Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவையுடன் முரண்பாடா?, கூட்டமைப்புக்குள் குழப்பமா? - முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்-

கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்-

   

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக் கட்சி என்ற வகையில் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சர்வசாதாரண விடயம். அதனை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? இவை அனைத்தையும் நாம் பெரிதுபடுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது நோக்கம் நன்றாக அமைய வேண்டும். அது மாத்திரமன்றி எவரும் தனது கருத்தைக் கூற பரிபூரணமான உரிமையுடையவர்களாவார். அந்தவகையில் நாம் வெறுமனே உணர்ச்சி வசப்பட வேண்டிய அவசியமில்லை. என்னைப் பொறுத்தமட்டில் தமிழ் மக்களுக்கு நான் மிகவும் விசுவாசமாகவும் இதயசுத்தியுடனும் தொடர்ந்து செயற்படுவோம்.

நாம் அனைவரும் தமிழ் மக்களின் துயர்துடைக்கும் பணிக்கானப் புறப்பட்டவர்கள். அந்த வகையில் அனைவருமே எமது பணிகளை மிகவும் நேர்தியாக மேற்கொண்டு வருகின்றோம். பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவும் காசி ஆனந்தனும் நான் மட்டக்களப்பு நீதிபதியாக இருந்தபோது 1979ல் என்னால் விடுவிக்கப்பட்டார்கள். நீதியின் பால் சார்ந்தே அவர்களை பலகால சிறைவாசத்தின் பின்னர் விடுவித்தேன். அதனால் என்னை உடனேயே மட்டக்களப்பிலிருந்து தண்டனை தரும் விதத்தில் மாற்றிவிட்டார்கள்.

அன்று தொடக்கம் எனக்கு மாவையைத் தெரியும். தமிழ் மக்களின் ஈடேற்றத்துக்காக சளைக்காது குரல் கொடுத்து வரும் ஒருவர் அவர். அவர் மீது நான் மிகுந்த அன்பு கொண்டவர். எமக்கிடையே எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சிலவேளைகளில் சில வார்ததைகள் சொற்கள் தவறான கருத்தைக் கொடுக்கலாம். சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்ததால் அதில் தவறில்லை என்பது புலனாகும். அதுபோன்று தான இதுவும். எமக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.ஆளுமை மிக்க தலைவர் அவர். அந்தவகையில் அவர் தனது பொறுப்பை உணர்ந்து செயற்படுவார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு இல்லை. காலத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். விரைவில் நாம் ஒன்றுகூடி பேசி தமிழ் மக்களின் நெருக்கடிகளைப் போக்க அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது தொடர்பில் தீர்மானிப்போம்.

மக்கள் எம்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் செயற்பட வேண்டியது எமது தலையாய கடமை. எமது மக்கள் யுத்தவடுக்களைத் தாங்கியவர்களாகவும், அதிலிருந்தும் மீட்சி பெற இயலாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்று இளைஞர்களின் பிரச்சினை, கணவன்மாரை இழந்த பெண்களின் பிரச்சினை, வயோதிபர்களின் பிரச்சினை, முன்னாள் போராளிகளின் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அவற்றுக்கு நாம் தீர்வு காண வேண்டும்.

தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை நாம் சாதகமாக கையாள்வது அவசியம். யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை விவகாரம் முனைப்புப் பெற்றுள்ளது. அது தொடர்பில் நாம் துரிதமாகவும் வினைத்திறனுடனும் செயற்பட வேண்டும். இவ்வாறான பல்வேறு கடமைகள் எம்முன்னே விரிந்து கிடக்கும் நிலையில் நாம் சிறுசிறு விடயங்களில் முரண்படுவது வேண்டாத காரியம். இதனை ஒருசில ஊடகங்கள் பெரிதுபடுத்தி அதில் குளிர்காய முனைகின்றன. எனவே மக்கள் அது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம்.

நாம் மக்களால் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள். எமக்கடையே எந்தவிதமான போட்டியும், பொறாமையும் இருக்கக்கூடாது. அவ்வாறு தான் நாம் இன்றுவரை அனைவரும் செயற்பட்டு வருகிறோம். அதை எதிர்காலத்திலும் கடைப்பிடிப்போம். மக்கள் எம்மீது கொண்ட அதீத நம்பிக்கையே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எம்மை ஆதரித்து முன்னிலைப்படுத்தி வந்துள்ளது. எனவே தமிழர் பிரச்சினை சாண் ஏற முழம் சறுக்கும் நிலைக்கு செல்லாதிருப்பதை உறுதி செய்வது எமது தார்மீக கடமை. அதனை நாம் செவ்வனே செய்வோம். தமிழர்களுக்கு விடிவு பிறக்கும் வகையில் நாம் செயற்படுவோம்.

