Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் வீட்டு பூசையறையில் பார்வதியம்மாளின் அஸ்தி….

Featured Replies

http://www.asrilanka.com/2015/09/07/29807

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, தனது வீட்டின் பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் புதிய குண்டை வெடிக்க வைத்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இந்தக் குண்டைப் போட்டுள்ளார்.  புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011 ஆம் ஆண்டு, தனது 81 ஆவது வயதில் – வல்வெட்டித்துறையில் மரணமடைந்தார்.

பார்வதியம்மாளின் இறுதிக் காலங்களில், அவரை – தற்போதைய வட மாகாணசபை உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் பராமரித்து வந்தார்.

மரணமடைந்த பார்வதியம்மாளின் உடல், வல்வெட்டித்துறையிலேயே தகனம் செய்யப்பட்டது.
இவ்வாறாதொரு நிலையில், பார்வதியம்மாளின் அஸ்தி அடங்கிய மண் பானையொன்று, தனது தமிழக இல்லத்தில் உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.

இதேவேளை, சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் மேலும் இரண்டு மண் பானைகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பானைகளில் ஒன்றில், புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோட்டையாக விளங்கிய வன்னிப் பிரதேசத்து மண்ணும், மற்றைய பானையில் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போருக்கு எதிராக, தீக்குளித்து மரணமான ஊடகவியலாளர் ஒருவரின் சாம்பல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீமானின் வீட்டில், புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் பல்வேறு விதமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Edited by raja.m1982

 அஸ்தி புனித நதியில்/நதிகளில் கரைக்கப்பட வேண்டியது... 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயம் தொடர்பாக உண்மை நிலை தெரியவில்லை, அப்படியே இது உண்மையான செய்தியாக இருந்தால்..... அன்னைக்காய் அழுது, அன்னையைப்பாதுகாத்து பராமரித்த அத்தனை வல்வையருக்கும் அன்னையின் அஸ்தியை அந்தரவழியில் விட்ட பாவம் அனைத்தும் சேரும். அன்னை சுமந்து பெற்ற பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் கூடவா அன்னைக்கு செய்யவேண்டிய உயரிய பணியைச் செய்யவில்லை?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

 நிலைமை இப்படி ஆகிவிட்டது! இதுவும் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதி! சூப்பர்!

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரின் தலைமுடி.. பல்லு.. வேட்டி.. கச்சை என்று எதை எதையோ எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டு.. இது புத்த தேசம் என்று உலகம் பூரா ஒரு இனமே பிச்சை எடுத்துக்கிட்டு அடுத்த இனத்தை அழிச்சு வாழுது.. அதோட ஒப்பிடேக்க.. சீமான் தன் விசுவாசத்திற்குரிய தலைவனின் தாயின் அஸ்தி கலந்த மண்ணில் ஒரு பிடியை எடுத்து வைச்சிருக்கிறதில என்ன பிரச்சனையோ..?! tw_anguished:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நாஸ்திகவாதி.

பூஜை அறையா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்கள் வழிக்கே வருகிறேன் ஏன் அம்மாவுடையது மட்டுந்தான் எடுத்து வைப்பாரா அப்பாவினது கிடையாதா?

புத்தரின் தலைமுடி.. பல்லு.. வேட்டி.. கச்சை என்று எதை எதையோ எல்லாம் எடுத்து வைச்சுக்கிட்டு.. இது புத்த தேசம் என்று உலகம் பூரா ஒரு இனமே பிச்சை எடுத்துக்கிட்டு அடுத்த இனத்தை அழிச்சு வாழுது.. அதோட ஒப்பிடேக்க.. சீமான் தன் விசுவாசத்திற்குரிய தலைவனின் தாயின் அஸ்தி கலந்த மண்ணில் ஒரு பிடியை எடுத்து வைச்சிருக்கிறதில என்ன பிரச்சனையோ..?! tw_anguished:tw_angry:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேள்வியை நீங்கள்... சீமானின் அடுப்படி ச்சா..பூஜை அறை வரை சென்று துளாவி செய்தி போட்ட  ஊடகக் காரரை கேட்பது தான் நல்லது. முதலில் தந்தையின் அஸ்தி கலந்த மண்பிடி இருக்கோ இல்லையோன்னு உறுதி செய்யாமல்.. சகட்டுமேனிக்கு.. கேள்வி கேட்பது அழகல்ல அல்லவா. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு....,

