Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலி - விமர்சனம்

Featured Replies

புலி - விமர்சனம்
 
 
 நடிகர்கள்: விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமய்யா, பிரபு
 

ஒளிப்பதிவு: நடராஜ் (நட்டி)

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

தயாரிப்பு: பிடி செல்வகுமார்,ஷிபு தமீன்ஸ்

இயக்கம்: சிம்பு தேவன்

மனித உருவில் இருக்கும் அதிசக்தி வாய்ந்த வேதாளங்கள் மனித குலத்தை ஆட்டிப் படைக்கின்றன. இவர்களின் ராணியான ஸ்ரீதேவி 56 ஊர்களை ஆள்கிறார். இந்த ஊர்களில் வாழும் மக்களை துன்புறுத்தி, கொள்ளையடித்து வாழ்கின்றன வேதாளங்கள்.

 

இதை எதிர்க்கும் ஒரு ஊரின் தலைவரான பிரபு, மக்களுடன் போய் ராணியைச் சந்தித்து முறையிடுகிறார். அங்கே வேதாளங்கள் மக்களைக் கொல்கிறார்கள். பிரபுவின் கையை வெட்டி அனுப்புகின்றனர். அப்போதுதான் ஆற்றில் மிதந்து வருகிறது ஒரு குழந்தை. அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறார் பிரபு. அந்தக் குழந்தைதான் விஜய்.

Puli Review

அதே ஊரைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் விஜய்க்கும் காதல். ஒரு டூயட் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணமான அன்றே ஸ்ருதியை தூக்கிக் கொண்டு போகின்றன(ர்) வேதாளங்கள். ஸ்ருதியை மீட்க வேதாளக் கோட்டைக்குப் போகிறார் விஜய்.

 

சர்வ சக்தி படைத்த வேதாளங்களையும், மாய தந்திரங்கள் தெரிந்த அவர்களின் ராணி ஸ்ரீதேவியையும் எப்படி வெல்கிறார் விஜய்? விஜய் உண்மையில் யார்? என்பதெல்லாம் மீதிக் கதை.

Puli Review

 ஆதியந்தமில்லாத ஒரு கற்பனை உலகில் கதை நடப்பது போலக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் நிகழ்காலத்தில் பயன்படுத்தும் வழக்குச் சொற்களை வசனங்களாக்கியதில் படத்தின் அழுத்தம் அடிபட்டுப் போகிறது.

 

படம் முழுக்க ஆட்டம் பாட்டு அதிரடி சண்டைகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் செட்டுகள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருந்தாலும், அவற்றை சுவாரஸ்யமாகத் தருவதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் சிம்பு தேவன். பெருமளவு காட்சிகள் டல்லடித்தபடி நகர்கின்றன.

Puli Review

 அந்த ஒற்றைக் கண் மனிதன் காரெக்டர் முழுக்க கிராபிக்ஸ் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. படம் முழுக்க அத்தனை பாத்திரங்களும், அந்த கிராபிக்ஸ் கரும்புலி உள்பட ஆ என வாயைப் பிளந்து பல்லைக் காட்டியபடியே இருக்கிறார்கள். அல்லது தாவித் தாவி பறக்கிறார்கள். வேதாளங்களின் சக்தியாம் இதெல்லாம்!

 

அதியுச்ச கற்பனைக் கதை என்று கூறி விஜய்யிடம் கால்ஷீட் வாங்கியவர்கள், அவரை வித்தியாசமாக தோன்ற, நடிக்க வைத்திருக்க வேண்டாமா? எல்லோரும் சடாமுடியுடன் இருக்க, விஜய்க்கு மட்டும் பக்காவாக சம்மர் கட்டிங். இப்படியெல்லாம் யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், இது லாஜிக்கே இல்லாத கற்பனை உலகம் என்று சொல்லிவிட்டார்கள் போலும்!

 

சித்திரக் குள்ளர்கள், பேசும் பறவைகள், பெரும் அரக்கர்கள், மந்திர சக்தி படைத்த ஸ்ரீதேவி என சுவாரஸ்யப்படுத்த எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும், அவை ஜஸ்ட் லைக் தட் கடந்து போகின்றன.

