Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வரும் விமானத்துறையில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளுக்கு வணக்கம்....

 

தொடர்ந்து யாழில் எழுதப்படம் கருத்துக்களைப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது...

எமது நேரமும் 

எம்மிடையான ஒற்றுமையும் விரயமாக்கப்படுவது வேதனை தருகிறது.....

 

இந்தத்திரியிலும் அதுவே... 

எமது இன்றையநிலைக்கு செயற்பாடற்ற

வெறும் பார்வையாளர்களாக எம்மவரில் பெரும்பானோர் இருந்தததும்

எம்மை எமது பலத்தை உணராது கிடைத்தவற்றை சந்தேகித்து  அல்லது வேறு காரணங்களைக்காட்டி ஒதுக்கியதும்

(அவை நியாயமான சந்தேகங்களாக இருந்த போதும்)

காரணம் என்பதை  நாம் இன்னும் உணராதது வருத்தம்  தருகிறது....

 

இங்கு சைவசமயம் சார்ந்து  பேசுவதனால் ஒன்றைக்கூறலாம் என நினைக்கின்றேன்

(நானும் அந்த மதத்தைச்சார்ந்தவன் என்ற ரீதியில்)

சைவசமயம் சிலரை ஒதுக்கி வைத்தது

அவர்களது தேவைகளை கவனிக்கத்தவறியது

இதுவே வேறு மதங்களுக்கு இலகுவானது...

இதனை நாம் புரிந்து கொள்ளணும்

அந்த வரலாற்றுத்தவறை நாம் தொடர்ந்து செய்கின்றோம்

புலத்திலுள்ள மக்கள் நினைத்தால் பெரும் விடயங்களை அந்த மக்களுக்குச்செய்யலாம்

அதிலும் இதே தவறை நாம் விட்டுவிட்டு

அந்த மக்களையோ

அதை அவர்களுக்குச்செய்பவர்களையோ தப்பென்பது

மாபெரும் வரலாற்றுத்தவறை நாம் தொடர்ந்து செய்வதுடன்

அதை நாம் உணராதிருப்பதை நியாயப்படுத்துவதுமாகும்...

இது எமது மதத்தையம் இனத்தையும்  மேலும் மேலும் பலவீனமாக்கும்...

 

மேலும் எமது விடுதலைப்போராட்டத்தில்

சைவமத குருமார்களைவிட

கத்தோலிக்க குருமாரே எமது இன விடுதலையில் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதையும் எம் கண்முன்னெ  வரலாறு பதிந்து சென்றுள்ளது.

 

 

 

 

 

  • Replies 124
  • Views 6.5k
  • Created
  • Last Reply
விசுகருக்கு இங்கிலீசு விளங்கும் என்டால் இதை ஒருக்கா வாசிச்சுப் பாருங்கோ.
 
பல நாடுகளின்/ பணபலம் / அரசியல் தொடர்புகள் போன்ற‌ பின்னனியை கொண்ட கத்தோலிக்க பாதிரிகளிற்கும் சோத்துக்கே தவண்டி அடிக்கும் சைவ குருமார்களுக்கும்..............
 
வித்தியாசம் இருக்கிறது. 
 
கீழ் உள்ள இணைப்பில் வரும் ஒரு பிராமணர் குடுத்த விலைக்கு நிகரான விலை குடுத்த ஒரு பாதிரியாரின் பெயரை இணயுங்கள்.
 
 
விசுகு உங்கள் பதிவிற்கு பச்சை மட்டும் போதாது எனவே நன்றி சொல்வதற்காக இந்தப் பதிவு.
 
நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகருக்கு இங்கிலீசு விளங்கும் என்டால் இதை ஒருக்கா வாசிச்சுப் பாருங்கோ.
 
பல நாடுகளின்/ பணபலம் / அரசியல் தொடர்புகள் போன்ற‌ பின்னனியை கொண்ட கத்தோலிக்க பாதிரிகளிற்கும் சோத்துக்கே தவண்டி அடிக்கும் சைவ குருமார்களுக்கும்..............
 
வித்தியாசம் இருக்கிறது. 
 
கீழ் உள்ள இணைப்பில் வரும் ஒரு பிராமணர் குடுத்த விலைக்கு நிகரான விலை குடுத்த ஒரு பாதிரியாரின் பெயரை இணயுங்கள்.
 
 

 

 

வணக்கம்  ஈசன்

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் (உங்களது இணைப்பை இன்னும் வாசிக்கவில்லை)

ஐயர்மாருக்கான சம்பளம் என்பது எமது மதத்தின் குறை...

அதை நாம் நிவர்த்தி செய்து ஒரு ஒழுங்குக்கு கொண்டு வரணும்

அது வேறு.

