Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசு

Featured Replies

எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசு

SEP 02, 2015 | 0:52by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

sampanthanசிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள்  உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று இடம்பெற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் அறிவிக்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள – தேசிய அரசாங்கத்துடன் இணையாள கட்சிகளின் உறுப்பினர்கள், தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தாமும் ரஞ்சித் சொய்சாவும் இணைந்து இந்தக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் வைத்து கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள நிலையில், மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே அந்தப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைபடி்பு கோரியுள்ளது.

நாடாளுமன்ற வழக்கங்களின் படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதற்கு அரசியல் உயர்மட்டங்களிலும் ஆதரவு காணப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச அணி இனவாத நோக்கிலேயே தமிழர் ஒருவருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக, கையெழுத்து திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாளை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பற்றி சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவிக்கவுள்ளார்.

பெரும்பாலும் இரா.சம்பந்தனே இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில், 1977ஆம் ஆண்டு தொடக்கம், 1983ஆம் ஆண்டு வரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2015/09/02/news/9331

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் தானைத் தலைவர் அமிர்தலிங்க ஏற்படுத்தி சாதனைக்குப் பின் தானைச் சிங்கம் சம்.. ஏற்படுத்தும் புதிய சாதனை இது.

முடியல்ல.. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றக் கற்றுக் கொள்ளுதுங்க. tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அட.... இதுக்குத்தானா.....
2016´க்குள் இனப் பிரச்சினைக்கு, தீர்வை பெற்றுத் தருவேன்.... என்று  சொல்லவில்லை என்று... 
நேற்று சம்பந்தன்  40 நாளுக்குப் பிறகு மறுப்பறிக்கை விட்டவர்.
இந்தாள்.... இனப் பிரச்சினையைத் தவிர.... தன்னுடைய சொந்த விடயங்கள் எதனையும்... ராசதந்திரத்துடன் தான்... அணுகும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் தானைத் தலைவர் அமிர்தலிங்க ஏற்படுத்தி சாதனைக்குப் பின் தானைச் சிங்கம் சம்.. ஏற்படுத்தும் புதிய சாதனை இது.

முடியல்ல.. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றக் கற்றுக் கொள்ளுதுங்க. tw_blush::rolleyes:

 

ஈழத்து அரசியல் புலம்பெயர்ந்தோருக்கு பொழுதுபோக்கு. ஈழத்தில் உள்ளவர்க்கு அது வாழ்க்கை பிரச்சனை. அங்குள்ளவர்களின் தேவை பற்றி நீர் கதைக்காதேம்.  Neduks முதல்ல எப்ப நாட்டுக்கு போகிறீர்கள்? அங்க போனால் தான் அங்குள்ளவர்களின் தேவை உங்களுக்கு விளங்கும்.

 

நியானி: ஒருமையில் விளிப்பதும் சீண்டுவதற்காக கருத்து எழுதுவதும் தவிர்க்கப்படவேண்டும்.

200Kயில் கொஞ்ச Kயை இளக்கி விடலாமே

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி எம்பி அவர்கட்கு யாழ் களத்தில் நான் கருத்துக்கள் எதுவும் எழுதுவதில்லை எனும் முடிவுக்குவந்து அதனைக் கைக்கொள்ள முயற்சிக்கிறேன், தாயகத்தில் யாரையும் "நீர்" என ஏக வசனம் கூறி விழிப்பதில்லை அப்படிக்கூறினால் உயர்குடியினர் கீழ்சாதியினரது கீழ்மையைக் குறிப்பிடுவதாக அமையும்.

