Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்

Featured Replies

நன்றாக கவனியுங்கள்

தற்போதைய  நிலையில் 

கூட்டமைப்பு செய்யும் எல்லாவற்றையும் வரவேற்போர்

விடுதலைப்புலிகள் இவ்வாறு செய்தவை தவறு என்போராக இருப்பர்

 

அதாவது 

ஆயுதப்போராளிகளிடம் ஐனநாயகத்தை எதிர்பார்த்தவர்கள்

ஐனநாயகவாதிகளிடம் எதேச்சதிகாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.. :(  :(  :(

சுரேஷ் அல்லது சித்தர் இப்படி நடந்திருந்தால் இதே கருத்தைத்தான் நாங்கள் வைத்திருப்போம் ஆனால் நீங்கள் ? எழுத வேண்டுமா என்ன . :lol:   

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் அல்லது சித்தர் இப்படி நடந்திருந்தால் இதே கருத்தைத்தான் நாங்கள் வைத்திருப்போம் ஆனால் நீங்கள் ? எழுத வேண்டுமா என்ன . :lol:   

 

அவா

புலிகளைக்கு சேறு பூசி  ஏதாவது சொன்னால் தெரியும் 

உங்கள் பாடு... 

சும்மா யாழில பூச்சுத்தாதீங்கோ..

இங்க யாரும் உங்கள நம்ப மாட்டினம் :lol:  

ஒரு கட்சி, உறுப்பினர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது இயலாது. குறித்த உறுப்பினர் அந்தக் கட்சி செயற்பாடுகளில் இணைந்து உறுப்புரிமை பெறும்போது, கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவதாகவே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றார். அந்த வகையில் கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படவில்லை என்று தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு அந்தக் கட்சியின் கொள்கைகளின்படி சரியாக இருக்கலாம்.

 

ஆயினும் சராசரி இலங்கையில் உள்ள சராசரி தமிழ் பொதுமகனுடனான உரையாடல் இது,

 

“அனந்திய கட்சி விட்டு நூக்கிட்டாங்களாம். தேர்தல்ல அறிக்கை விட்டதென்டு. தம்பி இவங்களுக்குள்ளயே அடிபட்டுறாங்கள். நான் வோட்டு போட்டுட்டன். எலக்சனும் முடிஞ்சுது. பிறகு என்னத்துக்கு இதெல்லாம். எவ்வளவோ பிரச்சினையள் இருக்கு.. அதப் பாக்கிறத விட்டுட்டு. பாப்பம் என்ன நடக்குது எண்டு.”

 

இதுதான் எந்த அரசியலும் தெரியாத - இலங்கையில் உள்ள சராசரி தமிழ் பொதுமகனின் மனநிலை. அதைப் புரிந்து கொண்டு தமிழரசுக் கட்சியினர் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்காது... தமக்கு முன்னே இப்போதுள்ள பொறுப்புகளை நோக்கிச் செல்வதே சாலச் சிறந்தது. அதுதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி மற்றும் சிவகரன் நீக்கப்பட்டார்கள் என வெளியான தகவல்களில் உண்மை இல்லை:- 

 

 

தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் – தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் உறுதிப்படுத்தினர்:-

Breaking%20New%20one_CI.png

மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் இளைஞரணித் தலைவர் சிவகரன் ஆகியோர் கட்சியில் இருந்தோ, மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் சற்று முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது குளோபல் தமிழ்ச் செய்திகளிடம்  தெரிவித்தார்...

எனினும் கட்சியின் முடிவுகளை மீறி இவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சிக்கு நெருக்கடிகளை உருவாக்குவதாகவும், அது குறித்து பலர் கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்த கட்சியின் செயலாளர், அது குறித்து அவர்களிடம் விளக்கம் கோரத் தீர்மானித்திருப்பதாகவும் இதுவரை அதுகுறித்த கடிதங்கள் அனுப்பப்படவில்லை எனவும் குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

முதலில் விளக்கக் கடிதம் அனுப்பப்பட்டு, பின்னர் விசாரணைக்கு அழைத்து, அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டு, அந்த அறிக்கை மத்திய குழுவிடம் சமர்பிக்கப்பட்டு இறுதியாகவே தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது “ தம்பி கட்சியின் உறுப்பினர்கள் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது கட்சியின் வழமைதானே... ஆனால் இது குறித்து அவர்களிடம் விளக்கம் கோர தீர்மானித்து இருக்கிறோம் ஆனால் அது குறித்து இன்னும் கடிதம் அனுப்பவில்லை... அவர்கள் இதுவரை நிறுத்தப்படவும் இல்லை எனத் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115401/language/ta-IN/article.aspx

 

ஒரு கட்சி, உறுப்பினர் மீது எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது இயலாது. குறித்த உறுப்பினர் அந்தக் கட்சி செயற்பாடுகளில் இணைந்து உறுப்புரிமை பெறும்போது, கட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவதாகவே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றார். அந்த வகையில் கட்சி எடுத்த முடிவுக்குக் கட்டுப்படவில்லை என்று தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு அந்தக் கட்சியின் கொள்கைகளின்படி சரியாக இருக்கலாம்.

