Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொமொரு அரிய புகைப்படம் .

Featured Replies

1380368_10203433556582481_37904554915273

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பின்னாலிருக்கும் இருவரும் யார் ?

முன்னாலிருப்பவர்கள், வரதர், பாலக்குமார், பத்மநாபா, சிறீ....சரியா ?

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடியில் இருப்பது மாவை ஐயா. மற்றவர் ஊர்மிளா புகழ் உமாமகேஸ்வரன் போல் தெரிகிறது.

பாலகுமார் மற்றும் மாவை ஐயா தவிர மற்ற எல்லாரும் இந்தியனுக்கும் சிங்களவனுக்கும் விலைபோனவர்கள்..!! தமிழ் மக்களை.. அவர்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்க பின்னிற்காதவர்கள்..! :icon_idea:

  • தொடங்கியவர்

ரகுநாதன் சொன்னது சரி ,பின்னால் இருப்பவர்கள் சாந்தன் ,கேதிஸ் .

சாந்தன் 1978/79  களில் லண்டனில் இருந்து எங்களது வீட்டிற்கு அத்தான் கொடுத்துவிட்ட சில உடுப்புகளுடன் வந்தார் .பின்னர் அறிந்துகொண்டேன் அவர் வந்தது கண்ணாட்டியில் இருந்த ஈரோஸ் முகாமையும் பார்த்து செல்ல என்று .பின்னர் நாபாவுடன் சேர்ந்து ஈ பி யை உருவாக்கியதில் ஒருவர் .நான் லண்டன் வந்த பின் இரவு ஹோட்டேலில் இவருடன் ஒன்றாக வேலைசெய்தேன் .அந்த சமயம் இவருடன் ஈ பி கூட்டங்களுக்கும் சென்றுஇருக்கின்றேன் .இவர் இப்பவும் லண்டனில் இருக்கின்றார் .

கேதிஸ் -இவரை  நெதர்லாந்து சென்ற சமயம் சந்தித்தேன் .ஸ்கோலர்சிப்பில் மேற்படிப்பிற்காக வந்திருந்தவரை எனது இன்னொரு அத்தான் அறிமுகம் செய்துவைத்தார் .அந்த நேரம் என்னுடன் கொஞ்சம் அரசியல் கதைத்தார் .

இருவரையும் ஒன்றாக பின்னர் டெல்கியில்  சந்தித்தேன் .கேதிசை புலிகள் முள்ளிவாய்காளுக்கு சில வருடங்களுக்கு முதல் கொலை செய்தார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
ஏனைய இயக்கங்களில் உள்ள சுயநலமற்ற போராளிகள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. ஏனைய இயக்க தலைமைகள் இந்திய ,இலங்கை அரசினால் வாங்கப்பட்டு விட்டார்கள் அல்லது அவர்களது சொல்லுக்கு ஏற்ப நடக்க வெளிக்கிட்டார்கள். அதனால் புலிகளையும் அழிக்க துணிந்தார்கள். அரச படைகளோடு சேர்ந்து காட்டிக்கொடுத்தார்கள். இவர்கள் இல்லா விடின் மொழி தெரியாத  இந்திய ராணுவத்துக்கோ சிறிலங்கா ராணுவத்துக்கோ போராளிகளின் மறைவிடங்களை காண்பதில் மிகுந்த சிரமம் இருந்திருக்கும். ராசிக், மாணிக்கவாசகன், புளட் மோகன் போன்றவர்கள் அரசுடன் சேர்ந்து செய்த அட்டூளியங்கள் சொல்லில் சொல்ல முடியாது. 
 
