Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் சார்..
இங்கு விசுகர், மருதர், நெடுக்கர் ..இப்படி பலர் புலிகள் தவறுகள் செய்தார்கள் என்று ஒத்துக்கொண்டால் மட்டும்  யாழ் களத்தில் நிகழ போகும் மாற்றம் தான் என்ன?

We have 2 extreme groups. 

புலிகள் / அவர் தலைமைகள் இப்போது இல்லை... யாருக்கு தண்டனை கொடுக்கலாம்... 
அவர்களை போராட அனுப்பிய மக்களையா? 
அவர்கள் அனுதாபிகளையா? இல்லை புலம் வாழ் எம் போன்ற "சாதா" க்களையா?

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் சார்..
இங்கு விசுகர், மருதர், நெடுக்கர் ..இப்படி பலர் புலிகள் தவறுகள் செய்தார்கள் என்று ஒத்துக்கொண்டால் மட்டும்  யாழ் களத்தில் நிகழ போகும் மாற்றம் தான் என்ன?

We have 2 extreme groups. 

புலிகள் / அவர் தலைமைகள் இப்போது இல்லை... யாருக்கு தண்டனை கொடுக்கலாம்... 
அவர்களை போராட அனுப்பிய மக்களையா? 
அவர்கள் அனுதாபிகளையா? இல்லை புலம் வாழ் எம் போன்ற "சாதா" க்களையா?

சசியர், ஆங்கிலத்தில் சொன்னது மட்டும் சரி! யாருக்குத் தண்டனை கொடுக்கலாம் என்று தேடியல்ல நான் அலைவது. தண்டிக்க ஒருவரும் இல்லாவிட்டால் ஒரு குற்றம் நடக்கவேயில்லை என்று அர்த்தம் இல்லை. victims இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு வேறு வழியில் நீதி கொடுப்பது பற்றி யோசிக்கலாம்! இப்படிக் குற்றங்களே நடக்கவில்லை என்று நழுவும் தமிழர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காது! இப்படியான திரிகளில் வந்து சுட்டிக் காட்டுவதன் மூலம் இவர்களின் கள்ளத் தனத்தை வெளிக்காட்டுவது மட்டுமே என் நோக்கம்! யாரும் மாற மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

சசியர், ஆங்கிலத்தில் சொன்னது மட்டும் சரி! யாருக்குத் தண்டனை கொடுக்கலாம் என்று தேடியல்ல நான் அலைவது. தண்டிக்க ஒருவரும் இல்லாவிட்டால் ஒரு குற்றம் நடக்கவேயில்லை என்று அர்த்தம் இல்லை.

victims இருக்கிறார்கள் அல்லவா?

பாதிக்கபட்டவர்களையே மண் மூடி புதைதால்தான் உங்களால் பேச முடிகிறது 
பாதிக்கபட்டவர்கள் உரும்பிராய் சிவகுமாரனின் குடும்பத்தில் இருந்து தொடங்குகிறது 
ஏன் முள்ளி வாய்க்காலில் மட்டும் நின்று தொங்குகிறீர்கள் ?
இந்த கேள்விக்கு எந்த பதிலையும் தராத நீங்கள் ....... எந்த பாதிக்கபட்டவர்கள் பற்றி பேசபோகிரீர்கள்?
சிவகுமாரனின் குடும்ப துன்பம் 
உங்கள் மூலைகளில் expire பண்ணிவிட்டதா ? 

நீங்கள் நல்லவர்கள் 
நீங்கள் நடுநிலைவாதிகள் 
இந்த வர்ணணைக்கு எது ஒத்துவருமோ அதை மட்டும் அள்ளி எடுப்பது.
பின் எதாவது சாக்கு போக்கு காட்டி எம்மீது அதை திணிப்பது 
இதுவே ஒரு அடாவடித்தனம்.

பாதிக்கபட்டவர்கள் இல்லை என்று யாரவது சொன்னார்களா ?
1978 இல் இருந்து இருக்கிறார்களே ?
இதைதான் நான் சொல்லிகொள்கிறேன். 

அவர்களுக்கு வேறு வழியில் நீதி கொடுப்பது பற்றி யோசிக்கலாம்!

புலிகளில் தாமாக சென்று இணைந்து இறந்தவர்கள் வீடுகளில் 
எஞ்சியவர்களை பிடித்து சிறையில் அடைக்கலாம். 

