Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

இவர் தானே கொழும்பு தமிழ் சட்டத்தரணி வி ரி தமிழ்மாறன் ? இவர் த .தே.கூ சார்பாக வேட்பாளராக களம் இறங்க போவதாக செய்தி வந்தது??

  • Replies 169
  • Views 17.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

 
இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே  சட்டத்தரணி தமிழ்மாறனை பொலிஸாருடன் செல்ல அனுமதிப்போம் எனக்கூறி பொலிஸாரது வாகனத்தை இடைமறித்து புங்குடுதீவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இதனால் பொலிஸாருக்கும்,மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
8888(11).jpg
 
88888888888888(1).jpg
 
8888888888888888888888888888888(1).jpg
 
888888888888888888888888888(1).jpg
 
8888888888888888888888888(1).jpg

 

 

இந்தச்செய்தி உண்மைதான்

 ஆனால் தயவு  செய்து இவ்வாறான தகவல்களில் சில விசமங்கள் தூவப்படுகின்றன.

 

முதலில் தமிழ்மாறன் ஒரு சட்டத்தரணி கிடையாது

அவர் சடடக்கல்லூரியின் அதிபர்

விரிவுரையாளர்

ஈழத்தமிழினத்தில் மட்டுமல்லலாது

சர்வதேச அளவில் மனித உரிமைச்சட்டவாளர்களில் முதன்மை இடத்தில் இருப்பவர்.

அத்துடன் வேண்டாம் வேண்டாம் என ஒதுங்க

கூட்டமைப்பால் தொகுதி ஒதுக்கப்பட்டவர்...

 

எனவே மக்களின் மனமறிந்து

அவர்களது உரிமை சார்ந்த சரியாக செயற்படுபவர்

சரியாக செயற்படுவார் என நம்புவோம்

 

இவர் பணத்துக்கோ

புகழுக்கோ  மயங்கிடமாட்டார்....

தேர்தலில் தொகுதி கிடைக்காதவர்கள்

இவர் தேர்தலில் நின்றால் தமக்கு தோல்வி என எண்ணும் டக்லசு போன்றவர்களின் கரங்கள் சில கதைகளை மக்களிடையே பரப்பிவருவதாக அறிகின்றோம்

 

தற்பொழுது இராணுவ உதவியுடன் அவர் ஊரிலிருந்து வெளியில் வந்துவிட்டார்

 

அவரிடம் ஒரு அறிக்கையை வெளியிடும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றோம்

பொறுமை காப்போம்

Edited by விசுகு

இந்தச்செய்தி உண்மைதான்

 ஆனால் தயவு  செய்து இவ்வாறான தகவல்களில் சில விசமங்கள் தூவப்படுகின்றன.

 

முதலில் தமிழ்மாறன் ஒரு சட்டத்தரணி கிடையாது

அவர் சடடக்கல்லூரியின் அதிபர்

விரிவுரையாளர்

ஈழத்தமிழினத்தில் மட்டுமல்லலாது

சர்வதேச அளவில் மனித உரிமைச்சட்டவாளர்களில் முதன்மை இடத்தில் இருப்பவர்.

அத்துடன் வேண்டாம் வேண்டாம் என ஒதுங்க

கூட்டமைப்பால் தொகுதி ஒதுக்கப்பட்டவர்...

தவறு விசுகு

இவர் ஒரு சட்டத்தரணி (Attorney –at-Law ) என்று தான் அறிய முடிகின்றது

http://www.cmb.ac.lk/academic/law/?q=node/67

  • கருத்துக்கள உறவுகள்
பிரபல சட்ட வல்லுணர் அரசியல் ஆய்வாளர் புங்குடு தீவு மாணவியின் கொலை சந்தேக நபரை தப்ப விட்டாரா?
19 மே 2015

அவரை தம்மிடம் ஒப்படைக்க கூறி மக்கள் பொலிஸாரின் வாகனத்தை சுற்றி போராட்டம்....தப்பியவர் கெழும்பிலா? வெளிநாடு தப்ப்பிச் செல்ல முயற்சியா?

tamil1_CI.JPG

சமூகத்தால் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவர் புங்குடு தீவு மாணவியின் கொலை சந்தேக நபரை தப்ப விட்டதாக மக்கள் கொதிப்பு:-


அவரை தம்மிடம் ஒப்படைக்க கூறி மக்கள் பொலிஸாரின் வாகனத்தை சுற்றி போராட்டம்....
 

