Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள்

Featured Replies

ஏன் புறக்கணிக்கவேண்டும்

கூட்டமைப்பின் மீதான முக்கிய குற்றச்சாட்டுக்கள்!

1) பேரானது 2009 ஆண்டு இறுதிக்கட்டத்தினை அடைந்தபோது எவ்வித முயற்சிகளும் போராட்டங்களும் செய்யாமல் இந்தியாவில் ஒளித்திருந்தமை

2)போர் முடிவுக்கு வந்ததும் சம்பந்தன் பாராளுமன்றில் உரையாற்றும்போது பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக மகிந்த இராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தார் .அதேவேளை புலிகள் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்றார்

3) கட்சியின் முடிவை மீறி சுமந்திரன் தம்பதியினருடன் சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். ஆனால் எந்தப்பொழுதிலும் முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவு தினத்தில் எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்கவில்லை

4)சம்பந்தன் யாழில் நடை பெற்ற மேதினக்கூட்டத்தில் ரணிலுடன் இணைந்து தேசியக்கொடியினை தூக்கிப்பிடித்ததுடன் அதனை நியாயப்படுத்தினார்

5)சுமந்திரன் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில நாமல் இராஜபக்சவுடன் இணைந்து கிரிக்கட் விளையாடினார்

6) சுமந்திரனும் சம்பந்தனும் சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதை வரவேற்று பேசினார்கள்

7) சர்வதேச விசாரணையினை ஆதரித்த தங்களின் கொடும்பாவிகளை படங்களை எரித்தவர்களை புலிகளின் வால் என குறிப்பிட்டார் சுமந்திரன்

8)சுமந்திரன் புலிகளின் கொள்கைககளை நாங்கள் ஏற்கவில்லை நாம் பயங்கர வாதத்தினை எதிர்க்கின்றோம் என புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் வகையில் பேட்டி வழங்கினார்

9)டேவிட் கமரூன் யாழ் வந்தபோது போராட்டம் நடாத்தியவர்களின் கடிதத்தினை கமரூனுக்கு வழங்காதமை.அது குறித்து அனந்திக்கு ஏய்ப்பு காட்டியமை. போராடிய மக்களை அவர்கள் சந்திக்கவும் இல்லை காரில் தப்பி ஓடினர்.

10) வடமாகாணசபையின் இனப்படுகொலைத்தீர்மானம் தேவையற்றது என அறிக்கை வெளியிட்டமை

11)போரின் முடிவின் பின் கூட்டமைப்பில் புளொட் அமைப்பினை இணைத்தமை ஆனால் காங்கிரசை தமிழர் விடுதலை கூட்டணியை வெளியேற்றும் வகையில் நடந்துகொண்டமை

12) முன்னாள் போராளிகளின் சனநாயக பிரவேசத்திற்கான வேண்டுகோளை முற்றாக நிராகரித்தமை

13)வாக்கு கேட்கும் போது மட்டும் மாவீரகள் புலிகள் பற்றி பேசுதல் பின்னர் புறக்கணித்தல்

14)முன்னைய அரசுடனான பேச்சுவார்தைகளில் தீர்வுத்திட்டம் தொடர்பில் உத்தேச தீர்வுத்திட்டம் எதுவும் சமர்ப்பிக்காமை அல்லது தாம் அரசிடம் சமர்பித்ததாக கூறும் திட்டம் குறித்து மக்களுக்கு வெளியிடாதமை

15) மைத்திரி அரசுடன் காணாமல்போனோர் சரணடைந்தோர் அரசியல்கைதிகள் தொடர்பில் சரியான பேரம் பேசலை செய்ய தவறியமை. 100 நாட்களில் அவற்றில் முன்னேற்றம் எதனையும் எட்டாமை

16)கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி உட்கட்சி சனநாயகத்தில் மிகவும் மோசமாக பாரபட்சமாக நடந்துகொணடமை.மாவை சுமந்திரன் சம்பந்தன் மட்டும் முடிவெடுத்தல்

17)இதுவரை கூட்டமைப்பினை அரசியல்கட்சியாக பதிவுசெய்யாதமை.

