Jump to content

Recommended Posts

Posted
இனத்தின் அடையாளம் மொழி மட்டும் அல்ல.
 
மொழியும் இன அடையாளத்தின் ஒரு கூறு அன்றி மொழி மட்டுமே இனத்தின் அடையாளம் என்று சொல்ல முடியாது.
 
உதாரணமாக கனடாவிலோ அவுஸ்திரேலியாவிலோ பிறந்து வளரும் எம்பிள்ளைகள் பலர் தமிழ் பேசத்தெரியாது வீட்டிலும் வெளியிலும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இவர்கள் ஆங்கிலேயர் என்ற இனத்தினுள் வருவதில்லை.
 
அதே நேரம் வட கிழக்கு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லீம்கள் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுகிறார்கள். தமிழே அவர்களின் தாய் மொழி. ஆனால் அவர்களே தம்மை தமிழர் என்ற இனத்தினுள் அடக்குவதில்லை.
 
சென்னையில் வாழும் மக்களில் பெரும் தொகையினர் தெலுங்கும் பின்னணியைச் சேர்ந்தவர்கள். சென்னை முன்னர் ஆந்திராவின் பகுதியாக இருந்தது. இவர்கள் எல்லோரும் இப்போது தமிழையே பேசுகின்றனர். 
 
கலாச்சாரமும் இன அடையாளத்தின் ஒரு கூறு. தமிழர் கலாச்சாரத்தில் சைவ சமய‌த்தின் செல்வாக்கு நிரம்ப இருக்கிறது. தமிழர் கலாச்சாரம் சைவசமயத்தின் நடைமுறை வடிவமாகவே இருந்துள்ளது.  
 
இன அடையாளத்தின் இன்னுமொரு கூறு ஒருவனுடைய உயிரியல் அடையாளம். (திராவிட ஜீன்ஸ்).
 
ஆகவே யார் தமிழன் என்ற கேள்விக்கு 
 
தமிழை தாய் மொழியாகக் கொண்டவன்
தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுபவன்
பிறப்பால் திராவிடன்
 
என்பவன் இனத்தின் உள்வட்டத்தினுள் உள்ளான் என்பதை மறுக்க முடியாது.
 
*  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *  *
 
அவுஸ் அரசாங்க பாடசலைகளிலும் சமயக் கல்வி கற்பிக்கிறார்கள்.
தமிழ்ப் பாடசாலைகளில் என்ன கற்பிக்கப் படுகிறது என்பது பாடசாலைகளின் தனிப்பட்ட தீர்மானம். (சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு உட்படதாக இருக்க வேண்டும். உதரணமாக தீவிர பாலியல் கல்வி கற்பித்தல் முடியாது ( Porn ))
 
கிறீஸ்தவ பாடசாலைகளில் கிறீஸ்தவர் அல்லாத சிறுவர்களுக்கு கிறீஸ்தவ சமயத்தை கட்டாயமாகப் போதிக்கிறார்கள். இதுவும் ஒரு Discrimination  தான். ஆனால் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை. ஆகவே தமிழ்ப் பாடசாலைகளில் சைவசமயப் போதனை தவறில்லை. ஆனால் யாப்பில் "கலாச்சரக் கல்வி" என்று ஒரு வசனம் இருக்குமானல் சட்டப் பிரச்சனைகள் வராது என்று நினைக்கிறேன்.
 
  • Replies 140
  • Created
  • Last Reply
Posted

மத வெறி என்பது தமிழினத்திற்கு இல்லாத பண்பு எமது விடுதலைப்புலிகள் கூட மதம் சார்பாக எமது போராட்டத்தை நகர்த்தவில்லை ............நாம் தமிழர்கள் எமக்கு என்று ஓர் அடையாளம் உள்ளது .எம் தேசியம் மதம் என்ற வகையில் வரையறுக்கப்படவில்லை .தமிழர்களாகவே வரையறுக்கப்பட்டு வந்துள்ளது .

.நான் தமிழன் அதற்கப்புறமே எம் சமயம் ...........மதம் நான் மனிதனாக வாழ்வதற்கு மட்டுமே .தமிழனாக வாழ்வதற்கு அல்ல .ஏனனில் தமிழனாக நாங்கள் இருந்தால் மனிதனாக இருப்போம் .........சவூதி அராபியா போல மிருகங்கள் அல்ல தமிழர் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"அரசியல் சரி (politically correct)" ஆக இருப்பது பிற்போக்கு வாதம் எனப் பார்க்கப் படுகிற காலம் இது விசுகர்! தமிழர்களுக்காகப் போராடின எந்த இயக்கமும் ஒரு மத அடையாளத்தை தமிழர்களுக்கு வழங்கும் தவறைச் செய்யவில்லை! இந்துக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட பாடசாலையில் கோளறு பதிகம் கேட்டு, சரஸ்வதி பூசைக்கு வேட்டி உடுத்தி, நல்லூருக்கு மச்சம் சாப்பிடாமல் போய்த் திரிந்து வளர்ந்த எனக்கு சுமேயின் அடையாளம் இழத்தல் பற்றிய கருத்து ஆச்சரியத்தை மட்டுமே தருகிறது!

விடுதலைப் புலிகள் மத அடையாளத்தை தமிழர்களுக்கு வளங்கவில்லைத்தான். ஆனால் அதற்கு எத்தனையோ அரசியல் இராஜதந்திர நகர்வுகள் காரணம். அப்போ எதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களை வெளியேற்றியது ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:Dபாராட்டுகளுக்கு நன்றி சுமே! நீங்கள் சொல்வது சரி, எது முக்கியம் முக்கியமில்லை என்பது ஒவ்வொருவரதும் அறிவைப் பொறுத்தது! இந்த அறிவில் நாம் இருவரும் வேறு படுவதால் இந்தத் திரியின் முக்கியத்துவமும் வித்தியாசமாக எமக்குத் தெரிகிறது.

ஆனால், கிறிஸ்தவர் அல்லாதோர் கிறிஸ்மஸ் அனுஷ்டிப்பதால் எங்கள் சந்ததியின் அடையாளம் எப்படி அழிந்து போகிறது என்று நீங்கள் நிறுவவில்லை! நீங்கள் குறிப்பிடும் அடையாளம் தமிழ் அடையாளமாக இருந்தால், கிறிஸ்தவனான நான் தமிழ் அடையாளம் அற்றவனா? தமிழ் என்பது மொழியின் அடிப்படையிலான இன அடையாளம். இந்து மதம் தமிழின் ஒரு அடையாளமாக எப்போதில் இருந்து? இந்த விவாதத்தின் அறிவு சார் தன்மை பற்றி நீங்கள் சிலாகித்திருப்பதால் இந்த வினாக்களுக்கு விடைகள் உங்களிடம் இருக்கும் என நம்புகிறேன்!

