Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தைவானில்" 53 பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது விமானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
04-1423023783-transasia-plane-600.jpg

"தைவானில்"  53 பயணிகளுடன் ஆற்றில் விழுந்தது விமானம்!

மீட்புப் பணி மும்முரம்!!

தைபேய்: தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு மீட்புக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தைபேயில் உள்ள சோங்சான் விமான நிலையத்தில் இருந்து கின்மென் விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலங் ஆற்றில் 53 பயணிகளுடன் விழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் விமானத்தில் பயணம் செய்த பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10 பயணிகள் விமானத்துக்குள் சிக்கிக் கொண்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூலை மாதம் இதே டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியதில் 48 பயணிகள் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

https://www.youtube.com/watch?v=gDqkW2iuWwc

அடுத்தடுத்து விபத்துக்கள்  நடக்கிறத பார்த்தால் 
விமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அசமந்த போக்கு தெரியுது.
  • கருத்துக்கள உறவுகள்
weight & Balance  ?? 
ஏற்றிய பிரயாணிகள்  அவர்களின் பெட்டிகளின் பாரம் சரியாக கணக்கிடவில்லை போல் இருக்கிறது.
அல்லது ஒரு இயந்திரம் கோளாறு ஆகி இருக்கலாம். 
 
இந்த பொரப்லெர் ரக இயந்திர விமாமங்கள் சீர்கேடான காலநிலையிலும் பாதுகாப்பாக பறக்க கூடியவை. 
விமானம் புதிது என்றும் சென்ற வருடம் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் செய்திகள்.
ஜனவரி 26ம் திகதி விமான பாதுகாப்பு பரிசோதிக்கப் பட்டதாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வெறும் விஞ்ஞான தொழில்நுட்பங்களை நம்பி ஏற்பட்ட விபத்துக்கள் தான் அதிகமாக இடம்பெறுகின்றது.  
அனுபவம் இல்லாத விமானிகளும்.....அவசரப்பிரயாணிகளும்......அவசரமாக தயாரித்த விமானங்களும்....
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=gDqkW2iuWwc

அந்த விமானம்....

பல பெரிய கட்டிடங்களிலோ, வீதியிலோ விழுந்து.... பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல்,

சொல்லி வைத்த மாதிரி... ஆற்றில் போய் விழுந்தது, அதிசயமாக உள்ளது. :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமானம்....

பல பெரிய கட்டிடங்களிலோ, வீதியிலோ விழுந்து.... பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல்,

சொல்லி வைத்த மாதிரி... ஆற்றில் போய் விழுந்தது, அதிசயமாக உள்ளது. :rolleyes:

எல்லாம் அந்த தாய்வான் புத்தனின் அருள்.....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அந்த தாய்வான் புத்தனின் அருள்..... :D

விமானியின், சாதுர்யத்தை..... தாய்வான் புத்தன், தட்டிக் கொண்டு போய்விட்டார்.lol.png :D

அந்த விமானம்....

பல பெரிய கட்டிடங்களிலோ, வீதியிலோ விழுந்து.... பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல்,

சொல்லி வைத்த மாதிரி... ஆற்றில் போய் விழுந்தது, அதிசயமாக உள்ளது. :rolleyes:

முன்னுக்கு போகும் மஞ்சள் நிற டாக்ஸியின் மூஞ்சையிலும் இறக்கை ஒன்று இலேசாக இடிச்சு வெருட்டிட்டுத்தான் போகுது.

டாக்ஸி செலுத்தியவர் வீட்டை போய் 'இஞ்ச பாரும்... இன்றைக்கு நான் விமானத்துடன் போய் அடிபட்டுட்டன்" என்று சொல்ல மனிசி கடைசி வரைக்கும் நம்பால் 'றோட்டில போற நீர் எங்கன காணும் விமானத்தோட அடிபடுவீர் ... உமக்கென்ன விசரோ' என்று கேட்டு இருக்கும்.

