Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு

Featured Replies

சுன்னாகத்தில் இயங்கி வந்த நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடுமாறு சம்பிக்க ரணவக்க உத்தரவு

சுன்னாகம் பகுதியில் இயங்கி வரும் நொதேர்ன் பவர் அனல் மின்நிலையத்தை உடனடியாக மூடிவிடுமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்.

அமைச்சருடன் இன்று (22.01.14) இடம் பெற்ற சந்திப்பின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

நொதேர்ன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய்கள் நிலத்தில் பரவி சுன்னாகம், தெல்லிப்பழை பிரதேசங்கள் எண்ணூறுக்கு மேற்பட்ட கிணறுகளில் சேர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இது தொடர்பில் மல்லாகம் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவை விசாரணையில் உள்ளன. அத்துடன் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர். அண்மையில் சூழல் பாதுகாப்பு அமையம் சார்பாக இந்த விடயம் முன்னைய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆட்சி மாற்றத்தை அடுத்து இந்த பிரச்சினை குறித்து சூழல் பாதுகாப்பு அமையம் புதிய அரசுடன் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், கிணற்று நீர் மாசடைவதற்கு காரணமாக இருந்த நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக மூடுவதற்கு

நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான சந்திப்பு இன்று காலை கொழும்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தை மூடுவதன் மூலம் யாழ்.மாவட்டத்திற்கான மின்விநியோக நடவடிக்கைகள் பாதிப்படையாது என அமைச்சர் உறுதியளித்தார் எனவும் சாந்தா அபிமன்னசிங்கம் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115821/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்! அத்துடன், நிலத்தடியில் ஊறிப்போயுள்ள கழிவு எண்ணையை எப்படி வெளியே எடுப்பது? என்ற பாரிய தேடலையும் இவ்விடயம் கொண்டுள்ளது.

என்னைக் கேட்டால்..., முன்நாள் அமைச்சர் டக்கி குழுமத்திடம் இதற்கான ஆலோசனையைக் கோருவது பயனளிக்கும் என்று எண்ணுகிறேன். அக்குழுமத்திடம்தான் கழிவு எண்ணை பற்றிய ஆழ்ந்த அறிவு செறிந்துள்ளது.  :icon_idea:

நல்ல விடயம்! அத்துடன், நிலத்தடியில் ஊறிப்போயுள்ள கழிவு எண்ணையை எப்படி வெளியே எடுப்பது? என்ற பாரிய தேடலையும் இவ்விடயம் கொண்டுள்ளது.

என்னைக் கேட்டால்..., முன்நாள் அமைச்சர் டக்கி குழுமத்திடம் இதற்கான ஆலோசனையைக் கோருவது பயனளிக்கும் என்று எண்ணுகிறேன். அக்குழுமத்திடம்தான் கழிவு எண்ணை பற்றிய ஆழ்ந்த அறிவு செறிந்துள்ளது.  :icon_idea:

 

நிலத்தடி நீரில் எண்ணை கலந்தாலும் எண்ணை நீரில் கலக்காது மிதக்கும்.
 
யாழ்களத்தில் உள்ள பல துறைகளைச் சேர்ந்தவரகள் உள்ளார்கள். அவர்கள் நிலத்தடி நீரில் எண்ணை கலந்தால் எப்படி வெளியேற்றலாம் என்று எழுதலாமே? 
 
வேண்டுமென்றால் எடுத்த எண்ணையை டக்கிக்கு கொடுக்க ஆதரவளிப்பேன்.
  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான செய்தி. :)

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமென்றால் எடுத்த எண்ணையை டக்கிக்கு கொடுக்க ஆதரவளிப்பேன்.

 

டக்கியை

மிகவும் மட்டமாக கணக்கு போடுகிறீர்கள்... :lol:  :D

அவருக்கு கொடுத்ததை வாங்கி  பழக்கம் கிடையாது... :D

டக்கியை

மிகவும் மட்டமாக கணக்கு போடுகிறீர்கள்... :lol:  :D

அவருக்கு கொடுத்ததை வாங்கி  பழக்கம் கிடையாது... :D

 

தயவு செய்து அடக்கி வாசிக்கவும். டக்கியின் தம்பி யாழ் மத்திய கல்லூரியில் எனது சகமாணவராக்கும்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து அடக்கி வாசிக்கவும். டக்கியின் தம்பி யாழ் மத்திய கல்லூரியில் எனது சகமாணவராக்கும்.