http://www.yarl.com/forum3/index.php?/topic/

மேலே தந்த திரியில் சென்று வாசியுங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும். இக்காலத்தில் பல தமிழர்கள் தமிழைக் கூட வீட்டில் பேசுவது அருகிக் கொண்டு வருகிறது. பலர் கோவில்களுக்குச் செல்வதோ அன்றி வீட்டில் கூட வணங்குவது இல்லை. எம்தலை முறை போனபின் எமது பிள்ளைகளுக்கு தம் பிள்ளைகளை தமிழர்களாக வளர்ப்பது கூடக் கடினமாகவே இருக்கப்போகிறது புலம்பெயர் நாடுகளில். எந்தவித சமயம் சார்ந்த விழாக்கள் வீட்டில் கொண்டாடப்படுவதில்லை, கோவிலுக்கும் செல்வதில்லை, தமிழும் மறக்கும் நிலை வந்தால் எதை வைத்து எம்மை அடையாளப்படுத்துவது, பிள்ளைகள் விரும்புவதுபோல் எமது கொண்டாட்டங்களை நாம் தவறாமல் வீடுகளில் செய்யவேண்டும். பல இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தாய்மொழி தெரிந்திருக்காது. ஆனால் கோவிலுக்குச் செல்வார்கள். விசேட தினங்களில் அவர்கள் இனக்குழு ஒன்றுகூடி அதைக் கொண்டாடுவார்கள். அவர்களிடையே ஒரு உறவை ஏற்படுத்தி வாழ்கின்றனர். ஆனால் தமிழர்கள் மட்டுமே தமது தினங்களைக் கொண்டாடாது மற்றவர் தினங்களைக் கொண்டாடி மகிழும் ஈனர்களாக இருக்கின்றனர்.

அறிவுடமையாக்கப்பட்ட சமயமும் மொழியும் பன்னெடுங்காலமாக சேர்ந்தே வந்திருக்கிறது. வேறுவேறு பெயர்களில் மார்க்கங்கள் அழைக்கப்பட்டாலும் ஒரு கடவுட் கோட்பாட்டிலும் நம்பிக்கைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன.

உங்கள் பிள்ளைகளாவது தமிழைப் பேசலாம் அவர்கள் பிள்ளைகள் மொழியற்ற இன அடையாளம் அற்ற கிறித்தவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவுஸ் அரசாங்க பாடசலைகளிலும் சமயக் கல்வி கற்பிக்கிறார்கள்.

தமிழ்ப் பாடசாலைகளில் என்ன கற்பிக்கப் படுகிறது என்பது பாடசாலைகளின் தனிப்பட்ட தீர்மானம். (சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரம்புகளுக்கு உட்படதாக இருக்க வேண்டும். உதரணமாக தீவிர பாலியல் கல்வி கற்பித்தல் முடியாது ( Porn ))
 
கிறீஸ்தவ பாடசாலைகளில் கிறீஸ்தவர் அல்லாத சிறுவர்களுக்கு கிறீஸ்தவ சமயத்தை கட்டாயமாகப் போதிக்கிறார்கள். இதுவும் ஒரு Discrimination  தான். ஆனால் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை. ஆகவே தமிழ்ப் பாடசாலைகளில் சைவசமயப் போதனை தவறில்லை. ஆனால் யாப்பில் "கலாச்சரக் கல்வி" என்று ஒரு வசனம் இருக்குமானல் சட்டப் பிரச்சனைகள் வராது என்று நினைக்கிறேன்.

நான் முன்பு ஒரு பள்ளியில் நான்கு ஆண்டுகள் அதிபராக இருந்தேன். அங்கே கிறிஸ்தவப் பிள்ளைகள் இருவர் கற்றனர். அவர்களுக்கு நான் இந்து சமயத்தைத் திணிக்கவில்லை. கிறித்தவ ஆசிரியையைக் கொண்டு கிறித்தவத்தையே கற்பித்தேன். இப்போது எனது பள்ளியில் யாரும் கிறித்தவர்கள் படிக்கவில்லை. எனது பள்ளிக்கு யாராவது வந்தாலும் அவர்களுக்கு எனது மதத்தைத் திணிக்கும் வெறி இல்லை. தமிழன் ஒன்று செய்தால் அதைக்  குழப்பவே சிலர் நிற்பார். எந்தச் சட்டச் சிக்கலும் ஏற்படாதவகையில் என் பள்ளியை சுதந்திரமாக நான் நடத்துகிறேன்.

மத வெறி என்பது தமிழினத்திற்கு இல்லாத பண்பு எமது விடுதலைப்புலிகள் கூட மதம் சார்பாக எமது போராட்டத்தை நகர்த்தவில்லை ............நாம் தமிழர்கள் எமக்கு என்று ஓர் அடையாளம் உள்ளது .எம் தேசியம் மதம் என்ற வகையில் வரையறுக்கப்படவில்லை .தமிழர்களாகவே வரையறுக்கப்பட்டு வந்துள்ளது .

.நான் தமிழன் அதற்கப்புறமே எம் சமயம் ...........மதம் நான் மனிதனாக வாழ்வதற்கு மட்டுமே .தமிழனாக வாழ்வதற்கு அல்ல .ஏனனில் தமிழனாக நாங்கள் இருந்தால் மனிதனாக இருப்போம் .........சவூதி அராபியா போல மிருகங்கள் அல்ல தமிழர் 

தமிழினத்துக்கு இல்லை என்று சொல்லிக்கொண்டே மதவெறியுடன் நீங்கள் இருப்பது தெரிகிறது தமிழ்சூரியன். முதலில் உந்த வெறியைக் குறைத்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கிக்கொள்ளப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முகமது சொன்னது அந்த காலத்தில் வாழ்ந்த மனித கூட்டத்திற்கு 
இந்த காலத்தில் இப்படி ஒரு முட்டாள் கூட்டம் உருவாகும் என்று அந்த மனுஷனுக்கு எப்படி தெரியும்?
அது தவிர அந்த காலத்தில் கொலரா புளு போன்ற தொற்றுநோய் பரவும்போது பாரிய அளவில் மனித கூட்டம் இறந்து போகும். அதை கருத்தில் கொண்டே அப்படியொரு நிலைமயை அவர் தோற்றுவித்தார்.
 
எமது மதத்தை தொடருவது என்றால் அதை திருத்தம் செய்ய வேண்டும்.
இதைதான் நான் திரிக்கு திரி எழுதியதால்  எனக்கு ஞானஸ்தானம் தந்து கிறிஸ்தவன் ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.
இனி எப்படியும் வார கிழமை உங்களுக்கும் ஞானஸ்தானம்தான்.
நாம் கடவுளை நம்பியது பயத்தில் ........... எங்களிடம் இருந்த முனி பேய் வைரவர் பயங்கள் எந்த கேள்வியையும் எம்மில் தோற்றுவிக்க வில்லை.
இங்கு வளரும் குழந்தைகள் அப்படி இல்லை.
சரஸ்வதியை காட்டினால் ........... ஏன் அன்டி சலட்டில் ஏறி இருக்கிறா என்று கேட்கிறார்கள்? 
இதில் இருந்துதான் தொடங்க வேண்டும்.  

