Jump to content

திருமண மந்திரங்கள்!


Recommended Posts

பதியப்பட்டது

திருமண மந்திரங்கள்!

தமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.

இந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.

திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.

''சோமஹ ப்ரதமோ

விவேத கந்தர்வ

விவிதே உத்ரஹ

த்ருதியோ அக்னிஸடே

பதிஸ துரியஸதே

மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ

யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது

தொஷ்டா ரூபாணி பீசமிது

ஆசிஞ்சாது ப்ரஜபதி

தாதா கர்ப்பந்தாது..."

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? :lol::lol::lol: )

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

இப்படி ஆபாசம் மிகுந்த மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?

கள நிர்வாகிக்களுக்கு ஒரு வேண்டுகோள். இதிலே உள்ளவைகளை வெட்ட வேண்டாம். அப்படி உங்களுக்கு வெட்ட வேண்டும் என்றால், இந்த மந்திரங்களை சொல்பவர்களை போய் வெட்டுங்கள்.

  • Replies 67
  • Created
  • Last Reply
Posted

இந்த ஆபாசங்களைத்தான் எம்மவர்கள் "தமிழ் கலாச்சாரம்" என்று சொல்வார்கள்! :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட அர்த்தம் தெரியாது எண்டு எப்படியெல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறாங்கள் உந்த மந்திரங்களை

Posted

நீங்கள் சொன்ன அர்ந்தங்கள் எல்லாம் தவறு என்று நீருபித்தால் உங்கள் தளத்தை மூட நீங்கள் தயாரா?

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, நன்றாக தெரிந்த ஒர் நன்பர் மூலம் நீங்கள் எழுதியது எல்லாம் தவறு என்று நீருபீக்க நான் தயார் நீங்கள் தயாரா?

Posted

நான் இதை சரி என்று நிரூபித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லையே?

Posted

இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.

சில வித்தைக்கார பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வார்கள். அதன் உள்ளே சொல்லப்பட்டிருக்கிற தத்துவத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.

அப்படி யாராவது இதற்கு வேறு அர்த்தம் சொல்ல வரலாம்.

ஆனால் சமஸ்கிருத மொழியை கற்றவர்கள் நான் எழுதியதன் அர்த்தம் சரி என்று ஒத்துக் கொள்வார்கள்.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் இந்த மந்திரங்கள் பற்றிய விளக்கங்களை சொல்லி உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மட்டும் அல்ல. உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய சில பார்ப்பனர்களும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் எதற்கும் நீங்கள் உங்களுடைய அர்த்தங்களை தாருங்கள்.

Posted

ராஜாதிராஜ நீங்கள் சொல்லும் ஒருவர் மந்திரங்கள் சார்பாக என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார் என்றதைப் பொறுத்து அவருடைய மொழி பெயர்ப்பு இருக்கும். அதாவது objective ஆக இருக்காது subjective ஆக இருக்கும்.

அதே போலவே நீங்களும் மந்திரங்களிற்கு எதிரானவர்கள் ஆபாசமாக மொழிபெயர்ப்பு செய்துவிடுகிறார்கள் என்று வாதிடலாம்.

எனவே சமஸ்கிருதத்திற்கு இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் ஒரு உத்தியோகப+ர்வ அகராதி இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும். மொழிபெயர்ப்பு என்பது கடினமானது. தனியே சொற்கள் மாத்திரம் அல்ல பாவனை முறையும் அர்த்தங்களை மாற்றும்.

அடிப்படையில் தமக்கு புரியும் மொழியில் கருமங்களை செய்வதுதான் அறிவுள்ளவர்கள் செய்வது. மந்தைக் கூட்டம் அதை ஏற்காது இருக்கும் பொழுது யார் என்ன எழுதி என்ன பயன்? :angry:

Posted

ராஜாதிராஜ நீங்கள் சொல்லும் ஒருவர் மந்திரங்கள் சார்பாக என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார் என்றதைப் பொறுத்து அவருடைய மொழி பெயர்ப்பு இருக்கும். அதாவது objective ஆக இருக்காது subjective ஆக இருக்கும்.

அதே போலவே நீங்களும் மந்திரங்களிற்கு எதிரானவர்கள் ஆபாசமாக மொழிபெயர்ப்பு செய்துவிடுகிறார்கள் என்று வாதிடலாம்.

எனவே சமஸ்கிருதத்திற்கு இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளும் ஒரு உத்தியோகப+ர்வ அகராதி இருந்தால் தான் பொருத்தமாக இருக்கும். மொழிபெயர்ப்பு என்பது கடினமானது. தனியே சொற்கள் மாத்திரம் அல்ல பாவனை முறையும் அர்த்தங்களை மாற்றும்.

அடிப்படையில் தமக்கு புரியும் மொழியில் கருமங்களை செய்வதுதான் அறிவுள்ளவர்கள் செய்வது. மந்தைக் கூட்டம் அதை ஏற்காது இருக்கும் பொழுது யார் என்ன எழுதி என்ன பயன்? :angry:

¿£í¸û ¦º¡ýÉ ¸Õ§¾¡Î ´òÐ §À¡¸¢§Èý.

