Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அத்துமீறும் இந்திய மீனவர்களை சுடுவதில் தவறில்லை: ரணில்

Featured Replies

தூத்துக்குடி மீனவர்கள் நாகபட்டினம் போய் மீன் பிடித்தால் வாள் வீச்சு தான் நடக்கும்.
 
மன்னார் மீனவர்கள் யாழ்ப்பாணம் போய் மீன் பிடித்தாலும் சண்டை சச்சரவு தான்.
 
அறிவுறை: மற்றவர் சொத்துக்கு ஆசைப்படாதீர்கள்.  

ஈசன்  உங்க அறிவுரையை பார்த்த உங்கள் அபிமான  சிறீலங்கா அரசு தமிழருக்கு சொந்தமான சொத்தான  தமிழரின் தாயகத்தை அதன்  உரிமையாளர்களான ஈழத்தமிழர்களிடன் திருப்பு ஒப்படைத்த தீர்மானித்து விட்டார்களாம்.

Edited by trinco

  • Replies 52
  • Views 3.3k
  • Created
  • Last Reply

ஈசன்  உங்க அறிவுரையை பார்த்த உங்கள் அபிமான  சிறீலங்கா அரசு தமிழருக்கு சொந்தமான சொத்தான  தமிழரின் தாயகத்தை அதன்  உரிமையாளர்களான ஈழத்தமிழர்களிடன் திருப்பு ஒப்படைத்த தீர்மானித்து விட்டார்களாம்.

அப்படி அவர்கள் செய்ய நினைத்த போது தற்செயலாக உங்கள் கருத்தை வாசித்து விட்டு " அட இப்படியும் ஒரு லாஜிக் இருக்கிறதா" என்று பல்டி அடித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

பிரதம மந்திரிப்பதவியை தொடர்ந்து தங்க  வைக்க

இப்படியெல்லாம ரணிலும் கதைக்கவேண்டி இருக்கு

சிறீலங்கா அரசியல் பாதை.......... :(  :(  :(

சுடுவோம் என்ற சொல்லின் வலியை அறியாதவரெல்லாம் பிரமதர் பொறுப்பில்..

உருப்படுமா சிறீலங்கா.........

தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் சர்வதேசம் தடைவிதித்த பொறிகளை எல்லாம் பயன்படுத்தி வடக்குக் கிழக்கு கடலில் மீன்பிடிப்பது பற்றி ரணில் என்ன சொல்ல விளைகிறார் என்று கேட்க.. ஆசை.

மேலும்.. சிங்கள மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்து இந்தியாவால் கைது செய்யபட்டுள்ளார்கள். இதுவரை எவரும் சுட்டுக் கொல்லப்பட்டதில்லை.

மீன் வளப் பிரச்சனையை புரிந்துணர்வுகள் மூலம் தாயக தமிழக மக்கள் தீர்த்துக் கொள்வதே நல்லது. இடையில் ரணில் சிங்கள மீனவர்கள் அவர்களின் கடற்படையின் ஆதிக்கம் உள்ளது என்ற வகையில் தமிழர்களின் வளர்த்தை கபளீகரம் செய்ய அனுமதிக்க முடியாது. முதல் ரணில் அதற்கு ஒரு முடிவு கட்டட்டும்.

வடக்குக் கிழக்கு கரையோரங்களில்... சிங்கள கடற்படை முகாம்களுக்கு அபகரித்த காணிகளைக் கூட விட்டுக்கொடுக்க முடியாத ரணில்.. வடக்கு மீனவர்கள் மீது காட்டும்.. கருசணை என்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதைதான்.  :icon_idea:  :)

பேட்டியை பார்க்கும் போது வடமாகாண சபையைப்பற்றியும் தலைவர் விக்னேஸ்வரன்பற்றியும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மிகவும் கேவலமானது. 
 
