Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28_obama_diwali_820342f.jpg

PHO-10Nov08-266854.jpg

1359447051_Diwali-at-White-House.jpg

  • Replies 140
  • Views 16.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில எது தவறு ,எதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை .என்ன சொல்ல வாரீங்க கொஞ்சம் புரியும்படி சொல்லலாமே ................மற்றவனையும் லூசன் எண்டு நினைத்து கருத்திட வேண்டாம் ............... :D  :D  :D

புரிந்துகொள்ளக் கூடியவர்கள் ஒரு வரியிலேயே புரிந்துகொள்வர். நான் சொல்லாமலே நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதற்கெல்லாம் நான் பொறுப்காக முடியாது :lol::icon_idea:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி நாம் படிக்கும் காலத்தில் வாத்தியார் எதைச் சொன்னாலும் நம்பிக்கொண்டு எதிர்த்துக் கேள்வி கேட்கவும் பயந்துகொண்டிருந்தோம். ஆனால் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் அறிவுபூர்வமாக நிறைய விடயங்களிச் சிந்திக்கின்றனர்.

உங்கள் நண்பரின் இணையத்தளம் என்பதற்காக நான் கூறவில்லை. பொதுவாக எனக்கே எமது புராணக் கதைகளில் நம்பிக்கை இல்லை. அதற்காக நான் எல்லாவற்றையும் நம்பவில்லை என்றும் இல்லை. ஆரியர்களால் மனிதர்களை மடையர்களாக்கப் புனையப்பட்ட கதைகளை எல்லாம் உண்மையாய் நடந்தவை என்று நம்பிக்கொண்டு அவற்றைப் பற்றி எள்ளளவேனும் உண்மையாக நடந்திருக்குமா என்று சுயமாகச் சிந்திக்காது அதை எம் சந்ததிக்கு நான் பரப்புவதும் தவறு. குழந்தைகள் என்பதற்காக அவர்கள் மனங்களில் தவறான ஒரு கருத்தைப் பதியவைப்பதும் தவறு.

எத்தனையோ பேர் பார்ப்பதனால் அந்தத் தளத்தில் இருப்பவை எல்லாமே சரி என்கின்ற உங்கள் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது நாதமினி. ஆனால் அவரின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியதுதான்.

கட்டாயம் பள்ளியில் தான் ஒரு பிள்ளை சமய அறிவைப் பெறவேண்டும் என்பதில்லையே நாதமுனி. பெற்ரோர் எதைச் செய்கிறார்களோ அதையே பிள்ளைகளும் ஏற்றுக்கொள்கின்றனர்.

நான் எழுதியதில் என்ன தவறு ???  நான் என் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும் போது அவர்களுக்கு பல விடயங்களைச் சொல்வேன். எம் சமயம் பற்றியது. அதற்காக சந்திரன் தேய்வதற்குப் பிள்ளையார் நடனம் ஆடிய கதை அல்ல. அவர்கள் அதைக் கேட்டே வளர்ந்தனர். அதன்பின் ஒன்று இரண்டு தடவை தான் என்னுடன் கோவிலுக்கு வந்துள்ளனர். ஆனால் என் பதின்மூன்று வயது மகளுடன் படிக்கும் கிறித்தவ மாணவி - இடையில் மதம் மாறியவர், என் மகளுடன் தர்க்கம் செய்தபோது என் மகள் நான் உன்னுடன் படிக்கிறேன். நீ உன் மதத்தைப் பற்றி என்னுடன் வீட்டுக்குப் போகும் முக்கால் மணிநேரம் அதுபற்றிச் சொல்லி என்னை முடிந்தால் மதம் மாத்து பார்க்கலாம் என்று சவால் விட்ட கதையை நான் பெருமைக்காகக் கூறவில்லை. நாம் சொல்லிக் கொடுப்பது எம் பிள்ளைகள் மனதில் ஆளப் பதியும் என்பதைக் கூறவே. எனது பள்ளிக்கு வரும் பிள்ளைகள் ஒருவருக்குக் கூட தாங்கள் தமிழர் என்பது கூடத் தெரியாதவர்கள. அவர்களுடன் பெற்றோரும் எதுவும் கதைப்பதில்லை என்பதும் எமது சமய நெறி பற்றிய அறிவை அவர்களுக்குத் தரவே அரை மணிநேரம். அது போதும் என்று நான் கூற வரவில்லை. அதற்கு மிஞ்சி அவர்களுக்குக் கற்பிக்க நேரம் இன்மைதான் காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் திரியில் கூற வந்த விடயத்தை பலர் தவறாக எடுத்துக்கொண்டு திரியின் விடயத்தை திசைதிருப்பவே பல கருத்துக்களை வைக்கின்றீர்கள். அது ஏன் ???? உண்மையில் உங்களுக்கு நான் கூறியிருப்பது விளங்கவே இல்லையா ?????அல்லது ......

நாம் இங்கு படிவங்களை நிரப்பும் போது எந்த மதம் என்று கேட்டிருப்பதற்கு சைவர் என்றே தான் போடுவேன்.

எமது மதம் சுமேரிய நெறியின் தொடர்ச்சி. அதுபற்றிஎல்லாம் இப்போது எழுத மனமோ நேரமோ இல்லை.

நாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்து பயனில்லை. நிறைய மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எமது சமய நெறியில்.

28_obama_diwali_820342f.jpg

PHO-10Nov08-266854.jpg

1359447051_Diwali-at-White-House.jpg

எனக்குப் புரியவில்லை மருதங்கேணி. இவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. தமது வோட்டுக்காகவும் தம்மைப் பரப்பவும் எதுவும் செய்யக்கூடியவர்கள். இவர் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் உள்ளவர்கள் இதைத்தான் செய்கின்றனர். இதில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று விளங்கவில்லை.
 
உங்கள் பள்ளியா?

அது எங்கே உள்ளது?

விளக்கமாக சொல்லமுடியுமா??

ஏனண்ணா பிரான்சில் பள்ளிக்கூடம் இல்லையோ. உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகளைப் படிக்க அனுப்ப ????
 
  • கருத்துக்கள உறவுகள்

ஏனண்ணா பிரான்சில் பள்ளிக்கூடம் இல்லையோ. உங்களுக்குத் தெரிந்த பிள்ளைகளைப் படிக்க அனுப்ப ????

எனது கேள்விக்கு பதிலில்லை.....

உங்களது சொந்த பாடசாலையா?

அப்படியென்றால் அதன் யாப்பு என்ன?

மதம் சார்ந்த அதன் நிலை என்ன?

இந்துப்பாடசாலை என உங்கள் யாப்பில் இருந்தால் மட்டுமே இவ்வாறு நீங்கள் செய்யமுடியும்.

மற்றும்படி

தர்மப்படியும்

சட்டப்படியும் நீங்கள் செய்வது குற்றமாகும்..... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக என்பதற்குப் பதில் ஒன்று தான்: அவர்கள் விரும்புகிறார்கள், செய்கிறார்கள். விரும்பாதோர் செய்ய வேண்டியதில்லை! "அது ஏன் சிலர் விரும்புகிறார்கள்?" என்று அடுத்த கேள்வி கேட்பது அர்த்தமற்றது! அப்படிக் கேட்டால், நீங்கள் என்ன சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுகிறீர்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்றெல்லாம் திரி தொடங்கி சேர்வர் இடத்தை நிரப்பலாம்! குற்றம் இல்லை, ஆனால் மூலவள விரயம்! அவ்வளவு தான்!

விவாதித்துத் தெளிய வேண்டிய அளவுக்கு இது ஒன்றும் சமூகப் பிரச்சினை இல்லை! இது போன்ற திரிகள் திசை மாறிப் போக இந்த முக்கியத்துவம் இன்மையே பிரதான காரணம்.

புரிந்துகொள்ளக் கூடியவர்கள் ஒரு வரியிலேயே புரிந்துகொள்வர். நான் சொல்லாமலே நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதற்கெல்லாம் நான் பொறுப்காக முடியாது :lol::icon_idea:

நன்றி வணக்கம்  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புரியவில்லை மருதங்கேணி. இவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. தமது வோட்டுக்காகவும் தம்மைப் பரப்பவும் எதுவும் செய்யக்கூடியவர்கள். இவர் மட்டுமல்ல எல்லா நாட்டிலும் உள்ளவர்கள் இதைத்தான் செய்கின்றனர். இதில் என்ன சொல்ல வந்தீர்கள் என்று விளங்கவில்லை.

இந்து மதத்தை அழிக்கும் பணியை இந்துக்கள் எப்போதோ அதி தீவிரமாக செய்ய தொடங்கி விட்டார்கள்.
இந்தி மதம் என்றால் என்ன?
யார் கடவுள் ?
தத்துவம் என்ன ?
மார்க்கம் என்ன ?
என்று 20 வயதை தாண்டி சைவ கோவிலுக்கு  நாளும் சென்று வந்த எனக்கே தெரியாது. 
யாரும் சொல்லி தந்ததும் இல்லை ............ உண்மையை சொன்னால் சொல்ல புரானகதையை விட்டால் வேறு ஒன்றும் இல்லை.
 
சித்தர்கள் எழுதிவைத்த அரிய விடயங்களையும் இந்துமதத்தின் மூட நம்பிக்கை அள்ளி கொண்டு போய்விட்டது.
தமிழனை அழித்தோம் என்று வட இந்தியன் மகிழ்ச்சியாக தீவாளி கொண்டாடுகிறான். அவனை விட விமர்சையாக அழிந்த தமிழன் அதை கொண்டாடுகிறான். 
 
உள்ள பாம்பு பூச்சியெல்லாம் கடவுளாக இருக்கும்போது .........
அருமையான மனிதர்களாக வாழ்ந்த ஜேசு  முகமது போன்றவர்களையும் பிள்ளையாருக்கு தம்பிஆக்கி வணங்குவதால் ஒன்றும் குறைந்துவிட போவதில்லை. 
முருகனை பிள்ளையாருக்கு தம்பி ஆக்க வில்லையா ? அப்படி தம்பி ஆகிவிட்டால்.
 
