Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 6 -மகிந்தவா மைத்திரியா..??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் ஐனாதிபதித்தேர்தல்  சூடுபிடிக்கவும்

ஆட்கொள்வனவுகள்

இரகசிய ஒப்பந்தங்கள்

அரவணைப்புக்கள்

நடந்தாலும்  தமிழர் விடயத்தில் மிகவும் கவனமாகவும்

அதே நேரம் ஒரே கொள்கையிலும் சிங்களக்கட்சிகள் இருப்பதை  காணக்கூடியதாக உள்ளது.

தேடுவாறற்று தமிழினம் இன்று தனித்துவிடப்பட்டுள்ளது மட்டுமன்றி

பனையால் விழுந்தவனை மிதிப்பது போல

யார் அதிகம் உதைப்பது என்பதும் நடக்கிறது

இது புதிதல்ல என்பதாலும் 

வாங்கி  மரத்துவிட்ட வரலாற்றுப்பாடங்களிலிருந்தும் தமிழினம் தள்ளியே  நிற்கிறது.

 

இந்தநிலையில்

மகிந்தவை ஆதரிக்கணும்

அவர் மீண்டும் வந்து தமிழரை மிதிக்கணும் என்றும்

அவர் மிதிப்பது பழகிப்போனதால் அதிகம் வலிக்காது என்றும்

அத்துடன் அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவரும் நிலையில் 

அவரிடம்  தொடர்ந்து அடிவாங்கவேண்டும் எனவும்

 

மைத்திரி  வென்று மைத்திரியின் கை நீளுமாக இருந்தால்

புதிய யுக்திகளை  பாவித்து அடிப்பார் என்றும்

இதனால் வேற இடங்களில் தழும்புகள் வரலாம் என்றும் 

அத்துடன் அவருடன் நரி

சோப்பு

மே 1... என்பனவும் கூட்டுச்சேர்ந்துள்ளதால்

ஆளாளுக்கு சொல்லியும்  நரித்தனமாக சொல்லாமலும் அடிக்க

தமிழரின் தாகம் 10 வருடமாக கிடப்பில்   போய்விடும் எனவும்

 

இவற்றிலிருந்து மீள

இருவருக்கும் போடாமல் வேறு ஒரு ஒதுக்குப்புறமாக தமிழர் வாக்கை வைப்புச்செய்யலாம் எனவும் பேசப்படுகிறது......

 

ஆனால் தலைவரால் கொண்டுவரப்பட்ட மகிந்த சரியான கணிப்பே என்பதை காலம் நிரூபித்துவருகிறது.

குள்ளநரியின் சூழ்ச்சியிலிருந்து

தமிழ்மக்களை மீட்க மகிந்தவை தலைவர் தெரிவு செய்தபோது

ஒன்று தமிழருக்கான விடுதலை

மற்றது சிங்கள தேசத்துக்கான படுகுழி என்பனவற்றை சேர்த்தே தீர்மானித்துள்ளது வெளிப்படையாகிறது..

 

தமிழரின் விடுதலை சர்வதேசத்தின் பிழையான முடிவுகள்

சிறீலங்காவுக்கான பிழையான ஒத்தாசைகளால் தள்ளிப்போனாலும் 

சர்வதேசம் தமது தப்பை உணர்ந்தே உள்ளது.

 

அதேவேளை

சிங்கள தேசம் அதன் வரலாற்றில் இல்லாதது போல்

இன்று சீரளிந்து கிடக்கிறது

மகிந்த குடும்பம் பெரும் பண படை பலத்துடன் 

அத்தனை கட்சிகள் முன்னும் வளர்ந்து நிற்கிறது

அதன் தோல்வி  என்பது நினைத்துப்பார்க்கமுடியாத அழிவுகளை சிறீலங்காவுக்கு செய்யும்

அதேநேரம் அதன் வெற்றியும் தன்னை எதிர்த்தவர்களை பழி வாங்கியே தீரும்...

