Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தில் காடுகளை தவிர ஏதும் எஞ்சி இருக்கவில்லை

Featured Replies

அது அப்போ

 

 

இது இப்போ

 

 

எமது தாயகம் சிங்களவனிடன் தோல்விகண்டு சிங்களத்தில் தேசிய கீதம் இசைப்பதை பார்த்து  கிழவிக்கு என்ன சந்தோசம்.

 

எல்லாளன் துட்ட கைமுனுவிடம் தோற்றபோதும், சங்கிலியன் போத்துகேயரிடம் தோற்ற போது கூட ஒரு கிழவி இருந்து அந்த காலத்தில் சந்தோசப்பட்டிருக்கும்.

 

ஏன் இராமாயண காலத்திலும் ஒரு கிழவி கூனி இருந்து சந்தோசபட்டதாம்.

  • Replies 62
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீடும்இகிணறும்,வேலியும்,பயன்தரு மரங்களுமாக இருந்த இடத்தை பற்றைக் காடுகளாகளாகவும்,பாழடைந்த கட்டிடங்களாகவும் மாற்றி குடுத்திருக்கிறார்கள். சொர்க்கமாக இருந்த இடம் நரகமாக மாறியிருக்கிறது. மக்களின் மனங்களும் அதுபோலவே. இருந்தாலும். சொந்தக் காணியின் சுகம் எங்கும் கிடைக்காது.இன்னும் ஒரு பத்து வருடத்தில் மீண்டும் சொர்க்கமாகும்.பாறை பிளந்து பயன் கொடுப்பான் என்னூரான்.மீண்டும் தொடங்கும் மிடுக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் குழு வளலாய்க்கு விஜயம் -
 
 
 
மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட வளலாய்ப்பகுதிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் , அமைச்சர்கள்  மற்றும்  உறுப்பினர்கள் விஜயம்  மேற்கொண்டுள்ளனர்.
IMG_8312.jpg
 
1990 ஆம் ஆண்டு சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய மக்கள்  25 ஆண்டுகளின்  பின்னர்  கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும்  தங்களுடைய சொந்த நிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.
IMG_8311.jpg
 
IMG_8310.jpg
 
சொந்த நிலம் விடுவிக்கப்பட்ட மகிழ்வு ஒருபக்கம்  இருந்தாலும் மறுபக்கம் தங்களுடைய காணி எல்லைகளைக் கண்டுபிடிக்க முடியாதவாறு பற்ரைக்காடாக காணப்படுகின்றது என்றும் வீடுகள்  அனைத்தும் தரைமட்டம் ஆக்கப்பட்ட நிலையிலும் உள்ளதால் மீள்குடியேறுவதில் பாரிய சிரமங்களை அப்பகுதி மக்கள்  கொண்டுள்ளனர். 
IMG_8313.jpg
 
IMG_8314.jpg
 
இந்த நிலையில் இன்று மாலை வளலாய்ப்பகுதிக்கு சென்ற வடக்கு முதலமைச்சர் ,  அமைச்சர்கள்  மற்றும் உறுப்பினர்களும்  நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன்  மக்களுடனும் கலந்துரையாடினர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=749133924717582483#sthash.o7cQWKxj.dpuf

 

Edited by பிழம்பு

இது ஒரு பழைய காணி பிரச்சனை

அவளும் கனடாவிற்கு போய்விட்டாள்.....

எவளவு கைவேலை செய்தேன் செய்கூலி வேண்டாமா?

என்று ஒருமுறை கேட்டு பார்க்கவேண்டும்.

அந்த காணி வளலாயில் எந்த பக்கம்?
 
எனக்கும் வளலாய் நல்ல பரிச்சயம். 
  • கருத்துக்கள உறவுகள்
பலாலி ஏர்போர்ட் ரோட்டில் ...
உங்களுக்கு நல்ல பரிச்சயம் என்றால் .... 
இதற்கு மேல் சொல்ல முடியாது. 

முடியாது இல்லை ...
கூடாது என்று எண்ணுகிறேன்!
  • கருத்துக்கள உறவுகள்

வளலாய் எதுவரைக்கும் விடுவிக்கப்பட்டுருக்கு?

பலாலி ரோட் வரைக்குமா? இருக்காதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு முன் கையில் சிவப்புப்புத்தகமும் கூட்டமும்...

புலிகள் காலத்தில் விடுகிறார்களில்லை

இப்பொ 6 வருடமா  சாதாரணநிலை வரல..

 

எப்ப செயல்.....??

