Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்க் ஆக்கள் கொடி பிடிக்கப்படாது. தேசிய தலைவரின் படம் வைச்சிருக்கப்படாது.. என்று ஒரு சட்டமும் கிடையாது. அவர்களும் இதே தமிழ் சமூகத்தின் இளைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான். அவர்களிடம் தாயகப் பற்று இருக்கப்படாது.. இருக்காது என்பது எல்லாம்.. ரெம்ப ஓவர்.  அவர்களும் ஜனநாயக நாடுகளின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குரிய உரிமையை எவரும் தட்டிப்பறிக்க முடியாது.

சும்மா அகதியா வந்திட்டு.. இல்ல கலியாணம் கட்டி வந்திட்டு..புள்ள குட்டி பெத்துக்கிட்டு.. தானும்.. தன் உழைப்பும்.. தன் பாடும்.. தலைவர் என்ன.. அரசியல் என்ன.. அதெல்லாம் நமக்கெதுக்கு என்று வாழும் சாதாரண அடிமட்ட மக்களை விட இந்த இளைஞர்கள் தாயகத்தையும்.. தமிழையும் அதிகம் நேசிப்பதை அவதானிக்க முடிகிறது.

அவர்களிடம் சில சமூகவிரோத செயற்பாடுகள்.. வாழும் சூழலின் பாதிப்பால் ஏற்பட்டிருந்தாலும்.. அவர்களுக்குள்ளும்.. ஒரு நல்ல பக்கம் உள்ளது. அந்த நல்ல பக்கச் செயற்பாடுகளை வரவேற்பதன் மூலம்.. அவர்கள் சரியான திசையில் பயணிக்க வழிகாட்ட முடியும். அந்த வகையில்.. அவர்களின் இந்த தாயகப் பற்றை.. தலைவர் மேலான அன்பை வரவேற்பதோடு.. தலைவர் காட்டிய நல்வழியில் நடக்க கோருவது சாலப் பொருந்தும்.

எத்தனையோ முன்னாள் இயக்க ஆட்கள்.. இன்று தலைவரை மதிக்காமல்.. நடந்து கொள்வதை இங்கு யாழிலேயே காண்கிறோம். ஆனால் இயக்கத்தின் சத்தியப்பிரமானத்தின் படி அப்படி நடக்கக் கூடாது. இந்த முன்னாள் இயக்கம் என்ற அடைமொழியை பாவிக்கிற ஆக்கள் எல்லாம் திறம் என்று கிடையாது. சுத்த போக்கிரிகளும்.. பித்தலாட்டக்காரர்களும்.. காட்டிக்கொடுப்பாளர்களும் அதுக்குள்ள தான் இருக்கினம்.

இயக்கத்தை விட்டு துரத்தி அடிக்கப்பட்டதுகள் மற்றும்.. இயக்கத்தில் ஒரு சாட்டுக்கு இருந்திட்டு அதை.. வெளிநாட்டில.. அசைலம் அடிக்க பாவிச்சதுகள்.. எல்லாம் முன்னாள் இயக்கம் என்ற அடைமொழியோடு... தலைவரை.. தாயகத்தை.. மதிக்காது எவ்வளவோ காரியம் பண்ணிக்கிட்டு திரியினம். அவர்களோடு ஒப்பிடும் போது..???! இந்த இளைஞர்கள் எவ்வளவோ மேல்...! சில முன்னாள் இயக்க ஆக்களின் பேஸ்புக் கணக்குகளில் உள்ள படங்களை போட்டால்.. யாழ் நாறும்.

அப்படிப்பட்டவர்களால்... இந்த இளைஞர்களின் தாயக உணர்வை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்கலாம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • Replies 130
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு பண்ணி கொண்டு குடிப்பது பின்னர் தங்கள் புலி பிள்ளை என்பது வெறி ஏற தமிழனுக்கே அடிப்பது காசு கேட்பது .... :icon_idea:

சுபேசின் நண்பர்கள் கூட அதில் உள்ளார்களாம் அதிர்ச்சி :D

558555_349427055148419_2128272955_n.jpg?

அப்பு அஞ்சரா ... எல்லாரும் சுபேஷ்சோட சிநேகிதர்..ஆளாளுக்கு நடு விரலை வேறை கட்டுறாங்கள் . பார்த்து சூதானமா நடந்துக்கப்பு ..

