Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய, முருக மூர்த்தி ஆலய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்

Featured Replies

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய, முருக மூர்த்தி ஆலய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல்:-

 

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தில் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப் பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் முருக மூர்த்தி ஆலயத்தில் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது கடந்த 1995ம் ஆண்டு யூலை மாதம் 9ம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டதுடன் 360 பேர் காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

அன்றைய தினம் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவழிபாடும் இரங்கல் திருப்பலியும் நடைபெற்றது.
 
அதில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு கொல்லப்பட்டவர்களின் திருவுருவ படங்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
 
  • தொடங்கியவர்

147 பேரின் உயிரைப்பறித்த நவாலி தேவாலயத் தாக்குதல்

நவாலித் தேவாலயத் தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இலங்கைத் தமிழர் வரலாற்றில் 9.7.1995 இல் இடம்பெற்ற இரத்தக்கறை படிந்த இந்நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. முன்னாள் ஆட்சியாளர்களின் பணிப்புரையின் பேரில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 147 உயிர்கள் பலியெடுக்கப்பட்ட இந்நாளை 20 வருடங்களின் பின்  நாம் ஒரு கணம் மீட்டிப் பார்க்கின்றோம்.

இந்தக் கொடுமையான நவாலி சென்ற் பீற்றர் ஆலய பலியெடுப்பு சர்வதேச சமூகத்தையே மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியதுடன் மக்களை சொல்லொணா துயரத்திற்கும் இட்டுச் சென்றது. அன்று  நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் (சின்னக்கதிர்காமம்) ஆலயம் என்பனவற்றின் மீது விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வலிகாமம் பூராவும் இடம்பெற்ற இவ்வான் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் மாலை நேரத்தில் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் ஓர் இனப்படுகொலையாகும்.

இத்துயரச் சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் லண்டன் பி.பி.சி தமிழோசை  செய்தியொன்றை வெளியிட்டது.  முன்னோக்கிய பாய்தல் எனப் பெயர் கொண்ட "லீப் போர்வேர்ட்' இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியிலிருந்தும் அளவெட்டியிலிருந்தும் மிகக் கொடூரமான முறையில் ஷெல் தாக்குதல்களையும்  குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர். திடீரென 9.7.1995 அன்று வலிகாமம் பிரதேசம் எங்கும் மக்கள் குடியிருப்புகள், ஆலயங்கள், பொது நிறுவனங்களை நோக்கி காலை 5.20 மணியில் இருந்து விமானத் தாக்குதல்களும்  ஷெல் தாக்குதல்களும் தாறுமாறாக பாரியளவில் நடத்தப்பட்டன.

அவ்வேளையில் சகல வீதிகளிலும் ஹெலிகொப்டர்கள் தாக்குதல்களாலும் அகோரமான ஷெல் தாக்குதல்களினாலும்  காயப்பட்டவர்களை, இறந்தவர்களை, காயமடைந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வாகனங்கள் இல்லை. வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருட்களும் அற்ற பொருளா தாரத்  தடைவிதிக்கப்பட்ட காலப்பகுதியாகும். இதேநேரம் காயமடைந்தவர்கள் ஏதோ ஒரு வழியில்  எடுத்துச் செல்லப் பட்டாலும் அவர்களை காப்பாற்ற மருந்தகங்களோ, வைத்தியசாலை களோ இயங்க முடியாத அவல நிலை.

வைத்தியசாலைகளிலும் மருந்துகளோ, வைத்தியர்களோ காணப்படாத சூழலுமாக இருந்தது. இறுதியில் காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி இறந்ததையும் நாம் மறக்க முடியாது. அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளிலும்  நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி  சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் பலர் தஞ்சமடைந்திருந்தனர்.  

அவ்வேளையில் யாழ்.நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த விமானம் தொடர்ச்சியாக  13 குண்டுகளை தான்தோன்றித் தனமாக மக்கள் ஒன்று கூடியிருந்த இரு ஆலயங்கள் மீதும் வீசியது. அவ்வளவுதான். நவாலி கிராமம் ஒரு கணம் அதிர்ந்தது. வீதிகள் தடைப்பட்டு மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி,  பாரிய புகைமூட்டம் காணப்பட்டது. நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயமும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் அதிர்ந்தன. முற்றாக அழிந்து சிதைந்தன.

குடாநாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுமார் 147 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தில் கையிழந்து, காலிழந்து, தலையிழந்து உடல் சிதறி குற்றுயிராகக் கிடந்தவர்களை எம்மால் இலகுவில் மறந்துவிட முடியாது.   360 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை அளிக்காத நிலையில் நீண்ட நேரம் இரத்தம் சிந்தி  உயிர் இழந்ததை காணக்கூடியதாக இருந்தது.

அன்றைய தாக்குதலில் பொதுமக்கள் சேவையில் பங்கு கொண்ட வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர்  செல்வி.ஹேமலதா செல்வராஜாவும் சில்லாலை பிரிவு சிரேஷ்ட கிராம அலுவலரான பிலிப்புப்பிள்ளை கபிரியேல்பிள்ளையும் சேவையின் போது ஸ்தலத்தில் பலியான அரச சேவையாளர்கள்.

அன்றைய தினம் அங்கு தங்கியிருந்தோருக்கு உணவு, குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த 48 தொண்டர்களும் அந்தந்த இடத்திலே துடிதுடித்து உயிர் இழந்தனர்.   இதனை நினைவு கூரும்முகமாக இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நவாலி சென்ற் பீற்றர்ஸ் திறந்த வெளியரங்கிலும் நவாலி ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவத்திரு மாரிமுத்து பத்மநாதன் தலைமையில் காலையிலும் மாலையிலும் விசேட வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இப்படுகொலைகள் ஞாபகார்த்தமாக  நவாலி வடக்கு சோமசுந்தரப்புலவர் வீதியிலும்  நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலய பகுதியிலும் படுகொலை சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.thinakkural.lk/article.php?article/ntscmfs6al87986a0724f1d318206mhdiwe80fd5f761cacb7efe8593kgjkg#sthash.bBLVcWh6.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் உதுகள் எல்லாம் மறந்து போட்டு இப்ப இதயத்தோட இதயமாக உரஞ்சி கொண்டு இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

சதாம் குசைன் 800 பேரைக் கொன்றார் அரச பயங்கரவாதின்னு அமெரிக்காவால் தண்டிக்கப்பட்டார். கேர்னல் கடாபி லொக்கபி விமானக் குண்டு வெடிப்பில் 250 பேரைக் கொன்றார் என்று தண்டிக்கப்பட்டார். ஆனால் இந்தத் தாக்குதல்.. பெரியமடு அகதிமுகாம் ஷெல் தாக்குதல்.. புதுக்குடியிருப்பு சந்தை மீதான தாக்குதல்.. கண்ணகை அம்மன் கோவில் திருவிழா மீதான தாக்குதல்.. வடமராட்சி நாகர்கோவில் பள்ளிக்கூடம் மீதான தாக்குதல்.. யாழ் பெரிய தேவாலயத் தாக்குதல்.. உதயன் மீது விமானத்தாக்குதல் செய்த.. சந்திரிக்கா அமமையாருக்கு.. உலகம் பாவ மன்னிப்பு வழங்கிட்டுது. நம்மட சம் சும் கும்பல் அவரின் வால்பிடியாகத் திரிகின்றன.

இதுங்க தான் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொடுக்கப் போகுதுங்க. எல்லாம் காலம்.. தமிழனை ஏமாற்ற உலகத்தில எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குது. தமிழன் அப்படி என்ன அநியாயம் தான் செய்தானோ இந்த உலகிற்கு. தமிழனுக்கு என்று ஒரு நாடில்லாமல் போனது தான் இத்தனைக்கும் காரணம். :(

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நினைவு வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

புலியளாலை வந்த சோலியளுக்கு சம்சும் கோஸ்டி  பொறுப்பில்லை எண்டோரு கதை உங்கினேக்கை உலாவுது.....ஆரும் கேள்விப்பட்டியளோ?

உயிர் நீத்தவர்களுக்கு என் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சோகம் இன்னும் கலைந்து விடவில்லை!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைச் சாட்டி மக்களைக் கொன்ற சிங்களத்தின் இன அழிப்பிற்கான  சாட்சியே  இந்த நிகழ்வு

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மா இப்ப சொல்லுது தன்ர கை ரத்தக் கறை படியாத சுத்த தங்கமாம். ஒரு வேளை சிங்களவர் மட்டில் சுத்தம் என்று சொல்லுறா போல.நம்மை யார்தான் மனிதராய் நினைக்கிறார்கள். நாமே நமக்கு எதிரி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.