Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் தொடர்பான செய்திகள் :- தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்! Photo in

Featured Replies

  • தொடங்கியவர்

டக்கிளசின் டாண் ரீவிக்கு இறுதி எச்சரிக்கை!!

dan%20tv.jpgயாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் அரச ஆதரவு தொலைக்காட்சியான டாண் ரீவிக்கு யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாக்களிப்பிற்கான நேரம் மாலை 4 மணியுடன் முடிவுற்ற நிலையினில் அது 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக இத்தொலைகாட்சி செய்திகளை ஒளிபரப்பிய வண்ணமுள்ளது.

இதன் மூலம் வாக்காளர்களை குழப்பமடைய செய்வதுடன் அவர்கள் குறித்த காலப்பகுதியினுள் வாக்குசாவடிகளிற்கு செல்வதை தடுப்பதே நோக்கமென நம்ப்பபடுகின்றது.

இந்நிலையினில் குறித்த புகார் அடிப்படையினில் உதவி தேர்தல் ஆணையாளர் ஒளிபரப்பினை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலிலும் இதே பாணி பிரச்சாரங்களையே இத்தொலைக்காட்சி முன்னெடுத்திருந்தது.

இதனிடையே யாழில் வாக்குச் சாவடிகளை அண்மித்த பகுதிகளில் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் முகமான அவரது சின்னமான வெற்றிலை பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் காவல்துறையினர்; முன்னிலையில் வீசப்பட்டுள்ளது.   நேற்று முன்தினம் நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைப் பணிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையிலும் வாக்களிப்பு தினமான இன்று சட்டத்துக்கு புறம்பான வகையில் குறித்த பரப்புரை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.http://www.pathivu.com/news/36748/57//d,article_full.aspx

  • Replies 189
  • Views 8.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாத்தறையிலேயே 62 வீதம்தானா ?

தலைவர் தள்ளாடு நிலைக்கு வர போகிறாரே ........

இது மாத்தளை..

மாத்தறையிலேயே 62 வீதம்தானா ?
தலைவர் தள்ளாடு நிலைக்கு வர போகிறாரே ........

அது என்ன ஆச்சரியம் மைத்திரியின் ஊரிலேயோ 50 % in Polonnaruwa

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது 1 மணிக்கு. அதன்பின் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூல வாக்கெண்ணும் பணி 4.30 மணிக்கு ஆரம்பம்

8a29e5f77376b12ba8441ec2d85ab082.jpg

ஜனாதிபதி தேர்தலுக்கான யாழ். மாவட்ட தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் என, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் 60 வீத வாக்களிப்பு நடைபெற்றிருந்தது.
 
தபால்மூல வாக்குகள் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்றும் மற்றைய வாக்கு எண்ணும் பணி மாலை 6மணி தொடக்கம் 7 மணிக்குள் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் முதலாவது தேர்தல்  முடிவுகள் இரவு 11 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

http://onlineuthayan.com/News_More.php?id=206643792508425364

  • கருத்துக்கள உறவுகள்

இது மாத்தளை..

அவர்கள் எல்லாத்தையும் மதுரை காரர் மாதிரி 
உலே 
ஏலே 
என்று முடிப்பார்கள் நான் நினைத்தேன் மாத்தறை என்று. 
  • கருத்துக்கள உறவுகள்
யாழில் சுறுசுறுப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவுகள்
9e8f066cde3de33783b5700b58f2bae3.jpg
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. 
 
காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
 யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
 
இதேவேளை யாழ். மாவட்டத்தில் காலை 7மணி தொடக்கம் 2மணிவரை  51%வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
 
2%28164%29.jpg
 
1%28199%29.jpg
 
33%2814%29.jpg
 
66%285%29.jpg
 
qqq.jpg
 
20150108_083752.jpg
 
20150108_083806.jpg
 
20150108_084451.jpg
 
20150108_083812.jpg
 
20150108_084620.jpg
 
IMG_0155.JPG
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=171493789108319164#sthash.u8I9VQyu.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
எந்த கட்சியை ஆதரிப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
 
மகிந்த  வென்றால் .........?
குழந்தை ஹிருனிகா சோகாமாகி விடுவாள். அவளது சோகம் என்னையும் தாக்கும்.
 
மைத்திரி வென்றால் ....? 
தமிழர் வாழ்வு சோகமாகிவிடும்   அதுக்கும் என்னை தாக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by Maruthankerny

எந்த கட்சியை ஆதரிப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
 
மகிந்த  வென்றால் .........?
குழந்தை ஹிருனிகா சோகாமாகி விடுவாள். அவளது சோகம் என்னையும் தாக்கும்.
 
மைத்திரி வென்றால் ....? 
தமிழர் வாழ்வு சோகமாகிவிடும்   அதுக்கும் என்னை தாக்கும். 

