Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வரும் விமானத்துறையில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை வடக்கு மாகாணம் யாழ்ப்பாணத்தில் விமானத்துறை கல்வி பயின்றுவரும் மாணவ மாணவிகளை புதன் கிழமை (18-ம் தேதி) இந்திய துணைத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினார், இந்தியத் துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் அவர்கள். விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக இந்தியா செல்வதையடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமைந்துள்ள ஏஞ்சல் சர்வதேசப் பள்ளியில் (Angel International School) விமானத்துறை கல்வி மற்றும் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள், விமான நிலையங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு, யாழ்ப்பாணத்தில் கிடையாது. காரணம், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம் இன்னும் முழுமையாக சிவிலியன் பாவனைக்கு வரவில்லை.

30 ஆண்டுகால யுத்தம் காரணமாக, இலங்கையின் வடக்கு பகுதியில் சிவில் விமானத்துறை வளர்ச்சி பெறாத நிலையில், தற்போது விமானத்துறை பயிற்சி பெறும் மாணவ மாணவிகளில் இரண்டு பேரை தவிர, வேறு யாரும் தமது வாழ்க்கையில் ஒருதடவைகூட விமானத்தில் ஏறியதில்லை. இதையடுத்து, இவர்களுக்கு விமானத்துறை கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகளின் கல்விச் சுற்றுலாவுக்கு, இந்திய மத்திய அரசின் பங்களிப்பாக, கொச்சின் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் ஏற்பாடுகளை செய்துவருகிறார், இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் அவர்கள்.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், விமானத்துறையில் பயிற்சிபெறும் தமிழ் மாணவ மாணவிகளிடம் பேசிய அவர், அவர்களது கல்விச் சுற்றுலாவில் பங்களிப்பு செய்வதில், இந்திய மத்திய அரசு பெரு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். 

“யாழ்ப்பாணத்தில் விமானத்துறை கல்வி, மற்றும் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு தேவையான எந்த உதவியையும் நாம் செய்ய தயாராகவுள்ளோம்” என தெரிவித்துள்ள இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் அவர்கள், “யாழ்ப்பாணத்தில் உங்களது பயிற்சி வகுப்புகளை நேரில் வந்து பார்க்க மிக்க ஆவலுடன் உள்ளேன்” எனவும் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் சென்றடையும் மாணவ, மாணவிகள், கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் (CIAL - Cochin International Airport Limited) இயங்குமுறை, வெவ்வேறு செயல்பாடுகள், விமானத் தரைக்கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை பார்வையிடுவதுடன், அங்குள்ள பயிற்சிக்கூடம் ஏவியேஷன் ஆகாடமியையும் பார்வையிட இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் ஏற்பாடு செய்துவருகிறார்.

அத்துடன் கொச்சின் விமானநிலையத்தில் இந்திய தேசிய விமான சேவை எயார் இந்தியாவின் (Air India) இயங்குமுறைகளையும் இலங்கை மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்கிறது. 

இதேபோல இந்த மாணவ, மாணவிகள் இலங்கை திரும்பும்போது சென்னை விமான நிலையத்திலும் அறிமுக சுற்றுலா (Familiarization FAM Tour) மேற்கொள்வதற்கும் இந்திய துணைத்தூதர் திரு. ஏ.நடராஜன் ஏற்பாடு செய்துவருகிறார்.

19-1426764652-indian-envoy-meets-jaffna-

19-1426764672-indian-envoy-meets-jaffna-

19-1426764643-indian-envoy-meets-jaffna-

19-1426764682-indian-envoy-meets-jaffna-

19-1426764692-indian-envoy-meets-jaffna-

19-1426764713-indian-envoy-meets-jaffna-

19-1426764662-indian-envoy-meets-jaffna-

செய்தி முலம்- http://tamil.oneindia.com/news/srilanka/indian-envoy-meets-jaffna-students-at-the-consulate-222958.html