அண்ணையின் இல்லத்திலிருந்து மண் எடுத்துக்கொண்டுபோய் வீட்டில் வைத்து போற்றும் பலரை அதன் உண்மைத்தன்மையை அறிவேன் ஆனால் சீமானின்...... செவ்வியாக ஊடகத்தில் வெளிவந்ததாக  அன்னையின் அஸ்தி தொடர்பான விடயத்தை என்னால் ஏற்கவோ நம்பவோ முடியாது.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.. அவர் ஒரு தமிழ் செவ்வியிலேயே சொல்லியுள்ளார். ஏற்கனவே கேள்விப்பட்டதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு....,

அண்ணையின் இல்லத்திலிருந்து மண் எடுத்துக்கொண்டுபோய் வீட்டில் வைத்து போற்றும் பலரை அதன் உண்மைத்தன்மையை அறிவேன் ஆனால் சீமானின்...... செவ்வியாக ஊடகத்தில் வெளிவந்ததாக  அன்னையின் அஸ்தி தொடர்பான விடயத்தை என்னால் ஏற்கவோ நம்பவோ முடியாது.

எங்களுக்கு என்னவோ.. சீமான் இதனை நம்பச் சொல்லிச் சொன்னதாகத் தெரியவில்லை. ஒரு தகவலாகச் சொல்லி இருக்கலாம் என்றே படுகிறது. அதனை ஊடகக்காரர்கள் தங்கள் விளம்பரத்துக்கு ஊதிப் பெருப்பிக்க.. சிலர் அதன் மேல் ஏறி நின்று குதிபோடுகிறார்கள்.. அவ்வளவே. இது அவரவர் விசுவாசப் பிரச்சனை. நாங்க நம்பினால் என்ன விட்டால் என்ன..! அவைக்கு ஒரு பாதிப்பும் இல்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி செய்தவருக்கு மார்க்ஸ் யாரென்றே தெரியவில்லை..

தமிழன் என்று சொன்னால் யாருக்கெல்லாம் கோப‌ம் வருகிறதோ அவர்கள் எல்லோரும் திராவிடன் என்கிற போர்வையில் தமிழ்நாட்டை சூறையாடுகிறவர்கள்தான். இந்த திராவிட அரசியல் ஒழிந்தால்தான் தமிழகம் தேறும்.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் நந்தன்.

கோமாளி கந்தன் சீமான் - முரண்பாடுகளின் மொத்த வடிவம்.

அவங்க திராவிடத்தச் சொல்லி கொள்ளை அடிச்சாங்க. இவர் தமிழைச் சொல்லி அடிக்கப் பாக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் நந்தன்.

கோமாளி கந்தன் சீமான் - முரண்பாடுகளின் மொத்த வடிவம்.

அவங்க திராவிடத்தச் சொல்லி கொள்ளை அடிச்சாங்க. இவர் தமிழைச் சொல்லி அடிக்கப் பாக்கிறார்.

தமிழக அரசியல் மேடையில் சீமான் தனக்கென ஒரு சிறு இடத்தைப் பிடிக்க ஈழப்பிரச்சனையைப் சிறந்த முறையில் பயன்  படுத்திக் கொண்டார்.

அதற்காக சிறைக்குக் கூட சென்றார்.

இப்போதெல்லாம், ஈழத்தமிழர் பிரச்சனையிலும் பார்க்க தமிழக அரிசியலே அதிகம் பேசுகிறார்.

பார்க்கும் போது சரியானதோர் Strategy உடன் மூவ் பண்ணுகிறார் போல தெரிகிறது.

திராவிடம் குறித்தும், தமிழ் தேசியம் குறித்து பேசுவது, பாரம்பரிய திராவிடத் தலைகளை பதற வைப்பது தெரிகிறது. எனினும், இது பிரித்தானிய ஆட்சியில் சலுகை அடைந்திருந்த தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசியல் வாதிகள் செய்ய அதே தந்திரம் போலுள்ளதும் மறுக்க முடியாது.