ரம்ப்லான் கிறிஸ்மஸ் என்று எல்லாத்தையும் கொண்டாடி வருடம் பூர சந்தோசமா இருக்கலாம்.
என்ன நீங்கள் அடம் புடிச்சுகொண்டு நின்றாலும் .... கடைசி கப்பலில் ஏற வேண்டிய நிலைதான் வரும்.  முன்னுக்கே போனால் எங்களுக்குத்தான் லாபம்.
எங்களது கடவுள்களை மறந்து போனால்தான் அவர்கள் கோவிப்பார்கள். (ஜெகோவ அல்லலூயவிட்கு தாவிற ஆட்கள் மாதிரி) வைரவர் வீரவத்திரர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு  போவம். 
 
நான் இணைத்த படம் அமெரிக்க அரசு அதிபர் மாளிகையில் உத்தியோகபூர்வமாக கடந்த தீபாளியை கொண்டாடி இருந்தார்கள். ஒபாமா இனி தேர்தலில் நிற்க போவதில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ............
அதைதான் அந்த படம் மூலம் சொல்ல வந்தேன். 
  • கருத்துக்கள உறவுகள்

இதில குத்தி முறிய ஒன்டும்மிலலை.உங்களுக்கு விருப்பம் என்டால் செய்யுங்கோ அல்லாட்டால் விடுங்கோ.மற்றவனை செய் அல்லது செய்யாதை என்டு சொல்வது பிழை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக என்பதற்குப் பதில் ஒன்று தான்: அவர்கள் விரும்புகிறார்கள், செய்கிறார்கள். விரும்பாதோர் செய்ய வேண்டியதில்லை! "அது ஏன் சிலர் விரும்புகிறார்கள்?" என்று அடுத்த கேள்வி கேட்பது அர்த்தமற்றது! அப்படிக் கேட்டால், நீங்கள் என்ன சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுகிறீர்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்றெல்லாம் திரி தொடங்கி சேர்வர் இடத்தை நிரப்பலாம்! குற்றம் இல்லை, ஆனால் மூலவள விரயம்! அவ்வளவு தான்!

விவாதித்துத் தெளிய வேண்டிய அளவுக்கு இது ஒன்றும் சமூகப் பிரச்சினை இல்லை! இது போன்ற திரிகள் திசை மாறிப் போக இந்த முக்கியத்துவம் இன்மையே பிரதான காரணம்.

அப்போ எதையும் எவரும் எப்படியாயினும் செய்துவிட்டுப் போகட்டும் என்றால், அதைப்பற்றி எவருமே விமர்சிக்கவே கூடாதும் என்றால் யாழ் இணையம் மட்டுமல்ல எந்த ஊடகங்களுமே தேவையே இல்லையே. எதிர்காலத்தில் எம் சந்ததியின் அடையாளத்தையே இழக்கச் செய்யக்கூடிய ஒன்றை சமூகப் பிரச்சனையே இல்லை என்னும் உங்கள் அறிவைப் பாராட்டத்தான் வேண்டும். யாழில் திரிகள திசைமாறிப் போவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதில் கூறப்பட்ட விடயத்தை வடிவாக விளங்கி கொல்லாமை. இரண்டு வேண்டுமென்றே திசைமாற்றுதல். இன்னொன்றும் இருக்கு தமக்குப் பிடித்தவர்களின் திரி எனில் அது எந்தக் எனினும் நன்றாக ஓடுவது. முக்கியம் முக்கியம் இன்மை என்பது ஒருவரின் விளங்கிக்கொள்ளும் அறிவைப்ப் பொறுத்தது ஜஸ்டின்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தை அழிக்கும் பணியை இந்துக்கள் எப்போதோ அதி தீவிரமாக செய்ய தொடங்கி விட்டார்கள்.
இந்தி மதம் என்றால் என்ன?
யார் கடவுள் ?
தத்துவம் என்ன ?
மார்க்கம் என்ன ?
என்று 20 வயதை தாண்டி சைவ கோவிலுக்கு  நாளும் சென்று வந்த எனக்கே தெரியாது. 
யாரும் சொல்லி தந்ததும் இல்லை ............ உண்மையை சொன்னால் சொல்ல புரானகதையை விட்டால் வேறு ஒன்றும் இல்லை.
 
சித்தர்கள் எழுதிவைத்த அரிய விடயங்களையும் இந்துமதத்தின் மூட நம்பிக்கை அள்ளி கொண்டு போய்விட்டது.
தமிழனை அழித்தோம் என்று வட இந்தியன் மகிழ்ச்சியாக தீவாளி கொண்டாடுகிறான். அவனை விட விமர்சையாக அழிந்த தமிழன் அதை கொண்டாடுகிறான். 
 
உள்ள பாம்பு பூச்சியெல்லாம் கடவுளாக இருக்கும்போது .........
அருமையான மனிதர்களாக வாழ்ந்த ஜேசு  முகமது போன்றவர்களையும் பிள்ளையாருக்கு தம்பிஆக்கி வணங்குவதால் ஒன்றும் குறைந்துவிட போவதில்லை. 
முருகனை பிள்ளையாருக்கு தம்பி ஆக்க வில்லையா ? அப்படி தம்பி ஆகிவிட்டால்.
 