நான்  சொன்னது கத்தோலிக்க மதகுருமாரின் பங்களிப்பு (விகிதாசார அடிப்படையில் அதிகம் என்பதே)

 

சோற்றுக்கு தவண்டையடிக்கும் சைவகுருமாரின் கழுத்திலும் கைவிரல்களிலும் மினுங்குபவற்றையும் சேர்த்துக்கொள்ளலாமே ஈசன்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் - இவ்வளவு தெரிந்த உங்களுக்கு பாதர் சிங்கராயர், மட்டக்களப்பு தொழிநுட்ப கல்லூரி அதிபராய் இருந்த பாதிரியார், அல்லைபிட்டியில் காணாமல் போன பாதிரியார் இது போல் பலரை தெரியாமல் போனது ஆச்சரியமாய் உள்ளது.

எங்கட ஐயர் மார் என்றால் எமக்கு இளக்காரம் பாதிரி மார் என்றால் பயம் .அதுவும் குறிப்பாக ஒருவருக்கு புழுத்த பயமாம் .நம்பி அமெரிக்காவில் கொடுத்த காசு எல்லாம் காற்றோடு போய்விட்டது .

இந்த விடயமாக கட்டுரை கட்டுரையாக வாசித்து அலுத்துவிட்டது .

நூறு பஞ்சப் பரதேசிகள் இருந்தால் கூடவே நாலு தலைப்பாகையும் இருக்கத்தானே செய்யும்.
 
நான் இங்கு சம்பளத்தைப் பற்றிச் சொல்லவில்லை.
 
அவர்களால் செயற்படக் கூடிய தொடர்புகள், வளங்கள், சூழ்நிலைகள் பற்றிச் சொன்னேன்.
  • கருத்துக்கள உறவுகள்

 

நூறு பஞ்சப் பரதேசிகள் இருந்தால் கூடவே நாலு தலைப்பாகையும் இருக்கத்தானே செய்யும்.
 
நான் இங்கு சம்பளத்தைப் பற்றிச் சொல்லவில்லை.
 
அவர்களால் செயற்படக் கூடிய தொடர்புகள், வளங்கள், சூழ்நிலைகள் பற்றிச் சொன்னேன்.

 

 

 

அவர்கள் செய்கிறார்கள் என்று தான் சொல்வேன்

இன்று கூட மன்னார் ஆயர் ராசப்பு அவர்களது சேவைக்கு இணையாக எமது குருக்கள் ஒருத்தரைக்காட்டுங்கள்...??

 

நீங்கள் கத்தொலிக்கர்களுக்கு உலகமெல்லாம் ஆட்கள் இருக்குறார்கள் என்றால்

நான் எமக்குப்பக்கத்தில் இவர்களது ஆட்சியும்

எப்பொழுதும் இவர்களது ஆதிக்கமும் தானே இருக்கிறது என்பேன்...

Edited by விசுகு

 

நூறு பஞ்சப் பரதேசிகள் இருந்தால் கூடவே நாலு தலைப்பாகையும் இருக்கத்தானே செய்யும்.
 
நான் இங்கு சம்பளத்தைப் பற்றிச் சொல்லவில்லை.
 
அவர்களால் செயற்படக் கூடிய தொடர்புகள், வளங்கள், சூழ்நிலைகள் பற்றிச் சொன்னேன்.

 

 

ராயப்பு ஜோசப்பிற்கு என்ன ஒபாவா வரையிலுமா தொடர்பு இருக்கு? அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அந்த மனிசன் துணிந்து குரல் குடுக்கவில்லையா? நாங்க சாதி பார்த்து குலம் பார்த்து தீண்டாமை செய்ததை தவிர உருப்படியா எதையும் செய்யவில்லை. 

 

.......
 
கீழ் உள்ள இணைப்பில் வரும் ஒரு பிராமணர் குடுத்த விலைக்கு நிகரான விலை குடுத்த ஒரு பாதிரியாரின் பெயரை இணயுங்கள்.
 

 

 

ஈசன்
 
நீங்கள் குறிப்பிட்ட இணைப்பை பார்த்தேன். இவைகளை அனுபவித்தவர்கள் பல்லாயிரம் பேர். இவை தமிழரகள் என்பதால் செய்யப்பட்டதே தவிர இந்து மதகுரு என்பதால் இல்லை என்பது எனது கருத்து. மேலும் கிறிஸ்துவ சமயமானது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு மதகுருவிற்குப் பிரச்சனை என்றால் சகல மதகுருமாரும் குரல் கொடுப்பார்கள். மேலதிகமாக இவர்கள் மொழிக்கு அப்பாற்பட்டு மதரீதியாக ஒன்றுபட்டு குரல் கொடுப்பார்கள்.
 
இவையே கிறிஸ்துவ மதகுருமாரின் பலம். உண்மையாகவே இவர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியதே.
 
பிற்குறிப்பு:
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நானும் பிறப்பால் இந்துவே.