¾Á¢Æ¢ø «¨ÉÅÕõ «È¢Ôõ ÀÊ Áóò¾¢Ãí¸û ¦º¡øÄ¢ ¾¢ÕÁ½õ ¦ºöÅÐ ¾¡ý ºÃ¢.

«¾ü측¸ ¾ý¨ÉÔõ «È¢Â¡Áø ¦Àü§È¡÷ ¦º¡øÀʧ¡ «øÄÐ ²§¾¡ ´Õ ¸ð¼¡Âò¾¢ø ¾¢ÕÁ½õ ¦ºö¸¢ÈŨÃÔõ ÒñÀÎòÐÅÐ ¦À¡Ä þÕ츢ÈÐ þó¾ ¦Á¡Æ¢ Á¡üÈí¸û.

ºõŠ¸¢Õ¾õ ¾Á¢¨Æ Å¢¼ ±ó¾ Å¢¾òòÖõ ¯Â÷Å¡Éò¾¢ø¨Ä..«¾ü측¸ «¾ý ÀÊ ¾¢ÕÁ½õ ¦ºö¾Åü¸¨Ç §¸Ä¢ ¦ºööžø Өȡ̧Á¡?

இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டும்.

சில வித்தைக்கார பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்வார்கள். அதன் உள்ளே சொல்லப்பட்டிருக்கிற தத்துவத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.

அப்படி யாராவது இதற்கு வேறு அர்த்தம் சொல்ல வரலாம்.

ஆனால் சமஸ்கிருத மொழியை கற்றவர்கள் நான் எழுதியதன் அர்த்தம் சரி என்று ஒத்துக் கொள்வார்கள்.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர் இந்த மந்திரங்கள் பற்றிய விளக்கங்களை சொல்லி உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் மட்டும் அல்ல. உண்மையை ஒத்துக் கொள்ளக் கூடிய சில பார்ப்பனர்களும் இதை ஒத்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் எதற்கும் நீங்கள் உங்களுடைய அர்த்தங்களை தாருங்கள்.

±ý ¿ñÀ½¢¼õ ¦º¡øÄ¢ Áó¾¢Ãí¸Ç¢ý ¯ñ¨Á¡ý «÷ò¾ý «È¢Â ±ÉìÌõ «Å¸¡ºõ §ÅñÎõ.

¿¡ý ¿£í¸û ¦º¡øÅÐ ±øÄ¡õ ¾ÅÚ ±ýÚ Å¡÷ò¾ìÌ Å¡÷¨¾ ¿£ÕÀ¢òРŢð¼¡ø ¯í¸û ¾Çò¨¾ ã¼ §Åñ¼¡õ, ÀÌò¾È¢× ±ýÈ §ÅðÊ §Å¾¡óò¨¾ Å¢ðΠŢ¼ ¾Â¡Ã¡?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தளத்தை மூடுவது பற்றி எல்லாம் கதையாமல் விவாதத்தை தொடருங்கோ.

Posted

தன்னை அறியாமல், பார்ப்பனர் சொற்படி (பெற்றோர் சொற்படி அல்ல) எம்மவர்கள் திருமணம் செய்கிறார்கள் என்பதால்தான் இதனை சொல்கிறேன்.

இவைகளை அறிந்த பிறகாவது எம்மவர்கள் திருமண மந்திரங்களை தமிழில் சொல்லட்டும்.

என்ன சொல்லப்படுகிறது என்று தெரியாமலேயே மாடு மாதிரி தலை ஆட்டிக் கொண்டிருப்பவர்களை கிண்டல் செய்வதில் தவறு ஒன்றும் இல்லை.

அதே போன்று

என்ன சொல்கிறோம் என்று தெரிந்து கொண்டும், அதை சொல்பவர்களை எதிர்ப்பதிலும் தவறு இல்லை.

சொல்பவர்கள் திருந்த மாட்டார்கள். அது அவர்களின் பிழைப்பு. கேட்கின்ற வெங்காயங்கள்தான் திருந்த வேண்டும்.

சரி! இப்பொழுது சவாலுக்கு வருகிறேன்.

தளத்தை மூடும்படி சவால் விட்டதாவது பறவாயில்லை. பகுத்தறிவுச் சிந்தனையை விடும்படி சவால் விடுவது பகுத்தறிவு உள்ள செயலா?

மனிதனுக்கு இருக்கின்ற ஆறாவது அறிவே பகுத்தறிவுதானே? அதை விட்டுவிட்டு என்னை மிருகமாகச் சொல்கிறீர்களா?

சுய சிந்தனை இல்லாமல் இருக்கின்ற ஐந்தறிவு மனிதர்கள் போதாதா?

நான் சொன்ன அர்த்தங்கள் சரியென்று நிரூபணம் ஆனால் என்ன செய்வீர்கள் என்று இதுவரை நீங்கள் சொல்லவில்லை.

நீங்கள் மதம் மாறத் தயாரா என்று நானும் சிறுபிள்ளைத்தனமாக கேட்க மாட்டேன்.

சில பார்ப்பனர்கள் வேறு ஒரு அர்த்தம் சொல்லவது நான் சொன்ன முதலாவது மந்திரத்திற்குத்தான். சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்கள் அவளுக்கு அதிபதியாக இருந்தார்கள், காத்து வைத்திருந்தார்கள், தந்தை போன்று இருந்தார்கள் என்று வேறு விளக்கம் சொல்வார்கள்.

