Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்
[ சனிக்கிழமை, 30 மே 2015, 04:21.18 PM GMT ] [ பி.பி.சி ]
sampur-people.jpg
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். 

குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே பொலிஸார் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாக சம்பூர் மக்கள் கூறுகின்றார்கள்.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sampur-people.jpg

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் இவர்களது குடியிருப்பு காணிகள் உடபட அந்த பிரதேசத்திலுள்ள சுமார் 1100 ஏக்கர் நிலம் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காகவும் கடற்படை பயிற்சி முகாமிற்கும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகளில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக ஜனாதிபதியினால் இம் மாதம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அரசாங்கத்தினால் காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை.

இருந்த போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் விரைவாக மீள்குடியேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டு, சுயமாகவே சென்று காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை, சிலர் தற்காலிக கொட்டில்கள் அமைத்து தங்கியும் இருந்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்வதற்கு தயாராகவிருந்த நிறுவனமொன்று இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின் 

சம்பந்தன் சுமதுகளின் கனவுலகம் இப்படி போய்விட்டதே ???????????????????????????

சம்பூரில் மீள்குடியேற முயன்றவர்கள் வெளியேற்றம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

150530104542_sampoor_512x288_bbc_nocredi

இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் இவர்களது குடியிருப்பு காணிகள் உடபட அந்த பிரதேசத்திலுள்ள சுமார் 1100 ஏக்கர் நிலம் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காகவும் கடற்படை பயிற்ச்சி முகாமிற்கும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.
 
குறித்த காணிகளில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக ஜனாதிபதியினால் இம் மாதம் வெளியிடப்பட்ட விஸேட வர்த்தமானி அறிவித்தலின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அரசாங்கத்தினால் காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை.
 
இருந்த போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் விரைவாக மீள்குடியேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டு, சுயமாகவே சென்று காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை, சிலர் தற்காலிக கொட்டில்கள் அமைத்து தங்கியும் இருந்தனர்.
முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்வதற்கு தயாராகவிருந்த நிறுவனமொன்று இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
SAMPU-720x480.jpg

எங்கே ஓரிரு நாட்களுக்கு முன் சம்பூரில் படம் காட்டிய, சிங்களத்துடன் இதயத்தால் ஒன்றுபட்டுவிட்ட "பின் வாசல்" சுமந்திரன் எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SAMPU-720x480.jpg

சும்:- நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ!!!! எல்லாத்தையும் நாங்கள் வெட்டியாடுவம். தலையிடி குளிசை வேலைசெய்யுற.. மாதிரி எதையும் பக்கெண்டு செய்யேலாது....எல்லாத்தையும் ஆற அமரத்தான் செய்யோணும்... இப்போதைக்கு உங்கினைக்கை காடு கரம்பை இல்லாட்டி கடற்கரவளியை ஒதுங்குங்கோ...மை திரியோடை நான் கதைப்பன்.
 
பொசம்:- ???????
 
Spoiler
பொசம் - பொதுசனம்.
  • கருத்துக்கள உறவுகள்

சம்.. சும்.. இப்படியான செய்திகளைக் கண்டால் கப் சிப். எல்லாம் பின் வாசல்..அரசியலில் சகஜமப்பா. :D:lol:

காணியை கொடுத்தவுடன் சொன்னார்கள் இது சபூர்மக்களின் பொராட்டத்தின் வெற்றி என்றும் அதில் சம்பந்தரும் சுமந்திரரும் குளிர்காய்வதாகவும்.

இப்ப காணி திரும்ப சம்பந்தரும் சுமந்திரரும் வருவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் போராட்டத்தை தங்களின் வெற்றி என் கொண்டாடிய எலிகளும் எலிவாலுகளும் இதற்கு பதில் சொல்லியாகவேண்டும். ஐயா வாதாடி பெற்ற வெற்றி இது என முழங்கியவர்கள் நீதிமன்ற தீர்ப்பில் இருந்த பிடியை (catch) சொல்ல மறந்தேனோ.

