Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் சம்பந்தன்,சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்கள் எரிக்கப்பட்டன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2422015_uk_1.jpg

2422015_uk_2.jpg

2422015_uk_3.jpg

2422015_uk_4.jpg

2422015_uk_5.jpg

2422015_uk_6.jpg

2422015_uk_7.jpg

2422015_uk_8.jpg

பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
 
tamilwin.com

Edited by நிழலி
தவறான கருத்தை தரும் தலைப்பு திருத்தப்பட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நன்றி நிழலி என்ன செய்வது சில இனையைங்கள் கூத்து அப்படி .
 
Edited by பெருமாள்

புலிகளின் போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐநா தீர்மானங்களில் இருப்பது இந்த புலிகொடி வீரருக்கு தெரியுமா?

மன்னார் பாதிரியார் இரண்டு நாட்களுக்கு முன்  35,000 சடலங்கள் ஒரேயடியாகக் கிடந்ததாகச் சொன்னவர்.
 
அவ்வளவு சனத்தயும் சம்பந்தர் தான் கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போனவர். அது தான் கோபத்தில் எரிக்கிறார்கள் போல் இருக்கிறது.
 
சம்பந்தரின் திட்டம் எப்படியும் 300,000 - 400,00 சனத்தை குலையறுப்பது தான்.
அதுக்காகத்தான் ஆமி நல்லா கிட்டவரும் மட்டும் தீபனின் ஆட்களை வைச்சிருந்து, ஆமி ஒரு சின்ன வட்டத்தில சுத்தி வளைச்சப் பிறகு ஆனந்த புறத்தில வைச்சு 400 பேரை கொண்டு ஒரு 500 ஆமியச் சாக்காட்ட அவன் சுத்தி வளைச்சு மல்ரி பரலாலையும் ஆட்லறியாலையும் குழந்தை குஞ்சு குருமன் எல்லாத்தையும் சிதறடிச்சு எப்படியும் ஒரு 400,000 சனத்தை அழிக்க சம்பந்தரின் கொலை வெறியும் ரத்த வெறியும் தணிஞ்சிருக்கும்.
 
சம்பந்தர் போட்ட திட்டத்தை அமெரிக்கன் நாசமறுவார் சட்டலைட்டில பார்த்து காட்டி எல்லே குடுத்து விட்டினம். ஆனந்த புறம் தொடங்க முதல் முடிஞ்சு போச்சுது. அதால செத்த‌து 150,000 சனம் மட்டுந் தான். ஏன் குறையச் சனம் செத்தது என்டு பெடியள் சம்பந்தரில கடும் கோபமா நிக்கிறாங்கள் போல கிடக்குது.
 
புலிகளின் போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐநா தீர்மானங்களில் இருப்பது இந்த புலிகொடி வீரருக்கு தெரியுமா?

நீங்கள் கொஞ்சம் படிச்ச ஆள் போல கிடக்குது. படிச்ச ஆட்கள் இதுக்குள்ள சேர்மதி இல்ல. நீங்க எல்லாம் துரோகிகள்.   :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
லண்டனில் ஆர்ப்பாட்டத்தின் போதும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்!
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:16.42 AM GMT ]
sumanthiran_sam.jpg

சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் உருவப்படங்களை லண்டனில் போராட்டத்தின் போதும் தீயிட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கையானது தமிழ்மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்கப் போவதில்லை என்ற போதும் அதைக்கூட சமர்ப்பிக்காமல் காலந் தாழ்த்துவதன் பின்புலத்தை நன்கு அறிந்தவர்களாகவும், தமிழ் மக்களாகிய நாமே எமக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் எமது மண்ணை மீட்கவும் நீதிக்கான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவும் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் உறவுகள் உணர்வோடு கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தின் போது பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கந்தையா ராஜமனோகரன் அவர்களும் தமிழ் இளையோரமைப்பைச் சேர்ந்த சஞ்சய் அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர் நியூட்டன் அவர்களும் உரையாற்றினர்.

அத்துடன் நீதிக்கான போராட்டத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவும் அமெரிக்கத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. மாலை 6 மணியளவில் நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் இன்று நடைபெற்ற நீதிக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு எரிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

இரண்டாம் இணைப்பு

பிரித்தானியாவில் நேற்று மாலை 4.00 மணியிலிருந்து 6.00மணிவரை 24,Grosvenor Square, WIA 2LQ என்னும் இடத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் நீதிக்கான போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. 