தலைவிதி 
நெடுக்காலபோவான்
 
ஆனாலும் தமிழக மீனவர்கள் எமது வளங்களை அழிப்பதை ஏற்கமுடியாது. தென்இந்திய கரையோரங்களில் உள்ள முருகைக்கற் பாறைகளை சீமெந்து உற்பத்திக்காக (ஜிப்சம்) எடுத்துவிட்டார்கள். இவை 100 வருடங்களில் 5 செ.மீ தான் வளரும் என்று வாசித்த ஞாபகம். இப்பாறைகளிலேயே மீன்கள் குஞ்சு பொரிப்பது. 
 
இப்போது நமது வளம்தான் அவர்கள் வாழ்வாதாரம். விட்டால் அவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி முறைகளால் நமது வளமும் அம்பேல். 
 
சுட்டாலும் தப்பில்லை எமது வளம் எமக்கு வேண்டும்.

வன்முறை வேண்டாம் என்று எழுதும்  நீங்களா.....?? :(  :(  :(

சுடுதலின் வலியை நாமே உணரவில்லையென்றால்.....?? :(  :(  :(

இது எவ்வளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால்.. மீன்களின் இனப்பெருக்கம்.. வளர்ச்சி என்பவற்றை பேணும் வகையில் தமிழக தொழிலாளர்கள் கடலுக்கு செல்ல முடியாத காலம் என்ற ஒன்றை தமிழக அரசு அமுல்படுத்தி வருகிறது.

இப்படியான... ஒரு முறை.. பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உள்ளது.

முருகைக்கற் பாறைகளின் சேதாரம்.. கடல் வெப்ப அதிகரிப்பு.. அதன் மூலமான கடல் நீர் அமிலத்தன்மை அதிகரிப்பு என்று பல்வேறு காரணிகளால்... தீர்மானிக்கப்படுகின்றது.

எமது மீனவர்கள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாகவும்.. தென்னிலங்கை மீனவர்களின் அவர்களுக்கு உதவும் சிங்களக் கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாவும்.. எமது மீனவர்கள் ஆள்கடல் மீன்பிடியை செய்ய முடியாதுள்ளது.

தமிழக மீனவர்களுக்கு சாட்டுச் சொல்லும் சிறீலங்கா.. சீன மீனவர்கள் எங்கள் கடலில் மீன் பிடிக்க எப்படி அனுமதித்தது..?!

தமிழக - தமிழீழ மீன் வளப் பிரச்சனையில்.. சிங்கள அரசின் தலையீடு தான் பெரும் பிரச்சனையாக உள்ளதே அன்றி.. உலகளாவிய புவிச் சூழல் மாற்றங்கள் மற்றும் அதற்கு அமைவான தகுந்த மீன் பிடி முகாமைத்துவம் இருந்தால்.. பாக்குநீரிணையை அண்டி நல்ல மீன் வளத்தை காக்கலாம்.

இன்று நீர் கொழும்பு மீனவர்கள்.. ஆழ் கடல்.. வடகிழக்கு கடல்.. மீன் பிடியை நம்பி இருக்கக் காரணம் என்ன...?!  இதே சிங்கள அரசுகள் மீன் பிடி முகாமைத்துவத்தில் கடைப்பிடித்த தவறான கொள்கைகள் தான். இது தொடர்பில் தான் சிறீலங்கா மீன்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடையும் விதித்திருந்தது. இவற்றை எல்லாம் மூடி மறைக்கத் தெரிந்த ரணில்.. தமிழக.. தாயக மீனவர்களிடையே சீண்டு முடிவது.. வடக்குக் கிழக்குக் கரையோர சிங்களக் குடியேற்றங்களை.. விஸ்தரிக்க.. சிங்களக் கடற்படை இருப்பை விஸ்தரிக்கவே ஆகும். 

அவர்களுக்கு நம்மவர்கள் சிலர் விளங்கியும் விளங்காமலும்.. ஆதரவளிப்பதே எமது வள கபளீகரத்துக்கு நிரந்தரமாக வித்திடும்.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

அப்படி அவர்கள் செய்ய நினைத்த போது தற்செயலாக உங்கள் கருத்தை வாசித்து விட்டு " அட இப்படியும் ஒரு லாஜிக் இருக்கிறதா" என்று பல்டி அடித்து விட்டார்கள்.