ஈழப்பிரச்சனை எனும் சிறு படகின் ஊடாக, தமிழக அரசியல் எனும் பெரும் சமுத்திரத்தினை அடைந்து இருக்கிறார். 

சமுத்திரத்தை வந்து சேர்ந்ததும், சிறிய படகில் இருந்து, சமுத்திரத்தில் சமாளிக்கும் வகையில், திராவிட எதிர்ப்பு என்னும் பெரிய கப்பலில் ஏறிக் கொண்டார். 

இங்கே ஈழத் தமிழர், பிரபாகரன், புலிகள் குறித்து முழங்கினால், உள்ளே போட தயங்க மாட்டார்கள் என்பது தெரிந்து தமிழ் தேசியம் பேசுகிறார்.

தமிழர்கள் என்ற வகையில், பத்திரிகை, மீடியா உலகத்தினர், திரை உலகத்தினர் இதை உள்ளூர ரசிக்கின்றனர். தமிழ் தேசியம் அவர்களை கவருகின்றது. மறைமுக ஆதரவு தருகின்றனர். இதில் பலர் அவருக்கு சரியான ஆலோசனை தருகின்றனர்.

கர்நாடகாவில் தமிழருக்கு அவ்வபோது அடிப்பார்கள், தாக்குவார்கள். தமிழக அரசு எதுவுமே செய்யாது. காரணம் திராவிடம். இப்போது சீமான் தமிழ் தேசியம் பேசும் போது, நியாயமாகப் படுவதால் ஆதரவு வருகிறது.

"என் தம்பிங்க கொஞ்சப் பேரு, போலீஸ்காரங்க அடிச்சாங்க என்னுட்டு வந்தாங்க. யாரது என்று பார்த்தபோ அவிங்க தமிழங்க என்னு தெரிஞ்சுது. அட நம்மவங்க, நம்ம குடும்பத்தில சித்தப்பு, மாமு அடிச்சிபுட்டாறு என்னுட்டு போயிட்டு இருங்கப்பா என்னு சொல்லி அனுப்பிட்டேன்", என்று சொல்லும் போதே அவரது நோக்கு புரிகிறது.

இது பெருகும் என்பது, இலங்கையில் சிங்கள தேசிய வாத அரசியலில் எமக்கு கிடைத்த அனுபவம்.

சீமான் மீதான இந்த வீடியோ, அவர் வளர்கிறார் என சொல்கிறது. காய்க்கும் மரத்துக்கு தான் கல் எறி விழும்.

அண்ணா, காமராஜ், எம் ஜி ஆர், ஜெயலலிதா, கலைஞர் பார்க்காத வசவுகளா, அவமானங்களா? அவர்கள் அடைந்த உயரம் என்ன ?

வசைகளைத் தாங்க முடியாமல் அரசியலில் இருந்து வெளியேறியவர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். வசைகளுக்கு பயந்து வராமலே இருப்பவர் ரஜனி.

தெளுங்கர் விஜயகாந், கன்னடர் இளங்கோவன், பம்பாய் குஸ்பு, குஜராத்தி நமீதா போன்றவர்களுக்கு தமிழக அரசியல் கனவு வரும் போது, ஏன் எம் தமிழன் சீமானுக்கு வரக்கூடாது ?

மற்ற வகையில், அவர் அங்கே செய்யும் அரசியலில் எமக்கு என்ன வந்தது ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

1) ஒரு கொள்கைவாதியை அவர் வளரும் போதே இனம்கானலாம். சீமான் கருணாநிதியை போல தன் வளர்சிக்கு தமிழுணர்வை பயன்படுத்தி விட்டு, தன் இலக்கை அடைந்ததும் தமிழை அம்போ என விட்டு விடுவார். சீமான் அங்கே செய்யும் அரசியலால் எமக்கு ஒரு பாதகமுமில்லை. ஆனால் சாதகம் இருக்கிறதாய் சொல்லி கடை விரிப்பதுதான் ஏற்கவில்லை.

2) தமிழகத்தில் இனி இன உணர்வு தூண்டப் பட வழியே இல்லை. அந்தளவுக்கு தேசிய உணர்வு மரித்துப் போய்விட்டது அங்கு. சிங்களவர்கள் இனமானச்சிங்கங்கள். அங்கு பலித்த உத்தி தமிழகம் போல் ஓரிடத்தில் எடுபடாது.