 

தமிழரின் பங்கு என்னவெனில்

வடக்கு கிழக்கு மக்கள் அமைதி  காக்க

ஏனைய தமிழர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கணும்

அவர் வரணும்

சிங்களவருள் ருத்த தாண்டவம் ஆடணும்...

தமிழன் வேடிக்கை பார்த்தபடி 

இவற்றையும்  சேர்த்து

சர்வதேசத்திடம் எமக்கான நீதியைக்கேட்கணும்..

 

 

நீங்களும் சொல்லுங்கள்.

இதை வாசிக்கும் போது சிரிப்பை தவிர வேறு ஒன்றும் வரவில்லை என்பதால் என்னால் ஒன்றும் எழுத முடியவில்லை.

தற்போதைய உள்ள உலக அரசியல் சூழ்நிலைகளையும் ,இலங்கை அரச சூழ்நிலைகளையும் பார்க்கும்போது எனது சிந்தனைக்கு அறிவுக்கு எட்டிய வகையில் ,மகிந்த தோற்கவேண்டும் .ஏனனில் தற்போது தமிழர்களுக்கான ஒரே ஒரு வலுவான ஆயுதமாக இருப்பது  மகிந்த அரசின் இனவழிப்பு நடவடிக்கையே  [போர்க்குற்றம் ] 
 
இன்று அது சம்பந்தமாய்  ஐநா விசாரணை  தீவிரமாய் நிகழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளை மகிந்த அரசின் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டுகொண்டிருக்கும் இந்த வேளை  மீண்டும் அவர் ஆட்சி அமைப்பது  அவருக்கான தண்டனையை வழங்குவதில் சில சிக்கல்களை ஐநா வும் ,சர்வதேசமும் எதிர் கொள்ளலாம் .அவர் ஆட்சியை விட்டு இறங்கும்போது மிக இலகுவாக  நாம் எதிர்பார்க்கும் நிகழ்வு நடை பெற வாய்ப்புக்கள் உண்டு .
 
என்னடா இவன் தண்டனை கொடுத்தால் எம் பிரச்சனை முடிந்துவிடுமா என்ற கேள்வியுடன்  படு மொக்கனாய் இருக்கிறானே என்று நீங்கள் நினைத்தால் அதற்கான பதிலையும் இங்கேயே எழுதி விடுகிறேன் .பின்னர் நேரம் கிடைக்குமோ தெரியாது .
 
எனது பார்வையில் போர்க்குற்றம் நிரூ[பிக்கப்பட்டு மகிந்தவிற்கான தண்டனை வழங்கும்போது உலக அரசியல் பார்வை ,சூழல் சிறிது மாறுபட்டு இருக்கும் ,அங்கே எமக்கு சாதகமான சில பக்கங்கள் உருவாக்கலாம் .அந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி . எமது உரிமை ,தேசியம் .தாயகம் போன்ற கோரிக்கைகளை உறுதியாக முன் வைக்கலாம் .அங்கே எமக்கு சாதகமாக சில நிகழ்வுகள் நடக்கலாம் . இந்த நடைமுறையிலேயே விடுதலை ,சுதந்திரம்  பல விடுதலை தேடிய  இனங்களுக்கு ,மக்களுக்கு கிடைத்தது ,.............
 
இது எனது சிந்தனை மட்டுமே .உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாய் இருக்கிறேன் .இந்த விடயத்தில் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று யாரும் நினைக்காமல் யதார்த்தமான கருத்துக்களை அலசி ஆராய்வோம் .என்னில் இந்த கட்டம் எமக்கு  மிக முக்கியமான கட்டம் .............நன்றி  :)
  • கருத்துக்கள உறவுகள்

தலைவரால் கொண்டுவரப்பட்ட மகிந்த சரியான கணிப்பே என்பதை காலம் நிரூபித்துவருகிறது -

இதை அப்படி ஏற்றுக்கொள்ள முடியாது.
என்னை பொருத்தவரை ஈழப் போராட்டம் அரசியல் சூழ்ச்சியில் மாட்டிகொண்ட பரிதாப நிகழ்வு தான் இது. ( துன்பியல் சம்பவம்)
  

