Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது

Featured Replies

.
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015, 07:30.09 AM GMT ]
trinco-anjali.JPG
இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக திருகோணமலையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 17.05.2015 காலை 9.10 மணிக்கு சிவன் கோயிலடியில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு முன்னால் இது நிறைவேற்றப்பட்டது..

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சி.தண்டாயுதபாணி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண சபை திருகோணமலை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜனார்த்னன், முன்னாள் திருகோணமலை நகர சபை தலைவர் க.செல்வராசா, சி.நந்தகுமர். த.கௌரிமுகுந்தன், வெருகல் பிரதேச சபை முன்னாள் தலைவர் ச.விஜயகாந்த், ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.

தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டார்கள்.

trinco-anjali-01.JPG

trinco-anjali-02.JPG

trinco-anjali-03.JPG

trinco-anjali-04.JPG

trinco-anjali-05.JPG

trinco-anjali-06.JPG

http://www.tamilwin.com/

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இன அபிமானம்.

யாழ்ப்பாணத்து எம்பி மார் சிலரும், கஜன் கொம்பேனியும் காட்டுற படம் - பிண அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கவில்லை கோசான் எப்படி உங்களால் இதை மட்டும் இன அபிமானம் என இனங்காண?

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாளனால் சூழப்பட்ட நிலையில்,

நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம், நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம் எண்டு நாய்சேகர் வடிவேலு ரேஞ்சுக்கு சீன் போடாமல்,

செய்யவேண்டிய நாள் காரியத்தை செய்து எம் உணர்வை உறுதியாய் உலகுக்குச் சொல்லுவது இன அபிமானம்.

சிவாஜிலிங்கம், சுரேஸ்,கஜன்ஸ் செய்வது - முள்ளிவாய்க்கலை வைத்துப் பிழைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாது நீங்கள் ஏற்றிய அணையா விழக்கை கைகூப்பித் தொழுகிறேன். தலை பணிந்து வணங்குகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாள் எனக்கு இன்னும் விடியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தை உணர்கிறேன். இனக்கொலையுண்ட என் இனக்குடும்பத்தவருக்கு தடையை மீறி ஈழத்தில் அஞ்சலி செலுத்துகிறவர்களைப் பணிகிறேன். அவர்கள் ஏற்றிய தீபங்களை வணங்குகின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாளனால் சூழப்பட்ட நிலையில்,

நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம், நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம் எண்டு நாய்சேகர் வடிவேலு ரேஞ்சுக்கு சீன் போடாமல்,

செய்யவேண்டிய நாள் காரியத்தை செய்து எம் உணர்வை உறுதியாய் உலகுக்குச் சொல்லுவது இன அபிமானம்.

சிவாஜிலிங்கம், சுரேஸ்,கஜன்ஸ் செய்வது - முள்ளிவாய்க்கலை வைத்துப் பிழைப்பது.

முள்ளி வாய்காலில் போய்

பாரிய நினைவேந்தல் ஒன்றை நீங்கள் செய்து விட்டு

வந்தால் இப்படி எழுதலாம்.

அதுவரைக்கும் இது வெறும் காழ்புணர்வு உங்களால் முடியாதை

இன்னொருவன் செய்யும்போது வரும் பொறாமை என்பதாகத்தான்

இதை பார்க்க முடியும் (நீங்கள் மூன்று பந்தி பிரித்து எதை வேண்டுமானாலும் எழுதலாம்)

வாசிப்பவர்களுக்கு குறைந்த அளவில் வாசிக்கும் மூளை திறனாவது இருக்கும்.

தடைகளை தகர்பதற்கும்

சாத்தியமானதை செய்வதற்கும்

நிறைய வேறுபாடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலீவர் சம்பந்தன் எங்க மாத்தறை அணிவகுப்பில் குந்தி இருந்து கொட்டாவி விடப் போய்விட்டாரோ..?! :o:(:rolleyes:

மைத்திரியோடு இதயத்தால் நெருங்கியவரையும் காணம்.

