Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மாவை, சம்பந்தனின் உருவபொம்மைகள் எரிப்பு -

Featured Replies

article_1428134266-mass1.JPG

 

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

 

பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04)  இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் கட்சி தலமைகள் மூடி மறைக்கின்றன என்பதனை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

'மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்யவேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?' 'பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா? 'வேலியே பயிரை மேயலாமா? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசம் இட்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 

 

article_1428134283-mass5.JPG

 

 

article_1428134308-mass2.JPG

 

article_1428134336-mass3.JPG

 

article_1428134353-mass4.JPG

 

 

http://www.tamilmirror.lk/143366#sthash.os9lgbOm.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது லண்டனிலா நடந்தது??

புலி வால்களின் வேலையாகத்தான் இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: மாவை, சம்பந்தனின் உருவபொம்மைகள் எரிப்பு

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவபொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் கட்சி தலமைகள் மூடி மறைக்கின்றன என்பதனை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்யவேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?’

‘பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா?

‘வேலியே பயிரை மேயலாமா? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசம் இட்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

tna-mavai-sambanthan-1.jpg

tna-mavai-sambanthan-2.jpg

tna-mavai-sambanthan-3.jpg

 

 

arpadam_womens_002.jpg

 

arpadam_womens_001.jpg

http://www.e-jaffna.com/archives/42857

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் செய்த அந்த உறுப்பினர் யார்??

  • தொடங்கியவர்

பெண்கள் அமைப்பு ஒன்று TNAக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின் யாழில் கொடும்பாவி எரித்தது
 
sam-mavai-2_CI.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகளின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த கோரி இன்று யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு என தன்னை அடையாளப்படுத்தி இந்த அமைப்பு, இன்று சனிக்கிழமை (04)  இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டது.

தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வரை இரு தலைவர்களின் உருவ பொம்மைகளும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் பல பெண்களை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் கட்சி தலைமைகள் மூடி மறைக்கின்றன என்பதனை கண்டித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்யவேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா?

'பெண்களாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வுதான் உதவியா? 'வேலியே பயிரை மேயலாமா? போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசம் இட்டும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வன்னியில் கூட்டமைப்பு வசமுள்ள பிரதேசசபை உறுப்பினரொருவர் பல பெண்களுடன் பாலியல் ரீதியான உறவினைக் கொண்டிருந்ததுடன் அதனை வீடியோ படம் பிடித்து வைத்திருந்தமையும் அண்மையில் வெளியாகி இருயிருந்ததாகவும், இந்த வீடியோ வெளியானதையடுத்து இரண்டு பெண்கள் தற்கொலை செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினரிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் கட்சி தலைமையினால் எடுக்கப்பட்டு இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது...

இதேவேளை இந்தப் பெண்கள் அமைப்பின் தொடர்பாளர் அல்லது இணைப்பாளர் அல்லது தலைமை என எவருடனும் தொடர்பு கொள்ள முற்பட்ட போது எவரும் தம்மை அடையாளம் காட்ட முன்வரவில்லை என்பதோடு போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தமது முகங்களை மறைப்பதில் கவனமாக இருந்ததாகவும் பிரதேச செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118322/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க அவவைக் காணேல்லை? :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்புச் சொல்லுவது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் - இதை விசாரிக்க வேண்டியது கூட்டமைப்பின் கடைமை.

இதை பற்றி ஒரு அடிப்படை உரிமை மீறல் வழக்கும் தொடுக்கலாம். போலீசிலும் முறையிட வேண்டும்.

ராணுவம் செய்வது மட்டுமல்ல தமிழ் ஆண்கள் செய்தாலும் அது வன்கொடுமையே. அது யாராக இருந்தாலும்.

எந்த தமிழரும் உதவ முன் வராவிடின் தெற்கில் உள்ள முற்போக்கு அமைபுகளை நாடலாம்.

உள்ளூராட்சியில் குப்பை கூட்டும் அதிகாரம் இருக்குமற்ற்ர் இப்படி என்றால் இவர்களிடம் போலீஸ் அதிகாரமும் போனால்? இந்த கேள்வி எழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கும், சம்பந்தன், மாவை சுமந்திரனுக்கும் உண்டு.