மற்றும்படி தாயகத்தில் மக்கள் எக்கேடுகெட்டுபோனானும் போகட்டும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் சொந்தச்சோலியைப் பார்த்தாலே போதும், அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைமை அவர்கட்கு வழிகாட்டும் தவிர அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும். புலம்பெயர்தேசங்களிலிருந்து நீங்கள் ஒன்றும் கொடிபிடிக்கத்தேவையில்லை. அதற்கான தேவையும் தற்போது தாயகத்தில் இல்லை அங்கு எல்லாமே நல்லபடிதான் நடக்குது. ஒரு ஜனநாயக நாட்டில் எவையெல்லாம் காணப்படுமோ எப்படியான பிரச்சனைகளை ஒரு சமூகம் எதிர்கொள்ளுமோ அவைகளையே சிறீலங்காவில் வாழும் மக்கள் எதிர்கொள்கிறார்கள். அவற்றை தமிழக்கெதிரான சிங்களவரின் சதி என ஊ௹ஈப்பெருப்பிக்கவேண்டாம். அப்படி அவர்களுக்குப் பிரச்சனை இருக்குமானால் அப்பிரச்சனைக்கான பரிகாரத்தை அவர்களே தேடிப்பெற்றூக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பன் ஒருவர், யாழில் பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணர், அவருடன் கதைக்கும் போது அவரின் எதிர்பார்ப்பு TNA அமைச்சு பதவி எடுத்து அங்குள்ள கட்டமைப்புகளை மேம்பாடுத்துவது தான் நல்லது என்றார். அம்பாறையில் முஸ்லிம் அமைச்சர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளை எப்படி மேம்பாடுத்தி உள்ளார்கள் என்று சொன்னான். ஈழத்தில் உள்ளவர்களின் அடிப்படை தேவை இன்னும் பூரணமாக நிவர்த்தி செய்யப்படவில்லை.. பசியுடன் இருப்பவனுக்கு முதலில் பசி ஆற்றப்படவேண்டும்.

 

கம்ப வாரிதி கூட இந்த கருத்தை சில மாதங்கள் முன் சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பன் ஒருவர், யாழில் பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணர், அவருடன் கதைக்கும் போது அவரின் எதிர்பார்ப்பு TNA அமைச்சு பதவி எடுத்து அங்குள்ள கட்டமைப்புகளை மேம்பாடுத்துவது தான் நல்லது என்றார். அம்பாறையில் முஸ்லிம் அமைச்சர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளை எப்படி மேம்பாடுத்தி உள்ளார்கள் என்று சொன்னான். ஈழத்தில் உள்ளவர்களின் அடிப்படை தேவை இன்னும் பூரணமாக நிவர்த்தி செய்யப்படவில்லை.. பசியுடன் இருப்பவனுக்கு முதலில் பசி ஆற்றப்படவேண்டும்.

கம்ப வாரிதி கூட இந்த கருத்தை சில மாதங்கள் முன் சொல்லியிருக்கிறார்.

 

உங்கட சத்திர சிகிச்சை நிபுணர்.. 6 மாதம் அரசாங்க வைத்தியசாலையில் வேலை செய்திட்டு.. மிச்சம் 20 வருசத்தை அவுஸில்.. இல்ல லண்டனில் கழிப்பார். அவரை விடுங்க. அங்குள்ள ஏழை மக்களை பார்ப்பம். அவர்களுக்கு உந்த அமைச்சுக்களால்.. ஒரு பயனும் அமையாது. அமைச்சு செல்வாக்கில்லாதவர்கள் கிடையில் கிடக்க வேண்டியான். 