தமிழ் மக்கள் மனம் தளரக்கூடாது. சிறு விடயங்களை எண்ணிக் கவலைகொள்ளத் தேவையில்லை. நாம் அனைவரும் மிகுந்த விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் தொடர்ந்து செயற்படுவோம். வெற்றி கிடைக்கும் என்பதில் எவரும் கிஞசித்தும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அதேபோன்று ஊடகங்களும் தங்கள தார்மிகப் பொறுப்பை உணர்ந்து செயற்படுவது அவசியமாகும். இன்று கிட்டியுள்ள சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தி வெற்றி கொள்ளச் சாத்தியமான அனைத்தையும் மேற்கொள்வோம். அதேவேளை அனைவரது ஒத்துழைப்பும் எமக்கு இன்றியமையாததாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=140403&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும்  தமிழரசுக்கட்சியினதும்  கூட்டமைப்பினதும் தலைமைகள்  அதிலுள்ள உறுப்பினர்களைத் தங்கள் அடிமைகள் என்றுதான் நினைக்கின்றார்கள். மூச்சு விடுவதற்கும் தலைமையிடம் அனுமதி கேட்க வேண்டுமாம்.

மாவையையும், காசியையைம் மட்டுமல்ல அவர்களை பதவிக்காக தூண்டிவிட்ட  சம்பந்தன் உட்பட அத்தனை தமிழரசுகட்சி தலைவர்களையும் அன்றைக்கே உள்ளே போட்டிருந்தால் தமிழர்கள் இவ்வளவு கஷ்ரப்பட்டிருக்கமாட்டார்கள். தவறு செய்துவிட்டார் நீதியரசர்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா நாகரீகமான முறையில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.மாவை,சுமத்திரன் போல் பேசவில்லை.அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்றார். மாவை,சுமத்திரனுக்கு ஏன் குத்துதுஃ அவர்கள் நல்லவர்கள் இல்லையா? யார் கண்டது பாம்பின் காலைப் பாம்பு அறியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லுறமில்ல எங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று. காகம் வடையக் கவ்விக்கொண்டு போக வடை கீழ விழும் எண்டு கீழ நிண்டு கொண்டு நரி போலை வீணீ வடிச்சுக் கொண்டு நிண்ட ஆக்கள்தான் பாவங்கள்! இனி துடைச்சுப்போட்டுப் போகலாம்!:cool:

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லுறமில்ல எங்களுக்குள்ள எந்தப் பிரச்சினையும் கிடையாது என்று. காகம் வடையக் கவ்விக்கொண்டு போக வடை கீழ விழும் எண்டு கீழ நிண்டு கொண்டு நரி போலை வீணீ வடிச்சுக் கொண்டு நிண்ட ஆக்கள்தான் பாவங்கள்! இனி துடைச்சுப்போட்டுப் போகலாம்!:cool:

தமிழ் மக்களுக்காக அவர்களின் எதிர்கால விடுதலைக்காக  வீணி வடிப்பதற்கும்
சிங்களம் தரும் சில சுகபோகங்களுக்காக வீணி வடித்துக் காத்திருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன வாலி அண்ணை

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிங்களம் தரும் சிலசுக போகங்களுக்காக  மட்டும் ஏன் கஜே கோஸ்டியை இறக்கி வெல்லவைக்க வெட்கங்கெட்ட கீழ்த்தரமான செயல்கள் எல்லாம் செய்யப்பட்டன?  (எனக்கு கேள்வி கேட்பது பிடிக்காது கேள்வி கேட்ட ஆக்களுக்கு முந்தி நடந்தது என்னவெண்டு தெரியும்தானே!:innocent:)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிங்களம் தரும் சிலசுக போகங்களுக்காக  மட்டும் ஏன் கஜே கோஸ்டியை இறக்கி வெல்லவைக்க வெட்கங்கெட்ட கீழ்த்தரமான செயல்கள் எல்லாம் செய்யப்பட்டன?  (எனக்கு கேள்வி கேட்பது பிடிக்காது கேள்வி கேட்ட ஆக்களுக்கு முந்தி நடந்தது என்னவெண்டு தெரியும்தானே!:innocent:)

இந்தக் கருத்தை எழுதிய நேரம் எனக்குப்பதில் தெரியாது என்று எழுதியிருக்கலாம்.

( எனக்குத் தெரியாது காத்து காதும் வைத்த மாதிரி எனக்கு மட்டும் கேட்கும்படி சொல்லுங்கோ)

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் பொருத்தமில்லாமல் முட்டாள் தனமா கேள்வி கேட்டது நீங்கள், கூட்டமைப்புக்குள் குழப்பம் வரும் என்று வீணீ வடிச்சுக்கொண்டு நிற்பத்ற்கும் சிங்களம் தரும் சுகபோகம் எண்டு உங்களால் சொல்லப்படும் விடயத்துக்கும் தொடர்பு ஏது? ஏதோ மக்கள் மீது அக்கறை உள்ளது போல கூட்டமைப்பின் மீது உள்ள கசப்பு உணர்வால் எழுதியிருக்கிறீர்கள். இன்றுவரை கூட்டமைப்பு தன்னால் முடிந்ததை மக்களுடன் நின்றுகொண்டு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், உங்கள் நீலிக் கண்ணீருக்கும் பசப்பல் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தயவு செய்து கொஞ்சம் ........  ........... வரப் பாருங்கள். :innocent:

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படிச்சவங்களே இப்படித்தான் குத்துங்க எசமான், குத்துங்க ....,.???