யோசிப்பதற்குதானே மூளை இருக்கிறது 
இன்னமும் நிறைய யோசிக்கலாம். 

அதையும் குட்டிமணி தங்கதுரை வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும் 
என்பதே எனது எண்ணம். 

இப்படிக் குற்றங்களே நடக்கவில்லை என்று நழுவும் தமிழர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காது!

நீதி கிடைக்காத காரணத்தால்தான் 
குற்றங்களே தொடர்கின்றது 
நீதி கிடைத்தால் ....?
ஏன் குற்றம் நிகழ போகிறது 

உங்கடை இப்போதைய நிலவரம் இது .......
ஐ நா யாழ் களத்தில் நான் என்ன எழுதுகிறேன் என்று பார்த்துகொண்டு இருக்கிறது 
நான் புலிகள் குற்றம் செய்தார்கள் என்று எழுதிவிட்டால் போதும் 
உடனேயே சிங்கள ஆமிகளை பிடித்து சிறையில் அடைத்துவிடுவார்கள். 

என்னால்தான் இப்போ தாமதம்.
இந்த இடத்தில் ....
உங்களுக்கு என்போன்றோர் மீது வரும் விசரத்தை நான் மதிக்கிறேன். 
யாருக்குதான் வாராது ?

இப்படியான திரிகளில் வந்து சுட்டிக் காட்டுவதன் மூலம் இவர்களின் கள்ளத் தனத்தை வெளிக்காட்டுவது மட்டுமே என் நோக்கம்!

உங்களுடைய எண்ணம் எதோ 
அதை மற்றவர் மீது திணிப்பதே உங்கள் திண்ணம்.
இதில் கள்ள தனம் ?

கேள்வியை சரியாக கேளுங்கள் ...
பதில்கள் தரப்படும் என்பதற்கே 
பதில் இன்னமும் இல்லை.

உங்களுடைய வெறுமைகளை 
குத்தகை எடுக்க வேண்டிய வில்லங்கம் எனக்கு இல்லை 
தவறுகளை தொடக்கத்தில் இருந்து எடுக்க வேண்டும்.
அதில் இருந்துதான் தவறை புரிய முடியும் என்பதே எனது வாதம். 

நிர்வனாமாக திரிவதற்கு 
ஒரு குழு இப்போதும் போராடி வருகிறது 
அவர்களை மேற்கு நாட்டு அரசுகள் சட்டங்களால் 
அடக்கி வருகிறது.
சரியும் / தவறும் அவரவர் அறிவை பொறுத்தது 
அரச சட்டங்கள் காலம் சூழ்நிலைகளால் 
உருவாக்கபடுபவை.
இன்று பல நாட்டு அரசுகள் ஓரின சேர்கை யாளர்கள் மணம் முடிக்கலாம் 
என்று சட்டம் அமுல் படுத்துகின்றது.....

உங்களை கேட்டால் 
ஏன் முன்பு கொண்டுவரவில்லை என்று அந்த அரசுகள்மீது 
சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொன்னாலும் சொல்வீர்கள் 
(அது சரி என்றால் முன்னரும்  சரிதானே ?) 
காலம் நேரம் மனித குழுமம் 
அப்போதைய தேவைகள் 
ஆட்சிக்கு உட்பட்ட மக்களின் நலன்/நட்டம் 
இவை கருத்தில் கொண்டே சட்டங்கள் உருவாகுகின்றது. 

யாரும் மாற மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்!

நீதியை 
அநீதியிடம் 
அடகுவைத்து பிழைக்கும் எண்ணம் 
இருந்தால் .... எப்போதோ மாறி இருப்போம்! 

இராவணனுக்கு இராமன் இழைத்த அநீதிகளில் இருந்து தொடங்கவேண்டும் .

அனுமார் தனது வாலால் எப்படி இலங்கையை எரிக்கமுடியும் .அனுமாரை  போர் குற்ற விசாரணையில் சேர்க்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கள்

நாம் தான் குனியவேண்டும் என்று விரும்புகிறார்

பாவம்

முதல் முறையாக இருக்கும்

திரும்பி வலியுடன் வருவார்

நாமும் அப்படித்தானே வந்தோம்....

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனுக்கு இராமன் இழைத்த அநீதிகளில் இருந்து தொடங்கவேண்டும் .

அனுமார் தனது வாலால் எப்படி இலங்கையை எரிக்கமுடியும் .அனுமாரை  போர் குற்ற விசாரணையில் சேர்க்கவேண்டும் .