ஆனால் மற்ற இரண்டு மந்திரங்களுக்கும் நீங்கள் தலைகீழாக நின்றாலும் வேறு அர்த்தங்கள் கண்டுபிடிக்க முடியாது.

மூன்றாவது மந்திரத்தை ஒரு முறை உன்னிப்பாக வாசியுங்கள்! அதில் யோனி என்ற சொல் வந்த பிறகும், நீங்கள் உண்மையிலேயே வேறு அர்த்தங்களை தர முடியும் என்று நம்புகிறீர்களா?

முடிந்தால் முயற்சியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

:angry: ஓய்! சபேசனும், ராஜாதிராஜாவும் இதே சாட்டில் யாழ்களத்தை மூடவைக்கின்ற திட்டமா? அது ஒண்டும் வேண்டாம். வேணுமென்றால் சபேசன் தன் தளத்தை மூடட்டும். :angry:

Posted

திருமணத்திலேயே இவ்வளவு இருந்தால், சாமத்தியச் சடங்குகளில் எவ்வளவு இருக்கும்?

ஐயோ!! பாவம் எங்கள் சிறுமிகள்!!

Posted

ஏதாவது ஒன்றை நம்பி எமது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டுவிட்டோம் என்றால் பிற்காலத்தில் அவை எந்தளவு தான் தவறாக அர்த்தமற்றதாக தெரிந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்போம். ஒருவகை நிராகரித்த மனநிலையில் மிகுதிக் காலத்தை செலவிடுவோம்.

அதனால் பகுத்தறிவு பற்றி பாடசாலையில் பாடவிதானங்களில் ஒரு முக்கிய அங்கமாக சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்பட வேண்டும். மற்றய இனங்களிற்கு மதங்களிற்கு மதிப்பு கொடுக்கக்கூடிய வகையில் எல்லா இனங்கள் மதங்கள் பற்றிய அடிப்படை விடையங்களை எல்லோரும் படிக்க வேண்டும். அது தான் ஒற்றுமை புரிந்துணர்வு கொண்ட வளமான பலமான சமூகத்தை உருவாக்க உதவும்.

இவற்றை நடை முறைப்படுத்த அரசியல் அதிகாரங்கள் தேவை. அடிமைகளாக இருந்து கொண்டு செய்ய முடியாது. அடிமைத்தனத்தை வெல்ல மூடநம்பிக்கைகள் பிளவுகள் களையப்பட வேணும்.

Posted

இந்த எழிய மந்திரத்தை என்ர கல்யாணத்தில சொல்லுறதோ..

நடக்காது.. :unsure::unsure::unsure:

நாங்க ஓடுவம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசன் களத்திற்குள் நிறையவே விவாதங்களைத் தோற்றுவிக்கிறீர்கள். எல்லாம் நன்மையே! இந்தத் திருமண விடயத்தில் மொழி தெரியாக்காரணத்திற்காக சமஸ்கிருதத்தில் என்ன கூறி எம்மை இழிவுபடுத்துகிறார்கள் என்று அறியாமலே இன்னும் நம்மவர் அதற்குள் மூழ்கிக் கிடக்கிறார்களே என்று அடிக்கடி நினைப்பதுண்டு. பலருடன் பல சமயங்களில் வாக்குவாதப்பட்டும் இருக்கிறேன். இத்தகைய பகுத்தறிவைப் பின்பற்றுவதால் எதிரிகள்தான் அதிகமாகிறார்கள் யாரேனும் ஏன் என்று விளக்கமுடியுமா?

Posted

ஏதாவது ஒன்றை நம்பி (ஏமாந்து) தமது வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட பின்னர் ஒருவர் வந்து அது தவறு நீங்கள் ஏமாந்துவிட்டியள் என்றால் உங்களுக்கு எது இலகுவான தெரிவாக இருக்கும்?

-1- உங்களை ஏமாந்துவிட்டியள் தவறான விளக்கத்தோடு வாழ்க்கை வீணடித்துவிட்டியள் என்பவரில் குறைபிடித்து அவர் சொல்வது தவறு என்று சொல்லுவதும். அதன் மூலம் இறுதிவரை அதே நம்பிக்கைகளோடு அவற்றின் மூலம் நிறுவப்படும் "நன்மை- தீமை" "புண்ணியம்- பாவம்" "வெற்றி- தோல்வி" "ஒழுக்கம்- ஒழுக்கயீனம்" என்ற அளவுகோல்களில் திருப்த்திகரமாக வாழ்ந்ததாக எண்ணிக் கொண்டு சாவதா?