தப்பியவர் கெழும்பிலா? வெளிநாடு தப்ப்பிச் செல்ல முயற்சியா?

காப்பாற்றிய பிரமுகர் பொலிஸாரின் வாகனத்தில்... அடைக்கலம்... மக்கள் அவரை தம்மிடம் விடுவிக்க கோரி போராட்டம்... 3 மணித்தியாலமாக பதட்டம்...

காப்பாற்றிய பிரமுகருக்கு வெளிநாட்டு பணம் புரண்டதாக தகவல்...

இந்தப் சட்டத்துறை வித்தகரான  பிரமுகர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பில் கேட்கவுள்ளதாக பெயர் வெளிப்பட்டது....

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது மக்களால் பிடிக்கப்பட்ட சந்தேக நபரை தன்னிடம் ஒப்படையுங்கள் தான் பொலிசாரிடம் கவனமாக ஒப்படைப்பதாக இந்த பிரமுகர் மக்களுக்கு வாக்குறுதி அளித்து அவரை மீட்டு சென்றதாகவும் பின்னர் அவரை தப்பித்து செல்ல அனுமதித்ததாகவும் மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிடம் தெரிவித்தனர்...

இதே வேளை இந்த பிரச்சனை குறித்து இன்று  பொலிஸ உயர் மட்டத்துடன் பேசி  சமாதானமாக மக்களின் கொந்தளிப்பை தணிக்க இவர் முற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன....

இதனால் ஆத்திரமுற்ற மக்கள் குறித்த பிரமுகரை தம்மிடம் ஒப்படைக்கும்  படி கோரி பொலிஸ வாகனத்தை சுற்றி வட்டமிட்டுள்ளனர்...

பதட்டத்தை அடுத்து அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்....

தப்பிய நபர் வெள்ளவத்தையில் நிற்பதாக கண்டவர்கள் கூறுகின்றனர்.....இவர் கட்டுநாயக்கா வழயாக தப்பிச் செல்லலாம் எனக் கூறப்படுகிறது...

மேலதிக தகவல் எதிர்பாருங்கள்....

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119927/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

http://www.cmb.ac.lk/academic/law/?q=node/67

 

MR. V.T. THAMILMARAN
 
thamilmaran.jpgDean


Faculty of Law, 
University of Colombo, 
Colombo-03, 
Sri Lanka
           
Phone: +94-(0)11-2502001
Mobile: +94-(0)715371516
Email: thamil@law.cmb.ac.lk ,
           
tmaran25@gmail.com

Qualifications
LL.B. (Hons.) University of Colombo
M.Phil (University of Colombo)
Attorney –at-Law of the Supreme Court of Sri Lanka
Postgraduate Diploma in  Human Rights and Women Rights (Lund)
Postgraduate Diploma in Peace Studies and International Relations (Oslo)

Teaching Specialization

  • Public International Law
  • Human Rights Law
  • Constitutional Law
  • International Humanitarian Law
  • Conflict Resolution
  • Women Rights
  • Legal Theories
  • International Commercial Arbitration

 

Research Interests

  • International human rights issues
  • Constitutional issues
  • Peace Negotiations
  • Rule of Law and Democracy
  • Democracy and Good Governance
  • Democratizing International Legal System

 

Awards and Grants

  • Fellow, 21st Trust, London
  • Fellow, State University of New York at Buffalo, USA
  • Fellow, University of Alberta, Canada
  • Fellow, Salzburg Seminar Series (435)
  • Fellow, Aspen Institute, USA

 

Involvement with Other Organizations
Member, Drafting Committee, Proposed New Bill of Rights Chapter in the Constitution, Ministry of Constitutional Affairs and  Ministry of Human Rights (2008-2010)

Executive and Other positions on Boards of International, National Organizations

  • Member, Constitution Net, an International Experts Panel on Constitutional Law (which reviews and analyzes all constitutional proposals around the world.
  • Member, SAARC Free Media Commission (SAFMA), New Delhi, from 2007
  • Member, Board of Studies, Faculty of Graduate Studies, University of Colombo, from 2008
  • Member, Board of Management, FGS, from may 2012
  • Member, Board of Directors, Graduate Foundation, University of Colombo, 2005
  • Member, Board of Management of the Centre for the Study of Human Rights, from 2002 to date
  • Member of the Senate (elected four times consecutively), University of Colombo, from 1998 to 2009
  • Member of the Senate, University of Colombo- Ex-Officio (Dean, Faculty of Law)