  • கருத்துக்கள உறவுகள்

கண்ட பாட்டுக்கு யாரும் புலிக் கொடியை போர்த்தி இருந்தால் உடனே அவர்கள் படத்தை இணைக்கிறது.ஆதாரம் கேட்டால் நொண்டிச் சாட்டுகள் சொல்லி சலாப்பிறது...நான் ஏன் ஆதாரம் காட்ட வேண்டும் நானா சொன்னேன்?...நான் என்ட முதலாவது கருத்திலேயே அவர் சொன்னார் என்று தான் எழுதியிருந்தேன்.சலாப்பிறத்திற்கும் ஒரு அளவு இருக்கு.அவர்கள் குற்றமற்றவர்கள்,அவர்களை உங்களுக்கு தெரியுமென்டால் நீங்கள் முதலில் நிருபீயுங்கோ

:lol: :lol: இது சிறிலங்காவின் பயங்கரவாதத் தடைச்சட்டம் மாதிரி இருக்கு! "சுற்றவாளி என்று நிரூபிக்கும் பொறுப்பு குற்றஞ்சாட்டப் பட்டவரினுடையது" என்று தான் அந்தச் சட்டம் கூறுகிறது. இதனால் தான் பல தமிழர்கள் காலவரையறை இன்றி சிறையில்! பிரிட்டிஷ் முறைக்கு மாறுங்கோ ரதி, அஞ்சரனோ அல்லது அஞ்சரன் சொன்னதை "நம்பும்" நீங்களோ தான் ஆதாரம் தர வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா தயவு செய்து எழுத வேண்டும் என்பதற்காக எழுதாமல் ஒரு திரியில் என்ன எழுதியிருக்குது என வடிவாக வாசித்து விட்டு கருத்து எழுதவும்...அவர்களை பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என யாராவது இத் திரியில் எழுதினார்களா?...தேசியம் வளர்க்கிறோம் என பெரும் நிதி மோசடிகளில் ஈடுபடுவோரை ஆதரிக்கும் உங்களுக்கு இவர்கள் குற்றமற்றவர்களாகத் தான் தெரியும்...ஆனால் நாளைக்கே பிரான்சில் இவர்கள் இன்னொரு கொலையோ,கொள்ளை செய்திருந்தாலும் தயது செய்து இவர்களை பற்றி நீங்கள் குறை சொல்லக் கூடாது என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...அவர்களை குற்றம் சாட்ட உங்களுக்கு எந்த அருகதையும் இருக்காது என சொல்லிக் கொள்கிறேன்

ரதி

சரியாகவே  எழுதியுள்ளேன்....

முதலில் நான் எங்கு அவர்களை  ஆதரிப்பதாக எழுதியுள்ளேன் என்று காட்டவும்.

தலைவர் பிறந்தநாளை  செய்ய  எல்லோருக்கும் உரிமையுண்டு

அத்துடன் எவரையும்  படங்களை  இவ்வாறு பகிரங்கப்படுத்தி

இவ்வாறு இணையங்களில் எழுதுவதற்கு எனக்கு உரிமையில்லை என  எழுதியுள்ளேன்

மேலும் இவர்களில் எவர் எவர் என்ன என்ன குற்றங்கள் (களவு கொலை..... செய்தார்கள் என்று எனக்குததெரியாது)

உங்களுக்குத்தெரிந்தால் காட்டவும். அப்பொழது நிச்சயம் கண்டிப்பென்

பொதுவாக இவ்வாறு முகநூலில் உள்ள படங்களைப்போட்டு

எல்லோரும் கள்ளர் கொலைக்காரர் என்பது சரியன்று

உங்கள் அண்ணன்  தம்பிகள் இதற்குள் இருந்தால் இவ்வாறு எழுதுவீர்களா......?

ஆனால் நான் அதைத்தான் முதலில் யோசிப்பேன்...

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகளிலிருந்து பாடங்களைப்படிக்கணும்

பிரான்சில் 90 களில் சில இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து நடனம் பழகினர்.

அவர்கள் தேநீர்க்கடைகளிலும் வீதிகளிலும் கூடி பேசுவார்.

இதை  பார்த்த ஈழமுரசு கயன் (மாவீரர்)  அவர்கள்

அன்றைக்கு பிரபலமாக இருந்த பாடலான முக்காலா முக்காபலா குரூப் என்னும் அடைமொழியை  வைத்து

அவர்கள் பற்றி  ஈழமுரசில் ஒரு கட்டுரை வரைந்தார்.