-2- அவர் சொல்வதை சீர்தூக்கி பாத்து ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் பெரும்பகுதியை அர்த்தமற்ற முறையில் வீணடித்து விட்டீர்கள் என்று ஏற்றுக் கொள்வதா? அதாவது ஒரு ஏமாற்றுப்பட்ட அர்த்தமற்ற முற்றிலும் தவறவிடப்பட்ட வாழ்க்கை என்ற தோல்வியை ஏற்றுக் கொண்ட படி சாவதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சபேசன் எழுதி இருக்கும் மந்திரங்களை நானும் படித்திருக்கிறேன், அதில் இன்னொரு விடயமும் படித்ததாக ஞாபகம், திருமணம் செய்து வைக்கப்படும் பெண் முப்பதுகோடி தேவர்களாலும் புனர்ந்து, இறுதியாக திருமணம் செய்து வைக்கும் புரோகிதராலும் புரனரப்பட்டபின்னரே, மணமகனுக்கு திருமனம் செய்து வைக்கப்படுகிறார், அதற்கான ஒப்புதலும் மணமகனிடம் பெறப்படுகிறது, புரோகிதர் திருமனத்தில் ஒப்புதல் கேக்க எமது சனம் மண்டைய மண்டைய் ஆட்டுறது இதற்கான ஒப்புதலுக்குதான். :unsure::unsure::unsure:

Posted

சித்தன் சொல்கிற மந்திரங்கள் குறித்து நானும் அறிந்துள்ளேன். அந்த மந்திரங்கள் கைவசம் இல்லாததன் காரணத்தால், அதை தர முடியவில்லை.

இந்திய துணைக்கண்டத்தில் சில இடங்களில் அண்மைக் காலம் வரை ஒரு பழக்கம் இருந்தது.

திருமணமான மணப் பெண் முதலில் அந்தப் புரோகிதனுடன்தான் முதலிரவை கொண்டாட வேண்டும். அதன் பிறகுதான் மணமகனுடன்.

நம்பூதிரிகள் பற்றி வாசித்த பொழுது இதை அறிந்து கொண்டேன்.

வடமொழி வேண்டாம் என்று சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.

ஆனால் அறிவு கெட்ட வெங்காயங்கள் இந்த மந்திரங்களுக்கு சக்தி இருக்கிறது என்ற அடம்பிடிக்கிறார்கள்.

குறுக்காலபோவான் சொன்னது போன்று, நீண்ட நாட்களாக நம்பிய ஒன்றை தவறு என்று ஒத்துக் கொள்ள மனம் மறுக்கிறது.

வரட்டுப்பிடிவாதம் விட்டு தமிழர்கள் விழித்து எழ வேண்டும்.

பார்ப்பனர் பற்றி மட்டும் நான் அதிகம் பேசுகிறேன் என்று சிலர் இங்கு வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

சிந்தித்துப் பாருங்கள்!

மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என்று தெரிந்து கொண்டு ஏமாற்றுபவர்களாக பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்.

தமிழன் பாவம்! அறியாமையில் செய்கிறான். பார்ப்பான் தெரிந்து கொண்டு ஏமாற்றுகிறான். இதை எப்படி பொறுத்துக் கொள்வது?

  • 9 months later...
Posted

திருமண மந்திரங்கள்!

தமிழர்கள் புரியாத, அழிந்து போன சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி திருமணம் செய்கிறார்கள்.

இந்த மந்திரங்கள் மிகவும் ஆபாசமனவை. திருமணம் முடிந்து முதலிரவில் நடக்கின்ற விடயங்களையும் ஆபாசமாக மந்திரங்களில் சொல்வார்கள்.

திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.

''சோமஹ ப்ரதமோ

விவேத கந்தர்வ

விவிதே உத்ரஹ

த்ருதியோ அக்னிஸடே

பதிஸ துரியஸதே

மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

நீங்கள் மேலே தந்திருக்கும் திருமண மந்திரத்தில் சொற்பிழை, பொருட்பிழை இரண்டும் இருக்கிறது.

மந்திரங்களை மட்டந்தட்டுவதில் உள்ள உங்கள் ஆர்வம் புரிகிறது. அப்படி மட்டம் தட்டுவதற்காகவே நீங்கள் மேற்கோள் காட்டும் மந்திரங்களை முக்கால் மந்திரங்களாக எழுதமாமல் சொற்பிழை இல்லாத முழுமந்திரங்களாக எழுத முயற்சி செய்யுங்கள். :)

மேலுள்ள மந்திரத்தின் சரியான பிரதி கீழே உள்ளது (உச்சரிக்கும் வசதி கருதி ஆங்கிலத்திலே தருகிறேன்)

Somah prathamo vivide

Gandharvo vivida uttarah

Trtiyo Agnistepatih

Turiyastemanusyajah.

Somo dadad gandharvaya

Gandharvo dadadagna; ye

Rayincapputramscadad

Agnirmahyamatho imam

- Rigveda, 10. 85, 40. 41.

இதன் பொருள்:

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்

பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்

மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்

நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

இதன் உட்பொருள்:

1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது

2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை.

ஒரு பெண்குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளி திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது

3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹோமோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கை பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது

இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்கு குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.

பதி என்னும் சொல்லின் பொருள் பாதுகாவலன் என்பதாகும். அதற்கு பெண்ணை புணர்பவன் என்ற அர்த்தம் இல்லை. அப்படி என்றால் பெண்ணை வன்புணர்வு செய்பவனும் பதி ஆகிவிடுவான்.