சிறீலங்கா அரசு தமிழ் இனத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தக் கோரியும் இலண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு முன்னரே மக்கள் பெருமளவில் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஒன்றுகூடினர். கைகளில் பதாகைகளையும் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பிடித்தவாறே கொட்டொலிகளை எழுப்பினர். "We reject Srilanka 's LLRC , Time and space for Srilanka kills tamil nation , Not just war crimes , it 's planned genocide " போன்ற பல கொட்டொலிகளை அங்கு திரண்டிருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுப்பினர்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கும் குறிப்பாகத் தமிழீழ மண்ணிலும் இன்றைய நாளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா அரச பயங்கரவாத அடக்குமுறை ஆட்சியில், திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வதைபடும் தமிழீழ மக்கள் தன்னெழுச்சியாகத் துணிவோடு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஒரே காலப்பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையால் தமிழ் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் தமிழ்மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் முன்னைய மகிந்த ஆட்சியில் எப்படி தொடர்ந்தனவோ அப்படியே மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் தொடரும் என்பதையும்,

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்ற போலியான தோற்றப்பாட்டைக் கொடுத்து, அதற்கமைய சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்க ஐ நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதையும் தமிழ் மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்பதை இன்றைய போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2422015_uk_3.jpg

2422015_uk_4.jpg

2422015_uk_5.jpg

2422015_uk_6.jpg

2422015_uk_7.jpg

2422015_uk_8.jpgtamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் பாதிரியார் இரண்டு நாட்களுக்கு முன்  35,000 சடலங்கள் ஒரேயடியாகக் கிடந்ததாகச் சொன்னவர்.
 
அவ்வளவு சனத்தயும் சம்பந்தர் தான் கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போனவர். அது தான் கோபத்தில் எரிக்கிறார்கள் போல் இருக்கிறது.
 
சம்பந்தரின் திட்டம் எப்படியும் 300,000 - 400,00 சனத்தை குலையறுப்பது தான்.
அதுக்காகத்தான் ஆமி நல்லா கிட்டவரும் மட்டும் தீபனின் ஆட்களை வைச்சிருந்து, ஆமி ஒரு சின்ன வட்டத்தில சுத்தி வளைச்சப் பிறகு ஆனந்த புறத்தில வைச்சு 400 பேரை கொண்டு ஒரு 500 ஆமியச் சாக்காட்ட அவன் சுத்தி வளைச்சு மல்ரி பரலாலையும் ஆட்லறியாலையும் குழந்தை குஞ்சு குருமன் எல்லாத்தையும் சிதறடிச்சு எப்படியும் ஒரு 400,000 சனத்தை அழிக்க சம்பந்தரின் கொலை வெறியும் ரத்த வெறியும் தணிஞ்சிருக்கும்.
 
சம்பந்தர் போட்ட திட்டத்தை அமெரிக்கன் நாசமறுவார் சட்டலைட்டில பார்த்து காட்டி எல்லே குடுத்து விட்டினம். ஆனந்த புறம் தொடங்க முதல் முடிஞ்சு போச்சுது. அதால செத்த‌து 150,000 சனம் மட்டுந் தான். ஏன் குறையச் சனம் செத்தது என்டு பெடியள் சம்பந்தரில கடும் கோபமா நிக்கிறாங்கள் போல கிடக்குது.
 
நீங்கள் கொஞ்சம் படிச்ச ஆள் போல கிடக்குது. படிச்ச ஆட்கள் இதுக்குள்ள சேர்மதி இல்ல. நீங்க எல்லாம் துரோகிகள்.   :)

வணக்கம் ஈசன்,

நீங்கள் எழுதுவதில் நான் குறை கண்டுபிடிக்கவில்லை. அது உங்களின் கருத்து.

ஆனால் ஒரு சிறிய நெருடல். நீங்கள் முன்பு இப்படி இருக்கவில்லையே? இவ்வளவு காலமும் புலிகளின் அபிமானியாகத்தானே இருந்து வந்தீர்கள்? இப்போது ஏன் இந்தத் திடீர் மாற்றம் ? அதுவும் புலிகளைக் கடுமையாக வசைபாடுமளவிற்கு ? 