Edited by sabesan36

  • Replies 124
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒரு பயிற்சி நெறியை.. போர் காலத்தில்.. வட இலங்கை.. தொழில்நுட்பக் கல்லூரி என்ற தனியார் கல்வி நிறுவனம் நடத்தியது ஞாபகம். விட்டால்.. இந்தியா தான் இப்ப எல்லாத்தையும் ஈழத்தமிழருக்கு புதிசா காட்டுது என்று கதை அளப்பாங்க போலிருக்குது.  :icon_idea:  :lol:

போர் காலத்தில் அழகுக் கலை..ஹோட்டல் முகாமைத்துவம்.. நவீன் கலைகள்.. எல்லாமே போதிக்கப்பட்டன. இலத்திரனியல்.. இசைக்கருவிகள் பாவனையும் போதிக்கப்பட்டன. கணணிக் கல்வியும் போதிக்கப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் அதுவும் மின்சாரம்.. எரிபொருள் தடை சிங்களத்தால் போடப்பட்டிருந்த காலத்திலும் கூட. மண்ணெய்யில் ஜெனரேட்டர்கள் இயக்கி படிப்பித்தார்கள்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்!
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.

எனக்கு இது ஒரு அரசியல் சித்து விளையாட்டு மாதிரி தெரிகிறது...
அப்படி ஒன்றும் இதில் இல்லையா??

இந்தியாவிற்கு சம்மந்தமில்லாத தனியார் பாடசாலயில் ...
ஏன் இந்திய துணை தூதர் தூது விடுகிறார்.

இனிமேல் எல்லாமே நாங்கதான் என்று காட்டுவதற்குத்தான்.. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்!

வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.

எனக்கு இது ஒரு அரசியல் சித்து விளையாட்டு மாதிரி தெரிகிறது...

அப்படி ஒன்றும் இதில் இல்லையா??

இந்தியாவிற்கு சம்மந்தமில்லாத தனியார் பாடசாலயில் ...

ஏன் இந்திய துணை தூதர் தூது விடுகிறார்.

மருதங்கேணி,

விமான நிலையத்தை சுற்றிப் பார்த்து, பயில்வதற்கு Airport Authority Approval & Security Clearance தேவை. கொச்சின், சென்னை விமான நிலையங்களில் அனுமதி  பெற இந்தியத் தூதரகம் நாடப்பட்டது.

கொழும்பு விமான நிலைய அனுமதி பெற, அமைச்சர் அர்ஜூணா ரணதுங்கவிடம் அடுத்த வாரம் அப்பாயின்ட்மென்ட் பெறப்பட்டுள்ளது.

இலங்கை அனுமதிக்கு முன், இந்திய அனுமதி கிடைத்துவிட்டது.  அவ்வளவுதான் விஷயம்.

பயண அனுசரணை, ஈழத் தமிழர் நிறுவனமான லெபாரா ஃபவுன்டேஷன்.

இந்தியாவில் தங்குமிட ஏற்பாடுகளுக்கு நம்மவர்களிடம் ஸ்பான்சர் பெற முடியவில்லை. இந்திய மத்திய அரசிடம் உதவி கோரப்பட்டுள்ளது. உதவுவதாக கூறியுள்ளனர். மாணவர்களிடம் இந்தியாவில் இடவசதி ஏற்பாடு செய்ய பணவசதி கிடையாது.

இந்திய மீடியாவில் கவரேஜ் அதிகம் கொடுக்கிறார்கள். அதைவிட அரசியல் ஏதுமில்லை.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேசன்!

எல்லா பக்கத்தாலையும் அடி வாங்கியதால்....
எதை பார்த்தாலும் ஒரு பயம்.

மாணவர்கள் முன்னேற எல்லா பக்கத்தாலையும் போவதுதான் நன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சபேசன்!

எல்லா பக்கத்தாலையும் அடி வாங்கியதால்....

எதை பார்த்தாலும் ஒரு பயம்.

மாணவர்கள் முன்னேற எல்லா பக்கத்தாலையும் போவதுதான் நன்று.