முஸ்லீம்கள் அமைச்சுக்களூடாக உயர்ந்தால்.. ஏன் மலையகம் அமைச்சுக்களூடாக உயர முடியல்ல..?! முஸ்லீம்கள்.. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கிறார்களே தவிர.. சலுகை அரசியலை முன்னெடுக்கிறார்களே தவிர.. மக்களின் உரிமை அரசியலை அவர்கள் செய்யவில்லை.செய்யவும் முடியாது. காத்தான்குடி உயர்ந்தது.. அமைச்சுக்களால் அல்ல.. தமிழரின் உரிமைப் போரை சாட்டு வைச்சு.. பயங்காட்டி.. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்படும் பெருமளவு மதவாதச் சலுகை நிதியால். அதை தமிழர்கள் செய்ய முடியுமா... ஹிந்தியாவை நம்பி.  அது அல்ல தமிழர்களின் எதிர்பார்ப்பு. அமைச்சுக்களூடாக செய்வதை அரசியல் உரிமை இருப்பின்.. ஓராண்டுக்குள் வெளிநாட்டு உதவிகளோடும் செய்து முடிக்கலாம்.. மிஸ்டர் எம் பி. எல்லாத்துக்கும் சரணாகதியே தஞ்சம் என்று வாழ நினைக்கப்படாது. அதனைக் கடந்து போகவும் சிந்திக்கனும்.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பன் ஒருவர், யாழில் பிரபலமான சத்திர சிகிச்சை நிபுணர், அவருடன் கதைக்கும் போது அவரின் எதிர்பார்ப்பு TNA அமைச்சு பதவி எடுத்து அங்குள்ள கட்டமைப்புகளை மேம்பாடுத்துவது தான் நல்லது என்றார். அம்பாறையில் முஸ்லிம் அமைச்சர்கள் அங்குள்ள வைத்தியசாலைகளை எப்படி மேம்பாடுத்தி உள்ளார்கள் என்று சொன்னான். ஈழத்தில் உள்ளவர்களின் அடிப்படை தேவை இன்னும் பூரணமாக நிவர்த்தி செய்யப்படவில்லை.. பசியுடன் இருப்பவனுக்கு முதலில் பசி ஆற்றப்படவேண்டும்.

 

 

 

கம்ப வாரிதி கூட இந்த கருத்தை சில மாதங்கள் முன் சொல்லியிருக்கிறார்.

 

பொதுவாக புலம்பெயர்ந்த மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்கின்றார்கள்.....சிட்னியிலிருந்து பல அமைப்புக்கள் செயல்படுகின்றது .....ஆனால் அதையும் கம்ப வாரிதி போன்றோர் தங்களது ஆணவப்பேச்சாலும் கருத்துக்களாலும் தடுத்துவிடுவார்கள் போல தெரிகின்றது......

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பன் வெளிநாட்டில் உழைப்பதை விட பல மடங்கு ஈழத்தில் உழைக்கிறான். அவன் முழு நீரமாக அரச மருத்துவமனையில் வேலையும் செய்கிறான். நீங்களும் ஒரு மருத்துவர் என நினைக்கிறேன். அதுதான் கேட்டன் எப்ப அங்கு போகிறீங்கள் என.

 

மலையக மக்கள் அடிப்படையில் வேறு பட்டவர்கள் முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில். அவர்கள் கல்வி தரம் முதலில் உயர்த்த படவேண்டும். அதற்கு அவர்கள் பொருளாதாரம் / அடிப்படை சம்பளம் உயர்த்தப்படவேண்டும்.

 

பசியுடன் இருப்பவனுக்கு முதலில் பசி ஆற்றப்படவேண்டும். நீங்கள் புலத்தில் வயிறு நிறைய உண்டுவிட்டு பொழுதுபோக்குக்கு ஈழத்து அரசியல் பற்றி எழுதுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எம் பி,

பல்லுப் புடுங்காட்டி ஒருத்தரும் சாகப்போறதில்லை. ஆகவே பல்வைத்தியர் நெடுக்ஸ் உடனடியாக நாடுதிரும்ப ஒரு அவசியமிமில்லை.

நீர் என்பது ஏக வசனம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நீ க்கும் நீங்களுக்கும் இடைப் பட்ட பேச்சு வழக்கே நீர்.

என்ட நண்பன் ஒருவன் ஊரில தோட்டம் செய்கின்றான், வருடத்திற்கு 200ஆயிரம் ரூபா தேறும் என்கின்றான்.

அவன் சொல்லுறான் எங்களுக்கு சம்பந்தன் செய்யக்கூடிய ஒரே உதவி தலைமைப்பொறுப்பை வேறுயாரிடமாவது கொடுத்து விடுவதுதான் என்று(சுமத்திரனிடம் அல்ல).