உறவுகளைப் பறிகொடுத்த மக்களுக்கு இது ஓர் ஆறுதல். அவர்கள் தான் இதனைச் செய்கிறார்கள். இதயத்தால் நெருங்கியவர்களும்.. கொட்டாவிகளும்.. ஓடி ஒளித்துவிட்டன. :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த இதயத்தால் நெருங்கியவர்களையும் கொட்டாவி விடுபவர்களையும்தான் முன்கதவால் பெரும்பாண்மையுடன் அடுத்த தேர்தலில் மக்கள் வரவேற்கப் போகின்றார்கள். அது மட்டுமில்லை  இந்த இதயத்தால் நெருங்கியவர்களும் கொட்டாவி விடுபவர்களும்தான் எமது சமுதாயத்திற்கு ஏதாவது நன்மையும் எதிர்காலத்தில் செய்யப் போகின்றார்கள்.
 
இப்போதெல்லாம் தாயக மக்கள் நல்ல தெளிவு. இந்தப் பாச்சா எல்லாம் இனி வேலைக்கு உதவாது.
 
பிகு: இங்கு "இதயத்தால் நெருங்கியவர்களையும் கொட்டாவி விடுபவர்களையும்தான்" என நான் எமது மக்களின் பிரதிநிதிகளைத் தரக்குறைவாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். இது எனது கருத்திடும் பாணியில்லை, மேற்கோள் காட்டவே குறிப்பிட்டேன்.
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நான் மழலையாய் ஓடிப் பழகிய மண். 2009 ற்குப் பிறகு முள்ளிவாய்க்காலை பற்றிக்கேள்விப்பட்டு, இலங்கை போறசமயம், டிரிப்போட டிரிப்பா, வற்றாபளை அம்மனில் வாங்கிய கச்சானை கொறித்தபடியே முள்ளிவாய்க்காலுக்கும் விசிட் அடிக்கும் புலவாலில்லை நான்.

முள்ளிவாய்க்காலை வைத்து உணர்சி அரசியல் செய்ய எனக்கு ஒருதேவையுமில்லை. தேவையானளவு ( பொன்னம்பலம் குடும்பம் அளவுக்கு இல்லைத்தான்) பணம் என்னிடம் இருக்கு. இப்படித்தான் வயிறு வளர்க்க வேண்டுமென்றில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிப்பு!
 
muliii.jpg

இறுதிப்போரின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நினைவேந்தல் வாரத்தின் முதல்நாளான இன்று யாழ். பல்கலைக் கழகத்திலும் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

எதிர்வரும் 18ம் திகதி வரை நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் எனவும் 18ம் திகதி பல்கலைகழக சமூகம் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வை நாடாத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://newsgtv.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இதயத்தால் நெருங்கியவர்களையும் கொட்டாவி விடுபவர்களையும்தான் முன்கதவால் பெரும்பாண்மையுடன் அடுத்த தேர்தலில் மக்கள் வரவேற்கப் போகின்றார்கள். அது மட்டுமில்லை  இந்த இதயத்தால் நெருங்கியவர்களும் கொட்டாவி விடுபவர்களும்தான் எமது சமுதாயத்திற்கு ஏதாவது நன்மையும் எதிர்காலத்தில் செய்யப் போகின்றார்கள்.
 
இப்போதெல்லாம் தாயக மக்கள் நல்ல தெளிவு. இந்தப் பாச்சா எல்லாம் இனி வேலைக்கு உதவாது.
 
பிகு: இங்கு "இதயத்தால் நெருங்கியவர்களையும் கொட்டாவி விடுபவர்களையும்தான்" என நான் எமது மக்களின் பிரதிநிதிகளைத் தரக்குறைவாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். இது எனது கருத்திடும் பாணியில்லை, மேற்கோள் காட்டவே குறிப்பிட்டேன்.

ஆமாம் ஆமாம். 1948 இல் இருந்து பல்லக்கில் சுமந்து நெருங்கிய இதயத்தால்.. சாதிக்க முடியாததை.. இவை சாதிக்கப் போயினம்.

மக்கள் தெளிவாகத் தான் இருக்கிறார்கள். அண்மையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒலித்த குரல்கள் சாட்சி.

