Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண சபை குழப்பம் முடிவுக்கு வந்தது! கூட்டமைப்புக்கு கல்வி அமைச்சு வழங்கி நேசக்கரம் நீட்டியது மு.கா

Featured Replies

ease%20pc%20f98787778.jpg

 

 

கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நேற்று நீங்கி மீண்டும் புதிய அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சுப் பதவிகளில் ஒன்றான கல்வி அமைச்சு உட்பட 2 அமைச்சுக்களும், உப தவிசாளர் பதவியும் வழங்கி நேசக்கரம் நீட்டியுள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
 
முன்னர் நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவையில் சிறு மாற்றங்களை செய்து புதியச அமைச்சரவை நேற்று நியமிக்கப்பட்டது.
 
அவை வருமாறு:- 
 
1. ஹாபீஸ் நஸீர் அஹமட் (மு.கா.) - கிழக்கு மாகாண முதலமைச்சர், நிதி, திட்டமிடல் சுற்றுலா மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
 
2. சி. தண்டாயுதபாணி (கூட்டமைப்பு) - கிழக்கு மாகாண கல்வி, கலாலாசார விளையாட்டு அமைச்சர்
 
3. கி.துரைராஜசிங்கம் (கூட்டமைப்பு) - கிழக்கு மாகாண விவசாய, கிராமிய அபிவிருத்தி அமைச்சர்
 
4. எம்.ஐ.எம். மன்சூர் (மு.கா.) - கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, கூட்டுறவு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர்
 
5. - ஆரியவதி கலபதி (ஐ.ம.சு.மு.) - காணி, வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நெடுஞ்சாலைகள் அமைச்சர் அதேவேளை, கிழக்கு மாகாண சபையின் தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரதாச கலபதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் நேற்று முற்பகல் 11 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவின் காரியாலயத்தில் ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் கிழக்கின் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் உட்பட மாகாணசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கலந்துகொண்டனர்.
 
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு தாம் வழங்கியிருந்த ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆறு உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் வாபஸ் பெற்றிருந்தனர். இவ்வாறு, கிழக்கு மாகாண சபை முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, முன்னாள் வீதி, நீர்ப்பாசன அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ஜயந்த விஜயசேகர, எம்.எல்.அமீர், டி.வீரசிங்க மற்றும் ரி.எம்.ஜெயசேன ஆகியோர் திருகோணமலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வாபஸ் பெறுவதாக அறிவித்ததுடன் தமது வாபஸ் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டீன் பெர்னாண்டோவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
இதனால், கிழக்கின் ஆட்சியைத் தொடர்ந்தும் மு.கா. தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு கிடைக்கப்பெற வேண்டிய நிலையில் இருந்தது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையேந்தும் நிலையில் மு.கா. தள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் மாலை திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கிழக்கில் ஆட்சியமைக்க ஆதரவு கேட்டிருந்தனர்.
 
எனினும், கூட்டமைப்பு இந்த விடயத்தில் மு.கா.வுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்தனர். அண்மையில் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலபதியும், முன்னாள் சுகாதார அமைச்சரான மன்சூர் வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று இந்த அமைச்சுப் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
http://www.malarum.com/article/tam/2015/03/03/8910/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE-.html#sthash.Te5xsDGh.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ease%20pc%20f98787778.jpg

 

கிழக்கு மாகாண அமைச்சரவை படத்தில்.... ஒருவர் மட்டுமே, தொப்பியியுடன் நிற்பதால்.....
தமிழ் அமைச்சர்கள்.... அதிகம் போல் உள்ளது. :D

கூட்டமைப்பு ஆட்சியமைத்து மு காவுக்கு ஒரு சில அமைச்சை கொடுக்க முடியாதா? 
சம்பந்தர் காக்காவுக்கு ஏன் முண்டு கொடுக்கிறார்?  :D
சம்பந்தர் மாகாண சபையை கலைச்சு மீண்டும் தேர்தலுக்கு போயிருந்தால் 
மைத்திரி இருக்கிற நேரத்தில நேர்மையான தேர்தலில கூட்டமைப்பு 
பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்து இருக்கலாம்.  :icon_idea:

 

சம்பந்தர் மாகாண சபையை கலைச்சு மீண்டும் தேர்தலுக்கு போயிருந்தால் 
மைத்திரி இருக்கிற நேரத்தில நேர்மையான தேர்தலில கூட்டமைப்பு 
பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்து இருக்கலாம்.  :icon_idea:

 

 

இதுதாங்க புரியமாட்டேங்குது! 