ரம்ப்லான் கிறிஸ்மஸ் என்று எல்லாத்தையும் கொண்டாடி வருடம் பூர சந்தோசமா இருக்கலாம்.
என்ன நீங்கள் அடம் புடிச்சுகொண்டு நின்றாலும் .... கடைசி கப்பலில் ஏற வேண்டிய நிலைதான் வரும்.  முன்னுக்கே போனால் எங்களுக்குத்தான் லாபம்.
எங்களது கடவுள்களை மறந்து போனால்தான் அவர்கள் கோவிப்பார்கள். (ஜெகோவ அல்லலூயவிட்கு தாவிற ஆட்கள் மாதிரி) வைரவர் வீரவத்திரர் எல்லோரையும் கூட்டிக்கொண்டு  போவம். 
 
நான் இணைத்த படம் அமெரிக்க அரசு அதிபர் மாளிகையில் உத்தியோகபூர்வமாக கடந்த தீபாளியை கொண்டாடி இருந்தார்கள். ஒபாமா இனி தேர்தலில் நிற்க போவதில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்கிறார்கள் ............
அதைதான் அந்த படம் மூலம் சொல்ல வந்தேன். 

உங்கள் ஆதங்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஒபாமா அட்சியில் இல்லாதபோதும் தீபாவளியைக் கொண்டாடுவாரா ???எல்லாமே மற்றவர்களுக்காகத்தானே ஒழிய வேறொன்றும் இல்லை.

அதுதான் நான் சொன்னேனே. தமிழன் மற்றவன் செய்வதை, சொல்வதைக் கண்மூடிக்கொண்டு நம்புவதும் பின்பற்றுவதும் அதில் ஒன்றாகத்தான் இதுவும் ஒன்றாகப் போகிறது.

எனது கேள்விக்கு பதிலில்லை.....

உங்களது சொந்த பாடசாலையா?

அப்படியென்றால் அதன் யாப்பு என்ன?

மதம் சார்ந்த அதன் நிலை என்ன?

இந்துப்பாடசாலை என உங்கள் யாப்பில் இருந்தால் மட்டுமே இவ்வாறு நீங்கள் செய்யமுடியும்.

மற்றும்படி

தர்மப்படியும்

சட்டப்படியும் நீங்கள் செய்வது குற்றமாகும்..... :(  :(  :(

யாப்பைப் பற்றி எல்லாம் உங்களை விட எனக்கு நன்றாகவே தெரியும் அண்ணா :lol: :lol: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாப்பைப் பற்றி எல்லாம் உங்களை விட எனக்கு நன்றாகவே தெரியும் அண்ணா :lol: :lol:  :icon_idea:

மீண்டும் தப்பு

ஒரு பொதுப்பாடசாலையை  எனது பாடசாலை என்பதும்

உங்களது தனிப்பட்ட  விடயங்களை அங்கு கட்டாயப்படுத்தி புகுத்துவதும்

நடைமுறைப்படுத்த முயல்வதும்

பொதுப்பணியில் இருப்பதற்கு தகுதியற்ற தன்மையையும்

பரபட்சம் காட்டக்கூடிய ஆபத்தான சூழலையும்  காட்டுகிறது...

இது சிரிப்புக்கான விடயமல்ல........ :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தப்பு

ஒரு பொதுப்பாடசாலையை  எனது பாடசாலை என்பதும்

உங்களது தனிப்பட்ட  விடயங்களை அங்கு கட்டாயப்படுத்தி புகுத்துவதும்

நடைமுறைப்படுத்த முயல்வதும்

பொதுப்பணியில் இருப்பதற்கு தகுதியற்ற தன்மையையும்

பரபட்சம் காட்டக்கூடிய ஆபத்தான சூழலையும்  காட்டுகிறது...

இது சிரிப்புக்கான விடயமல்ல........ :(  :(

பாடசாலை பற்றி வேறொரு திரி திறக்கிறேன். அதில் உங்கள் வித்தகங்களைக் காட்டுங்கள் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது பள்ளியில் முதல் அரை மணி நேரம் சமய நெறி என்று தான் வைத்துள்ளேன். அதற்காக மூடநம்பிக்கைகளை வளர்க்கும் விடயங்களைச் சொல்லக் கூடாது என்பது என் வேண்டுகோள் ஆசிரியர்களுக்கு.ஆனால் மற்றைய பள்ளிகளுக்கும் செய்யும் படி என்னால் சொல்ல முடியவில்லை. கல்விமேம்பாட்டுப் பேரவைக்கும் அதில் ஆர்வம் இல்லை. இனி பூனைக்கு மணிகட்ட யாராவது வந்தால்த்தான் உண்டு.

இங்கு  பாடசாலையை  கொண்டு வந்து செருகியது நீங்கள் தான்

நானல்ல.... :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  பாடசாலையை  கொண்டு வந்து செருகியது நீங்கள் தான்

நானல்ல.... :(  :(

தேவைக்காகப் பாடசாலை விடயம் கூறப்பட்டதே தவிர தேவையற்று அதுபற்றி விவாதிப்பதற்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மனிதர்களாக வாழ்ந்த ஜேசு முகமது போன்றவர்களையும் பிள்ளையாருக்கு தம்பிஆக்கி வணங்குவதால் ஒன்றும் குறைந்துவிட போவதில்லை.