மில்லர் கூட ஒரு பணக்காரர் தான். அவரும் விடுதலை வேண்டி தான் தன் உயிரை தற்கொடை ஆக்கினார்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் விடுதலைக்காக பல இயக்கங்கள் பிரிந்து போராடும்போது இறுதியில் அந்தப் போராட்டங்கள் அந்த இனத்தின் முற்றான அழிவிற்கோ அல்லது முற்றுமுழுதான ஆக்கிரமிப்பிற்கோதான் உற்பட்டு விடுகிறதென்பதை காண்கிறோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி...இப்படிப் பல பிரிந்து இயங்கி, தமக்குள் அடிபட்டு, மற்றைய அனைத்து இயக்கங்களும் ஒன்றில் தடை செய்யப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ, அல்லது புலிகளியக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டோ போக தனியாகவே போராட்டத்தை முன்னடத்திய புலிகளியக்கமும் சர்வதேச வலைப்பின்னல் ஒன்றிற்குள் அகப்பட்டு அழிக்கப்பட்டு போனது. தமிழினம் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதேபோல, ஆப்கானிஸ்த்தானில் நஜிபுள்ளாவின் ஆட்சிக்கெதிராகவும், பின்னர் ரஷ்ஷியாவின் ஆக்கிரமிப்பிற்கெதிராகவுமெனெ போராடப் புறப்பட்ட முஜாகிதீன்கள் , சோவியத்  ஆக்கிரமிப்பு அகன்றபின்னர் தமக்குள் அடிபட்டு அழிந்துகொன்டிருந்த தறுவாயில், பாக்கிஸ்த்தானின் ஆசீர்வாதத்துடன் தலிபான்கள் முஜாகிதீன்களை தோற்கடித்து முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த சிறிதுகாலத்திலேயே ஒசாமாவுடனான சிநேகத்தினைக் காரணம் காட்டி அமெரிக்க ஆக்கிரமிப்பு அங்கே நடந்தேறியது.

உண்மையான விடுதலை வேட்கையுடன் போராடப்புறப்பட்ட கிழக்கு மாகாண இளைஞர்கள் இவர்களுடைய அதிகார மோதலினால் பலியானது கவலையான விடயம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனைய இயக்கங்களில் உள்ள சுயநலமற்ற போராளிகள் கொல்லப்பட்டதை ஏற்க முடியாது. ஏனைய இயக்க தலைமைகள் இந்திய ,இலங்கை அரசினால் வாங்கப்பட்டு விட்டார்கள் அல்லது அவர்களது சொல்லுக்கு ஏற்ப நடக்க வெளிக்கிட்டார்கள். அதனால் புலிகளையும் அழிக்க துணிந்தார்கள். அரச படைகளோடு சேர்ந்து காட்டிக்கொடுத்தார்கள். இவர்கள் இல்லா விடின் மொழி தெரியாத  இந்திய ராணுவத்துக்கோ சிறிலங்கா ராணுவத்துக்கோ போராளிகளின் மறைவிடங்களை காண்பதில் மிகுந்த சிரமம் இருந்திருக்கும். ராசிக், மாணிக்கவாசகன், புளட் மோகன் போன்றவர்கள் அரசுடன் சேர்ந்து செய்த அட்டூளியங்கள் சொல்லில் சொல்ல முடியாது. 

மில்லர் கூட ஒரு பணக்காரர் தான். அவரும் விடுதலை வேண்டி தான் தன் உயிரை தற்கொடை ஆக்கினார்.

எங்கே ஐயா இருந்தீர்கள் இவ்வளவு காலமும்?

தலைமைகள் தங்களுக்ககுள் கருத்து மோதலை வளர்த்து போட்டு , அதற்காக அவர்களை சேர்ந்தவர்களை அழித்ததுதான் கொடூரம்.

எனக்கும் மில்லரின் குடும்பத்தை சார்ந்தவர் ஒருவரை தெரியும். அவர் இப்ப எங்கே என்றே தெரியாது "வ......." அவரை பார்த்தால் இவரது சகோதரா மில்லர் என்று நம்ம கடினமாக இருக்கும். அவரது ஒன்றுவிட்ட சகோதிரி ஒருவர் எங்களுடன் படித்தவ. முதல் முதல் அவரிடம் கதைக்கும் போது, இன்னாரை தெரியுமா என்று கேட்டேன். அவ மிகவும் பயந்து போய்விட்டா.

நான் சில வருடங்கள் முந்தி பிறந்திருந்தால் இந்த இயக்க மோதல்களை பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக அறிந்திருக்க முடியும். இப்ப பலரை போல கதை கேட்டு அறியும் நிலையில்தான். ஆனால் எதுவுமே அறியாத அன்பர்கள் தான் தான் நினைத்த பாட்டுக்கு அவன் துரோகி இவன் ஹீரோ என்னும் போது கவலையாகவும் எரிச்சல் அகவும் இருக்கும். அதனாலேயே மிகவும் பிழையான கருத்தக்கள் என்று வரும்போது எனது கருத்துக்களை வைப்பேன் .

எங்கை இருக்க வேணுமோ அங்கை தான் இருக்கிறம். நெல்லியடி மில்லரை தான் குறிப்பிடுகிறேன். அவரின் உறவினர் என்னோடு வேலை செய்கிறார். அவர் குறிப்பிட்டதை தான் குறிப்பிடுகிறேன். உங்களின் பார்வை எனக்கு இருக்க வேண்டும் என்று விதியோ?? நீங்கள் எந்த உலகத்தில் இருந்தீர்கள் என நானும் கேட்கலாமோ??