அதனை பார்த்த மக்கள்

இந்த இளைஞர்களை முக்காலா குரூப் என அழைக்கத்தொடங்கினர்

சில நாட்களில் அவர்களே தங்களுக்கு தாங்களே அதே பெயரைச்சூடிக்கொண்டு

அடிதடி குரூப் ஆனார்கள்

இது தான் பிரான்சின் முதலாவது குரூப்...

இதில் எனது உறவுகளும் இருந்தார்கள்

இன்றும் இருக்கிறார்கள்....

அதையா நாமும் செய்யப்போகின்றோம்..............???

வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவேண்டாமா....??

  • கருத்துக்கள உறவுகள்

"புலிக்கொடியே பிடிக்கக் கூடாது" எண்ட நிலையில இருந்து, "பப்ளிக்கில தண்ணி அடிக்கும் ஆட்கள் புலிக்கொடி பிடிக்க அருகதை அற்றவர்கள்" எண்ட நிலைக்கு வந்திருக்கிறார்கள் எங்கள் "உரத்துத் தேசியம் பேசாத" புத்தி ஜீவிகள்! இது முன்னேற்றமா அல்லது பின்வாங்கலா? இவங்க நல்லவங்களா கெட்டவங்களா? ஒன்னும் புரியல! :rolleyes:

மேலும், அஞ்சரன், இந்தப் படத்தில் இருக்கிற நபர்கள் பரிதி கொலைக்குக் காரணர்கள் என்று பிரெஞ்சுப் பொலிசுக்குச் சொல்லி உதவ மாட்டீர்களா? ஆதாரம் இருக்கிறதே உங்களிடம்? ஏன் நீதியை தாமதப் படுத்துவான்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகளிலிருந்து பாடங்களைப்படிக்கணும்

வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவேண்டாமா....??

உங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் விசுகர்! :D

  • கருத்துக்கள உறவுகள்

"புலிக்கொடியே பிடிக்கக் கூடாது" எண்ட நிலையில இருந்து, "பப்ளிக்கில தண்ணி அடிக்கும் ஆட்கள் புலிக்கொடி பிடிக்க அருகதை அற்றவர்கள்" எண்ட நிலைக்கு வந்திருக்கிறார்கள் எங்கள் "உரத்துத் தேசியம் பேசாத" புத்தி ஜீவிகள்! இது முன்னேற்றமா அல்லது பின்வாங்கலா? இவங்க நல்லவங்களா கெட்டவங்களா? ஒன்னும் புரியல! :rolleyes:

தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை தங்கள் சுயநலத்திற்குப் பாவிப்பதைப் பற்றிய விமர்சனமாக ஏன் பார்க்கக்கூடாது.

இவர்கள் இளையோர் அமைப்பைச் சார்ந்தவர்களா? MPK என்றால் என்னவென்று தெளிவாகத்தானே சொல்லப்பட்டிருக்கு. அதற்கு மேலாலும் படத்தை இணைத்தவர் தன்னை Thug என்றுதானே புளகாங்கிதமாக முகநூலில் அழைத்துக்கொள்கின்றார். அதையும் ஆரம்ப கால இயக்கங்கள் எல்லாம் சண்டியர் கூட்டத்தில் இருந்துதானே உருவானார்கள் என்று சமாளிக்கப் பார்க்கலாம். ரெலோ தாஸ் கூட அடிப்படையில் ஒரு சண்டியன்தான் என்று நானே சொல்லிக்கொள்கின்றேன்.

ஒருநாள் மட்டும் கொடியைத் தூக்கிப் பிடித்து தங்களைப் பிரபல்யத்தைத் தேடிவிட்டு பின்னர் தேசியத்திற்கு எதுவும் செய்யாமல் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்படி இல்லையென்றால் சாதித்த பட்டியல்களைப் போடுங்கள். அதனால் அரசியலில் கிடைத்த நன்மைகளைச் சொல்லுங்கள். இது எதுவும் கிடையாது. வெறும் அடையாள அரசியல்தான் இப்போது நடக்கின்றது.

Edited by கிருபன்

  • தொடங்கியவர்

இந்த திரி ஆரம்பித்த பின்னர் தான் கிருபன் அண்ணா இவர்களையே பார்த்துள்ளார்.