இது மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. சம்பூர் மக்களை இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகட்டித்தருகிறோம் என பாடாய்ப்படுத்தியவர்கள் சில தனியார் காணிகளில் இவர்கள் முகாம் அமைத்து இருந்ததால் இவர்களை கட்டாயப்படுத்த முடியவில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் விடுவிக்கப்பட முதலே இங்கு யாழில் வெடி கொளுத்தி கொண்டாடின கூட்டத்திற்கு  இந்த திரி தெரியாது என நினைக்கிறன். :D  :icon_idea:

அடுத்த முறை சுமது போனால் அடிதான் விழும். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்கள் துரத்தப் பட்டாலும் பரவாயில்லை, சம் சும் முகத்தில் கரி பூசினாக் காணும்.

என்னா தியாக சிந்தனை.

புல்லரிக்குதப்பா :(

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் சம்பூர் மக்கள் துரத்தப்படவேண்டும் என கூறவில்லை நீதிமன்றம் சென்று வாதாடிய சம் சும் அன்ட் கோ விற்கு உண்மையை சொல்ல மனம் வரவில்லை. இது ஏன்?

சம்பூரில் மீள்குடியேற சென்ற மக்கள் பொலிஸாரினால் வெளியேற்றம்

[ சனிக்கிழமை, 30 மே 2015, 04:21.18 PM GMT ] [ பி.பி.சி ]

sampur-people.jpg

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். 

குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே பொலிஸார் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாக சம்பூர் மக்கள் கூறுகின்றார்கள்.

இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sampur-people.jpg

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் இவர்களது குடியிருப்பு காணிகள் உடபட அந்த பிரதேசத்திலுள்ள சுமார் 1100 ஏக்கர் நிலம் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காகவும் கடற்படை பயிற்சி முகாமிற்கும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகளில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக ஜனாதிபதியினால் இம் மாதம் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அரசாங்கத்தினால் காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை.

இருந்த போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் விரைவாக மீள்குடியேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டு, சுயமாகவே சென்று காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை, சிலர் தற்காலிக கொட்டில்கள் அமைத்து தங்கியும் இருந்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்வதற்கு தயாராகவிருந்த நிறுவனமொன்று இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்வின் 

சம்பந்தன் சுமதுகளின் கனவுலகம் இப்படி போய்விட்டதே ???????????????????????????

சம்பந்தன் ஐயாவின் கனவு நனவாகும் புலத்து புலிவாலுகளைப்போல யதார்த்தத்தை மீறி கனவு கான்பவரல்ல புலத்து புலிவாலுகலுக்கு இவ்வாறு நடப்பதுதான் மிகச் சந்தோசம் ,அப்பத்தான் தாங்கள் குளிர்காயலாம் ?????தாங்கள் அப்படி சொன்னம் அப்பவே சொன்னம் என்று வருவீனம் சிலர் தங்களுடைய தளங்களை காவிக்கொண்டு ?

சுமந்திரன் சம்பூருக்கு சென்று மக்களுக்கு சொன்னது ,காணியை துப்பரவு செய்யுங்கள் ஆனால் தற்காலிக கொட்டில்களையோ ,நிரந்தர கட்டிடங்களை கட்டாதீர்கள் .மக்கள் ஆர்வத்தால் செய்வதற்கு சம்பந்தன் ஐயா,சுமந்திரன் என்ன செய்யமுடியும் .

கடந்த காலத்தில் கிழக்கு மாகாண சபை இந்த மக்களை புறக்கணித்தது ,இன்று கிழக்கு மாகாண சபைதான் மத்திய அரசுடன் சேர்ந்து சம்பூர் மக்களின் மீழ்குடியேற்றத்தை செய்யப்போகின்றது இதற்காகத்தான் கிழக்கு மாகாண புனர்வாழ்வு மீழ்குடியேற்றஅமைச்சு பெறப்பட்டது .

நாங்கள் நிதானமாகத்தான் எதையும் அணுகுகின்றோம் .சம்பூர் மக்கள் சிரமங்களை எதிநோக்கிய போது திருப்பி பார்க்காதவர்கள் எல்லோரும் வாயை பொத்திக்கொள்வது நல்லது .

குதிரைக் கஜேந்திரன் குழு சென்று தாங்கள் பாரிய இயந்திரங்களை கொண்டு காணிகளை துப்பரவு செய்துதாறதாக கேட்டபொழுது மக்கள் மறுத்து , சம்பந்தன் ஐயா தான் அன்றிலிருந்து இன்றுவரை எங்களுடன் நிக்கின்றார் அவருக்கு தெரியும் என்ன செய்யவேண்டும் என்று இவர்களை வழியனுப்பி வைத்ததாகவும் கதை அடிபடுகிறது.