புலிகளின் போர் குற்றம் என்பது 
புலிகளின் முதலாவது குற்றத்தில் இருந்து தொடங்கவேண்டும் 
என்பது ........

உங்கள் அறிவுக்கு இப்படி விளங்கி இருக்கு ......
ஏவாளின் ஆப்பிளில் தொடங்கவில்லை 
என்பது சந்தோசம்! 
(ஏனென்றால் உங்கள் அறிவு எப்போதும் சர்தேச அளவிலானது) 

  • கருத்துக்கள உறவுகள்

இராவணனுக்கு இராமன் இழைத்த அநீதிகளில் இருந்து தொடங்கவேண்டும் .

அனுமார் தனது வாலால் எப்படி இலங்கையை எரிக்கமுடியும் .அனுமாரை  போர் குற்ற விசாரணையில் சேர்க்கவேண்டும் .

தெரிந்தது தான்

தமிழருக்கு ஒரு தீர்வு வர நீங்கள் விடப்போவதில்லை...

அதுவும் புலிகளின் தியாகத்தால்....:(:(:(

தெரிந்தது தான்

தமிழருக்கு ஒரு தீர்வு வர நீங்கள் விடப்போவதில்லை...

அதுவும் புலிகளின் தியாகத்தால்....:(:(:(

அண்ணை தேவாரம் பாடுவதை பார்த்தால் அறிக்கை வாசிக்கவில்லை போலிருக்கு .

நடப்பது எல்லாம் நன்றாகவே நடைபெறுகின்றது .  அதுவும் நாங்கள் சொன்னது போல எதிர்பார்த்தது போல .

எங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயங்கள் இன்று யு என் மூலம் அனைத்து உலகிற்கும் சொல்லப்பட்டிருக்கு. அதுதான் முக்கியம் .

கடைசியில் உள்ளக விசாரணையாக இது மாறும் சாத்தியம் தான் அதிகம் இருந்தாலும் இனி சிறிலங்கா சர்வதேசத்தின் கண்காணிப்பிற்குள் தான் இருக்கும் .

புதிய சிங்கள அரசின் நெருக்கடிகளையும் உணர்ந்து சம்பந்தனும் சுமந்திரனும் ஒரு தீர்வை நிட்சயம் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் "மகாபாரதத்தை" மேற்கோள் காட்டக் கிளிக்கினேன்! வெற்றுப் பெட்டி தான் வருகிறது! யாழை இயக்கும் மென்பொருளுக்கே சகிக்கவில்லை உங்கள் மொட்டை பிளேட் அறுவை! மனிதர்கள் எப்படித் தாங்குவர்?:rolleyes:  தமிழர்களை விடுங்கள், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பிடித்து ஆயுதம் கொடுத்து சண்டையில் விடுவதும் அதை இன்னொரு மனிதன்  பிழை என்று சொல்ல மாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதும் சரியா? இது தான் என் கேள்வி! இதற்குப் பதில் சொல்ல மனிதத் தன்மை போதும்! உங்கள் கீறல் விழுந்த தமிழ் தேசிய பக்தி rhetoric அவசியமேயில்லை!

அண்மையில் போரால் பாதிக்கப்பட்ட  இரண்டு  தமிழர்களின் கண்ணீர் கதைகளை யாழில் வாசிக்ககூடியதாக இருந்தது.

ஒன்று போரால் தன்  கணவனையும்  5 பிள்ளைகளில்  4 இனை பறிகொடுத்த தாயின் கண்ணீர் கதை
மற்றது  தன்  4  பிள்ளைகளையும் மனைவியையும் பறி கொடுத்த கணவரின் கண்ணீர் கதை

இரண்டு பேருக்கும் அவலகத்தினை அள்ளிக் கொடுத்தவர்களில் புலிகளும் உள்ளனர், சிங்களமும் உள்ளது

அந்த தாயின் முதலாவது மகளை புலிகள் வலுக்கட்டாயமாகக் கொண்டு  சென்று ஆனந்தபுரத்தில் சண்டையிட வைக்கின்றார்கள். பிள்ளை இறுதியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணமால் போய்விட்டார். 3 பெண் பிள்ளைகள்  சிங்களத்தின் பொது மக்கள் மீதான  ஷெல் வீச்சில் பலியாகி விடுகின்றனர்

அந்த தகப்பனிற்கு 4 உம் ஆண் பிள்ளைகள் . போரின் கொடூரம் தாங்காது போர்ப் பிரதேசத்தினை விட்டு வெளியே செல்ல புலிகளிடம் அனுமதி கேட்டும் அவர்கள் விடவில்லை. புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை கேடயமாக்கின்றனர். சிங்களம் ஷெல் வீசுகின்றது. 4 பிள்ளைகளும் மனைவியும் உடல் சிதறி துண்டங்களாகி இறக்கின்றனர்

இவ் இருவரின் இன்றைய அவல நிலைக்கு காரணமான குற்றவாளிகள் சிங்களமும் புலிகளும் தான்.