1.  எதையுமே எதிர்பாராமல் இருப்பதால், ஒரு ரசிப்பு மட்டும் தான் ஐயா. உங்களுக்கு எரிச்சல் அல்லது கோபம் வருவதன் காரணம் புரியவில்லை.

2. ஜெர்மானியர் அல்லாத ஆஸ்திரியரான ஹிட்லரின் ஆத்வேகமான, உணர்ச்சிகரமான, எழுச்சி கரமான பேச்சுக்களின் விளைவு, ஜூதர்கள் அழிவு, ஒரு சூரியன் மறையா சாம்ராஜியத்தின் வீழ்ச்சி, உட்பட்ட பல.....

மக்கள் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும், தர்க்க ரீதியான பேச்சுக்கள் வரலாறுகளை தலை கீழாக்கி உள்ளன....

அடிமைகளிடையே, மார்டின் லூதர் கிங் பேச்சின் விளைவு, (அமெரிக்க சிவில் உரிமை) போராட்டம் மூலம் தமது உரிமைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கை பெற வைத்தது...

பெரும் ஊழல்கள் செய்து, 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் எழுச்சிப் பேச்சில் புதைத்தார் 'கொள்கை வாதி' கருணாநிதி...

அதே பேச்சு வன்மை டீ பாய் நரேந்திர மோடியை இந்திய பிரதமர் ஆக்கி உள்ளதே. :rolleyes:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இதற்கு நம் பெரியாரை விட பெரிய உதாரணம் இருக்கப் போவதில்லை. ஆனால் தம் திறமையை கொள்கைக்காக பயன் படுத்திய வகையினர் ஒன்று. அதே திறமையை கொள்ளைக்காக பயன் ப்டுத்தியவர்கள் இன்னொன்று.

பெரியாரையும், கடவுள் மறுப்பையும், தமிழ் தேசியத்தையும், காளிமுத்து மகளை கரம்பிடித்த வித்தையையும் இப்படி இவரின் முரண்பாடுகளை பார்கும் யாருக்கும் புரியும், எதைப் பிடித்தாவது மேலே வந்தால் போதும் என்ற இவரின் அங்கலாய்ப்பு.

இலங்கையில் ஒரு சிறிரங்கா, தமிழ்நாட்டில் சீமான்.

நாளைக்கே மேலே வந்தவுடன், ஒருக்கா டெல்லி போய்வந்தவுடன், தமிழ் தேசியத்தை மடித்து பெட்டிக்குள் வைத்து விட்டு, ஜன கண மன பாடுவார்.

ஆனானப்பட்ட அண்ணாவே இதைத்தானே செய்தார்?

என் ஆத்திரமெல்லாம் தன் சுயநலத்துக்காக இப்படி எம் சாவுவீட்டில் வந்து அரசியல் செய்கிறாரே என்பது மட்டும்தான்.

Edited by goshan_che

அது தவறான பார்வை தானே ஜயா!

அவரது பேச்சால், கருணாநிதியின் எமதவர்கள் மீதான பொய் பித்தலாட்டம் தெரிய வந்ததே...

ரங்கா ?? (he was running with hares and hunting with hounds)

தவறான ஒப்பீடு!

சீமானின் தமிழ் தேசிய வாத அரசியலுக்கும், பழைய துட்டகெமுனுவின் அல்லது SWRD, JR ஜயவர்தனே, சிங்கள தேசிய வாத அரசியலுக்கும் ஒப்பீடு சரியாக இருக்கும்.

மேலும், தெலுங்கு கப்டனினதும், மாராட்டிய ரஜனியும், காங்கிரஸ் தலைமையை பிடிக்க முயலும் பம்பாய் குஸ்புவும் தமிழக முதவ்வர் கனவு பனால் ஆவதில் தமிழன் என்ற வகையில் ஒரு அற்ப சந்தோசம்.

மற்றப்படி, அவரது எதிர்கால நிலை குறித்த உங்கள் கருத்தை காலமே சரியா, பிழையா என்று சொல்லும்.

