Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோண்டாவில் புகையிரதநிலையம் .

Featured Replies

10636294_772998672753292_238823679401342

10897936_772998712753288_151402343518966

10891999_772998866086606_227960467109110

  • தொடங்கியவர்

புது வருடம் பிறந்து இன்று இந்த படங்களை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது .எனது வீடு ஆரம்ப பாடசாலை (எனது அம்மா அங்கே தான் ஆசிரியராக இருந்தவர் ) விளையாட்டு மைதானம் ,ஊர்கோயில் எல்லாம் இந்த ஸ்டேசனில் இருந்து நடை தூரம் .இந்த படங்களை பார்க்க சில காலம் மீண்டும் அங்கு போய் வாழாவேண்டும் போலிருக்கு.

கொஞ்சம் வளர்ந்த பிறகு எவர் சொல்லும் கேட்காமல் ரெயில்வே ஸ்டேசன் பிளட்போமில் சயிக்கிளில் போன காலமும் இருந்தது . 

என்னவோ இந்த வருடம் எமது மக்களுக்கு நல்லது நடக்கும் என்று உள்ளுணர்வு சொல்லுது .

482044_4378746068511_384441731_n.jpg?oh=

  • தொடங்கியவர்

எனது கணனியில் எங்கள் மண் திரியை காணவில்லை /முடிந்தால் அங்கே இதை மாற்றிவிடவும் .

normal_1241110.jpg

normal_1241112.jpg

புது வருடம் பிறந்து இன்று இந்த படங்களை பார்க்க மிக சந்தோசமாக இருந்தது .எனது வீடு ஆரம்ப பாடசாலை (எனது அம்மா அங்கே தான் ஆசிரியராக இருந்தவர் ) விளையாட்டு மைதானம் ,ஊர்கோயில் எல்லாம் இந்த ஸ்டேசனில் இருந்து நடை தூரம் .இந்த படங்களை பார்க்க சில காலம் மீண்டும் அங்கு போய் வாழாவேண்டும் போலிருக்கு.

கொஞ்சம் வளர்ந்த பிறகு எவர் சொல்லும் கேட்காமல் ரெயில்வே ஸ்டேசன் பிளட்போமில் சயிக்கிளில் போன காலமும் இருந்தது . 

என்னவோ இந்த வருடம் எமது மக்களுக்கு நல்லது நடக்கும் என்று உள்ளுணர்வு சொல்லுது .

482044_4378746068511_384441731_n.jpg?oh=

இந்த வீட்டைப்பார்த்தால் அரசடி பிள்ளையார் கோவிலின் முன் உள்ள லோகேசின் வீடு போல உள்ளது.அதுவா?

எனக்கும் எதோ இந்த உணர்வு தான் வருகிறது, இலங்கையில் நடக்கப் போகும் அரசியல் மாற்றங்கள் எமக்கு சாதகமாகவே நடக்கப் போகுது என உள்ளுணர்வு சொல்கிறது.

புகையிரத நிலையத்தின் பழைய, புதிய படங்களின் பின்னால் பின்னால் ஒரு சிறிய பனங்கூடல் இருக்கிறது. அவை எத்தனை கதைகள் கூறும்..................
 
அர்ஜுன் இந்த இணைப்பில் கோண்டாவில் பற்றிய சில தகவல்கள் இருக்கின்றன.
 
  • தொடங்கியவர்

இந்த வீட்டைப்பார்த்தால் அரசடி பிள்ளையார் கோவிலின் முன் உள்ள லோகேசின் வீடு போல உள்ளது.அதுவா?

இது எங்கள் வீடு ,திரைச்சீலை முறுக்கிகட்டியிருக்கும் அறைதான் எனது குகை .இந்த படமும் அதே இணைப்பில் இருந்ததால் இணைத்தேன் .

லோகேஷ் வீடும் இதே மாதிரித்தான் ஆனால் சற்று தள்ளி கோயிலுக்கு முன்  இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நாங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ கால சிந்தனையோட்டத்தில் இருந்து மாறவே இல்லை என்பதற்கு இந்தத் தலைப்பும் படமும் சாட்சி.

நாங்க எல்லாம்.. தமிழீழம் வாங்கி.. அது சிங்கப்பூராகி...??????!

இது தான் நமக்குச் சரி. மேற்கு நாட்டு மோகத்தில்.. தாய் நாட்டில் ஊர்காய் விசிட் அடிக்க.. அப்ப தான் ஊருக்க.. உள்ளுக்க ஒரு கெத்தா வேற இருக்கும். :lol::rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ இந்த வருடம் எமது மக்களுக்கு நல்லது நடக்கும் என்று உள்ளுணர்வு சொல்லுது .

482044_4378746068511_384441731_n.jpg?oh=

இப்படி எத்தனை  வருடங்கள்  நாங்கள் ஏமாந்து விட்டோம்

படங்களுக்கு நன்றி

என்னவோ இந்த வருடம் எமது மக்களுக்கு நல்லது நடக்கும் என்று உள்ளுணர்வு சொல்லுது .