மிகப் பிரமாதமான ஆட்டத்துடன் அறிமுகமாகிறார் விஜய். மருதீரனாகவும் புலிவேந்தனாகவும் அவர் தன் பங்கை முழுமையாகச் செய்திருந்தாலும், அவரை இன்னும் சிறப்பாகக் காட்டியிருக்கலாம் இயக்குநர்.

ஆனால் புலிவேந்தனாக வரும் விஜய் பாத்திரம், தன் மக்களுக்காக விஷம் குடித்து சாகும் தருணத்தில் நடிப்பு அபாரம். அவரது உதடுகள் கூட நடித்துள்ளன.

ஸ்ருதியுடன் ரொமான்ஸ், ஹன்சிகாவுடன் கற்பனையில் ரொமான்ஸ் என அதில் குறை வைக்கவில்லை.

Puli Review

  ஆனால் அவரது வசன உச்சரிப்பில் ரொம்பவே செயற்கைத்தனம். படம் முழுக்க தடுமாறித் தடுமாறி அவரைப் பேச வைத்திருப்பது என்ன மாதிரி ஸ்டைல் என்பதை சிம்பு தேவன்தான் விளக்க வேண்டும்.

இரண்டு நாயகிகளுக்கும் பெரிய வேலையில்லை. ஆரம்பத்தில் 25 நிமிடங்களில் ஒரு டூயட் பாடிவிட்டு காணாமல் போகும் ஸ்ருதி, இடைவேளைக்குப் பின் மயக்க நிலையில் படுத்தவர், க்ளைமாக்ஸின் கடைசி நொடியில்தான் எழுகிறார். அவர் வேலை அவ்வளவுதான்.

விஜய்யை ஒருதலையாகக் காதலித்து இரண்டு பாடல் பாடும் வேடம் ஹன்சிகாவுக்கு. ஆள் அம்சமாக இருக்கிறார்.. ஆனால் மேக்கப் முகத்தில் அடிக்கிறது!

சில காட்சிகளில் ஸ்ரீதேவியைப் பார்க்க பயமாக இருக்கிறது. க்ளைமாக்ஸில் விஜய்யுடன் அவர் போடும் வாள்சண்டை பிரமிக்க வைக்கிறது.

சுதீப்பை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். எப்போது பார்த்தாலும் அந்த உயரமான நாற்காலில் கோணலாக சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறார். அரை பாடலுக்கு நடனமாடி, இரண்டு சண்டைகள் போட்டு செத்துப் போகிறார்.

தம்பி ராமய்யாவுக்கு பச்சைத் தவளையை நக்கி வழி கேட்கும் பாத்திரம். பெரிதாக சிரிப்பு வரவில்லை. சத்யனும் அப்படியே. ஆனால் ஒரு காட்சியில் குபீரென சிரிப்பு கிளம்பும்.. படம் முழுக்க விஜய்யுடன் வரும் பேசும் பறவை பாவ விமோசனம் பெற்று எழும்.. அது கருணாஸாம்!

 

பிரபு, விஜயகுமார், நரேன், ஜோ மல்லூரி என நடிகர் பட்டாளம் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

 

எது செட், எது கிராபிக்ஸ், எது நிஜம் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி சிறப்பான கலையமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் செய்துள்ளனர். இதே அளவு அக்கறையை ஸ்க்ரிப்டில் காட்டியிருக்கலாம் இயக்குநர்.

Puli Review

 பறவை முட்டையுடன், ஆற்றில் குழந்தை அடித்து வருதல், பெரிய அரண்மனையில் முதலைக் கறியுடன் வைக்கப்படும் பிரமாண்ட விருந்து, அதற்கான பின்னணி இசை, ஆமை துப்புதல் போன்றவையெல்லாம் ஏற்கெனவே வந்த சில படங்களின் காட்சிகளை நினைவூட்டுகின்றன.

தேவி ஸ்ரீ பிரசாதின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை உயிரோட்டமாக இல்லை.

