Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்த, முதல் சினிமா படம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

movieposter.jpg?v=4f91460a

'சித்திரம் பேசுதடி' என்கிற பாடல் காட்சி மட்டும் கொஞ்சம் ஞாபகத்தில் உள்ளது.. :D

  • Replies 66
  • Views 7.3k
  • Created
  • Last Reply

movieposter.jpg?v=4f91460a

'சித்திரம் பேசுதடி' என்கிற பாடல் காட்சி மட்டும் கொஞ்சம் ஞாபகத்தில் உள்ளது.. :D

இசை, இந்த படம் முதல் தரம் வந்து 20 வருடங்களுக்கு பிறகா பார்த்தீர்கள்? :o:icon_mrgreen::lol::D

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெற்றோர்களுடன் பார்த்த படம் அன்னை இல்லம்.இதில வந்த ஒரு பாட்டில் எனது சகோதரி உறவு முறையான ஒருவரின் பெயரில் பாட்டில் ஒரு வரி இருந்தமையால் அவவைக் கண்டதும் அந்த வரிகளை பாடுவது.அவவும் அந்த படத்துக்கு எம்முடன் கூட வந்தபடியால் அந்த படம் இன்னமும் நினைவில் நிற்கிறது.

பள்ளிக்கூடத்திலிருந்து களவாக பார்த்த படம்.GOLD FINGER(BOND 007).

இந்துவில் படித்த நேரம் முதலாவது பாடம் பாடம் முடிய ஓடி வந்து மைதானத்துக்கு பக்கத்தில் உள்ள வைரவ கோவிலடியில் நிற்கும் போது சந்திரமோகன்(80க்கு முன்னரே ஜேர்மனி போய்விட்டார்)என்ற நண்பன் படம் பார்க்க போகிறேன் வாறியா என்று அவரே ரிக்கற் எடுத்து கூட்டிக் கொண்டு போனார்.அதிலிருந்து ஒரே படம் தான்.என்ன ஒரு படம் பார்க்க போக ஒரு மாதம் என்றாலும் ஆயுள் குறையும்.அவ்வளவுக்கு பயம்.இதுவே பின்னாளில் வாழ்க்கைக்கு ஆப்பாகி போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிங்கள/இந்தி படங்கள் திரையிடப்ப‌ட்டுள்ளனவா? (70/80 களில்)அல்லது வரவேற்பு இருந்ததா?. யாரும் தெரிந்தால் எழுதவும்.
 
இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய படம் உலகம் சுற்றும் வாலிபன் (1971/) என நினக்கின்றேன். யாரும் தெரிந்தால் அறியத்தர‌வும்.
 
மேலும் அக்காலத்தில் இந்தியாவில் பல நாட்கள்/வருடங்கள் ஓடிய பின்னறே இலங்கையில் திரையிடப்படும். என்வே வயதை கண்டுபிடிப்பது கடினம். சில இலங்கை‍‍+இந்திய கூட்டுத்தயாரிப்புபடங்களை தவிர.(பைலட் பிரேம்னாத்)

ஹிந்திப் படங்கள் சில ஓடியது.

கீத்.

ஆராதனா ---- ராஜேஷ் கண்ணா , சர்மிளா தாகூர்.

ஏக் துஜே கெலிஜே. ----  கமல் , ரதி அக்னிஹோத்திரி ?  கே. பி யின் படம்.

கீத் என்ற படம் கொழும்பில் இரு வருடத்துக்கும் மேல் ஓடியிருக்கும்.

சிங்களப் படம்:

கறுமக் காரயோ --- விஜய குமார துங்க. ( குக்கிராமம், ஒரு தட்டி வான், இரண்டு பேக்கரிகள், எப்போதும் போட்டி, அண்ணன் + அவர் மனைவி,  அவர் தம்பியாக குமார துங்க, பானுக்கு மா குழைக்கும்போது அண்ணியுடன் கலவி என்று கதை போகும்).

துசாரா -- என்று நினைக்கின்றேன் ?

ஒரு வாரத்துக்கும் குறைவாய் ஓடியிருக்கும். :rolleyes::D

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இந்த படம் முதல் தரம் வந்து 20 வருடங்களுக்கு பிறகா பார்த்தீர்கள்? :o:icon_mrgreen::lol::D

படம் எப்ப வந்தது என்று தெரியேல்லை.. ஆனால் கொழும்பில் சவோய் திரையரங்கில் பார்த்த ஞாபகம் உள்ளது.. :D

ஓ.. 1958 இல் வெளிவந்திருக்கு.. :lol:

யாழில் சிங்கள/இந்தி படங்கள் திரையிடப்ப‌ட்டுள்ளனவா? (70/80 களில்)அல்லது வரவேற்பு இருந்ததா?. யாரும் தெரிந்தால் எழுதவும்.
 
