Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் நோக்கம் தமக்கில்லை ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் மைத்திரிபால தெரிவிப்பு!

Featured Replies

அர்யூன் சத்தியமா நான் பகிடிக்கு சொல்லவில்லை,அடுத்த தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சியை மட்டும் பிய்த்து எடுத்துக்கொண்டுபோய் தனித்து போட்டியிடட்டும் எத்தனை சீட் கிடைக்குதெண்டு பார்ப்போம்.அவர்கள் வென்றால் தலையில இருக்கிற நாலு முடியையும் நான் எடுக்கிறன்.

வெகுவிரைவில் இந்த காட்சி நாட்டில் அரங்க்கேறத்தான்போகுது பாருங்கள் .

நியானி: மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் சத்தியமா நான் பகிடிக்கு சொல்லவில்லை,அடுத்த தேர்தலில் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக்கட்சியை மட்டும் பிய்த்து எடுத்துக்கொண்டுபோய் தனித்து போட்டியிடட்டும் எத்தனை சீட் கிடைக்குதெண்டு பார்ப்போம்.அவர்கள் வென்றால் தலையில இருக்கிற நாலு முடியையும் நான் எடுக்கிறன்.

உங்களுக்கு அப்படி ஒரு சங்கடத்தை சம்பந்தர் ஏற்படுத்தமாட்டார். இன்றேல் எப்பவோ.. போயிருப்பார். இவர்கள் கூட்டமைப்பை விட்டு விலகினால்.. மாவையும் சம்பந்தனும் சுமந்திரனும் தான் கட்சியை நடத்த வேண்டி வரும். தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆனந்த சங்கரி ஆட்பிடிக்கும் நிலை உள்ளதை கவனத்தில் எடுக்காமல்.. முட்டாள் தன முடிவுகளை அர்ஜூனின் எழுத்துக்களை பார்த்து எடுக்கும் அளவுக்கு சம்பந்தருக்கு மூளை மழுங்கவில்லை..!! அவர் பிழைக்கத் தெரிந்த நரி. :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆனந்தசங்கரி எந்தக்கட்சி? ஏன் தாேற்றாா்? எனக்கு ஒன்றுமே விளங்கேல.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆனந்தசங்கரி எந்தக்கட்சி? ஏன் தாேற்றாா்? எனக்கு ஒன்றுமே விளங்கேல.

ஆனந்த சங்கரி.....

தனக்கு, சொந்தச் செலவிலை.... சூனியம் செய்யிற ஆள். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் சிலவேளை விதண்டாவாதம் செய்வது தெரிந்தாலும் கூட, வட கிழக்கில் இராணுவம் இருப்பது நல்லது என்று தமிழ் மக்களே மைத்திரிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எழுதியது சுத்த ஊதாரித்தனம். கருத்துப் பஞ்சத்தால் அப்படி எழுதியிருக்கலாம், அல்லது இங்கே அவருக்கு எதிராக எழுதுபவர்களைச் சீண்ட எழுதியிருக்கலாம்.

ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் தங்கள் ஊரில் இருந்துகொண்டு மக்களின் அன்றாட வாழ்வின் அனைத்து விடயங்களிலும் மூக்கை நுழைத்துக்கொண்டு, எப்போதுமே எதிரிகளின் கண்களினூடு மக்களை அவதானித்துக்கொண்டு, சிறிது சிறிதாக மக்களின் நிலங்களை அபகரித்துக்கொன்டு, திரும்பிய இடமெல்லாம் புத்த விகாரைகளை நிர்மாணித்துக்கொண்டு, இன்னும் மிகவும் ரகசிய - வெளிச்சமான முறையில் ஒரு திட்டமிட்ட இனவழிப்பை நடத்திக்கொண்டு இருக்கும் வேற்றின, வேற்றுக் கலாச்சார, வேற்றுச் சமய பேரினவாத இராணுவத்தை தமிழ் மக்களே தேவையென்று மைத்திரிக்கு வாக்களிப்பார்கள் என்று எழுதியதை அர்ஜுன் ஏற்றுக்கொள்வாரா என்று அறிய ஆசை. இதற்கு ஆமென்று அவர் பதிலளித்தால் பேசிப் பிரயோஜனமில்லை. அது உங்கள் கருத்து, நாம் என்ன செய்ய முடியும் ?