Editorial Work

  • Managing Editor, Colombo Law Review, Faculty of Law, University of Colombo
  • Member, Editorial Board, University of Colombo Review, University of Colombo

Books 

  • Human Rights and Democracy: A Collection of Essays, Maduri Malarvagam, April 2011, (Tamil)
  • Power-Sharing  Proposals -1920 – 2008  (Co-edited with Rohan Edrisinha, Asanka Welikala and Mario Gomez) ) Berghof Foundation &  CPA, August 2008
  • Constitution Making – Some Reflections (Revised Second Edition), Maduri Malarvagam, Colombo, April 2004 (Tamil)
  • Autonomy of Aaland Islands : An International Law Perspective, Maduri Malarvagam, Colombo, (November 2002) (Tamil)
  • Constitution Making – Some Reflections, Maduri Malarvagam, Colombo, November 1999 (Tamil)
  • Comparative Law: Some Reflections, Maduri Malarvagam, Colombo, December 1998(Tamil)
  • National Minorities- Conflicts and Resolutions, Karthigeyan Publishers, Colombo, June 1996 (Tamil)
  • Internationalism- Contemporary Thoughts, Kavitha Pathipagam, Madurai, India, December 1995 (Tamil)
  • Thamilmaran's Essays, Dharshana Publishers, Colombo, January 1995 (Tamil)
  • Resolutions to Ethnic Crisis - A World Round Up, Rajini Publishers, Paris, January 1993 (Tamil)
  • Human Rights in Third World Perspective, Har-Anand Publishers, New Delhi, India, January 1992

Chapters and Web Documents

  • “Social Science Perspectives of Natural Disasters: Post- Tsunami Analysis of Law and Society”, Social Science Perspectives of Tsunami, ed., Taylor and Francis (Routledge, India), forthcoming, 2011
  • “Ensnaring Elusive Minds: Making the SAARC Convention on Human Rights a Reality,” Human Rights in the Asia-Pacific Region: Towards Institution Building, ed. Hitoshi Nasu, 2010.
  •  “Cultural Rights in International Law” in Cultural Rights in a Global World (eds. Anura Goonesekera, Cees Hamelink and Venkat Iyer), Nanyang Technological University, Singapore, 2003
  • "Ethnic, Religious and Social Conflicts: Rights of Minorities", inHuman Rights - Perspectives and Challenges, Lancers Books, New Delhi, 1994, 274-281

 

Refereed Journal Articles

  • “Democratizing International Institutions, Economic Review, Peoples Bank publication,October, 2011
  • “Human Rights Approach to Intellectual Property Rights”, Colombo Law Review, 2011 (forthcoming)
  • ‘The International Criminal Court: Some Background Reflections’,Colombo Law Review, (forthcoming), 2010 (60th Anniversary Issue)
  • ‘The Legal Framework for the Promotion and Protection of Language Rights”, Law and Society Trust Review, Vol-11, Issue 162, April 2001
  • “Incorporation of International Law into Municipal Law – A Comparative Analysis”, Sri Lanka Journal of International Law, Vol.11, 1999, pp. 212-227
  • "Human Rights and Democracy - The Experience of Myanmar", Sri Lanka Journal of International Law, Vol.8, 1996, pp.205-210
  • "What is a Nation: Limits of Self-Determination", Sri Lanka Journal of International Law, Vol.7, 1995, pp. 165-180
  • "Self -Determination: A Minorities Perspective", Sri Lanka Journal of International Law, Vol.6, 1994 pp. 271- 283
  • "Rights of Minorities - Ethnic, Religious and Cultural Rights", MRG Occasional Papers, Minority Rights Group, London, March 1991

Translations (From English to Tamil)

  • An Introductory Guide to Human Rights Law and Humanitarian Law, Virginia A. Leary and Suria Wickremasinghe, The Nadesan Centre, Colombo, 1993 (Book)
  • Devolution, The Law and Judicial Construction, Radhika Coomaraswamy, Centre for Regional Development Studies, Colombo, May 1992 (Monograph)
  • Devolution in Sri Lanka : Origins and Concepts, Prof. C. Suriyakumaran, Centre for Regional Development Studies, Colombo, April 1991 (Monograph)