இந்த மாற்றம் 2009 இற்கு பின்னர் வந்தது போல்த் தெரியவில்லையே ?? சில மாதங்களாகத்தானே இப்படி எழுதுகிறீர்கள் ?

அல்லது நான் நினைக்கும் ஈசன் நீங்கள் இல்லையோ ?? 

இப்படிக் கேட்டதற்காக என்னையும் புலிவால் என்று வசை பாடவேண்டாம், அறிந்துகொள்ளலாம் என்றுதான் கேட்கிறேன். பதிலளிக்க விரும்பவில்லையென்றால் அப்படியே விட்டு விடுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐநா தீர்மானங்களில் இருப்பது இந்த புலிகொடி வீரருக்கு தெரியுமா?

நிச்சயமாக

அங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.....

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு.....???

ஆனால் விசாரணை முழுமையாக முடிக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

10987454_937141452971939_464082824505861

11025149_937141479638603_220678516856465

15885_937141516305266_403199852627026891

இதேவேளை ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையை பிற்போட அமெரிக்கா தூண்டுதலாக இருந்ததை கண்டித்து லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நிகழ்ந்திருந்தது.

11016081_937142229638528_412059713043080

11025651_937142272971857_283339249665903

1689175_937142306305187_7542020184978204

படங்கள் மற்றும் செய்தி: பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு.

பிரதியாக்கம்: முகநூலில் இருந்து. யாழுக்கான செய்தியாக்கம்: நெடுக்ஸ்.

மேலும் படங்கள்;

11018936_937142472971837_157362929886238

10984570_937142569638494_509364215692366

1509769_937142606305157_8435697981581617

10502137_937142639638487_750226840074855

11016081_937142229638528_412059713043080

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து வரும் சிலருக்கு அசைலம் அடிக்க புலிக்கதை வேணும்.. புலிக்கொடி பிடிக்கிறது தான் பிரச்சனையா இருக்குது. 

அசைலம் அடிக்க சொன்ன பொய்ப் புலிக்கதைகளில் இருந்து விசாரணையை ஆரம்பிக்கலாம். அதன்படி.. விசாரணைக்கு அமைய.. அனைத்துப் பொய்யர்களின் அகதி அந்தஸ்தும் நிராகரிக்கப்பட்டு.. கனடிய பிரஜா உரிமையும்.. கடவுச்சீட்டுக்களும் புடுங்கப்பட்டு.. சிங்களத்திடம் இவர்கள் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.  :icon_idea:  :D

சிங்கள தலைவர்கள்  கொடும்பாவி  எல்லாம் எரிச்சு முடிச்சு  போல ..இனி  தமிழ் அரசியல்  தலைவர்கள்  கொடும்பாவி  எரிப்பு  நடக்கு  போல  இது  முடிய முஸ்லீம்  தலைவர்கள்  கொடும்பாவி  எரிப்பு  இடம்பெறும்  என்பதை அறியத்தருகிறோம் ..

இப்படி  மாறி  மாறி  எரிகிறம்  ஒளிய  புலத்தில  ஒரு  காத்திரமான  அரசியல் முயற்ச்சி  செய்தமா  என்று  கேட்டால் முடிவு  சுழியம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் போய் குந்துவதும்.. உள்ளக விசாரணை போதும் என்பதும் மட்டும் சுழியத்துக்கு மேலா எதனையோ கொண்டு வந்த கணக்கா.

இது சிலரின் தானும் படாதுகள் தள்ளியும் படாதுகள் கொள்கை.  :icon_idea:  :)

எந்த  அரசியலும்  ஈழத்தில்  இருந்தே தொடங்குது  ஆக புலம்பெயர் சக்திகள் நாம்  எதை  சொன்னாலும்  இன்றுவரை  உலகம் செவிசாய்த்ததா  இல்லை  ஏன் எங்களிடமே  இங்க  ஒற்றுமை இல்லை  பல பிரிவு  பல வழி  அப்படி  இருக்க நிலைமை ....

ஆறுவருடம் நாடுகடந்த  அரசை வழிநடத்தி வந்த பிரதமர் போன  கிழமை  என்று  நினைக்கிறன்  சொல்கிறார்  எங்களிடம் திட்டமிடல்  இல்லை  என்று  ஆக  இவர்கள்  தேர்தல் அமைச்சு  பொறுப்பு  எல்லாம்  கொடுத்து  என்னதான்  செய்தார்கள் என்றுதான்  புரியவில்லை ...