முதல் வரியை விட்டுவிட்டு இரண்டாம் வரிக்கு மட்டும் விளக்கம் கேட்டிருகின்றீர்கள் .

எமக்கு வேண்டாத இருவரில் எப்படி மகிந்தாவை விட மைத்திரிக்கு எப்படி போட சொல்கின்றோமோ அப்படிதான் புலிகள் இருப்பதை விட இராணுவம் இருப்பது மக்களுக்கு நல்லது என்று எழுதினேன் .

நீங்கள் எழுதிய அத்தனை நாசகார வேலைகளையும் இராணுவம் இன்று அரசின் உதவியுடன் செய்துகொண்டுதான் இருக்கின்றது என்பது நூற்றுக்கு நூறு . ஆனால் புலிகளை போல தமக்கு வேண்டாதவர்களை தம்முடன் உடன்படாதவர்களை வீடுவீடாக தேடி நரபலி எடுக்கவில்லை .

இன்று அரசிற்கு எதிராக சிறிதேனும் மக்கள் துணிந்து வாயை திறக்கின்றார்கள் ,ஊர்வலம் வைக்கின்றார்கள் .புலிகள் இருந்த காலத்தில் அவர்களுக்கு எதிராக இவை எதுவுமே சாத்தியமில்லை .

புலிகளுக்கோ அல்லது அவரது ஆதரவாளர்களுக்கோ இவை பற்றி எதுவித அக்கறையுமில்லை. துரோகிகளுக்கு இது தேவைதான் என்று கடந்துவிடுவார்கள் .ஆனால் இவர்களால் பாதிக்கபட்டவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தான் அதன் தாக்கம் தெரியும் .

அண்மையில் கனடாவந்த ஒரு பிரபல பத்திரிகையாளரின் மனைவியுடன் (இவர் ஒரு பல்கலை கழகபட்டதாரி ,கவிஞர் ) உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது .நாட்டு அரசியல்  கதைக்க தொடங்கியதும் பொங்கி எழுந்துவிட்டார் அவர்களுடன் ஒப்பிடும்போது நான் எல்லாம் கணக்கிலேயே இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

Reading between the lines என்று ஒரு விடயம் இருக்கு. இங்கே மைத்திரி சொல்வது ராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம்.

கூட்டமைப்பு கேட்பது ராணுவ பிரசன்னத்தை குறைத்து - சிவில் நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டை நிறுத்துங்கள் என்பது.

ராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றாமலே - கூட்டமைப்பு கேப்பதை கொடுக்க முடியும். ராணுவத்தை சில முகாம்களுக்குள் மட்டும் இருத்தி, பொலீசுக்கு அதிகாரத்தை கைமாற்றுவதன் மூலம். இது நடக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

அர்ஜுன அண்ணா,

புலிகளை விட்டு கடந்து வாருங்கோ என்று எல்லாருக்கும் அறிவுரை சொல்லிப்போட்டு நீங்கள் மட்டும் இன்னும் ஏன் புலியின்ர வாலைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறியள் ?

இப்ப புலிகளும் இல்லை. அவர்கள் இருக்கேக்க ஊர்வலம் நடத்தேலாம போயிட்டுது. எதிரிகளை வேட்டையாடினார்கள், யாரும் எதிராக வாய் திறக்க முடியவில்லை என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இப்போதுதான் அவர்கள் இல்லையே? பிறகு ஏன் அவர்களை இன்னும் இழுத்து வைச்சுக்கொண்டு கதைக்கிறியள் ?

இப்ப ஆமி மாட்டும்தானே ஊரில நிக்குது? அப்ப, ஆமிய பற்றி மட்டும் கதைக்கிறதுதானே சரி ? அவங்கள் நிக்கிறது பிழையென்று உங்களுக்கும் விளங்குதுதானே அண்ணை? அதைபற்றிப் பேசுவமே??

புலியை விட்டுபோட்டு வங்கோ அண்ணை, உங்கட கருத்த எல்லோரு கேட்க ஆவலோட காத்திருக்கிறம் .

Reading between the lines என்று ஒரு விடயம் இருக்கு. இங்கே மைத்திரி சொல்வது ராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மாட்டோம்.