இலங்கையில் அதிக நாட்கள் ஓடிய படம் உலகம் சுற்றும் வாலிபன் (1971/) என நினக்கின்றேன். யாரும் தெரிந்தால் அறியத்தர‌வும்.
 
மேலும் அக்காலத்தில் இந்தியாவில் பல நாட்கள்/வருடங்கள் ஓடிய பின்னறே இலங்கையில் திரையிடப்படும். என்வே வயதை கண்டுபிடிப்பது கடினம். சில இலங்கை‍‍+இந்திய கூட்டுத்தயாரிப்புபடங்களை தவிர.(பைலட் பிரேம்னாத்)

இலங்கையில் அதிகநாட்கள் ஓடிய தமிழ் படம் பராசக்தி 39 வாரங்களுக்குமேல் மைலன் தியேட்டரில் ஓடியது சிம்மக்குரல் என்ற சிவாஜி ரசிகர்கள் நடத்திய பத்திரிகையில் வீரகேசரியில் கொடுக்கப்பட்ட விளம்பரம் கொப்பி பண்ணி பிரசுரித்திருந்தார்கள் வசந்தமாளிகை கொழும்பு கெப்பிட்டலில் 250 நாட்கள் யாழ் வெலிங்டனில் 208 நாட்கள் பைலட் பிரேம்நாத் யாழ் வின்சர் 222 நாட்கள ;உத்தமன் கொழும்பு சென்ட்ரல் 203 நாட்கள் உ சு வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள் குரு கொழும்பு கிங்ஸ்லி 200 நாட்களுக்கு மேல் ஹிந்தி படங்களில் அபிமான் ஒரு வருடங்களுக்குமேல் ஓடியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்திக்கு அருகில் இருந்தது  - கரன்

கரன் தியேட்டரை மூத்திர தியேட்டர் என செல்லமாக அழைப்பார்கள். :lol:  

அங்கே நூல்வேலி உட்பட பலபடங்கள் பார்த்திருக்கின்றேன்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் சொல்லியே ஆகனும்... இல்லையென்றால் திரையுலகம் என்னை மன்னிக்காது...!

சங்கம் என்ற ஹிந்திப்படம் :  ராஜ்கபூர் , ராஜேந்திரகுமார் , வைஜந்திமாலா நடித்தது. யாழில் சக்கை போடு போட்டது.

கீத் படத்திலும்  ராஜெந்திரகுமாரும் , மாலாசின்ஹாவும் நடித்திருந்தனர்.

அப்பொழுது  மார்லன்பிரான்டொ , சிவாஜிகனேசன் , ராஜேந்திரகுமார் ஆகியோர் ஒரே தரவரிசையில் வைத்துப் பார்க்கப் பட்டனர்.  :) :)

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிகநாட்கள் ஓடிய தமிழ் படம் பராசக்தி 39 வாரங்களுக்குமேல் மைலன் தியேட்டரில் ஓடியது சிம்மக்குரல் என்ற சிவாஜி ரசிகர்கள் நடத்திய பத்திரிகையில் வீரகேசரியில் கொடுக்கப்பட்ட விளம்பரம் கொப்பி பண்ணி பிரசுரித்திருந்தார்கள் வசந்தமாளிகை கொழும்பு கெப்பிட்டலில் 250 நாட்கள் யாழ் வெலிங்டனில் 208 நாட்கள் பைலட் பிரேம்நாத் யாழ் வின்சர் 222 நாட்கள ;உத்தமன் கொழும்பு சென்ட்ரல் 203 நாட்கள் உ சு வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள் குரு கொழும்பு கிங்ஸ்லி 200 நாட்களுக்கு மேல் ஹிந்தி படங்களில் அபிமான் ஒரு வருடங்களுக்குமேல் ஓடியது

நன்றி காரணிகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திப் படங்கள் சில ஓடியது.

கீத்.

ஆராதனா ---- ராஜேஷ் கண்ணா , சர்மிளா தாகூர்.

ஏக் துஜே கெலிஜே. ----  கமல் , ரதி அக்னிஹோத்திரி ?  கே. பி யின் படம்.