Conference Papers

  • UN Protection of Rights of Minorities, a paper presented at the 19th Study Session of the International Institute of Human Rights, Strasbourg, France, July 1990
  • Migration Issues - What is to be Done?, The 21st Century Trust, Cambridge, July 1991
  • Self-Determination in Minorities Perspective, a paper presented at the Faculty Colloquium, Law  School, State University of New York at Buffalo, New York, USA, February 1992
  • Rights of Women - Gaining the Momentum, a paper presented at the 21st Century Trust Conference, Neemrana, India, November 1994
  • Constitutional Reform: The Sri Lanka's Experience, a paper presented at the Seminar organised for the Master of Laws students, University of Madras, December 1995
  • Ethno- Nationalism and Challenges to Human Rights, a paper presented at the International Students Week, University of Ilmenau, Germany, May 1997
  • Equal Status and Human Rights of Women - The National Experience : Sri Lanka , a paper presented at the Advanced Training Programme conducted by the Raoul Wallenberg Institute for Human Rights and Humanitarian Law, University of Lund, Sweden, September-October 1997
  • Constitutionalism - As A Means of Conflict Resolution,Faculty Forum, Faculty of Law, University of Alberta, Edmonton, Canada, December 1998.
  • Cultural Rights in International Law, Asian Conference on Cultural Rights in a Global World, conducted by Asian Media Information and Communication Centre, September 2001
  • Challenges to the Law Governing Internal Armed Conflicts: Sri Lanka’s Experience,  South Asian Symposium on International Humanitarian Law, conducted by the ICRC, Kuala Lumpur, Malaysia, April 2006
  • Social Science Perspectives of Natural Disasters: Post- Tsunami Analysis of Law and Society, Centre for the Study of Social Sciences and Community Medicine, JNU, New Delhi, January, 2008
  • Devolution of Powers and Conflict Resolution, International Conference of Asian Scholars, Daejon, South Korea, July, 2009
  • Ensnaring Elusive Minds: Making the SAARC Convention on Human Rights a Reality, International Conference on Human Rights in the Asia – Pacific Region: Towards Institution Building, University of Sydney, November, 2009
  • “Need for a Right to Information Legislation” National Law Conference, Bar Association of Sri Lanka, Plenary Session Presentation, November, 2011

Graduate supervision
Serving as supervisor for many M.Phi. / M.A/LL.M. theses and also supervising a good number of  Extended Essays of the postgraduate programmes of the Faculty of Graduate Studies.  

Other responsibilities

  • Participate as resource person for many INGOs and NGOs in the Country.
  • Also sought by international and national media organizations as a political commentator and analyst. 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆக்கிரமிப்பில்.. நீதியை எதிர்பார்ப்பது வீண் வேலை..! சிங்கள தேசமே ஒரு அநீதியின் தேசம். :o:rolleyes::icon_idea:


உடன ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்த ஆரம்பித்து விட்டார்கள். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் இந்தத் தன்னெழுச்சி வருங்காலக் குற்றவாளிகளை சற்று யோசிக்கத் தூண்டும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் குற்றவாளிகளை பத்திரமாக இடமாற்றும்.. தப்பவிடும்.. சிந்தனையில் உள்ள சிங்களப் படைத்துறையும்.. சிங்கள நீதித்துறையும்.. மக்களை ஆயுத முனையில் அச்சுறுத்தும் சிங்கள ஆக்கிரமிப்பு பொலிஸ் படை இருப்பும்.. உள்ளவரை மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வெறும் அடையாளங்களாக இருக்குமே தவிர அந்த மக்கள் எதிர்பார்க்கும் இலக்கினை நீதியை எட்ட உதவுமா என்பது கேள்விக்குறிதான். :icon_idea:


வேலணையில் தாதி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட போதும்.. இதைத் தான் செய்து முடித்தார்கள். இன்னும் நீதி இல்லை...?! :(

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/73183-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4/
 

 

வேலணை அரசினர் ஆதாரவைத்தியசாலையில் 28 அகவையுடைய இளம் தாதி கொலைசெய்யப்பட்டுள்ளார். இங்கு வைத்திய அதிகாரியாக சிங்கள வைத்திய அதிகாரி பணிபுரிகின்றார். இவரே இளம் தாதியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆத்திரமமடைந்த மக்கள் சனிகிழமை காலை வேலணை ஆதார வைத்தியசாலையினை முற்றுகையிட்டு சிங்கள வைத்திய அதிகாரியை தாக்க முற்பட்டவேளை அங்கு சென்ற சிங்கள கடற்படையினர் வைத்திய அதிகாரியை தமது முகாமிற்கு பாதுகாப்பாக கூட்டி சென்றுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் வைத்தியசாலையினை முற்றுகையிட்டு சிங்கள வைத்தியரை தாக்க முனைந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் பொலிசார் கடற்படையினர் மக்களை விரட்டி அடித்துள்ளனர். 