கூட்டமைபுக்குள் குழப்பம் வரும் குட்டையில் பிணயாவாரம் செய்யலாம் என்று காத்திருந்த நெடியவன் தரவழி குப்பாடி புல வால்களுக்கு நீதியரசர் கூடை நிறைய கரி எடுத்து முகம் பூரா பூசியுள்ளார்.

இங்கேயும் சிலருக்கு முகம் பூராக் கரி ???

உள் குத்துக்களால் அப்பாவி இளைஞர்களை பலி கொடுத்து பொது நன்மையை தெருவில் போட்டுடைக்க சம்பந்தன் பிரபாவும் இல்லை, சீவி கருணாவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிய சிவிக்கு ஆப்பு இருக்கு என்று வீணி வடிச்சுப் போட்டு இப்ப கதையைப்பாரன். 

ஐயோ.. ஐயோ, சின்னப்பிள்ளைங்க 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப்பெற்றுத்தர 20 பா ஊக்களைக் கேட்ட சம்பந்தரின் பிளானே  எதிர்க்கட்சித்தலைவர் பதவி தான். சிங்கள நாட்டிற்குள் தமிழருக்குக் கூட்டமைப்பால் தீர்வு கிடைத்த மாதிரித்தான்.

சுய நல வாதிகளின் கூடாரந்தான் இன்றைய கூட்டமைப்பு.

அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே வேறாக இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதாக எல்லாம் முடிந்து விட்டது.

இப்போது விக்கியர் கூட்டமைப்பிற்கு நல்லாத் தண்ணி காட்டுறார்.
பிடிக்காத ஆக்கள் வழமையான பாதையில் துரத்த வெளிக்கிடிகினம்

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வைப்பெற்றுத்தர 20 பா ஊக்களைக் கேட்ட சம்பந்தரின் பிளானே  எதிர்க்கட்சித்தலைவர் பதவி தான். சிங்கள நாட்டிற்குள் தமிழருக்குக் கூட்டமைப்பால் தீர்வு கிடைத்த மாதிரித்தான்.

சுய நல வாதிகளின் கூடாரந்தான் இன்றைய கூட்டமைப்பு.

அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே வேறாக இருந்தது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானதாக எல்லாம் முடிந்து விட்டது.

இப்போது விக்கியர் கூட்டமைப்பிற்கு நல்லாத் தண்ணி காட்டுறார்.
பிடிக்காத ஆக்கள் வழமையான பாதையில் துரத்த வெளிக்கிடிகினம்

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரில் கை வைத்தால், சம்சும் கொம்பனி... பிச்சை எடுக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிய விக்கிக்கு ஆப்பு இருக்கெண்டு யார் சொன்னது?

ஆதாரம் பிளீஸ்?

விக்கி கரியப் பூசீட்டார், அத துடைக்க கூட வக்கில்லை - கதை மட்டும் ......

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி உவையளும் புலம்பெயர்தேசங்களில் காசுசேர்க்க வெளிக்கிட்டினம், அதற்காக விக்கி ஐயாவைப் போகச்சொன்னதாகவும் அதற்கு அவர் தன்னால் இப்போது போகமுடியாதெனவும் மற்றப்படி அதன்பின்பு சரியான கணக்குவழக்குகளைப் பராமரிக்க எனக்குப் போதிய அவகாசம் இல்லை எனவும் கூறியதாக கூட்டமைப்பின் இன்னுமொரு மாகாணசபை அமைச்சர் (சத்தியமூர்த்தி?)  ஒரு மறுப்பறிக்கையில் கூறியுள்ளார்.

 

அட கடவுளே நாங்கள் உண்டியலைத் துடைப்பம் எண்டு பார்த்தால் கூட்டமைப்பு உண்டியலை செகஜோதிகாவாக எல்லோ மினுக்கி வைச்சிருக்கு, அப்ப புலம்பெயர் புலுவாலுகளாகிய  எங்கள்கதி என்ன! 

அடுத்தகேள்வி இதுவரை சேர்த்த காசுக்கெல்லாம் கணக்கு எப்படி! அதுக்காக நீங்கள் கணக்குக்காட்டினியளோ எனகேட்கவேண்டாம், காரணம் நாங்கள் ஜனநாயகத்தையும் ஜனங்களையும் குழிதோண்டிப்புதைச்சனாங்கள் எங்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது.

நீங்கள் ஜனநாயகவாதிகள் கணக்குக்காட்டியே தீரணும்

.ய்யோ, உங்கு புல வாலுக்களுக்கு தெரியாது எங்கடை சம்மும், மாவும் பவடிக்கு விக்கியரை பற்றி சொன்னதெண்டு! உதையளுக்கு பவடி? வெற்றி/ தெரியாததுகள்!

ம்ம்ம்..

1) வாயை கொடுத்து, சூ*தை கெடுத்த கதையாம்

2) பொல்லை கொடுத்து திருமப அடி வாங்கிய கதையாம்?

... ஒண்டோ, இரண்டோ பொருந்துவதை சொருகுங்கோtw_bawling:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.