கீத் என்ற படம் கொழும்பில் இரு வருடத்துக்கும் மேல் ஓடியிருக்கும்.

சிங்களப் படம்:

கறுமக் காரயோ --- விஜய குமார துங்க. ( குக்கிராமம், ஒரு தட்டி வான், இரண்டு பேக்கரிகள், எப்போதும் போட்டி, அண்ணன் + அவர் மனைவி,  அவர் தம்பியாக குமார துங்க, பானுக்கு மா குழைக்கும்போது அண்ணியுடன் கலவி என்று கதை போகும்).

துசாரா -- என்று நினைக்கின்றேன் ?

ஒரு வாரத்துக்கும் குறைவாய் ஓடியிருக்கும். :rolleyes::D

நன்றி சுவி. 
 
மேலும் பேக்கரி என கூறும்போது, 70/80 க‌ளில் பெரும்பாலன பேக்கரிகள் யாழில் சிங்களவர்களால் நடாத்தப்பட்டதாக அறிந்தேன். (பாண் / மாலுபான் போன்றவை தயாரிப்பது) இது உண்மையா? அக்காலப் பகுதியில் சிங்களவர்கள் கனபேர் அங்கு நிரந்தரமாக வசித்தார்களா?
  • தொடங்கியவர்

அக்காலப் பகுதியில்... கிடத்தட்ட 2 ஆயிரம்  சிங்கள குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் வாசித்திருப்பார்கள் என்பது என் ஊகம்.

அதில் பெரும்பாலானவர்கள் காவல் துறையையும், அரச ஊழியர்களாகவும் இருந்துள்ளார்கள்.

அப்போது.. ஸ்ரான்லி வீதியில், நாக விகாரைக்கு அருகில் ஒரு சிங்கள மகவித்தியாலயமும் இருந்தது.

பெரும்பாலான பேக்கரிகளை சிங்களவர்களே நடாத்தி வந்தார்கள். அங்கு விற்கும் பாண், தமிழ் பேக்கரிகளை விட சுவை அதிகமாக இருந்ததால்... பல தமிழர் அங்கு வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பெரியாஸ்பத்திரிக்கும்  பஸ் நிலையத்திற்கும் இடையில் சிற்றி பேக்கரி இருந்தது. அங்கு பானும் பருப்பும் ஸ்பெசல். காலை , மாலையில் கியூ நீண்டிருக்கும்.

ஆஸ்பத்திரியில் இருந்து ரயில்வே ஸ்டேசனுக்கு வரும் வழியில் சிங்கள மஹா வித்தியாலயம் இருந்தது. பெரிய பாடசாலை. 88 /89 களில் அப் பாடசாலை அத்திவாரத்துக் கல்கூட இல்லாமல் சனங்கள் ட்ரக்டர் , லொறிகளில் அள்ளிக் கொண்டுபோய் விட்டார்கள்.

ஆஸ்பத்திரிக்கு முன்னால் சென்ட்ரல் கொலீஜ்சுக்குப் போகும் பாதையில் சலுசலா என்னும் பெரிய புடைவை ஸ்தாபனம் இருந்தது. அங்கு வேலை செய்தவர்கள் அனைவரும் சிங்களவர்களே.  பொலிசில் நிறையச் சிங்களவர்கள் இருந்தார்கள்.

மன்டதீவு brode casting co.op ரேசனிலும் சிங்களவர்கள் அதிகம் பணி புரிந்தனர். இவர்கள் அதிகமாக தினமும் மாலையில் அங்குள்ள ஒரு வெளியில் வொலிபால் விளையாடுவார்கள்.

குணதாஸா புத்தக நிலையம் ஸ்ரான்லி வீதியில் இருந்தது. அங்கு தினபதி பத்திரிகையும் வாங்கக் கூடியதாய் இருந்தது. அங்கு முன்னால் பெரிய தந்தங்கள் , குத்து விளக்குகள் அலங்காரத்துக்கு வைக்கப் பட்டிருந்தன. ஒருமுறை கலவரம் ஏற்பட்டபொழுது சனங்கள் கொள்ளையடிச்சுக் கொண்டு போச்சுதுகள்.

