Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ - விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தயாரிப்பு : ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்.,
இயக்கம் : ஷங்கர்
நடிப்பு : விக்ரம், எமி ஜாக்ஸன், சுரேஷ் கோபி, உபுன் படேல், சந்தானம்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்
எடிட்டிங் : ஆண்டனி

மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் படம் இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது... ‘ஐ’ தந்த ஆச்சர்யங்கள் என்னென்ன?

கதைக்களம்

‘மிஸ்டர் தமிழ்நாடு’ லிங்கேஸன் (விக்ரம்) மாடலிங்கில் கொடிகட்டிப் பறக்கும் தியாவின் (எமி ஜாக்ஸன்) தீவிர ரசிகர். ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் தியாவுடன் சேர்ந்து மாடலிங் செய்யும் வாய்ப்பு அமைய, மாடல் ‘லீ’யாக மிகப்பெரிய அளவில் பிரபலமடைகிறார். அவரின் வளர்ச்சி... சிலருக்கு பலவீனமாக அமைய, அவர்கள் அனைவரும் இணைந்து ‘நெஞ்சை நிமிர்த்தி’த் திரியும் விக்ரமை, ‘கூன்’ போட வைக்கிறார்கள். மீண்டும் விக்ரம் நிமிர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘ஐ’.

படம் பற்றிய அலசல்

ரொம்பவும் சாதாரணமான பழிவாங்கல் கதைதான். அதை தன் பாணியில் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

மணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்துவிடுகிறது ‘ஐ’. பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

டெக்னிக்கலாக ஷங்கர் படம் எப்போதுமே முதல் தரத்திலிருக்கும். இந்த ‘ஐ’யும் அந்த நம்பிக்கையைக் வீணாக்கவில்லை. அழகான லோகோஷன்கள், அற்புதமான இசை, கலர்ஃபுல் ஒளிப்பதிவு, வியக்க வைக்கும் மேக்அப், ஆச்சரியப்படுத்தும் சிஜி என எல்லாமே இப்படத்திலும் உயர்தரம்!

முதல்பாதியின் ஸ்லோவான திரைக்கதை, விக்ரம் எமிக்கிடையே இருக்கும் காதலில் ஆழமில்லாமல் இருப்பது, எளிதில் யூகிக்கக்கூடிய ‘ட்விஸ்ட்’ போன்றவை ‘ஐ’யின் பலவீனங்கள். அதோடு... இதற்குத்தானா இவ்வளவு பிரம்மாண்டங்களும்? என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

இந்த கேரக்டரில் விக்ரமைத் தவிர வேறு யாரையும் சிந்திக்கவே முடியாது. அவரின் உழைப்பு நிச்சயம் இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்! லிங்கேஸன், லீ, கூனன் என மூன்று பரிமாணங்களிலும் அவரின் டெடிகேஷன் மலைக்க வைக்கிறது... ‘ஹேட்ஸ் ஆஃப் டு விக்ரம்’.

மாடலிங் பியூட்டி ‘தியா’ கேரக்டருக்கு 100 சதவிகிதம் பொருந்தியிருக்கிறார் எமி ஜாக்ஸன். நடிப்பதற்கு பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், அவரைத்தவிர இவ்வளவு ‘தாராளம்’ காட்ட தமிழ் சினிமாவில் கண்டிப்பாக ஆள் இல்லை!

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம். டாக்டராக வரும் சுரேஷ் கோபி, அமைதியாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டமாக முடித்திருக்கிறார். உபேன் பட்டேல், ராம்குமார் ஆகியோரும் சரியான தேர்வே!

பலம்

1. விக்ரமின் கடின உழைப்பு
2. பாடல்களும், அதை படமாக்கிய இடங்களும், விதமும்!
3. ஒளிப்பதிவு, மேக்அப், சிஜி உள்ளிட்ட டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. ரொம்பவும் சாதாரணமான கதை
2. எளிதில் யூகிக்கக் கூடிய ‘ட்விஸ்ட்’டுகள்
3. ஆங்காங்கே படத்தை ஸ்லோவாக்கும் ஒருசில காட்சிகள்
4. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

இவ்வளவு செலவு, இவ்வளவு உழைப்பு இந்தக் கதைக்கு தேவையா? என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் படமாக்கிய விதத்தையும், அற்புதமான லோக்கேஷன்களையும், விக்ரமின் கடின உழைப்பையும் ரசிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ‘ஐ’ ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

ஒரு வரி பஞ்ச் : விழலுக்கிறைத்த நீராக இருந்தாலும், அது விக்ரமின் வியர்வையாக இருப்பதால் கண்டிப்பாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்!

