Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதாரங்களுடன் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்கத் தயார்! - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

   

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் நாங்கள் சட்ட பூர்வமான நடவடிக்கையை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம். போரின் போது பாலியல் பலாத்காரக் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்திய அமைதிப்படை 1987 ஜூலை முதல் 1990–ம் ஆண்டு மார்ச் வரை இலங்கையில் முகாமிட்டிருந்தது. அப்போது அவர்கள் மீது இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. அதேபோன்று ஈழப்போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டுகள் பரப்பபட்டுள்ளன.

ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் போர்க்குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணைக்கு அதாவது இலங்கை அரசு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும். வடக்கு மாகாணத்தில் கடந்த 2000–ம் ஆண்டு எட்டு தமிழர்களை சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு கடந்த ஜூன் மாதம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதுபோன்று உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் இதுபோன்று நியாயமான தீர்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் உள்நாட்டில் வெளிநாட்டு நிபுணர்கள் உதவியுடன் ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்தப்பட்டாலும் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140903&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடைபெற்றபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா போர்க் குற்றவாளி தான். பாலியல் குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்லி முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்து நாடகம் போடுகிறார். போர் நடந்த சமயத்தில் இவரின் அப்போதைய ஆருயிர் நண்பர் கோத்தாபய "இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்" என்று கூறியதை மறந்துவிட்டார் போல உள்ளது. 

ஆனால் சரத் பொன்சேகாவில் எனக்குப் பிடித்தது தமிழக அரசியல்வாதிகளை நன்கு எடைபோட்டு "அரசியல் கோமாளிகள்" என கணித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளே கொக்கரிக்கிற அளவுக்கு....இருக்கிறது...சிங்களத்தின் நீதி.!

 

images?q=tbn:ANd9GcQ0z6f-guHzLApTIRGJSjp

பொன்னியை யாரும் ஒண்டும் கேக்காமலே உளறுது. இதில் முக்கியமான விடயம் கிளிநொச்சி சொறிலங்காபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் பொன்னியின் ஆட்டம் முடிவடைந்து கோத்தாவின் கைகளுக்கு முழுதாக சென்றுவிட்டது. பொன்னியர் ஒரு முழுமையான இராணுவதளபதியாக இருக்கவில்லை என்பதை இவர் கைதுசெய்யப்பட்டவிதத்தில் புரிந்திருக்கும்.

ஒருவேளை இவரின் அறிக்கைகள் மூலம் சிங்களமக்களையும் (யுத்தகமுதா என பிதட்டிக்கொள்ளும்), இராணுவ வல்லூறுகளையும்  சமாளித்து மேலோட்டமான ஒரு விசாரணையை அரசுசெய்ய முயட்சிகின்றது அல்லது பொன்னி தான் விழுந்தாலும் பறவாயில்லை ராஜபக்ஸ கூட்டம் மாட்டுப்படவேண்டும் என்று சிந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னர் நல்லவன். அவருக்கு ஓட்டுப் போட்டு அவரை ஜனாதிபதியாக்க முயற்சித்தோம். ஆனால் தமிழ் மக்கள் முழு அளவில் ஒத்துழைக்க வில்லை.அவர் ரணில்>மைத்திரியை விட நல்லவன்.TNA

  • கருத்துக்கள உறவுகள்
  

வடக்கு மாகாணத்தில் கடந்த 2000–ம் ஆண்டு எட்டு தமிழர்களை சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு கடந்த ஜூன் மாதம் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதுபோன்று உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டால் இதுபோன்று நியாயமான தீர்ப்பு கிடைக்கும்.

 

ஒரு நாட்டின் பிரதமரான ராசீவ் காந்தியை துவக்கால் அடித்தவனுக்கு தண்டனை கொடுக்காது, பெரும் பதவி கொடுத்துப் பாராட்டிக் கெளரவித்ததும் சிறீலங்கா அரசுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடைபெற்றபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா போர்க் குற்றவாளி தான். பாலியல் குற்றங்கள் நடக்கவில்லை என்று சொல்லி முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்து நாடகம் போடுகிறார். போர் நடந்த சமயத்தில் இவரின் அப்போதைய ஆருயிர் நண்பர் கோத்தாபய "இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்" என்று கூறியதை மறந்துவிட்டார் போல உள்ளது. 

ஆனால் சரத் பொன்சேகாவில் எனக்குப் பிடித்தது தமிழக அரசியல்வாதிகளை நன்கு எடைபோட்டு "அரசியல் கோமாளிகள்" என கணித்தது. 

I cannot go past this without giving you a green award. Well said buddy !

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப்படைகளையும்  இதற்குள் இழுத்துவிட்டுத் தான் தப்பலாம் என்று பொன்சேகா அவர்கள் யோசிக்கின்றார்.
உள்ளக விசாரணையென்றாலும் பொன்சேகா மாத்தையாவிற்கெதிராகச் சாட்சி சொல்லும் மக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.