Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

Featured Replies

சிறிலங்காவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் – சற்று நேரத்தில் வாக்களிப்பு ஆரம்பம்

AUG 17, 2015 | 1:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Srilanka-Electionசிறிலங்காவின் எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள வாக்களிப்பு, மாலை 4 மணியுடன் நிறைவடையும்.

சிறிலங்கா சுதந்திரம் பெற்ற பின்னர், நடைபெறும் இந்த 15அவது பொதுத்தேர்தலில், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

2014ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடக்கும் இந்த தேர்தலில் 15,044,490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இம்முறை தேர்தலில், 21 அரசியல் கட்சிகள் மற்றும் 201 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 6,151 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில், அரசியல் கட்சிகளின் சார்பில் 3,653 வேட்பாளர்களும், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 2,498 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

சிறிலங்காவின் 22 தேர்தல் மாவட்டங்களிலும், 12,314 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணியுடன் நிறைவடையும்.

அதையடுத்து, வாக்குப் பெட்டிகள், நாடெங்கும் அமைக்கப்பட்டுள்ள, 1600 வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.

இன்று நள்ளிரவு அளவில் முதலாவது தேர்தல் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, நாளை மதியத்துக்குள் இறுதி நிலவரம் தெரியவரும்.

சிறிலங்காவில் 2014 வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், 56 தேர்தல் தொகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இவற்றில் மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி நுவரெலிய – மஸ்கெலிய ஆகும். இங்கு 302,836 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியான ஹோமகமவில், 174,909 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

மூன்றாவதாக, கடுவெல தொகுதியில், 172,499 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்றுறைத் தொகுதியிலேயே, மிக குறைந்தளவாக 22,057 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிக பட்சமாக கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும், குறைந்தபட்சமாக திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2015/08/17/news/8728

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

vote.jpgLAB_I_Bike_I_Vote_Stack_0.jpg

எங்கள் சின்னம், சைக்கிள் சின்னம்.
உங்கள் ஓட்டு.... சைக்கிளுக்கே. 
th_thbikegirly.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

நமது சொந்தக் காரங்க எல்லாம், சைக்கிள் சின்னத்துக்கு, வாக்களிக்க....
வாக்களிப்பு சாவடியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக... சற்று முன்னர் தொலை பேசியில் சொன்னார்கள்.
கூத்தமைப்பு.... இதோடை, துண்டைக் காணோம், துணியை காணோம் என்று ஓடப் போகுது.:grin:

  • தொடங்கியவர்

பாமன்கடை ஸ்ரீமஹா விஹார விகாரையில் அமைந்துள்ள நிலையத்தில் சற்று முன் வாக்களித்தேன். 
Just voted at the Centre at the Pamankada Sri Maha Vihara Temple

 

11903720_10203198877771931_6766544857885

15ஆவது நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் நடைபெறும். இது தொடர்பான முழு விவரங்களை வரைகலையில் காணலாம்.

article_1439783519-General-Election-toda

 http://www.tamilmirror.lk/152183#sthash.2bGM1SGz.dpuf

 

Eingebetteter Bild-Link

 
  •  
     
  • கருத்துக்கள உறவுகள்
யாழில் 1மணிவரை 48 வீத வாக்குப் பதிவு
news
காலை 7மணிமுதல் 1மணிவரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  48 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.
 
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 44 வீதமும்,கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில்  52 வீதமும் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=233534200217381553#sthash.Aocih2SG.dpuf
வீட்டை நோக்கி வீறு கொண்டு வாக்களிக்கச் செல்லும் தமிழ் மறவன் ஈ.சரவணபவன்
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,யாழ்- கிளிநொச்சி மாவட்ட வேட்பாளருமான ஈ.சரவணபவன் இன்று காலை 7.45 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கை செலுத்தியுள்ளார்.
 
நாவலர் கலாசார மண்டபத்தில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
 
மக்களின் வாக்குப் பலத்தினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?இல்லையா? என்பதனை அறிய முடியும்.மக்களின் வாக்குப் பலம் எமக்கு வரவேற்பளித்தால் தேர்தல் விஞ்ஞாபனம் அங்கீகரிக்கப்படும்.அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் சர்வதேசத்தின் அனுசரணை எமக்கு கிடைக்கும்.
 