ரேட்டிங் : 5.5/10

 

http://www.top10cinema.com/article/tl/31087/i-movie-review

விக்ரம் நடித்த ஐ திரைப்படம் அவர் நடிப்பிற்காக பல விருதுகளைப் பெறலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை! இந்நிலையில் விக்ரம் இப்படத்திற்காக வாங்கிய சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளாராம். இவரது செயற்பாடு மற்றைய நடிகர்களுக்கு முன்னோட்டமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்! எவ்வளவு உழைக்கிறார் என்பது முக்கியமில்லை! அதை வைத்து என்னென்ன செய்யலாம் என்பது தான்! கர்ணன், எம்;ஜி;ஆர் போல இருக்க வேண்டியதில்லை ஓரளவு சில மக்களின் தேவைகளையாவது அறிந்துகொண்டு புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு, கொடுத்துக் கொண்டு வாழ்ந்தாலே போதும்!

10933813_10153065008079396_1560821360295
  • கருத்துக்கள உறவுகள்
10933813_10153065008079396_1560821360295

 

இந்த தகவல் இவ்வளவு நாளும் வெளியே வராமல், ஐ தமிழகத்தில் சரியாக போகவில்லை என்று செய்திகள் வரும் போது வெளிவருகின்றது

 

விக்ரம் நல்ல நடிகர் தான். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவல் இவ்வளவு நாளும் வெளியே வராமல், ஐ தமிழகத்தில் சரியாக போகவில்லை என்று செய்திகள் வரும் போது வெளிவருகின்றது

 

விக்ரம் நல்ல நடிகர் தான். :icon_mrgreen:

 

 

படம் பற்றிய  உங்களது விமர்சனத்தைக்காணோமே....?

  • கருத்துக்கள உறவுகள்

i-movie-posters.jpg

ஊர் நண்பர்களின் உற்சாகத்தைக் கெடுக்க வேண்டாமே என்பதற்காக பொங்கலன்றிரவே அம்பாசமுத்திரம் திரையரங்கு ஒன்றில் திரைக்கு பத்தடிக்கு முன்னால் தரையில்அமர்ந்து ’ஐ’யைப் பார்த்துவிட்டாலும் நேரமின்மையாலும், இதற்கெல்லாம் விமர்சனம் ஒரு கேடா என்று தோன்றியதாலும் இதுவரை எழுதவில்லை. இருந்தாலும் மீடியமா இருக்குறதை விட்டுவிட்டாலும் பரவாயில்லை, ரொம்ப பாராட்ட வேண்டியதையும், ரொம்ப திட்ட வேண்டியதையும் தவிர்க்காம எழுதிடணும்ங்கிற நம் கொள்கையின் படி இதை இப்போ எழுதலாகிறேன்.

நம் ரசனை, சமூக ரசனை என்ற பேச்சு வருகையிலெல்லாம் இன்னொரு சிக்கலும் எழும். சமயத்தில் ’இஃதொரு உருப்புடாத சமூகம், இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்’ என்று நாம் புலம்புவதுண்டு. பிற்பாடு, ’சமூகம் எவ்வழி அவ்வழி நாமும், மக்கள் தீர்ப்பே இறுதியானது’ என்றும் சைடு வாங்குவதுண்டு. போலவே ரசனை விஷயத்திலும் இது ஒரு கேடுகெட்ட ரசனையுள்ள சமூகம் என்று திட்ட எத்தனிக்கையில், ரசனை தனி மனிதன் பாற்பட்டது, உன் ரசனை மட்டும் எவ்விதத்தில் உசத்தியாம்? என்றொரு கேள்வியும் இன்னொருவர் கேட்காமலே நமக்குள் எழத்தான் செய்கிறது.