  • கருத்துக்கள உறவுகள்

நான் மகிந்தா தான் திரும்பவும் பதவிக்கு வர வேண்டும் என்றும்,அதற்கு என்ன காரணம் என்றும் இன்னுமொரு திரியில் ஏற்கனவே எழுதி விட்டேன்...ஆகவே அது பற்றி எழுத வரேல்ல.தலைவரால் கொண்டு வரப்பட்ட மகிந்தா சரியான கணிப்பு என்று எதை வைத்து சொல்கிறீர்கள் விசுகு அண்ணா? புலிகளை முற்றாக அழித்து,அவ்வளவு மக்களையும் மகிந்தா கொண்டதினாலேயா?...கருணா பிரிந்த கோபத்தில் ரணிலைப் பழி வாங்க தலைவர் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளில் இதுவும் ஒன்று...மகிந்தா ஒரு யதார்தவாதி,முட்டாள்தனமாக ச்ண்டை பிடிக்க வருவார்.போரிலே வெல்லலாம் எனவும் ரணில் ஒரு குள்ள நரி எப்படியும் சமாதானம் பேசிப் பேசியே காலத்தை கடத்துவார் என தலைவர் நினைத்திருக்கலாம்.ஆனால் மகிந்தாவை பதவிக்கு கொண்டு வந்ததன் மூலம் தமிழர்களையும்,போரட்டத்தையும் இன்னும் 60 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளி விட்டு இருக்கேன் என தலைவர் நினைச்சே பார்த்து இருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரால் கொண்டு வரப்பட்ட மகிந்த தாயகத்தில் புலிகளைப் பூண்டோடு அழித்து தமிழர்களை என்றென்றும் அடிமையாக்கியதால் மகிந்தவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என்று நினைக்கின்றேன். சிங்கள மக்களுக்கு போரில் தாங்கள் எப்படி வென்றோம் என்று சொல்லியும், கள்ள வாக்குகளைப் போட்டும், அரச புலனாய்வுத் துறையினரைப் பாவித்தும் மகிந்தவும் கோத்தாவும் நூலிழையிலாவது வெல்வார்கள்.

தமிழர்கள் சார்பில் நமது சிவாஜிலிங்கத்தை மீண்டும் தேர்தலில் நிறுத்தி தமிழர்களின் வாக்குப் பலம் எவ்வளவு என்று சிங்களவர்களுக்கும், இந்தியாவுக்கும், உலகுக்கும் காட்டி நாம் அடிமுட்டாள்கள் என்று மீண்டும் நிறுவலாம்.

ரதி அக்கா 60 ஆண்டுகள் பின் தங்க இருந்த போராட்டத்தை ,எம் விடுதலையை அண்மைப்படுத்தியதே  எம் தேசியத்தலைவர்தான் .விடுதலைப்போராட்டம் என்றால் அழிவுகளும் ,இழப்புக்களும் அதனூடு தான் அது பயணித்து இறுதியில் இலக்கை எட்டி நிற்கும் 
 
  அண்மையில் மாண்பு மிகு முருகர் குணசிங்கம் ஐயாவை சந்திக்கும் பெரிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது .அவருடன் பல கலாநிதிகளும் அங்கே வந்திருந்தனர் .[எம் யாழ்கள உறவு டாக்டர் கலாநிதி லியோ உட்பட ] .
 
முருகர் குணசிங்கம் ஐயா பேசும்போது கூறினார் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை தான் சந்தித்த போது எமது கையில் தமிழீழம் தருவதற்கு சர்வதேசம் ஒருபோதும் சம்மதிக்காது ,அதை படித்த இளைஞ்சர்களின் கையில்தான் அவர்கள் வழங்குவார்கள் .,
 