எதிரியும் எதிரிக்கு எதிராக  போராடப் போனவர்களும் என்று அனைவரும் ஒன்று சேர்த்துதான் எம் மக்களை சிதைத்தனர்.  இதில் இரண்டு தரப்பினரும் குற்றவாளிகள் தான். 

அண்ணை

கண்ணால் கண்ட தெய்வங்களுக்கு தேவாரம் பாடுவதில் எந்த வெட்கமும் இல்லை எனக்கு..

சிறீலங்காவுக்கு நெருக்கடியோ

யாரால் அண்ணை?

அறிக்கையை நீங்க தான் வாந்தி கொண்டு வாசித்திருக்கின்றீர்கள்

நாங்களல்ல...

எவரையும் விசாரிப்பதற்கு தடையுமில்லை

நீதி கிடைக்கணும்

அதுவே  வேண்டுதல்

கிடைக்கும்...

அதற்கு காரணம் புலிகள்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கள்

நாம் தான் குனியவேண்டும் என்று விரும்புகிறார்

பாவம்

முதல் முறையாக இருக்கும்

திரும்பி வலியுடன் வருவார்

நாமும் அப்படித்தானே வந்தோம்....

இதை என்ன கருத்தில் சொல்கிறீர்களோ தெரியாது! நான் உங்கள் போலப் பாதிக்கப் படவில்லை என்று சொல்வீர்களானால், நீங்களும் நானும் சிறி லங்காவை விட்டு வெளியேறிய காலப் பகுதியை ஒருதரம் பாருங்கள். நான் 2004 இல் இங்கே வந்தேன். தமிழருடனும் சிங்களவருடனும் குப்பை கொட்டி விட்டுத் தான் வந்தேன். 2009 வரை நான் போரினால் பாதிக்கப் பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அப்படி நினைப்பதில்லை! நீங்கள் 1983 இல் கலவரத்தில் பாதிக்கப் பட்டதையே உச்ச துன்பமாக நினைத்து வாழ்ந்து வரும் ஒருவரானால் உங்களுக்கு மற்றவர்களின் அனுபவங்கள் குறைவாகத் தான் தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை

கண்ணால் கண்ட தெய்வங்களுக்கு தேவாரம் பாடுவதில் எந்த வெட்கமும் இல்லை எனக்கு..

சிறீலங்காவுக்கு நெருக்கடியோ

யாரால் அண்ணை?

அறிக்கையை நீங்க தான் வாந்தி கொண்டு வாசித்திருக்கின்றீர்கள்

நாங்களல்ல...

எவரையும் விசாரிப்பதற்கு தடையுமில்லை

நீதி கிடைக்கணும்

அதுவே  வேண்டுதல்

கிடைக்கும்...

அதற்கு காரணம் புலிகள்.....

மேலே நிழலி எழுதியிருப்பது போன்ற கதைகள் ஆயிரம்! ஒரு தடவை இன்னொரு திரியில் நீங்கள் சொன்னது இது: "நான் ஊடகங்கள் வழியாக செய்தி பெறுவதில்லை, தாயக மக்களுடன் நேரடியான தொடர்பில் இருக்கிறேன்" . வன்னியில் இருந்து உயிர் பிழைத்து வந்த ஒருவரோடு கூட நீங்கள் பேசவில்லையா? அல்லது அவர்களுடன் பேசி அறிந்தவற்றை selective amnesia இல் மறந்து விட்டு உங்கள் வேலையைத் தொடர்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் "மகாபாரதத்தை" மேற்கோள் காட்டக் கிளிக்கினேன்! வெற்றுப் பெட்டி தான் வருகிறது! யாழை இயக்கும் மென்பொருளுக்கே சகிக்கவில்லை உங்கள் மொட்டை பிளேட் அறுவை! மனிதர்கள் எப்படித் தாங்குவர்?:rolleyes:  தமிழர்களை விடுங்கள், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பிடித்து ஆயுதம் கொடுத்து சண்டையில் விடுவதும் அதை இன்னொரு மனிதன்  பிழை என்று சொல்ல மாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்வதும் சரியா? இது தான் என் கேள்வி! இதற்குப் பதில் சொல்ல மனிதத் தன்மை போதும்! உங்கள் கீறல் விழுந்த தமிழ் தேசிய பக்தி rhetoric அவசியமேயில்லை!