அட அன்பான நேர்மையான நல்லவர்களான உங்க தந்தையர் நாடு சிறீலங்கா ஆட்சியாளரை நான் கெடுத்திட்டன் என்றுசொல்லுறீங்க. மன்னிச்சுக்குங்க.

அட அன்பான நேர்மையான நல்லவர்களான உங்க தந்தையர் நாடு சிறீலங்கா ஆட்சியாளரை நான் கெடுத்திட்டன் என்றுசொல்லுறீங்க. மன்னிச்சுக்குங்க.

நோ.....பிராப்ளம்.
 
பை தி பை... உங்க தந்தை நாடு எங்க தந்தை நாடுன்னு பிரிச்சு பேசாதீங்கோ. ஏன்னா... இந்த பிரிவு நிரந்தரம். லைஃப் பூரா நாடில்லாமல் அலையப்போறீங்கோ.
 
அட... நாளைக்கே நமக்கு முன்னாடி சிரிலாங்கால சிரிச்சிட்டு நிக்கிறீங்களோ... எல்லாம் அந்த அல்லாக்கே வெளிச்சம்.    :wub:
 
ஈழம் அன்றேல் அந்த மண் மிதியேன் என்ற உங்கள் லட்சிய வாக்குக்காக
 
ஐ ஆம்..
 
வெயிடிங்..

ஈழம் இன்றேல் அந்த மண்ணை மிதியேன் என்ற நான் எப்பங்க சொன்னேன். நான் சொல்லாததை நீங்களே உங்கள் கற்பனையில்  சொல்லி அதற்கு பதிலும் எழுதியிரூக்கிறீங்க.  நான் சிரிலங்காவிற்கு பல தடவை  போயிற்று தான் வந்தேங்க. ஏங்க சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுறீங்க.

இம்புட்டுதானா...  :)
 
நீங்க சொன்னீங்க என்னு எப்ப சொன்னேன்?
 
சம்பந்த சம்பந்தமில்லாமல் தொடங்கினதும் நீட்டினதும் யாராக்கும் ?  

வன்முறை வேண்டாம் என்று எழுதும்  நீங்களா.....?? :(  :(  :(

சுடுதலின் வலியை நாமே உணரவில்லையென்றால்.....?? :(  :(  :(

வன்முறை வேண்டாம் என்று அவர் எழுதுவது பாதிக்கபட்ட அடக்கபடும் மக்களுக்கு மட்டும். நீங்கள் நினைப்பது போல் அதிகார வர்க்கத்துக்கு அல்ல,. அதிகார வர்க்கம் சுடலாம். வன்முறை செய்ய்யலாம்.

ஈழம் இன்றேல் அந்த மண்ணை மிதியேன் என்ற நான் எப்பங்க சொன்னேன். நான் சொல்லாததை நீங்களே உங்கள் கற்பனையில்  சொல்லி அதற்கு பதிலும் எழுதியிரூக்கிறீங்க.  நான் சிரிலங்காவிற்கு பல தடவை  போயிற்று தான் வந்தேங்க. ஏங்க சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுறீங்க.

நான் சில தடவைதான் போய்ட்டு வந்தேங்க.
 
சிரிலங்கா எனக்கு தந்தை நாடுன்னு சொன்னீங்க..
 
ஆனா பலதடவை போய்ட்டு வந்த உங்களுக்கு சிரிலங்கா தாய் நாடுங்க..
 
அடி ஆத்தி...  :D  :D
  • கருத்துக்கள உறவுகள்

அதற்கான சட்ட உரிமை இந்திய கடற்படைக்கு உள்ளதா??

உள்ளதென்றே நினைக்கிறேன். :)

நான் சில தடவைதான் போய்ட்டு வந்தேங்க.

சிரிலங்கா எனக்கு தந்தை நாடுன்னு சொன்னீங்க..

ஆனா பலதடவை போய்ட்டு வந்த உங்களுக்கு சிரிலங்கா தாய் நாடுங்க..