ஒரு பெண் உருவாக 3 தேவதைகளின் அருள் தேவைப்படுகிறது. 3 தேவதைகளின் அம்சமாய் விளங்கும் பெண் மானிடனான உன்னை இன்று அடைகிறாள். அத்துணை உயர்வான அவளுக்கு நீ காலம் முழுவதும் துரோகம் செய்யாது கண் போல் காக்க வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது (மணமகன் எடுக்கும் சத்தியபிரமாண மந்திரங்களிலும் இந்த உறுதிமொழி உள்ளது)

பதி என்ற சொல்லுக்கு பெண்ணை புணர்பவன் என்ற ஒரு தவறான அர்த்தத்தை தோற்றுவித்துவிட்டு, ஒரு உயர்வான அர்த்தம் தரும் மந்திரத்தின் அர்த்த்த்தை அப்படியே தலை கீழாக மாற்றுபவர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட வேறென்ன செய்ய முடியும்.

தலைகீழாய் தொங்கும் வௌவாலுக்கு உலகமே தலைகீழாய் தான் தெரியும் என்று சொல்வது போல். வக்கிரமாய் பார்ப்போருக்கு நல்ல விடயங்களும் வக்கிரமாய் தான் தெரியும்.

வடமொழி தெரிந்தவர்களும் தங்கள் மகளின் திருமணத்தில் இந்த மந்திரம் தான் சொல்கிறார்கள். புனிதமான திருமண சடங்கில் சொல்லப்படும் மந்திரத்தில் வக்கிரத்தை கலக்க வேண்டிய அவசியம் தான் என்ன?

அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இந்த மந்திரத்தில் ரோமம் பற்றி எல்லாம் எங்கும் குறிப்பிடப்ப்டவில்லை.

(அது மட்டும் அல்ல பெண் உடலில் எத்தனையோ இடங்களில் ரோமம் இருக்கிறதே! ஏன் வக்கிரமாகவே சிந்திக்க வேண்டும்?)

பகுத்தறிவு என்பார்கள் - எதையும்

பகுத்தறிய மாட்டார்கள்

பகைத்தறிவு போனதனால்

மிகைத்திரண்டு வந்ததடா

மற்ற மந்திரங்களுக்கும் நேரம் கிடைக்கும் நேரம் நிச்சயம் விளக்கம் எழுதுகிறேன். பகுத்தறிவு பிரசாரம் என்ற பெயரால் யாழ்கள வாசகர்களுக்கு தவறான தகவல் தருவதை இனியாவது தவிர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

Posted

வடமொழி மந்திரங்களுக்கு நான் விளக்க எழுதுவதால் தமிழர்கள் நிச்சயம் வடமொழி மந்திரங்களை சொல்லித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுவதாக யாரும் கருதி விடக்கூடாது.

தமிழில் திருமணங்களில் சொல்லக்கூடிய அழகிய மந்திரங்கள் நிச்சயம் இருக்கும். அது மட்டும் அல்ல இந்த வேதப் பிராமணங்களை தமிழிலேயே சொல்லும் போது எம்மக்களுக்கு இன்னும் தெளிவாகவே தெரியும்.

எனது திருமணத்தின் போது வேதமந்திரங்கள் ஓதப்படும். ஆனால் முக்கியமான பிரமாணங்களை தமிழில் தான் எடுக்க திட்டமிட்டுள்ளேன்.

அது மட்டும் அல்ல. வேதங்களே கூட மேற்சொன்ன மந்திரங்கள் ஓதாமல் திருமணம் செய்யவே கூடாது என்று சொல்லவில்லை. வேதங்களில் சொல்லப்பட்ட 8 வித திருமணங்களில் ஒன்று தான் இந்த பிரம்மமுறை திருமணம். அத்தோடு, மந்திரங்கள் ஓதி செய்யப்படும் இந்த பிரம்மமுறை திருமணங்களில் பெண்வீட்டாரிடம் இருந்து எந்த சீதனமும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது

Posted

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்

பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்

மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்

நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

விளக்கம் நன்றாக இருக்கிறது வெற்றிவேல். இப்படியாக புரியாது இருந்த சமஸ்கிருத மந்திரங்களுக்கு தமிழில் விளக்கங்கள் தருகிறபோது பிரமிப்பாக இருக்கிறது எமது இந்து மதத்தை நினைத்து. பல இப்படியான புரியாமலே நாங்கள் உச்சரிக்கிற மந்திரங்களுக்கான விளக்கங்களை நீங்கள் தமிழில் தரவேண்டும் தொடர்ந்தும்.

அடுத்தது எனக்கு சில சந்தேகங்கள். சாதாரணமாக எல்லோருக்கும் எழக்கூடியதுதான். சிலவேளைகளில் இவற்றில் ஆழ்ந்த பொருளிருக்கலாம். இந்து மதத்தில் ஒவ்வொன்றும் ஒரு காரணத்துக்காகத்தான் சொல்லப்பட்டிருக்கும்.