ஏனெனில் நமது தேர்தல் விஞ்ஞாபனம்; சர்வதேச நிகழ்ச்சி நிரலின் கீழ் உள்ளடங்கியுள்ளது.
 
எனவே மக்களின் பேராதரவு எங்களுக்கு கிடைத்தால் பேரம் பேசும் சக்தியை உருவாக்கி தமிழரின் தீர்வை பெற்று விடமுடியும்.
 
அதுமட்டுமல்ல பெரும்பான்மை தேசிய இனமாகிய சிங்கள இனம் சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் இனத்தை இன்னமும் இரண்டாம் பிரஜையாகவே வைத்திருக்கிறது.அதனை மாற்ற வேண்டும்.
 
எனவே நிச்சயம் மக்கள் தமது வாக்குப் பலத்தால் எமக்கு பேராதரவு தருவார்கள்.நாம் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
gjjjgjgj.jpg
 
 
 
kkkkkkkkkkkkkkkkkkkkkk.jpg
 
kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk.jpg
 
jjgjgjgjgjjjjjjjjjjjjjjjj.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=870194199317529799#sthash.qsRlVZgb.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நான்  இதுவரை  எவருக்கும் ஆதரவு கேட்டு வாக்களிக்க கேட்கவில்லை ..

அவர்களுக்குத்தெரியும்

இதுவரை தமிழர்கள் தேர்தலில் உறுதியாக தெளிவாகவே வாக்களித்துள்ளனர்

சில நண்பர்கள் உறவுகளுடன் தொலைபேசியில் பேசினேன்

எனது கோரிக்கை எல்லோரும் கட்டாயம் வாக்களியுங்கள் என்பது மட்டுமே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 

 

என்னுடைய உறவுகளுக்கும் இதையே நானும் கூறினேன்.
முதலில் சைக்கிளுக்கு வாக்களியுங்கள்.

அவர்களின் கொள்கை பிடிக்காவிட்டால் வீட்டுக்கு வாக்களியுங்கள்
எந்த வகையிலும் மற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டேன்.
 

குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் மாவை
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்-கிளிநொச்சி மாவட்ட முதன்மை வேட்பாளரான மாவை சேனாதிராஜா தெல்லிப்பளை கொல்லங்கலட்டி தமிழ்க் கலவன் பாடசாலைக் குடும்பத்துடன் சென்று வாக்களித்துள்ளார்.
 
11111%2810%29.jpg
 
1111111111111111.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=449404199817752155#sthash.elCtquox.dpuf

நான்  இதுவரை  எவருக்கும் ஆதரவு கேட்டு வாக்களிக்க கேட்கவில்லை ..

அவர்களுக்குத்தெரியும்

இதுவரை தமிழர்கள் தேர்தலில் உறுதியாக தெளிவாகவே வாக்களித்துள்ளனர்

சில நண்பர்கள் உறவுகளுடன் தொலைபேசியில் பேசினேன்

எனது கோரிக்கை எல்லோரும் கட்டாயம் வாக்களியுங்கள் என்பது மட்டுமே...

நல்ல விடயம் விசுகு.

நான் இப்போது தாயகத்தில்தான் உள்ளேன். எனது அண்ணா அண்ணி வாக்களித்து விட்டார்கள். இதுவரை நானும் வாக்களிப்பு தொடர்பாக எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை அவர்களும் சொல்லவில்லை. தனி மனித சுதந்திரத்தை மதிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது கோரிக்கை எல்லோரும் கட்டாயம் வாக்களியுங்கள் என்பது மட்டுமே...

யாழில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல்  பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதில் ஈடுபடுவதை காணக் கூடியதாகவுள்ளது. 