அடி ஆத்தி... :D:D

எனது தாய் நாடு தமிழீழம். அது மீட்க முடியாத அளவிற்கு உங்க அபிமான சிரிலங்காவால் அடிமைப்படுத்த பட்டுட்டுதுங்க. அடி ஆத்தி உலகிற்கு தெரிந்த இந்த விடயம் உங்களுக்கு தெரியாம போனதேங்க?

எனது தாய் நாடு தமிழீழம். அது மீட்க முடியாத அளவிற்கு உங்க அபிமான சிரிலங்காவால் அடிமைப்படுத்த பட்டுட்டுதுங்க. அடி ஆத்தி உலகிற்கு தெரிந்த இந்த விடயம் உங்களுக்கு தெரியாம போனதேங்க?

அடிமைபட்ட உங்க தாய் நாட்டை மீட்கத்தானா பல தடவை சிரிலங்கா போய்ட்டு வந்தீங்க..   :D

முப்பது  வருட போரில் விளைந்து  கிடக்கும்  கடல்  வளத்தை  நோகாமல் ஆட்டை  போடுவதை  வன்மையா கண்டிக்க  வேணும் எது  எங்கள்  மீனவரின்  வாழ்வாதார பிரச்சினை ஆகவே  சுடுவதில் தவறு  இருப்பதா  தெரியவில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து மீனவர்களுக்கும் வட தமிழீழ மீனவர்களுக்கும் இடையே தொழில் தொடர்பாக பிணக்கு இருப்பது உண்மைதான். ட்ரோலர்களைக் கொண்டு தமிழக மீனவர்கள் வட தமிழீழக் கடல்களில் மீன்பிடியில் ஈடுபடுவதால் கடல்வளம் அழிக்கப்படுகிறது என்பதில் எந்த ஐய்யமும் இல்லை.

ஆனால் இந்தப் பிணக்கை இந்திய அரசும், இலங்கையரசும் கைய்யாளும் முறைதான் மிகவும் சந்தேகத்துக்குரியது. 

ஏனென்றால் இருபகுதியிலும் பாதிக்கப்படுபவர்கள் தமிழர்களே.

வட தமிழீழ மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையுடன் ஒப்பிடும்போது தமிழக மீனவர்கள் இலங்கை இந்திய அரசுகளால் அடைந்திருக்கும் அழிவும் அளவிடப் பட முடியாதது. இதுவரை 600 மீனவர்களை இலங்கையரசு கொன்றுதள்ளியிருக்கிறது. இதற்காக அது கூறும் காரணமான புலிகளுக்கு ஆயுதம் கடத்தினார்கள் என்பதை ஏற்றுகொள்ள முடியாது. புலிகள் இருக்கும்போது ஆயுதங்களை தமிழக மீனவர்கள் கடத்திவந்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏன் என்பதை ரணில்தான் கூறவேண்டும். ஆனால் அவ்வப்போது எரிபொருள, மருந்துப் பொருட்கள் என்று கொண்டுவந்து உதவியிருக்கிறார்கள்.

ஆனால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது இதற்காக அல்ல. மாறாக தமிழர்கள் என்கிற காரணத்துக்காக மட்டுமே.

இன்று வட தமிழீழ மக்களின் மீன்வளத்தைக் காப்பதற்காகத்தான் தாம் சுடவேண்டியிருக்கிறது என்று சப்பைக் கட்டுக் கட்டும் சிங்களப் பேரினவாதம் இதுவரையில் தன்னால் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழ் மக்களும் கூட அவர்களின் நலன்கருதியே கொல்லப்பட்டார்களா என்று கூறுவது நல்லது.

தமிழர்களைக் கொல்வதென்பது  , அவர்கள் பாக்கு நீரிணையின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் சிங்களத்தைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதில்லை. இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் சிங்களத்துக்குச் சமமான அளவில் ஈழத்தமிழர் அழிவில் பங்களிப்புச் செய்திருப்பதும், தமிழக மீனவர்களின் கொலையில் சிங்களத்தைப் பாதுகாக்க முனைவதும் கண்கூடு.