இதை செய்யும் அமெரிக்காவில் ஏன் ஒட்டி கொண்டு இருக்கிறீர்கள் ?
உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் 
அதற்காக யாரும் ஒருவன் சாக வேண்டும் ?
இதெல்லாம் உங்களுக்கு எப்படி சரியாக புரிகிறது ?

கட்டாய இராணுவ பயிற்சி பிழை என்று அமெரிக்க அரசுக்கு கடிதம் ஏதாவது எழுதியதுண்டா ?
யாரோ ஒருவன் இறந்து கட்டி அமைத்த நாட்டில் வந்து ஒட்டி கொண்டு 
அவன் இறந்தது பிழை என்று ... வாதம் பண்ணுவது பொழுதுபோக்கு 
இதைதான் நான் சொல்லிகொள்கிறேன் 

அப்படி கட்டாய ஆட்செர்பினால்தான் 
அமெரிக்கா என்று ஒரு நாட்டை கட்டமைக்க முடிந்தது 
போர் என்று வந்தால் இந்த நாட்டில் இருக்கும் அனைவரும் 
போக வேண்டும் அதுதான் என்பக்க நியாயம்.

இறந்தவர்கள் உழைப்பை தியாகத்தை மதிக்கிறேன் 
இன்னொரு போர்வந்தால் இந்த அமெரிக்க சுகம் காணும் 
யாவரையும் டிராக்கில் ஏற்றவேண்டும் அதுதான் நியாயம்.

அரசு கட்டமைப்பு என்பது மக்களால் ஆனது 
நாம் உழைத்து வரி கட்டுகிறோம் 
அவர்கள் வரியை கூலியாக கொடுத்து 
அரசை இயக்குகிறார்கள் 
இதில் எதை நான் பிழை என்று ஒத்துகொள்ள வேண்டும் ?? 

28வருடம் முடிந்தவரை போராடினார்கள் 
இலக்கு மக்களை இனத்தை அழிவில் இருந்து காப்பது 
குண்டு கட்டி வெடித்தார்கள் 
வெடிமருந்து நிரப்பி படகேறி போனார்கள் 
தம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள் .....
வெள்ளம் மூக்கை முட்டும்போது 
முடியாது ....
இனி எல்லோருமே அணை கட்டவேண்டும் என்றார்கள்.

28 வருடம் யாரோ வீட்டு  பிள்ளை வெடிக்கும்போது 
சுகம் கூடி கிடந்தது குற்றமில்லை 
இனி முடியாது என்று அவர்கள் சொன்னது குற்றமாகி போய்விட்டதா ?

மிருக கூட்டத்தில் இருந்து இந்த உலகில் இதுதான் நடக்கிறது ...
குழுமமாகத்தான் வேட்டைக்கு போகிறது விலங்குகள்.
உலகம் பிழை என்று சொல்லுங்கள் ....
ஒத்துகொள்கிறேன்! 
படைத்தவன் பசி ஆசை இல்லாது ஜீவராசிகளை 
படைத்திருக்க வேண்டும் என்று ஒத்துகொள்கிறேன். 

பசி என்று வந்துவிட்டால் வேட்டைதான் ஒரே வழி உலகில் 
இதில் வேதாந்தம் பேசி நாடகம் ஆடவேண்டிய தேவை எனக்கு இல்லை. 
அடுத்தவன் பிடித்துபோட்டத்தை உண்டுவிட்டு 
எவரை விடும் ஏகத்தாழ்வு வாழ்வில் இஸ்டம் இல்லை. 

நியாத்திட்கும் அநியாதிட்கும் இடையில் ஒன்றை 
நான் ஒருபோதும் தேடியதில்லை.

