Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன்

 

Sumanthiran-MP.jpg

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படாமல், ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் புதிய ஆட்சி மாற்றம் நாங்கள் எதிர்பார்த்தது போல ஏற்பட்டுள்ளது. அது அனைவருக்கும் சந்தோசம். இந்த ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் புதிய அரசு மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையினை பிற்போடுமாறு கோரியிருந்தது. அந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகருக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் எமது நிலைப்பாடுகளை கடிதம் மூலம் அனுப்பி இருந்தோம்.

குறித்த கடிதத்தில் நீதிக்காக மக்கள் காத்து இருப்பதனையும் உண்மை அறியப்பட வேண்டும் என்றும் உண்மையை மூடி மறைப்பதன் ஊடாக நல்லிணக்கம் ஏற்படாது எனவும் நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம். இம்மாதம் ஆரம்பத்தில் ஜெனீவாவிற்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தோம். அதன்போது ஆணையாளர் எமது கொள்கைகளையே தானும் கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த அறிக்கை வெளிவரும் போது திடகாத்திரம், பலம், அங்கலாய்ப்பு, விடுதலை கொடுக்கும் அறிக்கையாக இருக்க வேண்டும். அத்துடன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அறிக்கையாகவும் இருக்க வேண்டும். அதற்கமைய விடயங்களை ஆராய்ந்து தான் ஒரு தீர்மானத்தை எடுப்பதாக எமக்கு தெரிவித்திருந்தார். இந்தநிலையில் நேற்றைய தினம் அறிக்கை பிற்போடப்படுகின்றது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ஐக்கிய நாடுகள் அறிக்கை பிற்போடப்பட்டது ஏமாற்றமே. எங்களுக்கும், எங்களை விட நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஏமாற்றம். எனினும், இந்த ஏமாற்றத்திலும் கூட தமிழ் மக்களுக்கு புதியதொரு ஒளிக்கீற்று ஏற்பட்டுள்ளது. எனவே இது முழுமையான ஏமாற்றம் அல்ல.

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை மார்ச் மாதத்தில் வெளியாகும் அறிக்கையை விட முழுமையானதாக வர வாய்ப்புள்ளது. இதனை ஆணையாளரே தெரிவித்துள்ளார் .எனவே தமிழ் மக்களுடைய பங்களிப்பு முக்கியம். ஏற்கனவே திரட்டப்பட்ட தரவுகளை விட மேலதிகமான தரவுகள் பலருக்குத் தெரியும். எனவே நீங்கள் அச்சத்தினை விடுத்து வாய்திறந்து பேச முன்வாருங்கள். நியாயம் கிடைக்க வழிவகுக்கும்” என்றுள்ளார்.

http://www.4tamilmedia.com/newses/srilanka/29155-2015-02-18-04-10-15

  • கருத்துக்கள உறவுகள்
.எனவே தமிழ் மக்களுடைய பங்களிப்பு முக்கியம். ஏற்கனவே திரட்டப்பட்ட தரவுகளை விட மேலதிகமான தரவுகள் பலருக்குத் தெரியும். எனவே நீங்கள் அச்சத்தினை விடுத்து வாய்திறந்து பேச முன்வாருங்கள். நியாயம் கிடைக்க வழிவகுக்கும்” என்றுள்ளார்.
கடைசியாக மக்களிடம் பழியை போட்டாச்சு ,ஆறு வருடம் செய்யாத ஒன்றை ஆறு மாதத்தில் செய்ய வேண்டுமாம்....அதுவும் பாதிக்க பட்ட மக்கள் செய்யவேணுமாம்....நீங்களும் மக்கள் பிரதிநிதி என்பதை மறந்துவிடாதையுங்கோ....
சுமந்திரன் சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஐநா ம உரி அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட பிரித்தானிய சட்ட வல்லுனர்களின் தகவலின் படி பல நேரடி சாட்சியங்கள் உள்ளன. போஸ்ணிய சம்பந்த்தப்பட்ட அறிக்கையை விட மிகப் பலமான சாட்சியங்கள் உள்ளதாககக் கூறப்படுள்ளது.    
 
ஆணையாளரின் அறிக்கையில் பிற்போடப்பட்டதற்கான காரணமாக இன்னும் பலமான சாட்சியங்கள் எற்கனவே  உள்ளதாகக் கூறி உள்ளார். சுமந்திரன் இனித் தான் தேட வேண்டும் என்று கூறுகிறார்.  இவர் யாருக்ககாக இவ்வாறு பொய் சொல்கிறார்?
  • கருத்துக்கள உறவுகள்

 

சுமந்திரன் சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஐநா ம உரி அறிக்கையுடன் சம்பந்தப்பட்ட பிரித்தானிய சட்ட வல்லுனர்களின் தகவலின் படி பல நேரடி சாட்சியங்கள் உள்ளன. போஸ்ணிய சம்பந்த்தப்பட்ட அறிக்கையை விட மிகப் பலமான சாட்சியங்கள் உள்ளதாககக் கூறப்படுள்ளது.    
 