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக கொட்டில்களையோ நிரந்தர கட்டடங்களையோ ஏன் கட்டவேண்டாம் என்று உண்மையான காரணத்தை கூறவில்லையே. காணியை துப்பரவு செய்யுங்கள் உங்களுக்கு இந்திய வீடமைப்புத்திட்டத்தினூடாக உதவி செய்யப்படும் என்று தானே கூறினார்கள். மக்கள் ஆர்வத்தால் மட்டும் செய்யவில்லை மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரனும் எலிக்குழுவும் இணைந்தே மக்களுடன் காணிகளை துப்பரவாக்கி சிறு கொட்டில்களை அமைத்தனர்,

" அடிபடுகிற கதை" - பாரிய இயந்திரங்களின் உதவியுடன் துப்பரவு என்று தொடங்கிய போதே உந்த யூன் 16 ம் திகதி வரையான தடை என்பது வெளியில் வந்தது. உதைதான் " கிணறு வெட்ட பூதம் கிளம்பியது" என்பதோ.

அதுசரி சம்பூர் எப்போது தமிழர்களிடம் இருந்தது? எப்போது சிங்களவர்களிடம் போனது?

சம்பூரை பறிகொடுத்தது யார்? மீட்டது யார்? 

விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள், நான் கேட்பது விதண்டாவாதத்துக்கு இல்லை தகவல் அறிந்துகொள்ளவே.

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் தெரியாமலே தான்.. சகட்டு மேனிக்கு எழுதித் தள்ளுதுங்க போல. எல்லாம் பொழுதுபோக்கு அம்சமாகிவிட்டது. சிலருக்கு வாக்குப் பொறுக்கி அரசியல்.. சிலருக்கு பொழுதுபோக்கு. பாவம் அப்பாவி மக்கள்.  :icon_idea:  :o  :rolleyes: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 18 இல் சுமந்திரன், சம்பந்தன் எங்கே ஒளித்தார்கள்? தமிழன் என்று சொல்ல தயங்குகின்றார்களா? - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின் மனங்களில் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வலிகள் நிறைந்த நாளாகவே இருக்கும். இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்தாலும், குறித்த நாளில் அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் பல அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அஞ்சலி செய்து கொண்டே வந்துள்ளனர்.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்பின்னர் தமிழ்மக்களின் தலைவராக வந்தவராக சொல்லப்படும் திரு சம்பந்தன் அவர்களும், அரசியல் இராஜதந்திரியாக தன்னை வெளிப்படுத்தி வரும் திரு. சுமந்திரன் ஆகியோர்கள் வடகிழக்கில் நடைபெற்ற எந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கபட்ட சிங்கக் கொடியை ரணில் அவர்களோடு சேர்ந்து உயர்த்திக் காட்டியபோதும், தந்தை செல்வா காலம் தொட்டு புறக்கணித்து வந்த சிறிலங்கா சுதந்திர தின விழாவில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தது அது காலத்தின் தேவை என மழுப்பினார்கள்.

சிங்கள படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டமையானது இவர்கள் மீது மிகுந்த கோபத்தினையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியான இவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவார்கள் என்றோ, எமது மக்களிள் விடிவிற்காக எப்படி குரல் கொடுப்பாகள் என்றோ நம்பவே முடியாது. கலந்து கொள்ளாமைக்கான காரணங்கள் எதைச் சொன்னாலும்; மக்கள் எனியும் அதனை நம்ப தயாராகவில்லை.

தமிழ் மக்களின் நிகழ்வில் கலந்து கொண்டால் சிங்கள ஆட்சியாளர்களை அல்லது சிங்கள மக்களின் இதயத்தை நோக வைக்கும் என்று நினைத்து அன்று ஓய்வு எடுத்தார்களோ தெரியவில்லை.

