Jump to content

உங்கள் தாயை அனுமதிப்பீர்களா ??????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

vai-mu-kothainayagi.jpg

4a689528-b2c1-4e96-aeee-526e49e39d3e_S_s

உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ???

நழுவும் மீனாகப் பதிவைப் பார்த்துவிட்டுப் போகாது உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் உறவுகளே.

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

அவர்களது முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் அனுமதிக்கப்படவேண்டும்.

விதவை என்று ஒதுக்கப்படும் சமூகக் கொடுமை களையப்படல் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது முடிவு.

அவர்கள் முடிவுதான் என்றாலும் நான் கேட்டது அதுவல்ல நீங்கள் அனுமதிப்பீர்களா என்பதுதான் கேள்வி இசை. நழுவாமல் பதில் கூறும்படி முன்னரே கூறியுள்ளேன் :D

நிச்சயம் அனுமதிக்கப்படவேண்டும்.

விதவை என்று ஒதுக்கப்படும் சமூகக் கொடுமை களையப்படல் வேண்டும்

நான் நினைக்கிறேன் இந்தியா போன்று எமது நாட்டில் விதவையை ஒதுக்குவது இல்லை என. ஆனாலும் எனக்குத் தெரியாமல் ஏதும் இருக்கோ தெரியவில்லை அண்ணா.

வேண்டும் என்று பொதுவாக எழுதாமல் உங்கள் தாய் எனில் என்ன கூறுவீர்கள் ????

Link to comment
Share on other sites

அவர்கள் முடிவுதான் என்றாலும் நான் கேட்டது அதுவல்ல நீங்கள் அனுமதிப்பீர்களா என்பதுதான் கேள்வி இசை. நழுவாமல் பதில் கூறும்படி முன்னரே கூறியுள்ளேன் :D

அதைத்தான் நானும் சொன்னேன்.. :D நாங்கள் அவர்களது முடிவில் தலையிடக்கூடாது இல்லையா?? "அனுமதித்தல்" என்கிற விடயத்திற்கே இங்கே இடமில்லை.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் சொன்னேன்.. :D நாங்கள் அவர்களது முடிவில் தலையிடக்கூடாது இல்லையா?? "அனுமதித்தல்" என்கிற விடயத்திற்கே இங்கே இடமில்லை.. :unsure:

பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்திலேயே சில பெண்கள் விருப்பம் இருந்தும் பொட்டு வைக்காது விடலாம் அல்லவா.???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இந்தியா போன்று எமது நாட்டில் விதவையை ஒதுக்குவது இல்லை என. ஆனாலும் எனக்குத் தெரியாமல் ஏதும் இருக்கோ தெரியவில்லை அண்ணா.

வேண்டும் என்று பொதுவாக எழுதாமல் உங்கள் தாய் எனில் என்ன கூறுவீர்கள் ????

எனது தாயார் சுமங்கலியாக காலமாகிவிட்டார்..அதனால்தான் அப்படி எழுதினேன். மாமியார் பொட்டு வைத்துதான் வாழ சொல்லியிருக்கிறோம், அப்படியே வாழ்ந்தும் வருகிறார். இதில் தவறேதும் இல்லை.

பெருநகரங்களில் இந்தக் கொடுமை  மிக மிகக் குறைவு.

Link to comment
Share on other sites

எங்கள் அம்மாவின் முடிவில் தலையிடும் அளவிற்கு எமக்கு தகுதியோ அனுபவமோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தாயார் சுமங்கலியாக காலமாகிவிட்டார்..அதனால்தான் அப்படி எழுதினேன். மாமியார் பொட்டு வைத்துதான் வாழ சொல்லியிருக்கிறோம், அப்படியே வாழ்ந்தும் வருகிறார்.

பெருநகரங்களில் இந்தக் கொடுமை  மிக மிகக் குறைவு.

நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

பிள்ளைகள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்திலேயே சில பெண்கள் விருப்பம் இருந்தும் பொட்டு வைக்காது விடலாம் அல்லவா.???

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல.. இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்துதான் பலர் வம்புக்குப் போவதில்லை.. அதுவும் இளம் விதவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..

நாங்கள் எங்கள் விருப்பத்தைச் சொல்லி.. பிறகு அவர்கள் அந்த முடிவால் மன உளைச்சலுக்கு ஆளானால்??!!

Link to comment
Share on other sites

ஆனால் தமிழ் பெணகளாக இருந்தால் நிச்சயமாக கட்டாயம் பொட்டு வைக்க வேண்டும் . அவர்கள் வயது போனவர்களோ இல்லை கணவனை இழந்தவர்களோ என்பது பொருட்டல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் அம்மாவின் முடிவில் தலையிடும் அளவிற்கு எமக்கு தகுதியோ அனுபவமோ இல்லை.

இதற்கு முன் அனுபவம் வேண்டியதில்லை. ஆனால் புறச்சூழல் நிலைமைகளும் அன்றாடம் முகம் கொடுக்கும் மனிதர்களும் மட்டுமே காரணிகளாகின்றன.

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல.. இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்துதான் பலர் வம்புக்குப் போவதில்லை.. அதுவும் இளம் விதவைகள் என்றால் கேட்கவே வேண்டாம்..

நாங்கள் எங்கள் விருப்பத்தைச் சொல்லி.. பிறகு அவர்கள் அந்த முடிவால் மன உளைச்சலுக்கு ஆளானால்??!!

உங்கள் தாயார் பொட்டுவைக்காமல் இருக்கும் போது அம்மா நீங்கள் பொட்டு வைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறுவதால் எப்படி பெற்றவர் மன உளைச்சளுக்கு ஆளாக முடியும். அவர் பொட்டு வைக்கும் போது வேண்டாம் என்றால் தான் அவருக்கு மன உளைச்சல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... புறச்சூழல் நிலைமைகளும் அன்றாடம் முகம் கொடுக்கும் மனிதர்களும் மட்டுமே காரணிகளாகின்றன.

இக்கொடுமையை தவிர்க்க பண பின்புலமும் முக்கியமாக உதவுகிறது.. வசதி படைத்தவர்களென்றால் சமூகம் வெளிப்படையாக பேச, ஒதுக்க பயப்படும்..

ஏப்பை,சாப்பையென்றால் ஏறி மேயும்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கொடுமையை தவிர்க்க பண பின்புலமும் முக்கியமாக உதவுகிறது.. வசதி படைத்தவர்களென்றால் சமூகம் வெளிப்படையாக பேச, ஒதுக்க பயப்படும்..

ஏப்பை,சாப்பையென்றால் ஏறி மேயும்! :(

உண்மைதான் ஆனாலும் எவரையும் பற்றிக் கவலை இன்றி இருக்கும் துணிவான பெண்களையும் நான் கண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

உங்கள் தாயார் பொட்டுவைக்காமல் இருக்கும் போது அம்மா நீங்கள் பொட்டு வைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று கூறுவதால் எப்படி பெற்றவர் மன உளைச்சளுக்கு ஆளாக முடியும். அவர் பொட்டு வைக்கும் போது வேண்டாம் என்றால் தான் அவருக்கு மன உளைச்சல்.

நாம் சொன்னதால் அவர்கள் பொட்டு வைத்துக்கொண்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. சமூக நிகழ்வுகளில் அவர்களுக்கு மன உளைச்சல் தரும் சம்பவங்கள் நடைபெறலாம் அல்லவா?? (வெளிநாடுகளில் இது குறைவுதான்) அதையே சொல்ல வந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பொட்டு மட்டுமல்ல கணவனை இழந்த பலரும் இப்போது வண்ண வண்ணக் கலர்களில் ஆடையும்  அணிந்து செல்கின்றனர்.