ஆகவே அவரின் பார்வை தூர நோக்கியதாக இருந்தது என்பதை எவராலும் மறக்க முடியாது ..இன்று மகிந்த தோல்வியை நோக்கி போகின்றார் .அது ஏன் ,சிங்களவன் கனவிலும் எதிர்பார்க்கமுடியாதவாறு பலம் மிக்க தமிழர் படையை அழித்தவர் என்று கூறப்படும் மகிந்தவை சிங்களம் தூக்கி ஏறிய நினைக்கும்  நிலை ஏன்  வந்தது என்பதை கொஞ்சம் நிதாமனாய் யோசித்துப்பாருங்கள் ...............தேசியத்தலைவரின் சிந்தனை ,தூர நோக்கப்பார்வை உங்களுக்குப்புரியும் ....................வேண்டாம் உங்கள் ,நீங்கள் வாழும் காலத்திலேயே அதற்கான விடையை தெரிந்து கொள்வீர்கள் .நன்றி 
 

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

முருகர் குணசிங்கம் ஐயா பேசும்போது கூறினார் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை தான் சந்தித்த போது எமது கையில் தமிழீழம் தருவதற்கு சர்வதேசம் ஒருபோதும் சம்மதிக்காது ,அதை படித்த இளைஞ்சர்களின் கையில்தான் அவர்கள் வழங்குவார்கள் .,

இதைப் படித்தபோது என்னத்துக்காக பல்லாயிரக் கணக்கானவர்கள் தங்கள் இளமைக் கனவுகளை எல்லாம் துறந்து போராடி மாவீரர்கள் ஆனார்கள் என்று சிந்தித்தேன்.

படித்த இளைஞர்களே தமது அரசியல் சாணக்கியத்தைப் பாவித்து தமிழீழத்தைத் பெற்றுக்கொள்ள முயன்றிருந்தால் ஏன் இத்தனை அழிவு? ஏன் இந்த அடிமை வாழ்வு?

சரி. அதை விடுவம்.

மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியைக் கொண்டு வருவதற்கு வழியைப் பார்க்க ஒரு தமிழரைக் களம் இறக்குவம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா தமிழ்சூரியன் பிறகு எதற்கு புலிகள் மு.வாய்க்காலில் யுத்தம் புரிந்தார்கள்?... யுத்தம் ஆரம்பித்த உடனேயே புலிகள் ஆயுதங்களை மெளனித்திருந்தால், தலைவர் தன்னைத் தானே மாய்த்திருந்தால்[அப்படி நடக்கவே கூடாது] யுத்தமும் நின்று இருக்கும்.அவ்வளவு பொது மக்களும் தப்பியிருப்பார்.எதற்கு தேவையில்லாத உயிர் இழப்பு

இதைப் படித்தபோது என்னத்துக்காக பல்லாயிரக் கணக்கானவர்கள் தங்கள் இளமைக் கனவுகளை எல்லாம் துறந்து போராடி மாவீரர்கள் ஆனார்கள் என்று சிந்தித்தேன்.

படித்த இளைஞர்களே தமது அரசியல் சாணக்கியத்தைப் பாவித்து தமிழீழத்தைத் பெற்றுக்கொள்ள முயன்றிருந்தால் ஏன் இத்தனை அழிவு? ஏன் இந்த அடிமை வாழ்வு?

 

உங்கள் சிந்தனை நியாயமானதே ,அனால் இன்னொன்றை சிந்திக்க மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் .
 
விடுதலைப்போராளிகள் என்று தம்மை தம் இன்னுயிர்களை ஈகம் செய்த அந்த மாவீரர்களின் கனவு எம் மக்களுக்கு சுதந்திரமான ,விடுதலை வாழ்வு ...........அதற்காக அவர்கள் போராடினார்கள் ,இதை எல்லாம் விபரமாக உங்களுக்கு எழுத தேவை இல்லை அண்ணா .
 
படித்த இளைஞ்சர்கள் ,படித்தவர்கள் எதையும் சாதிக்கமுடியாமல் இருந்த ஒரு சூழல் இன்று மாற்றி அமைக்கப்பட்டு படித்த இளைஞ்சர்களும் ,படித்த மகான்களும் இன்று எமது அரசியல் போராட்டத்தை மேற்கொண்டு நகர்த்துவதற்கான ஒரு கதவு திறக்கப்படுள்ளது என்பதையும் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன் கிருபன் அண்ணா ...........
 