 

** கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக இப்போது தகவல் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பரவிய பின்னர் சராசரி இலங்கையில் உள்ள சராசரி தமிழ் பொதுமகன் உரையாடியபோது,

“அனந்திய கட்சி விட்டு நூக்கிட்டாங்களாம். தேர்தல்ல அறிக்கை விட்டதென்டு. தம்பி இவங்களுக்குள்ளயே அடிபட்டுறாங்கள். நான் வோட்டு போட்டுட்டன். எலக்சனும் முடிஞ்சுது. பிறகு என்னத்துக்கு இதெல்லாம். எவ்வளவோ பிரச்சினையள் இருக்கு.. அதப் பாக்கிறத விட்டுட்டு. பாப்பம் என்ன நடக்குது எண்டு.”

இதுதான் எந்த அரசியலும் தெரியாத - இலங்கையில் உள்ள சராசரி தமிழ் பொதுமகனின் மனநிலை. அதைப் புரிந்து கொண்டு தமிழரசுக் கட்சியினர் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்காது... தமக்கு முன்னே இப்போதுள்ள பொறுப்புகளை நோக்கிச் செல்வதே சாலச் சிறந்தது. அதுதான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும்.

 

#சும்மா இங்காலப் பக்கம் வந்த இடத்தில ஒரு கருத்து. நன்றி.

Edited by mayooran

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க பின்வருவனவற்றைப் பின்பற்றலாம்..

1) மனச்சாட்சிக்கு விரோதமாகப் பொய் பேசலாம்.. பிறகு செய்வது வேறொன்றாக இருக்கலாம்.

2) வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு இருக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

3. ஒட்டிக்கொண்டிருக்காமல் கட்சியைவிட்டு விலகலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் சிறிலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தல் தமிழரசுக்கட்சியில்பிளவை மன்னிக்கவும் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி உள்ளது. இதுதானே சிங்களவருக்கு வேண்டும். சிங்களம் தனக்கான தலைமையை தமிழர்களைப் பாவித்து தெரிவு செய்து விட்டது. அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள் இவர்கள் தமக்குள் அடிபடுகிறார்கள்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க பின்வருவனவற்றைப் பின்பற்றலாம்..

1) மனச்சாட்சிக்கு விரோதமாகப் பொய் பேசலாம்.. பிறகு செய்வது வேறொன்றாக இருக்கலாம்.

2) வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு இருக்கலாம். :D

 

இதன்படி பார்த்தால்... இலங்கை அரசில் பெரும்பான்மை சொல்வதற்கு ஆமா போட்டுக் கொண்டு தலையை ஆட்ட வேணும் என்றும் சொல்லலாம்.. எனெனில் சனநாயகம் பெரும்பான்மையை வைத்துத்தானே கணிக்கப்படுகிறது!!

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன், ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் சுயசிந்தனையில் அங்கே அரசியல் செய்பவர்கள் என்று கருதுவதற்கு இடம் இல்லை. இவர்கள் எல்லாம் புலத்தில் உள்ளவர்களின் சொற்கேட்டு நடப்பவர்கள். இதனை பல தடவை இந்தக் களத்தில் தெரிவித்தும் உள்ளேன்.

இப்போதும் கூட இவர்களை நீக்கியது தொடர்பில் அதிகம் கவலைப்படுபவர்கள் புலம்பெயர் தமிழ் ஊடகங்களும் புலிப் பினாமிகளும் தான்.

அங்கு உள்ள மக்கள் இது தொடர்பில் கூட்டமைப்பு சரியான முடிவு எடுத்து இருப்பதாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று தமிழ்த் தேசியம் சார்ந்த ஊடகவியலாளர்கள் இவர்களை தொடக்கத்தில் இருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்காதீர்கள் என்று மேல்மட்டத் தலைவர்களிடம் வலியுறுத்தியும் வந்து இருக்கின்றனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறந்த இளம் தலைவராக வரவேண்டியவர். ஆனால், அவர் தமிழ்நெட் ஜெயச்சந்திரன் மற்றும் புலிப் பினாமிகளின் சொற்கேட்டு ஆடியதால் அவரும் அவரோடு இணைந்தவர்களும் வெளியேற வேண்டி வந்தது.