 

10 July 2010

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தவறு விசுகு

இவர் ஒரு சட்டத்தரணி (Attorney –at-Law ) என்று தான் அறிய முடிகின்றது

http://www.cmb.ac.lk/academic/law/?q=node/67

 

எனது ஊரைச்சேர்ந்தவர்

மற்றும் உறவு என்ற ரீதியில் 

நானறிந்து

அவர் சட்டத்தரணியாக தொழில் செய்பவர் அல்ல....

 

சட்டக்கல்லூரியில் விரிவுரையாளர்களில் முதலிடத்தில் உள்ளவர்

அத்துடன் இலங்கையில் நீதிபதிகளை நியமிக்கும் குழுவின் தலைவர்.

 

என்னைப்பொறுத்தவரை

இந்த நிமிடம்வரை

லங்காசிறி இணையத்தைவிட

நம்பிக்குரியவராக உள்ளார்.

பார்க்கலாம்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் சிங்கள படைத்துறை காவல்துறையை பொறுத்த வரை அதுக்கு ஆட்சி மாற்றமெல்லாம் இல்லை. இன அழிப்பு மன நிலையில் தான் அவை வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள்.. தமிழ் பெண்கள் இன அழிப்புக்குரிய விடயங்கள். அதனை அவர்கள் யார் செய்தாலும் பாதுகாப்பாகச் செய்ய அனுமதிப்பார்கள்.

 

ஆனால்.. கொழும்பில் பதுங்கி இருக்கும் எங்கட அரசியல்வாதிகள் சிலர் இதயத்தால்.. மைத்திரி.. ரணில்.. சந்திரிக்காவோடு ஐக்கியமாக வேண்டியது தான்.

 

இவற்றை நிறுத்தனுன்னா.. அதுக்கு ஒரே வழி.. எமது அவலங்களை உலகம் சரி வர விளங்கச் செய்தி.. அதன் மூலம் ஆக்கிரமிப்பை முற்றாக நீக்கி... தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை அடைவதுதான். :icon_idea:

லங்காசிறி இணையத்தைவிட

நம்பிக்குரியவராக உள்ளார்.

பார்க்கலாம்...

இச் செய்தி லங்கா சிறி யில் வந்த செய்தி அல்ல. யாழ்பாணத்தில் இருந்து வரும் 'உதயன்' செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேக நபருடன்,சட்டத்தரணியும் நாளை 12 மணிக்கு ஆஜராவர் : உறுதியளித்தார் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

f2651e75f64a10540c2d40b58796d2d4.jpg

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு உடந்தையாக சட்டத்தரணி தமிழ்மாறன் செயற்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து மக்கள் கொந்தளித்துள்ளனர்.

 
இந்நிலையில் இன்று பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது சட்டத்தரணி மக்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
 
மேலும் இன்றைய தினம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தால் மட்டுமே  சட்டத்தரணி தமிழ்மாறனை பொலிஸாருடன் செல்ல அனுமதிப்போம் எனக்கூறி பொலிஸாரது வாகனத்தை இடைமறித்து புங்குடுதீவு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
 
 இதனால் பொலிஸாருக்கும்,மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.பின்னர் இந்த முறுகல் நிலை தொடர்ந்ததால் வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பொதுமக்களுக்கு உறுதிமொழி ஒன்றினை வழங்கினார்.
 
அதாவது, நாளை மதியம் 12 மணிக்கு  கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் சட்டத்தரணி தமிழ்மாறன் ஆகியோர் இருவரும் யாழ்.நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று புங்குடுதீவு பொதுமக்களுக்கு வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.
 
 
எனினும் பொதுமக்கள் அவரது உறுதிமொழியை ஏற்கவில்லை.சிலர் மாத்திரமே அவரின் உறுதிமொழிக்கு கட்டுப்பட்டனர்.
 