மனிதர்களை எதற்கு வணங்கவேண்டும் மருது?? அதுவும் முகமது நபி சிறந்த மனிதர் என்று எப்படி சொல்கிறீர்கள்?? சக மனிதர்களுக்கு தீங்கு நினைக்காதவரா அவர்??

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ எதையும் எவரும் எப்படியாயினும் செய்துவிட்டுப் போகட்டும் என்றால், அதைப்பற்றி எவருமே விமர்சிக்கவே கூடாதும் என்றால் யாழ் இணையம் மட்டுமல்ல எந்த ஊடகங்களுமே தேவையே இல்லையே. எதிர்காலத்தில் எம் சந்ததியின் அடையாளத்தையே இழக்கச் செய்யக்கூடிய ஒன்றை சமூகப் பிரச்சனையே இல்லை என்னும் உங்கள் அறிவைப் பாராட்டத்தான் வேண்டும். யாழில் திரிகள திசைமாறிப் போவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அதில் கூறப்பட்ட விடயத்தை வடிவாக விளங்கி கொல்லாமை. இரண்டு வேண்டுமென்றே திசைமாற்றுதல். இன்னொன்றும் இருக்கு தமக்குப் பிடித்தவர்களின் திரி எனில் அது எந்தக் எனினும் நன்றாக ஓடுவது. முக்கியம் முக்கியம் இன்மை என்பது ஒருவரின் விளங்கிக்கொள்ளும் அறிவைப்ப் பொறுத்தது ஜஸ்டின்

:Dபாராட்டுகளுக்கு நன்றி சுமே! நீங்கள் சொல்வது சரி, எது முக்கியம் முக்கியமில்லை என்பது ஒவ்வொருவரதும் அறிவைப் பொறுத்தது! இந்த அறிவில் நாம் இருவரும் வேறு படுவதால் இந்தத் திரியின் முக்கியத்துவமும் வித்தியாசமாக எமக்குத் தெரிகிறது.

ஆனால், கிறிஸ்தவர் அல்லாதோர் கிறிஸ்மஸ் அனுஷ்டிப்பதால் எங்கள் சந்ததியின் அடையாளம் எப்படி அழிந்து போகிறது என்று நீங்கள் நிறுவவில்லை! நீங்கள் குறிப்பிடும் அடையாளம் தமிழ் அடையாளமாக இருந்தால், கிறிஸ்தவனான நான் தமிழ் அடையாளம் அற்றவனா? தமிழ் என்பது மொழியின் அடிப்படையிலான இன அடையாளம். இந்து மதம் தமிழின் ஒரு அடையாளமாக எப்போதில் இருந்து? இந்த விவாதத்தின் அறிவு சார் தன்மை பற்றி நீங்கள் சிலாகித்திருப்பதால் இந்த வினாக்களுக்கு விடைகள் உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன்!

இதைக்கேட்டுத்தான்

நான் நல்லவனாகப்பார்க்கின்றேன் என  வாங்கிக்கட்டினேன்...............

"அரசியல் சரி (politically correct)" ஆக இருப்பது பிற்போக்கு வாதம் எனப் பார்க்கப் படுகிற காலம் இது விசுகர்! தமிழர்களுக்காகப் போராடின எந்த இயக்கமும் ஒரு மத அடையாளத்தை தமிழர்களுக்கு வழங்கும் தவறைச் செய்யவில்லை! இந்துக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பாடசாலையில் கோளறு பதிகம் கேட்டு, சரஸ்வதி பூசைக்கு வேட்டி உடுத்தி, நல்லூருக்கு மச்சம் சாப்பிடாமல் போய்த் திரிந்து வளர்ந்த எனக்கு சுமேயின் அடையாளம் இழத்தல் பற்றிய கருத்து ஆச்சரியத்தை மட்டுமே தருகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை எதற்கு வணங்கவேண்டும் மருது?? அதுவும் முகமது நபி சிறந்த மனிதர் என்று எப்படி சொல்கிறீர்கள்?? சக மனிதர்களுக்கு தீங்கு நினைக்காதவரா அவர்??

மனிதர்களை வணங்க வேண்டும் என்பது எனது வேண்டுதல் இல்லை .......
பாம்பு பூச்சிகளை வணங்கும் நாங்கள் ............ சில மனிதரை மதிப்பதால் வணங்குவதால் நன்மை கிடைக்கும் என்றால் அதை செய்யலாம் என்றுதான் சொன்னேன். 
 