இப்போ நாங்கள் நடுநிலைமை வாதிகள் என்று பூச்சு பூசிக்கொண்டு 
புதுசா ஒரு கூட்டம் கிளம்பி இருக்கு 
அவர்களும் அடித்தார்கள் இவர்களும் மறித்தார்கள் என்று.
ஏனென்றால் 1987இல் சிங்கள பௌத்த இராணுவம் 
லிபரசன் ஒபெரசன் என்று பலாலியில் இருந்து வெளிகிட்டபோது 
வசாவிளான் கட்டுவன் மயிலிட்டி மக்கள் எல்லாம் 
இராணுவ முகாமுக்குள்தான் ஓடினார்கள் .... தஞ்சம் அடைய.
அதுவே தொடர்ந்தது .....
முள்ளி வாய்காலில் அது நடக்க கூடாது என்று 
புலிகள் எல்லோரையும் மறித்து பிடித்தார்கள்.
பேசுவதில் ஒரு 2% உண்மை வேண்டாம்.

இத்தால் அனைவருக்கும் அண்ணை சொல்லிக்கொள்வது என்னவென்றால் ,

குழந்தைகள் ,பெரியவர்களை பலவந்தமாக பிடித்து முன்அரணில் விட்டு பலி கொடுத்தது ,மக்களை கேடயமாக பாவித்து பலி கொடுத்தது எல்லாம் காரணகாரியமாக

சிங்கள அரசை மாட்டி வைக்க புலிகள் செய்த இராஜதந்ததிரம் . இது  யு என் இற்கோ ,மாற்று கருத்தாளர்களுக்கோ சிங்களவனுக்கோ விளங்கவில்லை .விளங்கவும் மாட்டுது .

எப்படி இவ்வளவு அழிவுகளை நாங்களே ஏற்படுத்திவிட்டு சிங்களவனை மாட்டிவிட்டோம் பார்த்தீர்களா ?

மோட்டு சிங்களவன் மாட்டி விட்டான் .

இதற்கும் தீர்வு வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை இதை விட அதிமாக தமிழர்களை பலி கொடுத்து முயற்சி செய்து பார்ப்பம் .

வாழ்த்துக்கள் அண்ணை .

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரைக்கும் அமைப்பில் இருந்து தப்பி வந்த புலிகளே தாங்கள் செய்தது பிழை என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள்...சட்ட சிக்கல்களால் வெளிப்படையாக தாங்கள் செய்தது பிழை ஒத்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள்...இங்கு இருக்கும் கொஞ்சப் பேர் ஒத்து கொண்டால் என்ன? கொள்ளாட்டில் என்ன

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கவேண்டும் 
அதற்காக யாரும் ஒருவன் சாக வேண்டும் ?
இதெல்லாம் உங்களுக்கு எப்படி சரியாக புரிகிறது ?

மாறி உங்களை நீங்களே திட்ட ஆரம்பித்து விட்டீர்கள் போல இருக்கு! அல்லது நீங்கள் அமெரிக்காவில் இருந்து virtual reality இல் உயிரைக் மற்றவர்களுக்காக கொடுத்தீர்களோ தெரியாது! முதலே சொன்னேனே, உங்கள் ranting மொட்டை பிளேட்டால் என் கழுத்தை நானே அறுத்துக் கொள்வது போல இருக்கு!  tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

இதை என்ன கருத்தில் சொல்கிறீர்களோ தெரியாது! நான் உங்கள் போலப் பாதிக்கப் படவில்லை என்று சொல்வீர்களானால், நீங்களும் நானும் சிறி லங்காவை விட்டு வெளியேறிய காலப் பகுதியை ஒருதரம் பாருங்கள். நான் 2004 இல் இங்கே வந்தேன். தமிழருடனும் சிங்களவருடனும் குப்பை கொட்டி விட்டுத் தான் வந்தேன். 2009 வரை நான் போரினால் பாதிக்கப் பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அப்படி நினைப்பதில்லை! நீங்கள் 1983 இல் கலவரத்தில் பாதிக்கப் பட்டதையே உச்ச துன்பமாக நினைத்து வாழ்ந்து வரும் ஒருவரானால் உங்களுக்கு மற்றவர்களின் அனுபவங்கள் குறைவாகத் தான் தெரியும்!

இது தான் சிக்கலே

உடனே தனி மனிதப்பிரச்சினையாக்கி

விசுகுவின் சிக்கலாக்குகிறீர்கள்.

நான் எழுதுவது 

இவ்வளவும் நடந்தபின் தமிழர்க்கான தீர்வு பற்றி..