இருக்கைகள் நிரம்பி, இண்டு இடுக்கெல்லாம் தரையும் நிரம்பி உட்கார இடமில்லாமல் தியேட்டர் நிரம்பி வழிவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

ஆனால் அந்தக் கூட்டத்தில் சரிபாதி கூட்டம், ஒரு திருநங்கையை கேலி செய்கையில், அவமானப் படுத்துகையில், அவரது உணர்வுகளை துச்சமாக மதிக்கையில் ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்ப்பதைப்போல சிரித்து உற்சாகமாகிறது. உடற்சிதைவு செய்யப்பட்ட நபர்களைப் பார்க்கையில் குதூகலிக்கிறது.

அன்பே சிவம் படத்தில் வரும் ஒரு காட்சி, சந்தானபாரதி ஒரு திரைங்கில் ‘அனகோண்டா’ படம் பார்த்துக்கொண்டிருப்பார். அதில் பாம்பு ஒன்று மனிதர்களை விழுங்குகையில் உற்சாகமாக சிரித்து மகிழ்வார். ஒரு பாம்பு, மனிதனை விழுங்குவது சிரிப்பதற்குரிய விஷயம்தானா? அங்கு நமக்கு பயமோ, பரிதாபமோ, த்ரில்லோ ஏற்படவேண்டாமா? அப்படியான சந்தானபாரதியாகத்தான் இந்த சமூகத்தின் சரிபாதிக்கூட்டம் இருக்கிறது. ஆனால், ஒரு நல்ல படைப்பாளி என்ன செய்யவேண்டும்? இந்த உணர்வுகளைச் செப்பனிட முயற்சி செய்ய வேண்டாமா? எது துயரம், எது மகிழ்ச்சி என்பதற்கான வேறுபாடுகளை உணரும் வகை செய்ய வேண்டாமா? ஆனால் இங்கு நடப்பது என்ன?

சமூகத்தின் தளைகளிலிருந்து இன்னும் விடுபடாத திருநங்கையரை இப்போதுதான் மெல்ல மெல்ல திரும்பிக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறோம். அதை ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு இருபதாண்டுகள் பின்னோக்கி இழுத்துக்கொண்டாவது போகாமலிருக்கலாமில்லையா?

ஓஜாஸ் ரஜனி திரைத்துறையில் இயங்கி வரும் இந்தியாவின் பிரபலமான ஒரு ஸ்டைலிஸ்ட்! அவர் ஒரு திருநங்கை. அவரது நிஜ காரெக்டரை அப்படியே தழுவி ஒரு காரெக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது படத்தில். அதில் அவரே நடிக்கவைக்கப்படுகிறார். நம் மனதில் என்னவெல்லாம் ஆசை தோன்றும்? படத்திலும் அதே மதிப்புடன், ஆளுமையுடன் அவர் காண்பிக்கப்படலாம். தகுந்த காரணங்களுடன் ஹீரோ மீது அவருக்கு காதல் வரலாம். அந்தக் காதல் மிகச்சரியான முறையில் வலியுடன் நிராகரிக்கப்படுகையில் அவர் ஒரு நெகடிவ் காரெக்டராக வடிவெடுக்கலாம். இருவருக்குமான போராட்டம் ஆவேசமாக தொடரலாம். இதெல்லாம்தானே? ஆனால், அதெப்படி நாம் எதிர்பார்ப்பதை செய்வது? நிஜ வாழ்வில் போராடி வெற்றிபெற்ற ஓஜாஸாகவே இருந்தாலும், அவரைத் தழுவியே உருவாக்கப்பட்ட காரெக்டராக இருந்தாலும் அவரைச் சுற்றி கும்மியடித்து, “ஊரோரம் புளியமரம்” என பாடத்தான் வைப்போம். ஏனென்றால் சரிபாதிக்கூட்டத்தின் ரசனை சார்ந்த விஷயமாயிற்றே இது. எந்தக் காரணமும் இல்லாமல், விக்ரமை, அவர் உடலழகைப் பார்த்ததுமே ஓஜாஸுக்கு ஒரு மூன்றாம்தரப் பிறவியைப்போல உடல் சார்ந்த காதல் பிறக்கும். சுயமரியாதை என்ற ஒன்றெல்லாம் திருநங்கையர்க்கு எதற்கு? அவரைப் பார்க்கும் போதெல்லாம் முகச்சுழிப்போடு, அருவருப்பாக ஒதுக்குவார் விக்ரம், இந்தச் சரிபாதிக் கூட்டத்துக்கு பிடிக்கும் விதமாக. அவரது காதலையும் நிராகரிப்பார். தன்னை அவமதித்த போதும், கேலி செய்தபோதெல்லாம் வராத கோபம், காதல் மறுக்கப்பட்டபோது மட்டும் ஓஜாஸுக்கு வரும். அதுவும் எப்படி? கொலையை விடவும் குரூரமான ஒரு தண்டனையை விக்ரமுக்கு வழங்கும் அளவுக்கு! என்ன மாதிரியான கேரக்டர் டிஸைன் இது? ஒரு பொறுப்புள்ள, மூத்த, முக்கியமான இயக்குனர் செய்யும் காரியமா இது?