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் நான் பதிந்த கருத்து காரணமில்லாமல் தூக்கப்பட்டிருக்கிறது.

ஈபியில் இருந்த கபூர் எனும் அற்புதமான போராளி பற்றி எழுதியிருந்தேன். கொழும்பின் மேல்த்தட்டு ரோயல் கல்லூரியில் கற்றவர். வாழ்க்கையை செழிப்பாக கொண்டுபோகும் அத்துணை வாய்ப்புக்களையும் உதறிவிட்டு போராட வந்தார். காரணமில்லாமல் கடும் சித்திரவதையின் பின் கொல்லப்பட்டார், அவரின் குடும்பமும் கொடுமைக்கு ஆளானாது.

பொகவந்தலாவையில் பிறந்த டேவிற்சனும் இப்படி ஒருவரே.

மில்லருக்கும், பால்ராஜுக்கும், அங்கையர்கண்ணிக்கும் எவ்வகயிலும் குறையாத மாவீரர்கள் இவர்களும்.

ஆனால் எமக்காக போராட வந்த இந்த அற்புதமானவர்களின் மீதான நரவேட்டையை நாமே கண்டும் காணாமல் இருந்தோம், என்பது மட்டுமில்லாமல் தொடர்ந்தும் அப்படியே இருக்கிறோம் என்பதே வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே ஐயா இருந்தீர்கள் இவ்வளவு காலமும்?

தலைமைகள் தங்களுக்ககுள் கருத்து மோதலை வளர்த்து போட்டு , அதற்காக அவர்களை சேர்ந்தவர்களை அழித்ததுதான் கொடூரம்.

எனக்கும் மில்லரின் குடும்பத்தை சார்ந்தவர் ஒருவரை தெரியும். அவர் இப்ப எங்கே என்றே தெரியாது "வ......." அவரை பார்த்தால் இவரது சகோதரா மில்லர் என்று நம்ம கடினமாக இருக்கும். அவரது ஒன்றுவிட்ட சகோதிரி ஒருவர் எங்களுடன் படித்தவ. முதல் முதல் அவரிடம் கதைக்கும் போது, இன்னாரை தெரியுமா என்று கேட்டேன். அவ மிகவும் பயந்து போய்விட்டா.

நான் சில வருடங்கள் முந்தி பிறந்திருந்தால் இந்த இயக்க மோதல்களை பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக அறிந்திருக்க முடியும். இப்ப பலரை போல கதை கேட்டு அறியும் நிலையில்தான். ஆனால் எதுவுமே அறியாத அன்பர்கள் தான் தான் நினைத்த பாட்டுக்கு அவன் துரோகி இவன் ஹீரோ என்னும் போது கவலையாகவும் எரிச்சல் அகவும் இருக்கும். அதனாலேயே மிகவும் பிழையான கருத்தக்கள் என்று வரும்போது எனது கருத்துக்களை வைப்பேன் .

வல்குனோ அண்ணே.. நீங்க மனிசன் தோன்றேக்கையே பிறந்து சிரஞ்சீவியா வாழ்ந்திருக்கனும். அப்ப தான் மொத்த மனிதனின் வரலாற்றையும் அப்படியே கண்கண்ட சாட்சியாக..சொல்லி இருப்பீங்க. அதை நம்பியும் இருப்பீங்க. தப்பி சரி பின்னாடி பிறந்துட்டீங்கண்ணே. :D:lol:

  • தொடங்கியவர்

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தான் யாழின் சொத்து ,

எல்லாம் காத்தான் பூத்தான் சொன்னான் என்ற கதைதான் .

போராட போனவர்கள் எவரையும் தெரியாது உண்மையில் நடந்தது எதுவும் தெரியாது ஆனால் கம்பராமாயணம் கணக்கு பதிவுகள் போகும் .

பலரது வாழ்க்கையே இப்படித்தான் போகுது .பாவம் போராளிகள் .

வீட்டு கதவை தட்டிய எந்த நாளும் அண்ணருடன் கதைத்த தம்பா மகேஸ்வரனின் சாயலை கேட்கின்றேன் இன்னும் பதில் இல்லை .

பாவம் கூகிளிலும் படம் இல்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனைப் பொறுத்த வரை.. போராட்டம் 1981 இல் ஆரம்பமாகி அவர் லண்டனுக்கு வந்ததும் முடிந்து விட்டது.