இதேவேளை சட்டத்தரணி தமிழ்மாறன் குறித்த பிரதேசத்தில் இருந்து அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்து குறித்த இடத்தை விட்டு சென்றனர்.ஆனாலும் பொதுமக்கள் அவர்களை கண்ணோடும் விதத்தில் குறித்த பிரதேசம் மட்டுமல்லாது மூளை முடுக்கெல்லாம் மக்கள் அவர்களை கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
8888(11).jpg
 

http://www.onlineuthayan.com/News_More.php?id=301634040819392840#sthash.KSybyoPU.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வழக்கறிஞர் போகாவிட்டாலும் அரசு ஒரு வழக்கறிஞரை அமர்த்தி வழக்கை நடத்துமல்லவா?

குற்றவாளி என்று தீர்ப்பு வரும்வரையில் நிரபராதி என்பது சட்டவிதி. (சட்டத்தின் ஆட்சி இலங்கையில் இருக்குதா என்பது வேறை.. :blink: )

குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பாக வழக்காடும்போது அவர் உண்மையிலேயே குற்றமற்றவர் என உணர்ந்து வாதாடுவது ஒரு வகை. குற்ற‌ம் புரிந்தவர் என அறிந்து தண்டனைக் குறைப்பிற்காக வாதாடுவது இன்னொரு வகை. சட்டம் தெரிந்தவர்கள் விளங்கப்படுத்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாறன் சட்டத்தரணிதான்.

சட்டக்கல்லூரி அல்ல, சட்ட வளாக டீன்.

முண்ணணி சர்வதேச மனித உரிமை செயல்பாட்டாளர் என்பது அற்புதமான கற்பனை.

நான் அறிந்தவரை கிரக் கேஸ், ஒத்த ரோட்டுப் பேர்வழி. ஊழல் பேர்வழியில்லை - ஆனால் இந்த வழக்கின் விபரம் பற்றித் தெரியாது.

எனது ஊரைச்சேர்ந்தவர்

மற்றும் உறவு என்ற ரீதியில் 

நானறிந்து

அவர் சட்டத்தரணியாக தொழில் செய்பவர் அல்ல....

 

சட்டக்கல்லூரியில் விரிவுரையாளர்களில் முதலிடத்தில் உள்ளவர்

அத்துடன் இலங்கையில் நீதிபதிகளை நியமிக்கும் குழுவின் தலைவர்.

 

என்னைப்பொறுத்தவரை

இந்த நிமிடம்வரை

லங்காசிறி இணையத்தைவிட

நம்பிக்குரியவராக உள்ளார்.

பார்க்கலாம்...

 

இவரை கூட்டமைப்பு வரும் தேர்தலில் நிற்கவைக்க முயற்சி செய்ததாகவும் அதனை இவர் மறுத்ததாகவும் அறிந்தேன். ஆனாலும் கூட்டமைப்பு தொடர்ந்தும் முயற்சிப்பதாகவே தெரிகின்றது.
 
இங்கு யாரோ gapஇல கடாய் வெட்ட முயற்சிப்பதாகவே தெரிகின்றது.

பரிதாபமாக படுகொலை செய்யப்பட்ட எமது மண்ணின் புதல்வி வித்தியாவின் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிறனர் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி தவராசா தலைமையிலான குழுவினர்....

 

 

 

Edited by BLUE BIRD


வித்தியா கொலையாளிகளுக்கு இருட்டில் நடந்தது என்ன…?

 

  • கருத்துக்கள உறவுகள்

விரிவி பம்முறதைப் பார்த்தா 40 லட்சம் கதை உண்மை போலதான் கிடக்கு.

எந்த குற்றவாளிக்கும் அவர் வழக்கை வாதாட வக்கீல் வழங்கப்படவேண்டும். வக்கில் வைக்க விடமாட்டோம், வாதாடப்போவபரின் காலை உடைப்போம் என்பதெல்லாம் பாமரத்தனம்.

இந்த வழக்கை குற்றம் சுமத்தப் பட்டோரின் right to fair trial ஐ பாதிக்கா வண்ணம் யாழ் நீதிமன்று ஒன்றில் நடத்த முடியாது போனால், வழக்கை வவுனியாவுக்கோ அல்லது தெற்கிற்கோ மாற்றும் படி குற்றம் சுமத்தப் பட்டோரின் வக்கீல்கள் கேட்க முடியும். அப்படி கேட்காவிடினும் அட்டோனி ஜெனரல் தானாய் மாத்தலாம்.

எனவே சனம் ஓவராய் உணர்சிவசப்படுவது மறைமுகமாய் குற்றம் சாட்டப் பட்டோருக்கு அனுகூலாமாய் அமையக்கூடும்.