முகமது மிருக நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த மனித கூட்டத்தின் இடையே கடவுள் பயத்தை உண்டாக்கி தான் சார்ந்த சமூகத்தை நெறி படுத்திய ஒருவர்.
அந்த காலத்திலேயே கிருமிகள் பற்றிய அறிவை கொண்டிருக்கிறார். அதனால்தான் மூன்று முறை கடவுளை வணங்குங்கள் வணங்க முன்பு உங்களை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்தார்.
அவரை கடவுள் ஆக்கியபோது மற்ற தமக்கு தேவையான விடயங்களையும் அவர் சொன்னார் செய்தார் என்று இவர்கள்  எதை எதை புகுத்தினார்களோ தெரியாது.
ஜேசுவிட்கும் அதே நிலைதான் ஜேசு தான் கடவுள் என்று ஒருபோதும் சொல்லவில்லை .... இவர்கள்  அவரை கடவுள் ஆக்கி விட்டார்கள்.
முருகன் ஒரு தமிழ் அரசன். முருகன் ஒளவையின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் அது ஆதாரமாக இருக்கிறது 2ஆம் முருகன் சிறுவனாக அதே காலத்தில் இருக்கிறான். ஒருவரின் மனைவிதான் வள்ளி மற்றையவரின் மனைவி தெய்வானை . எல்லாத்தையும் நாங்கள் குளைச்சு பிள்ளையாருக்கு தம்பி ஆக்கவில்லையா??  தமிழ் நாட்டை தாண்டி முருகன் ஓரிடமும் இல்லை. அண்ணர் பிள்ளையார் இந்தியா பூர இருக்கிறார்.
அப்படி முகமது வாழ்வை குளைக்காமலா விட்டிருப்பார்கள் அதுகும் முஸ்லிம்கள். 
 
ஏன் யாரையும் வணங்க வேண்டும்?
எந்த கடவுள் என்றாலும் தங்களை வணங்குங்கள் என்று சொல்கின்றனவா ?
கிறிஸ்தவம் பிறரிடத்தில் அன்பாய் இரு என்று சொல்கிறது. இந்துமதம் பலனை பாராதே கருமம் செய் என்று சொல்கிறது. செர்ச்சிலோ கோவிலிலோ நிற்பவன் எவன் இதை  செய்கிறான்?
தங்களின் பொறுக்கி தனங்களை மறைக்க அங்கு பொய் பட்டை அடித்து விட்டு நிற்கிறான்.
ரோட்டில் சிறுவர்கள் பசியோடு இருப்பார்கள் கோவிலில் இருக்கும் கல்லுக்கு பாலும் தேனும் ஊற்றுகிறான். இப்படி அநியாயங்களை தான் அவர்களால் செய்ய முடியும். 
பசுவின் கன்றை பட்டினியோடு கட்டிவைத்துவிட்டு மாட்டின் பாலை கறந்து கல்லில் ஊற்றுகிறான். வெளியால வந்து பசு மாதா என்கிறான். (மாதாவிற்கே சொந்த கன்றுக்கு பால் கொடுக்க வசதி இல்லை மதம் குறுக்க நிற்குது)
இந்த கேடு கேட்ட புத்தியை மதம் என்று சிறுவர்களுக்கு எப்படி சொல்லிகொடுக்க முடியும்?
 
அதுதான்...
ரம்ப்ளான்  கிறிஸ்மஸ் தீவாளி காதலர் தினம் என்று எல்லாத்தையும் கொண்டாடினால் எல்லாம் இப்போ ஒரு வியாபார  சந்தையில் பொருட்கள் வாங்கி பிடித்தவர்களுடன்  பரிமாறும் நாட்களாகி விட்டது. மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன். 
 
ஊரில் இருந்தால் மாதம் ஒரு கோவில் கொடியேறும் ....
இங்கு என்ன இருக்கிறது? 
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஒபாமா அட்சியில் இல்லாதபோதும் தீபாவளியைக் கொண்டாடுவாரா ???எல்லாமே மற்றவர்களுக்காகத்தானே ஒழிய வேறொன்றும் இல்லை.

அதுதான் நான் சொன்னேனே. தமிழன் மற்றவன் செய்வதை, சொல்வதைக் கண்மூடிக்கொண்டு நம்புவதும் பின்பற்றுவதும் அதில் ஒன்றாகத்தான் இதுவும் ஒன்றாகப் போகிறது.

பின்பு ஒபாமா தனக்கு நேரம் இருக்கும்போது எது பிடிக்கிறதோ அதை செய்வார்.
அரச அதிபராக இருக்கும்போது என்ன செய்தார் என்பதுதான் நாட்டுமக்களுக்கு ..... நன்மை தீமை பயிட்க கூடியது.
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை வணங்க வேண்டும் என்பது எனது வேண்டுதல் இல்லை .......

பாம்பு பூச்சிகளை வணங்கும் நாங்கள் ............ சில மனிதரை மதிப்பதால் வணங்குவதால் நன்மை கிடைக்கும் என்றால் அதை செய்யலாம் என்றுதான் சொன்னேன். 

முகமது மிருக நிலையில் வாழ்ந்துகொண்டிருந்த மனித கூட்டத்தின் இடையே கடவுள் பயத்தை உண்டாக்கி தான் சார்ந்த சமூகத்தை நெறி படுத்திய ஒருவர்.

அந்த காலத்திலேயே கிருமிகள் பற்றிய அறிவை கொண்டிருக்கிறார். அதனால்தான் மூன்று முறை கடவுளை வணங்குங்கள் வணங்க முன்பு உங்களை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்தார்.

அவரை கடவுள் ஆக்கியபோது மற்ற தமக்கு தேவையான விடயங்களையும் அவர் சொன்னார் செய்தார் என்று இவர்கள்  எதை எதை புகுத்தினார்களோ தெரியாது.