ஆனால்.. போராட்டம் 1972 இல் ஆரம்பமாகி.. 2009 தாண்டியும் நடந்து கொண்டு தான் உள்ளது.

பல்வேறு தலைமைகள்.. பல்வேறு உப தலைமைகள்.. பல்வேறு குழுக்கள்.. பல்வேறு வயதினர்.. பல்வேறு காலங்களில் பிறந்தோர்.. பல்வேறு தளங்களில் இயங்கியோர்.. இயங்குவோர் என்று போராட்டம் நடந்து கொண்டு தான் உள்ளது.

எங்கினையோ அப்பத்தா காலத்தில கூடி இருந்து ஹோட்டல்ல சாப்பிட்ட படத்தைப் போட்டு அவர்கள் தான் போராட்ட முழுமைக்கும் சொந்தமானவர்கள்.. அவர்கள் தான் போராட்டமே.. அவர்களை எனக்குத் தெரியும் என்பதால்.. நானே போராட்டம் பற்றி முழுதும் அறிந்தவன் என்பது எல்லாம்.. அர்ஜூன் யாழில் காட்டும் வழமையான படம் தான். இதையே தான் ஒட்டுக்குழு தளங்களும் செய்து வருகின்றன.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக லிங்கன் இருக்கிறார் என்று கனவு காண்போர் இருக்கலாம்.. ஆனால் அங்கு ஜனாதிபதி ஒபாமா. அதேபோல்.. பிரிட்டனின் பிரதமராக.. சேர்ச்சில் உள்ளதாக நினைப்போர் இருக்கலாம்.. ஆனால் இருப்பது கம்ரூன். பல தலைமுறைகளை தாண்டியோர். அவர்கள் எல்லா தலைவர்களின் வரலாற்றை அறிந்து அதன் கீழ் நாட்டை ஆளவில்லை. நாட்டுக்கு இன்று.. நாளை என்ன அவசியமோ.. அதை நோக்கி நாட்டை ஆள்கிறார்கள். இந்த நிலைக்கு நாம் சிந்திக்கும் தன்மை பெறுவதுமட்டுமன்றி.... இந்தக் கால சந்ததியை அதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். அதைவிடுத்து.. கடந்த கால அசிங்கங்களை கிளறிக் கொண்டிருப்பதில் என்ன பயன்..???!

அர்ஜுனுக்கு தெரியாத.. எத்தனையோ விடயங்களை எத்தனையோ யாழ் கள உறவுகள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் பலர் இன்றும் பகிரப்படுத்த முனைவதில்லை. அதற்கு முக்கிய காரணம்.. 1980 களில் இருந்த போட்டி பொறாமை போராட்ட சூழல்.. 1986 இக்குப் பின் அருகி.. 1990 முதல்.. 2009 வரை மக்கள் போராட்டமாக அது பெற்ற வடிவம் தான். போராட்டத்தில் பங்கேற்காத மக்கள் இல்லை என்ற நிலை தான்.. 2009 இல் வன்னி மக்கள் மத்தியில். இதே 1981 இல் எவன் போராட்டத்தில் பங்கெடுத்தான் என்ற நிலை.

இன்றைய போராட்டம் புலம்பெயர் இளைய சமூகத்தின் கையில். பல இளையோர் அமைப்புக்கள் துடிப்புடன் செயற்படுகின்றன. பல இளைஞர்கள் பல்கலைக்கழகங்கள் பூரா அதனை முன்னெடுக்கிறார்கள். அர்ஜூன் இன்னும் ஊர்மிளாவையும் உமாமகேஸ்வரனின் வரலாற்றையுமே முன்னிற்கு நிறுத்த முனைகிறார். காரணம்.. யாழிலும் அந்த அடையாளங்களை விதைக்கனும் என்ற எண்ணமே தவிர.. இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு மக்களின் விருப்புக்கள் வெல்லனும் என்பது அல்ல.

ஆனால்.. இந்தப் போராட்டம் வெற்றி பெறனும்.. என்று இன்னும் உழைக்கும் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் பற்றி தெரிந்து கொள்வதே இன்றைய அவசியம். கடந்த கால காட்டிக்கொடுப்பாளர்களின் வரலாற்றை அறிந்து என்ன பயன்..????! :icon_idea:

Edited by nedukkalapoovan

கஃபூரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் கோசான்.