பொட்டு வைக்கக் கூடாது வெள்ளை ஆடை மட்டும் அணிய வேண்டும் என்பதெல்லாம் பழங்காலக் கதைகள். இப்போது நாங்கள் சொன்னாலும் பெண்கள் கேட்கும் நிலையில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொட்டு வைப்பதென்ன.. தந்தை இறந்தபின்பு தாயொருவர் மறுமணம் புரிந்தபோது எங்கள் ஊரே அவர்களை வாழ்த்தியது. என் நண்பர்களோடு நானும் வைபவத்தில் கலந்து மகிழ்ச்சியோடு பலகாரங்கள் உண்டதை இப்போது நினைக்கவும் இனிக்கிறது. கலாச்சாரத்தை அங்கு யாரும் பெரிதுபடுத்தியதில்லை. சாதியைத்தவிர.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

பொட்டுக்கும் புருசனுக்கும் தொடர்புள்ளதான எமது கலாச்சாரம்

தொடர்வதால் யாருக்கு என்ன சிக்கல்.....??

திருமணத்தன்று வந்த பொட்டு

அவரது இழப்புடன் போவது ஒரு தொடர்பு பட்டதாகவே தெரிகிறது

ஆனால்

இதை எனது அம்மாவுக்கோ

எனது மனைவிக்கோ நான் வற்புறுத்தமாட்டேன்

அது அவர்களது விருப்பம்..

எனது தாயார் அப்பரின் இறப்புக்கு பின் பொட்டு மட்டும் வைத்துக்கொள்வதில்லை.

அவரை எவரும் இவ்வாறு செய் என சொல்வதில்லை

சொல்லவும் மாட்டோம்

சொல்லவும் முடியாது

அது அவரதும் அவரது கணவனதும் தொடர்பு சார்ந்தபிரச்சினை...

நீங்கள் சொல்லிப் பெண்கள் கேட்டால் வெள்ளை ஆடையும் பொட்டுத் தவிர்ப்புமா ??? வாத்தியார். உங்கள் பதிலில் தெளிவு இல்லை.

பொட்டு வைப்பதென்ன.. தந்தை இறந்தபின்பு தாயொருவர் மறுமணம் புரிந்தபோது எங்கள் ஊரே அவர்களை வாழ்த்தியது. என் நண்பர்களோடு நானும் வைபவத்தில் கலந்து மகிழ்ச்சியோடு பலகாரங்கள் உண்டதை இப்போது நினைக்கவும் இனிக்கிறது. கலாச்சாரத்தை அங்கு யாரும் பெரிதுபடுத்தியதில்லை. சாதியைத்தவிர.

அந்தப் பிள்ளைகளுக்கு மிகப் பெரிய மனதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ லொள்ளுப்பண்ணாம அம்மாவை பொட்டு வைக்க விடுங்கோ

உப்பிடிச் சொல்லித் தப்பிப்பீர்கள் என்றுதான் என் கருத்தை எழுதாமலே விட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்வியே பிழை சுமோ.

பெண் (அதுவும் தாய்) என்ன எமது சொத்தா அல்லது ஜடப்பொருளா நாம் அனுமதிக்க?

நீங்கள் பொட்டு வைக்க வேணும் என்பதுதான் என் விருப்பம் ஆனால் உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் அதற்கு என் ஆதரவு உண்டு என்பதே நான் என் அம்மாவுக்குச் சொன்னது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

பொட்டுக்கும் புருசனுக்கும் தொடர்புள்ளதான எமது கலாச்சாரம்

தொடர்வதால் யாருக்கு என்ன சிக்கல்.....??

திருமணத்தன்று வந்த பொட்டு

அவரது இழப்புடன் போவது ஒரு தொடர்பு பட்டதாகவே தெரிகிறது

ஆனால்

இதை எனது அம்மாவுக்கோ

எனது மனைவிக்கோ நான் வற்புறுத்தமாட்டேன்

அது அவர்களது விருப்பம்..