Noughty  :icon_mrgreen:

 

எங்கேயோ உதைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டுச்சிங்கழவன் அப்பவே ஈழத்தை பிரிச்சு கொடுத்திருந்தால் இப்ப அவன் முழு இலங்கையையும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஆண்ன்டிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவை தன்ர பிள்ளைகளுக்கு மறுமணம் என்ன... சம்பந்தர் தன்ர பிள்ளைகளை போராடத்தில் இணைக்கவே இல்லை. அவருக்கு அப்பவே தெரியுமாம்.. இது பயங்கரவாதப் போராட்டம் என்று. அதுதான் நாட்டை விட்டு வெளில அனுப்பிட்டார். தன் பிள்ளைகளை போராட அனுப்பி இருந்தால்.. இந்திய ஊடகங்களை கூப்பிட்டு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை.. பயங்கரவாத உச்சரிப்பாக.. உச்சரிக்க தயங்கி இருப்பார்.

 

மாவை ஒரு மதில் மேல் பூனை.

 

2009 மேக்கு முன் இருந்த கூட்டமைப்பு இன்றில்லை. இன்றிருப்பது. வவுனியாவில் மிக மோசமான சித்திரவதை முகாங்கள் நடத்திய... கொலைகார சித்தார்த்தனையும் உள்ளடக்கிய ஒரு ஒன்று.

 

அதில் காடைகளும்.. காவாலிகளும் உள்வாங்கப்பட்டு.. இன்று அதன் மீது மக்கள் பல்வேறு குற்றங்களை சுமத்தும் நிலை தோன்றி உள்ளது என்பது வெளிப்படை உண்மையாகும். :icon_idea::(

பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறுப்பினரின் பெயரையோ இல்லை அடையாளத்தையோ வெளிப்படுத்தாமல் அவரை மிகவும் கவனமாக பாதுகாத்துள்ளது பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு !!
 
( அவர் மேல் அவ்வளவு விருப்பம் போல. சம்பந்தமில்லாத ரெண்டு கிழடுகள் மேல் தான் கோபம் அவர்களுக்கு !!)
 
  • கருத்துக்கள உறவுகள்

நானும் நினைத்தேன் ஈசன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன்:

 

1. ஒருவர் கூட்டமைப்பின் தலைவர்.

 

2. மற்றவர் தமிழரசுக் கட்சியின் தலைவர்.

 

புலிகளில் யாரோ இருவர் செய்த தவறுகளுக்கு தலைவரையும் மொத்த புலிகள் இயக்கத்தையும் காலம் காலமா பழிக்கிறவையும்.. வாந்தி எடுக்கிறவையையும்.. நீங்கள் காணேல்லையோ..?!

 

இந்த இடத்தில் மக்கள் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து.. சம்பந்தட்ட தலைவர்களின் பாரா முகப் போக்கையும்.. தனக்கொன்று.. ஊருக்கு இன்னொன்று என்று வாழும் அவர்களின் சுயநலத்தையும் மக்கள் இனங்காட்டி நிற்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா.. அல்லது கிழடுகளை.. போர்வையால்.. போர்த்து மறைக்க முயல்கிறீர்களா..?! :icon_idea::)

 

கண்டதுக்கு எல்லாம்..சம்பந்தனை திருப்திப்படுத்த.. விசாரணை.. வெளியேற்றம்.. நடத்தும்.. மாவை.. இவ்வாறான தேவையான..குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மெளனமும்.. பாராமுகமும் கொண்டிருப்பது ஏனோ..?! :icon_idea::rolleyes::)

 

 

சம்பந்தனும் மாவையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவரை மூடி மறைப்பதாகச் சொல்லும் "பாதிக்கப்பட்ட பெண்கள்" அந்த "குற்றவாளியை" தாமே அடையாளம் காட்டாமல் மூடி மறைப்பதன் மர்மம் என்ன நெடுக்கஸ்?

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாத் தீர்மானத்தை எரித்த கும்பல்தான் இலண்டனிலும் கொடும்பாவியை எரித்தது.இப்ப யாழ்ப்பாணத்தில் எரித்ததும் அதே கும்பல்தான்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.