என்னென்றால் பதி என்றால் பாதுகாவலன் என்று அர்த்தம் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் கொடுத்த விளக்கத்தின்படி பாதுகாவலன் என்ற சொல் பொருந்தாமல் இருக்கிறது. சந்திர ஒளியின் மென்மை குளிர்மை போன்ற குணங்களை பெற்று பெண் வளர்கிறாள். அது எந்த வகையில் பாதுகாப்பு என்ற பொருளில வருகிறது என்று எனக்கு விளங்கவில்லை. அதப்போல காமவெப்பமும் எந்த வகையில பாதுகாப்ப கொடுக்குது என்று விளங்கவில்லை. நீங்கள் கொடுத்த விளக்கத்தின்படி நீங்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே "ஆதிக்கம் செலுத்துதல்" என்ற பொருளே அதிகம் பொருந்துவதாக இருக்கிறது. "ஆதிக்கம் செலுத்துதல்" என்ற பொருள் எமது சமூகக் கட்டமைப்புக்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது. ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆணின் ஆதிக்கம் பெண் மீதில் அதிகமிருப்பது தெரிந்தவொன்றே. மற்றது மந்திரத்திற்கு நீங்கள் தந்துள்ள விளக்கத்தில் நால்வருமே ஆண்களாகத் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவத்திலும் இந்த ஆண்கள் உன் மீது ஆதிக்கம் செலுத்தியது போல் இப்போது நான் உன்மீது ஆதிக்கம் செலுத்தப்போகிறேன் என்ற பொருளே நீங்கள் தந்த விளக்கத்தின்படி இருக்கிறது. எனக்கென்னவோ சிலவேளைகளில் நீங்களும் எமது இந்துமதத் மந்திரங்களை தவறாக மொழிபெயர்ப்பதாகப் படுகிறது. இந்துமதத் தத்துவம் பெண்ணடிமைத்தனத்தை அல்லது ஆணாதிக்கத்தை வலியுறுத்தியிருக்காது என்றே நினைக்கிறேன். அல்லது நீங்கள் சொன்னதை நான் சரியாக விளங்கிக்கொள்ளவில்லையோ தெரியாது. :)

அடுத்த தெளிவின்மை என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு பருவமாகப் பிரித்து அதற்கான வயது அளவுகோலை நிர்ணயித்திருக்கிறீர்கள். அந்த மந்திரத்தில் அப்படியான பருவ வயது பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது இதோடு தொடர்புடைய வேறு மந்திரங்களில் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறதா? ஏனென்றால் மந்திரத்துக்கு நீங்கள் தந்த மேலுள்ள விளக்கத்தின் படி "முதலில், பின், மூன்றாவதாக, நான்காவதாக" என்றே விளக்கமிருக்கிறது. பிறகு சிலவேளை நீங்களாகவே ஒரு பருவ வயது எல்லையைக் குறிப்பிட்டு விளக்கம் தருகிறீர்களா.

அடுத்தது நீங்கள் குறிப்பிட்டுள்ள சந்திரனின் ஒளிபடுதல் பெண்ணுக்கு மட்டும் நிகழ்கிற ஒன்றா? கேளிக்கை இசை குறும்பு அழகியல் போன்றவை பெண்ணுக்கு மட்டும் உரித்துடையதா? நீங்கள் சொன்ன அந்தப் பருவம் மட்டுமல்ல அதன்பின்னான காலங்களிலும் ஆண் பெண் இருபாலருமே இத்தகைய கலை அல்லது அழகியல் அல்லது மகிழ்வூட்டல் விடயங்களில் ஈடுபடுகிறார்கள் தானே? hormonகளின் மாற்றம் பெண்களுக்கு மட்டும் நிகழ்கிறதா? ஆண்களுக்கு நிகழ்வதில்லையா? நீங்கள் கொடுத்த விளக்கத்தின்படி சொன்ன விடயங்கள் பெண்ணுக்கு மட்டுமே நிகழ்வதாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அல்லது இன்றைய உலக சூழலில் இந்த மந்திரம் (நீங்கள் சொன்ன பொருளின் படி) ஏற்புடையதாக இருக்குமா?

நீங்கள் சொன்ன விளக்கம் கூட எமது இந்து மதத் தத்துவத்தின் பொருளை கீழ்நிலைப்படுத்துவது போலவே இருக்கிறது. பல உயரிய வாழ்வியல் தத்துவங்களை சொன்ன இந்து மதம், தொலைநோக்குப் பார்வையும் அறிவியல் விடயங்களையும் உள்ளடக்கியுள்ள எமது இந்து மதம் ஒருபோதும் நீங்கள் சொன்னதுபோன்ற விளக்கத்தைக் கொண்டிராது என்றே நினைக்கிறேன். அதற்கும் அப்பால் சிறந்த ஒரு வாழ்வியல் தத்துவம் இந்த மந்திரங்களுக்குள் இருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். மேலதிகமான அரிய பல விளக்கங்களை உங்களிடத்திலிருந்து அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன் வெற்றிவேல். :)

Posted

இளைஞன், நீங்கள் கேட்டுள்ள மேலதிக விளக்கங்களை இன்னும் சில நாட்களில் தருகிறேன். வேலைப்பளு காரணமாக தினமும் களத்தில் எழுதமுடிவதில்லை.

எங்கே ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கும் மேற்கத்தைய வாழ்க்கைச்சூழல் சுற்றிச் சுழன்றோட வைக்கிறதே ஐயா! என்ன செய்வது?! :):)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ

யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது

தொஷ்டா ரூபாணி பீசமிது

ஆசிஞ்சாது ப்ரஜபதி

தாதா கர்ப்பந்தாது..."

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா?