உண்மையில் எமது சமய நம்பிக்கைகளில் ஆரியர் புகுத்தியவற்றைத் தூக்கிப் போட்டு அறிவு சார் விடயங்களை கொண்டுவந்து எம் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டும். யார் செய்வார் என்று நாம் மற்றவர்களை நம்பிக்கொண்டிருக்காமல் எமது இறைநெறி சார்ந்த எத்தனையோ விடயங்களை தேடி எமது சந்ததிக்குச் சேர்க்காவிட்டால் சமயம் என்ற ஒன்று அற்றவர்களாகவே எமது சந்ததி புலம்பெயர் தேசத்தில் உருவாகப் போகிறது

***

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் உங்கள் புரிதலே மிக பிழையானதும் கண்டிக்கத்தக்கதுமாக இருக்கிறது. 
இந்து மதம் தமிழர் என்ற இனத்தின் அடையாளம் அல்ல. தமிழர் என்றால் அவர் இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்பது பிழையான எண்ணம். 
 
christmas tree வைப்பதும் நத்தார் பார்ட்டி வைப்பதும் முற்று முழுதாக கிறிஸ்தவ மதம் சார்ந்தது அல்ல. மேலை நாடுகளில் இவை வருட கடைசி கொண்டாட்டங்களாகத்தான் பார்க்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் மட்டும் 25ம் திகதி தேவாலையம் சென்று தமது சமய வழிபாடுகளை மேற்கொள்வார்கள். 
 
இன்னொரு பதிவில் நீங்கள் பாடசாலை நடாத்துவதாக குறிப்பிட்டிருந்தீர்கள். அது உண்மையானால் தயவு செய்து உங்கள் பிற்போக்கு தனங்களை சிறுவர்களிடம் பரப்பி விடாதீர்கள். பாடசாலைகளில் அங்கீகரிக்கப்படாத curriculum படிப்பிப்பது சட்டப்படி குற்றம்.  

தமிழர்கள் எல்லோரும் ஒரே சமயநெறியைத் தழுவியவர்கலாகவே இருந்துள்ளனர். போத்துக்கேயர் காலத்தில் கிறித்தவம் பரப்பப்பட்டதுபோலவே வியாபாரத்துக்கு வந்த அரேபியர்களின் திருமணக் கலப்பினால் இஸ்லாமிய மதம் இலங்கையிலும் மொகலாய மன்னன்ர்களின் படையெடுப்பின் பின்னர் இந்தியாவிலும் பரவியது. இந்து மதம் என்னும் பெயர் பிற்காலத்தில் ஆரியரால் சூட்டப்பட்டதாயினும் வழிபாட்டு முறைகள் ஒரு கடவுட் கொள்கைகள் என்பன கிறித்துவுக்கு நான்காயிரம் ஆண்டுகளின் முன்னரே தோன்றிவிட்டது. சுமேரிய மக்களின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றிய மதங்களே கிறித்தவம், இஸ்லாம் என யூத ஆய்வாளர் சாமுவல் நோவா கூறுகிறார். பாடசாலைகளில் இங்கு எமது கலாச்ச்சாரம் மதம் மொழி என்பன கற்பிப்பதற்கு தடை என்று யார் உங்களுக்குச் சொன்னது????.

***

Posted

வெட்டிட்டாங்க வேட்டிட்டானாக் சுமேரியர் அக்காவுக்கு நான் சொல்ல விரும்புவது ..............உண்மை மட்டுமே நிலைக்கும் கொஞ்சம் உண்மை என்றால் என்ன என்பதை உண்மையானவர்கள் மூலம் தெரிந்து கொள்க ஆல் தெ பெஸ்ட் அக்கா  :lol:  :lol:

Posted

விடுதலைப் புலிகள் மத அடையாளத்தை தமிழர்களுக்கு வளங்கவில்லைத்தான். ஆனால் அதற்கு எத்தனையோ அரசியல் இராஜதந்திர நகர்வுகள் காரணம். அப்போ எதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களை வெளியேற்றியது ??

ஒட்டுமொத்தமாக முஸ்ஸிம்களை வெளியேற்றியது மத நம்பிக்கை அடிப்படையில் அல்ல. விடுதலை புலிகள் அமைப்பில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும் மாவீரர்களாகி இருக்கிறார்கள். அவர்களையும் உங்களுடைய நிலைப்பாடு பிரித்துத்தான் பார்க்கிறது. இது சரியான பார்வையா? 

தமிழர்கள் எல்லோரும் ஒரே சமயநெறியைத் தழுவியவர்கலாகவே இருந்துள்ளனர். போத்துக்கேயர் காலத்தில் கிறித்தவம் பரப்பப்பட்டதுபோலவே வியாபாரத்துக்கு வந்த அரேபியர்களின் திருமணக் கலப்பினால் இஸ்லாமிய மதம் இலங்கையிலும் மொகலாய மன்னன்ர்களின் படையெடுப்பின் பின்னர் இந்தியாவிலும் பரவியது. இந்து மதம் என்னும் பெயர் பிற்காலத்தில் ஆரியரால் சூட்டப்பட்டதாயினும் வழிபாட்டு முறைகள் ஒரு கடவுட் கொள்கைகள் என்பன கிறித்துவுக்கு நான்காயிரம் ஆண்டுகளின் முன்னரே தோன்றிவிட்டது. சுமேரிய மக்களின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றிய மதங்களே கிறித்தவம், இஸ்லாம் என யூத ஆய்வாளர் சாமுவல் நோவா கூறுகிறார். பாடசாலைகளில் இங்கு எமது கலாச்ச்சாரம் மதம் மொழி என்பன கற்பிப்பதற்கு தடை என்று யார் உங்களுக்குச் சொன்னது????.

***

500 வருசத்துக்கு முதல் அனைவரும் சைவர்களா இருந்ததால இப்பவும் தமிழர்கள் அனைவரையும் ஒரே மதத்துக்குள்ள அடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் திரும்ப திரும்ப உங்கள் மத அடையாளத்தை தமிழ் இனத்துக்குள்ள கொண்டுவந்து கட்டுவதால் அது உண்மையாகிவிட முடியாது. எந்த சமயத்தை சாராமலும் நான் தமிழனாக இருக்கலாம். இல்லை யூத மதத்தை தழுவியும் நான் தமிழனாக இருக்கலாம். பாடசாலைகளில் மதம் மொழி கற்பிக்கலாம் ஆனால் அவை அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். நாளைக்கு  மதவெறியோடு ஒரு இஸ்லாம் பாடசாலை இஸ்லாம் மதத்தை சாராதவர்களை போட்டுத்தள்ளினால் சொர்க்கத்தில் 72 கன்னிகளோடு அஜால் குஜாலாக இருக்கலாம் என்று கற்பிக்க வெளிக்கிட்டால் என்ன செய்வது?
Posted

தெனாலி சார் உண்மையை இவருக்கு எழுதி எதுவும் இவர் புரிந்து கொள்வதை இதுவரை நான் பார்க்கல .இது இவர்கருத்து கூட என்று நான் நம்பல ...............ஒட்டு மொத்தத்தில் என்னைப்போல பொன்னான நேரத்தை வீணாக்கிய ஓர் நல்ல உறவாகவே நான் உங்களை பார்க்கிறேன்  :D

ஐயோ பாவம் நீங்கள்

Posted
முதலில் நீங்கள் என்ன பிரச்சனையினை சொல்ல அல்லது விவாதிக்க வருகீறீர்கள் என்பதை மிகத் தெளிவாக சொல்லி விடுங்கள் சுமோ.
 