அவர்கள் செய்கிறார்கள் என்று தான் சொல்வேன்

இன்று கூட மன்னார் ஆயர் ராசப்பு அவர்களது சேவைக்கு இணையாக எமது குருக்கள் ஒருத்தரைக்காட்டுங்கள்...??

 

நீங்கள் கத்தொலிக்கர்களுக்கு உலகமெல்லாம் ஆட்கள் இருக்குறார்கள் என்றால்

நான் எமக்குப்பக்கத்தில் இவர்களது ஆட்சியும்

எப்பொழுதும் இவர்களது ஆதிக்கமும் தானே இருக்கிறது என்பேன்...

 

 

மன்னார் பாதிரியார் செய்தது என்ன ? என்பதையும் அதன் பலன்கள் என்ன என்பதையும் சுருக்கமாக பட்டியலிட முடியுமா?
  • கருத்துக்கள உறவுகள்

 

மன்னார் பாதிரியார் செய்தது என்ன ? என்பதையும் அதன் பலன்கள் என்ன என்பதையும் சுருக்கமாக பட்டியலிட முடியுமா?

 

 

 

செய்நன்றி  மறப்பதும்

செய்வோரை இகழ்வதும் நன்றன்று..

 

எனக்கும் என் மதம் மீது  பற்றுண்டு

ஆனால் அது மதவெறியன்று...

 

நேரம் பொன்னானது

நன்றி  வணக்கம்...

Edited by விசுகு

 

மன்னார் பாதிரியார் செய்தது என்ன ? என்பதையும் அதன் பலன்கள் என்ன என்பதையும் சுருக்கமாக பட்டியலிட முடியுமா?

 

வரும் ஆனால் வராது .

செய்நன்றி  மறப்பதும்

செய்வோரை இகழ்வதும் நன்றன்று..

 

எனக்கும் என் மதம் மீது  பற்றுண்டு

ஆனால் அது மதவெறியன்று...

 

நேரம் பொன்னானது

நன்றி  வணக்கம்...

 

 

ஒரு செயலின் பெறுமதி அதன் பலனில் இருக்கிறது.
பதில் இல்லையென்றால் நேரம் பொன்னானது தான்.
சென்று வாருங்கள்.
 
 
 
நிறுவனமயப்படுத்திய, அரசாங்கங்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க சபையின் பாதிரியார் குரல் கொடுத்தால் அது சேவை. பஞ்சப் பரதேசி சைவக்குருவும் அவன் மனைவியும் சித்திரவதை செய்யப்பட்டால் அது பலருக்கும் நடக்கும் விசயம் தானே !
 
   
நல்லது.
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு , ஐயர்மாரை மதித்தது இந்திய இராணுவம் மட்டுமே. புலிகள் கூட அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை.

கத்தோலிக்க பாதிரிமாருக்கு இலங்கை இந்திய அரச இராணுவங்கள் கொடுத்த மரியாதையை புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

1- விசுகு , ஐயர்மாரை மதித்தது இந்திய இராணுவம் மட்டுமே. புலிகள் கூட அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை.

2 - கத்தோலிக்க பாதிரிமாருக்கு இலங்கை இந்திய அரச இராணுவங்கள் கொடுத்த மரியாதையை புலிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

 

உண்மை

1- அப்படியாயின் எமது மதத்தின் படிமானங்கள் மீது தானே குறையுண்டு...

2- அது தானே சரியானது. அவர்களும் தமிழர்கள் என்பதால் தானே அதனை எமக்காக செய்தார்கள் செய்கிறார்கள். 

 

உலகத்தமிழர் பேரவையின் தலைவர் இமானுவேல் அவர்களுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார். நானும் ஒரு தமிழினத்துரோகி தான் ஏனெனில் தமிழன் என்றால் அவன் கத்தோலிக்கனாக இருக்கவே முடியாது.  அந்த வலி என்னுள் என்றும் உண்டு என்று. அதனை உணர்ந்து தான் அவர்கள் தமிழருக்கு உதவுகிறார்கள்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உதவுவதற்கு சந்தர்ப்பமே அமையாத ஒருவர் உதவ்வில்லை என்று எப்படி குறை கூறலாம்?

 

ஒரு செயலின் பெறுமதி அதன் பலனில் இருக்கிறது.
பதில் இல்லையென்றால் நேரம் பொன்னானது தான்.
சென்று வாருங்கள்.
 
 
 
நிறுவனமயப்படுத்திய, அரசாங்கங்களால் பாதுகாக்கப்படும் கத்தோலிக்க சபையின் பாதிரியார் குரல் கொடுத்தால் அது சேவை. பஞ்சப் பரதேசி சைவக்குருவும் அவன் மனைவியும் சித்திரவதை செய்யப்பட்டால் அது பலருக்கும் நடக்கும் விசயம் தானே !
 