உணர்வும் உண்மையும் உள்ள படித்த இளைஞ்சர்கள் அன்றும் இருந்தார்கள் ஆனால் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சந்தர்ப்ப சூழ்நிலை .........அந்த சந்தர்ப்ப சூழ்நிலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுக்ள்ளது .இன்றும் அதே படித்த உணர்வுள்ள இளைஞ்சர்கள் உள்ளார்கள் என்பதும் உண்மை .
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் மகிந்த
எதிலும் மகிந்த
எப்பவும் மகிந்த வருவதுதான் தமிழருக்கு நல்லம்.
அதற்கு பல உலக அரசியல் கராணமாக இருந்தாலும். அது நீண்ட பார்வை குந்தி இருந்து யாரும் வாசிக்க கூட போவதில்லை.
ஆ இவரா எழுதி இருக்கிறார்? என்று விட்டு எதோ ஒன்றை எழுதி மைதிரியை ஆதரித்துவிட்டு போவது ஒன்றே நடக்கும்.

காரணம்.
எங்கும் ஊழல்
எதிலும் ஊழல்
எப்போதும் ஊழல்.
சிங்கள தேசத்தின் வளர்சிக்கு உதவ போவதில்லை. ஒரு நிர்கதியற்ற நிலை ஒரு நாட்டில் இருப்பதை வர்த்தகர்கள் விரும்ப போவதில்லை.
அவர்களிடம் ஆட்சி அதிகார பலம்
இவர்களிடம் பண பலம்.
இரண்டுக்கும் பிரிவு வருபோதும் பணபல காரர்களின் கண்களில் தட்டுபட போவது தமிழர்கள் பிரச்சனைதான்.
ஓநாய்கள்தான் ........
ஆடு நனையுது எண்டு அவர்கள் கவலைப்படும் சின்ன காப்பில். நாம் ஆட்டோவை ஒட்டிவிட வேண்டும்.

(மைதித்ரியின் வரவிற்கு பின்னால் இருப்பது பண பலம்தான். இதை கவனித்தால் போதும்)

அப்படியா தமிழ்சூரியன் பிறகு எதற்கு புலிகள் மு.வாய்க்காலில் யுத்தம் புரிந்தார்கள்?... யுத்தம் ஆரம்பித்த உடனேயே புலிகள் ஆயுதங்களை மெளனித்திருந்தால், தலைவர் தன்னைத் தானே மாய்த்திருந்தால்[அப்படி நடக்கவே கூடாது] யுத்தமும் நின்று இருக்கும்.அவ்வளவு பொது மக்களும் தப்பியிருப்பார்.எதற்கு தேவையில்லாத உயிர் இழப்பு

ஐயையோ  முள்ளிவாய்க்கால் யுத்தம் ஆரம்பத்தபோது சரணடைந்தால் என்ன என்ற கேள்வி உண்மையில் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டு பதில் எழுதுகிறேன் .... :D
 
எம்மது முழு அடையாளமும் அழிந்திருக்கும் ,எமது விடுதலையின் தேவையை ,அதன் அவசியத்தை இந்த உலகம் முற்று முழுதாக குழி தொன்றிப்புதைத்திருக்கும் ................ஏதாவது புரியுதா அக்கோய் .... :D
  • கருத்துக்கள உறவுகள்

படித்த இளைஞ்சர்கள் ,படித்தவர்கள் எதையும் சாதிக்கமுடியாமல் இருந்த ஒரு சூழல் இன்று மாற்றி அமைக்கப்பட்டு படித்த இளைஞ்சர்களும் ,படித்த மகான்களும் இன்று எமது அரசியல் போராட்டத்தை மேற்கொண்டு நகர்த்துவதற்கான ஒரு கதவு திறக்கப்படுள்ளது என்பதையும் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன் கிருபன் அண்ணா ...........

நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஏதாவது செயற்பாடுகள் நடந்திருந்தால் மறந்திருக்கமாட்டேன். சிலவேளை மிகவும் இரகசியமாகச் செயற்படுகின்றார்களாக்கும். மேற்கு நாடுகளில் உள்ள இராஜதந்திரிகளுடன் அடிக்கடி சந்தித்து lobbying செய்துகொண்டிருக்கின்றார்களாக்கும். Englishஇல் பேசினால்தானே மரியாதை!

சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் negotiation என்றால் என்னவென்று படித்திருந்தால் அல்லது இந்தப் படித்தவர்கள் சொல்லியிருந்தால் மகிந்தவை ஜனாதிபதியாக்கவேண்டிய தேவை வந்திருக்காது. ஒரு compromise இல்லாமல் negotiation என்பது நடப்பதில்லை.

இப்போது இந்தப் படித்தவர்கள் தமிழீழக் கோரிக்கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருந்தால் எந்த ஒரு இராஜதந்திரியும் கதவைக்கூடத் திறக்கமாட்டார்கள்.

நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஏதாவது செயற்பாடுகள் நடந்திருந்தால் மறந்திருக்கமாட்டேன். சிலவேளை மிகவும் இரகசியமாகச் செயற்படுகின்றார்களாக்கும். மேற்கு நாடுகளில் உள்ள இராஜதந்திரிகளுடன் அடிக்கடி சந்தித்து lobbying செய்துகொண்டிருக்கின்றார்களாக்கும். Englishஇல் பேசினால்தானே மரியாதை!

 

இங்கிலீசு பேசினால் அவர் படித்தவர் என்ற நிலையில் நீங்கள் சிந்திப்பதை உணர்கிறேன் .நன்றி  :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலீசு பேசினால் அவர் படித்தவர் என்ற நிலையில் நீங்கள் சிந்திப்பதை உணர்கிறேன் .நன்றி  :)

ஹி.ஹி. நான் அப்படியெல்லாம் சிந்திப்பதில்லை தமிழ்சூரியன். அப்படிப் பார்த்தால் இலண்டனில், அமெரிக்காவில், கனடாவில், அவுஸ்திரேலியாவில் இருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகிவிடும்.

எமது உரிமைகளை வென்றெடுக்க படித்துக் பட்டம் பெற்றவர்கள் (அதிலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்) எல்லாம் தேவையில்லை. உலக அரசியலை உணர்ந்த சுயநலம் இல்லாத சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்கள்தான் தேவை.

நெல்சன் மண்டேலா மறைந்த நினைவு நாளான இன்று அவர் எப்படி தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலையை வென்றார் என்று பார்த்தாலே போதும்.

ஹி.ஹி. நான் அப்படியெல்லாம் சிந்திப்பதில்லை தமிழ்சூரியன். அப்படிப் பார்த்தால் இலண்டனில், அமெரிக்காவில், கனடாவில், அவுஸ்திரேலியாவில் இருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்றாகிவிடும்.

எமது உரிமைகளை வென்றெடுக்க படித்துக் பட்டம் பெற்றவர்கள் (அதிலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள்) எல்லாம் தேவையில்லை. உலக அரசியலை உணர்ந்த சுயநலம் இல்லாத சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்கள்தான் தேவை.

நெல்சன் மண்டேலா மறைந்த நினைவு நாளான இன்று அவர் எப்படி தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலையை வென்றார் என்று பார்த்தாலே போதும்.