 

விசுகர்! யார் விசைப்பலகை விண்ணர் என்று இப்போதாவது தெரிகின்றதா?   :D

 

பலாலி ஏர்போர்ட் ரோட்டில் ...
உங்களுக்கு நல்ல பரிச்சயம் என்றால் .... 
இதற்கு மேல் சொல்ல முடியாது. 

முடியாது இல்லை ...
கூடாது என்று எண்ணுகிறேன்!

 

நல்ல பரிச்சயம் என்று சொல்லமுடியாது.  எங்க  மாமா அங்கதான் கல்யாணம் முடிச்சவர் . சின்ன  வயதில் இரண்டு மூன்று  தடவைகள்  மாமா வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். அப்போ சிவா மச்சாள்  தன்  ஊரை சுற்றி காட்டினவா. ஒரு பக்கம் கடற்கரை. இன்னொரு பக்கம் வயலும் மேச்சல் தரவைகளும்.  மற்ற  பக்கம் பலாலி என நினைக்கிறன் . அழகான ஊர். என்  வயதுள்ளவர்கள் ஆடு, மாடு  மேய்க்க  மாலை வேளை செல்வார்கள். யாருமே டியூஷன் செல்வதை காணவில்லை. அவர்களை பார்த்து மிகவும் பொறமைபடுவேன்.
 
என் முதல் காதலும் அந்த ஊரில்தான் 
 
மொத்தமாக அந்த ஊரில் ஒரு பத்து நாள்தான் இருந்திருப்பேன். அனால் வாழ்வில் மரணத்திலும் மறக்கமுடியாத நாட்கள்.
 
அந்த ஊர் இப்போ விடுவிக்கபட்டிருக்கு  என அறிந்ததும்,  இரண்டு  மூன்று நாட்களாக அந்த ஊர் ஞாபகங்கள்  என்னை தொடர்ந்து துரத்தியபடி.

எனது அப்பாவின் சொந்த இடமும் வளலாய் தான். ஆனால் நாட்டு பிரச்ச்னை காரணமாக அங்கை கனகாலம் இருக்க முடியலை. அமைதியான அழகான ஊர். விவசாயம்தான் பிரதான தொழில். நானும் இனிதான் அங்கை போய் எங்கடை காணியை பார்க்கவேண்டும்.

 

யாருமே டியூஷன் செல்வதை காணவில்லை. அவர்களை பார்த்து மிகவும் பொறமைபடுவேன்.

 

உண்மை தேனி. அந்த காலத்தில் யாரும் டியூஷன் போவதில்லை. பள்ளிக்கூடத்தை நம்பித்தான் முழு படிப்பும், பள்ளிக்கூடம் முடிந்தபின் பெரும்பலோனோர் ஆடு மாடு மேய்க்க மற்றும் தோட்ட வேலை செய்ய போய்விடுவினம். ஆனாலும் எலோரும் நல்லா படித்தார்கள். 

அது ஒரு கனகாலம். மீண்டும் அந்தகாலம் வருவது சாத்தியம் இல்லை.  :(  :(

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல பரிச்சயம் என்று சொல்லமுடியாது.  எங்க  மாமா அங்கதான் கல்யாணம் முடிச்சவர் . சின்ன  வயதில் இரண்டு மூன்று  தடவைகள்  மாமா வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறேன். அப்போ சிவா மச்சாள்  தன்  ஊரை சுற்றி காட்டினவா. ஒரு பக்கம் கடற்கரை. இன்னொரு பக்கம் வயலும் மேச்சல் தரவைகளும்.  மற்ற  பக்கம் பலாலி என நினைக்கிறன் . அழகான ஊர். என்  வயதுள்ளவர்கள் ஆடு, மாடு  மேய்க்க  மாலை வேளை செல்வார்கள். யாருமே டியூஷன் செல்வதை காணவில்லை. அவர்களை பார்த்து மிகவும் பொறமைபடுவேன்.
 
என் முதல் காதலும் அந்த ஊரில்தான் 
 
மொத்தமாக அந்த ஊரில் ஒரு பத்து நாள்தான் இருந்திருப்பேன். அனால் வாழ்வில் மரணத்திலும் மறக்கமுடியாத நாட்கள்.
 
அந்த ஊர் இப்போ விடுவிக்கபட்டிருக்கு  என அறிந்ததும்,  இரண்டு  மூன்று நாட்களாக அந்த ஊர் ஞாபகங்கள்  என்னை தொடர்ந்து துரத்தியபடி.