படத்தில் இன்னும் சில வில்லன்களும் இருக்கிறார்கள். அவர்கள் விக்ரமுக்கு ஒரு கிருமியால் உடற்சிதைவு நோயை ஏற்படுத்துகிறார்கள். எந்தப் பெரிய தவறுமே செய்யாத நிலையிலும் விக்ரம் குரூரமாக பாதிக்கப்படுகிறார். போகட்டும்! உடல் நலிவடைந்த நிலையில் எப்படி இவர் வில்லன்கள் குழுவை பழிவாங்கப்போகிறார் என்ற ஒரு பெரிய சுவாரசியம் மிச்சமிருக்கிறதே என்றாவது நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், அவர்கள் செய்ததையே இவரும் செய்கிறார். ஒவ்வொருவரையும், ஒவ்வொரு வகையில் குரூரமாக்கி மகிழ்கிறார். எப்படி? ‘ஒரு கார் விபத்தில் ஒருவர் மரணம்’ என்ற செய்தியை, ‘ஒரு கார் விபத்தில் ஒருவர் மண்டை உடைந்து, குடல் பிதுங்கி, மூளை சிதறி, உடல் நசுங்கி செத்தார்’ என்று நம் பத்திரிகைகள் எழுதுமே அதைப்போல!

இந்த நிலையில் படத்தில் வேறு என்ன சிறப்புகள் இருக்கின்றன என்றெல்லாம் எனக்குப் பார்க்கத்தோன்றவில்லை. ’பெரிய ஆள் சொல்லியாயிற்று, சக்ஸஸ்புல் டைரக்டர், சக்ஸஸ் மட்டும்தான் ஒரே தகுதி. இனி கண், காது, மூளை அனைத்தையும் மூடிக்கொண்டு வேலையை மட்டும்தான் பார்க்கவேண்டும், அதுதான் ஒரு சிறந்த நடிகனின் கடமை’ எனும் விக்ரமின் கொள்கையைப் பாராட்டுவோம், அட்லீஸ்ட் இயக்குனர் சொல்படி கேட்கும் நல்லபழக்கமாவது மிச்சமாகிறதே! இதைப்போலவே தொடர்ந்து ரசனையை வளர்க்கும், ஓடக்கூடிய படங்களாகவே எடுத்து வெற்றிகரமாக திகழுங்கள் ஐயா! நல்லது!

http://www.thaamiraa.com/2015/01/blog-post_21.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐ படம் பார்த்த ஒரு கவிஞரின் கவிதை விமர்சனம்

 

1421900354-4387.jpg

 

கவிஞர் மகுடேசுவரன் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். படம் பார்த்த பின் அந்த தாக்கத்தில் அவர் ஒரு கவிதை எழுதியுள்ளார். உங்களின் ஐ விமர்சனத்துடன் அது ஒத்துப் போகிறதா பாருங்கள்.

 

ஐகாரப் படம்காணச் சென்றேன்
அழுவாத குறையாக நின்றேன்... 
இடைவேளை வருமுன்னே 
எழுந்தோடி வெளிவந்து 
படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டேன்.
 