ஆக, தன்னால் செய்யப்பட்டு வருகிற தமிழக மீனவர் மீதான படுகொலைகளை சிங்களம் தமிழக ஈழ மீனவர்களுக்கிடையேயான பிணக்காகக் காட்டி இரு சகோதரர்களுக்குமிடையே தீராத பகையை வளர்த்துவிட துடிக்கிறது என்பதுதான் உண்மை.இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இதுதான் தேவையானது. தமிழகத்துக்கும், ஈழத்துக்குமிடையே நிரந்தரப் பகையுணர்வை வளர்த்துவிட்டால், இருபகுதியினரையும் அடக்கியாள்வது சுலம் என்று அவை கணக்குப் போடுகின்றன. 

ஈழப் போரட்டத்தை ஒற்றி தமிழகத்தில் வளர்ந்துவரும் தமிழ் இன உணர்வை அழிக்க இந்தப் பகை உதவும் என்று இந்திய மத்திய அரசு நினைக்க, தமிழகத்திலிருந்து ஈழத்தமிழருக்குச் சார்பான கோஷம் எழுவதை இந்தப் பகை தணித்துவிடும் என்று சிங்களப் பேரினவாதம் எதிர்பார்க்கிறது.

ஆக, இந்தப் பேட்டியும், கருத்துக்களும் முட்டாள்த்தனமாக ரணிலினால் சொல்லப்பட்டவை அல்ல. மாறாக மிகுந்த சூட்சுமத்துடன் முன்வைக்கப்பட்டவை. நாம் செய்வது அவரின் நோக்கத்தை உண்மையாக்க இந்தப் பிணக்கை ஊதிப் பெருப்பிப்பதுதான்.

இங்கே சுடுவதுதான் சரியென்று வாதாடும் கனவான்கள் ஒன்றில் நடப்பதைப் புரியாமல் எழுதுகிறார்கள், அல்லது தமிழகத்துக்கும் ஈழத்துக்குமிடையே நிரந்தரப் பகை வளர்வதை எதிர்பார்த்து எழுதுகிறார்கள். இவர்கள் இப்படிச் செய்வது ஒன்றில் புதிய சிங்களப் பேரினவாத அரசின் மேல் ஈர்க்கப்பட்டோ அல்லது புலிகளின் மேல் இவர்களுக்கு புதிதாகத் தோன்றியுள்ள காழ்ப்புணர்வினாலோ தான் என்பது புரிகிறது.

மீனவர் பிரச்சினைக்கு என்ன தீர்வென்றால், அது இலங்கையின் வட மாகாண அரசிற்கிடையிலும், தமிழக அரசிற்கிடையிலும், இருபக்க மீனவர்கள் முன்னிலையில் தீர்க்கப்படவேண்டிய விடயம். மாறாக தமிழனினத்தை இரு பக்கத்திலும் கருவருக்கத் துடிக்கும் இனக்கொலையாளிகளினால் அல்ல. 

Edited by ragunathan

அடிமைபட்ட உங்க தாய் நாட்டை மீட்கத்தானா பல தடவை சிரிலங்கா போய்ட்டு வந்தீங்க.. :D

ஐயோ உங்களுக்கு நக்கல் சார். சார் அந்தளவிற்கு எனக்கு talent இல்லைங்க. நான் ஒரு common man. எல்லா மக்களையும் போல சாதாரணமாக என் தாய் நாட்டை பார்க்க போனேனுங்க.
ரகுநாதன்,
 
மத்திய அரசின் நிலைப்பாடு இலங்கை கடல் எல்லையினுள் செல்லாதீர்கள் என்பது தான். மத்திய அரசிடம் இரண்டு தமிழர்களையும் பிரித்துவிடும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை. 600 மீனவர்கள் கொல்லப்பட்ட போதும் மீனவர்கள் மீது தான் மத்திய அரசின் குற்றம் சொல்கிறது.
 