18)சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் கூட்டங்களில் பெரிதளவில் பங்குபற்றாதமை சாட்சியஙகளை வழங்காதமை

19) பிடித்த உள்ளுராட்சிமன்றங்கள் பலவற்றில் முறையற்ற நிர்வாகம்.பாரபட்சமான அணுகுமுறைகள்.பிழையானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமை.

20)இளைஞர் அணிகள் ஊடான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்த தவறியதுடன் இளைஞர்களை புறக்கணித்தமை

21)வேட்பு மனுக்களில் புதியவர்களுக்கான இளைஞர்களுக்கான இடத்தினை உறுதிசெய்ய தவறியமை

22)போராட்டங்கள் நிபந்தனைகள் தொடர்பில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை

23) போர்க்குற்றவாளி சரத்பொன் சேகாவுக்கு சனாதிபதித்தேர்தலில் ஆதரவு தெரிவித்தமை

இன்னும்பல…

http://tamilleader.com/?p=50189

  • கருத்துக்கள உறவுகள்

தலை சுத்துது....

20)இளைஞர் அணிகள் ஊடான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்த தவறியதுடன் இளைஞர்களை புறக்கணித்தமை

 இது மிகவும் முக்கியமான விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

 20)இளைஞர் அணிகள் ஊடான அரசியல் எதிர்காலத்தை ஏற்படுத்த தவறியதுடன் இளைஞர்களை புறக்கணித்தமை

இது மிகவும் முக்கியமான விடயம்

இது முக்கியமான விடயமில்லை

இது தான் விடயமே....

இதில் தான் எல்லாமே ஆரம்பம்

கூட்டமைப்பும் சிங்களவனைப்போல் எல்லா தமிழரையும் எல்லா தமிழ்இளைஞர்களையும் புலியாகப்பார்க்கின்றார்

யாராவது மறுப்பார்களா......

Edited by விசுகு

ஆரம்பத்தில்  அதி தீவிரம் பேசி வன்முறை அரசியல் உருவாக வழியமைத்தது தமிழரசுக்கட்சியே. இளைஞர்களை உணரச்சிவசப்படுத்தி தமக்கெதிராக தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளை சுட்டு கொல்லும் தமது ஏவல்நாய்களாகவே இளைஞர்கள்  இருப்பார்கள் என்று கணக்கு  போட்டார்கள்.    இனி அது சரிவராது என்பதால் இளைஞர்களை ஊக்குவிக்கமாட்டாரகள்.  

வாலுகளுக்கு தான் இது குற்றசாட்டு .இன்னமும் உலக அரசியல் தெரியால் அதற்குள்ளேயே விழுந்துகிடக்கின்றார்கள் .

கூட்டமைப்பை அடுத்த படி அரசியலுக்கு கொண்டுசெல்வது இவர்கள் குற்றசாட்டுக்களாக வைத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் தான் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் "தேர்தல் விஞ்ஞாபனம் " வெளிவந்துவிட்டது .அந்த மாதிரி இருக்கு .

இனியும் சும்மா குழம்பாமல் கம் என்று இருங்கோ .

சரியாகச் சொன்னீர்கள் அர்ஜூன்! சுமந்திரனும் சம்பந்தரும் சர்வதேச அபிமானம் பெற்று அமெரிக்கத் தேர்தல்களில் போட்டி போடும் அளவுக்கு வந்து விடும் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கும் போது நாம் இன்னும் இரண்டு மில்லியன் ஈழத்தமிழர்களுக்குள் அவர்களை அடக்கி விடப் பார்ப்பது அபத்தம்! :cool:

அமெரிக்காவில் ஏதும் பிரச்சனையோ ஜஸ்டின் .:grin:

ஏன் அவர்கள் அமேரிக்கா தேர்தலில் போட்டியிடவேண்டும் :wink:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் "தேர்தல் விஞ்ஞாபனம் " வெளிவந்துவிட்டது .அந்த மாதிரி இருக்கு .