சீனாவைக் காட்டிவிட்டால் ஆச்சா?
சீன்பண்ணும் திறனெல்லாம் போச்சா?
வீணாக மூன்றாண்டு 
இல்லாத பொல்லாத 
விளம்பரங்கள் செய்துவிட்டால் ஆச்சா?
 
படச்சுருளில் படம்பிடித்த படமாம் 
கண்ணொற்றிக் கொள்ளும்படி வருமாம்...
ஓரெழவும் வரவில்லை 
படச்சட்டம் தெளில்லை. 
நாராசப் பாட்டெல்லாம் தொல்லை...
 
பாய்ஸ் படத்துப் பாட்டுமுறை விட்டு
ஜீன்ஸ் படத்து செட்டிங்கை விட்டு 
நான்குவகைப் பாடல்கள் 
நான்குவகை அடிதடிகள் 
வெளியேவா புதிதாய்த்தா கற்று...
 
ஆலிவுட்டில் பின்னிசைக்க செலவு 
ஆகும்தொகை லட்சத்துக்கும் குறைவு...
கோலிகுண்டு வாங்குதற்கு
கோடிவரை செலவழித்தால் 
தமிழ்த்திரையை நம்பியோர்க்கு அழிவு.
 
  • கருத்துக்கள உறவுகள்

என் ரத்தத்தின் ரத்தமே நலமா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் மட்டுமல்ல திரை உலக வாழ்க்கையிலேயே

விக்ரம் நிறையப் போராடித் தன் கடின உழைப்பால் முன்னேறியவர்.
பல நல்ல படங்களில் நடித்தவர்.ஐ அந்த வரிசையில்  இல்லாவிட்டாலும்
சங்கரின் படம் என்ற படியால் ஒருமாதிரி ஓடவைத்துவிடுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்தேன். எதிர்பார்த்ததுபோல இல்லை. இதுக்குத்தானா ஆனல்ட் சுவாஸ்னேக்கரையும் அழைத்து விழா நடத்தினார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.

 

விக்ரம் ஒரு சிறந்த நடிகர். டைரக்டர் சொல்வதை அப்படியே கேட்பவர். அதற்காக படத்தின் கதை என்னவென்று கேட்காமல் கூடவா நடிப்பது ? படத்தின் பெரும்பகுதியும் அலங்கோல விக்ரத்தின் உருவத்தினால் நிறைந்துபோயிருக்க, முன்பகுதியில் ஒரு சிறு அளவிலும் பாடல்களிலும் மட்டுமே விக்ரமை அழகாகக் காட்டியதுடன் சரி. மீதமெல்லாம் விக்ரம்தானா என்று கண்டுபிடிக்க முடியாத அலங்கோல கூனி உருவத்தில் தன்னை அப்படி ஆக்கியவர்களைப் பழிவாங்கும் விக்ரம்.

 

சரி, ஒரு படத்தில் ஒரு பாத்திரத்தைத்தான் அலங்கோலமாகப் படைப்பார்கள். ஆனால், இங்கோ எல்லாமாக ஆறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மற்றையதை விஞ்சுமளவிற்கு அலங்கோலம். சகிக்க முடியவில்லை.

 

அதிலும், விக்ரமினால் பழிவாங்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் காட்டும்போது, கதையின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கென்றே செய்தியாளர் வடிவத்தில் சந்தானத்தை அனுப்பி, "முன்னர் இப்படியிருந்தாய், இப்போ இப்படி ஆகிட்டாயே?" என்று ஆப்பு டயலொக் வேறு.

 

குழந்தை குட்டிகளுடன் இருந்து பார்ப்பதற்கென்று ஒரு விடயம் கூட இல்லை. பாடல்கள் மட்டும் அழகாக இருக்கின்றன. பாடல்களில் தன்னும் விக்ரத்தை அழகாகக் காட்டியதற்கு வேண்டுமானால் சங்கருக்கு ஒரு "ஓ" போடலாம். அதுசரி, விக்கிரத்தின் அழகின்மேல் படத்தில் உள்ள வில்லன் + வில்லிகளுக்குத்தான் ஆத்திரமென்றால், டைரக்டர் ஷங்கருக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது.