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

hahaha..... அப்படி வீசுங்க வாளை!

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

உண்டியல் வச்சிருக்காத ஒரு அரசியல் கட்சியிண்ட பேர் சொல்லுங்கண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

1) ஒரு கொள்கைவாதியை அவர் வளரும் போதே இனம்கானலாம். சீமான் கருணாநிதியை போல தன் வளர்சிக்கு தமிழுணர்வை பயன்படுத்தி விட்டு, தன் இலக்கை அடைந்ததும் தமிழை அம்போ என விட்டு விடுவார். சீமான் அங்கே செய்யும் அரசியலால் எமக்கு ஒரு பாதகமுமில்லை. ஆனால் சாதகம் இருக்கிறதாய் சொல்லி கடை விரிப்பதுதான் ஏற்கவில்லை.

2) தமிழகத்தில் இனி இன உணர்வு தூண்டப் பட வழியே இல்லை. அந்தளவுக்கு தேசிய உணர்வு மரித்துப் போய்விட்டது அங்கு. சிங்களவர்கள் இனமானச்சிங்கங்கள். அங்கு பலித்த உத்தி தமிழகம் போல் ஓரிடத்தில் எடுபடாது.

இந்தக் குற்றச்சாட்டை சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டி உள்ளது.

தனித்தே நிற்பேன் என்று கூறிய அண்ணன் வைகோவும், மருத்துவர் இராமதாசும், விஜயகாந்தும் இறுதியில் திராவிடக் கட்சிகளிடம் அடிபணிந்து தொகுதிகளைப் பெற்றுக்கொண்டதும் தமிழக அரசியலில் நடைபெற்றதுதான். ஆகவே சீமானும் தமிழுணர்வை இப்போது பற்றிக்கொண்டுவிட்டு பிறகு போட்டு மிதிக்கலாம் அல்லவா? நியாயமான சந்தேகம்தான்.

இதற்கு கடந்த சில ஆண்டுகளை பின்னோக்கிச் சென்று பார்ப்பது பலனைத் தரும்.
 
சீமான் மீது பொதுவாக உள்ள குற்றச்சாட்டு..
 
1) மே 2009 இன் பின் ஈழ அரசியலை தூக்கிப் பிடிக்கிறார்.
2) தமிழுணர்வை தூண்டுகிறார்.
3) காசுக்காக அரசியல் நடத்துகிறார்.
4) ஜெயாவின் பினாமியாக உள்ளார்.
5) கிறிஸ்தவராக (சைமன்) இருப்பதை மறைத்து சீமான் என பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.
6)  மேலும்...
 
இதில் முதலாவது விடயம்.. சீமான் எனக்குத் தெரிந்து 2006 இல் இருந்தே ஈழவிடயத்தைப் பேசி வருபவர். இதற்கான காணொளி ஆதாரமும் உள்ளது. அதுபோக ஈழம் என்று பேசினாலே சிறைக்குப் போக வேண்டி வந்த 2008 காலப்பகுதியிலேயே அதைப் பற்றிப் பேசி ஐந்து முறை சிறை சென்றவர்.
 
இரண்டாவதாக, இவர் திடீரென்று தமிழுணர்வு பெற்று பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு. கீழ்க்கண்ட காணொளி 2007 இல் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பகுதி. முதல் ஐந்து நிமிடங்களை நாம் பார்த்தோமானால் இன்றுள்ள சீமான் தான் அன்றும் இருந்துள்ளார் என்பது புலனாகும்.

https://www.youtube.com/watch?v=5c8LHqEt2uc

காணொளி 2013 இல் தரவேற்றப்பட்டாலும், 2007 இல் நடத்தப்பட்ட நிகழ்ச்சிதான் என்பதற்கான ஆதாரம் கீழே.. tw_blush:

http://www.dailymotion.com/video/x2c0vf_asatha-povadhu-yaaru-episode-18-par_fun

மிகுதியை அப்புறம் பார்க்கலாம்.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்றால் சிங்களவருக்கு புலி என்பது போன்று, சிலருக்கு தமிழ் என்றவுடன் உ ண்டியல் தான் நினைவில் வருகின்றது.....

Edited by putthan

பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது .

ஹா  ஹா  செம அண்ணே tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.