அத்தனை சுலபத்தில் கிடைக்காத விஜய் கால்ஷீட், முதல் நிலை தொழில்நுட்பக் கலைஞர்கள், கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்கும்போது, 'ச்சும்மா பூந்து விளையாடி' இருக்க வேண்டாமா சிம்பு தேவன்?

  • தொடங்கியவர்

புலி படம் எப்படி?

 

வேதாளங்கள் மனிதகுலத்தை ஆட்சி செய்கின்றன. கொடுங்கோலாட்சி. அந்தக் கொடிய ஆட்சியை வென்று மக்களைக் காக்கிறார் விஜய். இந்த ஒற்றைவரிக்கதையை    வேதாளமனிதர்கள், அரக்கர்கள், சித்திரக்குள்ளர்கள், பேசும்பறவைகள் மந்திரதந்திரங்கள் ஆகியனவற்றைக் கலந்து பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.

puli%201.jpg

வேதாளர்கள் 56 கிராமங்களை ஆட்சி செய்கிறார்கள். அவற்றில் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கும் பிரபு, வேதாளவீரர்கள் மக்களைக்கொடுமைப்படுத்தி அவர்களிடமிருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொள்கிறார்கள் என்று ஊர்மக்களைக் கூட்டிக்கொண்டு வேதாளராணியிடம் முறையிடப்போகிறார். போகிற இடத்தில் தளபதி, ஊர்மக்களைக் கொல்வதோடு பிரபுவை மட்டும் கையை வெட்டி அனுப்புகிறார். கைவெட்டப்பட்ட பிரபுவுக்கு ஆற்றில் அடித்துவரப்படும் ஒரு குழந்தை கிடைக்கிறது. அந்தக்குழந்தையே விஜய்.

விஜய் வளர்ந்து அந்தக்கிராமத்தைச் சேர்ந்த ஸ்ருதியைக் காதலித்துக் கல்யாணம் செய்கிறார். கல்யாணம் முடிந்ததும் வேதாளர்கள் அவரைக் கடத்திக்கொண்டுபோய்விட, அவரை மீட்கப் விஜய் போகிறார். போகிறஇடத்தில் நடப்பதுதான் கதை.

கிராமமக்கள், வேதாளங்களைக் கண்டு பயப்படுகிற நேரத்தில், ஒரு வேதாளத்தின் காலைப்பிடித்துக்கொண்டு, நீங்க வேதாளம் நாங்க பாதாளம் என்று விஜய் வசனம் பேசுகிறார். உடனே பிரபு, புலி பதுங்குறது பாயுறதுக்குத்தான் என்று உடனே அதைச் சமன்செய்கிறார்.

விஜய் தன் வழக்கமான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் ரசித்து நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் புதுவேகம் காட்டியிருக்கிறார். புலிவேந்தனாக வருகிற காட்சிகளில் ஓர் உண்மையான தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இரண்டு நாயகிகளையும் சரிசமமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முதல்பாதியில் ஸ்ருதிஹாசன் இரண்டாம்பாதியில் ஹன்சிகா என்று கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சமே நடித்து தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறார்கள்.

ராணியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவி, இளமையாகத் தெரிகிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். எல்லாத்தவறுகளும் உங்கள் மூலமாக நடந்தது ஆனால் நீங்கள் தவறு செய்யவில்லை என்பார்கள். அதற்கேற்ப நடித்திருக்கிறார். உருண்டுதிரண்ட அவருடைய கண்கள் அவருடைய வேலையில் பாதியைச் செய்துவிடுகின்றன. puli%20the%20movie%20sm.jpg

தளபதியாக வருகிற சுதீப், கொடுங்கோலர்களுக்குரிய எல்லாஅம்சங்களுடனும் இருக்கிறார். விஜய் உடன் படம் முழுக்க வருகிற தம்பிராமய்யாவும் சத்யனும் சிரிக்கவைக்கிறார்கள். அவர்களுடன் இமான்அண்ணாச்சி, ரோபோசங்கர், வித்யுராமன் ஆகியோருடைய வேடங்கள் வித்தியாசம்.