கொச்சின் விமானநிலையம் தேர்ந்தெடுக்கப்பட காரணம், அங்கு இந்திய அரசின் ஏவியேஷன் ஆகாடமி உள்ளது. அதில் சில மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கேட்டு பார்க்கலாம்.

சென்னையில் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம், இரு மாணவர்களுக்கு Bsc Aviation படிப்புக்கு ஸ்காலர்ஷிப் தர சம்மதித்துள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்....

வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்,

ஆனால் ஒரு சில கேள்விகள்,

இக்கல்லூரியின் நிர்வாகம் யாருடையது?

இதற்கான கல்வியூட்டல் வளங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன (curiculum)?

படிப்பின்பின்பான தராதரப்பத்திரம் என்ன?

இவர்களது கல்வியூட்டல் சர்வதேச தர நிர்ணயத்துடன் இடம்பெறுகின்றதா?

இக்கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களது தரம் என்ன?

யாழ் குடாநாட்டில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணை கலந்ததுக்கு ஆக்கபூர்வமான தொழில்நுட்ப உதவி எதையுமே வழங்காத இந்தியாவும் அதன் யாழ் குடாநாட்டில் இயங்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகமும் எதற்காக இக்கல்லூரியுடன் இணைந்து வேலை செய்கின்றது?

இந்திய மாநிலங்களது தலை நகரங்களிலெல்லாம் கடைவிரிக்கப்பட்ட கல்வி வியாபாரம் குடாநாட்டிலும் காலூன்றிவிட்டதா?

இலங்கை அரசது கல்விச்சேவையினது முழுமையான அங்கீகாரம் இக்கல்வி நிறுவனத்துக்கு உண்டா?

ஈகல்லூரி சர்வதேச அளவில் வேறு ஏதாவது தரம்வாந்த இது தொடர்பான கல்விநிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதா?

அண்மையில் மேல்மருவத்தூர் அம்மன் கோவிலின் ஆலைய நிர்வாகத்தினர் பல்மருத்துவத்திற்கான கல்லூரி ஒன்றைத் தொடங்குவதற்காக பங்காரு அடிகளாரது மகனும் மருமகனும் ஐந்து கோடி ரூபாய்களை முதல் தவணயாக லஞ்சமாகக் கொடுக்கும்போது கைது செய்யப்பட்டமை தெரிந்ததே காரணம ஒரு கல்லூரி அமைவதென்றால் மத்திய அரசினது வழிகாட்டல் குறிப்பேடுகளது பரிந்துரையை முழுமையாகக் கடைப்பிடிக்கவேண்டும் அது எதுவுமே இல்லாது அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாது பல் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற லஞ்சத்தை மூலதனமாகப் பாவிக்க முற்பட்டமையே.

வட இலங்கை தனியார் மருத்துவக்கல்லூரி, சென் ஜோன்ஸ் அக்கடமியினது தனியார் தொழில் நுட்பக்கல்லூரி இவைகளது சரித்திரத்தை நாம் அறிந்திருக்கிறோம்.

Humedica என்ற ஜேர்மன் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகம்.  http://www.humedica.org/index_eng.html

பிரிட்டிஷ் G,C,E (O/L), (A/L) பாடத்திட்டம். இலங்கை G,C,E (O/L), (A/L) பரீட்சையும் எடுக்கலாம். பிரிட்டிஷ் கவுன்சிலால் மேற்பார்வையாளர்கள் மானிப்பாய்க்கு அனுப்பப்பட்டு பரீட்சைகள் பள்ளியிலேயே நடத்தப்படுகின்றன.

3 வயதில் இருந்து  (A/L)  வரை உள்ளது.

Post Secondary கல்வி ஏவியேஷன் உள்ளது. இது சுவிஸ் பரீட்சை, பாடத்திட்டம். சான்றிதழ் கொடுப்பது IATA. 

Airport Operations – Basic Level from IATA (International Air Transport Association) பரீட்சை கொழும்பில் எழுத வேண்டும். உலகெங்கும் ஒரே நேரத்தில் நடக்கும் பரீட்சை. உலக விமான நிறுவனங்கள் அனைத்தும் IATA அமைப்பின் உறுப்பினர்கள். 