எதையும் அங்கு ஆரம்பிக்கும்  போது  நாம்  அதுக்கு  ஆதரவா  இருக்கலாமே  தவிர  நீ  இதை  செய்யாதே  என்று  சொல்லும்  அதிகார  சக்தியா  இருக்க  முடியாது புலம்  என்பதுதான்  உண்மை .

புலிகளின் போர்க்குற்றமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐநா தீர்மானங்களில் இருப்பது இந்த புலிகொடி வீரருக்கு தெரியுமா?

அவர்களுக்கு அது தெரிந்து தான் கொடி பிடிக்கிறார்கள். ஆனால் உங்கட ஆட்கள் தான் ஐநா விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார்கள் தெனாலி மாமா. ஐநா விசாரணை வேண்டாம் என்று கூறும் உங்கள் ஆட்களிடம் பேசி அந்த விசாரணையை துரித கதியில் நடைபெறும் படி செய்தால் நீங்கள் விரும்பியபடி புலிகளையும் அவர்கள் விசாரிப்பார்கள் தானே.  புலிகளும் விசாரிக்க பட போகிறார்கள் என்று பூச்சாண்டி காட்டி உங்கள் எஜமானர்களை காப்பாற்ற முயலுகிறீர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் இணைப்பு

பிரித்தானியாவில் நேற்று மாலை 4.00 மணியிலிருந்து 6.00மணிவரை 24,Grosvenor Square, WIA 2LQ என்னும் இடத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால் நீதிக்கான போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. 

சிறீலங்கா அரசு தமிழ் இனத்தைக் கருவறுப்பதைக் கண்டித்தும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தக் கோரியும் இலண்டனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்னால் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

மாலை 4 மணிக்கு முன்னரே மக்கள் பெருமளவில் அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஒன்றுகூடினர். கைகளில் பதாகைகளையும் தமிழீழத் தேசியக்கொடிகளையும் பிடித்தவாறே கொட்டொலிகளை எழுப்பினர். "We reject Srilanka 's LLRC , Time and space for Srilanka kills tamil nation , Not just war crimes , it 's planned genocide " போன்ற பல கொட்டொலிகளை அங்கு திரண்டிருந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுப்பினர்.

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கும் குறிப்பாகத் தமிழீழ மண்ணிலும் இன்றைய நாளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா அரச பயங்கரவாத அடக்குமுறை ஆட்சியில், திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வதைபடும் தமிழீழ மக்கள் தன்னெழுச்சியாகத் துணிவோடு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தமிழீழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஒரே காலப்பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையால் தமிழ் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் தமிழ்மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் முன்னைய மகிந்த ஆட்சியில் எப்படி தொடர்ந்தனவோ அப்படியே மைத்திரிபால சிறிசேன ஆட்சியிலும் தொடரும் என்பதையும்,

ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ்மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளது என்ற போலியான தோற்றப்பாட்டைக் கொடுத்து, அதற்கமைய சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை மேலும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்க ஐ நா மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்திருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை என்பதையும் தமிழ் மக்கள் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்பதை இன்றைய போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

tamilwin,com

நிச்சயமாக

அங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.....

முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு.....???

ஆனால் விசாரணை முழுமையாக முடிக்கப்படல் வேண்டும்.

நிச்சயமாக! அதை தானும் நானும் சொல்கிறேன். முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பின் போர்க்குற்றமும் விசாரிக்கப்படவேண்டும். ஐநா அதை தான் செய்யபோகின்றது. ஆனால் அது இந்த புலிகொடி வீரருக்கு தெரியுமா? ஏனென்றால் போன வருடம் இதே கூட்டம் ஐநா அறிக்கையையும் எரிச்சது.. நாளைக்கு புலியும் குற்றம் செய்தது என்று சொன்னா பான் கீ மூனின் படம் எரிக்கப்படும். ஆக மொத்தம் பலரின் படங்கள் எரிக்கப்பட உள்ளது என்று தெரிகிறது. 

கனடாவில் இருந்து வரும் சிலருக்கு அசைலம் அடிக்க புலிக்கதை வேணும்.. புலிக்கொடி பிடிக்கிறது தான் பிரச்சனையா இருக்குது. 