கொட்டாவிகளும்.. இதயத்தால் நெருங்கியவர்களும் மக்களுக்கு நல்லாட்சியில் ஆற்றும் பணி பற்றி மக்கள் நல்ல பட்டறிவோடுதான் இருக்கிறார்கள். தேர்தல் வரும் போது அந்த அறிவை மக்கள் பயன்படுத்துவார்கள்... என நம்பலாம்.

என்ன ஒரு கெடுதல்.. தேசிய தலைவர் கட்டிக்காக்க முற்பட்ட தமிழரின் பலம் இந்தக் கொட்டாவிகளாலும்.. பின் கதவுக் கோஷ்டிகளாலும் சிதைந்து சின்னாபின்னமாவது தான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் மக்களுடன் சென்று அஞ்சலி செலுத்தணும் என  தமிழ்த்தேசிய முன்னணி கேட்பதற்கு

இல்லை

இவ்வாறு ஒழிந்து நின்று விளக்கு ஏற்றிவிட்டு போவது தான் சரியான ஐனநாயக வழி என இப்ப தான் புரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நான் மழலையாய் ஓடிப் பழகிய மண். 2009 ற்குப் பிறகு முள்ளிவாய்க்காலை பற்றிக்கேள்விப்பட்டு, இலங்கை போறசமயம், டிரிப்போட டிரிப்பா, வற்றாபளை அம்மனில் வாங்கிய கச்சானை கொறித்தபடியே முள்ளிவாய்க்காலுக்கும் விசிட் அடிக்கும் புலவாலில்லை நான்.

முள்ளிவாய்க்காலை வைத்து உணர்சி அரசியல் செய்ய எனக்கு ஒருதேவையுமில்லை. தேவையானளவு ( பொன்னம்பலம் குடும்பம் அளவுக்கு இல்லைத்தான்) பணம் என்னிடம் இருக்கு. இப்படித்தான் வயிறு வளர்க்க வேண்டுமென்றில்லை.

எதிரி எமது உறவுகளுக்கு ஒரு விளக்கு ஏற்ற கூட

எமை விடுகிறான் இல்லை என்று நாம் ஏங்கி நிற்கும்போது ....

உங்கள் பணம் எவளவு என்று நாம் அறிந்து என்ன செய்வது ....?

முடியுமானால் அங்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செய்து வாருங்கள்.

பின்பு வந்து அங்கு அஞ்சலி செய்பவர்கள் பற்றி எழுதுங்கள்.

சும்மா காழ்புணர்வை கொட்டாதீர்கள் என்று எழுதினால்

சுயவிளம்பரத்தில் இறங்குகிறீர்கள்??

(உங்கள் உணர்வை (முள்ளி வாய்க்கால் பற்றிய) மதிக்கிறேன். கருத்துகளுடன் காள்புனர்வுகளுடன்

உடன்பட முடியாது)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இதயத்தால் நெருங்கியவர்களையும் கொட்டாவி விடுபவர்களையும்தான் முன்கதவால் பெரும்பாண்மையுடன் அடுத்த தேர்தலில் மக்கள் வரவேற்கப் போகின்றார்கள். அது மட்டுமில்லை  இந்த இதயத்தால் நெருங்கியவர்களும் கொட்டாவி விடுபவர்களும்தான் எமது சமுதாயத்திற்கு ஏதாவது நன்மையும் எதிர்காலத்தில் செய்யப் போகின்றார்கள்.
 
இப்போதெல்லாம் தாயக மக்கள் நல்ல தெளிவு. இந்தப் பாச்சா எல்லாம் இனி வேலைக்கு உதவாது.
 
பிகு: இங்கு "இதயத்தால் நெருங்கியவர்களையும் கொட்டாவி விடுபவர்களையும்தான்" என நான் எமது மக்களின் பிரதிநிதிகளைத் தரக்குறைவாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும். இது எனது கருத்திடும் பாணியில்லை, மேற்கோள் காட்டவே குறிப்பிட்டேன்.

தமிழகத்தை பொருத்தவரை திருத்த முடியாத கழுதை அல்லது அடித்தும் திருத்த முடியாத கழுதை

இரண்டில் ஒன்றுக்குத்தான் வாக்கு போட முடிகிறது.

