Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

Apr 19, 2015 | 11:22 by கி.தவசீலன்

விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பற்றுறுதி கொண்டதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்துள்ள செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

“நாம் விடுதலைப் புலிகள் மீதோ அவர்களின் சித்தாந்தம் மீதோ பற்றுறுதி கொண்டவர்கள் அல்ல.

நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நிற்கிறோம். நாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவோ, ஊக்குவிக்கவோ இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முனைவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.

ஆனால், அவ்வாறு அத்தகையதொரு நகர்வு முன்னெடுக்கப்பட்டால் கூட, அதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்கவோ, அனுமதிக்கவோ மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தீவிரவாதத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதிப்பதில்லை என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். அதனால் தமக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

சில தரப்புகள் தான், புலிகள் மீள ஒருங்கிணைவதாக கூறி, மக்களிடையே பீதியை ஏற்படுத்த முனைகின்றன.” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/04/19/news/5325

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஒருங்கிணைகின்றனர் என்பது இவரின் எஜமானரின் கூவல்.

 

அதற்கு பதில்.. கூவலாய் இவர் கூவல்..!

 

உண்மை எங்கையோ வேறு திசையில்.. பயணிச்சுக் கொண்டிருக்குது. சுமந்திரன் நினைப்பது போல.. தமிழ் மக்கள் இல்லை..! அது மட்டும் உறுதி. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் என்ற அமைப்பே இப்போது இல்லை. சும்மா பிலிம் காட்டுற புலிவால்களுக்கெல்லாம் இனி இலங்கை அரசியலில் இடம் இல்லை என சுமந்திரன் சொல்லி இருக்கிறார். இதை அவர்கள் விளங்கிக்கொள்ளக் கனகாலம் எடுக்கும். அதுக்குள்ள எவ்வளவோ முடிஞ்சிருக்கும் :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சுமந்திரன் மக்கள் முன் வரட்டும்.

 

அவரின் எஜமானர்கள் எப்ப தேர்தலை நடத்தப் போகினம்..?! 100 நாள் கடந்து போகப் போகுது. அப்ப மக்கள் தங்கள் பிள்ளைகளை சுதந்திர தாகத்திற்காக பறிகொடுத்த மக்கள் பதில் சொல்லுவினம்.. இந்தக் கொழும்பு சட்டாம்பிக்கும்.. அவருக்கு புதிதாக வால் பிடிக்க ஆரம்பித்திருக்கும்.. போலிகளுக்கும். :lol::icon_idea:


இதுதான் சுமந்திரன் கொழும்பில் இருந்து கொண்டு.. 100 நாளில் சாதித்தது.

 

Colombo's propaganda on releasing lands in former HSZ proves futile

[TamilNet, Sunday, 12 April 2015, 21:08 GMT]

After making propaganda announcements naming entire GS divisions as to be released for resettlement in Valikaamam North and Valikaamam East, the Sri Lankan State and its occupying military, once again demonstrated on Saturday that only a small pocket was being released, that too under appalling conditions of militarisation near Chaanthai Junction in Valikaamam North. The people of Thaiyiddi and Mayiliddi who went there to see their lands had to return without gaining access to their lands. The SL military has put up fences around the pockets of lands being released to the public while maintaining the militarisation of the occupied villages with all their military installations being intact, the people of Thaiyiddi said.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37726

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் கொள்கை என்ன ? புலிவாலில்லாதவர்களீன் கொள்கை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் பிறந்ததில் இருந்தே மக்கள் மீது பற்றுகொண்டவர்கள் ........
எதோ நையாண்டி பண்ணுகிறேன் என்று சுமந்திரன் நினைக்கலாம்.
 
உள் ஊருக்குள் இப்படி பேசிகிட்டு ஒரு கூட்டம் புதுசா கிளம்பியிருக்கு.
நான் சொல்லா விட்டாலும் ...
சுமந்திரனை அவர்கள் நையாண்டி பண்ணிக்கொண்டுதான் திரிவார்கள்.
 
மேலேயே சில கருத்து அப்பிடி இருக்கு. 
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரட்டும் எப்படி பல்டி அடிக்கிறம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
‘நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

 

அட இவையளுக்கும் புலி தேவைப்படுது.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு புலிகளின் பெயரை சொல்லாமல் வெல்ல வக்கில்லை. அதற்குள் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களீல்லை என சிங்களவர்களுக்கு நல்ல பிள்ளை என காட்டும் நடிப்பு.

"நாம் புலிகளின் சித்தாந்தம் மீது பற்றுறுதி கொண்டவர்களல்ல’ – நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்"

 

 நீங்கள் பணத்தின் மீதும் பதவியின் மீதும் பற்றுறுதி கொண்டவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்

என்னப்பு சுமந்திரன் இப்பவெல்லாம் நீங்கள் தண்ணில தான் மிதக்கிரிங்க போல சும்மா உளறிக்கொண்டே இருக்கின்றீங்க . முதலில் தீவிரவாதம் என்பது சிங்கள அரசு தான் தமிழர் மீது காட்டுகின்றார்கள் என்பது ஏன் இன்னும் சொல்லமாட்டாமல் கள்ளனாக இருக்கின்றீர்கள் .
 
முதலில் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வாருங்கள் . கள்ளன் மாதிரி பின் வாசலால் வந்தவர் தானே நீங்கள் .உங்கள் கருத்தும் அப்படிதான் இருக்கும் . என்ன சம்பந்தனுக்கு கக்கா பிடிக்கிறேங்க போல .
 
தமிழ் மக்கள் என்றால் அவர்கள் புலிகள் . அவர்களின் கொள்கைகள் தான் தமிழ் மக்களின் கொள்கைகள் .
போதையில் உளறுவதை விட்டிட்டு நடைமுறை வரலாற்றினை மறக்கவேண்டாம் .

 

என்னப்பு சுமந்திரன் இப்பவெல்லாம் நீங்கள் தண்ணில தான் மிதக்கிரிங்க போல சும்மா உளறிக்கொண்டே இருக்கின்றீங்க . முதலில் தீவிரவாதம் என்பது சிங்கள அரசு தான் தமிழர் மீது காட்டுகின்றார்கள் என்பது ஏன் இன்னும் சொல்லமாட்டாமல் கள்ளனாக இருக்கின்றீர்கள் .
 
முதலில் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வாருங்கள் . கள்ளன் மாதிரி பின் வாசலால் வந்தவர் தானே நீங்கள் .உங்கள் கருத்தும் அப்படிதான் இருக்கும் . என்ன சம்பந்தனுக்கு கக்கா பிடிக்கிறேங்க போல .
 
தமிழ் மக்கள் என்றால் அவர்கள் புலிகள் . அவர்களின் கொள்கைகள் தான் தமிழ் மக்களின் கொள்கைகள் .
போதையில் உளறுவதை விட்டிட்டு நடைமுறை வரலாற்றினை மறக்கவேண்டாம் .

 

 

 

அய்யையோ அப்புகாத்துமாரை இப்படி கேவலப்படுத்தக்கூடாது.அந்தக்காலம் முதல் தற்போதுவரை உள்ள காலங்களில் சிங்களவர் தமிழ் அப்புகாத்துமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.