Election.jpg

யாழ்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் பொதுமக்கள் மிகவும் அமைதியான முறையிலும் பதற்றமற்ற நிலையிலும் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை  நேற்று இரவு  சில கட்சிகள் தமது துண்டுப் பிரசுரங்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மையாக அதிகளில் வீசிவிட்டு சென்றுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எந்த வகையான  தேர்தல் சம்பந்தமான வன்செயல்களும் இடம்பெறாத நிலைமையில் வாக்களிப்பு அமைதியான முறையில் நடை பெறுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் பொலிசார் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரித்துக்  காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/08/17/யாழில்-மக்கள்-ஆர்வத்துடன்-வாக்களிப்பு

 

  • கருத்துக்கள உறவுகள்

பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் - யாழ்ப்பாணம் - 60%

அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

2ஆம் இணைப்பு - பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள் - யாழ்ப்பாணம் - 60%

பிற்பகல் 02.00 மணிவரையான வாக்குப் பதிவுகள்

காலி - 56%

கம்பஹா - 62%

அனுராதபுரம் - 60%

மொனராகலை - 60%

திருகோணமலை - 60%

பொலன்னறுவை - 66%

யாழ்ப்பாணம் - 60%

வவுனியா - 60%

மட்டக்களப்பு- 50%

பதுளை 63%

அம்பாறை - 60%

இதுவரை அறியக் கிடைத்துள்ள வாக்குப் பதிவு விபரங்கள் - யாழ்ப்பாணத்தில் 30 வீதம்:-

அநேகமான பகுதியில் 40 முதல் 50 வீதம் வரையில் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது

இலங்கையில் நடைபெற்று வரும் பொதுத் தேர்தலில் நண்பகல் வரையில் 40 முதல் 50 வீதம் வரையிலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

அமைதியான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுiயில் 45 வீதமும்
யாழ்ப்பாணத்தில் 30 வீதமும்
வன்னியில் 40 வீதமும்
கம்பஹாவில் 48 வீதமும்
புத்தளத்தில் 40 வீதமும்
அனுராதபுரத்தில் 40 வீதமும்
புலஸ்திபுரவில் 25 வீதமும்
ஆணமடுவவில் 45 வீதமும்
குருணாகலில் 40 வீதமும்
மாத்தளையில் 45 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளளன

இதுவரை அறியக் கிடைத்துள்ள வாக்குப் பதிவு விபரங்கள் -

 

காலை 11.00 மணி வரை கம்பஹா மாவட்டத்தில் 48% வாக்குப் பதிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் 25% வாக்குப் பதிவுகளும் கண்டியில் 50-55% வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் மாத்தளையில் 40%மும், காலியில் 25%மும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதேவேளை கிளிநொச்சியில் 40% வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதோடு, வவுனியாவில் 35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காலை 10.00 மணிவரை முல்லைத்தீவில் 31% வாக்குகளும், அம்பாறையில் 25-30% வாக்குகளும், குருநாகலில் 30% வாக்குகளும் புத்தளத்தில் 25% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11.30 வரை அனுராதபுரத்தில் 45-50% வாக்குப் பதிவுகளும் இரத்தினபுரியில் 40% வாக்குப் பதிவுகளும், கேகாலையில் 35% வாக்குப் பதிவுகளும் மொனராகலையில் 35% வாக்குப் பதிவுகளும் பதுளையில் 40% வாக்குப் பதிவுகளும் பொலன்னறுவையில் 30-35% வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை திருகோணமலையில் 35%மும், மனனாரில் 33%மும் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123012/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்தது பற்றி திருமலையில் கேட்ட போது, இவ்வளவு நாட்களும் சம்பந்தரை திட்டியவர்கள் இன்று அவருக்கே வாக்களித்துள்ளனர். 

இது தான் பகலில் சைக்கிளில் சுற்றிவிட்டு "நேரம்" வரும் போது வீடு சேர்வதோ? 

ஒரு பொறியிலளாளர் சனி இரவுவரை சைக்கிள் இக்கு முகநூலில் பிரச்சாரம் செய்துவிட்டு நேற்று சித்தருக்கு பிரச்சாரம். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணச் சிங்கம் கஜேந்திரகுமார் ஏன் கொழும்பில் வாக்களிக்கிறார்!