இனியும் சும்மா குழம்பாமல் கம் என்று இருங்கோ .

தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன வரும் என்று உங்களுக்குத்தெரியாமல் இருந்திருக்கலாம் அண்ணை

ஆனால் தமிழர்களுக்குத்தெரியும்

உண்மை என்னவென்றால்

அவர்களது தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை  கூட்டமைப்பே உங்களவுக்கு சீரியசாக எடுப்பதில்லை என்பது தான்..

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் ஏதும் பிரச்சனையோ ஜஸ்டின் .:grin:

ஏன் அவர்கள் அமேரிக்கா தேர்தலில் போட்டியிடவேண்டும் :wink:

கறுப்பினத்தவருக்காக இணக்க அரசியல் செய்து வெல்ல த.தே.கூ இங்க தேவைப் படலாம்! :cool:

(இது கேள்விக்குப் பதில்)

ஆனால் நான் மறைமுகமாக எழுதியது: த.தே.கூ தமிழர்களுக்காக இயங்க வேண்டும், சிங்களவர்களுக்காக, இந்தியாவுக்காக, எப்பவும் கழுத்தறுத்து விட்டு ஒளிந்து கொள்ளும் முஸ்லிம் தலைமைகளுக்காக இயங்க வேண்டியதில்லை! 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் "தேர்தல் விஞ்ஞாபனம் " வெளிவந்துவிட்டது .அந்த மாதிரி இருக்கு .

இனியும் சும்மா குழம்பாமல் கம் என்று இருங்கோ .

ஆமாங்க அந்த மாதிரி இருக்கு ஆகஸ்ட் 18 ல் வெல்லுவதற்காக தயாரிக்கப்பட்டது அந்த மாதரி தானே இருக்கும். வென்ற பின்னர் குப்பையில் போடப்படும். விஞ்ஞாபனம் தானே. 

வாலுகளுக்கு தான் இது குற்றசாட்டு .இன்னமும் உலக அரசியல் தெரியால் அதற்குள்ளேயே விழுந்துகிடக்கின்றார்கள் .

கூட்டமைப்பை அடுத்த படி அரசியலுக்கு கொண்டுசெல்வது இவர்கள் குற்றசாட்டுக்களாக வைத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் தான் .

அர்ஜீன் வாலுகள் என்பவர்கள் யார்? உங்களின்  வால் எவ்வளவு நீளமானது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பை அடுத்த படி அரசியலுக்கு கொண்டுசெல்வது இவர்கள் குற்றசாட்டுக்களாக வைத்திருக்கும் இந்த நடவடிக்கைகள் தான் .

கவனம் , உதயனில் படம் இருக்கு பாருங்கோ கட்சியின் தேர்தல் விஞ்ஞானபன வெளியீட்டில் அண்ணைமார் எல்லாரும் தற தற என்று முழுசிக்கொண்டு இருக்கினம் .. 
ஆக்கக் கூடியது ...ஒருவேளை வந்தால்... ஒரே ஒரு தேசிய பட்டியல்..இதில யார் போவது என்று தலைவர்கள் முடிவு செய்துபோட்டு சர்வதேச லெவல் பற்றி கதைப்பம் :) 

கறுப்பினத்தவருக்காக இணக்க அரசியல் செய்து வெல்ல த.தே.கூ இங்க தேவைப் படலாம்! :cool:

(இது கேள்விக்குப் பதில்)

ஆனால் நான் மறைமுகமாக எழுதியது: த.தே.கூ தமிழர்களுக்காக இயங்க வேண்டும், சிங்களவர்களுக்காக, இந்தியாவுக்காக, எப்பவும் கழுத்தறுத்து விட்டு ஒளிந்து கொள்ளும் முஸ்லிம் தலைமைகளுக்காக இயங்க வேண்டியதில்லை! 