சான்றிதழ் கொடுப்பது - IATA Training and Development 33, Route de l’Aéroport, P.O. Box 416 1215 Geneva 15 Airport, Switzerland

பள்ளியை பற்றி தெரிய கீழேயுள்ள வீடியோ பார்க்கவும். வெளிநாடுகளில் இருந்து குறுகிய காலத்துக்கு (1 வருடம்) வந்து சேவை அடிப்படையில் (ஊதியம் இல்லாது) பயிற்றுவித்துவிட்டு செல்லும் ஆசிரியர்களும் உண்டு.

மேலதிக விபரங்களுக்கு நேரில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும். Tel: 0094 21 2255 628. தற்போதைய அதிபர், Jaffna College  முன்னாள் அதிபர் Dr. Noel A.Vimalendran.

Edited by sabesan36

இந்த படிப்பானது Pilot க் கான படிப்பா அல்லது cabin crew க் கான படிப்பா அல்லது airport ல கொன்றோல் ரூம்ல வேலை செய்வதற்கான படிப்பா? எனக்கு விமான துறை சமந்தமா ஒண்டும் தெரியாது அதுதான் சும்மா ஒரு அறிவுக்கு கேட்னான. மற்றபடி மேலும் முன்னேற அந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்தக்  கல்வி நிறுவனம் ஒரு கிறித்துவ மத மாற்றும் நிறுவனம். இதற்கு நிதி பெறப்படுவது ஜீர்மனியில் இருக்கும் ஒரு மதத் தொண்டு நிறுவனம். அதன் நோக்கம் கல்வியின்  மூலம் மதம் மாற்றுவதே.
 
இன் நிறுவனத்துடன் தொடர்பு பட்டோர் மேலும்அங்கு  பயிற்றுவித்த ஆசிரியர் ஒருவர் என்போரின் தகவல்களின் அடிப்படையிலீயே இந்தனை எழுதி உள்ளேன். முன்னர் இவர்கள் டக்கிளசின் உதவியுடன் இயங்கினர். இப்போது ஆட்சி மாற்றத்துடன் இந்தியத் தூதுவருடன் ஒட்டி விட்டனர் போல்   உள்ளது. மேலும் இவர்களின் பயிற்சி என்பது வெறும் கிரௌண்ட் ஹன்ட்லிங் அண்ட் டிக்கட்டிங் மட்டுமே. இது பெரிய தொழில் நுட்பம் சார்ந்த படிப்பும் அல்ல. பெரிய படம் காட்டி மேலும் மத மாற்றம் செய்வதே இவர்களின் நோக்கம்.
      
http://www.hodfamily.org/amultinationalfamily.htm

Multinational Family in Christ

House of Daniels (HOD) is a multinational family in Christ.  The family consists of the   Thevaranjan family and the international students they host in their home. For these students and their friends who are living away from their homes, the House of Daniels become a home away from home. The life style at the House of Daniels is centered on the person of Jesus Christ and the principles of loving God with all of our hearts and loving our neighbor as ourselves.    

The Thevaranjan family at HOD
Alex and Ranjana Thevaranjan, U.S. citizens with a Sri Lankan descent, are the parents of this multinational family in Christ.  Alex Thevaranjan is an accounting professor at the Martin J. Whitman School of Management at the Syracuse University.  Ranjana Thevaranjan is a graduate of the Maxwell School of Citizenship and Public Affairs.

http://bcgr.gov.lk/news.php?id=109

The Certificate awarding ceremony of this course was graced by District Secretary Jaffna, Ms Emelda Sukumar, Commissioner General Rehabilitation Major General Chandana Rajaguru, , Other invitees included, Dr. Alex Thevaranjan ( Associate Professor, Syracuse University, NY), 

7d72cdc5e05130431a0e08c73dfa6fe5.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்  கல்வி நிறுவனம் ஒரு கிறித்துவ மத மாற்றும் நிறுவனம். இதற்கு நிதி பெறப்படுவது ஜீர்மனியில் இருக்கும் ஒரு மதத் தொண்டு நிறுவனம். அதன் நோக்கம் கல்வியின்  மூலம் மதம் மாற்றுவதே.
 