இறுதியில் நடந்தது என்ன?

தேர்தலில் அவர்களால் அதிக அளவு வாக்குகளைக் கூடப் பெற முடியாமல் போய்விட்டதே. இவ்வளவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னர் போட்டியிட்டு இருந்த செல்வராஜா கஜேந்திரன் அதிகளவிலான விருப்பு வாக்குகளைப் பெற்றவர்களில் ஒருவரும் கூட.

ஒரு அமைப்போடும் துறையோடும் நிறுவனத்தோடும் இணைந்து செயற்பட்டால்தான் உங்கள் திறமைகளும் பலமும் வெளிப்படுமே தவிர தனித்துச் செயற்பட்டால் எதனையும் பெற முடியாது. மாறாக இருக்கின்றவற்றினை இழந்துதான் ஆகவேண்டும்.

தொடக்கத்தில் மகிந்த வந்தால் என்ன மைத்திரி வந்தால் என்ன என்று யாழ். களத்தில் கருத்து தெரிவித்த பலர், பின்னர் மைத்திரி வருகின்றார் என தெரிய வந்தவுடன் தமது தொனியை மாற்றி கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கி இருந்தனர்.

வடக்கு-கிழக்கு தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த வேண்டுகோளையும் அதேவேளை அனந்தி போன்றவர்களின் செயற்பாடுகளையும் இதே களத்தில் வரவேற்று எழுதியும் இருந்தனர்.  

என்னைப் பொறுத்தவரை சிங்களவர்கள் எமக்கு எதனையும் தரப் போவதும் இல்லை. இதில் நான் என்றும் தெளிவாகவே கருத்து தெரிவித்து வருகின்றேன்.

ஆனால், அதற்காக கால ஓட்டத்தின் அரசியலுக்கு ஏற்ப எம்மை ஈடுபடுத்தி அந்த நெளிவு சுழிவுகளுக்கு ஊடாக அங்கு உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என பார்க்க வேண்டும்.

ஜி.ஜி.பொன்னம்பலத்துக்குப் பின்னர் வடக்கு-கிழக்கு மக்களுக்கு ஏதாவது செய்வதற்கு தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பாவிக்கக்கூடிய தலைவர்கள் எம்மவர்களிடம் தோன்றாமல் போய் இருப்பது கவலைக்கு உரிய விடயம் ஆகும்.

முஸ்லிம் தலைமைகள் மாறி-மாறி அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று தமது இடங்களை நன்றாக வளப்படுத்தி வைத்து இருக்கின்றனர். காத்தான்குடி, ஓட்டமாவடி, கல்முனை என பல இடங்களை இவ்வாறு கூறலாம்.

இங்கே கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகள் பெற்றாலும் அதனை வரவேற்க வேண்டுமே தவிர அவர்களை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. அந்தப் பதவிகள் ஊடாக எமது மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். இல்லை எனில் டக்ளஸ் தற்போதைய அரசாங்கத்துடன் சேர்வதனை எவராலும் தடுக்க முடியாமல் போய்விடும்.

சாணக்கிய அரசியலா? அல்லது எதிர்ப்பு அரசியலும் வெற்றுக் கோசங்களுமா? என்பதனை இனிவரும் காலம் தீர்மானிக்க வேண்டியதாக இருக்கும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து நிர்மலன்.

கஜேந்திரகுமாருக்கு ஏழரை எண்டு நினைக்கிறேன் அதுதான் கஜன் வடிவில் வந்து இந்த ஆட்டு ஆட்டுது. ஆளுமை, அறிவு மிக்க ஒருவர். நிச்சயமச்க அடுத்த தலைமுறையின் தலைமை பொறுப்பை ஏற்கும் தகுதியுடைவர். அநியாயமா போய் வெறுங்கடையில டீ ஆத்துற்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 7.5 சட்டர்ன் பிடிச்சால் விடாது! :D

  • கருத்துக்கள உறவுகள்
சிலருடைய உண்மையான அரசியல் அறிவை இந்த திரியில் இருந்து எடைபோடலாம்.
இந்த வங்கோரத்து நிலையில் இருப்பவர்கள்தான் ..........
புலிகளுக்கு அரசியல் பாடம் அப்பப்ப இங்கே எடுக்கிறார்கள். 
 
நினைச்சா சிரிப்புதான் வருகிறது!

அனந்தி மற்றும் சிவகரன் இருவருக்கும் விளக்கம் கேட்டு இடைநிறுத்தி கட்சி கடிதம் அனுப்பியது உண்மை .

மாவை ஒரு விழாவுக்காக சுவிஸ் வருகின்றார் .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.