களின் குற்றங்களை மறந்து அவர்களை பாராட்டவும் தயங்ககூடாது அதேவேளை தமிழர்களாக இருந்தாலும் தமது தனிப்பட்ட காழ்புணர்வால் தாய் மண்ணுக்காக வீழ்ந்த எமது மாவீர்களை இகழும் சில கயவர்களை இனம் கண்டு அவர்களின் முகமூடிகளை கிழித்து அவர்களை இனம் காட்டவும் தயங்ககூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
அா்ஜூன் உங்களை யாரும் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை். நீங்கள் உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணா்ச்சியைக்காெட்டி மதிப்பைக் குறைத்துக் காெள்கிறீா்கள். நிழலி கூறியது உண்மை. உங்கள் தூக்கப் பாசாங்கைக் களையாவிட்டால் ஒரு நாள் நீங்கள்தான் வருத்தப்படுவீா்கள். 
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.