 

டக்கி கடந்த 25 வருடங்களாக எனது ஊர் மன்னராக்கும்.. :(

டக்கி கடந்த 25 வருடங்களாக எனது ஊர் மன்னராக்கும்.. :(

 

விசுகு சும்மா லொள்ளுப் பண்ணவேண்டாம். எழுதியது உண்மை ஆனால் தான் றோயல் கல்லூரியில் படித்தது என்று கூறுபவர் (உண்மை 1975 இற்குப் பின்னர்) மேடையிலேயே நாலு பேருக்கு சாத்தினவர் உண்மை கூறும் என்னைக் கண் டால்! அடிவாங்கும் உடல் எனக்கு இல்லை. இந்த விளையாட்டிற்கு நான்வரமாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு சும்மா லொள்ளுப் பண்ணவேண்டாம். எழுதியது உண்மை ஆனால் தான் றோயல் கல்லூரியில் படித்தது என்று கூறுபவர் (உண்மை 1975 இற்குப் பின்னர்) மேடையிலேயே நாலு பேருக்கு சாத்தினவர் உண்மை கூறும் என்னைக் கண் டால்! அடிவாங்கும் உடல் எனக்கு இல்லை. இந்த விளையாட்டிற்கு நான்வரமாட்டேன்.

 

இது தான் டக்கியின் பலம்... :( 

இது தான் டக்கியின் பலம்... :( 

 

அதற்காக என்னை அடுத்த தடவை இலங்கைக்குப் போகும்போது அடிவாங்கச் சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக என்னை அடுத்த தடவை இலங்கைக்குப் போகும்போது அடிவாங்கச் சொல்கிறீர்களா?

 

அத்தியடிக் குத்தியன் என்று பெயரெடுத்தவர். இனி உங்களுக்கு நெத்தி அடிதான். எதற்கும் முற்கூட்டியே அஞ்சலிகள்.  :rolleyes:  :rolleyes:

லண்டன் தமிழர் திரும்பி வருகிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் தோய்ந்த சுன்னாகம் மண்ணை இனி என்ன செய்யலாம் சி.சிவன்சுதன்

சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம் ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அகற்றப்படும் பொறிமுறையிலே ஏதாவது பிரச்சினைகள் இருந்தனவா? அல்லது இடைக் காலங்களிலே இந்த விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லையா? அல்லது அண்மைக்காலத்து நடவடிக்கைகளில் ஏதாவது கவனக் குறைவுகள் இருந்தனவா? என்பன பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டு இருப்பதிலும் பார்க்க, இந்த நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பது பயனுடையதாக அமையும்.

இந்தப் பிரதேசங்களில் காணப்படும் சில கிணறுகளில் எண்ணெயின் செறிவு லீற்றர் ஒன்றுக்கு 30mg வரை காணப்படுகிறது. பல கிணறுகளில் இதன் செறிவு 3mg தொடக்கம் 4mg வரை வேறுபடுகிறது. இந்த எண்ணெய்ச் செறிவு உடல் நலத்துக்குப் பாதுகாப்பானது அல்ல. உலக சுகாதார நிறுவனங்கள் நீரிலே இவ்வாறான எண்ணெய்களின் செறிவு 0.2mg இற்கு மேற்படாது இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. சுன்னாகப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட எத்தனை கிலோ மீற்றர் சுற்றுவட்டாரப் பகுதி நிலத்தடி நீரிலே இந்த எண்ணெய் கலப்பு ஏற்பட்டிருக்கிறது. என்பது இன்னும் துல்லியமாக அறியப்படவில்லை.

இந்த நிலத்தடி நீருடன் கலந்துபோயிருக்கும் கழிவு எண்ணெயில் காணப்படும் மீனேல், பென்சீன் போன்ற அறேமற்றிக் ஐதரோகாபன்கள் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியன. இந்தக் கழிவு எண்ணெய்கள் தொடர்ச்சியாக உள்ளெடுக்கப்பட்டடால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று நமபப்படுகிறது. அத்துடன் இவை சில தோல் நோய்களையும் ஏற்படுத்தவல்லவை.