கூட்டமைப்பு கேட்பது ராணுவ பிரசன்னத்தை குறைத்து - சிவில் நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டை நிறுத்துங்கள் என்பது.

ராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றாமலே - கூட்டமைப்பு கேப்பதை கொடுக்க முடியும். ராணுவத்தை சில முகாம்களுக்குள் மட்டும் இருத்தி, பொலீசுக்கு அதிகாரத்தை கைமாற்றுவதன் மூலம். இது நடக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

கோஷான், நீங்களும் விடுகிற மாதிரித் தெரியேல்ல.

அப்படி நீங்கள் சொல்கிறது மாதிரி, நாய்களை கட்டி வைச்சால் நல்லதுதான். பார்க்கலாம். ஆனால் எனக்கு இவ்வளவு காலமும் தமிழர்களை சிங்களத் தலமை நம்பி ஏமாத்திய கதைகள்தான் ஞாபகத்துக்கு வந்து துலையுது. இப்பமட்டும் அது வித்தியாசமாக நடக்கப்போகுது என்று நம்புறதுக்கு எந்தக் காரணமும் இல்லை கண்டியளோ. எண்டாலும், உங்கள் நம்பிக்கை ஈடேற வேண்டுமென்று நானும் விரும்புறன். நம்பிக்கைக்கும் விருப்பத்துக்கும் நிறைய இடைவெளி இருக்கெண்டும் நினைக்கிறன்.

நியானி: மேற்கோள் ஒன்றும் பதிலும் நீக்கப்பட்டுள்ளன.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றமாட்டோம் என்று சாதுரியமாக சிங்கள வாக்குகளையும் மைத்திரி தன்வசப்படுத்தியுள்ளார் இக்கூற்றின் மூலம்..

இது மைத்திரியின் அருமையான ராஜதந்திரநகர்வு எது எப்படி இருந்தாலு எந்தச் சிங்களத்தலைமைக்கும் தமிழர்களின் திருப்தியாக வாக்குகள் கிடைக்கப்போவதில்லை இருப்பினும் இன்றைய நாளில் ஒவ்வொரு தமிழரும் ஏதோ ஒரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்க தள்ளப்பட்டுள்ளார்கள். ஆட்சி மாற்றமா அல்லது தொடர்ந்து இருக்கும் ஆட்சித் தொடரா என்பதற்கு அப்பால் இந்தத் தேர்தல் முடிவு விளைவிக்கப்போகும் ஊழியே மனதிற்குள் நெருடுகிறது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை நம்மவருக்கு பெரிதாக எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு ஏதுமில்லை பெரும்பான்மை இனம் மீண்டுமொரு முறை அரசியலாலும் தன்னை தன்னுடைய கொடிய முகத்தை நிறுவ புதிய தடம் தேடுகிறது இங்கும் பலியாவது நாங்கள் மட்டுமே. எந்தப் பெரும்பான்மை அரசியல்வாதியாலும் இராணுவத்தை வடக்கு கிழக்குப்பகுதியில் இருந்து அகற்றும் துணிவு இல்லை அப்படியானால் இவர்கள் எப்படி சனநாயக ஆட்சியை நிறுவக்கூடிய தகுதியுள்ளவர்களாக மாறுவார்கள். நிச்சயமாக மாற்றம் இல்லாத இன ஒடுக்குமுறை தொடரத்தான் போகிறது. என்ன வடிவங்கள் மாறி சரவதேச பொறிமுறைகளுக்குள்ளிருந்து விடுபட்டு இன்னொரு வழியில் தனது கொடிய முகத்தை சாட்சியங்கள் அற்ற வெளியில் நிறுவத்தான் போகிறது. தமிழர்கள் தமிழர்களாக தனித்துவமாக நிமிர்கின்ற ஒவ்வொரு கணமும் சிங்களத்தின் உண்மைமுகம் வெளிக்கும்.

உண்மை, இராணுவம் முழுக்க விரைவில் வெளியேறும் என்று நான் நினைக்கவில்லை. அதை மைத்திரி செய்வார் என்றும் நினைக்கவில்லை.

அதுக்கும் ஒரு நீண்ட போராட்டம் தேவை அனால் தற்போது குறந்த அளவிலான இராணுவ பிரன்னமும் நிர்வாகத்தில் இருந்தும் அகற்றுவதும் உடனடி தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.