எனது தாயார் அப்பரின் இறப்புக்கு பின் பொட்டு மட்டும் வைத்துக்கொள்வதில்லை.

அவரை எவரும் இவ்வாறு செய் என சொல்வதில்லை

சொல்லவும் மாட்டோம்

சொல்லவும் முடியாது

அது அவரதும் அவரது கணவனதும் தொடர்பு சார்ந்தபிரச்சினை...

பெண்கள் தொடர்பான கலாச்சார விழுமியங்களை ஆண்கள் தான் கட்டாயமாகப் பெண்ணுள் திணித்தனர். முன்னர் திருமணமான ஆண் மெட்டி அணிந்ததாகக் கூறுவர். பின்னர் அதை ஆண்கள் யாருமே அணிவதில்லை. பொட்டுக்குப் புருசனைத் தொடர்பு படுத்தியது பிற்காலத்தில் தான். பெண்கள் திருமணத்துக்கு முன்னர் கூடப் பொட்டு அணிவதுதானே அண்ணா ???

உங்கள் கேள்வியே பிழை சுமோ.

பெண் (அதுவும் தாய்) என்ன எமது சொத்தா அல்லது ஜடப்பொருளா நாம் அனுமதிக்க?

நீங்கள் பொட்டு வைக்க வேணும் என்பதுதான் என் விருப்பம் ஆனால் உங்கள் முடிவு எதுவாயிருந்தாலும் அதற்கு என் ஆதரவு உண்டு என்பதே நான் என் அம்மாவுக்குச் சொன்னது.

என் கேள்வியில் எந்தத் தவறும் இல்லை கோசன். நான் விரிவாக முன்பே எழுதாததற்கு காரணம் இருக்கிறது. அதனால் இப்போதும் உங்கள் கேள்விக்கு பதிலெழுத முடியவில்லை :D

Link to comment
Share on other sites

பெண்கள் திருமணத்துக்கு முன்னர் கறுப்பு அல்லது வேறு கலர்களில் பொட்டு வைப்பார்கள் ஆனால் கல்யாணம் கட்டாத எந்த ஒரு பெண்ணும் எமது சமுதாயத்தில் குங்குமப் பொட்டு வைப்பதில்லை, திருமணத்தன்று தானே வைப்பார்கள். குங்குமப் பொட்டு திருமணத்துடன் சார்ந்தது என்று நினைக்கிறேன், இப்ப குங்குமப் பொட்டு வைப்பவர்கள் குறைவு மாதிரி இருக்கு, அனேகமானவர்கள் சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டையே வைக்கின்றார்கள். கணவனுடன் வந்த குங்குமம் கணவனுடன் போவதே நல்லது மாதிரி இருக்கு. மற்றும்படி சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் தவறு இருக்கிற மாதிரி தெரியேலை. கணவனை இழந்த சில பெண்கள் கறுப்புப் பொட்டு வைப்பதைக் கண்டிருக்கிறேன். 

கணவனை இழந்த பெண் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு திரிந்தால் சமுதாயத்தில் மற்றவர்கள் நிட்சயம் குறைகள் சொல்லுவார்கள் என்பது உண்மை. அதைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணாயின் விரும்பியபடி செய்யலாம் இச் சுதந்திர பூமியில்!! :D

என் தாய் என்றாலும் இப்படித் தான் சொல்வேன், முடிவு உங்கள் கையில் என்று. எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டன்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குங்கும பொட்டு வைப்பது திருமணத்துடன் ஆரம்பிப்பதால் கணவனை இழந்தவர்கள் ஒட்டு பொட்டுகளை வைக்கலாம்.

அம்மா ,அப்பா இறந்தவுடன் பொட்டு வைக்காமல் விட்டார் ஆனால் நாம் வற்புறுத்தி வைக்க சொல்லி இப்பவும் பொட்டு வைப்பவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.