அதற்குள் இவர்கள் மற்றைய நாளில் எதுவும் செய்வதில்லையாம் என்று கூறுகிறார்.

செம கொமடி. :D

"இந்தக்கொடியை படித்த பண்பானவர்கள் பிடித்தால் "நீங்கள் கொடிபிடிக்கத்தான் லாயக்கு" என்று ஒரு கருத்து வரும். அவர்கள் ஒதுங்கிப் போனால் வெற்றிடத்தை காற்றுதான் நிரப்பும். இதில் காற்றை குறைசொல்ல முடியாது".

கேள்வி கேட்க முதலே பதில இசை சொல்லிட்டாப்ல! :icon_idea:

  • தொடங்கியவர்

ஆளாளுக்கு நடு விரலை வேறை கட்டுறாங்கள் . பார்த்து சூதானமா நடந்துக்கப்பு ..

நீங்கள் சுட்டிக்காட்டிய படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களையே அனைவரும் நீட்டியுள்ளார்கள். நடுவிரல் மட்டும் காட்டப்பட்டது போல் தென்படும் படத்தில் பெருவிரலும் நீட்டப்பட்டது என் கண்ணுக்கு தெரிகிறது. படத்தை உற்று பார்க்கவும் அல்லது பெரிதாக்கி பார்க்கவும்.

அவர்களுக்குள்ளும்.. ஒரு நல்ல பக்கம் உள்ளது.

"தேசக்காற்று MPK boys உதவி மையம்" என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஆரம்பித்த பின்னர் தான் கிருபன் அண்ணா இவர்களையே பார்த்துள்ளார்.

அதற்குள் இவர்கள் மற்றைய நாளில் எதுவும் செய்வதில்லையாம் என்று கூறுகிறார்.

செம கொமடி. :D

மற்றைய நாளில் தங்கள் அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்றுதான் சொல்லியுள்ளேன். எதுவும் செய்வதில்லை என்று சொல்லவில்லையே லோயர் டுல்ஸி.

அவர்களோடு முகநூலினூடாகத் தொடர்பில் இருக்கும் உங்களுக்கு (படங்களை இணைத்ததால் சொல்லுகின்றேன்) அவர்கள் மற்ற நாட்களில் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியலாம். ஏதாவது பிரயோசனமானது என்று நீங்கள் நினைத்தால் வழக்கம் போல இணைத்துவிடுங்கள்.

அதுவரை மற்றவர்கள் இந்தக் கொமடியைக் கண்டுகளிக்கவும்.

https://www.youtube.com/watch?v=mavPU_PcMhs

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சுட்டிக்காட்டிய படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விரல்களையே அனைவரும் நீட்டியுள்ளார்கள். நடுவிரல் மட்டும் காட்டப்பட்டது போல் தென்படும் படத்தில் பெருவிரலும் நீட்டப்பட்டது என் கண்ணுக்கு தெரிகிறது. படத்தை உற்று பார்க்கவும் அல்லது பெரிதாக்கி பார்க்கவும்.

"தேசக்காற்று MPK boys உதவி மையம்" என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்கள்.

அப்படியா??

அப்படியானால்

களவெடுத்த  காசில் கொஞ்சம் வீசுகின்றனர்

தமிழனா கொக்கா......

சோடிப்பும்  பிழை பிடிப்பும்  எங்கள் ரத்தத்தில் ஊறியவை... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஹாங்க் ஆக்கள் கொடி பிடிக்கப்படாது. தேசிய தலைவரின் படம் வைச்சிருக்கப்படாது.. என்று ஒரு சட்டமும் கிடையாது. அவர்களும் இதே தமிழ் சமூகத்தின் இளைய சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான். அவர்களிடம் தாயகப் பற்று இருக்கப்படாது.. இருக்காது என்பது எல்லாம்.. ரெம்ப ஓவர்.அவர்களும் ஜனநாயக நாடுகளின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்குரிய உரிமையை எவரும் தட்டிப்பறிக்க முடியாது.