இந்த எண்ணெயில் கரைந்து காணப்படும் சில உலோகங்களும் நாளடைவிலே பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்க வாய்ப்புண்டு. இந்த எண்ணெயிலே ஈயத்தின் செறிவு அதிகமாக இருந்தால் பல நரம்பு சம்பந்தமான நோய்களையும் குறோமியம் அதிகமாக இருந்தால் சிறுநீரகம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்த முடியும். அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களிலும் இந்த எண்ணெய் பல்வேறுபட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

எனவே இந்தப் பகுதியில் வாழும் மக்கள் கிணற்று நீரைக் குடிப்பதையும் சமையலுக்குப் பாவிப்பதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடலை நோக்கிய இயற்கையான நிலத்தடி நீரோட்டம் காரணமாக சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் வடக்கு நோக்கிய பகுதிகளிலே இந்த எண்ணெய் கூடுதலாகப் பரம்பலடைந்திருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே இந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் மாற்றுக் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்ட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த முயற்சி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பகுதிகளிலே பெருமளவு விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. இந்த விவசாய விளைபொருள்களிலே இந்த எண்ணெய் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. சில சேர்வைகளும் மூலகங்களும் மண்ணிலே குறைந்த செறிவிலே காணப்பட்டாலும் அந்த மண்ணில் வளரும் தாவரங்களிலே அவற்றின் செறிவு அதிகரிப்பதற்கான ஆபத்து நிலை இருக்கிறது. இந்தத் தொடர் செறிவாக்கல் பொறிமுறை காரணமாக இந்தப் பிரதேசங்களிலிருந்து பெறப்படும் விவசாய விளைபொருள்களிலும் பழவகைகளிலும் வேண்டப்படாத ஏதாவது சேர்வைகளின் செறிவு அதிகமாகக் காணப்படுகின்றதா? என்பது சம்பந்தமாகவும் ஆராயப்பட வேண்டி இருக்கிறது.

பொன்கொழிக்கும் பூமியாக பரந்த விவசாய நிலங்களையும் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்ட சுன்னாகம் மண்ணின் நிலத்தடி நீரை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் பல்லாயிரம் லீற்றர் கழிவு எண்ணெயை எவ்வாறு அகற்றப் போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு அகற்றப்போகிறோம்? நிலத்துக்கடியில் பரம்பிச் செல்லும் இதன் பரம்பலை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகின்றோம். இதனால் மனிதனில் ஏற்படக்கூடிய பெரிய சுகாதாரப் பிரச்சினைகளை எவ்வாறு தடுக்க முடியும் அல்லது குறைக்க முடியும்? இந்தப் பகுதிகளில் விளையும் பயிர்களிலும் தாவரங்களிலும் இந்த எண்ணைய் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றது? இந்தப் பகுதியில் வளரும் தாவர உற்ப்பத்திப் பொருள்களை மனிதன் உட்கொள்வது பாதுகாப்பானதா? இந்த மாசு பட்ட நீரை அருந்தும் ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களிலே இந்த எண்ணெய் என்னவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்? இவற்றின் இறைச்சிகளையும் முட்டைகளையும் மனிதன் உணவாக உள்கொள்வது பாதுகாப்பானதா?

இவ்வாறான பல கேள்விகளுக்கு விடை காண்பதற்கு பல்துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளும் உதவிகளும் பெறப்படவேண்டிய கட்டாய நிலை தோன்றி இருக்கிறது.

2012ஆம் ஆண்டளவிலே சுன்னாகத்து நிலத்தடி நீரிலே எண்ணெய் கலந்திருப்பது அவதானிக்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து புதிதாக எண்ணெய் மண்ணில் சேருவதைத் தடுப்பதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படிருக்கின்றன. இது சம்பந்தமான ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் பொதுமக்களுக்கு இது சம்பந்தமான தெளிவான அறிவூட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டிய அவசர அவசிய தேவை எழுந்திருக்கிறது. இந்தப் பிரதேசத்தில் வாழும் பொது மக்களுக்கான அறிவூட்டல், ஆலோசனை நிகழ்வுகள் விரிவுபடுத்தப்படவேண்டும். இது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய இடர்களைத் தவிர்ப்பதற்கு உதவியாக அமையும்.