நான் கேட்டன் அப்ப சண்டை காலத்தில் என்னடா செய்தனீ எண்டு. அவன்சொன்னான் "தம்பி வெளியிலதான் நிக்குறான்" எண்டு.....................இப்பவும் கொண்டாட்டம் கிண்டாட்டம் எண்டா அனுப்புவானாம். 

அண்ணை உந்த வெளிநாடு உள்நாடு கதையல் எல்லாம் பேய்கதையல். யார் யார் உதவி செய்யினம் செய்யேல்லை எண்டும் தெரியாது.

காசுக்கும், அமைச்சுக்கும் ஆசைப்பட்டவை தான் டக்கருக்கும்...கலாவுக்கும் போட்டவை. கூட்டமைப்பு அமைச்சுப்பதவி எடுக்கமாட்டது என்பது ஊரில சின்னப்பிள்ளைக்கும் தெரியும். உங்கட டாக்குத்தர் ஐயாவிட்கு தெரியாமல்போனது கடும் வேடிக்கையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பன் வெளிநாட்டில் உழைப்பதை விட பல மடங்கு ஈழத்தில் உழைக்கிறான். அவன் முழு நீரமாக அரச மருத்துவமனையில் வேலையும் செய்கிறான். நீங்களும் ஒரு மருத்துவர் என நினைக்கிறேன். அதுதான் கேட்டன் எப்ப அங்கு போகிறீங்கள் என.

மலையக மக்கள் அடிப்படையில் வேறு பட்டவர்கள் முஸ்லிம்களுடன் ஒப்பிடுகையில். அவர்கள் கல்வி தரம் முதலில் உயர்த்த படவேண்டும். அதற்கு அவர்கள் பொருளாதாரம் / அடிப்படை சம்பளம் உயர்த்தப்படவேண்டும்.

பசியுடன் இருப்பவனுக்கு முதலில் பசி ஆற்றப்படவேண்டும். நீங்கள் புலத்தில் வயிறு நிறைய உண்டுவிட்டு பொழுதுபோக்குக்கு ஈழத்து அரசியல் பற்றி எழுதுவீர்கள்.

வணக்கம் எம்பி

முதலில் ஐனநாயம் சார்ந்து பேசுகிறீர்கள்

எனவே உங்களுக்கு உள்ள உரிமை மற்றவருக்கும் உண்டல்லவா??

புலம் பெயர் தேசத்திலிருந்து தாயகம் சார்ந்து உங்களால் பேசமுடிகிறது என்றால்

மற்றவர்களால் ஏன் முடியாது?????

உங்கள் கருத்துடன் உடன்படாத ஒரே காரணத்துக்காக மற்றவர் உரிமையை மறுப்பதேன்???

அப்புறம் ஐனநாயகம் எப்படி வந்தது???

பசி  வந்திடப்பத்தும் பறந்திடும் என்று நீங்கள் சொல்வது சரியே

ஆனால் பசி முடிந்ததும் 

வாழ்க்கை இருக்கே

அதற்கு சுதந்திரம் வேண்டும் காண் என்று நான் சொல்வது எவ்வாறு தப்பாகும்.....?

புலம் பெயர் தேசத்திலிருந்து தாயகம் சார்ந்து உங்களால் பேசமுடிகிறது என்றால்

மற்றவர்களால் ஏன் முடியாது?????

மிக மிக தெளிவான பதில் என்று நினைக்குறேன்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்திலிருந்து தாயகம் சார்ந்து உங்களால் பேசமுடிகிறது என்றால்

மற்றவர்களால் ஏன் முடியாது?????

சரியான... நெத்தியடி, விசுகு.
எம்பி.... துண்டைக் காணோம், துணியைக் காணோம்... என்று, எம்பி எம்பி..... குதிச்சு ஓடப் போறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்களால் முடியாது .......
புலன் பெயர்ந்தவர்களால் மட்டுமே முடியும் !