திருமணம் என்பதே.. ஒரு ஆபாச நிகழ்வுதான். அதை ஆபாசமாக கருதாமலும் பார்க்க முடியும். ஆனால் உலகில் 98% பேரும் திருமணமான சில ஆண்டுகளிலேயே குழந்தை குட்டியோடு அலைவதைப் பார்க்கையில்... அது ஆபாச நோக்கோடுதான் நோக்கப்படுவது புலனாகிறது. ஆனால் அதன் அர்த்தம் வேறு. அதை விடுவோம்..!

மக்கள் மத்தியில் கடவுள் மீது நம்பிக்கை மட்டுமல்ல.. ஒரு பயமும்.. பக்தியும்..மதிப்பும் இருக்கிறது. மக்கள் நம்பும் அல்லது பயப்பிடும்.. அல்லது மதிப்பளிக்கும் அந்தக் கடவுளை வைத்து நடைமுறை வாழ்க்கைக்குரிய விடயங்களுக்கு விளக்கமளித்து விட்டால்.. மக்கள் அதற்கு கட்டுப்படுவார்கள் என்பதை புராண இலக்கியங்களில் தெளிவாகக் காணலாம். சிலர் புராண இலக்கியங்களை மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளின் பிரதிபலிப்பாக நோக்குவது தவறு. புராண இலக்கியங்கள் மக்களின் வாழ்வை கற்பனை கலந்து பிரதிபலிப்பவை. அதற்குள் கடவுள் இருப்பது மக்களின் மனதை எவ்வாறு ஒரு விடயத்துக்குள் ஆழ்த்துவது என்ற நோக்கில் அன்றி.. அவைதான் கடவுட் கோட்பாடுகள் அல்லது மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ற அடிப்படையில் அல்ல. அவை தவறான புரிதல்கள். மக்களுக்கு மதக் கோட்பாடுகள் இலகுவாகப் புரியாததால்.. கடவுளை நடைமுறை வாழ்க்கைக்குள் பிரதியீடு செய்து மக்களின் வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை விதைக்க முற்படுகின்றனர் என்பதையே மேலுள்ள மந்திர உச்சாடணம் விளக்குகிறது.

சபேசன் அளவுக்கு மிஞ்சி பெரிய தோற்றம் காட்டுகிறார். 18 வயதுக்கு உட்பட்டோர்தான் படிக்கனும் இவற்றை என்று. 11 வயதிலேயே மனித இனப்பெருக்கம் பற்றி தெளிவாக விளக்கப்படுகிறது. எனவே இதில் சபேசனுக்கு கவலை தேவையில்லை.

பெண்களின் இனப்பெருக்க உறுப்பு.. பிரதானமாக மூன்று பகுதிகளை உடையது என்பது தவறல்ல. அது உண்மையே. கருப்பை (uterus).. யோனி மடல் (vagina).. வெளிப்புற உறுப்புகள் vulva.

ஆண் பெண் உடலுறவின் போது ஆண்களைப் போலன்றி பெண்கள் பாலுணர்வுத் தூண்டலுக்கு இலக்காக அதிக நேரம் எடுப்பதுடன் அவர்களின் பாலுணர்வுத் தேவை என்பது ஆண்களை விட அதிக நேரத்துக்குரியது. அதுமட்டுமன்றி ஆண் பெண் பாலுறுப்புக்கள் கலப்படைவதற்கு முன் தயார் நிலைக்கு வர வேண்டும். அதில் கூட பெண்களுக்கு அதிக நேரம் காலம் அவசியம். அப்படி நிகழாத போது.. பெண்களில் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடையவோ.. அல்லது வலி ஏற்படவோ.. அதிக சந்தர்ப்பம் உண்டு. பெண்களின் பிறப்புறுப்புப் பகுதி சிதைவடைவதால் (குருதிப் போக்குக்கு உள்ளவதால்) அதிக நோய்த்தொற்றலுக்கு வாய்ப்புண்டு. தொடர்ந்து உடலுறவு கொள்ள முடியாத நிலையும் தோன்றலாம். இப்படிப் பலர் வைத்தியசாலைக்கு வருகிறார்கள்.. இன்றைய உலகில் கூட.

அதனால் தான் ஆண்கள் உடலுறவின் போது விலங்குகள் போல முரட்டுத்தனமாகப் புணராமல்.. பெண்களின் உணர்வுநிலைகளை அறிந்து புணர வேண்டும் என்பதை.. விளக்க வேண்டிய கடப்பாடு உண்டு. இதை மண மேடையில் இருக்கும் மணமக்களுக்கு புத்தகமும் கையுமா சொல்ல முடியுமா சார்..???! அதுவும் மனித உடலமைப்புப் (Human anatomy) பற்றிய அறிவு தெளிவாக அறிவியல் மூலம் இனங்காட்டப் படாத ஒரு காலத்தில். இன்று நிலை வேறு.

அதுதான் திருமணம் என்ற நிகழ்வின் போது மந்திரம் மூலம் வழிகாட்டுகிறார்கள். கடவுளை வைத்து விளக்கமளிக்க முற்படுகின்றனர். இதில் என்ன தப்பு. கடவுள் சமூகத்துக்கு நல்வழி காட்டத்தானே மனிதனால் பாவிக்கப்படுபவர். நீ எப்படி கடவுளை மதித்து.. உருகி வணங்கிறாயோ.. உணர்வுகளை செலுத்திறாயோ.. அதைப் போல் நடந்து கொள்ளப்பா எங்கிறார்கள். முன்னர் எல்லோரும் சமஸ்கிரதமும் படிப்பர். அதனால் எல்லாத் தம்பதியருக்கும் இது புரியும் என்பதால் சமஸ்கிரதம் மூலம் சொல்கின்றனர். ஆனால் இன்று அது பலருக்கு விளங்க வாய்ப்பில்லை. இதை தமிழில் காலத்தின் தேவைக்கேற்ப அறிவியல் சார்ந்து சொன்னால் சிறப்பாக இருக்கும்.