   
நல்லது.

 

எமக்கு பல விடயங்கள் மேலோட்டமாகத்தான் தெரியும் .எந்த விடயத்திலும்  எமக்கு தெரிந்த கருத்துக்களை அள்ளிவிட்டுக்கொண்டே இருக்கின்றோம் .பல விடயங்களில் எமக்கு  ஆழமான அறிவு இல்லை அதை பற்றிய புரிந்துணர்வும் இல்லை என்பதே உண்மை (என்னையும் சேர்த்துத்தான் )

  • கருத்துக்கள உறவுகள்

உதவுவதற்கு சந்தர்ப்பமே அமையாத ஒருவர் உதவ்வில்லை என்று எப்படி குறை கூறலாம்?

 

ஐயா

எமது குருக்கள்மார் மீது அழுத்தங்களும்  பயமுறுத்தல்களும் இருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இதனை இங்கு எழுதித்தான் விளங்கப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

அதேநேரம் மதம் மாறிய தமிழரும் தமிழர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை

அவர்கள் சார்ந்த மதத்தின்  சலுகைகளைப்பாவித்தும்

அவர்கள் சார்ந்த மதத்தின் கொள்கைகளுக்கு எதிராக நின்றும் செய்துள்ளனர்

இது வரலாறு.

 

இனி

இந்த திரியின் கரு வேறு..

அது எமது செயற்பாடின்மையால் வருகிறது என்பதே எனது கருத்து

தொடர்ந்து மக்களுக்கு தேவையானவற்றை நாம் செய்யாது இருந்து கொண்டு

ஒருவேளை எமது மதத்தின் கொள்கையாக இருக்கலாம் (படைத்தவன் படியளப்பான்)

அவர்களை வேறு இடங்களிலும்  சோற்றைப்பெற்றுக்கொள்ளக்கூடாது என்று அட்ம்பிடிப்பதைத்தான் நான் வெறுத்து எழுதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர்மார் அரசியல் கதைக்க வந்தால் பிராமணிக்கு கோயிலில் மணி அடிக்கிறதை விட்டுட்டு ஏன் தேவையில்லாத வேலை என சொல்வதுதான் எம்சமூகம்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் செய்யத் தேவையில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் செய்யத் தேவையில்லை!

ஐயர் அரசியல் செய்ய தேவையில்லை ஆனால் பாதிரிமார்கள் செய்ய வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாதிரியும் அரசியல் செய்யவில்லை. பிரச்சினை என்னவென்றால் இலங்கையில் பிராமணக் குடும்பங்களில் படிப்பு ஏறாதவர்களே பெரும்பாலும் கோவில் பூசகர்களாக வருவது வழமை. பாதிரிகள் அப்படியல்ல நல்ல படிப்பு இருக்கும் எனவே சமுகத்தில் நல்ல மதிப்பு இருக்கும். அத்துடன் ஆங்கில அறிவும் இருக்கும். தான் சார்ந்த சமுகத்துக்காக உதவுவது அரசியல் அல்ல தார்மீகக் கடமை. இதனை அய்யர்மார் செய்யவேண்டாம் என எவரும் தடுக்கவில்லை!

அடடா, இந்த படிப்பு என்ன எந்த படிப்பு படித்தாலும் வேலை கிடைப்பது அவரவர் சாமர்த்தியம். பல்கலைகலத்துக்கு போனாலும் வேலை கிடைப்பது ஒன்று உறுதி இல்லை.

 

இதுக்குக்கேசளிச்சுகிட்டா எப்படி, உயர்தரத்தில அதிக புள்ளிகள் பெற்றுத்தருவோம் என்று த்தனை வாத்திமார் எமாத்தியிருப்பினம்?

பைனாஸ் கம்பனி, சீட்டு, வெளிநாட்டு ஏஜென்சி, இயக்கம், சொத்து பார்சல், காணமல் போனவரை மிட்டுத்தாரம், அறுவை சிகிச்சை. இப்பிடி எல்லாரும் தானே சனத்தை மொட்டயை அடிச்சநிங்கள்.

 

எதோ ஊரில இருப்பவர்கள் எல்லாரும் வேங்கயங்கள் என நினைத்து இவர்கள் அறிவுரை சொல்வது கொடுமை. 

 

எதோ எவனோ கடையை திறந்தாள் சனமெல்லாம் பையோட லைனில போய் நிக்குமாக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்

1) Airline

2) Airport Operation

3) Management Studies

இந்த மூன்றையும் படித்து முடித்தவுடன் ஒருவருடைய தகுதி நிலை என்ன ? அவர் என்ன வேலைக்கு போகலாம் ?

Air Canada இன் பயிற்சி முறையை நீங்க பயன்படுத்துவது Air Canada க்கு தெரியுமா ?

???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.