 

எனது அபிமான நடிகர் விக்ரம். அவரை வைத்து ஒரு மெகா சொதப்பலை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி செய்துவைத்திருக்கும் ஷங்கருக்கு நாலு அறைவிட்டால் என்னவென்று தோன்றுகிறது.

 

இனிமேலாவது விக்ரம் தனது படத்தின் கதையென்ன என்பதை கேட்டுவிட்டாவது நடிக்கட்டும். டைரக்டர் சொல்வதைக் கேட்பது நல்லதுதான், அதற்காக மகா மொக்கைப் படங்களில் நடித்து தனது பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமே.

 

தமிழ்நாட்டில் கதைக்கா பஞ்சம் ?? போயும்போயும் அதே பழிவாங்கல் கதை, அதிக பணச் செலவுடன். அப்படி கதைதான் இல்லையென்றால், இருக்கவே இருக்கு கொலிவூட், ஈரானியப் படம், பிரான்சுப் படம் என்று. அதிலொன்றையாவது சுட்டிருக்கலாமே???

 

இறுதியாக, ரெண்டுமணிநேரம் டவுன்லோட பண்ணி , ஆறுதலாக எனது அபிமான நடிகரின் படத்தை வீட்டில் வேலையெல்லாம் முடிந்தவுடன் பார்த்து ரசிக்கலாம் என்று நம்பியிருந்த எனது கனவில் எல்லாம் மண்தூவிய ஷங்கருக்கு.....ஒண்ணும் பண்ணமுடியாது ! கோட்டரை அடிச்சுட்டுக் குப்புறப் படுக்க வேண்டியதுதான் !

Edited by ragunathan

படம் பார்த்தேன். எதிர்பார்த்ததுபோல இல்லை. இதுக்குத்தானா ஆனல்ட் சுவாஸ்னேக்கரையும் அழைத்து விழா நடத்தினார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.

 

விக்ரம் ஒரு சிறந்த நடிகர். டைரக்டர் சொல்வதை அப்படியே கேட்பவர். அதற்காக படத்தின் கதை என்னவென்று கேட்காமல் கூடவா நடிப்பது ? படத்தின் பெரும்பகுதியும் அலங்கோல விக்ரத்தின் உருவத்தினால் நிறைந்துபோயிருக்க, முன்பகுதியில் ஒரு சிறு அளவிலும் பாடல்களிலும் மட்டுமே விக்ரமை அழகாகக் காட்டியதுடன் சரி. மீதமெல்லாம் விக்ரம்தானா என்று கண்டுபிடிக்க முடியாத அலங்கோல கூனி உருவத்தில் தன்னை அப்படி ஆக்கியவர்களைப் பழிவாங்கும் விக்ரம்.

 

சரி, ஒரு படத்தில் ஒரு பாத்திரத்தைத்தான் அலங்கோலமாகப் படைப்பார்கள். ஆனால், இங்கோ எல்லாமாக ஆறு பாத்திரங்கள். ஒவ்வொன்றும் மற்றையதை விஞ்சுமளவிற்கு அலங்கோலம். சகிக்க முடியவில்லை.

 

அதிலும், விக்ரமினால் பழிவாங்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் காட்டும்போது, கதையின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கென்றே செய்தியாளர் வடிவத்தில் சந்தானத்தை அனுப்பி, "முன்னர் இப்படியிருந்தாய், இப்போ இப்படி ஆகிட்டாயே?" என்று ஆப்பு டயலொக் வேறு.

 

குழந்தை குட்டிகளுடன் இருந்து பார்ப்பதற்கென்று ஒரு விடயம் கூட இல்லை. பாடல்கள் மட்டும் அழகாக இருக்கின்றன. பாடல்களில் தன்னும் விக்ரத்தை அழகாகக் காட்டியதற்கு வேண்டுமானால் சங்கருக்கு ஒரு "ஓ" போடலாம். அதுசரி, விக்கிரத்தின் அழகின்மேல் படத்தில் உள்ள வில்லன் + வில்லிகளுக்குத்தான் ஆத்திரமென்றால், டைரக்டர் ஷங்கருக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது.

