Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண இளைஞர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தந்தையர் தடுப்பில்,

தனயர்கள் பசியால் அழுகையில்

தாயவர் கதறும் அவலம்,

மண்பீட்பு போரில் மாண்டவர் போக

மீண்டவர் உடலில் அவயங்கள் இல்லை

அடுத்தவருக்காய் ஆயுதம் ஏந்தியவர் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அலைகின்ற அவலம்,

இத்தனை அழிப்புக்கும் நீதி வேண்டும் என்று ஐ.நாவில் ஈழத் தமிழரின் ஒலம்,

ஆனால், இங்கே கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு கூட்டம் கட்டவுட்டுக்கு பாலூற்றும் அவலம்,

இந்தக் காவாலிகளுக்கு சந்தன வாசனை என்னென்று தெரியுமா?

ஈழத் தமிழரின் அவலம் புரியுமா?

பாலுக்கு அழுகின்ற பாலகர் நிலை புரியுமா?

இவர்கள்தானே எங்கள் எதிர்காலம்?

யார் எம்மைக் காப்பது?

கடவுளா?

கட்டவுட்டுகளா?

(யாழில் இன்று திரைப்படக் கட்டவுட்டுக்கு பால் வார்ப்பு)

pulle-01.jpg

pulle-02.jpg

pulle-03.jpg

pulle-04.jpg

- See more at: http://www.newjaffna.com/moreartical.php?newsid=40453&cat=nnews&sel=current&subcat=14#sthash.HyJSaKcn.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எம்.ஜி. ஆருக்கு பால் ஊத்தின கோஸ்டிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எம்.ஜி. ஆருக்கு பால் ஊத்தின கோஸ்டிகள்

நாங்கள் பிள்ளையாருக்கு பால் ஊற்றின கோஸ்டிகள் ........

அறியாமைக்குள் இருந்துகொண்டு ஒரு மூட செயலை செய்வது தப்பில்லை 
அது அறியாமை.
வளர்ந்துவிட்ட நாகரீக உலகில் ....... செய்யபடுவபை 
கீழ்த்தரமான செயலுக்குள் மட்டுமே உள்ளடக்க முடியும். 

1970இல் எம்ஜியாருக்கு யாழ்பாணம் என்ற குக் கிராமத்திற்குள் இருந்துகொண்டு 
பால் ஊற்றி இருப்பது வேறு 

2015இல்  ஐ போனை இன்னொரு கையில் வைத்துகொண்டு பால் ஊற்றுவது வேறு. 
இவர்கள் இன்னமும் அறிவு ரீதியாக வளவிரவில்லை என்ற ஒரே ஒரு காட்சிதான் இதில் பார்க்க முடியும். 

"மனிதன்"
என்பது ஆறு அறிவின் முழு தோற்றம். 
அறியாமை விதிவிலக்கு. 
அநாகரீகம் செயல் இழுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

2015இல்  ஐ போனை இன்னொரு கையில் வைத்துகொண்டு பால் ஊற்றுவது வேறு. 
இவர்கள் இன்னமும் அறிவு ரீதியாக வளவிரவில்லை என்ற ஒரே ஒரு காட்சிதான் இதில் பார்க்க முடியும். 

 

ஐ போனை வைத்து அறிவை வளர்க்காமால்.....ஐயர் வீட்டு ஆத்துகாரியை "ஐ" எடுக்கிறதால வந்த விணை

 

ஐ போனை வைத்து அறிவை வளர்க்காமால்.....ஐயர் வீட்டு ஆத்துகாரியை "ஐ" எடுக்கிறதால வந்த விணை

ஐயர் ஆட்டையை போட்ட காசில் ஐயரம்மாவுக்கு ஐ போனை வாங்கிகொடுத்தால் போதாது, அவவையும் கொஞ்சம் கவனிக்கனும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நான் அதிகமாக விரும்புகிறேன்.

ஒரு ஜனநாயக நாட்டின் மக்கள் சந்தோசமாக இருப்பதற்கான அறிகுறிகள் இவை.

