Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபோக்ஸ்வாகனின் ஊழலை அம்பலப்படுத்தி உலகையே அதிர வைத்த தமிழர்!

Featured Replies

ஃபோக்ஸ்வாகனின் ஊழலை அம்பலப்படுத்தி உலகையே அதிர வைத்த தமிழர்!

 

மெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம்.

அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்துக்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்று கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை.

vagan_vc3.jpg

அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவிந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

தற்செயலாக, அந்த வாகனத்தின் புகை வெளியிடும் அளவைச் சோதித்த அரவிந்தும், அவரது நண்பர் மார்க் பெஸ்சும் அதிர்ந்து போனார்கள். காரணம் புகை வெளியிடும் அளவை நிர்ணயிக்கும் ஈ.பி.ஏ கட்டுப்பாட்டு விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச அளவை விட, இந்த வாகனத்தின் புகை வெளியேற்ற அளவு 20 மடங்கு அதிகமாக இருந்தது.

vagan_vc1.jpg

இதேபோல ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ஜெட்டா’ விலும் 15 முதல் 35 விழுக்காடு அதிகப் புகை வெளியேறியிருக்கிறது.

ஆனால் தர நிர்ணயச் சோதனைகளிலெல்லாம் மிக எளிமையாகத் தேர்வு பெற்றவை இந்த கார்கள். அது எப்படி? என்ற குழப்பத்திற்கான விடையைத் தேடுகையில்தான் அரவிந்த், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மாபெரும் ஊழலைக் கண்டறிந்திருக்கிறார்.

vagan_vc2.jpg

காற்றில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும், மோனோ நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற காரீயத்தை (Lead) சுற்றுச்சூழலில் அளவிற்கு அதிகமாக வெளியிடும் போதிலும், அந்த அளவைக் குறைத்துக் காட்டுமாறு, ஏமாற்றுத் திறன் வாய்ந்த ஒரு மென்பொருளை இந்த வாகனங்களில் பொருத்தியிருக்கிறது இந்த நிறுவனம்.

இதைக் கண்டறிந்த உடன், தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவராக, உடனடியாக புகார் பதிவு செய்துள்ளார் அரவிந்த்.

இதைத் தொடர்ந்து, உலக ஊடக வெளியில் பட்டவர்த்தனமாக அம்பலமானது ஃபோக்ஸ்வாகன் ஊழல். இந்த அவமானத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநரான மார்ட்டின் விண்டர்கோர்ன், இந்த மோசடிக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார்.

மேலும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், 18 பில்லியன் டாலர்கள் இழப்பீடு கட்டவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து 5 நாட்களில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், பங்குச்சந்தையில் தன் மதிப்பில், 25 பில்லியன் யூரோக்களை இழந்து, அடிமட்டத்தை அடைந்துள்ளது.

ஒரு ராட்சத கார்ப்பரேட் நிறுவனத்தை, தனி மனிதனாக நின்று ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பது போல வீழ்த்திய தமிழரான அரவிந்த் திருவேங்கடம், உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.

http://www.vikatan.com/news/article.php?aid=53121

  • தொடங்கியவர்

ஃபோக்ஸ்வேகன் பாணியில் ஸ்பெயின் கார் நிறுவனம் மோசடி: 7 லட்சம் கார்கள் சோதனையில் சிக்கின

 
 
ஸ்பெயினின் சீட் கார்.
ஸ்பெயினின் சீட் கார்.

ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் நிறுவன கார்கள் தற்போது புகை அளவு மோசடியில் சிக்கி பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இந்த விவகாரம் அடங்கும் முன்பாக இதே பாணியில் ஸ்பெயினைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான சீட், சாஃப்ட்வேரில் தில்லுமுல்லு செய்து கார்களை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போன்று சாஃப்ட்வேரில் மோசடி செய்ததாக சீட் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது.

சாஃப்ட்வேர் மோசடி காரணமாக ஸ்பெயினில் 3,320 கார்களை விற்பனை செய்வதை ஃபோக்ஸ்வேகன் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஸ்பெயின் நிறுவனமான சீட் கார்களில் இதுபோன்ற மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 7 லட்சம் கார்களில் இதுபோன்ற சாஃப்ட்வேர் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் சீட் நிறுவன சர்வதேச வர்த்தக அமைப்பு மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றில் எத்தனை கார்கள் ஸ்பெயினில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் தெரியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இத்தகைய பாதிப்புடைய கார்கள் பற்றிய விவரத்தை அதன் உரிமையாளர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக நிறுவன இணையதளத்தில் தேடும் வசதியை ஏற்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தகைய மோசடியான சாஃப்ட்வேரைக் கொண்ட இஏ 189 இன்ஜினை உற்பத்தி செய்வதை நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியன் வகுத்துள்ள புகை அளவு சோதனையில் வெற்றி பெறும் அளவுக்கு கார்களை தயாரிக்கும் வரையில் இத்தகைய சாப்ட்வேர் இன்ஜினை நிறுத்தி வைக்க உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகை அளவு சோதனையின் போது ஃபோக்ஸ்வேகன் கார் களில் உள்ள சாப்ட்வேர் நிர்ணயிக் கப்பட்ட அளவுக்கு மட்டும்தான் புகையை வெளியிடுவதாகக் காட்டும். பிறகு வழக்கமாக சாலை களில் ஓடும்போது நிர்ணயிக்கப் பட்ட அளவைக் காட்டிலும் 40 மடங்கு நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நிறுவனம் இது போன்ற மோசடி செய்து 1.1 கோடி கார்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.