அல்லது சர்வதேச அழுத்தம், இந்தியாவின் அழுத்தம் என்று காரணத்தை சொல்லப்போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்தினை சொன்னாலும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு நினைவு நாளில் கண்டிப்பாக கலந்து கொள்ளாமையானது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துவதோடு கடும் சினத்தினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தான் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்று சர்வதேசம் பார்க்கும் போது, அவர்களே தமிழ் மக்களின் நினைவு தினத்தினை புறக்கணிப்பு செய்யும் போது அனைத்துலகத்திற்கு பிழையான ஒரு எண்ணப்பாட்டினை ஏற்படுத்துவதோடு, தமிழ் மக்களோ ஐ. நா நோக்கிய எமக்கான நீதியை வேண்டி கையேந்திக் கொண்டிருக்கும் போது, இப்படியான தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை சிதைத்து, இனப்படுகொலை நடைபெற்றதை மறுதலித்து சிறிலங்கா அரசாங்கமே விசாரணையை மேற்கொண்டு தீர்கட்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

சிங்கள் மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்றும் ஆட்சியாளர்களின் இதையத்தோடு பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டு இறுதியில் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரியவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரிந்தாலும் பறவாயில்லை, ஆனால் எமது மக்கள் என்ன நோக்கத்திற்காக மாண்டு போனார்களோ அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தினை, விடுதலைக் கனவை ஏறி மிதித்து தமிழர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கப்பார்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு எந்த தமிழ் மக்களும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதோடு, ஜனநாயக வழியில் அவர்களுக்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுத்து அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு-

http://www.tamilsforobama.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி kpகண்ணன் இணைப்புக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஓ வுக்கான த. அ இலங்கையில் வாழும் மக்களுக்கு தூக்கிப் போட்ட ஒரு துரும்பை காட்டுங்களேன்.

ஒபாமா முள்ளிவாய்க்காலுக்கு கப்பலோட வாறார் எண்டு பிரபாவுக்கு கையிறு கொடுத்ததை தவிர இவர்கள் வேற ஏதும் சாதிக்கவில்லை.

போராட தப்பிக்க ஏதுவற்ற முள்ளிவாய்க்காலை நோக்கி புலிகளை நகர வைத்ததில் இந்த ஓ வுக்கான நரிகள் அமைப்புக்கு பலத்த பங்குண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புலிகளின் காமான்ட் யுனிட் தான்.. ஒ. த.அ. முடியல்ல.. :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சம்பந்து சுமது கூட்டம் செய்த ஒன்னே ஒன்னும் உரிமை கோரமுடியாமால் இருக்கினம் இவ்வளவு காலமாய் எல்லாம் ஒட்டு பிச்சைக்கு அடுத்து  அரசியல் அவர்களுக்கு சூனியம் தான்.

இங்கு சம்பந்து சுமது கூட்டம் செய்த ஒன்னே ஒன்னும் உரிமை கோரமுடியாமால் இருக்கினம் 

அப்பாடா நீங்களாவது இதில் சம்பந்தன் சுமந்திரன் ஏதோ செய்ததை ஒப்புக் கொண்டீர்களே. அது போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை திட்டிய வாயால் எனிப் புகழ ஏலாது சிங்களம் விடாது. புலிகளை திட்டிய வாயானால்.. எனிப் புகழ மைத்திரியின் நல்லாட்சி விடாது. தமிழீழத்தை கைவிட்ட கொள்கையால்.. தமிழ் மக்களை சரிக்கட்ட.. சிங்களப் பேரினம் விடாது.. இப்படியான தாங்களே தங்களைச் சுற்றி பின்னிக் கொண்ட வலையில் மாட்டியுள்ள சம் சும் கும்பலுக்கு.. இப்ப  மக்களுக்கு காட்சிப்படுத்தி வாக்குப் பொறுக்க உள்ள ஒரே மார்க்கம்.. சம்பூர் உட்பட்ட நில விடுவிப்பு விவகாரங்கள்.. அரசியல் கைதிகள் விவகாரம்.

மொத்தமா நிலத்தை விடுவி என்று சொல்ல முடியாது. சொல்லிட்டா அரசியலுக்கு என்ன செய்வது.

மொத்தமா ஜே வி பிக்கு அறிவித்தது போல.. இலங்கை - இந்திய ஒப்பத்தத்தின் கீழ் அறிவிச்சது போல.. அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கக் கேட்க முடியாது. கேட்டு ஒருவேளை உலகமும் அதை ஆதரிச்சிட்டா.. எப்படி அரசியல் கைதிகளை வைச்சு அரசியல் செய்வது..

மீனவர் பிரச்சனை இருக்கனும்... நிலப்பறிப்பு..பெளத்த கோவில்கள் கட்டப்படனும்.. அவை இருந்தால் தான் உணர்ச்சியை உசுப்பலாம். அவற்றை தீர்க்கவே விடக் கூடாது.