ரணிலின் நேரடி தாக்குதல் தமிழர்களைப் பிரிப்பதை விட சிங்களம் மீதே தமிழகத்தின் கோபத்தை உருவாக்கும். உண்மையில் மீனவர் பிரச்சனை தொடர்வதை விட இப்படி ஏதாவது ஒரு முறையில் முற்றுப்பெறுவதே நல்லது. மீனவர் பிரச்சனை தொடரத் தொடரத் தான் தமிழர்களிடையே பிரிவினை வளரும்.
 
இவை எல்லாவற்றையும் விட வடபகுதி மீனவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை முக்கியமானது. 
 
உண்மையில் இரண்டு பகுதியையும் பிரித்து விடும் திட்டம் இருக்குமானால் ரணில் இப்படி சொல்லத்தேவையில்லை. பேசாமல் இருந்தால் போது மானது.
 
நன்றிகள் ரகுநாதன். நல்ல விளக்கமாக அறிவுபூர்வமாக சிந்தித்து சொல்லியிருக்கிறீங்கள். நீங்க சொன்ன கருத்தை தான் நானும் சொன்னேன். அதுக்கு இங்க நம்மவவ்களே அடிக்க வர்ராங்க.நக்கல் பண்ணுராங்க.

வன்முறை வேண்டாம் என்று எழுதும்  நீங்களா.....?? :(  :(  :(

சுடுதலின் வலியை நாமே உணரவில்லையென்றால்.....?? :(  :(  :(

மன்னிக்கவும்
 
ஆழ்மனதில் உள்ள தார்மீக கோபத்தின் விளவுதான் இது. இந்தியாவை அரவணைத்தால்தான் எமக்கு விடிவு என்று அறிவு சொன்னாலும் இந்தியாவின் துரோகங்களை மறுக்க மனம் விடுகுதில்லை. இந்த வெறுப்பின் வெளிப்பாடுதான் மீனவர்கள் மேலும் பாயந்து விட்டது.
 
என்னைப் பொறுத்தவரையில் பிறந்த இலங்கை, வாழும் நோர்வேக்குப் பின்னர் பிடித்த நாடு இந்தியாதான். ஆனால் எனக்கு அரசியல் ரீதியாக பிடிக்காத முதல்நாடும் இந்தியாவே.  சிறுவயதில் கிரிக்கெட்டில்கூட இந்தியாவிற்கு சார்பானவன். ஆனால் இப்போது இந்தியா தோற்பதையே மனம் விரும்புகின்றது.
 
வடுக்கள், ரணங்கள் அவ்வளவு சீக்கிரம் மாறாது. 
 
இங்கு இந்தியா செய்தது சரியா பிழையா எனும் வாதத்திற்குள் வரவில்லை. "சுட்டாலும் தப்பில்லை எமது வளம் எமக்கு வேண்டும்." என்று கருத்திட்டமைக்கான எனது மனம்பற்றிய சிறு விளக்கம் மட்டுமே.

வணக்கம் திரு.ஜீவன் சிவா இந்திய அரசிடம் மீது உங்களுக்கு உள்ள கோபம் நியாயமானதுதான்.ஆனால் நீங்கள் சுட சொன்னது அந்த அதிகார வர்க்கத்தை அல்ல. அப்பாவி தமிழக மீனவர்களை. தமிழக மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள பாரியவேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். நன்றி

... தமிழக மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் உள்ள பாரியவேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். நன்றி

தப்பை புரிந்து ஏற்றுக்கொண்டதால்தான் மேற்கூறிய பதிவில் "மன்னிக்கவும்" என முதல்வரியிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

தப்பை புரிந்து ஏற்றுக்கொண்டதால்தான் மேற்கூறிய பதிவில் "மன்னிக்கவும்" என முதல்வரியிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

மன்னிக்கவும் திரு ஜீவன் உங்களுக்காக அல்ல இதுபோன்ற கருத்தை உடைய மற்றயவர்களுக்கும் சுட்டிக்காட்டவே பதிலிட்டேன். சிறந்த கருத்தாளரான உங்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.