குழப்பாதீர்கள்.
 
அங்கே தாயகத்தில், சமயக்கல்வி என்ற பெயரில் பல தசாப்த்தங்களாக எமக்கு சமய கல்வி தந்த எமது முன்னோர்கள் எல்லாம் மூடர்கள், நான் தான் புத்திசாலித் தனமாக சிந்திக்கிறேன் என்று நினைத்துக் கொள்கறீர்கள் போல் உங்கள் எழுத்து போகிறது. ஆரியர் புகுத்திய விடயங்கள்..... என சும்மா அள்ளி விடாதீர்கள்.
 
உங்களால் எதையாவது மாத்த முடியுமா? இங்கே யாழ் களத்தில் வந்தது காட்டுக் கத்து கத்துவதனால் பயன் ஏதும் உண்டா? இப்படியே குளறிக் கொண்டிருந்தால் 'கடல் வத்தி மீன், கருவாடு ஆகுமெனெ குடல் வத்தி பூனை செத்த கதை' ஆகி விடுமே. 
 
'முன்னோர்கள் எல்லோரும் மூடர்கள் அல்ல. எமக்கு உண்டு பண்பாடு' என்று சொல்லி வைத்தான் ஒரு கவிஞன்.
 
1.5 பில்லியன் இந்துக்கள் மூடர்கள், நான் தான் புத்தி சாலி என்று நினைக்காமல் உங்களுக்கு எந்த மதம் சரி என்று படுகின்றதோ அதில் பாய்ந்து விடுங்கள்.
 
எது சரியோ அது எடுத்துக் கொள்ளப் பட்டு, எது தவறோ அது நிராகரிக்கப் பட்டு உள்ளது. எல்லாமே சொல்லி தந்து உள்ளார்கள், சிறுவர்களாக இருக்கும் போது. எது சரி, எது பிழை என்பது வளந்ததும் புரிகிறது. ஆனால் எமது புரிதலை சிறுவர்களுக்கு தள்ளாமல், எமக்கு எமது முன்னோர்கள் தந்ததை, எமது அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதே நாம் செய்ய வேண்டியது. அவர்கள் வளர்ந்ததும் முடிவு செய்யட்டும்.
 
அதை விடுத்து தாயகத்தில் எல்லோரும் முட்டாள்கள். நான் மேற்குலகில் வசிக்கிறேன் அதனால் கொஞ்சம் 'விவரமாய்' சிந்திக்கிறேன் என்று பிலிம் காட்ட வேண்டாம். விருப்பமாயின் அங்க போய் 'இது எல்லாம் 'rubbish' என்று சொல்லிக் கத்திக் காட்டுங்கள்.
 
முதலில் இந்த ஆய்வுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, உங்கள் குழந்தைகளுக்கு 'உங்களுக்கு சரி என்று படும்' விசயங்களை சொல்லிக் கொடுங்கள். இங்கே வந்து வேறு மத பிரிவுனருடன், 'சேலையினை வரிந்து கட்டக் கொண்டு', கத்துவது போல நடப்பதால் என்ன பயன் அம்மா?  :(
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமேயும் ஈசனும் நல்ல அறிவு பூர்வமான விளக்கங்கள் தந்திருக்கீனம்! இப்ப crystal clear ஆக விளங்குது! இனி தமிழ் தமிழ் எண்டு நான் ஒண்டும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை! என்ர மகளும் அமெரிக்கன், இரண்டு வருஷத்தில நானும் அமெரிக்கன். சொல்லப் போனால் தமிழ் அடையாளத்தை விட அமெரிக்க அடையாளம் கூட இருக்குது. மிக முக்கியமான விடயம், மனதை வருத்தும் "லேபல்" குத்தும் வேலைகளை அமெரிக்கர்களிடம் நான் இந்தப் பத்து வருடத்தில் ஒரு தரம் தானும் காணவில்லை!

இதெல்லாம் கருத்தில் கொண்டு நான் செயல் படப் போறன்!

போய் வருகிறேன் நண்பர்களே!

வெள்ளைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா....:)
Posted
ஜஸ்டின்,
 
நாங்க யாரையும் மதம்மாற்றும் முயற்சியில் இறங்கவும் இல்லை எந்த மதத்தையும் குறை சொல்லவும் இல்லை. அப்படி ஒரு விசயம் நடக்காது!!
 
ஆனால் கண்ணுக்கு முன்னால் ஒரு விஷயம் நடக்கிறது. எங்களுடைய சைவ சமயத்தவர் பெருமளவில் மதம் மாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
இது எங்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்துவது ஞாயமானதா.. இல்லையா ? 
 
இப்படியான ஒரு நிலையில் எந்த ஒரு சமுதாயமும் அதற்கு எதிர் வினையைக் காட்டும். நாகரீகத்தின் உச்சத்தில் நிற்கும் அமெரிக்க சமுதாயமும் இதையே செய்யும்.
 
அனால் அமெரிக்க சமுதாயத்திடமும் இல்லாத நாகரீகமாக "எம்மதமும் சம்மதமே" என்ற உயர் கொள்கையும் "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்ற சைவ வாக்கியம் சொல்லும் பரந்த மனப்பான்மையும் எம்மிடம் உண்டு.
 
நாம் நாகரீகமாக நடக்கும் போது மற்றவரிடம் நாகரீகம் எதிர்பார்ப்போம் ( In return ). ஆனால் அது கிடைக்க வில்லை. நாம் எப்போதும் இழக்கின்ற பகுதியாகவே இருக்கின்றோம். எம்மைப் பாதுகாக்கும் மனநிலைக்கு தள்ளப் படுகிறோம். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒன்றிணைந்த வாழ்வென்பது ஒருவர் இழக்க மற்றவர் பெருக்குவதென்பது நீண்ட காலம் வேலை செய்யாது. இது வரை நடந்தது அது தான். உங்களுக்கும் இது நன்றாகத் தெரியும்.
 
இதன் விளைவு இந்த "லேபிலிங்" மற்றும் இந்த பாதுகாக்கும் மனப்பான்மை.
 
இதை நிவர்த்தி செய்ய உங்களால் முடியும். சமுதாயங்கள் விட்டுக் கொடுப்பு, அத்துமீறாமை, தலையீடின்மை போன்றவற்றின் மூலம் ஒற்றுமையாக வாழ்கின்றன. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம்.
 
.
Edited for
Correcting typo.
 