இங்காலை ஆரியகுளப் பக்கம் நாகவிகாரை இருந்தது.  பண்ணையில் ஜேம்ஸ் டிசல் எஞ்சினியர்ஸ் (சில்வா கராஜ்)  இருந்தது.  கண்ணாதிட்டி சிவன் கோவிலில் இருந்து வெள்ளாந் தெரு வரையுள்ள வீதியில்  சைமன் கராஜ் இருந்தது. அக்காலத்தில் அங்கு மட்டும்தான் வாகனங்களின் டீசல்பம்மும் , நொசல்ஸ்ஸும் திருத்தும் யந்திரம் இருந்தது. குடாநாடு முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா வரையுள்ள கரஜ்சுகள் அவற்றைத் திருத்துவதற்கு அங்குதான் எடுத்து வருவினம்.

சிறீ சொல்லியதுபோல் மூவாயிரத்துக்கும் அதிகமான ஆட்கள் அங்கிருந்தனர்.  :rolleyes:  :D

செம்மீன் மளையாலப் படம் ஷீலா நடிச்சது நிறைய நாள் ஓடினது.  :)

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றி பேக்கறியில் மாலு பணிஸ் , கால் றாத்தல் பான் ( றோஸ் பான் வடிவத்திலும், முழுப்பான் வடிவத்திலும்)  அரை றாத்தல் றோஸ் பான் தட்டையாகவும் முட்டை சேர்ந்து சுவையாகவும் இருக்கும், ஒருறாத்தல் முழுப்பான் விதம் விதமான பணிஸ்சுகல் பிஸ்கட்டுகள் , ஐஸிங் வைத்த கேக்குகள் எல்லாம் கிடைக்கும். :)

நமது காலத்தில் யாழில் மினி சினிமா என்ற ஒரு கம்மனாட்டி மேட்டர் ஒன்று வந்துவிட்டது. யாழ் இந்து மதிலால் நன்பர்களுடன் ஏறிப்பாய்ந்து மினி சினிமாவில் பார்த்த முதல் படம் Private Lessons. 
 
மினி சினிமாவில் படம் பார்த்தால் யாழ்ப்பாணத்தைச் சுற்றி பல ரவுண்டுகள் சைக்கிளில் வட்டம் அடிக்க வேண்டும். அப்போது தான் உடுப்பில் உள்ள சிகரேட் மணம் போகும். நாம் சிகரட் குடிப்பதில்லை. படம் பார்க்கும் மற்றவர்கள் குடித்த சிகரட்.
 
முதன் முதல் வீடியோ "டெக்" [ VCR ] இல் பார்த்த படம் பாக்கியராஜ்ஜின் புதிய வார்புகள். அதில் வரும் தம்தன தம்தன வாசம் வரும் பாடல் அப்படியே ஹார்ட் டிஸ்கில் மண்டையைப் போடும் மட்டும் மறக்காத அளவுக்கு பதிந்து விட்டது.
 
தியேட்டரில் முதன் முதல் பார்த்த படம் ஞாபகம் இல்லை. (எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜனி காலத்துப் படங்கள் தான்)
 
https://www.youtube.com/watch?v=QixSF2OUiek
 
.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் அந்தக்கால என்ரை ஆளும் ஒருத்தருக்கும் தெரியாமல் சாந்தி தியேட்டர் சுப்பர் பல்கனியிலை கூனிக்குறுகி ஒளிச்சிருந்து பார்த்த படங்கள்.... :D

folder.jpg

hqdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றி பேக்கறியில் மாலு பணிஸ் , கால் றாத்தல் பான் ( றோஸ் பான் வடிவத்திலும், முழுப்பான் வடிவத்திலும்)  அரை றாத்தல் றோஸ் பான் தட்டையாகவும் முட்டை சேர்ந்து சுவையாகவும் இருக்கும், ஒருறாத்தல் முழுப்பான் விதம் விதமான பணிஸ்சுகல் பிஸ்கட்டுகள் , ஐஸிங் வைத்த கேக்குகள் எல்லாம் கிடைக்கும். :)

நன்றி தமிழ்சிறி / சுவி விளக்கத்துக்கு, பழைய ஞாபகங்களை மீட்டதற்காக.
 
மேலும் அக்காலத்தில் இலங்கை வானொலியும் திரைப்படங்கள் நன்கு ஓடுவதற்கு காரணமாக இருந்ததை மறக்க முடியாது.
  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்தக்கால என்ரை ஆளும் ஒருத்தருக்கும் தெரியாமல் சாந்தி தியேட்டர் சுப்பர் பல்கனியிலை கூனிக்குறுகி ஒளிச்சிருந்து பார்த்த படங்கள்.... :D

folder.jpg

hqdefault.jpg

"தங்க மாங்கனி" என் தர்மதேவதை...குமரசுவாமி ஐயா ROCKS !!! :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.