ஆனால் விரிவி செய்திருப்பதாக சொல்லப்படுது இதுவல்ல. மக்களை ஏமாற்றி, அவர்கள் பக்கம் இருப்பதுபோல நடித்து ஒரு குற்றவாளியை நாட்டை விட்டுத்தப்ப உதவிசெய்தார் என்பது மக்களினதும் பாதிக்கப் பட்ட பெண்ணினது சகோதரனினதும் குற்றச்சாட்டு.

இதற்கு விரிவி பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு இவர் செய்திருந்தால் சட்டத்துறையின் மேன்மைக்கு களங்கம் கற்பித்த ஒரு கறுப்பு ஆடு விரிவி என்றுதான் பொருள்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கோடன் கோடன் சேர்ட் போட்ட கம்பஸ் பெடியனைப்பார்க்க பரிதாபாமாய் கிடக்கு. எந்த உணர்ச்சி அரசியல்வாதிக்கு பலிக்கடா ஆகப்போகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதே சிங்கள இடமாக இருந்திருந்தால்.. சிங்களவர்கள் வீடு புகுந்து வெட்டித் தள்ளி இருப்பார்கள். எமது மக்கள் இந்தளவு நியாயத்தோடு தமது வரம்புக்குள் நின்று தங்கள் உணர்வை வெளிப்படுத்தப்.. போராடுவது என்பதே வரவேற்கத்தக்க நிகழ்வு. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்ச நிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆயுதங்கள், கலகம் அடக்கும் உபகரணங்களுடன் குறிப்பிட்ட இடைவெளியில் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் நகரில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை புங்குடுதீவில் மக்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் கொலையாளிகளை காப்பாற்ற முயலும் சட்டத்தரனி தமிழ்மாறனால் அப்பகுதி மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

11267305_477713485712825_1266628252_n.jp

11304526_477668685717305_974802170_n.jpg

11225855_477668705717303_410153256_n.jpg

11281898_477668715717302_600477674_n.jpg

11329615_477668679050639_732230921_n.jpg

11124087_477709522379888_354866596_n.jpg

11257619_477709629046544_15158225_n.jpg?

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாவின் கொலையோடு சம்பந்தப்பட் முக்கியமான 3 நபர்களின் வீடுகள்பொது மக்களால்தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக் கூடியதாக இருக்கிறது..

Edited by யாயினி

ின் எதிரொலியாக இன்று யாழ்ப்பாணத்தில் பெரும் பதட்டமும் அழிவும் நிலவுகிறது. இராணுவம் மீண்டும் வந்து நிலை கொண்டிருக்கிறது. அந்த மாணவிக்கு 

நடைபெற்ற சம்பவம் நமது இனத்திற்கு வேண்டாத வேறொருவரின் தூண்டுதலாலோ அல்லது தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாகவோ செயற்பட்டிருக்கலாம். அதுவும் பல்லாயிரக் கணக்கானோரைப் பலிகொடுத்துவிட்டு அவர்கள் நினைவு நாளை நினைவில் நிறுத்தி பிரார்த்திக்கும் நேரத்தில் இப்படி ஒரு சம்பவம்! இது இந்த நினைவு நாளின் கவனத்தை முற்றாக திசை திருப்ப ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது. எங்களை அழிக்க வேறொருவர் வேண்டியதில்லை. நாங்களே போதும் என்று நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் தலைகுனிந்து வெட்கப்பட்டு வேதனைப் படவேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம். ஆறு ஆண்டுகள் கழிந்து இன்னமும் நீதி கிடைக்காத கொந்தளிப்பும் குமுறலும் மக்கள் மனதில் புகைந்து கொண்டிருந்த இயலாமையும் இன்று இப்படி ஒரு அநியாயம் இன்று நடைபெற்றதைப் பொறுக்க முடியாத மக்கள் இன்று பொங்கி எழுந்துள்ளார்கள்.

மாணவிக்கு நடந்த அக்கிரமத்திற்கு காரணமானவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப் படவேண்டும். அன்று எமது முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற மக்கள் அழிவுக்கு இன்றுவரை நீதி கிடைக்காததால் அந்த சட்டத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாக இன்று மாணவிக்கு நடைபெற்ற அநீதிக்கு பிராயச் சித்தம் செய்வதற்கு சட்டத்தையே தங்கள் கையில் எடுத்துக் கொண்டு தண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள். இருந்தும் இன்று தமிழ் மண்ணில் நடக்கும் இந்த வன்முறைகளும் அழிவுகளும் மற்றவர்கள் பார்த்து நகைப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது. இன்றைய நிலைமை சுமூகமாகி அமைதி நிலவ வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்தனை செய்கிறோம். 