 

அல்லது அது யாழ்பாணம் பெரிய கோயிலா?

யாழில இப்ப பலர் நிலை .

தோசை ஒரு பக்கம் சுட்டது போதும் இனி பிரட்டி போடுவம் .

  • கருத்துக்கள உறவுகள்


பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு: இறுதி வாக்களிப்பு வீதம்

2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது.

மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது.

யாழ்ப்பாணம் – 60%
வன்னி – மன்னார் – 70%
மட்டக்களப்பு – 60%
திருகோணமலை – 75%
திகாமடுல்ல – 65%
கொழும்பு – 65%
கம்பஹா – 70%
கண்டி – 75%
மாத்தளை – 70%
நுவரெலியா – 70%
களுத்துரை  – 65%
காலி – 70%
மாத்தறை – 70%
புத்தளம் – 66.5%
குருநாகல் – 68%
பதுளை – 70%
மொனராகலை – 65%
இரத்தினபுரி – 70-75%
அநுராதபுர – 65-70%
கேகாலை – 70-75%

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL25ld3NmaXJzdC5say90YW1pbC8=

கணவர் சரவணபவனுக்கா அல்லது தம்பி வித்தியாதரனுக்கா வாக்கு போட்டீர்கள் அக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

யாழில இப்ப பலர் நிலை .

தோசை ஒரு பக்கம் சுட்டது போதும் இனி பிரட்டி போடுவம் .

உங்களைப்போல இல்லை  என்கிறீர்கள்

40 வருடமா

ஒரே தோசையை

ஒரே பக்கம் சுட உங்களால் மட்டுமே முடியும்  அண்ணை....

  • கருத்துக்கள உறவுகள்

சீன வெடி, ஈக்கில் வானம், மத்தாப்பு, பூந்திரி, சக்கர வானம்   எல்லாம்... ரெடியாய் வாங்கி வைத்திருக்கு.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி , வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் நேரம் முன்னணியில் நிற்கும் போதே...  கொழுத்தத் தொடங்கினால்,
இரவு  இரவாக கொழுத்திறது தான்... 

சீன வெடி, ஈக்கில் வானம், மத்தாப்பு, பூந்திரி, சக்கர வானம்   எல்லாம்... ரெடியாய் வாங்கி வைத்திருக்கு.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி , வாக்கு எண்ணப் பட்டுக் கொண்டிருக்கும் நேரம் முன்னணியில் நிற்கும் போதே...  கொழுத்தத் தொடங்கினால்,
இரவு  இரவாக கொழுத்திறது தான்... 

அண்ணை உந்த வெடிகளை கொண்டு வாங்கோ கொளுத்துவம்.  :grin:

நமது சொந்தக் காரங்க எல்லாம், சைக்கிள் சின்னத்துக்கு, வாக்களிக்க....
வாக்களிப்பு சாவடியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக... சற்று முன்னர் தொலை பேசியில் சொன்னார்கள்.
கூத்தமைப்பு.... இதோடை, துண்டைக் காணோம், துணியை காணோம் என்று ஓடப் போகுது.:grin:

உங்கட சொந்தகாரங்கள் மட்டும் தான் சைக்கிளுக்கு குத்தியிருக்கிறார்கள் போல இருக்கு. ஒருவேளை அவர்களும் உங்களை சுத்திட்டாங்களோ?? :grin:

அண்ணை உந்த வெடிகளை கொண்டு வாங்கோ கொளுத்துவம்.  :grin:

உங்கட சொந்தகாரங்கள் மட்டும் தான் சைக்கிளுக்கு குத்தியிருக்கிறார்கள் போல இருக்கு. ஒருவேளை அவர்களும் உங்களை சுத்திட்டாங்களோ?? :grin:

:grin::grin:

தேர்தலுக்கு முன்னம் சினிமாகார, ரி கடைகாரர் சந்தை சனங்களோட கருத்து கணிப்பெடுத்து தான் நாங்கள் சைக்கிளுக்கு கொடி பிடிச்ச்னன்னங்கள்.

கடைசில இப்பிடி காலை வாரிட்டாங்களே.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.