கிருபன் அண்ணா 100 வீதம் உடன்படுகிறேன் . :D
 
படித்தவர்கள் என்று எம் தேசியத்தலைவர் குறிப்பிட்டதே உணர்வும் உண்மையும் உள்ளவர்களைத்தான் ,அது கலாநிதிப்பட்டம் பெற்ற வர்களை இருந்தாலும் சரி ,சாதாரணமாய் இருந்தாலும் சரி .அன்றும் பல கலாநிதிகள் இணைந்திருந்தனர் .இன்றும் இணைந்திருக்கின்றனர் .........இந்த உணர்வும் உண்மையும் உள்ள கலாநிதிகள் எமக்கு தேவை அவர்கள் போன்றவர்களையே குறிப்படப்பட்டுள்ளது .அதை விட்டு கலாநிதி என்று சொல்லிக்கொண்டு மாற்றுக்கருத்து எழுதி ,சொந்த இனத்திற்கே உலை வைக்கும் புறம்போக்குகளை இங்கே நான் குறிப்பிடவில்லை .எம் தேசியத்தலைவரும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை ,முருகர் குணசிங்கம்  ஐயாவும் அதை நேர்த்தியாகவே குறிப்பிட்டார் .சிலவேளை   எனது எழுத்து வடிவம் உங்களை அப்பிடி யோசிக்க வைத்திருக்கலாம் . :)

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத பிசாசை விட, தெரிந்த பிசாசு பரவாயில்லை.

என்ன மைத்திரி வந்தால் எங்களுக்கு மூச்சு விட கொஞ்ச காலம் தருவார், அதன் பின்பு தனது இரண்டாவது பதவி காலத்தை நினைத்து, சிங்கள மக்களை குஷி படுத்த எங்களுக்கு மேலும் துன்பங்களை தர பார்ப்பார். பௌத்த சிங்கள மக்களின் எதிர் பார்ப்பு எதுவோ , அவைகளை நிறைவேற்ற முயற்சிப்பார் . முதலாவது போர்க் குற்ற விசாரணைக்கு இடம் இருக்காது. எங்களுக்கு பிரபாகரன் எவ்வளவு பிரதானமோ அதேயளவு மகிந்தரும் சிங்கள அடிப்படை வாதிகளால் போற்றபடுகிறார் (புலிகளை வென்றதில் இருந்து). துட்ட கைமுனுவை தூக்கில் போட எந்த சிங்களவன் தான் விரும்புவான்?

இரண்டாவது மஹிந்தரின் ஒட்டுண்ணிகள் இவருடன் ஓட்டுவார்கள். அவர்களை வைத்தே தமிழ் பிரதேச அரசியலை இப்ப செய்யிற மாதிரி செய்வார். ராணுவ குறைப்பு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது.

மூன்றாவது சீனக் கொள்கை. இரண்டு பேரும் சுதந்திர கட்சி வேட்பாளர்கள். எனவே வெளியுறவு கொள்கைகளில் பெரிய மாற்றம் இருக்காது. கொள்கைகளில் ஒத்து வராமல் UNP கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டி வரலாம்.

ஆக காட்சியும் கதையும் மாறாது கதா பாத்திரம்தான் மாறும்.

என்னை பொறுத்தவரை மகிந்த வந்தால்தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த, வரையில்....
மகிந்த மீண்டும்,  அதி உத்தம ஸ்ரீலங்கா ஜனாதிபதியாய் வருவதே நல்லது,

காரணம்:
1) அவர் போரில், புலிகளை அழித்து விட்டார். என்று சந்தோசப்  படுகின்றார்.

2)  அந்த சந்தோசத்தை, நிலை நாட்ட எத்தனையோ.... அழிவுகளையும், இந்தியாவிடுடன்  சேர்ந்து நடத்தி விட்டார்.

3)  மைத்திரி, தமிழனிடம் சமரசம் இல்லை... என்றே கூறி விட்டார்.

4) அஜித் பிரேமதாச...  எஞ்சியுள்ள புலிகளையும் அழிப்பேன். என்று சொல்லிவிட்டார்.

மகிந்தவும், இந்தியாவும்...... அழிக்காத புலிகள்,  இப்போது ஈழத்தில் வாழ்கிறார்கள் என்றால்....
முழுத் தமிழ் இனத்தையும், கூண்டொடு கைலாசம் அனுப்ப... மற்றொரு சிங்கள மைத்திரியின் கட்சி வருகின்றது.

இது, நல்லதுக்கல்ல.
மகிந்த, அரசாட்சியில், இருப்பதுவே... மேல்.