இங்குதான் பிரச்சனையே இருக்கு . இது எமது  பிரச்சனை என்றாலும் தீர்வு என்று வரும்போது நீங்கள் மேலே சொன்ன மூவரினதும் ஒத்துழைப்பும் இல்லாமல் எந்த நாளும் அது கிட்டபோவதில்லை அதற்காக சில இணக்கங்கள் தேவை .

கூட்டமமைப்பின் இந்த இணக்க நிலையை வைத்து அரசியல் செய்ய என்றே சில தேசியம் என்று கத்தும் கூட்டம் இருக்கு. குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள் .இவர்களால் நாட்டிலும் சரி சர்வதேசத்திலும் சரி பெரிதாக எதையும் செய்யமுடியாது ஆனால் தமிழ் ஈழம் தான் தீர்வு ,போர் குற்ற விசாரணை என்று குட்டையை குழப்பிக்கொண்டு இருக்கின்றார்கள் .

இவர்களை யாரென்றால் புலம்பெயர்ந்த  புலிகள்அமைப்பினர்தான் .இருக்கும் ஊடக ,பணபலத்தால் கூட்டமிப்பை கட்டுப்படுத்த முயன்றார்கள் அது முடியாமல் அவர்கள் சேறு வீசவும் உடைக்கவும் தொடங்கினார்கள் .

போரட்ட காலத்தில் புலிகள் நாட்டிலும் வெளியிலும் இப்படியான காரியங்களை மிக கச்சிதமாக் செய்துவந்தார்கள் அதன் தொடர்சிதான் இது .கூட்டமைபிற்கு அது நன்கு தெரியும் .

சாத்தியமான ஒரு தீர்விற்கு தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இவர்களை வெளியில் விட வேண்டும் என்று எப்போதோ முடிவு எடுத்துவிட்டார்கள் .

நான் கூட்டமைப்பின் பெரிய விசுவாசியோ அல்லது உள்குத்துவேட்டுகள் அறியாதவனோ இல்லை ஆனால் இன்று எமக்கு இருக்கும் தெரிவு அவர்கள்தான் .

அதைவிட புலிகளின் எச்ச சொச்சங்கள் என்ன செய்வார்கள் என்று முப்பது வருடங்களாக நாங்கள் பார்த்ததுதான் அவர்களை அரசியலில் இருந்து அப்புற படுத்த வேண்டிய தேவையும் இருக்கு .

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கலாம் என்று நம்ப கூடியதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கு அதை பொறுத்திருந்து பார்க்காமல் குழப்ப நான் விரும்பவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் நிஐமான தமிழர் தேசத்தை உருவாக்கி

காந்தி சொன்ன பூமியை செயல்வடிவில் காட்டினார்கள்.

அதை  ஏற்கமறுத்தவர்கள்

அதைக்கேலி செய்தவர்கள்

தற்பொழுது கானல்நீரை நம்பலாம் என்கிறார்கள்

என்னே உலகம்...??

புலிகள் நிஐமான தமிழர் தேசத்தை உருவாக்கி

காந்தி சொன்ன பூமியை செயல்வடிவில் காட்டினார்கள்.

அதை  ஏற்கமறுத்தவர்கள்

அதைக்கேலி செய்தவர்கள்

தற்பொழுது கானல்நீரை நம்பலாம் என்கிறார்கள்

என்னே உலகம்...??

 "உலகிலயே சிறந்த அப்பா ஆனது அப்பாதான் " என்று எனக்கு தெரிந்த ஒருவரினது மகள் தனது முகபுத்தகத்தில் போட்டிருந்தார் .இவர் தூள் கடத்தி ஏழு வருடங்கள் பிரான்ஸ் ஜெயிலில் இருந்தவர் .மகளுக்கு அப்பா நல்லவராக இருக்கலாம் .