இதில் விசுகுவுக்கு எந்த நன்மை தீமையுமில்லை.

அந்த மக்கள் நிம்மதியாக வாழ ஒரு தீர்வு

அவ்வளவு தான்..

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் போரால் பாதிக்கப்பட்ட  இரண்டு  தமிழர்களின் கண்ணீர் கதைகளை யாழில் வாசிக்ககூடியதாக இருந்தது.

ஒன்று போரால் தன்  கணவனையும்  5 பிள்ளைகளில்  4 இனை பறிகொடுத்த தாயின் கண்ணீர் கதை
மற்றது  தன்  4  பிள்ளைகளையும் மனைவியையும் பறி கொடுத்த கணவரின் கண்ணீர் கதை

இரண்டு பேருக்கும் அவலகத்தினை அள்ளிக் கொடுத்தவர்களில் புலிகளும் உள்ளனர், சிங்களமும் உள்ளது

அந்த தாயின் முதலாவது மகளை புலிகள் வலுக்கட்டாயமாகக் கொண்டு  சென்று ஆனந்தபுரத்தில் சண்டையிட வைக்கின்றார்கள். பிள்ளை இறுதியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணமால் போய்விட்டார். 3 பெண் பிள்ளைகள்  சிங்களத்தின் பொது மக்கள் மீதான  ஷெல் வீச்சில் பலியாகி விடுகின்றனர்

அந்த தகப்பனிற்கு 4 உம் ஆண் பிள்ளைகள் . போரின் கொடூரம் தாங்காது போர்ப் பிரதேசத்தினை விட்டு வெளியே செல்ல புலிகளிடம் அனுமதி கேட்டும் அவர்கள் விடவில்லை. புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை கேடயமாக்கின்றனர். சிங்களம் ஷெல் வீசுகின்றது. 4 பிள்ளைகளும் மனைவியும் உடல் சிதறி துண்டங்களாகி இறக்கின்றனர்

இவ் இருவரின் இன்றைய அவல நிலைக்கு காரணமான குற்றவாளிகள் சிங்களமும் புலிகளும் தான்.

எதிரியும் எதிரிக்கு எதிராக  போராடப் போனவர்களும் என்று அனைவரும் ஒன்று சேர்த்துதான் எம் மக்களை சிதைத்தனர்.  இதில் இரண்டு தரப்பினரும் குற்றவாளிகள் தான். 

இது இன்றைய நிலையில் 
அமெரிக்கா ஒரு டாக்கிமண்டேரி தயாரித்தால் எப்படி இருக்குமோ ..?
அதன் பிரதி போல்  இருக்கு.

சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை 
என்பதுபோல். 

டாக்கிமேண்டரியின் கரு என்ன என்பது 
ஏற்கனவே முடிவு செய்தபின் 
எதை காட்சி  படுத்தவேண்டும் எனபது 
எடிடருக்கு தெரியாதா ? 

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நிழலி எழுதியிருப்பது போன்ற கதைகள் ஆயிரம்! ஒரு தடவை இன்னொரு திரியில் நீங்கள் சொன்னது இது: "நான் ஊடகங்கள் வழியாக செய்தி பெறுவதில்லை, தாயக மக்களுடன் நேரடியான தொடர்பில் இருக்கிறேன்" . வன்னியில் இருந்து உயிர் பிழைத்து வந்த ஒருவரோடு கூட நீங்கள் பேசவில்லையா? அல்லது அவர்களுடன் பேசி அறிந்தவற்றை selective amnesia இல் மறந்து விட்டு உங்கள் வேலையைத் தொடர்கிறீர்களா?

அதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்

இவ்வளவு அழிவுகளுக்குப்பின்னாலும் அவர்கள் கேட்பது ஒரு தீர்வு தான்

நிம்மதியான கௌரவமான வாழ்வு தான்

அதனால் கூட்டமைப்புக்கான ஆதரவு

இந்த அறிக்கை சார்ந்து வரவேற்ற எந்ததலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்

உங்கள் போல் புலிகளை விசாரியுங்கள்

அவர்களும் தப்புச்செய்தார்கள் என்று எவரும் சொல்லவில்லை.

இங்கு நீங்கள் மட்டும்........