 

mahinda_rajapaksa.jpg

 

வாழ்த்துக்கள், தலைவா...
மகிந்த ராஜபக்ச, ஜெய வேவா....
மகிந்த ராசா பட்சே.... ஜிந்தாபாத்.

Edited by தமிழ் சிறி

மஹிந்த தான் எனது தெரிவு .....மீண்டும் குடும்ப அரசியல் , சர்வதிகாரம் , கொலைகள் , பொருளாதார வீழ்ச்சி அவரின் haige அனுப்ப இலகுவாக இருக்கும் , ..அத்துடன் புதிய MY3 அவர்கள் உலகத்தை மீண்டும் ஏமாறா வைப்பார்கள் ...

மஹிந்த தான் எனது தெரிவு .....மீண்டும் குடும்ப அரசியல் , சர்வதிகாரம் , கொலைகள் , பொருளாதார வீழ்ச்சி அவரின் haige அனுப்ப இலகுவாக இருக்கும் , ..அத்துடன் புதிய MY3 அவர்கள் உலகத்தை மீண்டும் ஏமாறா வைப்பார்கள் ...

 

இந்தச் சின்ன விசயம் சிங்களவருக்குப் புரியாமல் இருகுமா ?

சிங்களவரைப் பொறுத்தமட்டில் மகிந்தர் தனது கடமையைச் செய்தார். இப்போது குடும்ப அரசியல் வெளிநாட்டு அழுத்தம் என்று அழுத்தங்கள் சிங்களவருக்குப் பாதகமாக வரும்போது ஆளை மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

 

முஸ்லிம்களையும் தமிழரையும் வைத்துச் சிங்களவர் காய் நகர்த்தினாலும் சிங்களவர் விரும்பாத ஒருவரை யாரும் வெல்ல வைத்ததில்லை. சந்திரிகா, மகிந்தா வரிசையில் அடுத்த பேரினவாதத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தமிழர்கள் உதவுவார்கள் என்பதைக் கூட்டமைப்பு பம்முவதிலிருந்தே சிங்களவர் தெரிந்து கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வந்து தங்கள் மன வக்கிரங்களை வசதியாக கொட்டி தீர்ப்பதற்கென்றே ஒரு திரியை திறந்து ஆதற்கு ஏற்ப கருத்தும் பகிரப்பட்டு உள்ளது.
வசை பாடுபவர்களை விட அதற்கு பிளாட்போறம் அமைத்துக் கொடுக்கும் உங்கள் செயல் தான் வேதனை தருகிறது.
போராளிகளையும் , தலைவரையும் போற்றும் நீங்களே இப்படி... :(

மகிந்த ராசா பட்சே.... ஜிந்தாபாத்.

 

புலிகளை அழித்த மகிந்தாவுக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்று.... நான் சொல்லவில்லை. உலகம் சொல்லுமே. :)

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்த மகிந்தாவுக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்று.... நான் சொல்லவில்லை. உலகம் சொல்லுமே. :)

 

இது, பம்மாத்து உலகம்.(ஐ.நா.)

பொய்யான  அரசியல் திணிப்பு.(ஸ்ரீலங்கா/ இந்தியா)

மாயையான... செய்தி வெளியீடு. (சன் ரி.வி)

அது, என்னத்தை....சொன்னாலும், இனி.... ஒரு உண்மைத் தமிழன் நம்ப மாட்டான்.

 

தமிழ்சிறி, இங்கே எந்தப் பேரினவாதி இலங்கைக்குத் தலைவராக வருகிறார் என்பது எமக்கு முக்கியமல்ல. இந்தச் சிறிய தீவில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மேற்குலகு தீர்மானிக்கும்.  யார் வந்தாலும் அடி வாங்குவது தமிழர்கள்தான். எந்த ஒரு பிரயோசனம் இல்லாவிட்டாலும் தமிழர்களின் நிலைப்பாட்டை உலகுக்குக் காட்டவாவது இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாம். இதுவும் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாதது என்று நீங்கள் நினைப்பது விளங்குது.  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.