யோசிக்கநேரமில்லை கெதியா ஒரு முடிவெடுங்கோ, சுண்டலிட்ட இரண்டாயிறத்துக்கு அப்பக்கடை வவுச்சர் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கூட்டத்தை தான் காணேல்ல. வாக்கு சன நாயகம்.. அல்லாடித்தான் போயிட்டு.

தமிழ் மக்கள் பொதுவில் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
சுவிசில் இருக்கும் அப்பக்கடை வவுச்சரை 
அமெரிக்காவில் இருக்கும் நான் என்ன செய்ய முடியும் .....??
 
பெடெக்ஸ் இல் (fedex) போட்டாலும்  நாறித்தான் வரும். 

படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கூட்டத்தை தான் காணேல்ல. வாக்கு சன நாயகம்.. அல்லாடித்தான் போயிட்டு.

தமிழ் மக்கள் பொதுவில் வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. :lol::D

51% மேல் பதிவாகியிருப்பது புறக்கநிப்பில்லைத்தானே?  :)

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காக்கு வரும் போது pizza வா மாறி வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
அது இங்கும் வாங்கலாம் தானே?
டிஸ்னி லாண்ட் பவுச்சர் இருக்கா ?  பசு ஒன்றை கன்றோடு அவிழ்க்கும் யோசனை வந்திருக்கு.
இதவைச்சு கோலம் போடலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

51% மேல் பதிவாகியிருப்பது புறக்கநிப்பில்லைத்தானே?  :)

மிச்சம் 49% மக்கள் இல்லை மாக்களா..??! நல்ல ஜனநாயகம் தான் போங்கோ.

அதிலும்.. 51% இல் எத்தின சனம் சும்மா கிறுக்கிப் போட்டு வந்திச்சுது என்று எனி எண்ணுக்கு கணக்கு முடியத்தான் வெளிக்கும்.

வடக்கு மாகாண சபை தேர்தலில்.. கிட்டத்தட்ட 80% வாக்குகள் பதிவாகின..!!! :icon_idea:

தவறு கடந்த மாகாணசபை தேர்தலில் யாழ் மாவட்டம் சுமார் 64% வாக்கு பதிவாகியது. 

வடபகுதியில் எப்பவும் பொதுவாக 65% வீதத்தை தாண்டுவதில்லை, முழு இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்த வாக்களிப்பு நல்ல விதம்தான் 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மாகாண சபை அளவுக்கு மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்கல்ல.. என்றதை ஒப்புக் கொள்ளுறீங்க. அப்ப தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை.. மக்கள் கணக்கில் எடுக்கல்ல. எடுத்திருந்தா..???????! 51.. 65% எட்டி இருக்கனுமே..???!

அப்ப மக்கள் சம்பந்தனைப் புறக்கணித்திருக்கிறார்கள். அனந்தியை வரவேற்றிருக்கிறார்கள்..!! :D:lol:

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் மதியம் வரை மதியம் வரையில் 30 % தொடக்கம் 40% வாக்குப் பதிவுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இலங்கைக்கான 7 ஜனாதிபதித் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது. எனினும் மட்டக்களப்பில் மதியம் வரையில் 30 % தொடக்கம் 40% வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மதியத்திற்குப் பின்னர் 50 வீதத்தைத் தாண்டும் என எதிர்ப்பார்கப்படுகின்றது.

batticalo_presidental_election_2015_01.p

batticalo_presidental_election_2015_02.p

batticalo_presidental_election_2015_03.p

batticalo_presidental_election_2015_04.p

batticalo_presidental_election_2015_05.p

batticalo_presidental_election_2015_06.p

batticalo_presidental_election_2015_07.p

batticalo_presidental_election_2015_08.p

வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

add%20size.JPGஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சற்று முன்னர் (04.00 மணி) நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியது.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடுபூராகவுமுள்ள 12,314 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

therthal%20ok.PNG

http://www.pathivu.com/news/36749/57//d,article_full.aspx

என்னுடன் ஒன்றாக  வேலை செய்யும் சிங்கள பெண்ணிடம் தேர்தல் தொடர்பாக பேசினேன். அவரின் தாய் தந்தை இலங்கையில் உள்ளதால் தேர்தல் நிலையை அறியலாம் என்ற ஆவல் என்னிடம் இருந்தது.  இவர் (மகிந்த) நல்லா சாப்பிட்டுவிட்டு பசியாறி இருக்கிறார். பசியில்லாதபடியால்  இனி எமக்கு(மக்களுக்கு) ஏதாவது சாப்பிட  தரக்கூடும். மற்றவர் வந்தால் அவர் வந்து தான் சாப்பிடும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று அவவின் தாயார் கூறினாராம். இதைகூறிய அந்த சிங்களப்பெண்  இருவருடனும் பல திருடர்கள் உள்ளனர் எம்மை பொறுத்தவரை இருவரும் ஒன்று தான் என்று அலுத்துக்கொண்டார். எமது நாட்டு அரசியல் வாதிகளை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவரது பதிலில் தெரிந்தது.