சும்மா அகதியா வந்திட்டு.. இல்ல கலியாணம் கட்டி வந்திட்டு..புள்ள குட்டி பெத்துக்கிட்டு.. தானும்.. தன் உழைப்பும்.. தன் பாடும்.. தலைவர் என்ன.. அரசியல் என்ன.. அதெல்லாம் நமக்கெதுக்கு என்று வாழும் சாதாரண அடிமட்ட மக்களை விட இந்த இளைஞர்கள் தாயகத்தையும்.. தமிழையும் அதிகம் நேசிப்பதை அவதானிக்க முடிகிறது.

அவர்களிடம் சில சமூகவிரோத செயற்பாடுகள்.. வாழும் சூழலின் பாதிப்பால் ஏற்பட்டிருந்தாலும்.. அவர்களுக்குள்ளும்.. ஒரு நல்ல பக்கம் உள்ளது. அந்த நல்ல பக்கச் செயற்பாடுகளை வரவேற்பதன் மூலம்.. அவர்கள் சரியான திசையில் பயணிக்க வழிகாட்ட முடியும். அந்த வகையில்.. அவர்களின் இந்த தாயகப் பற்றை.. தலைவர் மேலான அன்பை வரவேற்பதோடு.. தலைவர் காட்டிய நல்வழியில் நடக்க கோருவது சாலப் பொருந்தும்.

எத்தனையோ முன்னாள் இயக்க ஆட்கள்.. இன்று தலைவரை மதிக்காமல்.. நடந்து கொள்வதை இங்கு யாழிலேயே காண்கிறோம். ஆனால் இயக்கத்தின் சத்தியப்பிரமானத்தின் படி அப்படி நடக்கக் கூடாது. இந்த முன்னாள் இயக்கம் என்ற அடைமொழியை பாவிக்கிற ஆக்கள் எல்லாம் திறம் என்று கிடையாது. சுத்த போக்கிரிகளும்.. பித்தலாட்டக்காரர்களும்.. காட்டிக்கொடுப்பாளர்களும் அதுக்குள்ள தான் இருக்கினம்.

இயக்கத்தை விட்டு துரத்தி அடிக்கப்பட்டதுகள் மற்றும்.. இயக்கத்தில் ஒரு சாட்டுக்கு இருந்திட்டு அதை.. வெளிநாட்டில.. அசைலம் அடிக்க பாவிச்சதுகள்.. எல்லாம் முன்னாள் இயக்கம் என்ற அடைமொழியோடு... தலைவரை.. தாயகத்தை.. மதிக்காது எவ்வளவோ காரியம் பண்ணிக்கிட்டு திரியினம். அவர்களோடு ஒப்பிடும் போது..???! இந்த இளைஞர்கள் எவ்வளவோ மேல்...! சில முன்னாள் இயக்க ஆக்களின் பேஸ்புக் கணக்குகளில் உள்ள படங்களை போட்டால்.. யாழ் நாறும்.

அப்படிப்பட்டவர்களால்... இந்த இளைஞர்களின் தாயக உணர்வை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்கலாம். :icon_idea::)

மு.வாய்க்கால் போன்ற பெரிய அவலம் நடந்த நேரத்திலேயே வீட்டில இருந்து கொண்டு கணணியில் மட்டும் வீர வசனம் பேசிக் கொண்டு இருந்த உங்கள மாதிரி ஆட்களுக்கு இந்த பெடியங்கள் செய்தது பெரிய சாதனையாய் தான் இருக்கும். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் அந்த பெடியங்களை கும்பிடத் தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தலைவர் உண்ணாவிரதம் இருக்கும் நாளில் கேக் வெட்டுகிறார்கள் என்று குமுறினார்கள்.

இப்போ இந்த திரியை போட்டதும்  (கூடுதாலாக யோகா செய்வார்களோ?) அப்படியே தலைகீழாக வளைந்து.

யார் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று சொன்னது?
ரவுடிகள் கொடிபிடிப்பதை பிழை என்று சொல்கிறோம் என்கிறார்கள்.

இது ஒரு ஞாபக மறதி பிரச்சனையாக கூட இருக்கலாம் என்பதால். அவர்கள்மீது அனுதாப பட வேண்டுமே தவிர தொடர்ந்தும் கேள்விகள் கேட்டு அவர்களை தொல்லை பண்ணுவது சரியாக படவில்லை.