இன் நிறுவனத்துடன் தொடர்பு பட்டோர் மேலும்அங்கு  பயிற்றுவித்த ஆசிரியர் ஒருவர் என்போரின் தகவல்களின் அடிப்படையிலீயே இந்தனை எழுதி உள்ளேன். முன்னர் இவர்கள் டக்கிளசின் உதவியுடன் இயங்கினர். இப்போது ஆட்சி மாற்றத்துடன் இந்தியத் தூதுவருடன் ஒட்டி விட்டனர் போல்   உள்ளது. மேலும் இவர்களின் பயிற்சி என்பது வெறும் கிரௌண்ட் ஹன்ட்லிங் அண்ட் டிக்கட்டிங் மட்டுமே. இது பெரிய தொழில் நுட்பம் சார்ந்த படிப்பும் அல்ல. பெரிய படம் காட்டி மேலும் மத மாற்றம் செய்வதே இவர்களின் நோக்கம்.

என்ன கோதாரி  என்றாலும்

பிடித்துக்கொண்டு

பயன்படுத்திக்கொண்டு

தமிழன் நிமிரட்டும்.........

நிமிரணும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே படித்து புரிந்து கொள்ளவும்-

இங்கு ‘மதம் மாற்றும்’ ஜேர்மன் நிறுவனம் என்று கூறப்படும் நிறுவனத்தின் இணையதள லிங்க்-

http://www.humedica.org/index_eng.html

இந்த படிப்பு பற்றிய முழுமையான விபரத்துக்கான IATA  லிங்க்-

https://www.iata.org/training/courses/Documents/apt-ops-2nd-toc.pdf

“இந்து மத கட்சி என அறியப்பட்ட பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசும், மானிப்பாயில் மதமாற்றம் செய்வதாக கூறப்படும் கிருஸ்துவ பள்ளியும் இணைந்து வழங்கும் கூட்டுச் சதி”  லாஜிக் சூப்பர்!

அதுவும் சரிதான். நாளைக்கே பலாலி விமான நிலையம் இயங்க தொடங்கினால், வேலை செய்ய கொழும்பிலிருந்து ஆட்களை கொண்டு வரலாம் அல்லவா?

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு பலாலி விமான நிலையத்தை திறந்து உவையை தான் வேலை செய்ய விட போறாங்கள். சும்மா காமடி பண்ணாம போங்கையா.

திருத்தம் - பண்ணாதீங்க சார்

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்கு பலாலி விமான நிலையத்தை திறந்து உவையை தான் வேலை செய்ய விட போறாங்கள். சும்மா காமடி பண்ணாம போங்கையா.

அட, அதுதானே.. இதோ, போயிடுறம்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அட, அதுதானே.. இதோ, போயிடுறம்.

உங்களை காமடி பண்ண வேண்டாம் என பொருள்படவே எழுதினேன்.

நீங்களே படித்து புரிந்து கொள்ளவும்-

இங்கு ‘மதம் மாற்றும்’ ஜேர்மன் நிறுவனம் என்று கூறப்படும் நிறுவனத்தின் இணையதள லிங்க்-

http://www.humedica.org/index_eng.html

இந்த படிப்பு பற்றிய முழுமையான விபரத்துக்கான IATA  லிங்க்-

https://www.iata.org/training/courses/Documents/apt-ops-2nd-toc.pdf

“இந்து மத கட்சி என அறியப்பட்ட பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசும், மானிப்பாயில் மதமாற்றம் செய்வதாக கூறப்படும் கிருஸ்துவ பள்ளியும் இணைந்து வழங்கும் கூட்டுச் சதி”  லாஜிக் சூப்பர்!

அதுவும் சரிதான். நாளைக்கே பலாலி விமான நிலையம் இயங்க தொடங்கினால், வேலை செய்ய கொழும்பிலிருந்து ஆட்களை கொண்டு வரலாம் அல்லவா?