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரைக்கும் அமைப்பில் இருந்து தப்பி வந்த புலிகளே தாங்கள் செய்தது பிழை என்று ஒத்துக் கொண்டுள்ளார்கள்...சட்ட சிக்கல்களால் வெளிப்படையாக தாங்கள் செய்தது பிழை ஒத்துக் கொள்ள முடியாமல் உள்ளார்கள்...இங்கு இருக்கும் கொஞ்சப் பேர் ஒத்து கொண்டால் என்ன? கொள்ளாட்டில் என்ன

நல்ல கருத்து. ஆனால், பல்லாயிரம் மக்களது துன்பத்தையும் அவலத்தையும் "2% வீதம் கூட உண்மையில்லை" என்று மறுதலிக்கும் போது கையும் வாயும் சும்மா இருக்குதில்லையே ரதி? இவர்களின் இருண்ட ஆன்மாவை இவர்களே பார்க்கச் செய்யும் ஒரு முயற்சி தான் இது!  

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் அனைவருக்கும் அண்ணை சொல்லிக்கொள்வது என்னவென்றால் ,

குழந்தைகள் ,பெரியவர்களை பலவந்தமாக பிடித்து முன்அரணில் விட்டு பலி கொடுத்தது ,மக்களை கேடயமாக பாவித்து பலி கொடுத்தது எல்லாம் காரணகாரியமாக

சிங்கள அரசை மாட்டி வைக்க புலிகள் செய்த இராஜதந்ததிரம் . இது  யு என் இற்கோ ,மாற்று கருத்தாளர்களுக்கோ சிங்களவனுக்கோ விளங்கவில்லை .விளங்கவும் மாட்டுது .

எப்படி இவ்வளவு அழிவுகளை நாங்களே ஏற்படுத்திவிட்டு சிங்களவனை மாட்டிவிட்டோம் பார்த்தீர்களா ?

மோட்டு சிங்களவன் மாட்டி விட்டான் .

இதற்கும் தீர்வு வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை இதை விட அதிமாக தமிழர்களை பலி கொடுத்து முயற்சி செய்து பார்ப்பம் .

வாழ்த்துக்கள் அண்ணை .

அண்ணை

அப்படியெல்லாம் எங்கும் எழுதவில்லை

நீங்க வாந்தியை விட்டு வெளியில் வாங்கோ

அப்பத்தான் மொழி புரியும்

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்றைய நிலையில் 
அமெரிக்கா ஒரு டாக்கிமண்டேரி தயாரித்தால் எப்படி இருக்குமோ ..?
அதன் பிரதி போல்  இருக்கு.

சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை 
என்பதுபோல். 

டாக்கிமேண்டரியின் கரு என்ன என்பது 
ஏற்கனவே முடிவு செய்தபின் 
எதை காட்சி  படுத்தவேண்டும் எனபது 
எடிடருக்கு தெரியாதா ? 

அப்ப இவர்களுக்கு நடந்தது பொய் என்கிறீர்களா?

இதில் புலிகளால் பாதிக்கப்பட்டதாக நீங்கள்கூறும் மக்களே புலிகள் இல்லையென கவலைப்பட நீங்கள் முதலைக்கண்ணீர் வடிப்பது போல் உள்ளது.

தமிழர்கள் ஆகிய நீங்கள் புலிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்குறீர்களே.......புனர்வாழ்வு பெற்று வீடுதிரும்பிய புலிகளையும் அவர்களது குடும்பத்தையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்....விசாரணை என்றபெயரில் அவர்களை தான் அரசாங்கம் வதைக்கப்போகின்றது என்பதை அதிகப்பிரசங்கியல் ஆகிய நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். 

சரி Justin அண்ணாவின் கேள்விக்குவந்தால்.

புலிகளை ஒருபயங்கரவாத இயக்கம் என்று கூறித்தான் எல்லாநாடுகளும் இணைந்து அழித்ததை Justin அண்ணா விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவே பயங்கரவாதிகளை ஒருதரப்பாக ஐநா எடுத்திருப்பது மகா தப்பு. அவர்கள் பயங்கரவாதிகள் அப்படித்தான் செய்வார்கள். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட உங்களுக்கெல்லாம் 2009 may 19 நியாயம் கிடைத்து விட்டது. பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று செயல்பட்டவர்கள் நடத்திய நாசகரச்செயல்பாடுகளுக்கே மக்கள் நியாயம் கேட்கிறார்கள். 

இப்ப என்னத்திற்கு திரும்பவும் பயங்கரவாதிகளை இங்கு இழுக்குறீர்கள்?

சிங்களவனிட்கு ......களா?

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.