482044_4378746068511_384441731_n.jpg?oh=

இப்படி எத்தனை  வருடங்கள்  நாங்கள் ஏமாந்து விட்டோம்

படங்களுக்கு நன்றி

அப்படி இல்லை வாத்தியார், இந்த முறை இருக்கும் பூகோள அரசியல் நிலைமை வேறு 2004 - 2014 வரை இருந்த காங்கிர்ஸ் இப்போது இல்லை, காங்கிரஸ் அரசானது இந்தியாவின் பாதுகாப்பையும் பணயம் வைத்து அதை இயக்கிய மலையாளி கூட்டத்திற்கு அதிக இடம் கொடுத்தது,ஆனால் மோடி அரசு இந்தியாவின் பாதுகாப்பையும் நலங்களையும் பணயம் வைத்து சிறீலங்காவிற்கு உதவ போவதில்லை அதனால் சீனாவை வெளியேற்ற எதாவது செய்ய வேண்டும், அது மகிந்தவால்,மைத்திரியினால், முடியாது ஏன் டி.எஸ் .சேனானாயக்க, பண்டாரனாயக்க,தகனாயக்க,டிஸானாயக்க இல்லை என்ன் வேல் நாயக்கர் வந்தாலும் முடியாது, எனவே இலங்கை அரசுக்கு சட்ட ரீதியான உரிமை நிலத்தின் மீது இல்லாமல் செய்வதால் தான் சீனாவை வெளியேற்ற முடியும் அதற்கு ஒரு வழி தமிழ் ஈழம் எனும் தனி நாடு, இப்படி எமது பக்கம் பல அரசியல் சூழ் நிலைகள் சாதகமாக உள்ளன, இவற்றை பயன்படுத்துவது எமது சாமர்த்தியம்.

  • தொடங்கியவர்

சிறு வயதில் காலை எழும்பி பாடசாலைக்கு செல்வத்தே ஒரு இனிய அனுபவம்தான்.அரைகாற்சட்டை ,சேர்ட் சிலிப்பர் புத்தகத்துடன் பத்து நிமிட நடை பாடசாலை வந்துவிடும் .பாடசாலைக்கு அருகில் தான் ரயில்வே ஸ்டேசன் .அனேகமாக ஒரு கூட்ஸ் ரெயின்  காலை 8.10 மணியளவில் வருவதற்காக கேட்டை மூடிவிடுவார்கள் ஆனால் அந்த ரெயின் கன நேரம் ஸ்டேசனில் நிற்கும் .நாங்கள் கேற்றுக்குள்ளால் பூந்துகொண்டு போய்விடுவோம் .வளர்ந்த பிறகு சயிக்கிளை கேற்றை சுற்றி எடுத்துக்கொண்டு போவோம் .

ஸ்டேசனில் இருந்து ரெயில்வே கேற்றிற்கு சற்று தூரம் நடந்துவரவேண்டும் .கேற்றை திறந்து மூட போட்டர் கையில் ஒரு விளக்குடன் நடந்துவருவார் .அந்த நேரம் போட்டர் ஆக இருந்தவர் ஸ்ரனி சிவானந்தன் .இவர் ஒரு நல்ல பாடகர் . REX இன்னிசை குழுவில் பாடகராக இருந்தார் .ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்தபடிதான் கேற்றை திறந்து மூடுவார் .

ஸ்டேசனுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில்  ஒரு சிறிய பெட்டிக்கடை இருக்கு .அதில் சிகரெட் ,வெற்றிலை ,பீடா தான் வியாபாரம் .நாங்கள் பீடா வாங்குவது அங்குதான் .அதை நடாத்தியவர் அமுதன் அண்ணாமலை .இவரும் ஒரு பாடகர் .REX குழுவில் தான் பாடினார் .பின்னாளில் பொப்பிசை பாடி மிக பிரபலமாகிவிட்டார் .(ஓ ஷீலா ஒ லீலா டோன்ட் லுக் அட் மி ).இப்போ மொன்றியலில் இருக்கின்றார் .

நண்பர்கள் வெளிநாடு போக தொடங்கும் போது ஸ்டேசனில் வெடியெல்லாம் கொழுத்தி வழியனுப்பி வைப்போம் .

நான் வெளிநாடு புறப்பட சில வருடங்களுக்கு முதல்  வேம்படி ஹோஸ்டலில் இருந்த நண்பி? ஒருவர் சற்று சுகமில்லாமல் தனது ஊருக்கு திரும்புவதாக அறிந்து சாரத்துடன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு ஓடிப்போய் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மரத்தில் சயிக்கிளை சாத்திவிட்டு யாழ்தேவிக்குள் ஏறி ஒவ்வொரு கொம்பார்ட்மென்ட் ஆக தேடினால் கோர்னர் சீட்டில் நண்பி தகப்பன் போல ஒருவருடன் இருக்கின்றார் .ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு பின்னர் ரெயினால் பிளாட்பாரத்திற்கு மற்றப்பக்கமாக இறங்கி கையை காட்டி விட்டு சென்றுவிட்டேன் .

என்றும் எனது இனிமை மாறாத நினைவுகளுடன் கோண்டாவில் ஸ்டேசன் புதுபொலிவுடன் பார்த்தது மிக்க சந்தோசம் .

10603375_616294421849024_562429910757404

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அண்மையாக நிரு டியூஷன் இருந்ததாக நினைவு ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.