இதை காரணம் காட்டி உங்களை போன்றவர்கள் அப்ப அப்ப இப்படிதான் ரீல் விடுவார்கள்

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று.

தெளிவு இருந்தாலும் தெரிவு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் ??

இப்போதைக்கு புலிகளின் பின்னால் கூட்டமைப்பை புலிகளே வழி விட்டதால்

இது மக்களின் தெரிவாக இருக்கிறது அவளவுதான்

சொந்த முகங்களை இவர்கள் காட்டிவரும்போது மக்கள் புறக்கணிப்பார்கள்.

மக்கள் எமது தெரிவான மைத்திரிக்கு வாக்கு போட்டு

எமக்கு ஆணை கொடுத்திருக்கிறார்கள் என்று இங்கும் சிலர் அவித்தார்கள்

உண்மை கணக்கு பெரும்பான்மை யாருக்கும் வாக்கு போடவில்லை என்பதுதான்.

மக்கள் வாக்களித்தால் ....

கொட்டாவி விடுபவர்களை

கொற்றை மன்னர்கள் என்றா எழுத வேண்டும் ??

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாளனால் சூழப்பட்ட நிலையில்,

நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம், நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம் எண்டு நாய்சேகர் வடிவேலு ரேஞ்சுக்கு சீன் போடாமல்,

செய்யவேண்டிய நாள் காரியத்தை செய்து எம் உணர்வை உறுதியாய் உலகுக்குச் சொல்லுவது இன அபிமானம்.

சிவாஜிலிங்கம், சுரேஸ்,கஜன்ஸ் செய்வது - முள்ளிவாய்க்கலை வைத்துப் பிழைப்பது.

மே 18 மே19 என்னும் குழம்பாமல் இரகசியமாக மே17இல் தொலைபேசி ஊடாக தமக்கு தெரிந்தவர்களை கூப்புட்டு சொல்வது இன அபிமானமா?

அப்ப மாவை ஏன் மே19 என்டு அறிக்கை விட்டவர். சிவாஜியோட போன ஐங்கரநேசனை சில தமிழரசு கட்சிக்கார்ரை என்ன செய்யலாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறையாளனால் சூழப்பட்ட நிலையில்,

நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம், நாங்களும் முள்ளிவாய்க்கால் போறம் எண்டு நாய்சேகர் வடிவேலு ரேஞ்சுக்கு சீன் போடாமல்,

செய்யவேண்டிய நாள் காரியத்தை செய்து எம் உணர்வை உறுதியாய் உலகுக்குச் சொல்லுவது இன அபிமானம்.

சிவாஜிலிங்கம், சுரேஸ்,கஜன்ஸ் செய்வது - முள்ளிவாய்க்கலை வைத்துப் பிழைப்பது.

"அமைச்சர் கருஜெயசூரிய பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாதென்று கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது கேள்வி அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா? என்பதேயாகும். கண்மூடித்தனமாக எத்தனையோ ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் வெற்றி விழா கொண்டாடுகிறார்களா? இல்லையா? என்பதல்ல கேள்வி. தமிழ்மக்கள் மரணித்துப்போன தமது உறவுகளை சொந்தங்களை வருடா வருடம் நினைவு கூறுவதை யாரும் தடை செய்யாமல் இருப்பதே உண்மையான சுதந்திரமாகும். மரணித்துப் போன எமது உறவுகள் அரசாங்கத்துக்கும் அமைச்சர்களுக்கும் பயங்கரவாதிகளாக தோற்றலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அவர்கள் சொந்த இரத்தம் அவர்களது உறவுகள். இறந்து போன போராளிகள் தமது இனத்துக்காகப் போராடியவர்கள். அவர்களை நினைவு கூருவது தமிழ் மக்களுடைய சுதந்திரமான உரிமைகளாகும்."

சுரேஷ் பிரேமச்சந்திரன், பா.உ

பேச்சாளர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

11209459_10153028247443801_3892421745782
Like · Comment · Share

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.