ஆனால் அங்கு ஏதோ மக்களெல்லாம் பசி பட்டினியோட பிச்சை எடுக்கிறார்கள் என்பதாகப் புலம்பெயர்புலுவால்கள்தான் குய்யோ முறையோ எனக் கத்துகிறார்கள். 

வடமாகாணசபை இருக்கின்றது. அவர்கள் தங்களது பிரதிநிதிகளை பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள், கொசுறாக விஜயகலா, டக்ளஸ் அண்ணர் ஆகியோரையும் சேர்த்தே அனுப்பியுள்ளார்கள் அங்கஜன் இராமநாதன் அவர்கள் பாராளுமன்றில் நியமன உறுப்பினர், அதுக்குப்பின்பு அவர்களுக்கு என்ன குறைச்சல், சம்பந்தன் ஐயா எதிர்கட்சித்தலைவராக இருக்கிறார் ஒரு நாட்டின் பிரதமருக்கு அடுத்தபடியாகச் செல்வாக்குள்ள பதவி அவரும் மாலையும் கழுத்துமாக யாழ்ப்பாணம் வந்திறங்கி இருக்கிறார். 

விஜை எங்க ஊரு மாப்பிள்ளைவேற பாலாபிசேகம் செய்யாட்டின் மாப்பு கோவிச்சுக்கொண்டு எங்க ஊருப்பொண்ணை துன்புறுத்தினால் யார் பதில் சொல்லுறது புலம்பெயர் புலுவால்களா?

இப்பவும் சொல்லுறன் அவர்கள் அவர்களுடைய சோலியைப்பார்க்கிறார்கள், நீங்கள் புலிக்கொடியைத் தெருவிலநீட்டிக்கொண்டு முக்குறதைக் கைவிடுங்கோ.

Edited by Elugnajiru

எதுகை எல்லாம் நல்லத்தான் இருக்கு, கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

இதெல்லாம் குறைந்தது கடந்த பத்தாண்டுகாலமாக வளர்க்கப்பட்ட கலாச்சாரம் இப்போது திடீரென முளைக்கவில்லை.

 

ஏன் கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமா/?  நீங்கள்   போய் காப்பாற்றுறது/?<_< 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கலாச்சாரம் தானே .....ஜனநாயக நாடு என்றால் இதெல்லாம் இருக்கத்தான் வேண்டும் 

ஒரு காலத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் நாடு இருந்த போது மக்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு போயிட்டினம் ....இப்படி உருப்படியான வேலைகள் செய்ய பயங்கர வாதிகள் விட்டினமா ...? இப்ப சந்தோஷமாக பாலூத்துகிறார்கள் ...எல்லாவற்றுக்கும் சேர்த்து ...அது உங்களுக்கு பிடிக்கவில்லை 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கலாச்சாரம் தானே .....ஜனநாயக நாடு என்றால் இதெல்லாம் இருக்கத்தான் வேண்டும் 

ஒரு காலத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் நாடு இருந்த போது மக்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டு போயிட்டினம் ....இப்படி உருப்படியான வேலைகள் செய்ய பயங்கர வாதிகள் விட்டினமா ...? இப்ப சந்தோஷமாக பாலூத்துகிறார்கள் ...எல்லாவற்றுக்கும் சேர்த்து ...அது உங்களுக்கு பிடிக்கவில்லை 

 

 

 

சே ....சே...
யார் சொன்னார் பிடிக்கவில்லை என்று ...?
மக்கள் ஜெனநாயக வாதமாக ...
பாலை மட்டுமே ஊற்றுகிரார்களே ....?
என்ற மன வருத்தம் மட்டும்தான்.

பொங்கி படைக்க ...
தடையாக இருக்கும் பயங்கரவாதமும் தகர்க்க பட வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் .... வர வர நீங்களும் அவுங்க மாதிரியே கதைக்க தொடங்கிட்டீங்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.