Posted

சுமேயும் ஈசனும் நல்ல அறிவு பூர்வமான விளக்கங்கள் தந்திருக்கீனம்! இப்ப crystal clear ஆக விளங்குது! இனி தமிழ் தமிழ் எண்டு நான் ஒண்டும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை! என்ர மகளும் அமெரிக்கன், இரண்டு வருஷத்தில நானும் அமெரிக்கன். சொல்லப் போனால் தமிழ் அடையாளத்தை விட அமெரிக்க அடையாளம் கூட இருக்குது. மிக முக்கியமான விடயம், மனதை வருத்தும் "லேபல்" குத்தும் வேலைகளை அமெரிக்கர்களிடம் நான் இந்தப் பத்து வருடத்தில் ஒரு தரம் தானும் காணவில்லை!

இதெல்லாம் கருத்தில் கொண்டு நான் செயல் படப் போறன்!

போய் வருகிறேன் நண்பர்களே!

உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை நண்பரே.

ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்தமாக எடை போடுவது உண்மையில் படு முட்டாள்தனமானது. இந்த திரியில் எதையும் எழுத வேண்டிய தேவை எனக்கு வரவில்லை. ஆனால் உங்கள் பதில் அதை தந்துவிட்டது.

நான் எந்த மதத்தினையும் கடவுளையும் நம்புவது கிடையாது. மனித நேயத்தின் முன்னால் மதங்களும் கடவுளர்களும் எல்லாம் தூசு என்று நினைப்பவன். இந்த வருடமும் என் கிறிஸ்தவ நண்பனின் வீட்டுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு போகும் போது அவனுக்கும் அவன் மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும் புது உடுப்பு எல்லாம் வாங்கி Gift ஆக கொடுத்து அவனுடன் சேர்ந்து கொண்டாடினேன். முஸ்லிம் நண்பர்களுடன் நோன்பு காலத்தில் ஒரிரு நாள் முழுதும் அவர்களுடன் இணைந்து நோன்பும் இருந்து இருக்கின்றேன். கொழும்பில் என் வீட்டில் வெசாக் கூடுகள் ஒவ்வொரு வருடமும் பறக்கும். என்  அம்மா சரஸ்வதி பூசை வீட்டில் வைக்கும்  போது என் முஸ்லிம் நண்பன் வந்து திருநீறைக் கூட வாங்கி பூசி இருக்கின்றான்.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லா இடந்திலும் பொருந்தாது நண்பரே/

Posted

ஜஸ்டினுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அவர் பதில் இல்லை. அதை இங்கே போடுகிறேன். அனனிமஸாக அவர் வந்தால் வாசிப்பதற்கு.

Hi Justin,

I am extremely sorry if my post had hurt your feelings. 

I don't discriminate people based on their beliefs. And no one should !

It is a cruel thing not being inclusive and leaving people out. 

Honestly i am not one of them. ( Those exclusives !!)

I want you to read what i have said there one more time and understand what we think and what our opinions are.

It is a beautiful world if people have the ability to understand others, share happiness and avoid sharp words.

Looking forward to read your posts!!

Cheers,

Esan 

.

Posted
தமிழன் என்ற அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் பேசும் எல்லோரும் தமிழர் என்பதே அடிப்படை வரையறை. 
 
தமிழருக்கென்று எப்போதும் ஒரே சமயம் இருந்ததில்லை. முதலில் இயற்கை வழிபாடு... பிறகு மாயோன், சேயோன், கொற்றவை வழிபாடு. அதன் பின்பு சமணம், புத்தம் கொன்று சைவம் தன்னை நிலை நிறுத்தினாலும் முருகன், ஐயனார், கண்ணகி மற்றும் பல்வேறு சிறுதெய்வ வழிபாடும் தமிழர்களிடம் பரவி இருந்தது. இன்று இந்து, இஸ்லாம், மற்றும் கிறித்துவம்... காலம் மாற வழிபாடுகளும், நம்பிக்கைகளும் மாறுபடக் கூடும். ஆகையால் தமிழரை ஒரு சிறு வரையறைக்குள் அடைக்க முயலாதீர்கள்.
 
"பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" "யாது ஊரே யாவரும் கேளிர்" என்று சொல்லிய தமிழரை, சமயம் சாரதா உலகப் பொதுமறையாம் "திருக்குறளை" உருவாக்கிய தமிழரை,  கடவுள் மறுப்புக் கொள்கையை இயக்கமாக நடத்தி பேராதரவையும் பெற்ற தமிழ் இனத்தை சைவம் என்ற ஒரு சின்ன சொல்லுக்குள் அடக்குவது சிறுபிள்ளைத்தனமான விவாதம். 
 
அன்பர் ஜஸ்டின் அவர்களே, தமிழர் என்ற உங்களின் அடையாளத்தை யாருடைய சொல்லும் அழிக்க இயலாது. நீங்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும் தமிழர் என்ற அடையாளத்தை இந்த ஒரு அற்ப விவாதத்தினால் அழிக்க முயலாதீர்கள். ஏனெனில் இந்த  அடையாளத்தை தக்க வைக்க நம்முடைய பாட்டனும், முப்பாட்டனும் மிகப் பெரிய விலை கொடுத்துள்ளனர்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமேரியர் அவர்களின் இந்தத் திரிதந்த ஒளியின் சூடானது பலரின் பலவிதமான பயனுள்ள கருத்துக்களைக் கண்டறிய உதவியுள்ளது. அதேநேரம் சிலரை அது விட்டில்பூச்சிகளாக வீழவும் செய்துள்ளது. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். கிறிஸ்மஸ் வாழ்த்தை முகநூலில் மட்டுமன்றி தொலைபேசியிலும் பலர் கிறீத்தவர்கள் அல்லாத பலருக்கும் கிறீத்தவர்கள் அல்லாதவர்கள் அனுப்புகின்றனர். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் மதமும் தனித்துவமானது அவரவர்க்கு. நாம் மற்றைய மதத்தினரை மதிக்கவேண்டும். ஆனால் மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்????  பல இந்து சமயத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் மரம் வைத்து அலங்கரித்து பரிசுப்பொருட்கள் வாங்கிக் குவித்து, அவர்கள் உண்பதுபோலவே உணவுகள் சமைத்து......

அதே வேளை தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

மற்றைய மதத்தவர் பலர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வந்து வசிக்கவில்லையா??? அவர்கள் எல்லாம் எமது விழாக்களைக் கொண்டாடினார்களா ???? இது நான் யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதவில்லை. ஆனால் காலப்போக்கில் எமது பிள்ளைகள் மொழியை மறந்தது போல எந்த மதம் என்பதையும் மறந்து கிறித்தவ மதத்தினராக வாழ வழிவகுக்காதா என்னும் ஆதங்கம் தான்.

மனதில் உள்ளதை வெளிப்படையாய் பேசுவதற்கு பாராட்டுக்கள். 

மற்ற மதத்தவரின் ஒரு கொண்டாட்டத்தை அந்த மதம் அல்லாதவர்கள் ஏன் கொண்டாட வேண்டும்????