Understanding ourselves as a kind of humedica-family operating on international grounds, as a team friendly bonded, we act in accordance with affiliated values, visions and strategic goals for our work on behalf of people in need. Additionally, as a Christian, but interdenominational aid organization, we rely on God's guidance, His love, His protection and His blessing on all our activities in general and our lives in particular.

Our Core Values

1. We regard humedica as an organisation that believes in God’s friendly providence and trusts in His guidance. Our institutional acting and behaviour shall be orientated towards this positive relationship to God.

2. It is important to us, that - being a Christian organisation - we offer Christians as well as non-Christians a platform to help people in need.

from their website.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

In God We Trust

இது அமெரிக்க டெலர் நோட்டில் எழுதியிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்  கல்வி நிறுவனம் ஒரு கிறித்துவ மத மாற்றும் நிறுவனம். இதற்கு நிதி பெறப்படுவது ஜீர்மனியில் இருக்கும் ஒரு மதத் தொண்டு நிறுவனம். அதன் நோக்கம் கல்வியின்  மூலம் மதம் மாற்றுவதே.

இன் நிறுவனத்துடன் தொடர்பு பட்டோர் மேலும்அங்கு  பயிற்றுவித்த ஆசிரியர் ஒருவர் என்போரின் தகவல்களின் அடிப்படையிலீயே இந்தனை எழுதி உள்ளேன். முன்னர் இவர்கள் டக்கிளசின் உதவியுடன் இயங்கினர். இப்போது ஆட்சி மாற்றத்துடன் இந்தியத் தூதுவருடன் ஒட்டி விட்டனர் போல்   உள்ளது. மேலும் இவர்களின் பயிற்சி என்பது வெறும் கிரௌண்ட் ஹன்ட்லிங் அண்ட் டிக்கட்டிங் மட்டுமே. இது பெரிய தொழில் நுட்பம் சார்ந்த படிப்பும் அல்ல. பெரிய படம் காட்டி மேலும் மத மாற்றம் செய்வதே இவர்களின் நோக்கம்.

http://www.hodfamily.org/amultinationalfamily.htm

Multinational Family in Christ

House of Daniels (HOD) is a multinational family in Christ.  The family consists of the   Thevaranjan family and the international students they host in their home. For these students and their friends who are living away from their homes, the House of Daniels become a home away from home. The life style at the House of Daniels is centered on the person of Jesus Christ and the principles of loving God with all of our hearts and loving our neighbor as ourselves.    

The Thevaranjan family at HOD

Alex and Ranjana Thevaranjan, U.S. citizens with a Sri Lankan descent, are the parents of this multinational family in Christ.  Alex Thevaranjan is an accounting professor at the Martin J. Whitman School of Management at the Syracuse University.  Ranjana Thevaranjan is a graduate of the Maxwell School of Citizenship and Public Affairs.

கிறிஸ்துவர்களாக மாறினாலும் இந்துவாக இருந்தாலும் ஈழத்தமிழர்கள் தான் ஒரு தொழில் முயற்சியால் பயன் பெறுகிறார்கள் என்று நினைக்க மாட்டீர்களா? இதற்குள் தொழில் நுட்பம் குறைந்த வேலை என்ற நக்கல் வேறு! அப்படியே நீங்கள் எப்ப உங்கட பைலட்டிங் அல்லது விமானப் பொறியியல் பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்கப் போறீங்க எண்டு சொன்னால் பலருக்குப் பயன் கிடைக்கும் :rolleyes:.

ஒரு நல்ல வேலையை ஒருவர் செய்தால் விரும்பினால் பாராட்டலாம் இல்லையேல் சும்ம இருக்கலாம்! இப்படி கீ போர்டுக்கு முன்னால இருந்து விரலால விமர்சனம் எழுதிப் போட்டுப் போகவும் ஒரு தனித்துவமான "சொரணை" வேணும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம்.. கஞ்சா விக்கிறவன்.. பயிற்சி நெறி நடத்தினாலும்.. பற்றிக்கிட்டு முன்னேறுங்க என்று சொல்ல ஆக்கள் இருக்கினம். அங்கின உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்க ஆக்களில்ல.