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் 50 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாண மக்களுக்கு பெரும் சேவையாற்றி வருகின்றது. இதில் பணியாற்றுபவர்களின் கடின உழைப்பு பாராட்டுதற்குரியது. இந்த நிலையத்தின் தொழிற்பாட்டின் போது வளிமண்டலத்துக்கு விடப்படும் எண்ணெயத் துகள்கள், காபன்கள் மற்றும் கான்சேர்வைகளின் தாக்கம் மக்களுக்கு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு பொறிமுறைகள் மூலம் அந்தப்பிரதேசத்து வளிமண்டலம் அசுத்தமடைவது முற்றாகத் தடுக்கபட்டிருக்கிறதா என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்வது நல்லது. இது அங்கு தொழில்புரிபவர்களினதும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் வாழ்பவர்களினதும் சுகாதார நிலையைப் பாதுகாத்துக்கொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். வளிமண்டலம் இவ்வாறு அசுத்தமடையுமாயின் அது நுரையீரல், சுவாசத் தொகுதி மற்றும் உடல் சம்பந்தமான பல சுகாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடும்.

இந்த பிரதேசத்து மக்கள் மழை காலங்களில் நிலத்தடி நீரிலுள்ள எண்ணெயின் செறிவு குறைவாகவும், கோடை காலங்களில் இதன் செறிவு கூடுதலாகவும் இருப்பதை அவதானித்திருக்கிறார்கள். இந்த நிலத்தடி எண்யெ் கலப்பு பிரச்சினைகள் காரணமாக அந்தப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட மன உளைச்சல்களுக்கும் ஆட்பட்டு இருக்கிறார்கள் இந்தப் பிரச்சினையில் தாம் தனித்துவிடப்பட்டு விட்டோமோ? எவரது உதவியை நாடுவது இனி என்ன செய்வது? எமக்கு ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்த்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும்? போன்ற பல விடைதெரியாத வினாக்களினால் மனக்குழப்பத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரதும் கூட்டு முயற்சி அவசியமாகின்றது.

நிலத்தடி நீரில் கலந்திருக்கும் எண்ணெயின் துல்லியமான இரசாயனக் கட்டமைப்புகளும் அவற்றின் வீதாசாரமும் அறியப்பட வேண்டும் அத்துடன் அந்த எண்ணெயில் கரைந்திருக்கும் இரசாயனப் பொருள்களும் மூலகங்களும் எவை? அவற்றின் செறிவுகள் என்ன? என்பது சம்பந்தமாகவும் ஆராய்ச்சிகள் செய்து அறிப்படவேண்டும். இவை அறியப்படின் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் பொருத்தமான தடுப்பு முறைகளையும் வினைத்திறனுடன் செய்வதற்கு இது உதவியாக அமையும்.

இது பல மக்களைப் பாதிக்கப்கூடிய பிரச்சினையாக இருப்பதாலும், பல்துறை வல்லுநர்களின் பங்களிப்புத் தேவையாக இருப்பதாலும், பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பெருந்தொகையான பணம் தேவைப்படுவதாலும் இதனை ஒரு தேசியப் பிரச்சினையாகப் பிரகடனப்படுத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது பயனுடையதாக அமையும்.

சுன்னாகம் மண்ணிலும் அதன் நிலத்தடி நீரிலும் கலந்துபோயிருக்கும் பெருமளவிலான எண்ணெய்ப் படிவுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் இந்த மண்ணைத் தூய்மைப் படுத்துவதற்கும் இனி என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திப்பது பயனுடையதாக இருக்கும்.

முதலாவதாக எண்ணெய்க்கலப்பு நடந்திருக்கும் பகுதிகள் தெளிவாக இனம் காணப்பட்டு அந்தப்பகுதி மக்களுக்கு மாற்று குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படுவது நல்லது. அத்துடன் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் நிலத்தடி நீரை குடிப்பதற்கோ சமையலுக்குப் பாவிப்பதைத் தவிர்த்துவிடவேண்டும். இதற்கு மேலதிகமாக புதிதாக சுற்றாடலிலோ அல்லது நிலத்தடி நீரிலோ எண்ணெய்க்கலப்பு நடத்துகொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொண்ணப்பட்டு, சுற்றாடல் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்வது முக்கியமானதொன்றாகும். சுன்னாகம் மின் உற்பத்தி நிலையப் பகுதியின் மண்ணிலே எங்காவது எண்ணெய் செறிவு மிக அதிகமாகக் காணப்பட்டால் அந்தப்பகுதி மண்ணை அகழ்ந்து எடுத்து அப்புறப்படுத்துவதன் மூலம் புதிதாக எண்ணெய் நிலத்தடி நீரைச் சென்றடைவதைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்தப் பிரதேச மக்களுக்கு வேறு பகுதிகளில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வந்து விநியோகிப்பதை விட எண்ணெய்க் கலப்பு இடம்பெற்றுள்ள பகுதி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து அதனைச் சுத்திகரித்து மக்களுக்கு விநியோகித்தால் அந்தப் பகுதி மக்களின் குடிதண்ணீர் தேவை பூர்த்தி அடைவதுடன் நிலத்தடி நீரிலே கலந்து போயிருக்கும் எண்ணெய்ப் படிவங்களும் படிப்படியாக அகற்றப்படுவதற்கு வசதியாக அமையும். அத்துடன் தொடர்ச்சியாக உறிஞ்சி எடுக்கும் பகுதியை நோக்கி நிலத்தடி எண்ணெய் படிவங்கள் நகரும். இது நிலத்தடி எண்ணெய்ப படிவங்கள் அகற்றப்படுவதை இலகுவாக்கும். கடல் நீருடன் கலந்திருக்கும் எண்ணெய்களை அகற்றுவதற்கு சில பக்றீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நிலத்தடி நீரில் கலந்துபோயிருக்கும் எண்ணெய்களை அகற்றுவதற்கு இந்த முறையைப் பயன்படுத்த முடியாது.