அசைலம் அடிக்க சொன்ன பொய்ப் புலிக்கதைகளில் இருந்து விசாரணையை ஆரம்பிக்கலாம். அதன்படி.. விசாரணைக்கு அமைய.. அனைத்துப் பொய்யர்களின் அகதி அந்தஸ்தும் நிராகரிக்கப்பட்டு.. கனடிய பிரஜா உரிமையும்.. கடவுச்சீட்டுக்களும் புடுங்கப்பட்டு.. சிங்களத்திடம் இவர்கள் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.  :icon_idea:  :D

நான் அசைலம் அடிக்கேல சோ புலிகதை விவரம் பெரிசா தெரியாது. ஆனா புலி அடிக்குது என்டு சொல்லி அசைலம் எடுத்தவர்கள தான் ரோட்டில புலி கொடியோட நின்டு ஓவரா சத்தம் போடுபவர்கள் என்று கேள்வி.   :D  அனாலும் அவையும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன். அப்படியே உள்ளுக்க விட்டு அடிப்பம் காசு தா என்டு ஆட்டைய போட்ட ஆக்களும் விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் இவை எல்லாம் கனடாவில் மட்டும் தான்! தப்பி தவறி இங்கிலாந்தில் என்றால் பிறகு எங்கட கதி  :(

முழு விசாரணை என்று வந்தால் எம்மவர் பலரின் வீடு ,வியாபாரம் .அடித்த காசுகள் எல்லாம் பறிபோகும் .

பின்னர் நடு வீதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

முழு விசாரணை என்று வந்தால் எம்மவர் பலரின் வீடு ,வியாபாரம் .அடித்த காசுகள் எல்லாம் பறிபோகும் .

பின்னர் நடு வீதிதான்.

விசாரணை  வரட்டும்

நீங்க துள்ளுவதைப்பார்த்தால் ஏதோ சுத்தி இருக்கிறியள் 

அல்லது 

அவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவாகிவிடும் என பயங்கொள்கிறீர்கள் என அர்த்தம்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் அசைலம் அடிக்கேல சோ புலிகதை விவரம் பெரிசா தெரியாது. ஆனா புலி அடிக்குது என்டு சொல்லி அசைலம் எடுத்தவர்கள தான் ரோட்டில புலி கொடியோட நின்டு ஓவரா சத்தம் போடுபவர்கள் என்று கேள்வி.   :D  அனாலும் அவையும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன். அப்படியே உள்ளுக்க விட்டு அடிப்பம் காசு தா என்டு ஆட்டைய போட்ட ஆக்களும் விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் இவை எல்லாம் கனடாவில் மட்டும் தான்! தப்பி தவறி இங்கிலாந்தில் என்றால் பிறகு எங்கட கதி  :(

ஐரோப்பிய தமிழ் மக்கள் புலிக்கொடி பிடிக்கிறதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. கனடாக்காரர்கள் சிலருக்குத் தான் அலேர்ஜியா இருக்குது. அங்க தான் ஊரில் கொலை கொள்ளை எல்லாம் செய்திட்டு.. மாற்றுக்குழுக்கள் என்று போய்.. அகதிகள் என்று போய் குந்தியோரும் அதிகம்.  :icon_idea:  :rolleyes:

Edited by nedukkalapoovan

விசாரணை  வரட்டும்

நீங்க துள்ளுவதைப்பார்த்தால் ஏதோ சுத்தி இருக்கிறியள் 

அல்லது 

அவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவாகிவிடும் என பயங்கொள்கிறீர்கள் என அர்த்தம்...

அப்பா குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கு . :icon_mrgreen:

நான் பொதுவாக எழுத ஏன் அண்ணை ஓடி வாரீர்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா குதிருக்குள் இல்லை என்பது போலிருக்கு . :icon_mrgreen:

நான் பொதுவாக எழுத ஏன் அண்ணை ஓடி வாரீர்கள். :lol:

உங்களை மாதிரியான புலிகளுடன் தான் உங்களுக்கு பழக்கம்

எங்களுக்கு 

எங்களை மாதிரி புலிகளுடன் தான் பழக்கம்

எந்த சொத்தும் இல்லை

ஒரு சொந்த வீடு கூட வாங்கியதில்லை

என்னைப்பற்றி  என்ன தெரியும் அண்ணைக்கு...

உங்க சொத்தை சொல்லமுடியுமா??

யாருக்கு மடியில கனம் அண்ணை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.