ஏன் கொண்டாடக்கூடாது? 

கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறு என்றால், அடிப்படையில் ஆங்கிலமும் எமது தாய் மொழி இல்லையே? பிறகேன் அதைப்பேசவேண்டும்?

ஆங்கிலம் காலவோட்டத்தில் உலக மொழியானதுபோல் கிறிஸ்தவமும் உலகத்தில் பிரபலம் அடைந்தது. நாளை இஸ்லாம் மதம் உலகத்தில் மேலோங்கினால் உங்கள் பூட்டப்பிள்ளைகளுக்கு சுன்னத்து செய்வதும், மொட்டாக்கு போடுவதும், ஐந்து திருமணம் செய்வதும் சாதரணவிடயமாகிவிடும்.

தமிழர்களுக்குப் பொதுவான பொங்கல் விழாவைக் கூடக் கிறித்தவர்களோ, இஸ்லாமியர்களோ கொண்டாடுவதில்லை. அது ஏன் ???

உலகினை ஆங்கிலேயர்கள் போல் தமிழர்கள் ஆட்டிப்படைக்கவில்லை. உலகில் தமிழாட்சி ஏற்பட்டால் பொங்கல் விழாவை கிறிஸ்மஸ் போல் கொண்டாடுவார்கள்.

மற்றைய மதத்தவர் பலர் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் வந்து வசிக்கவில்லையா??? அவர்கள் எல்லாம் எமது விழாக்களைக் கொண்டாடினார்களா ????

கொண்டாடி இருக்கலாம். கொண்டாடவில்லை என்று எப்படி சொல்வீர்கள்? போர் காரணமாக தேசம் விட்டு தேசம் சென்றவர்களை எப்படி வேறு காரணங்களுக்காக இடம் மாற்றலாகி சென்றவர்களுடன் ஒப்பீடு செய்யலாம்?

ஒரு மதத்தை மாத்திரமே ஒருவர் பின்பற்றவேண்டும் என்பது உலக நியதி இல்லையே!  

உள்ளம் பெரும் கோயில், ஊன் உடம்பு ஆலயம்!

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்!

தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்!

கள்ள புலனைந்தும் காளா மணிவிளக்கே!

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இந்தத் திரியை ஆரம்பித்ஹதன் நோக்கம் பலருக்கும் புரியவே இல்லை. நான் இதே பதிவை முகநூலிலும் போட்டேன். அதில் இரண்டு கிறிஸ்தவர்கள் எனக்கு பதில் தந்திருந்தார்கள் ஆக்கபூர்வமாக. அவர்களுக்கு நான் என்ன கூறுகிறேன் என்பது விளங்கியதால் என்மேல் கோபமும் கொள்ளவில்லை. ஆனால் யாழில் உள்ள சில கிறிஸ்தவ உறவுகள் தம் மதத்துக்கெதிராக நான் திரியை ஆரம்பித்ததுபோல் எனக்கு எதிராக எழுதியவர்களுக்கு லைக் செய்ததுடன் மட்டும் நின்றுவிட்டனர். அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

ஜஸ்டின் ஏன் தேவையற்றுக் கோவித்துக்கொண்டு போனது என்றுதான் எனக்குப் புரியவில்லை. அவரையோ அன்றி யாரையுமோ நான் மதம் மாறும்படியோ அன்றி நீங்கள் கிறித்தவர்களாக இருப்பது தவறு என்றோ நான் கூறவே இல்லை.

பலருக்கு விடயம் விளங்கினாலும் எதுக்கு வீண் பொல்லாப்பு என்பதுபோலத்தான் கருத்தை எழுதாமலும் எழுதியும் உள்ளனர். அதற்காக நான் வருத்தப்பட முடியாது.

முதலில் நீங்கள் என்ன பிரச்சனையினை சொல்ல அல்லது விவாதிக்க வருகீறீர்கள் என்பதை மிகத் தெளிவாக சொல்லி விடுங்கள் சுமோ.
 
குழப்பாதீர்கள்.
 
அங்கே தாயகத்தில், சமயக்கல்வி என்ற பெயரில் பல தசாப்த்தங்களாக எமக்கு சமய கல்வி தந்த எமது முன்னோர்கள் எல்லாம் மூடர்கள், நான் தான் புத்திசாலித் தனமாக சிந்திக்கிறேன் என்று நினைத்துக் கொள்கறீர்கள் போல் உங்கள் எழுத்து போகிறது. ஆரியர் புகுத்திய விடயங்கள்..... என சும்மா அள்ளி விடாதீர்கள்.
 
உங்களால் எதையாவது மாத்த முடியுமா? இங்கே யாழ் களத்தில் வந்தது காட்டுக் கத்து கத்துவதனால் பயன் ஏதும் உண்டா? இப்படியே குளறிக் கொண்டிருந்தால் 'கடல் வத்தி மீன், கருவாடு ஆகுமெனெ குடல் வத்தி பூனை செத்த கதை' ஆகி விடுமே. 
 
'முன்னோர்கள் எல்லோரும் மூடர்கள் அல்ல. எமக்கு உண்டு பண்பாடு' என்று சொல்லி வைத்தான் ஒரு கவிஞன்.
 
1.5 பில்லியன் இந்துக்கள் மூடர்கள், நான் தான் புத்தி சாலி என்று நினைக்காமல் உங்களுக்கு எந்த மதம் சரி என்று படுகின்றதோ அதில் பாய்ந்து விடுங்கள்.
 
எது சரியோ அது எடுத்துக் கொள்ளப் பட்டு, எது தவறோ அது நிராகரிக்கப் பட்டு உள்ளது. எல்லாமே சொல்லி தந்து உள்ளார்கள், சிறுவர்களாக இருக்கும் போது. எது சரி, எது பிழை என்பது வளந்ததும் புரிகிறது. ஆனால் எமது புரிதலை சிறுவர்களுக்கு தள்ளாமல், எமக்கு எமது முன்னோர்கள் தந்ததை, எமது அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதே நாம் செய்ய வேண்டியது. அவர்கள் வளர்ந்ததும் முடிவு செய்யட்டும்.
 
அதை விடுத்து தாயகத்தில் எல்லோரும் முட்டாள்கள். நான் மேற்குலகில் வசிக்கிறேன் அதனால் கொஞ்சம் 'விவரமாய்' சிந்திக்கிறேன் என்று பிலிம் காட்ட வேண்டாம். விருப்பமாயின் அங்க போய் 'இது எல்லாம் 'rubbish' என்று சொல்லிக் கத்திக் காட்டுங்கள்.
 
முதலில் இந்த ஆய்வுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, உங்கள் குழந்தைகளுக்கு 'உங்களுக்கு சரி என்று படும்' விசயங்களை சொல்லிக் கொடுங்கள். இங்கே வந்து வேறு மத பிரிவுனருடன், 'சேலையினை வரிந்து கட்டக் கொண்டு', கத்துவது போல நடப்பதால் என்ன பயன் அம்மா?  :(

இவ்வளவு பேர் எழுதிய பிறகும் கூட உங்களுக்கு விளங்கவில்லை என்றால் இதற்குமேல் எப்படி உங்களுக்கு விளங்கப்படுத்துவது ???