இங்கு அமெரிக்காவில் இராக் பிரச்சனை தொடங்கியபோது அதை பலரும் எதிர்த்தார்கள். ஏற்கனவே செப்டம்பர் 11ல் நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் போர் என்று அமெரிக்க பொருளாதாரம் ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில் அறிவுள்ளவர்கள் அதை விரும்பவில்லை.
பின்பு இராக் போர் தொடங்கி இராணுவத்தினர் இறந்து இங்கே சடலங்கள் வருபோது.
நீங்கள் போரை எதிர்த்தவர்கள் அஞ்சலி செய்ய உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று ஒரு குருப் இறங்கிச்சு.

அவர்களை அவர்கள் பாட்டில் விடுவதே எனக்கு சரியென பட்டது.
அவர்களுடிய அறிவின் அளவுகோலை அவர்களே அளந்து தெரிவித்தபின்பு. அவர்களுக்கு போய் இறந்த இராணுவத்தினருக்கும் எமக்கும் உள்ள உறவை பற்றி விளங்க படுத்த ஒருபோதும் முடியாது.
மீன் பிடிக்க ஆசைபட்டால் ...... எங்காவது நீர் இருக்கும் இடத்திகே போகவேண்டும். பாலைவனத்தில் வலை வீசலாம் தந்திரமாக தூண்டில் போடலாம் பலாபலனில் மாற்றம் வர போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மருது ஏதோ சொல்லியிருக்கின்றார். அதனை வாசித்துக் கிரகிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு வர இன்னும் காலம் இருக்கின்றது. எனவே இப்போதைக்கு பாராட்டியுள்ளார் என்று எடுத்துக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மு.வாய்க்கால் போன்ற பெரிய அவலம் நடந்த நேரத்திலேயே வீட்டில இருந்து கொண்டு கணணியில் மட்டும் வீர வசனம் பேசிக் கொண்டு இருந்த உங்கள மாதிரி ஆட்களுக்கு இந்த பெடியங்கள் செய்தது பெரிய சாதனையாய் தான் இருக்கும். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் அந்த பெடியங்களை கும்பிடத் தான் வேண்டும்.

நீங்கள் இதை ஒருவரிட்டைக் கேட்ட படியால் நான் கேக்கிறன்! நீங்கள் எங்க நிண்டனியள் முள்ளி வாய்க்கால் அவலம் நடக்கேக்க? வன்னியிலயா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதை ஒருவரிட்டைக் கேட்ட படியால் நான் கேக்கிறன்! நீங்கள் எங்க நிண்டனியள் முள்ளி வாய்க்கால் அவலம் நடக்கேக்க? வன்னியிலயா? :rolleyes:

நான் வன்னியில இல்லாட்டிலும் வீட்டில இருந்து கொண்டு கணணியில் அரசியல் செய்து கொண்டு இருக்கேல்ல

  • கருத்துக்கள உறவுகள்

மூலம்  குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால் என்னால் நீக்கப்பட்ட மறைக்கப்பட்ட  அந்த திரியில் அஞ்சரன் எழுதிய பதில் இது. இத் திரி சரியான மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளமையால் இதனை  இங்கு மீள பிரசுரிக்கின்றேன்.

------

நிழலி... அதை,

மீள இணைக்கும்,போது....

அதில் எழுதிய, எனது கருத்தையும் இணைப்பது தானே.... நியாயம்.

எனது கருத்தை, ஏன் மீண்டும் இணைக்கவில்லை?

நாங்கள், என்ன... வேலை, வெட்டி, குடும்பம், குட்டி இல்லாமலா....

இங்கு, கருத்து.... எழுத வாறம்.

  • கருத்துக்கள உறவுகள்

மு.வாய்க்கால் போன்ற பெரிய அவலம் நடந்த நேரத்திலேயே வீட்டில இருந்து கொண்டு கணணியில் மட்டும் வீர வசனம் பேசிக் கொண்டு இருந்த உங்கள மாதிரி ஆட்களுக்கு இந்த பெடியங்கள் செய்தது பெரிய சாதனையாய் தான் இருக்கும். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் அந்த பெடியங்களை கும்பிடத் தான் வேண்டும்.

பார்ரா.. முள்ளிவாய்க்கால் நேரத்தில இந்து சமுத்திரத்தில கட்டவுட் போட்டு போராளிகளை மீட்ட மூஞ்சி ஒன்னு.. எங்களை பார்த்து கருத்துச் சொல்லுறதை. நீங்க எங்க கிடந்தீங்கன்னு.. முதல்ல நினைச்சுப் பாருங்க. லண்டன் வீதிகளில் நடந்த போராட்டத்தில் தன்னும் இறங்கினீங்களோ.. ஐயுறவு..!