இப்படித்தான் கோத்தா தமிழ் பெண்களை பிடிச்சு ஆமில சேர்த்த போதும் சொன்னார்கள். அதுவும் பிழைப்புக்கு ஒரு வழிதானே என்று. அப்புறம் அந்தப் பெண்கள் அலறி அடித்த போதும்.. அடி வாங்கின போதும் அதுக்கும் அழுதார்கள்.

நம்மிட்ட ஒரு கொள்கையும் இல்ல.. கோதாரியும் இல்ல. கண்ட இடத்தில் கொண்டை முடியலாம்... என்ற கொள்கை மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி அறியாப்பருவ வயதினரை சிக்கல்களில் சிக்க வைக்கவும் செய்யலாம்.

எனவே... ஆசை காட்டி மோசம் செய்யும் கும்பல்கள் இன்று தாயகத்தில் பல வழிகளில் மக்களை நாடி வருவதால்.. மக்கள்.. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி.. பயிற்சி நெறிகளைப் படிப்பதே நல்லது. பெற்றோர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  :icon_idea:  :(  :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களுக்கு தெரியாதா அமெரிக்கா ஒரு மாபெரும் மதமாற்ற சக்தி. :)

யாராவது கடிதம் எழுதுமுன் " உ", "சிவமயம்" எழுதினா அவர்களும் மதமாற்ற சக்தி.

பாய் யின் கறிக்கடையும் மதமாற்ற சக்தி - ஏன்னா அதிக 786 போட்டிருக்கே :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் உங்களுக்கு தெரியாதா அமெரிக்கா ஒரு மாபெரும் மதமாற்ற சக்தி. :)

யாராவது கடிதம் எழுதுமுன் " உ", "சிவமயம்" எழுதினா அவர்களும் மதமாற்ற சக்தி.

பாய் யின் கறிக்கடையும் மதமாற்ற சக்தி - ஏன்னா அதிக 786 போட்டிருக்கே :)

யாழ். இந்துக் கல்லூரி என்று பெயர் வைத்தால் ஓகே. 

“வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி வையகம் புகழ்ந்திட என்றும்

இலங்கையின் மணித்திரு நாட்டினில் எங்கும் இந்து மதத்தவர் உள்ளம்...” என்று கல்லூரி கீதம் இருந்தாலும் ஓகே.

கிருஸ்துவ பள்ளிக்கூடம் என்றால்... “மதம் மாற்ற சதி“

சிக்கல் என்னவென்றால், யாழ்ப்பாணத்தில் 3 வயது முதல் A/L வரை முழுமையான ஆங்கிலக் கல்வி பயில உள்ள ஒரே பள்ளி, கிருஸ்துவப்பள்ளி!

மற்றொரு இந்து அல்லது மதமற்ற முழு ஆங்கில பள்ளியை ஆரம்பிக்க  யாழ் மக்கள், ‘கருத்தாளர்களுக்காக’ வெயிட்டிங். 

  • கருத்துக்கள உறவுகள்

கொலசிப்பு என்று சொல்லி.. ஆசைக்காட்டி... கழுத்தறுக்கும் ஆக்களிடம் மாணவர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது.  பாடசாலைகள்.. பல்கலைக்கழகங்கள்.. தொழில்நுட்பக் கல்லூரிகள்.. அரச பதிவு பெற்ற.. அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்.. அரச அங்கீகாரம் உள்ள படிப்புக்களை படிப்பதே எதிர்காலத்துக்குச் சிறந்தது. 

மாணவர்கள் இதுவிடயத்தில் அவதானமாக இருப்பது அவசியம். பெற்றோரும் கூட.

சிலருக்கு.. கொலசிப்புக்கு என்னென்ன அவசியம் என்று கூடத் தெரியவில்லை. பாவங்கள். அவர்கள்.. எல்லாம் மாணவர்களுக்கு வழிகாட்டிறது தான் கொடுமை.  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.