ஆணையாளரின் அறிக்கையில் பிற்போடப்பட்டதற்கான காரணமாக இன்னும் பலமான சாட்சியங்கள் எற்கனவே  உள்ளதாகக் கூறி உள்ளார். சுமந்திரன் இனித் தான் தேட வேண்டும் என்று கூறுகிறார்.  இவர் யாருக்ககாக இவ்வாறு பொய் சொல்கிறார்?

 

நாரதர்

உங்களது முயற்சிகள் சேவைகள் அறிவேன்..

அந்தவகையில் ஒரு கேள்வி...

 

நமக்கான தீர்வு என்பது அவசரமாக இன்றோ நாளையோ கிடைக்கப்போவதில்லை

காலம் எடுக்கும்

எடுக்கவேண்டிய தேவையிருக்கிறது...

முன்னைய இலங்கை முற்றுமுழுதாக இந்த விசாரணையை எதிர்த்திருந்தது

தாயகத்தில் சாட்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருந்தது

இதனால் பல சாட்சிகள் வெளியில் வரமுடியாதிருந்தது

இதை நாமும் அறிந்து வேதனைப்பட்டிருக்கின்றோம்

இன்று நிலமை மாறியிருந்தால்.....?

இந்த அவகாசத்தை பயன்படுத்தி

அவற்றையும் சேர்த்து இறுக்கமுடியுமென்றால்.....

ஏன் முயலக்கூடாது....??

 

இன்னொருவகையில் பார்த்தால்

இலங்கை அரசும்

சர்வதேசமும் 

6 மாதத்தில் மேலும் இக்கட்டுக்குள்ளும் பொறுப்புக்கூறலுக்குள்ளும் மாட்டுப்பட்டிருப்பார்கள்..

இந்த 6 மாத்தில் இலங்கை அரசு தன்னை நல்லவனாக

நீதியானவனாக

தர்மம் காப்பவனாக 

உரித்துப்போடணும்...

 

இல்லையென்றால் இன்னும் இறுகும்..

நான் நினைக்கவில்லை சிங்களம் நீராடும் என...

Edited by விசுகு

இவர்கள் கால அவகாசம் கேட்பது அறிக்கைக்காக அல்ல, இப்போது இருக்கும் அரசை சிங்கள மக்கள் மத்தியில் நிலையாக நிற்க வைக்க. இந்த அரசு சர்வதேச தலையீட்டை நிராகரித்து ஒரு உள் ஊர் விசாராணையை நாடாத்தி சிலரைத் தண்டித்து விடயத்தை முடித்து விடும். இதனால் தமிழருக்கு என்ன பயன்?
 
மாற்றாக அறிக்கை வெளிவந்தால் அது பல நெருக்கடிகளைக் ஐநாவுக்கும்   சிறிலங்கா அரசுக்கும் கொடுக்கும். இதனைப் பயன் படுத்தி சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு அதனைக் கொண்டு செல்லலாம்.
 
மக்கள சமரவீர ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தேன். அதில் தெளிவாகச் சொல்லப்படுள்ளது, தமக்கு காலாவகாசம் தந்ததால் தாம் உள் ஊர் பொறிமுறைக்கான சட்டங்களை இயற்றுவோம் என்று கூறி உள்ளார். இவர்கள் முற் கூட்டியே திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நகர்வுகளை மேற் கொள்கிறார்கள். இதில் சுமந்திரன் முக்கிய பங்கை ஆற்றுகிறார்.     
 
  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கதிர்காமரின் கதிரையை நிரப்ப முனைகிறார். அவரை விட்டிட்டு..

 

பிரித்தானிய தேர்தல் காலமான இன்றைய காலத்தை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக்கக் கூடிய வழிமுறையில் பாவித்து தற்போதைய சிங்கள அரசின் நகர்வுகளின் நயவஞ்சகத்தன்மையை முறியடிக்க பிரித்தானியா மூலம் ஐ நா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் விசாரணைக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க.. அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

 

புலம்பெயர் தமிழர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு இதனை செய்வது அவ்வளவு சுலபமல்ல. வீதிக்கு வர வேண்டிய காலம் நெருங்குகிறது. அதேபோல்.. தாயகம்.. தமிழகமும்.. இவர்களோடு இணைவது காலத்தின் கட்டாயம்.