கருத்தடை சாதனங்களுக்கும்.. கொண்டோம்களுக்கும் நாம் இன்று விளம்பரம் செய்யல்லையா. அதுபோல்.. அன்று திருமணமாகும் சம்பதியருக்கு அடிப்படைப் பாலியல் கல்வியை இப்படியான மந்திர உச்சாடணம் மூலம் ஊட்டியுள்ளனர். கடவுள் என்பது அங்கு கையாளப்பட்ட ஒரு காரணி மட்டுமே அன்றி.. அதில் தான் கடவுள் உள்ளார் என்பதல்ல விளக்கம். மத அடிப்படை கோட்பாடு என்பது வேறு.. கடவுள் என்ற அந்த பதநிலையை மக்களுக்கு அறிவூட்டப் பயன்படுத்தும் நிலை என்பது வேறு.

அரைகுறையா விளங்கிட்டு வந்து.. அரைகுறையா.. ஆராயாதீர்கள்..! ஒரு முழுமை நோக்கி விடயங்களை நோக்குங்கள். தெளிவு பிறக்கும். வேண்டிய மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களை பழமைக்குள் இருந்து தேட வேண்டிய சந்தர்ப்பமாவது எழுவது புரியும்.

இன்றைய உலகிலும் இது கட்டாயம். திருமணமாகும் தம்பதியருக்கு பாலியல் அறிவு மட்டுமன்றி பிறப்புரிமையியல் (genetics) அறிவும் அவசியம். புலம்பெயர்ந்த நாட்டில் கூட பல தமிழர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளை திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால் பல பாரம்பரிய நோய்களும்.. பிறப்புரிமை சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன. பல திருமண முறிவுகளுக்கு வன்முறைத்தனமான பாலியல் அணுகுமுறையும் காரணம் என்பதை திருமண முறிவு வழக்குகளைப் பார்த்தால் புரியும்.

இதை அடிப்படை பாலியல் பிறப்புரிமையியல் அறிவின்றி.. இருக்கும்.. திருமணமாகும் தம்பதியருக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப் போறீர்கள் என்று சிந்தியுங்கள். அன்று மந்திரம் மூலம் சொன்ன பாலியல் கல்வி சார்ந்த ரகசியத்தை பழிக்கிறீர்கள்.. இன்று அதே விடயமானது அவசியமானதாகி உள்ள சூழலில் அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு வழி சொல்லுறீங்களும் இல்ல.

அநாவசிய கர்ப்பமாதல்.. கருக்கலைப்புக்கு வழி செய்கிறது.

அண்மையில் லண்டனில் ஒரு வைத்தியசாலைக்கு ஒரு தம்பதியினர் வந்தார்கள். மனைவிக்கு விருப்பமில்லாத சமயத்தில் அவர் கர்ப்பமாகி விட்டாராம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை. அதற்கு வழி தேடி வருகிறார்கள். இப்படி பல விடயங்கள் நாம் வாழும் சமூகத்தில் தினமும். நாங்க என்னடான்னா.. கடவுளைப் பழிக்க என்று மூடத்தனமா சமூகத்தை அணுகிக் கொண்டிருக்கிறம். புகலிடத்தில் படிப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை. அங்கு எல்லாம் தெளிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருந்தும் அங்கு கூட பிரச்சனைகள் பல ரூபத்தில். ஊரில இருந்து இங்கு வருபவர்களே இப்படியான இக்கட்டில் அடிப்படை பாலியல் அறிவின்றி வாழ்வது அதிகம். இவர்கள் குடும்பக்கட்டுப்பாடு முறை அறிவின்றி, பாலியல் தொந்தரவுகளுடன்.. மற்றும் பிறப்புரிமை நோய்த்தாக்கமுள்ள குழந்தைகள் என்று சிரமப்படுவதை காணக் கூடியதாக உள்ளது. :)

இங்கு கடவுளை முன்னிறுத்தவல்ல எமது வாதம். சிலர் அறியாமல் புரியாமல் விடயங்களை அணுகுவதையும்.. விடயங்களை அணுகும் போது வெறும் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதையும் செய்யாமல்.. தேவையான சீர்திருத்தங்களையும் முன்மொழியுங்கள்..! அதுதான் சமூகத்துக்குப் பயன்படும். கடவுள் என்ற எண்ணக் கோட்பாட்டை அழிப்பது அல்லது சீர்குலைப்பதல்ல முக்கியம். அந்த எண்ணக் கோட்பாட்டை அழிக்கும் போது அல்லது சீர்குலைக்கும் போது சமூகம் அடையும் நிலை என்ன என்பதையும் சிந்தியுங்கள்..! அதற்கேற்ப சமூகத்தை தயார்படுத்த வழிகாட்டுங்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் ..
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.