அப்ப மாகாண சபை அளவுக்கு மக்கள் ஆர்வத்தோடு வாக்களிக்கல்ல.. என்றதை ஒப்புக் கொள்ளுறீங்க. அப்ப தலைவர் சம்பந்தனின் அறிவிப்பை.. மக்கள் கணக்கில் எடுக்கல்ல. எடுத்திருந்தா..???????! 51.. 65% எட்டி இருக்கனுமே..???!

அப்ப மக்கள் சம்பந்தனைப் புறக்கணித்திருக்கிறார்கள். அனந்தியை வரவேற்றிருக்கிறார்கள்..!! :D:lol:

மாகாண சபைத்தேர்தல் அவர்களுக்கான தேர்தல், குறைந்த வாக்குகளின் வித்தியாசத்தில் வேண்டாதவர்கள் தெரிவாகமல் இருக்க வாக்களித்திருக்கலாம். அனால் சிங்கள சனாதிபதிக்கு அவ்வளவாக ஆதரவில்லை.

கூட்டமைப்பு அறிவித்ததும் ஒருகாரணம் இல்லாவிட்டாலும் ஒரு 30% 40%வீதமாகவேனாலும் வாக்களித்திருக்கும்.

இதுக்கு சம்பந்தர் பேசாமலே இருந்திருக்கலாமில்ல.  நுனலும் தன் வாயால் கெடும்.. நிலையாச்சே இப்ப. :lol::icon_idea:

வடக்கு மாகாண சபை தேர்தலில்.. யாழ் மாவட்டத்தில் 3 தேர்தல் தொகுதிகளில்.. 77% க்கு மேல் வாக்கு பதிவாகி உள்ளது. ஒரு தேர்தல் தொகுதி தவிர.. (காங்கேசந்துறை -அநேக மக்கள் மீளக் குடியேற அனுமதிக்கப்படாத தொகுதி).. மிகுதி எங்கும்.. சராசரியாக 64% க்கு மேல் வாக்களித்திருக்கிறார்கள். :):lol:

என்னுடன் ஒன்றாக  வேலை செய்யும் சிங்கள பெண்ணிடம் தேர்தல் தொடர்பாக பேசினேன். அவரின் தாய் தந்தை இலங்கையில் உள்ளதால் தேர்தல் நிலையை அறியலாம் என்ற ஆவல் என்னிடம் இருந்தது.  இவர் (மகிந்த) நல்லா சாப்பிட்டுவிட்டு பசியாறி இருக்கிறார். பசியில்லாதபடியால்  இனி எமக்கு(மக்களுக்கு) ஏதாவது சாப்பிட  தரக்கூடும். மற்றவர் வந்தால் அவர் வந்து தான் சாப்பிடும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்று அவவின் தாயார் கூறினாராம். இதைகூறிய அந்த சிங்களப்பெண்  இருவருடனும் பல திருடர்கள் உள்ளனர் எம்மை பொறுத்தவரை இருவரும் ஒன்று தான் என்று அலுத்துக்கொண்டார். எமது நாட்டு அரசியல் வாதிகளை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது அவரது பதிலில் தெரிந்தது.

இதில என்ன சந்தேகம்? சிங்களத்தில காந்திகள் பிறப்பதில்லை. அதுதான் நியதி. 

நெடுக்கர், நீங்கள் சொன்னமாதிரியும் இருக்கலாம். எனது நண்பர்களின் தகவல் படி, தமிழ் பகுதிகளில் சனம் தொடக்கத்தில வரேல்லையாம்.

பினர் ஊடகங்களில் வாக்களிப்பு வீதம் பற்றி அறிவிக்க தொடங்கிய பின்னர் மீதமுள்ள வயோதிபர்கள் வந்தார்களாம் பின்னர் இறுதியாகத்தான் இளையவர்களும் வந்தார்களாம். 

எதோ தமிழர்களின் வாக்கு துச்பிரயோகப்டாமல் தவிர்ர்கப்படாதே நல்ல விடயம்தான். அதை விட ஏதாவது ஒரு சிங்களவன் தோற்பதில் வரும் ஒரு அற்ப சந்தோசமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா தேர்தலில் தமிழ்மக்கள் ஆர்வம் காட்டவில்லை

அதை தலைமைகளாலும் மாற்றமுடியவில்லை

தமது பாதையில் தமிழர் உறுதியாக உள்ளனர் என்பதையே மீண்டும் மீண்டும் தாயகத்தமிழர் நிரூபிக்கின்றனர்

முல்லைத்தீவில் 74.88 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.