  • கருத்துக்கள உறவுகள்

உதை விடுங்கோ.... 1977 இல் (சரியாத் தெரியாது) எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிரை 1989 இல போட்டனாங்கள். 2015 இல எதிர்க்கட்சித் தலைவரா வந்தாலும் அவரை 2027 இலை போட ஏலாது. ஏன் சொல்லுங்கோ பாப்பம் அதுக்குள்ள அவர் போய்ச்சேர்ந்திடுவார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
32 வருடங்களுக்கு பின்னர் எதிர்க்கட்சி தலைவராகும் தமிழர்?
news

32 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த நியமனம் நாளை அறிவிக்கப்படலாம் எனவும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிகளவான 16 ஆசனங்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்குரிய அனைத்து வகையிலான தகுதிகளையும் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் இரா. சம்பந்தன் நாளைய தினம் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இதற்கான ஒப்புதலை ஜனாதிபதியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மக்கள் விடுதலை முன்னணியும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக பல முறை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குமாரவெல்கமவை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கையெழுத்துக் கோரிக்கை ஒன்றும் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் வெற்றிலை சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் அதில் ஒரு குழு தனியான கட்சியாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்ற வாதம் ஒன்றும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால்,அது 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர்  24ஆம் திகதிவரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=372944239602211361#sthash.PrGk7fVs.dpuf
எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் : மனோவும் வலியுறுத்து
news

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது நாட்டின் அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசின் ஒரு பகுதியாக இருக்கும் சந்தர்ப்பம் உருவாவதாக அவர் தெரிவித்தார்.

நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பட்டுள்ளது.

ஆகையால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குமார வெல்கம எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று 56 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=230144239502121497#sthash.C287f6uC.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து, உந்தாளை..... நாளைக்கு மட்டும் காக்க வைக்காமல்... இண்டைக்கே... எதிர்கட்சி தலைவர் பதவியிலை இருத்தி விடுங்கோ....
மனுசன் காத்திருந்து, காத்திருந்து.... களைச்சுப் போச்சுது. 
எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் பையன் வாழ்க..............sJumping_100-161-106  sJumping_100-161-107

Edited by தமிழ் சிறி

என் நண்பன் வெளிநாட்டில் உழைப்பதை விட பல மடங்கு ஈழத்தில் உழைக்கிறான். அவன் முழு நீரமாக அரச மருத்துவமனையில் வேலையும் செய்கிறான். நீங்களும் ஒரு மருத்துவர் என நினைக்கிறேன். அதுதான் கேட்டன் எப்ப அங்கு போகிறீங்கள் என.

 

MP.... சம்பளம் கூட தாறாங்கள் , நல்ல ரிலாக்ஸ் ஆனா லைப் எண்டு தானே நீங்கள் அவுசுக்கு போனீங்கள் , எல்லாத்தையும் விடுட்டு உங்களால போக முடியும் எண்டால் நாங்களும் ரெடி !

அன்று,

77ல் ஈழம் பெற சிங்கள பாராளுமன்றம் சென்ற அப்பாப்பிள்ளை ... ஈழத்தை விட முக்கியமானதான எதிர்கட்சி தலைவர் பெற்று தமிழர் பிரட்சனையை தீர்த்தார்?

இன்று,

2016ல் தீர்வு பெற்றுத்தர சிங்கள பாராளுமன்றம் சென்ற சம்பந்தர் ... தீர்வுக்கு மேலாக எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து ...?

 

  • தொடங்கியவர்

தயவு செய்து, உந்தாளை..... நாளைக்கு மட்டும் காக்க வைக்காமல்... இண்டைக்கே... எதிர்கட்சி தலைவர் பதவியிலை இருத்தி விடுங்கோ....
மனுசன் காத்திருந்து, காத்திருந்து.... களைச்சுப் போச்சுது. 
எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் பையன் வாழ்க..............sJumping_100-161-106  sJumping_100-161-107

அந்தக் கதிரையிலிருந்து தூங்கி வளிய மாட்டார் என்று உங்கள் அனைவராலும் உத்தரவாதம் வழங்கமுடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.