http://tamil.thehindu.com/business/போக்ஸ்வேகன்-பாணியில்-ஸ்பெயின்-கார்-நிறுவனம்-மோசடி-7-லட்சம்-கார்கள்-சோதனையில்-சிக்கின/article7710624.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் நாட்டின் மானத்தை..... கப்பலேற்றிய தமிழன்.
இனி... Made in Germanay  என்றால், சனம் அலறி அடித்துக் கொண்டு ஓடப் போகுது.
இரகசியமாக Volks Wagenனுடன் கதைத்து, கொஞ்சக் காசு பார்க்கத் தெரியாத முட்டாள் தமிழன்.30.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் நாட்டின் மானத்தை..... கப்பலேற்றிய தமிழன்.
இனி... Made in Germanay  என்றால், சனம் அலறி அடித்துக் கொண்டு ஓடப் போகுது.
இரகசியமாக Volks Wagenனுடன் கதைத்து, கொஞ்சக் காசு பார்க்கத் தெரியாத முட்டாள் தமிழன்.30.gif

உலகம் எங்க அதிர்ந்தது?

அதிர்ந்தது 'ஜெர்மனி' தான்..!:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்க அதிர்ந்தது?

அதிர்ந்தது 'ஜெர்மனி' தான்..!:mellow:

சாதரணமாக மாற்றக் கூடிய பொருளில், தகிடு தத்தம் செய்யப் போன.... Volks Wagaenனால், மற்றைய கார் நிறுனனங்களின் பெயரும், சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.
இத்துடன், எனது மகளும் நேற்று இன்னொரு கார்  நிறுவனத்தில், தனது படிப்பை ஆரம்பித்து விட்டார். அது உள்ளூர, எனக்கும் பயமாக உள்ளது புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமாக மாற்றக் கூடிய பொருளில், தகிடு தத்தம் செய்யப் போன.... Volks Wagaenனால், மற்றைய கார் நிறுனனங்களின் பெயரும், சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.
இத்துடன், எனது மகளும் நேற்று இன்னொரு கார்  நிறுவனத்தில், தனது படிப்பை ஆரம்பித்து விட்டார். அது உள்ளூர, எனக்கும் பயமாக உள்ளது புங்கை.

மகளுக்கும்... அவளது வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அப்பா, அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்!

தமிழ் சிறி...எல்லாம் நன்மையாக முடியும்! வீணாகக் கவலைப் படாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாதரணமாக மாற்றக் கூடிய பொருளில், தகிடு தத்தம் செய்யப் போன.... Volks Wagaenனால், மற்றைய கார் நிறுனனங்களின் பெயரும், சந்தேகத்துக்கு உள்ளாகியுள்ளது.
இத்துடன், எனது மகளும் நேற்று இன்னொரு கார்  நிறுவனத்தில், தனது படிப்பை ஆரம்பித்து விட்டார். அது உள்ளூர, எனக்கும் பயமாக உள்ளது புங்கை.

உங்கட மகளும் எதையாவது கண்டுபிடிக்கப்போய் நாங்களெல்லாம் சைக்கிளில் போகவேண்டி வரப்போகுது.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை செய்யிற களவெல்லாம் இப்படித்தான்.. வெளில லேசில தெரியாது. நாங்க வெள்ளைக்காரன் சுத்தமுன்னு திரிய வேண்டியான். எங்கட போர்க்குற்ற விசாரணையிலும் இதுகளை நம்பி......... சிங்களவை காப்பாற்றிக் கொண்டிருக்கிறம். ஒருவேளை புலிகளும் அப்பப்ப தண்டனை கொடுத்திருக்காட்டி.. தமிழனை அழித்த அத்தனை பேரும் இப்ப கிழடு கட்டையா இருந்து பெருமை பேசிக்கிட்டு இருப்பினம். :rolleyes:

நீண்ட நாட்களாக high end  கார்  வாங்க ஆசை இருந்தது. இன்னும் கொஞ்ச நாட்களில் VolkVagen னும் Audi யும் இழந்த சந்தை வாய்ப்புகளை மீண்டும் பெறவும் நுகர்வோரைக் கவரவும் நல்ல  Deal தருவார்கள். 0% வட்டியுடன் ஏதாவது மாட்டுப்பட்டால் வேண்ட வேண்டியது தான்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.