என்னுடைய நன்பன் ஒருவன் கொழும்பு சென்ட்.தோமஸ் கல்லூரியில் படித்து கலவரத்தின் பின் ஈப்ஸில் இணைந்தான். சம்பந்தரின் தூரத்து உறவினன். பின் தாயும் சகோதரியும் ஒவ்வொரு முகாமாகப் போய் அழுது ஒப்பாரி வைத்து அவனை ஒருமாதிரி வெளியே எடுத்தார்கள். 

.

Edited by ஈசன்

  • தொடங்கியவர்

தம்பி ,

எனக்கு தெரிந்தவர்களை அந்த காலகட்டத்தில் நடந்வற்றையும் உண்மையையும் தான் நான் எழுதுகின்றேன் .

ஓயாத அலைகள் பற்றியோ ஜெயசுக்குறு பற்றியோ  அல்லது பால்ராஜ் பற்றியோ சூசை பற்றியோ நான் எழுதுவதில்லை .அவர்களையும் தெரியாது அங்கு நடந்ததும் தெரியாது .

ஆனால் இவை எதுவுமே தெரியாமல் யாழில் வந்து எல்லாம் தெரிந்தது மாதிரி எழுதுவதை பார்க்கத்தான் செம கடுப்பாக இருக்கு .

நான் மேலே போட்ட படத்தில் அனைவரையும் ஒருமுறையாவது சந்தித்து இருக்கின்றேன் முடியுமானால் யாரும் வந்து சொல்லுங்கோ எங்களுக்கும் அவர்களை தெரியும் என்று .

படம் மட்டும் காட்ட தொடங்கியவர்கள் இப்போ என் போன்றவர்களால் இனம் காட்டப்பட்டு ஓடி முழிப்பதும் எனக்கு விளங்குது .

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ,

எனக்கு தெரிந்தவர்களை அந்த காலகட்டத்தில் நடந்வற்றையும் உண்மையையும் தான் நான் எழுதுகின்றேன் .

ஓயாத அலைகள் பற்றியோ ஜெயசுக்குறு பற்றியோ  அல்லது பால்ராஜ் பற்றியோ சூசை பற்றியோ நான் எழுதுவதில்லை .அவர்களையும் தெரியாது அங்கு நடந்ததும் தெரியாது .

உங்களின் இந்தக் கருத்தை வரவேற்கிறோம்.

அதேவேளை மற்றவர்களை மட்டம் தட்ட இத்தலைப்பை பாவிப்பதிலும்.. படம் சார்ந்து இன்னும் பலதை நேர்மையோடு எழுதினால்.. ஒரு சிறிய வரலாற்றுக் குறிப்பாக இது மாறி நிற்கும்.

உங்களை தூண்டிவிட்டு கூத்துக் காட்டுவோரையும் புறக்கணித்து விட்டு இதனை நடைமுறைப்படுத்தினால்.. உங்கள் மீதான மரியாதை கூடி நிற்கும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

கேதீசைப் போய் மாவை எண்டு சொல்லும் அளவுக்கு இருக்கு உங்கள் வரலாற்று அறிவு. இந்த கேதீஸ் கடைசியில் கொல்லப்படும் போது அரசுடன் முரண்படிருந்தார். எனவே இவரை கொன்றது புலியா இல்லை அரசா என்பது இன்னும் விலகாத மர்மம்.

எமது வரலாறு என்பது எல்லாராலும் வாழப்பட்டது. உங்கள் வயதை விட எனக்கு வயது குறைவு. எனக்கு என் சமகாலத்தில் நிகழ்ந்த ஓயாத அலைகளை, தவளையை, ஆகாய கடல்வழிச் சமரை, ஆனந்தபுரம் பெட்டிச்சண்டையை தெரிந்திருக்கிறது. புலிகளின் தளபதிகள் பற்றியும் தெரிகிறது.

அதே சமயம் புலிகளின் வரலாறு மட்டுமே எமது வரலாறு, 1990 ற்கு பின் நான் கண்ணால் கண்டது காதால் கேட்டது மட்டுமே வரலாறு என்று நான் இருக்கவில்லை. ஒவ்வொரு வகையில் இவ்வொருவரிடமிருந்தும் எம் அண்மைய வரலாற்றை பற்றி தகவல்களை சேகரிக்க முயல்கிறேன்.

போராட்ட வரலாறு = புலிகள்+ஏனையோர் வரலாறுகள் என்பதே உண்மை.

86இல் ஈபி எனும் ஒரு 90% நேர்வழியில் போன இயக்கத்தை 87 ற்கு பின் 100% கயவர் கூட்டமாக மாற்றியதில் புலிகளின் பங்கு என்ன?