உங்கள் பதிவை வாசிக்கும்போது நினைவு வந்த விடயம் இது .

புலம்பெயர்ந்த புலிகளை "வாலுகள் " என்றுதான் எல்லோரும் அழைகின்றார்கள் .என்னை மட்டும் குறை சொன்னால் என்ன மாதிரி .:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா,

2009 இல் எந்த முன்னரங்கில் பத்மினி, கஜன், கஜேந்திரன் நிண்டவை?

  • கருத்துக்கள உறவுகள்

 "உலகிலயே சிறந்த அப்பா ஆனது அப்பாதான் " என்று எனக்கு தெரிந்த ஒருவரினது மகள் தனது முகபுத்தகத்தில் போட்டிருந்தார் .இவர் தூள் கடத்தி ஏழு வருடங்கள் பிரான்ஸ் ஜெயிலில் இருந்தவர் .மகளுக்கு அப்பா நல்லவராக இருக்கலாம் .

உங்கள் பதிவை வாசிக்கும்போது நினைவு வந்த விடயம் இது .

புலம்பெயர்ந்த புலிகளை "வாலுகள் " என்றுதான் எல்லோரும் அழைகின்றார்கள் .என்னை மட்டும் குறை சொன்னால் என்ன மாதிரி .:(

எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடில்லாதிருக்கலாம்

அதை விமர்சியுங்கள்

உங்களது கருத்தை வையுங்கள்

அதன் மூலம் நானும் இதைப்படிப்பவர்களும் நல்லது கெட்டதை அறியமுடியும்.

மாறாக என்னை குத்தவேண்டும்

என்னை வெறுப்பேற்றவேண்டும் என்ற எண்ணமிருந்தால்..

தயவு செய்து மாறிவிடுங்கள்

தண்ணியும் 3 முறை தான் பொறுக்கும்

ஏற்கனவே கீழே எழுதியுள்ளேன்

இரண்டு கன்னங்களையும் ஏற்கனவே கொடுத்தாச்சு என்று....

இங்குதான் பிரச்சனையே இருக்கு . இது எமது  பிரச்சனை என்றாலும் தீர்வு என்று வரும்போது நீங்கள் மேலே சொன்ன மூவரினதும் ஒத்துழைப்பும் இல்லாமல் எந்த நாளும் அது கிட்டபோவதில்லை அதற்காக சில இணக்கங்கள் தேவை .

கூட்டமமைப்பின் இந்த இணக்க நிலையை வைத்து அரசியல் செய்ய என்றே சில தேசியம் என்று கத்தும் கூட்டம் இருக்கு. குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள் .இவர்களால் நாட்டிலும் சரி சர்வதேசத்திலும் சரி பெரிதாக எதையும் செய்யமுடியாது ஆனால் தமிழ் ஈழம் தான் தீர்வு ,போர் குற்ற விசாரணை என்று குட்டையை குழப்பிக்கொண்டு இருக்கின்றார்கள் .

இவர்களை யாரென்றால் புலம்பெயர்ந்த  புலிகள்அமைப்பினர்தான் .இருக்கும் ஊடக ,பணபலத்தால் கூட்டமிப்பை கட்டுப்படுத்த முயன்றார்கள் அது முடியாமல் அவர்கள் சேறு வீசவும் உடைக்கவும் தொடங்கினார்கள் .

போரட்ட காலத்தில் புலிகள் நாட்டிலும் வெளியிலும் இப்படியான காரியங்களை மிக கச்சிதமாக் செய்துவந்தார்கள் அதன் தொடர்சிதான் இது .கூட்டமைபிற்கு அது நன்கு தெரியும் .