இந்தப்பிரதேச மக்களுக்குப் புதிதாக ஏதாவது சுகாதாரப்பிரச்சினைகள் ஏற்படுகின்றனவா என்று மருத்துவக் குழுக்கள் வழிப்புடன் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்துடன் இந்தப் பிரதேசத்து மக்களிடையே அவர்களின் ஆரோக்கிய நிலை சம்பந்தமான ஆய்வுகளும், மருத்துவக் குழுக்களினால் ஆரம்பிக்கப்படவேண்டிய நிலை எழுந்திருக்கிறது. ஏதாவது சுகாதாரப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டால் அது சம்பந்தமான நடவடிக்கைகளும் ஆய்வுகளும் விரிவு படுத்தப்படவேண்டும். இந்தப் பகுதி நிலத்தடிநீரை விலங்குகளோ அல்லது பறவைகளோ அருந்த விடுவதற்கு முன்னர் அந்த நீரை சிறிதளவு நேரம் ஒரு பாத்திரத்திலோ அல்லது வாளியிலொ வைத்திருக்கும் பொழுது எண்ணெய்க் கலப்பின் பெரும்பகுதி நீரின் மேற்பரப்புக்கு வந்து சேரும். அதன்பின்னர் அந்த மேற்படலத்தை அகற்றியபின் அதனை பறவைகளும் விலங்குகளும் அருந்த விடலாம். இதன் மூலம் கோழி, ஆடு, மாடு போன்றவை இந்த எண்ணெய் கலப்பினால் தாக்கப்படும் வீதத்தைக் குறைத்துக்கொள்ளலாம். இவற்றிலே எண்ணெய்த் தாக்கம் ஏற்பட்டால் அவற்றிலிருந்து பெறப்படும் முட்டை, இறைச்சி, என்பவற்றின் தரத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்தப் பிரதேசத்திலே விளையும் விவசாய உற்பத்திப் பொருள்களான மரக்கறி வகைகள், பழ வகைகள், தேங்காய் என்பவற்றிலே கழிவு எண்ணெயில் காணப்படும் ஏதாவது இரசாயனப் பதார்த்தங்கள் செறிவடைந்திருக்கின்றனவா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். இந்த விவசாய விளை பொருள்களை மனிதர்கள் பாவிப்பது பாதுகாப்பானதுதானா என்பதைக் கண்டறியும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

நிலத்தடி நீருடன் கலந்துபோயிருக்கும் எண்ணெய், இயற்கையான நிலத்தடி நீரோட்டத்தால் கழுவப்பட்டு கடலைச் சென்றடைய நீண்டகாலம் எடுக்கும். அதுவரை காத்திருக்க முடியாது. அவ்வாறு காத்திருப்போமாயின் அது பல சூழல் பாதிப்புகளையும், சுகாதாரப் பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும். எனவே பலமுனைகளில் பல்துறைசார் விற்பன்னர்களின் வழிகாட்டலில் பொருத்தமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது. எண்ணெய்ச் செறிவு கூடிய பிரதேசங்களின் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் தூய்மையாகும் வேகத்தை விரைவு படுத்த முடியும்.