ஒரு உதாரணம் காரநகரில், டெலோவை புலிகள் அடிக்க வந்த போது அதுவரை நேவிக்கு எதிராக சென்றி நின்ற டெலோகாரர் எல்லாம் நேராக நேவியிடம் போய் சரணடைந்தனர்.

86 க்கு முன் ஒட்டுக்குழுக்களாக யாராவது இருந்த்ஹார்களா? தனிப்பட்ட காட்டிக்கொடுப்பாளர் இருந்தார்கள், ஆனால் ஆயிரக்கணக்கில், பயிற்றுவிக்கப்பட்ட, நம் இன போராளிகளையே ஒரு நாளில் எதிரிக்கு சார்பாக மாற்றிய புத்திசாலிகள் யார்?

வரலாறு எல்லாவற்றையும் பதிந்து கொண்டே போகிறது.

ஒரு உதாரணம் காரநகரில், டெலோவை புலிகள் அடிக்க வந்த போது அதுவரை நேவிக்கு எதிராக சென்றி நின்ற டெலோகாரர் எல்லாம் நேராக நேவியிடம் போய் சரணடைந்தனர்.

 தவறான தகவல் கோசான்.

  • கருத்துக்கள உறவுகள்
86இல் ஈபி எனும் ஒரு 90% நேர்வழியில் போன இயக்கத்தை 87 ற்கு பின் 100% கயவர் கூட்டமாக மாற்றியதில் புலிகளின் பங்கு என்ன?

லெபனானில் பயிற்சி எடுத்த ஆட்களுக்கு புலிகளுடன் அடிபடவும் முடியவில்லையா? மாக்சிசத்தை கரைத்து குடித்த ஆட்களுக்கு புலிகளுடன் சமரசம் செய்யவும் முடியவில்லை. உண்மை நிலை என்பது புலிகளை எப்படியாவது யாருடன் சேர்ந்தாவது மடக்கி விடலாம் என்று மனப்பால் குடித்தவர்களின் கணக்கு பிழைத்து விட்டது என்பதும் வரலாறு ஆகும்.

புலிகளுடன் அடிபடவா லெபனாலில் பயிற்சி எடுத்தார்கள் ,இன்னமும் எமது எதிரி யாரென்று தெரியாமல் ஒரு கூட்டம் இருப்பதை நினைக்கவியப்பாக இருக்கு .

கையை பிடித்து விட்டு கழுத்தில கையை வைத்த ------------ 

காட்டிக்கொடுக்கும் போது மட்டும் புலிகள் எதிரி என தெரிந்ததா??

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் அடிபடவா லெபனாலில் பயிற்சி எடுத்தார்கள் ,இன்னமும் எமது எதிரி யாரென்று தெரியாமல் ஒரு கூட்டம் இருப்பதை நினைக்கவியப்பாக இருக்கு .

கையை பிடித்து விட்டு கழுத்தில கையை வைத்த ------------ 

சுழிபுரத்தில் வெட்டி தாட்டத்தை பற்றியா சொல்கிறீர்கள்?

மறுபடியும் நான் பதிந்த கருத்து காரணமில்லாமல் தூக்கப்பட்டிருக்கிறது.

ஈபியில் இருந்த கபூர் எனும் அற்புதமான போராளி பற்றி எழுதியிருந்தேன். கொழும்பின் மேல்த்தட்டு ரோயல் கல்லூரியில் கற்றவர். வாழ்க்கையை செழிப்பாக கொண்டுபோகும் அத்துணை வாய்ப்புக்களையும் உதறிவிட்டு போராட வந்தார். காரணமில்லாமல் கடும் சித்திரவதையின் பின் கொல்லப்பட்டார், அவரின் குடும்பமும் கொடுமைக்கு ஆளானாது.

பொகவந்தலாவையில் பிறந்த டேவிற்சனும் இப்படி ஒருவரே.

மில்லருக்கும், பால்ராஜுக்கும், அங்கையர்கண்ணிக்கும் எவ்வகயிலும் குறையாத மாவீரர்கள் இவர்களும்.

ஆனால் எமக்காக போராட வந்த இந்த அற்புதமானவர்களின் மீதான நரவேட்டையை நாமே கண்டும் காணாமல் இருந்தோம், என்பது மட்டுமில்லாமல் தொடர்ந்தும் அப்படியே இருக்கிறோம் என்பதே வேதனை.

இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.
 
ஊரின் கருத்தே இல்லாமல் போயிருக்கு ...... அதை பற்றி வாய் திறந்தீர்களா?
எப்பவும் உங்கள் புராணம் மட்டுமே பாடிக்கொண்டு இருக்கிறது. 
 