 

அமெரிக்காவை இதற்கு மேல் சும்மா நம்பிக் கொண்டிருந்தால்.. நாசம் தமிழர்களுக்கே. :icon_idea:

Extracts from Mangala samaraweeras letter to UNHRC commissioner ,

 

As you are aware, excellency, item 93 of the 100 day program me manifesto of president sirisena states the following, Since sri lanka is not a signatory to the rome statute regarding international jurisdiction with regard to war crimes, ensuring justice with regard to such matters will be the business of national independent judicial mechanisms.''

 

President sirisena's decisive victory at the election held on 8 january 2015, therefore allows the new government to set up the necessary domestic mechanism required to investigate into ' incidents' and   WHERE SUFFICIENT EVIDENCE AVAILABLE CONDUCT CRIMINAL PROSECUTION.

சிறிபவனை தலைமை நீதி பதி  யாகக் கொண்டு வந்ததும் சிறிலங்காவின் நீதித் துறை தமிழரின் தலைமையில் இருக்கிறது அதனால் அதுவே சுயாதீனமாக விசாரணை செய்யலாம் என்று காட்டத் தான். சுமந்திரனின் அடுத்த அறிக்கை இப்படித் தான் இருக்கும். கூட்டமைப்பில் உள்ளவர்கள் சுமந்திரனைத் தூக்கி வெளியால் போடவில்லை  எனில் எல்லோர் தலையிலும் மிளகாய் அரைக்கப்படும்.  
 

 

  • கருத்துக்கள உறவுகள்

நீதி பரிபாலனததிற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம்??

ஐ நா  அறிக்கை   குறை பாடுடையது என்பதை எதன் அடிப்படையில் மேலே  எழுதிய அனாமதேய நபர் எழுதி உள்ளார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும் . சிறிலங்கா அரசு உள் ஊர் விசாரணைக்கான நடைமுறைகளைச் செய்வதாக மட்டுமே உறுதி செய்துள்ளது. இதனை பகிரங்கமாகவும்  கடிதம் மூலமும் சிறிலங்கா அரசு சொல்லி உள்ளது. எந்த அடிப்படையும் அற்று எழுதும் இவ்வாறான மர்ம நபர்கள் பின்னர் காணாமற் போய் விடுவர். இவர்கள் தாம் இடும் கருத்திற்கு அடிப்படையான ஆதராங்களை முன் வைக்க வேண்டும் .  

தமிழர்கள் மீது இனப்படுகொலை நடைபெற்றது ,பெறுகிறது என்பதை நிறுவதே எமக்கான தீர்வைத் தரும். ஒரு சில நபர்களைக் குற்றவாளிகளாக்கி அதற்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதால் தமிழர்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? இதனையீ தற்போது இந்திய அரசும் அமெரிக்க அரசும் சிறிலங்கா அரசும் இணைந்து செய்ய இருக்கின்றன. இதற்க்கு நாம் ஏன்  துணை போக வேண்டும் .   

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தொகுப்பும் பதிவும்

நன்றி  sosTamils

அவசரமல்ல இன்றைய தேவை

அவகாசத்தை எவ்வாறு நாம் வலுவானதாக ஆக்குகின்றோம் 

அவகாசம் கொடுத்தவர்களிடம்

அவகாசத்தை பெற்றவர்களை 

எவ்வாறு சிக்கவைக்கப்பொகின்றோம் என்பதிலேயே எமது படிக்கட்டு உள்ளது

எமது வீட்டுக்கதவைத்தட்டி எவரும் நீதியை தரப்போவதில்லை.

நாம் நித்திரை கொண்டால்

தட்டுவதற்கு பல ஆயிரம் பேர் உண்டு

அவர்களது நீதிகளை பார்க்க போய்விடுவார்கள் 

 

இவர்கள் கால அவகாசம் கேட்பது அறிக்கைக்காக அல்ல, இப்போது இருக்கும் அரசை சிங்கள மக்கள் மத்தியில் நிலையாக நிற்க வைக்க. இந்த அரசு சர்வதேச தலையீட்டை நிராகரித்து ஒரு உள் ஊர் விசாராணையை நாடாத்தி சிலரைத் தண்டித்து விடயத்தை முடித்து விடும். இதனால் தமிழருக்கு என்ன பயன்?
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஆறு மாதத்தில் சாட்சியங்களை எப்படி தயார் படுத்தலாம் என சுமந்திரன் சொல்வாரா??ள் அதற்கான கூட்டமைப்பு செய்யவுள்ள நடவடிக்கைகள் என்ன? நேரத்தை எடுத்து மங்கள தனது திருவிலையாடல்களை காட்டத்தான் இது உதவும். சாட்சிகள் முற்று முழுதாக அளிக்க முன்னைய அரசு விடவில்லை என்பது உண்மை. ஆனால் கொடுக்கப்பட்ட சாட்சிகள்  விசாரணைக்கு போதுமானவை. மேலும் சாட்சிகள் தேவை எனில் அடுத்த அமர்வில் கொடுக்கலாம். நேரத்தை பின்னடிப்பதற்கு நிச்சயமாக உள்நோக்கம் உண்டு.