யாழ் களம் முன்னெடுத்த வணங்கா மண் உதவித் திட்டத்தில் கூட பங்கெடுக்காத ஆள் நீங்க.

மொதல்ல.. உங்க முதுகு ஊத்தையை உரசிக் கழுவிட்டு.. அடுத்தவன் முதுகை விமர்ச்சிக்க முனையுங்க. இல்ல அசிங்கமாயிடும். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் வன்னியில இல்லாட்டிலும் வீட்டில இருந்து கொண்டு கணணியில் அரசியல் செய்து கொண்டு இருக்கேல்ல

சரி, இதை ஊகித்தேன். யார் யார் என்ன செய்யலாம் என்று சொல்ல நீங்கள் யார் ரதி? ஒருவர், அது நெடுக்கோ யாரோ, இணையத்தில் அரசியல் மட்டும் செய்யட்டும், அல்லது அரசியலும் செய்து சமூக செயல்பாடும் செய்யட்டும். யார் என்ன செய்யலாம் என்று வரையறை செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? எந்தத் தேர்தலில உங்களுக்கு இந்த நாட்டாமை வேலைக்கான மக்களாணை கிடைத்தது?  இந்தத் திரியில் உங்கள் கருத்துகள் எல்லாமே "நான் மற்றவனை விட கொஞ்சம் உசத்தியான நடத்தையுள்ளதால் மற்றவனைக் கேள்வி கேட்பேன்" என்ற தொனியில் இருப்பதால் இதைச் சொல்கிறேன். தனிப்பட்ட ரீதியில் ஒன்றும் இல்லை! :)

நான் எங்கே மற்றவரைப் பார்த்து அதைச் செய்,இதைச் செய் என்று எழுதினேன்.காட்டுங்கள் பார்ப்போம். அவர் தான் முதலில் என்ன எழுதுவது என்று தெரியாமல் சக உறவுகளை தாக்கி எழுதியிருந்தார். அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையாயின் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பவும் வாசியுங்கோ...அது அப்படி என்ன மற்றவரை விட நான் உசத்தி என்ட மாதிரி கேள்வி கேட்டுட்டேன்?...சுட்டிக் காட்டுங்கள் பார்ப்போம்....உங்கள் போன்றோருக்கு உண்மையைச் சொன்னால் கோபம் பொத்திக் கொண்டு வருகுதோ:D

  • கருத்துக்கள உறவுகள்

நான் வன்னியில இல்லாட்டிலும் வீட்டில இருந்து கொண்டு கணணியில் அரசியல் செய்து கொண்டு இருக்கேல்ல

இது...

  • கருத்துக்கள உறவுகள்

"தேசக்காற்று MPK boys உதவி மையம்" என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறார்கள்.

உண்மை தான் துளசி.

இங்கு லண்டனிலும்.. ஹாங்க் என்று தங்களுக்குள் போட்டி போட்டு அடிபட்டுக் கொண்டாலும்.. தாயகம்.. என்று வருகின்ற போது.. இந்த இளைஞர்கள்.. வேற்றுமை மறந்து செயற்படுவதை காணக் கிடைத்திருந்தது. இளைஞர்களுக்குரிய சேட்டைகள் குழப்படிகள் இருந்தாலும்.. அவர்களின்.. நெஞ்சங்களில்.. தங்களின் துணிச்சலை தாயகம்.. போராட்டம் சார்ந்து தரனும் என்ற ஆர்வம் உள்ளதை அவதானிக்க முடிந்தது.

முன்னர் இவர்களை விட்டு தூர இருந்த காலங்களில்.. எங்களுக்கும் இவர்கள் தொடர்பில்.. தவறான பல அபிப்பியாரங்களை விதைக்கக் கூடிய கருத்துக்கள் சொல்லப்பட்டிருந்தன. அவர்களை நெருங்கி பழகின்ற போது தான்.. இந்த இளைஞர்களுக்குள் உள்ள நல்ல பக்கங்களை.. அறியவும் முடிந்தது.

