Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லீ குவானின் மரணத்தில் உண்மையில்லை - சிங்கப்பூர் அரசு

Featured Replies

article_1426689597-lee.jpg

 

சிங்கப்பூர் என்ற நாடு உருவாக காரணமாக அமைந்தவரும் சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ, தனது 91ஆவது வயதில் காலமானார்.

 

http://www.tamilmirror.lk/142084#sthash.dVW9b4Wy.dpuf

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

தொலைநோக்கு மிக்கதொரு தலைவராவிளங்கிய சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் லீ குவான் யூ   அவர்கள் ஆத்மா சாந்தியடைவதோடு சிங்கப்பூர் மக்களோடு இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றோம்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

லீ என்னைக் கவர்ந்த ஓர் உலகத் தலைவர்.

படித்தவன் கையில் ஒரு நாட்டைக்கொடுத்தால் அதை எப்படி சிறப்பாக மாற்றுவான் என்பதற்கு லீ சிறந்த முன்னுதாரணம் ஆவார்!

இவரது மரணச் செய்தி ஒரு வதந்தி என்று சிங்கபூர் அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான செய்தியை முதலில் நீக்கியும் இருந்தோம் :blink:

 

http://www.cnn.com/2015/03/18/world/singapore-lee-kuan-yew/

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த தலைவர்.. மலேசியாவில் இருந்து தங்களைப் பிரித்துவிட வேண்டாம் என்று மன்றாடியவர்.. ஆனாலும் மலேசியா பிரித்து அனுப்பிவிட்டது.. அதன்பிறகு சிங்கப்பூர் இவரின் தலைமையின்கீழ் பெரும் வளர்ச்சி கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தீர்க்கதரிசி!

 

ஒரு நாள் சிங்கப்பூரை 'சிலோன்' மாதிரி மாற்றிக்காட்டுவேன் என்று உறுதியளித்தார்!

 

இவரது தலைமையின் கீழ் சிங்கப்பூர், சேவைப் பொருளாதாரத்தில் ( Service Industry) அபரிதமான வளர்ச்சி கண்டது!

 

ஆனால் இன்று... சிங்கப்பூரை  'சிறி லங்கா' அண்ணார்ந்து பார்க்கவே வேண்டிய நிலை! :o

 

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இயற்கை எய்தவில்லை. கடும் நோய் வாய்ப்பட்டுள்ளார் என்பது தான் அரசின் அறிவிப்பு.

 

உலகில் நெருக்கடிகால தலைவர்களில் சிறந்த தலைவர்களில் ஒருவராக.. லீ குவான் யூ பார்க்கப்படுகிறார்.

 

தலைவர்களை படிப்பு மட்டும் உருவாக்குவதில்லை.. தலைவர்கள் பிறக்கிறார்கள்.. தலைமைத்துவப் பண்போடு. 

 

சேர்ச்சில் போர்க்கால தலைமைத்துவத்துக்கு சிறந்த தலைவர்.. அவரே சமாதான காலத்துக்கு பொருத்தமற்றவர். லீ குவான் யூ.. நெருக்கடிகால நிலைமைகளையும்.. வளர்ச்சிமிக்க நிலைமைகளாக மாற்றிக் காட்டிய நல்ல தலைவர். 

 

எங்கள் தேசிய தலைவரும் கூட. நல்ல போர்க்காலத் தலைவர். முடியாது என்று நினைத்த தமிழீழத்தை முடியும் என்று சாத்தியப்படுத்திக் காட்டிய தலைவர். அவரின் பலத்துக்கு மிஞ்சிய துரோகங்கள்.. நெருக்கடிகள்.. மத்தியிலும்.  :icon_idea:

 

Singapore's founding father Lee Kuan Yew 'critically ill'

 

http://www.bbc.co.uk/news/world-asia-31936674


ஒரு தீர்க்கதரிசி!

 

ஒரு நாள் சிங்கப்பூரை 'சிலோன்' மாதிரி மாற்றிக்காட்டுவேன் என்று உறுதியளித்தார்!

 

இவரது தலைமையின் கீழ் சிங்கப்பூர், சேவைப் பொருளாதாரத்தில் ( Service Industry) அபரிதமான வளர்ச்சி கண்டது!

 

ஆனால் இன்று... சிங்கப்பூரை  'சிறி லங்கா' அண்ணார்ந்து பார்க்கவே வேண்டிய நிலை! :o

 

சிறீ என்ற சிங்கள இனவாதத் திணிப்பை தவிர்த்திருந்து.. சிலோனாகவே இருந்திருந்தால்.. ஒருவேளை சிங்கப்பூரை விட சிலோன் முன்னேறி இருக்க முடியும். சிங்கப்பூரில் தமிழும் ஒரு தேசிய மொழி. தமிழர்களின் உழைப்பும் முயற்சியும் அங்கு மதிக்கப்படுகிறது. சொறிலங்காவில்.. தமிழும் தமிழரும் அழிக்கப்படுகிறார்கள். அதுதான் வித்தியாசம். 

 

சிலோனை அழித்தது.. சிங்களவர்களின்.. சிலோன் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற பேரினவாத வெறி. அது சிறீலங்காவாகி.. இன்று சொறிலங்காவாக நிற்கிறது.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

1977´ல் இலங்கையில் இனக்கலவரம் நடந்த போது.....
தமிழர்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து, மிகவும் மனம் வருந்தி...  "இலங்கை 30 ஆண்டுகள், பின் நோக்கி தள்ளப் பட்டுள்ளதாக கூறினார்"
எவ்வளவு தீர்க்க தரிசனமான வசனம். இவர் தமிழர்கள் மேல்.... ஒரு வித அக்கறையுடன், இருந்தததை... அவரது செயல்கள் மூலம் அறிய முடிகின்றது.

  • தொடங்கியவர்
லீ குவானின் மரணத்தில் உண்மையில்லை என்கிறது சிங்கப்பூர் அரசு -
 
சிங்கப்பூரின் தந்தையும் அந்நாட்டின் முதலாவது பிரதமருமான் லீ குவான் யூவின் மரண செய்தியை அந்நாட்டின் அரசாங்கம் மறுத்துள்ளது. லீ குவான் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அரசாங்கம் தெரவித்ததுடன் தவறான செய்தியை வெளியிட்ட இணையத்தளத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பணித்துள்ளது. -
 
 
 

Edited by Athavan CH

ஆமாம் இது தவறான செய்தி , இன்னும் அவர்சரபிரிவில் உள்ளார் . நலம் பெற்று வரவேண்டும் தேசத்தின் தந்தையே .இவ்வாண்டு சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டு . உருவாக்கிய பிதாமகன் நலத்துடன் அதனை கண்டு ஆனந்தமடைய வேண்டும் .உலகின் மிக சக்தி மிக்க தலைவர் . 


இந்த தலைப்பை மாற்றுங்கள் .... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.