 

அன்பிற்கும் ....
அழகிற்கும் ....
அளவில்லாத ஊர் !
  • கருத்துக்கள உறவுகள்

கோதாரில போவார் ஆமிக்காரர், 90ம் ஆண்டோட வளளாயை பூட்டீட்டாங்களே, இல்லாட்டி எனக்கும் ஒரு வள(மான)ளாய் காதல் கதை இருந்த்ஹிருக்குமே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நிலத்திற்கு மீண்டும் சென்று அந்த மண்ணில் கால் வைக்கும்போது ஏற்படும் உணர்வினை விபரிக்க முடியாது.
படங்களைப் பார்க்கும் போது அது தெரிகின்றது.

வளலாய் எதுவரைக்கும் விடுவிக்கப்பட்டுருக்கு?

பலாலி ரோட் வரைக்குமா? இருக்காதென நினைக்கிறேன்.

2011 கார்த்திகையில் ஒரு பகுதி விடுபட்டதாம். (40% குடியிருப்பு). இப்போ முழு குடியிருப்பும் விட்டாயிற்று. ஆனாலும் நிறைய விவசாய நிலங்கள் இப்பவும் விடுபடாமலேயே இருக்காம்.
 
வளலாய் பிள்ளையார் கோவிலில் இருந்து  மேற்காக ஒரு 300-400 மீற்றர் பலாலி வீதியில் முன்பே(2011) விட்டுவிட்டார்கள். இப்ப விடுபட்டது வளலாயின் வடக்கு/வட  மேற்கு  பக்கமாம்.

 

அன்பிற்கும் ....
அழகிற்கும் ....
அளவில்லாத ஊர் !

 

விருந்தோம்பலில் அவர்களை போல வேறொருவரையும்  பார்க்கவில்லை. அநேகம் எல்லா வீட்டிலும்  ஒருவர், இருவருக்கு எப்பவும் அதிகமாக சமைக்கும் பழக்கமுள்ள ஊர். அவர்கள் வீடு சென்றால், கட்டாயம் சாப்பாடு தந்துதான் அனுப்புவார்கள்.
 
இளம் பெண்கள் ஆண்களுக்கு சமமாக தோட்டங்களில் வேலை செய்ததை பார்த்திருக்கிறேன். 
 
மற்றயவர்களுக்கு உதவி செய்வதில் கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். 80 களின் ஆரம்பத்தில் கைவிட்டு எண்ணகூடியவர்களே வெளிநாடு சென்று , தம் நெருங்கிய உறவினர் அல்லாதோரையும் கூப்பிட்டார்கள். 90 களின் ஆரம்பத்தில் முக்கால்வாசி வளலாய் இளைஞர்கள்  வெளிநாடு  சென்றுவிட்டார்கள். 90 களின்  தொடக்கத்தில் மற்ற எந்த ஊர்களிலும் இந்த அளவுக்கு செல்லவில்லை.
 
அங்குள்ள பெண்களின் அழகு ஒரு தனி.  ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட ஒரு இரு  மரபணு ஊடுருவல் தான் அந்த அழகின் இரகசியம் என கதைப்போர் உண்டு.
 
ஒரு  வளலாய் பெண்ணின் அன்பை அனுபவித்த ஒருவர், அதற்கு  ஈடான அன்பை பின்னாளில் பெறுவாரா என்பது சந்தேகமே?

ஜனாதிபதி , பிரதமர்,சந்திரிக்கா அம்மையார் உள்ளிட்ட ஒரு உயர்மட்ட குழு தங்களின் வரும் யாழ் விஜயத்தில் வளலாயையும் சென்று பார்க்க உள்ளதாக செய்திகள் சொல்கின்றன. அரசியல் விளம்பரம் அவர்களின் நோக்கமாக இருக்கலாம். ஆனாலும் அவர்களின் வருகைக்கு பின் நிறைய அரச உதவிகள் மீள் குடியேறுபவர்களுக்கு கிடைக்கலாம்.

சொந்த நிலத்திற்கு மீண்டும் சென்று அந்த மண்ணில் கால் வைக்கும்போது ஏற்படும் உணர்வினை விபரிக்க முடியாது.

படங்களைப் பார்க்கும் போது அது தெரிகின்றது.