சாத்தியமான ஒரு தீர்விற்கு தாங்கள் தோற்றாலும் பரவாயில்லை இவர்களை வெளியில் விட வேண்டும் என்று எப்போதோ முடிவு எடுத்துவிட்டார்கள் .

நான் கூட்டமைப்பின் பெரிய விசுவாசியோ அல்லது உள்குத்துவேட்டுகள் அறியாதவனோ இல்லை ஆனால் இன்று எமக்கு இருக்கும் தெரிவு அவர்கள்தான் .

அதைவிட புலிகளின் எச்ச சொச்சங்கள் என்ன செய்வார்கள் என்று முப்பது வருடங்களாக நாங்கள் பார்த்ததுதான் அவர்களை அரசியலில் இருந்து அப்புற படுத்த வேண்டிய தேவையும் இருக்கு .

ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கலாம் என்று நம்ப கூடியதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கு அதை பொறுத்திருந்து பார்க்காமல் குழப்ப நான் விரும்பவில்லை . 

இநத கருத்தில் உடன்பாடில்லாதுவிட்டாலும்

இதை ஒரு நல்ல கருத்தாடலாக நான் பார்க்கின்றேன்

இதைத்தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரின் பிரச்சினை சாதாரண மக்களுக்கு நாளாந்த ரீதியாக சிங்களவர் - தமிழர் பிரச்சினையாக தெரிந்தாலும் உண்மையில் இது சர்வதேச பலத்துக்கான குரூரமான போட்டி. இதில் அமெரிக்க அரசினதும் சீன அரசினதும் நலன்களும் இந்திய அரசின் நலன்களும் மிகப்பெருமளவில் சம்பந்தப் பட்டுள்ளது. இந்த ஆதிக்க போட்டியில் அழித்தொழிக்க படக்கூடிய இனங்களாக இலங்கை தமிழரை மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து மக்களையுமே இந்த வல்லரசுகள் கருதுகின்றன. 

அரசியல் தலைவர்கள் இந்த சிக்கலை சாதாரண பொது மக்கள் போல சிங்களவர் - தமிழர் பிரச்சினையாக கருதி தீர்வு தேடினால் மக்கள் அழிவதை தவிர வேறு எதுவும் நடக்க போவதில்லை. இந்த மிகவும் சிக்கலான சர்வதேச அரசியலை புரிந்து கொள்ள முடியாதவர்களை தலைவர்களாக தெரிந்து மக்கள் இதுவரை காலமும் அழிந்து போய் இருக்கிறார்கள். இனியாவது சரியான தலைவர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கூட்டமைப்பினர் தோளோடு தோள் நிண்டவையோ?. நேரத்துக்கும் ஆட்களுக்கும் இடத்துக்கும் ஏற்றாற் போல் அறிக்கைகளை மாறி மாறி விடும் கூட்டமைப்பை அனைவரும் அறிவர். அரசியல் நேர்மை கூட்டமைப்புக்கும் இல்லை

புலத்திலிருந்து கற்பனையிலும் புனைகதைகளையும் மக்களிற்கு உளறாமல் மண்ணிற்கு போய் பாருங்கோ 2009 முதல் ஆமி எவ்வளவு சாகிறான் எப்படி அடிக்கிறார்கள் என்று விளையாட்டை பார்த்தமாதிரியான புலத்து புண்ணாக்குகள் இப்ப இருக்கிற தமிழ்மக்களால் ஏற்று கொண்ட தமிழ்தலைமையை சாகடிக்க இங்கிருந்து மல்லாக்கபடுத்திருந்து துப்பாதீர்கள்.

ஈழத்தமிழனுக்கு தவிடும் புண்ணாக்கும் தேவையில்லை. ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றை நல்ல வடிவாக  படித்துவிட்டு அல்லது கேட்டறிந்துவிட்டு அளவளாவ வாருங்கள்......

உங்களைப்போன்றோர் இன்றைய சுகத்திற்காக நாளைய பொழுதை தொலைப்பவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.