கயவர்களால் கெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் ஆத்மா சாந்தியடையவும் அவருடைய பெற்றோர் உற்றார் உறவினர்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளக் கூடிய வலிமையையும், இந்த நிலைமை ஏற்படுத்தவதற்கு காரணமாணவர்களுக்கு தண்டனை கிடைக்கவும், இனி இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு பாடாமாக அமையவேண்டும் என்றும் ஆண்டவனை வேண்டுகிறோம்.

சில காலமாக கலாச்சாரச் சீரழிவுகள், மது, போதைவஸ்து பாவனைகள், பாலியல் வல்லுறவு, கொலை கொள்ளை என்று பலதும் எமது மண்ணில் நடைபெற்றுக் கொண்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

இவை எதுவும் இல்லாத ஒரு சமூகம் சில வருடங்களின் முன்பு எமது இனமே மார்தட்டும் நிலையில் உருவாக்கப்பட்டு பேணப்பட்டு இருந்தது.ஆனால் அந்த நிதர்சனத்தை உணர்ந்து, புரிந்து, அறிந்து முடியாத நாம், நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் தூக்கி ஏறிவதைப்போல எமக்குக் கிடைத்த அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு இப்ப புலம்புவதில் என்ன பயன். 

எல்லாம் வல்ல இறைவா! எம் மண்ணையும், மொழியையும், மக்களையும், எமக்கே உரிய பண்பாடு காலாச்சாரங்களையும் காப்பாற்றுவாயாக.

 

மேய்ப்பானற்ற ஆடாக

தட்டு தடுமாறி

ததி கெட்டு தள்ளாடுகிறது

தமிழினம் இன்று!

நள்ளிரவிலும் நடமாடினார்கள்

நம் பெண்கள் அன்று!

நடுப்பகலிலும் நடமாட நடுங்குகிறார்கள்

நம் பெண்கள் இன்று!

பாசமதை அள்ளிவைத்து

நேசத்துடன் தான் வளர்த்து

பாடமதை படிப்பதற்கு

பாடசாலை சென்ற பிள்ளை!

பாடையிலே வந்ததனை பார்த்து

பரிதவித்து பதறும்

கதிகலங்கி கதறுமிந்த

பாசமுள்ள பெற்றோறோரை

பார்க்கின்ற கொடுமையதே

கொடுமையிலும் கொடுமையாகும்!

இரத்தமும் சதையுமான இவ்வுடம்பில்

இச்சையின் உச்சமே காமத்தின் வெறி

வக்கிர நோக்கத்தால்

உக்கிர உணர்வுடன்

எம்பிய உன் உறுப்பின்

உரசல் சுகத்திற்காக

ஒன்றுமறியா எம் பிஞ்சுகளை

நஞ்சாக்கும் நாய்களுக்கு

நாள்பட்டே தண்டனைகள் சட்டத்தில்!

காமுகனே உன்னை பெற்றவளும்

ஒரு பெண்தானே

உடன் பிறந்தவளும் ஒரு பெண்தானே

இத்தனை பெண்கள் இருக்கும்

உன் வாழ்வில்

ஏனடா இந்த ஈன செயல்

ஈனப்பிறவியே!!!

பெண்ணை பூவென்று சொன்னார்கள்

வாட்டி வதைப்பதற்க்கோ

கசக்கி எறிவதற்க்கோ அல்ல!

காலகாலமாக

அன்பெனும் மனம் பரப்பி

அழகாக காதல் தரும்

உன்னத பிறவியடா பெண்

பூசிக்கவிட்டாலும்

நேசிக்காவிட்டாலும்

பறித்து கசக்கி எறிந்துவிடாதீர்கள்!

அன்று ஒரு கிரிசாந்தி

இன்று ஒரு வித்யா

நாளை????

தண்டனைகள் கடினமானால்

தப்புகள் குறைக்கப்படும்

தங்கை வித்யாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்

என்.எஸ்.வி-

  • கருத்துக்கள உறவுகள்


02b1a3f165984fa6bf3c7e785f9afa69

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.