நடப்பவைகளையும் தாண்டி நடக்கவேண்டும் என்பதுதான் பயணம்.
நடந்ததை வைத்து ஒப்பாரி வைப்பதில் நிறைய உள்நோக்கம் இருக்கு. பொதுநோக்கு என்று என்ன இருக்கு? 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

கேதீசைப் போய் மாவை எண்டு சொல்லும் அளவுக்கு இருக்கு உங்கள் வரலாற்று அறிவு. இந்த கேதீஸ் கடைசியில் கொல்லப்படும் போது அரசுடன் முரண்படிருந்தார். எனவே இவரை கொன்றது புலியா இல்லை அரசா என்பது இன்னும் விலகாத மர்மம்.

எமது வரலாறு என்பது எல்லாராலும் வாழப்பட்டது. உங்கள் வயதை விட எனக்கு வயது குறைவு. எனக்கு என் சமகாலத்தில் நிகழ்ந்த ஓயாத அலைகளை, தவளையை, ஆகாய கடல்வழிச் சமரை, ஆனந்தபுரம் பெட்டிச்சண்டையை தெரிந்திருக்கிறது. புலிகளின் தளபதிகள் பற்றியும் தெரிகிறது.

அதே சமயம் புலிகளின் வரலாறு மட்டுமே எமது வரலாறு, 1990 ற்கு பின் நான் கண்ணால் கண்டது காதால் கேட்டது மட்டுமே வரலாறு என்று நான் இருக்கவில்லை. ஒவ்வொரு வகையில் இவ்வொருவரிடமிருந்தும் எம் அண்மைய வரலாற்றை பற்றி தகவல்களை சேகரிக்க முயல்கிறேன்.

போராட்ட வரலாறு = புலிகள்+ஏனையோர் வரலாறுகள் என்பதே உண்மை.

86இல் ஈபி எனும் ஒரு 90% நேர்வழியில் போன இயக்கத்தை 87 ற்கு பின் 100% கயவர் கூட்டமாக மாற்றியதில் புலிகளின் பங்கு என்ன?

ஒரு உதாரணம் காரநகரில், டெலோவை புலிகள் அடிக்க வந்த போது அதுவரை நேவிக்கு எதிராக சென்றி நின்ற டெலோகாரர் எல்லாம் நேராக நேவியிடம் போய் சரணடைந்தனர்.

86 க்கு முன் ஒட்டுக்குழுக்களாக யாராவது இருந்த்ஹார்களா? தனிப்பட்ட காட்டிக்கொடுப்பாளர் இருந்தார்கள், ஆனால் ஆயிரக்கணக்கில், பயிற்றுவிக்கப்பட்ட, நம் இன போராளிகளையே ஒரு நாளில் எதிரிக்கு சார்பாக மாற்றிய புத்திசாலிகள் யார்?

வரலாறு எல்லாவற்றையும் பதிந்து கொண்டே போகிறது.

ஒரு புனைகதையை புனைதிருக்கிரீர்கள் அல்லது உங்களுக்கு யாரோ அப்படி பொய்யாக சொல்லியிருக்கிறார்கள். (டெலோ பற்றியது)
லிபரசன் ஒபெரசன் நேரம் ஆமியிடம் பிடிபட்டு பூசா போனவர்கள் ஈபி போராளிகள்தான் மயிலிட்டி இன்பிலிட்டி பகுதிதான் முதல் கட்டமாக ஆமியிடம் போனது. அவர்களை சும்மா பயிற்சி என்று வித்தை காட்டி கல்லுரோட்டில் குரோல் இழுக்க்விட்டு முழங்கை முழுக்க காயம். ஆமி வந்து கையில் இருந்த தளிம்பை பார்த்தே பிடித்து பூசா அனுப்பினான். 
 
மற்றது .....
1986இற்கு முன் சொந்த இனத்தை போட்டுத்தள்ள ஒருவன் இருப்பன் என்பது எதிரிக்கும் தெரியாது.
சிலுக்கு ஸ்மிதா கமுனுட்டியை காட்டினால் 
தாயை கூட கூட்டிவிட ஒரு கூடம் இருந்ததை அதன் பின்தான் இந்தியா கண்டு பிடித்தது.
 
புலிகள் அவர்களை அடித்தால்.
சொந்த இனத்தை அடிப்பது என்பதற்கும்...... புலிகள் அடித்தார்கள் என்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?
 