 

எனது அபிமான நடிகர் விக்ரம். அவரை வைத்து ஒரு மெகா சொதப்பலை ஊரைக் கூட்டி உலகைக் கூட்டி செய்துவைத்திருக்கும் ஷங்கருக்கு நாலு அறைவிட்டால் என்னவென்று தோன்றுகிறது.

 

இனிமேலாவது விக்ரம் தனது படத்தின் கதையென்ன என்பதை கேட்டுவிட்டாவது நடிக்கட்டும். டைரக்டர் சொல்வதைக் கேட்பது நல்லதுதான், அதற்காக மகா மொக்கைப் படங்களில் நடித்து தனது பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமே.

 

தமிழ்நாட்டில் கதைக்கா பஞ்சம் ?? போயும்போயும் அதே பழிவாங்கல் கதை, அதிக பணச் செலவுடன். அப்படி கதைதான் இல்லையென்றால், இருக்கவே இருக்கு கொலிவூட், ஈரானியப் படம், பிரான்சுப் படம் என்று. அதிலொன்றையாவது சுட்டிருக்கலாமே???

 

இறுதியாக, ரெண்டுமணிநேரம் டவுன்லோட பண்ணி , ஆறுதலாக எனது அபிமான நடிகரின் படத்தை வீட்டில் வேலையெல்லாம் முடிந்தவுடன் பார்த்து ரசிக்கலாம் என்று நம்பியிருந்த எனது கனவில் எல்லாம் மண்தூவிய ஷங்கருக்கு.....ஒண்ணும் பண்ணமுடியாது ! கோட்டரை அடிச்சுட்டுக் குப்புறப் படுக்க வேண்டியதுதான் !

 

உங்கள் விமர்சனத்தினை மிகவும் வன்மையாக கண்ணடிக்கின்றேன்

 

ம்ஹூம் இவ்வளவு எழுதியிருக்கின்றீர்கள்... எங்கள் கனவுக் கன்னி, பேரரசி, சிற்றின்ப பேராறு 'ஏமி ஜாக்சன்' பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை...  இது மிகவும் கண்ணடிக்கத்தக்கது :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விமர்சனத்தினை மிகவும் வன்மையாக கண்ணடிக்கின்றேன்

ம்ஹூம் இவ்வளவு எழுதியிருக்கின்றீர்கள்... எங்கள் கனவுக் கன்னி, பேரரசி, சிற்றின்ப பேராறு 'ஏமி ஜாக்சன்' பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை... இது மிகவும் கண்ணடிக்கத்தக்கது :)

கலை இலக்கியங்களில் ரகுவுக்கு ஆர்வம் குறைந்துவிட்டதை இது எடுத்துக் காட்டுகிறது..! :icon_idea:

இப்ப தான் ஐ படம் பார்திட்டு வாரன். சங்கரின் பழைய படங்களோட ஒப்பிட்டால் தரம் கொஞ்சம் குறைவு தான். ஆனால் விக்ரமின் நடிப்பு சொல்லி வேலை இல்லை.
டொரொண்டோ எமி ஜக்சன் ரசிகர் மன்றத்தில் ஆயுற்கால உறுப்பினராகவும் இணைந்து விட்டேன்.  :wub:
 
Amy-Jackson-Hot-Stills-6.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ரகுநாதா!!
தாங்கள் ஒன்றும் அறியாத பாலகனா ??? :D
பால்குடிகள் பரிதவிப்பதை பாருங்கள்...ஐயகோ..... :o
அந்த பாவையைப் பற்றியும் ஓரிரு வரிகள் இணைத்து விடுங்கள். :wub:
கட்டிளம் காளையர்கள் திருப்தி அடையட்டும். :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்

ஆவ்....இவ்வளவு விஷயம் இருந்திருக்குதா?? கவனிக்கவேயில்லை. அப்ப இன்னொருக்காப் பார்க்க வேணும். பாத்துப்போடுச் சொல்லுறன். ஆனால் எனக்கு அவ்வள்வுக்கு அந்த விமர்சனம் எல்லாம் வராது. ட்ரை பண்ணுறன் !

amy-jackson.jpg

 

i-movie-stills-2.jpg

 

1_98.jpg

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.