இராணுவம் ஒரு மூலையில் என்றாலும் குவிஞ்சு கிடக்கனும். அப்பதான் அதை வைச்சு இன்னும் ஒரு 50 வருசத்துக்கு பயங்காட்டி அரசியல் பண்ணலாம்.

வடக்குக் கிழக்கில் வன்முறை... வாள் வெட்டு.. சாராயம்.. பாலியல் துஸ்பிரயோகம்.. போதை வளரனும்... அப்பப்ப சனம் சாகனும். அதை வைச்சு.. நாங்க சனத்தை தூண்டி விடனும்.. அங்கால குற்றவாளிகளையும் பாதுகாக்கனும்.. அப்ப தான் எமக்கு அரசியல் செய்ய களம் கிடைக்கும்..

இப்படி சிந்திக்கிறதை விட சம் சும் கும்பலுக்கு எனி அரசியல் இல்லை. எனி.. எதைச் சொல்லி தமிழ் மக்களட்ட வாக்குக் கேட்கிறது. ஈழம்.. சுயநிர்ணயம்.. உரிமை.. தேசம்.. மனசுக்குள் கூட உச்சரிக்க முடியாது... வேற செய்திட்டம். எனி என்னத்தை சொல்லுறது....சொல்ல ஒன்றுமே இல்லை. 13..13+..13-.. எனி வேகாது. சிங்களம் அதை உலையில போடவும் விடாது. அப்புறம் எப்படி வேகிறது. இந்தியாவுக்கு அதை வேக வைக்க இப்ப ஒரு தேவையும் இல்லை.

இதுதான் சம் சும் கும்பலின் கடந்த 6 ஆண்டுகால இராஜதந்திர அரசியலின் இலாப நட்டக் கணக்கு. மொத்தத்தில் தமிழ் மக்களின் விருப்புகளுக்கு மொட்டை நாமம்.

இதோட புலம்பெயர் தமிழர்களை வியாபாரிகள் என்று திட்டித் தீர்க்கனும். தேர்தல் வர உண்டியலை குலுக்கிக்கிட்டு.. பிளேன் ஏறவும் வேண்டும். ஊடகங்களை கூப்பிட்டு வைச்சு.. செம சடையல் சடையனும். :lol::D

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்
 
ஏதாவது எழுதனும் போலுள்ளது ஆனால் முடியல்ல மறுபடியும் சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்கையா.
 
உங்களிடமிருந்து வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்கள் துரத்தப் பட்டாலும் பரவாயில்லை, சம் சும் முகத்தில் கரி பூசினாக் காணும்.

என்னா தியாக சிந்தனை.

புல்லரிக்குதப்பா :(

நீங்கள் தியாக சிந்தனையில் அடிப்பட்டு கிடக்கும் கஜேந்திரனை நக்கலடிக்க மட்டும் தியாக சிந்தனை வேணுமாக்கும். நீங்கள் எழுதுவது தான் நியாயம். மற்றவர்கள் புண்ணாக்குகள் என்பது உங்களின் எண்ணம். சரிதானே?? :huh:  :huh:

அதுசரி சம்பூர் எப்போது தமிழர்களிடம் இருந்தது? எப்போது சிங்களவர்களிடம் போனது?

சம்பூரை பறிகொடுத்தது யார்? மீட்டது யார்? 

விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள், நான் கேட்பது விதண்டாவாதத்துக்கு இல்லை தகவல் அறிந்துகொள்ளவே.

சம்பூர் முஸ்லிம் மக்களின் பிறந்த இடம். சம்பந்தர் அதனை சிங்கள மக்களிடம் கொடுக்க கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.இப்ப விளங்கிச்சோ?? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை.

முதலில் செய்யவே இல்லை, காகம், பனம் பழம் என்போம்.

பின்பு செய்யப்பட்டதாய் சொல்லப் பட்ட விடயத்தில் ஏதேனும் குளறுபடி நடந்தால் - இவர்களுக்கு இதைக் கூட ஒழுங்கா செய்யத்தெரியவில்லை என்போம்.

என்னது லாஜிக்கா? அவ யார்ர மகள்?

சம்பூர் முஸ்லிம் மக்களின் பிறந்த இடம். சம்பந்தர் அதனை சிங்கள மக்களிடம் கொடுக்க கஸ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்.இப்ப விளங்கிச்சோ?? :icon_mrgreen:

உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள்  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.