என் பிள்ளைகளுக்கு எனக்குச் சரி என்பதைச் சொல்லிக் கொடுக்காமல் நீங்கள் எழுதும் குப்பைகளையா சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

Posted

நான் இந்தத் திரியை ஆரம்பித்ஹதன் நோக்கம் பலருக்கும் புரியவே இல்லை. நான் இதே பதிவை முகநூலிலும் போட்டேன். அதில் இரண்டு கிறிஸ்தவர்கள் எனக்கு பதில் தந்திருந்தார்கள் ஆக்கபூர்வமாக. அவர்களுக்கு நான் என்ன கூறுகிறேன் என்பது விளங்கியதால் என்மேல் கோபமும் கொள்ளவில்லை. ஆனால் யாழில் உள்ள சில கிறிஸ்தவ உறவுகள் தம் மதத்துக்கெதிராக நான் திரியை ஆரம்பித்ததுபோல் எனக்கு எதிராக எழுதியவர்களுக்கு லைக் செய்ததுடன் மட்டும் நின்றுவிட்டனர். அவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஜஸ்டின் ஏன் தேவையற்றுக் கோவித்துக்கொண்டு போனது என்றுதான் எனக்குப் புரியவில்லை. அவரையோ அன்றி யாரையுமோ நான் மதம் மாறும்படியோ அன்றி நீங்கள் கிறித்தவர்களாக இருப்பது தவறு என்றோ நான் கூறவே இல்லை.

பலருக்கு விடயம் விளங்கினாலும் எதுக்கு வீண் பொல்லாப்பு என்பதுபோலத்தான் கருத்தை எழுதாமலும் எழுதியும் உள்ளனர். அதற்காக நான் வருத்தப்பட முடியாது.

இவ்வளவு பேர் எழுதிய பிறகும் கூட உங்களுக்கு விளங்கவில்லை என்றால் இதற்குமேல் எப்படி உங்களுக்கு விளங்கப்படுத்துவது ???

என் பிள்ளைகளுக்கு எனக்குச் சரி என்பதைச் சொல்லிக் கொடுக்காமல் நீங்கள் எழுதும் குப்பைகளையா சொல்லிக் கொடுக்கப் போகிறேன்.

நூல்கள் எழுதுபவராக அறியப்படும் உங்கள் எழுத்துகளில் 'கண்ணியம்' இல்லையே.

காரணம் என்ன?

Posted

தமிழன் என்ற அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் பேசும் எல்லோரும் தமிழர் என்பதே அடிப்படை வரையறை. 
 
தமிழருக்கென்று எப்போதும் ஒரே சமயம் இருந்ததில்லை. முதலில் இயற்கை வழிபாடு... பிறகு மாயோன், சேயோன், கொற்றவை வழிபாடு. அதன் பின்பு சமணம், புத்தம் கொன்று சைவம் தன்னை நிலை நிறுத்தினாலும் முருகன், ஐயனார், கண்ணகி மற்றும் பல்வேறு சிறுதெய்வ வழிபாடும் தமிழர்களிடம் பரவி இருந்தது. இன்று இந்து, இஸ்லாம், மற்றும் கிறித்துவம்... காலம் மாற வழிபாடுகளும், நம்பிக்கைகளும் மாறுபடக் கூடும். ஆகையால் தமிழரை ஒரு சிறு வரையறைக்குள் அடைக்க முயலாதீர்கள்.
 
"பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" "யாது ஊரே யாவரும் கேளிர்" என்று சொல்லிய தமிழரை, சமயம் சாரதா உலகப் பொதுமறையாம் "திருக்குறளை" உருவாக்கிய தமிழரை,  கடவுள் மறுப்புக் கொள்கையை இயக்கமாக நடத்தி பேராதரவையும் பெற்ற தமிழ் இனத்தை சைவம் என்ற ஒரு சின்ன சொல்லுக்குள் அடக்குவது சிறுபிள்ளைத்தனமான விவாதம். 
 
அழகான கருத்துக்கள் ஆதித்ய இளம்பிறையன்.
 
இது சம்பந்தமாக என்னுடைய சில எண்ணங்களைப் பதிவிடலாம் என நினக்கிறேன்.
 
உலகில் மனித இனம் தோன்றிய போது எந்த மதமும் இருக்கவில்லை. பின் இனக்குழுக்கள் உருவாகிய போதும் (உதாரணமாக திராவிட இனம், மொங்கோலிய இனம், ஐரோப்பிய இனம், அராபிய இனம்..) மதங்களின் தோற்றம் நீண்டகாலம் எடுத்தது. ஆகவே தமிழினம் மாத்திரம் அல்ல எந்த ஒரு இனமும் மதத்துடன் பிறக்கவில்லை. ஆகவே தமிழ் நாட்டில் இருக்கும் சில "திராவிடக் கூட்டங்கள்" மதமின்றிய தோற்றம் தமிழனின் தனி இயல்பு போல் காட்ட முயற்சிப்பது அறிவியல் சார்ந்ததல்ல.
 
அடுத்ததாக...
 
தமிழ் நாட்டில் இருக்கும் வரலாற்று ஆசிரியர்கள் தமிழர் வரலாற்றை ஆராய தமிழ் நூல்களையே மூலமாகக் கொள்கிறார்கள். இவை 2 ஆயிரம் வருடங்களே பழமை வாய்ந்தவை. ஆனால் தமிழின வரலாறு பல்லாயிரம் வருடங்கள் நீண்டது. இந்த நூல்கள் சொல்லும் விஷயங்கள் முழு இனத்தின் நிலமையையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நிலையும் இல்லை. உதாரணமாக மணிமேகலையின் பிரதான பாத்திரம் பௌத்தம் தழுவியதனால் முழுத் தமிழினமோ அல்லது இனத்தின் குறிப்பிடத்தக்க பகுதியோ பௌத்தம் தழுவியதாக அதனால் பௌத்தமும் தமிழினத்தின் ஒரு மதமாக குறிப்பிடத்தக்க விதமாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த நூல்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது தோன்றிய அறிஞ்ஞர்களின் அறிவின் வெளிப்பாடு. அவை சமுதாய நிலையை பிரதிபலிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இன்னொரு உதாரணமாக.. மறைந்த சுஜாதா அவர்கள் 1980 களில் ஒரு விண்வெளி நாவல் எழுதுகிறார் என்று வைத்து கொள்வோம். அதில் ஸ்டார் வோர்ஸ் க்கு ( Star Wars ) நிகரான ஹீறோ ஒருவரை அவர் அறிமுகப்படுத்தி அதி நவீன தொழில்நுட்ப சூழ்நிலை ஒன்றில் நாவலை நகர்த்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இனி... 2000 வருடங்களுக்குப் பின் அந்த நாவல் ஆராய்ச்சி செய்யப்பட்டால் தமிழன் 2000 வருடங்களுக்கு முன்பே செய்ய்வாய்க் கிரகத்திற்குச் சென்றதாக முடிவெடுக்க முடியாது.
 