ஜேசுவிட்கும் அதே நிலைதான் ஜேசு தான் கடவுள் என்று ஒருபோதும் சொல்லவில்லை .... இவர்கள்  அவரை கடவுள் ஆக்கி விட்டார்கள்.

முருகன் ஒரு தமிழ் அரசன். முருகன் ஒளவையின் காலத்தில் வாழ்ந்திருக்கிறார் அது ஆதாரமாக இருக்கிறது 2ஆம் முருகன் சிறுவனாக அதே காலத்தில் இருக்கிறான். ஒருவரின் மனைவிதான் வள்ளி மற்றையவரின் மனைவி தெய்வானை . எல்லாத்தையும் நாங்கள் குளைச்சு பிள்ளையாருக்கு தம்பி ஆக்கவில்லையா??  தமிழ் நாட்டை தாண்டி முருகன் ஓரிடமும் இல்லை. அண்ணர் பிள்ளையார் இந்தியா பூர இருக்கிறார்.

அப்படி முகமது வாழ்வை குளைக்காமலா விட்டிருப்பார்கள் அதுகும் முஸ்லிம்கள்.

கல்வியறிவு பெருமளவில் இல்லாத அந்தக்காலத்துக்கு முகமது நபிகள் போன்றவர்களின் வழிகாட்டல்கள் நன்மையாக இஉந்திருக்கும். ஆனால் இந்தக்காலத்துக்கு தேவையில்லை.

பழைய அலுவலகத்தில் ஒருவர் பாத்ரூம் சிங்க் க்குள் காலை வைத்து கழுவுவார் தொழுகை நேரத்தில். இதற்காக சப்பாத்து, காலுறை எல்லாவற்றையும் கழட்டுவார். கடைசியில் சுத்தமாக இருந்த காலில் கிருமிகளை ஏற்றுவார்.. :D

ஏன் யாரையும் வணங்க வேண்டும்?

எந்த கடவுள் என்றாலும் தங்களை வணங்குங்கள் என்று சொல்கின்றனவா ?

கிறிஸ்தவம் பிறரிடத்தில் அன்பாய் இரு என்று சொல்கிறது. இந்துமதம் பலனை பாராதே கருமம் செய் என்று சொல்கிறது. செர்ச்சிலோ கோவிலிலோ நிற்பவன் எவன் இதை  செய்கிறான்?

தங்களின் பொறுக்கி தனங்களை மறைக்க அங்கு பொய் பட்டை அடித்து விட்டு நிற்கிறான்.

ரோட்டில் சிறுவர்கள் பசியோடு இருப்பார்கள் கோவிலில் இருக்கும் கல்லுக்கு பாலும் தேனும் ஊற்றுகிறான். இப்படி அநியாயங்களை தான் அவர்களால் செய்ய முடியும். 

பசுவின் கன்றை பட்டினியோடு கட்டிவைத்துவிட்டு மாட்டின் பாலை கறந்து கல்லில் ஊற்றுகிறான். வெளியால வந்து பசு மாதா என்கிறான். (மாதாவிற்கே சொந்த கன்றுக்கு பால் கொடுக்க வசதி இல்லை மதம் குறுக்க நிற்குது)

இந்த கேடு கேட்ட புத்தியை மதம் என்று சிறுவர்களுக்கு எப்படி சொல்லிகொடுக்க முடியும்?

அதுதான்...

ரம்ப்ளான்  கிறிஸ்மஸ் தீவாளி காதலர் தினம் என்று எல்லாத்தையும் கொண்டாடினால் எல்லாம் இப்போ ஒரு வியாபார  சந்தையில் பொருட்கள் வாங்கி பிடித்தவர்களுடன்  பரிமாறும் நாட்களாகி விட்டது. மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன். 

ஊரில் இருந்தால் மாதம் ஒரு கோவில் கொடியேறும் ....

இங்கு என்ன இருக்கிறது?

பூர்வகுடி தமிழர்களின் வழிபாட்டுக்குள் வட இந்திய கடவுளரை செருகியது சில நூற்றாண்டுகளுக்கு முன்னம். ஆதிசங்கரர் உருமாற்றம் செய்து ஏற்படுத்திய மதமே இந்துமதம். ஆகவே, இந்த மதங்களை எல்லாம் revamp செய்யவேண்டிய காலம் ஒன்று நெருங்கியுள்ளது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியறிவு பெருமளவில் இல்லாத அந்தக்காலத்துக்கு முகமது நபிகள் போன்றவர்களின் வழிகாட்டல்கள் நன்மையாக இஉந்திருக்கும். ஆனால் இந்தக்காலத்துக்கு தேவையில்லை.