ஒரு உதாரனத்திட்கு நானும் நீங்களும் அர்ஜுன் அவர்களின் அடுத்த பிறந்தநாளை 1984இல் தம்பா மகேஸ்வரன் சென்னையில் பிடிபட்டு சிறை சென்றார் என்ற பரம உண்மையை தெரிந்து வைத்திருப்பதால் மிக விமர்சையாக கொண்ட்டாட வேண்டும் என்று திட்டங்கள் போட்டு முயற்சிக்கிறோம்.
பிறந்த நாளிற்கு இரண்டு மாதம் முன்பு உங்கள் போக்கு சரியில்லை என்று நான் உங்களை அடித்து விடுகிறேன்.
இதற்கு நீங்கள் போய் அர்ஜுன் அவர்களை அடிப்பது என்பது என்ன லொஜிக் ?
 
நீங்கள் பிறந்தநாள் கொண்டாடத்திட்கு காத்திருந்த அர்ஜுன் அவர்களை அடித்த பச்சை துரோகத்திற்கு. நான் உங்களை அடித்தேன் என்பது எப்படி நிஜாயம் ஆகும்?
 
புலி மீது சும்மா பழிபோடாதீர்கள்.
உங்கள் பக்க நிஜாயங்களை எழுதுங்கள் அதுவே ஒரு கருத்தாடலை உருவாக்கும்.
 
இல்லாதுபோனால் சும்மா புலி வாந்தியாகத்தான் இருக்கும். பின்பு விமர்சனங்களை இவர்களுக்கு ஏற்க தெரியாது என்று சடைய வேண்டி வரும். 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

கேதீசைப் போய் மாவை எண்டு சொல்லும் அளவுக்கு இருக்கு உங்கள் வரலாற்று அறிவு. இந்த கேதீஸ் கடைசியில் கொல்லப்படும் போது அரசுடன் முரண்படிருந்தார். எனவே இவரை கொன்றது புலியா இல்லை அரசா என்பது இன்னும் விலகாத மர்மம்.

உங்களுக்கு தமிழ் விளக்கமும் குறைவு. மாவை ஐயா போல் உள்ளார் என்று தான் எழுதி உள்ளோம். மாவை ஐயாவே என்று எழுதவில்லை. கவனிக்கவும்.. உணர்ச்சி வசப்படாமல்.. எழுதி உள்ள தமிழை விளங்கி வாசிக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள். எங்கு சந்தேகம் தொனிக்கிறது.. எங்கு தீர்க்கம் உள்ளது என்பதை.  :lol:

மேலும் இவர்களை எல்லாம் தெளிவாக அறிந்து கொண்டிருக்கக் கூடிய அளவுக்கு இந்தப் படத்தில் உள்ளோர் எல்லாரும் முக்கியமானவர்கள் கிடையாது. அந்தந்த காலத்தில் வளர்ந்திருந்தோருக்கு இவர்கள் பற்றி கூடிய அறிமுகம் இருந்திருக்கும். ஆனால் இவர்களின் பின்னைய காலச் செயற்பாடுகளை மக்கள் நாங்கள் நேரடியாக அனுபவித்திருக்கிறோம் (1987 உட்பட்ட காலங்களின் பின்). அந்த வகையில் இவர்களில் சிலரின் கோர முகம் என்பது என்னென்று தெரியும்.

நீங்க ரெம்பத்தான் இவர்களை வரலாற்று நாயகர்கள் ஆக்க பாடுபடுறீங்க. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்..! :icon_idea:

அர்ஜூன் அண்ணா இவர்கள் பற்றிய இவர்களின் அந்தக் காலச் செயற்பாடுகளைச் சொல்ல அனுமதிக்கலாமே. 1987 க்கு முன்னர் இவர்கள் எப்படி இருந்தார்கள் என்று அறியும் வாய்ப்பை ஏன் நீங்க தட்டிப்பறிக்கிறீர்கள். உங்களுக்கு கனக்கத்தெரியும் என்று காட்டவா..????! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் விடயம், இவ்வாறு சரணடைந்தவர்கள் இருவர், மற்றும் சரணடைய கூட்ட்டிச்சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆகியோரிடம் நேரில் பேணி அறிந்தது. இதை எல்லாம் என்ன கல்வெட்டிலா எழுதி வைப்பார்கள். இங்கேயும் காரைநகரை சேர்ந்தோர் பொஅத் இருக்கலாம். சிலவேளைகளை அவர்கள் நான் சொல்வதை உறுதிசெய்யக்கூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.