நீங்க நினைச்ச மாதிரி அவர் சொல்லி இருக்கிறார். மனிசிக்கு இல்ல... அவரின் ரக்சி பேஸுக்கு..! :)

Taxi driver and passenger survive Taipei plane collision

http://www.bbc.co.uk/news/world-asia-31143710

நீங்க ரியல் ஹீரோ: விபத்துக்குள்ளான தைவான் விமானத்தின் விமானியை புகழும் மக்கள் (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 05 பெப்ரவரி 2015, 08:10.47 மு.ப GMT ]

taiwan_pilot_001.jpg

                                                    ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான தைவான் விமானத்தின் விமானியை மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.

தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேசுக்கு சொந்தமான ATR 72-600 விமானம், சோங்சான்(Songshan)  விமான நிலையத்தில் இருந்து கின்மென்(Kinmen) விமான நிலையத்துக்கு 53 பயணிகளுடன் நேற்று புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தென்கிழக்கு சீனா கடற்கரையோரத்தில் உள்ள கீலுங்(Keelung) ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த போது அங்கிருந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த டாக்சியை நசுக்கி விட்டு பாலத்தின் கைப்பிடிச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் விழுந்தது.

இதுகுறித்து ஹாங்காங்கை சேர்ந்த விமான போக்குவரத்து ஆய்வாளரான டேனியல் ட்சாங் கூறுகையில், விமான மிகத்தைரியமாகவும், விழிப்புடனும், அதிக உயிர் சேதங்கள் ஏற்படாத வகையில் விமானி சிறப்பாக செயல்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் தைபேயில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் விமானியின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளதுடன், சமூக ஊடகங்களிலும் விமானியை பாராட்டி கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

விமானியை குறித்து அந்நாட்டின் பிரபல நடிகையும் எழுத்தாளருமான கின் ஒய் கூறுகையில், மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது மோதாமல், விமானத்தை திருப்பிய விமானியை நான் ஹீரோவாக பார்க்கிறேன் என கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அந்த விமானி கடைசியாக கூறிய வார்த்தை மே டே! மே டே! என்ஜினில் தீப்பொறி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://newsonews.com/view.php?20KOlndbci80634e3KMQ2022ZnB3ddcdBnf20eMgAAae4K08E4cb3lOm23

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னுக்கு போகும் மஞ்சள் நிற டாக்ஸியின் மூஞ்சையிலும் இறக்கை ஒன்று இலேசாக இடிச்சு வெருட்டிட்டுத்தான் போகுது.

டாக்ஸி செலுத்தியவர் வீட்டை போய் 'இஞ்ச பாரும்... இன்றைக்கு நான் விமானத்துடன் போய் அடிபட்டுட்டன்" என்று சொல்ல மனிசி கடைசி வரைக்கும் நம்பால் 'றோட்டில போற நீர் எங்கன காணும் விமானத்தோட அடிபடுவீர் ... உமக்கென்ன விசரோ' என்று கேட்டு இருக்கும்.

நீங்கள் கூறிய பின்பு தான்.... அந்தக் காணொளியை மீண்டும் பார்த்த போது.... அவ் வீதியால், சென்ற வாகனத்தின் மீதும் இறக்கை இடித்து, வாகனத்தை நிலைதடுமாறச் செய்து விட்டுத் தான்... ஆற்றில் விழுகின்றது.

விமானியுடன், ராக்சி சாரதியும் திறமான "லைசென்சுடன்" உள்ளார்கள் போலுள்ளது. :) 

  • கருத்துக்கள உறவுகள்

"Mayday" தொலைக்காட்சியில் நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று. அடுத்த வருடம் இந்த விமான விபத்து குறித்த விவரணம் வெளிவரலாம் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

taiwan_pilot_001.jpg

இதற்கிடையே அந்த விமானி கடைசியாக கூறிய வார்த்தை மே டே! மே டே! என்ஜினில் தீப்பொறி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்ப பெப்ரவரி மாதம்.

விமானம் விழும் பயத்திலை..... விமானி, "May Day" என்று, வாய் தவறி சொல்லி விட்டார் போலுள்ளது. :D

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.