  • கருத்துக்கள உறவுகள்

 

சம்பந்தர் மாகாண சபையை கலைச்சு மீண்டும் தேர்தலுக்கு போயிருந்தால் 
மைத்திரி இருக்கிற நேரத்தில நேர்மையான தேர்தலில கூட்டமைப்பு 
பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்து இருக்கலாம்.  :icon_idea:

 

பாலுக்கு காவல்

பூனைக்கு கூட்டாளி.... :( 

 

இசுலாமியர்களுக்க நன்றிக்கடன் என்றால் என்னவென்று தெரியாது

சம்பந்தர் யயா 

அதைத்தான் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார் போலும்.......... :(

இறுதியா  கூட்டமைப்பு  இரண்டு  எலும்பை பெற்றுக்கொண்டது  :D

யாழ் மக்கள் டக்கியை பாராளுமன்றம் அனுப்பி மகிந்த எறிந்த பல எலும்புகளை பெறமுடியுமாயின் கிழக்கு மக்கள் இரண்டை பெறுவதில் தப்பா, எல்லாம் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது ,டக்கி போனால் மண்ணெண்ணெய் புகழ் விஜயகலா மூலம் ரணில் மாத்தையா எத்தனையை எறியப்போராரோ ?கிழக்கு மக்கள் இதிலை கொஞ்சம் வீக்தான். :D  :icon_idea:
 
எங்களிடமும் விசைப்பலகை இருக்கல்லா ,எழுதுவமல்லா :D

Edited by Gari

என்றுமே சாத்தியம் இல்லாத கனவுகளில் உலவாத்தான் எம்மவருக்கு பிடிக்கும் போல .

கூட்டமைப்பிற்குள் குளறுபடிகள் இருந்தாலும் அரசியல் முடிவுகள் சரியாகத்தான் இருக்கு .

நல்ல முடிவு.

 

தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் மேலும் கசப்பை வளர்த்து மோதலை உருவாக்கி அதில் குளிர்காயலாம் என்று நினைத்து இருந்த சிங்கள பேரினவாதம் இதை கண்டிப்பாக கசப்புடன் தான் பார்க்கும்.  முக்கியமாக சனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் தான் சனாதிபதியை தீர்மானித்தது என்பதை வெறுப்புடன் நோக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம் இதை மிகவும் சினத்துடனேயே அவதானிக்கும்.

 

வடக்கில் தமிழ் மக்கள் செல்வாக்குடன்  இருப்பதால் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகளுடன் விட்டுக்கொடுப்புகளுடன் சமரசமாக போக வேண்டிய தேவை இருப்பது போன்றுதான் கிழக்கில் அதிகரித்து வரும் முஸ்லிம் மக்களின் செல்வாக்குக்கு ஏற்ப தமிழ் தரப்பும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து முடிவு கண்டது நல்ல விடயம்.

 

தலதா மாளிகையில் வெறுமனே சிங்களத்தினை மட்டும் குறிக்கும் சிங்களக் கொடி ஏற்றும் அளவுக்கு சிங்கள பெளத்த பேரினவாதம் இவ் இணைவுகளை வெறுப்புடன் தான் பார்க்கும்.

நல்ல முடிவு.

 

தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் மேலும் கசப்பை வளர்த்து மோதலை உருவாக்கி அதில் குளிர்காயலாம் என்று நினைத்து இருந்த சிங்கள பேரினவாதம் இதை கண்டிப்பாக கசப்புடன் தான் பார்க்கும்.  முக்கியமாக சனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் தான் சனாதிபதியை தீர்மானித்தது என்பதை வெறுப்புடன் நோக்கும் சிங்கள பெளத்த பேரினவாதம் இதை மிகவும் சினத்துடனேயே அவதானிக்கும்.

 

வடக்கில் தமிழ் மக்கள் செல்வாக்குடன்  இருப்பதால் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகளுடன் விட்டுக்கொடுப்புகளுடன் சமரசமாக போக வேண்டிய தேவை இருப்பது போன்றுதான் கிழக்கில் அதிகரித்து வரும் முஸ்லிம் மக்களின் செல்வாக்குக்கு ஏற்ப தமிழ் தரப்பும் விட்டுக் கொடுத்து சமரசம் செய்து முடிவு கண்டது நல்ல விடயம்.

 

தலதா மாளிகையில் வெறுமனே சிங்களத்தினை மட்டும் குறிக்கும் சிங்களக் கொடி ஏற்றும் அளவுக்கு சிங்கள பெளத்த பேரினவாதம் இவ் இணைவுகளை வெறுப்புடன் தான் பார்க்கும்.

 

நான் எழுத நினைத்தது நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
 
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.