30 வருடங்களுக்கு முன்பு கனடா சென்று , இப்போ தம் வீடு விடுபட்டது என்றதும் அடுத்த நாளே  அங்கு புறப்பட்டு சென்றவர் சொன்னது இது:
 
'' என் அம்மாவின் சமையல் வாசம் இப்பவும்  அந்த வளவுக்குள் நுழைய உணர்ந்தேன் . கூரை இல்லாத வீட்டில் ஒரு நாள் பின்னேரம்  படுத்தேன்(வெறும் நிலத்தில்). கொஞ்ச ஆழ்ந்த தூக்கத்தின்  பின்  நான் எழும்பியபோது என் கடந்த 30 வருட வாழ்வையும் மறந்துவிட்டேன் . என் கடைசி தங்கச்சி  கிணத்தடியில் அண்ணா, அண்ணா என கூப்பிடும் சத்தம் கேட்டது''
 
இதை சொல்லும்போது அவர் அழுதுவிட்டார்.

தேனி வாசிக்க வாசிக்க ஒரே பீலிங்கா இருக்குறது
வருகுற கிழமை அங்கு செல்லவுள்ளேன்

Edited by Surveyor

தேனி வாசிக்க வாசிக்க ஒரே பீலிங்கா இருக்குறது

வருகுற கிழமை அங்கு செல்லவுள்ளேன்

உங்கள் பார்வையில் தற்போதைய வளலாய் பற்றி எழுதுங்கள். புகைபடங்களையும் இணையுங்கள்.

கட்டாயம்

கோதாரில போவார் ஆமிக்காரர், 90ம் ஆண்டோட வளளாயை பூட்டீட்டாங்களே, இல்லாட்டி எனக்கும் ஒரு வள(மான)ளாய் காதல் கதை இருந்த்ஹிருக்குமே.

உங்களுக்கும் ஒரு காதல் அந்த மண்ணில் அரும்பியிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாள் முன் ஒரு போராளியுடன் கதைக்கும் பொது அவர் சொன்னது, வளலாய் பல போராளிகளுக்கு பரீட்சயமான ஒரு இடம் என்று. 1990 காலப்பகுதியில் வளலாய் இராணுவத்தால் ஆக்கிரமிக்கபட்டாலும் இந்த கிராமம் ஒரு சூனிய பிரதேசமாக தான் பேணப்பட்டது. இங்கு இராணுவம் நிலையாக ஒரு தளமும் அமைக்கவில்லை. இருந்த எல்லா கட்டிடங்களையும் இடித்து போட்டு வெட்ட வெளி ஆக்கி போட்டு, கண்ணியை புதைத்து போட்டு, இடைக்கிடை வந்து வந்து போவானாம். இங்கிருந்து பார்த்தால் பலாலியில் ஹெலி இறங்குவது கூட தெரியுமாம். போராளிகளின் உட்தள வேவுக்கான ஊடுருவும் பகுதியாகவும் இருந்ததாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லைத் தேனி, காதல் அரும்பும் பராயத்தில் நான் ஊரில் இல்லை. பிரச்சினை இல்லாட்டி அப்படி ஒரு வாய்ப்பு வந்திருக்கலாம் என்ற நப்பாசைதான்.

சேவையர்- வளளாயை நல்லா சேவே செய்து ஒரு அறிக்கை போடுங்கோ. படங்கள் எடுக்கமுடிந்தால் விசேசம்.

யுத்தம் தந்த பரிசு .

 

யுத்தத்தை ஆதரித்தவர்களும் அதற்கு பணம் கொடுத்தவர்களுக்கும் சமர்ப்பணம் .

ஐயா அறிவாளி எப்பவுமே இப்படிதான் .....
எய்தவன் இருக்க அம்பினை நோவானேன் ......
 
உங்கள் வீட்டுக்குள் வந்து உங்கள் முன்னால் சகோதரிகளை பாலியல் வல்லுறவு செய்வார்கள் ... ஆனால் நீங்கள் சொல்வீர்கள் அமைதியாக இருப்போம் என்று .... 
 
நல்ல தெளிவு ....

எனது நண்பன் ஒருவன் அனுப்பிய, வளலாய் இல் எடுத்த புகைபடங்கள் உள்ளன. அனால் இங்கை போட முடியாது உள்ளது. யாராவது எப்படி புகைப்படம் இணைப்பது என்று கூற முடியுமா?

எனது நண்பன் ஒருவன் அனுப்பிய, வளலாய் இல் எடுத்த புகைபடங்கள் உள்ளன. அனால் இங்கை போட முடியாது உள்ளது. யாராவது எப்படி புகைப்படம் இணைப்பது என்று கூற முடியுமா?

 

புகைப்படங்களை யாழ் இணையத்தில் இணைப்பது.எப்படி?

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148661-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.