முழுக்க முழுக்க ஆங்கில மொழியில் கல்வி கற்ற இவர்களில் பலர்.. இன்று சிறந்த தமிழ் பாடல்களை வழங்கும் நிலைக்கு வந்துள்ளார்கள். இளையோரின் சுவைக்கு ஏற்ப அதனை கொண்டு வருவதையும் பார்க்கிறோம். இடைக்கிடை இளைய குறும்புகளோடு பாடல்கள் வந்தாலும்.. ஊரில் இருந்து வந்து இங்கு குடும்பமாகிக் குந்தினர்வர்களை விட இவர்கள் எவ்வளவோ செய்கிறார்கள். உண்மையில் அது பாராட்டத்தக்கது.

நல்லதை இனங்காட்டி இவர்களை பாராட்டாமல்.. ஒரே தூற்றி அவர்களை கெட்ட வழியில் இனங்காட்டிக் கொண்டிருப்பதும் எமது சமூகத்தின் தாயகத்தில் இருந்து வந்த குழுமத்தின் கெடு செயலாகும். இந்த இளைஞர்களை நல்ல வழிக்கு கொண்டு வர இந்த அடையாள அரசியலை ஒரு மார்க்கமாகக் கூட பயன்படுத்தலாம். ஆனால்.. எத்தினை பேரிடம் அதற்கான வழிகாட்டல்கள் இருக்க முடியும்.

அண்மையில்.. ஒரு இளைய குழுவினருடன்.. பேசக் கிடைத்தது. ஒரே பெட்டை.. காதல் என்று.. பாடல்களை இயற்றி ஏற்றாமால்.. தாயகம் விடுதலை என்றும் இயற்றி உங்கள் உணர்வுகளை இளைய சமூகத்தில் விதையுங்கள் என்று அறிவுரை சொன்ன போது.. மிகவும் ஆர்வத்தோடு அதனை செவிமடுத்ததோடு.. இப்போ அதற்கான முயற்சிலும் ஈடுபட்டுள்ளார்கள். இந்த இளைய சமூகத்தின் போக்கறிந்து அவர்களின் சக்தியை பயன்படுத்தத் தெரியாத எமது மூத்தோரால் தான்... இந்த இளைய சமூகம் வீணடிக்கப்படுகிறது.. என்பதே உண்மை.

அதனை யாழிலும் சிலர் செய்ய விளைவது கவலை அளிக்கிறது. அதில் சிலர்.. இங்கு புலம்பெயர் நாடுகளில்.. தாயகத்துக்கு ஒன்றுமே செய்வதில்லை. ஒட்டுக்குழு இணையங்கள்.. ஓணான் இணையங்கள்  வாசிச்சு சீரழிஞ்ச கூட்டம்.. இங்கு வந்து அந்த நச்சுக்களை கொட்டி களிப்புறுகின்றன. செயலும் இல்லை சொல்லும் இல்லாத கூட்டம். அதுகளை விட இந்த இளைஞர்கள் எவ்வளவோ மேல்..!! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கே மற்றவரைப் பார்த்து அதைச் செய்,இதைச் செய் என்று எழுதினேன்.காட்டுங்கள் பார்ப்போம். அவர் தான் முதலில் என்ன எழுதுவது என்று தெரியாமல் சக உறவுகளை தாக்கி எழுதியிருந்தார். அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையாயின் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பவும் வாசியுங்கோ...அது அப்படி என்ன மற்றவரை விட நான் உசத்தி என்ட மாதிரி கேள்வி கேட்டுட்டேன்?...சுட்டிக் காட்டுங்கள் பார்ப்போம்....உங்கள் போன்றோருக்கு உண்மையைச் சொன்னால் கோபம் பொத்திக் கொண்டு வருகுதோ :D

இது...

கண்ட பாட்டுக்கு யாரும் புலிக் கொடியை போர்த்தி இருந்தால் உடனே அவர்கள் படத்தை இணைக்கிறது.ஆதாரம் கேட்டால் நொண்டிச் சாட்டுகள் சொல்லி சலாப்பிறது...நான் ஏன் ஆதாரம் காட்ட வேண்டும் நானா சொன்னேன்?...நான் என்ட முதலாவது கருத்திலேயே அவர் சொன்னார் என்று தான் எழுதியிருந்தேன்.சலாப்பிறத்திற்கும் ஒரு அளவு இருக்கு.அவர்கள் குற்றமற்றவர்கள்,அவர்களை உங்களுக்கு தெரியுமென்டால் நீங்கள் முதலில் நிருபீயுங்கோ

இது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.