//விசாரணையை ஆரம்பிக்க சந்தேக நபர் குறித்த அந்த நாட்டில் இருக்க வேண்டுமா?

இல்லை. சந்தேகநபர் குறித்த நாட்டில் இல்லையென்றாலும் விசாரணைகளை நடத்துவதற்கு சர்வதேச சட்டம் அனுமதியளிக்கிறது.//

 

முதலாவது எழுதியதற்கு முரணாக உள்ளது பின்னர் எழுதி இருப்பது.  இன்று புலம் பெயர் தீசத்திலீயீ பல சாட்ச்சிகள் உள்ளனர். அவர்களைக் கொண்டே விசாரணைகளைச் செய்ய முடியும். அமரிக்க ,இந்தியா , போன்ற நாடுகள் விரும்பினால் இதனை இப்பொதே செய்ய முடியும். சர்வதேச விசாரணைக்குத் தேவையானது அரசியல் முனைப்பி அன்றி, சாட்சிகளின் குறைபாடு அல்ல. மேலும் ரோம் சர்வதேச விசாரணைச் சட்டத்தை சிறிலங்கா கய்யோப்ப இடவில்லை. அதனால் ஐ நா அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை செய்ய முடியாது. அவர்கள் அலோசகர்களாக மட்டுமே செல்ல முடியும்.

 
சும்மா சம்பந்தம் இல்லாத விடயங்களை எழுதி நேரத்தை  வீணடிக்காமால், நான் முதலில் கேட்ட வறிற்கான் ஆதாரத்தை முன் வைக்கவும்.
 
எந்தவித ஆதாரமும் அற்ற யூகம் பயனற்றது. விசாரணை அறிக்கைக்கு பல சாட்சியங்கள் பிரித்தானியாவில் இருந்து வழங்க்க்கப்பட்டு இருக்கிறது. இவ் விசாரணையுடன் தொடர்புடைய பிரித்தானிய மனிதஉரிமை வழங்க்குரையர்களின் கூற்றின் படி , பொஸ்னிய இனப் படுகொலை நிறுவப்பட்டதற்கான் சாட்ச்சியங்க்களை விடக் கூடுதலான நேரடி சாட்சியங்கள் உள்ளன, ஆனால் அமேரிக்கா இந்தியா விடம் சர்வதேச விசாரணைக்கான அரசியல் தெரிவு இல்லை. ஏனெனில் அவர்கள் இதனை புகோள நலன் சார்ந்த விடயமாக மட்டுமே பார்க்கிறார்கள்.                

கலர் கலரா எழுதி படம் காட்டுவதை விடுத்து நேரடியாகக்  கேட்கப்படும்  கேள்விகளுக்கு  மட்டும் பதில் சொல்லவும்.

ஒட்டுமொத்தத்தில் முள்ளி வாய்க்காலில் எமக்கு நடந்த கொடூரத்திற்கு அப்பால் ,எதற்காக  நாம் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டதோ ,அந்தக்காரணம் தவறானது என்னும் தோற்றத்தையும் வெகு விரைவில் இந்த அரசு ஏற்படுத்த முயலும் .......முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நடவடிக்கையில் ஒரு இறுக்கமான நிலையில் இருந்த சர்வதேசம் ,இன்று 6 மாதம் ஒத்திவைச்சு புதிய அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு அப்பால் .இவை அனைத்தையும் நீறு பொடியாக்கும் முயர்சியைத்தவிர ,உண்மையை ,நீதியை சிங்கள அரசுகள் செய்யும் என்று இன்னும் நாங்கள் நம்பினால் ................ஆளுக்கொரு கோமணத்தை தயார் செய்யுங்க .

Edited by தமிழ்சூரியன்

We believe that the extra time will create an opportunity for the new Sri Lankan government to deliver on its commitment to engage with the UN investigation, potentially generating additional material to inform the High Commissioner’s report. And it will allow the Sri Lankan government to establish their own credible accountability processes.

 

 

Hugo Swire responds to Sri Lanka report update

https://www.gov.uk/government/news/hugo-swire-responds-to-sri-lanka-report-update

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபரங்கள் எல்லாம் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசருக்கு தெரியாதா?விக்கினேஸ்வரனை விட அதிக சட்டம் படித்தவரா சுமத்திரன்????

விக்கினேஸ்வரன் அறிக்கையை உடன் வெளியிட வேண்டும் என்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.