ஒரு புறம் இந்த நூல்களின் தொன்மை போதாது, மறுபுறம் இவை சொல்லும் விஷயம் முழு இனத்தையும் பரவலாக பிரதி பலிக்க வில்லை. இன்னிலையில் தமிழன் மதமற்றவன் என்றோ தமிழரின் தொன்மையான சைவம் பின் தோன்றியது என்றோ சொல்வதற்கு இந்நூல்கள் போதுமானவை அல்ல.
 
ஆனால்... 
 
இன்றைக்கு ஐயாயிரம் வருடங்களை விட‌ பழமையான சிந்து வெளி நாகரீகம் பெருந்தொகையான சைவச்சின்னங்களுடன் பரந்த தேசத்தில் விரிந்து காணப்படுகின்றது. ஒரு முழுச் சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே அது படமெடுத்துக் காட்டுகிறது. இந்த தமிழ் நூல்கள் சொல்லும் தமிழ்த் தாயின் முப்பாடியின் முப்பாட்டி ஒரு சைவப் பெண் என்று அங்கு காணப்படும் சைவச் சின்னங்கள் சொல்கின்றன.
 
ஆகவே தமிழனின் ஆதி மதம் எது என்ற கேள்விக்கு வடக்கே செல்லுங்கள். ஒரு சில தமிழ் அறிஞ்ஞர்களின் கற்பனைப் படைப்புகளில் நேரத்தைச் செலவளியாதீர்கள்.
Posted

இன்றைக்கு ஐயாயிரம் வருடங்களை விட‌ பழமையான சிந்து வெளி நாகரீகம் பெருந்தொகையான சைவச்சின்னங்களுடன் பரந்த தேசத்தில் விரிந்து காணப்படுகின்றது. ஒரு முழுச் சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே அது படமெடுத்துக் காட்டுகிறது. இந்த தமிழ் நூல்கள் சொல்லும் தமிழ்த் தாயின் முப்பாடியின் முப்பாட்டி ஒரு சைவப் பெண் என்று அங்கு காணப்படும் சைவச் சின்னங்கள் சொல்கின்றன

நன்று ஈசன். அந்தச் சின்னங்கள் எல்லாம் சைவத்தைத் தான் குறிக்கின்றன என்ற நீங்களாகவே ஒரு முடிவுக்கு வராதீர்கள். அப்படியே சைவச் சின்னங்கள் என்று கொண்டாலும் சைவம் அல்லாதவர்கள் அங்கே வசித்திருக்கவில்லை என்று உங்களால் அறுதியிட்டு கூற இயலாது...  சைவம் என்ற வார்த்தையே பின்னாளில் கட்டமைக்கப்பட்டதுதான்(இன்று நம்மை இந்து என்று அழைத்துக் கொள்வது போல) .  அதற்குமுன் அதன் பெயர் என்னவோ??  

ஆதி மனிதனுக்கு மதமில்லை... மதம் வளரும்போது எல்லோரும் ஒரே நாளில் மாறியவர்கள் கிடையாது. அங்கே எல்லோருக்குமான இடமும் உண்டு. ஒரே இனக் குழுவில் பல்வேறு வகையான வழிபாட்டு முறைகளைக் கையாளுபவர்கள் இங்கு உண்டு. நான் சொல்ல விழைவதும் அதுதான்.. இது எல்லோருக்குமான இடம். அதை சைவம் என்ற சின்ன சொல்லுக்குள் அடைக்காதீர்கள்.

மேலும் மதம் என்பது இறைவனால் படைக்கப்பட்டதாயின் அது ஆதி மனிதனுக்கும் பொருந்தும். ஆதி மனிதன் வழிபடாத  ஒன்று திடீரென்று எப்படி கடவுளாக வந்தது. நீரையும், நெருப்பையும் வழிபட்டவர்கள் எப்படி சிலை வழிபாட்டுக்குச் சென்றார்கள்.. சிலை என்பதே எவனோ ஒருவனின் கற்பனைதான். ஆகவே மதம்  எனபதே ஒரு கற்பனை படைப்புதான்.  இதல் திருக்குறளை மட்டும் கூற என்ன இருக்கிறது?

சிவனை வழிபட்டமையால் சைவம் என்ற பெயர் வந்தது. சிந்து வெளி நாகரீகத்தின் சமயம் எதுவென்பது எனது முடிவல்ல. அது பாடசாலைக் கல்வியிலும், வாசிகசாலையிலும் பின் இணையத் தேடலிலும் கிடைத்த அறிவு.
 
தமிழ் அடையாளத்தை சைவத்துக்குள் அடக்க வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. 
 
தமிழன் மதம் அற்றவன் என்பதை நிராகரிக்க ஆதி த‌மிழன் வாழ்ந்த சிந்து வெளி நாகரீகத்தில் நிலவிய சமய வழிபாட்டை ஆதாரம் காட்டினேன்.
 
சிந்து வெளியை ஆராய்ந்தவர்கள் அங்கு சிவழிபாடு நிகழ்ந்திருப்பதாகக் கூறிய படியால் ஆதி தமிழன் சைவன் என்று சொன்னேன்.
 
கடவுள் மதத்தைப் படைத்தார் என்பதை நான் நம்பவில்லை. கடவுளோ அல்லது கடவுள் சார்ந்த எவருமே இந்த பூமிக்கு வந்ததாகவும் எனக்கு நம்பிக்கை இல்லை. 
 
அதே நேரம் தமிழரல்லாதோர் தம்முடைய மதத்தையும் தம்முடைய கலாச்சாரத்தையும்
 
"ஏய் தமிழா.. உனக்கேதடா மதம்...எங்களுடையதையும் சேர்த்தே பின்பற்று!!
 
உனக்கு நீ பேசும் மொழி மட்டும் தானடா அடையாளம். வேறொன்றும் இல்லையடா மூடா!!"  
 
என்று
 
அவர் சொல்ல....
 
நான் கேட்க.....
 
நாங்கள் என்ன இளித்த வாயர்களா ??
 
இந்த இளித்த வாய்த்தனத்தின் அடையாளம் தான் தமிழனுக்கு மொழியைத் தவிர வேறெந்த அடையாளமும் இல்லை என்பது.
 
அப்படியானால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் பின்பற்றிய சமய கலாச்சாரம் எங்கே??
 
ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் எம்மன்னர்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் என்ன குப்பை மேடா ??
 
எம் அடையாள அம்சங்களைச் சுருக்கியது அன்னியர் தம் அடையாளங்களை எமக்குள் சொறுகுவதற்கே !!
 
.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
    • ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே...........   கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது   சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள்   நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன்   அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை   ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன்   எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர்   அழுது அழுது மகிழ்வாக இருந்தேன்   இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.