பழைய அலுவலகத்தில் ஒருவர் பாத்ரூம் சிங்க் க்குள் காலை வைத்து கழுவுவார் தொழுகை நேரத்தில். இதற்காக சப்பாத்து, காலுறை எல்லாவற்றையும் கழட்டுவார். கடைசியில் சுத்தமாக இருந்த காலில் கிருமிகளை ஏற்றுவார்.. :D

பூர்வகுடி தமிழர்களின் வழிபாட்டுக்குள் வட இந்திய கடவுளரை செருகியது சில நூற்றாண்டுகளுக்கு முன்னம். ஆதிசங்கரர் உருமாற்றம் செய்து ஏற்படுத்திய மதமே இந்துமதம். ஆகவே, இந்த மதங்களை எல்லாம் revamp செய்யவேண்டிய காலம் ஒன்று நெருங்கியுள்ளது.. :D

முகமது சொன்னது அந்த காலத்தில் வாழ்ந்த மனித கூட்டத்திற்கு 
இந்த காலத்தில் இப்படி ஒரு முட்டாள் கூட்டம் உருவாகும் என்று அந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்?
அது தவிர அந்த காலத்தில் கொலரா புளு போன்ற தொற்றுநோய் பரவும்போது பாரிய அளவில் மனித கூட்டம் இறந்து போகும். அதை கருத்தில் கொண்டே அப்படியொரு நிலைமயை அவர் தோற்றுவித்தார்.
 
எமது மதத்தை தொடருவது என்றால் அதை திருத்தம் செய்ய வேண்டும்.
இதைதான் நான் திரிக்கு திரி எழுதியதால்  எனக்கு ஞானஸ்தானம் தந்து கிறிஸ்தவன் ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.
இனி எப்படியும் வார கிழமை உங்களுக்கும் ஞானஸ்தானம்தான்.
நாம் கடவுளை நம்பியது பயத்தில் ........... எங்களிடம் இருந்த முனி பேய் வைரவர் பயங்கள் எந்த கேள்வியையும் எம்மில் தோற்றுவிக்க வில்லை.
இங்கு வளரும் குழந்தைகள் அப்படி இல்லை.
சரஸ்வதியை காட்டினால் ........... ஏன் அன்டி சலட்டில் ஏறி இருக்கிறா என்று கேட்கிறார்கள்? 
இதில் இருந்துதான் தொடங்க வேண்டும்.  

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கிறிஸ்மஸ் வாழ்த்தை முகநூலில் மட்டுமன்றி தொலைபேசியிலும் பலர் கிறீத்தவர்கள் அல்லாத பலருக்கும் கிறீத்தவர்கள் அல்லாதவர்கள் அனுப்புகின்றனர். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் மதமும் தனித்துவமானது அவரவர்க்கு. நாம் மற்றைய மதத்தினரை மதிக்கவேண்டும். ஆனால் மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்????  பல இந்து சமயத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் மரம் வைத்து அலங்கரித்து பரிசுப்பொருட்கள் வாங்கிக் குவித்து, அவர்கள் உண்பதுபோலவே உணவுகள் சமைத்து......

அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

மற்றைய மதத்தவர் பலர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வந்து வசிக்கவில்லையா??? அவர்கள் எல்லாம் எமது விழாக்களைக் கொண்டாடினார்களா ???? இது நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. ஆனால் காலப்போக்கில் எமது பிள்ளைகள் மொழியை மறந்தது போல எந்த மதம் என்பதையும் மறந்து கிறித்தவ மதத்தினராக வாழ வழிவகுக்காதா என்னும் ஆதங்கம் தான்.

முதலில் உங்கள் புரிதலே மிக பிழையானதும் கண்டிக்கத்தக்கதுமாக இருக்கிறது. 
இந்து மதம் தமிழர் என்ற இனத்தின் அடையாளம் அல்ல. தமிழர் என்றால் அவர் இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பது பிழையான எண்ணம். 
 
christmas tree வைப்பதும் நத்தார் பார்ட்டி வைப்பதும் முற்று முழுதாக கிறிஸ்தவ மதம் சார்ந்தது அல்ல. மேலை நாடுகளில் இவை வருட கடைசி கொண்டாட்டங்களாகத்தான் பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மட்டும் 25ம் திகதி தேவாலையம் சென்று தமது சமய வழிபாடுகளை மேற்கொள்வார்கள். 
 
இன்னொரு பதிவில் நீங்கள் பாடசாலை நடாத்துவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். அது உண்மையானால் தயவு செய்து உங்கள் பிற்போக்கு தனங்களை சிறுவர்களிடம் பரப்பி விடாதீர்கள். பாடசாலைகளில் அங்கீகரிக்கப்படாத curriculum படிப்பிப்பது சட்டப்படி குற்றம்.  
 
Edited by தெனாலி

ஆம், கிறிஸ்மஸ் மரமான பைன் இன மரங்களை குளிர் காலத்தில் வீட்டினுள் வைக்கும் பழக்கம், நோர்வேப் பக்கங்களில் வாழ்ந்த வைக்கிங்குகளின் நடைமுறை- அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கவில்லை.

சுமே குறிப்பிடும் தமிழ் பாடசாலை கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கீழ், தமிழர்களின் நிதிப் பங்களிப்போடு, பிரித்தானிய அரசின் வரி விலக்கு அல்லது நிதியுதவியோடு இயங்கும் ஒன்றாயின் ஒரு குறிப்பிட்ட மதம் பற்றிய போதனையை வழங்குவது பல விதிகளை மீறும் செயல்! அது தான் சுமே மௌனமாகி விட்டாரோ தெரியவில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.