Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

சூத்திரக்கிணறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பணச்செலவில்லாதது....சூழலுக்கு பாதுகாப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது, பாட்டி கூட... திருநெல்வேலியில், சூத்திரக் கிணறு இருந்ததை குறிப்பிட்டு கூறுவார்.
அதனை.... சூத்திரக் கிணத்தடி என்று.... பலரும் கூறுவதையும் கேட்டுள்ளேன்.

Posted

நீர்வேலில சில சூத்திர கிணறுகள் இருந்தன. நான் நினைக்கிறான் 1989, 1990 ம் ஆண்டளவில் பாடசாலை மூலம் கூட்டிக்கொண்டுபோய் காட்டினவை. ஆனால் அந்த சூத்திர கிணறுகள் கொஞ்சம் வித்தியாசம். 2 பெரிய வாளிமதிரி இருக்கும் (கிடத்தட்ட பாதி மண்எண்ணை பெரல் சைஸ்). அந்த வாளிகள் மேலை கீழை போய் வரும். நல்ல வேகமா தண்ணி பாயும். சுத்துறதுக்கு 2 மாடு வேண்டும். சூழலுக்கு தீங்கு இல்லாத முறை. ஆனால் இப்பவும் அந்த சூத்திர கிணறுகள் பாவனையில் இருக்குதோ தெரியாது.

Posted

இந்தக்காலத்தில்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக்காலத்தில்..

 

யாழ்ப்பாண தமிழர்கள், தமது.... சூத்திரக் கிணறுக்கு.....  Copy Right  எடுத்து வைக்காததால்,

வெள்ளைக்காரன் எமது கண்டு பிடிப்பை.... கொப்பி அடிச்சு விட்டான். :icon_idea:

Posted

நான் சிறுவனாக இருக்கும் போது எமது தோட்டத்தில் சூத்திர கிணறுதான் இருந்தது .(பலாலி வீதியில் கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் )

பின்னர் மோட்டார் பூட்டிய பின்பும் சில்லுகள் சுற்றும் வளையமும் இரும்பு குழாயும் இருந்தது .தம்பியார் அதில் ஏறி விழுந்து காலை கிழித்து பத்து இழை போட்டார் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இது போன்ற கிணறு நேரில் பார்க்கவில்லை, ஆனால் பட்டை எனப்படும் பெரிய இரண்டு கடகத்தால் நீர் இறைப்பார்கள் . இரு மாடுகள்  முன்னுக்கு நேரே போய் ரிவர்ஸில் பின்னுக்கு வரும். அப்போது தண்ணீர் வாய்க்காலில் விழுந்து ஓடும்....!  :):D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் சிறுவனாக இருக்கும் போது எமது தோட்டத்தில் சூத்திர கிணறுதான் இருந்தது .(பலாலி வீதியில் கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் )

பின்னர் மோட்டார் பூட்டிய பின்பும் சில்லுகள் சுற்றும் வளையமும் இரும்பு குழாயும் இருந்தது .தம்பியார் அதில் ஏறி விழுந்து காலை கிழித்து பத்து இழை போட்டார் .

 

அர்ஜுன்.. கோண்டாவில், டிப்போவிற்கு , முன்னால் தானே.. ரகுநாதன் வீடும் உள்ளது.

அங்குள்ள, இடத்தில்,..... ஒருமுறை, கள்ளு அடிக்க வந்திருக்கின்றேன்.

அழகான... கத்தரி, மிளகாய் தோட்டங்கள்,  பார்க்க... ஆசையாக இருக்கும்.

அங்கு, கந்தசாமி.... என்ற ஒரு நண்பரும் எனக்கு இருந்தவர்.

 

Posted

நான் இது போன்ற கிணறு நேரில் பார்க்கவில்லை, ஆனால் பட்டை எனப்படும் பெரிய இரண்டு கடகத்தால் நீர் இறைப்பார்கள் . இரு மாடுகள்  முன்னுக்கு நேரே போய் ரிவர்ஸில் பின்னுக்கு வரும். அப்போது தண்ணீர் வாய்க்காலில் விழுந்து ஓடும்....!  :):D

சுவி, நீங்கள் சொன்னமாதிரி ஒரு நீர் இறைக்கும் முறை கருத்தம்மா படத்திலும் வருகுது எண்டு நினைக்கிறன். :icon_idea:

Posted

அர்ஜுன்.. கோண்டாவில், டிப்போவிற்கு , முன்னால் தானே.. ரகுநாதன் வீடும் உள்ளது.

அங்குள்ள, இடத்தில்,..... ஒருமுறை, கள்ளு அடிக்க வந்திருக்கின்றேன்.

அழகான... கத்தரி, மிளகாய் தோட்டங்கள்,  பார்க்க... ஆசையாக இருக்கும்.

அங்கு, கந்தசாமி.... என்ற ஒரு நண்பரும் எனக்கு இருந்தவர்.

 

எமது தோட்டத்திற்கு அடுத்த காணியில் தான் ரகுநாதன் இருந்திருக்கின்றார் .அவருக்கு என்னை விட வயது மிக குறைவு என்று நினைக்கின்றேன் அதனால் தெரிய நியாயம் இல்லை .

எமது தோட்டத்துடன் சேர்ந்து ஒரு கள்ளு கொட்டில் இருக்கு உரிமையாளர் இரத்தினசிங்கம் .அங்குதான் வந்தீர்களோ தெரியாது .

எனது தம்பியை கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் அது இப்ப வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம்  .
இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம்
பின்னர்  சூத்திரம் ஆகியது.
நிறைந்த பல வாளிகள் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் சூழ்ந்து  வருகின்றன. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம்  .

இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம்

பின்னர்  சூத்திரம் ஆகியது.

நிறைந்த பல வாளிகள் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் சூழ்ந்து  வருகின்றன. :D

 

வாத்தியாரண்ணே..... இது, நல்ல கவிதை. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாத்தியாரண்ணே..... இது, நல்ல கவிதை. :D  :lol:  :icon_idea:

 

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

 

வாத்தியார்..... ப்ளீஸ்,  இதுக்கு, பொழிப்புரை சொல்லுங்கோ.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

 

முந்திக்கொண்டு என்பது பிழை

 

முண்டிக்கொண்டு என வரவேண்டும்  :D

 

Posted

5689297.jpg

இப்படியான நீர் இறைக்கும் முறை நெதர்லாந்து நாட்டில் பெருமளவில் பாவிக்கினம் எண்டு நினைக்கிறன்.  நெதர்லாந்து சம்பந்தமான ஒரு டொக்குமென்றி படத்தில் பார்த்தனான். ஆனால் அவை காற்று வலு மூலம் இயங்குவது என்று நினைக்கிறன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூத்திரம் -----  சக்கரம்.

சூத்திரதாரி ------ திருமால்.

சூத்திரக்காரன் -----  பின்னால் நின்று இயக்குபவன். ( பொம்மலாட்டம்).

சூத்திரம் ---  உள்ளே கட்டங்களால் பிரிக்கப் பட்ட வட்டம். ( முந்தைய சாதகத்தின் லக்கனத்தில்  ஒரு வட்டத்தை  ஒன்பது இராசிகளாகப் பிரித்து பின் அதில்  இருபத்தேழு நட்சத்திரங்களும் , அவற்றின் பாதங்களும் பொருத்தியிருக்கும்...! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாயிரத்து ஐந்தாம் வருடமளவில் ஏழாலை டச்சிரோட்டில பாவனைக்கு உதவுமாப்போல் நல்ல நிலையில் ஒரு சூத்திரக்கிணறு இருந்தது, மற்ற்ப்படி கோண்டாவிலில் டிப்போவுக்கு முன்பாக ஒரு சூத்திரக்கிணறு இருந்தது நினைவிருக்கு அது அர்ச்சுணது வளவு என்பது எனக்குத் தெரியாது தவிர இருபாலைப்பகுதியிலும் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதன் தண்ணீர் மேலேற்றும் விகிதம் கிட்டத்தட்ட ஒரு வூள்சிலிப் பம் அளவுக்கு வலிவானதாக இருக்கும் என்பதில்லை. ஆனால் யாழில் நிலத்தடி நீரினது தரத்தினைப் பெரிதும் பாதுகாக்க உதவும் முறையாகும்.

 

இதவிட யாழ் குடாநாட்டின் கிராமங்களில் துலா மிதித்து நீரிறைக்கும் முறை மிகவும் அலாதியானது இன்று எனது தோட்டம் நாளை உனது தோட்டம் என முறைவைத்து ஒருவர் இன்னுமொருவருக்கு உதவுவது என ஒரு கிராமியக் கூட்டுறவே தானாக உருவாகியிருந்தது. வலிகாமத்தின் சில தோட்டக்கிணறுகளின் துலா ஆடுகால்களிலிருந்து வீழ்ந்தே பலர் இறந்த செய்திகள் நிறையவே உண்டு.

Posted

துலா மிதித்து இறைப்பதனை கேள்விபட்டுள்ளேன். ஆனால் நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

 வூள்சிலிப் பம் அளவுக்கு வலிவானதாக இருக்கும் என்பதில்லை

இப்ப எங்கை அண்ணை ஊசிளிபும்ப் பாவிக்கினம். எலோரும் ரொபின் பம் தான் பாவிக்கினம். விலையும் குறைவு.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப்  போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
    • அதுமட்டுமல்லாது...அடுத்த பொது தேர்தலில் நீங்கள் போட்டியிடாமல் உங்க்ள் கட்சிக்கு இளைஞர்களை  அடுத்த தேர்தலில் நிற்க வைக்க வேண்டும்..அவர்கள் தலமைத்துவத்தை எடுத்து செல்ல வழிவகுக்க வேண்டும்.. தமிழரசுகட்சி புது யாப்பை உருவாக்க வேண்டும் 60 வயதுக்கு பிறகு எம்.பி யாக வருவதற்கு தடை போட் வேணும் ..ஒரு எம்பி மூன்று தடவைகளுக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை அனுமதிக்க கூடாது....இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார் இதை உங்கள் கட்சி செய்து அணுராவுக்கு பாடம் எடுக்கலாம்...ஆனால் அனுரா இதை இனி வரும் காலங்களில் அமுல்படுத்துவார்   அர்ஜுனா ராமநாதன்(சுயேட்சை) தனது பதவிக்காலத்தில் அரைவாசியை தனது கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளருக்கு கொடுப்பதாக் கூறியிருந்தார் ...அந்ததெளிவு கூட உங்கன்ட கட்சிகாரர்களுக்கு இல்லை    
    • கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன், கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை  ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள்  தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து  குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை  பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும். கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு. கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.
    • அடுத்த பொது தேர்தல் நடைபெறும்போது மாவையர் இருப்பாரோ தெரியாது. பெருந்தலைவர் சம்பந்தர் போல் மாவையருக்கு பாராளுமன்ற உறப்பினர் எனும் கெளரவ பட்டத்துடன் சாவை அணைக்க ஆர்வமோ யார் அறிவார். ஆசை யாரை விட்டது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.