ஒருதுறையினர் இன்னொருதுறையினர் மீது குற்றம் காண்பதை விடுத்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு செயற்படுவோமாக இருந்தால் இந்த எண்ணெய்க்கலப்பால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்து அல்லது தவிர்த்து இந்த நிலையை வெற்றிகரமாகக் கையாள முடியும். அத்துடன் எதிர்காலத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுத்துக்கொள்ளவும் முடியும்.

http://www.thamilhealth.com/2014/12/14/எண்ணெய்-தோய்ந்த-சுன்னாகம/

குடிநீரற்றுத் தவிக்கும் குடாநாடு! கழிவு எண்ணெயால் அவதியுறும் வலிகாமம்! 

 

யாழ் குடாநாடு நிலத்தடி நீர் சம்பந்தமாக, சுன்னாகம் மின்நிலையத்திலிருந்து வெளியேறி கிணறுகளில் படியும் கழிவு எண்ணெய் மற்றும் ஒட்டுமொத்தக் குடாநாட்டுக்குமான நன்னீர்ப் பிரச்சினை என் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது.

இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாகவும் வெளிவராத பல செய்திகளை கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.

 

சுன்னாகம், அளவெட்டி, மல்லாகம், மருதனார்மடம் என்று ஆரம்பித்த கழிவு எண்ணெய் கிணறுகளில் கலக்கும் விவகாரம் இப்போது ஏழாலை, குப்பிளான் கட்டுவன், தெல்லிப்பளை என பல இடங்களிற்குப் பரவி விட்டது.

இலங்கை மின்சாரசபை ஏனைய கோபுரங்களுடன் தொடர்பில்லாத நிலையில் பார எரிஎண்ணெய் (Heavy fuel oil ) மூலம் இயக்கும் ஜெனரேற்றர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இதன் கழிவு எண்ணெயை தவிர்ப்பதற்கான Oil Separator வழிமுறை பாவிக்கப்படாதே இந்த விபரீதத்திற்குக் காரணம்.

மறுபக்கமாக யாழ் குடாநாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சம் கிணறுகளில் 40 வீதமானவை உவர்நீரைக் கொண்டிருக்கின்றன.

குடாநாட்டில் நன்னீருக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இதற்கான உடனடிப் பரிகாரம் காணப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் ஆறுகள் இல்லாத ஒரு பிரதேசம். ஆனையிறவு, வடமராட்சி, அரியாலை போன்ற இடங்களில் கடல்நீரேரிகளே இருக்கின்றன. இவற்றிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்தால் இவை நன்னீராக மாறும் இதற்கான திட்டம் 1960க்களில் உருப்பெற்று பின்னர் அப்படியே இருக்கிறது.

எனவே கடலணைகளைக் கட்டுவதோடு, வவுனியாவில் ஆரம்பித்து இரணைமடுவிற்கு வரும் நீர் மீதாமாகிக் கடலுடன் கலப்பதைத் தவிர்த்து அந்த நீரையும் ஆனையிறவில் சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அவ் பகிர்ந்து கொண்டார்.

- See more at: http://www.canadamirror.com/canada/37204.html#sthash.4DgpNQhC.dpuf

CHU6-293x150.jpg

இக்கருத்தை எழுதிய சி.சிவன்சுதன் அவர்களிற்கும் இணைத்த மீராவிற்கும் நன்றிகள்.
 
சுன்னாகத்தில் கழிவு எண்ணை நிலத்தரையில் கொட்டப்படுவது இப்போது உருவான பிரச்சனை இல்லை. பிந்திய 70களில் பாடசாலைக்குப் புகையிரதத்தில் போவது வழக்கம். அக்காலகட்டத்திலேயே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கும் புகையிரத பாதைக்கும் இடையே எண்ணைக் கழிவுகளால் தரை கறுப்பாகவே இருக்கும். அதாவது எனக்குத் தெரியவே இது 35 வருடங்களாக உள்ள நடைமுறை. இப்போதுதான் அதன் விளைவுகள் வெளித்தெரியத் தொடங்கியுள்ளது. 
 
அக்கால கட்டத்தில் நன்னீருக்கு பெயர் போன இடம் சுன்னாகம். நாவற்குளி\சாவகச்சேரி முதல் பளைவரை  சுன்னாகத்திலிருந்தே நன்னீர் விநியோகிக்கப்பட்டது. ஏன் பலாலி இராணுவ முகாமிற்கே இங்கிருந்துதான் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. 
 
இது குறைந்தது 50 அல்லது 60வருட கால தவறு. சுன்னாகம் மின் உற்பத்தி நிலைய உற்பத்தி நிறுத்தப்பட்டதை வரவேற்கும் அதேநேரம் விட்ட தவறிற்கும் பிராயச்சித்தம் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.