முதல்பாதியில் இயற்கைஎழில்சூழ்ந்தஇடங்கள், இரண்டாம்பாதியில் பிரமாண்டஅரண்மனைகள் ஆகியனவற்றை தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் மேலும் பெரிதாக்கியிருக்கிறார் நட்டி. பாடல்களில் அவருடைய வேலை பெரிதாக இருக்கிறது. முத்துராஜின் கைவண்ணம் படத்தைப் பெரிதாகக் காட்ட உதவியிருக்கிறது.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ஜிங்கிலியா, புலி புலி பாடல்கள் ஆட்டம்போடவைக்கும். மெல்லிசைரகமான ஏண்டி ஏண்டி ரசிக்கவைக்கும்.  நீங்க தப்பு பண்ணல உங்களச் சுத்தி இருக்கிறவங்கதான் அப்படிப் பண்றாங்க, நான் ஆளவந்தவன் இல்ல, இந்த மக்களை வாழவைக்க வந்தவன், மக்களுக்காக உயிரையும் கொடுக்கிறவன்தான் தலைவன் போன்ற வசனங்களும் கடைசிக்காட்சியும் விஜய்யின் அரசியல் எண்ணத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

விஜய்யின் வெகுமக்கள் செல்வாக்கையும் தன்னுடைய வழக்கமான பேண்டஸியையும் கலந்து புலியைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

ஆடியோ வடிவில் கேட்க:

http://www.vikatan.com/cinema/article.php?aid=53152

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் கிழிஞ்சுது அப்ப... படம் சூசூசூசூ (ப்பரா) தான் இருக்கும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிக் குட்டிப்பூனையைப் பிடிச்சு பெயின்ற் பூசி ஓடவிடுறாங்களாம் புலியென்று....

அவர்கள் விடிகாலையில் விஜய் வீட்டுக்குள் புகுந்து சல்லடை போட்டார்கள்.
ம்கூம். எதுவும் சிக்கவில்லை.
அப்படியே ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா, சத்யன், சிம்புதேவன், வைரமுத்து, தேவி சிறி பிரசாத்....... 
எல்லோர் வீட்டிலும் அக்குவேறு ஆணிவேறாகத் தேடியும் ஏமாற்றமே.அங்கும் இல்லை. ஆனால் படத்தைப் பார்த்தபோது அதனை எங்கோ மறைத்து வைத்துள்ளதாக நம்பினார்கள். 
கடைசியாக எல்லோரையும் அழைத்து வந்து ஒரு அறையில் இருத்திவிட்டுக் கேட்டார்கள் அந்த அப்பாவி ரசிகர்கள்-
" புலி படத்தின்ர கதையை எங்கையடா ஒளிச்சு வைச்சிருக்கிறியள்?"

12088328_10207823141841818_7021387160787

அர்ஜுன்,

குற்றம் கடிதல் மற்றும் கிருமி படங்களை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா? ரொராண்டோ வில் எங்காவது ஓடுகின்றதா?

அர்ஜுன்,

குற்றம் கடிதல் மற்றும் கிருமி படங்களை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததா? ரொராண்டோ வில் எங்காவது ஓடுகின்றதா?

இல்லை என்றுதான் நினைக்கின்றன் .குற்றம் கடிதல் வீடியோவில் வந்துவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வார இறுதியில், எனது மகன்மாரின் விருப்பமாக, நானும் மனைவியும் பிள்ளைகளுமாக  ஹை விகாம் என்ற இடத்தில புலி படத்தை பார்த்தோம். திரை அரங்கு நிறைந்த காட்சி. எல்லோரும் ரசித்தோம். கொடுத்த காசு வீண் போகவில்லை.
பலரின் எதிர் மறையான விமர்சனங்களை முகப்பு புத்தகத்திலும், ஏனைய ஊடகங்களிலும் வாசித்த மாதிரி மோசமான படம் இல்லை. நல்ல தொழில் நுட்பம். எந்திரன் படம் பார்த்த பிறகு பார்த்த ஒரு  வித்தியாசமான கற்பனை படம். சிறுவனாக இருக்கும் போது வாசித்த அம்புலிமாமா கதைகள் ஞாபகம் வந்தது. வாள் வீச்சுக்களின் ஒலி யமைப்பு அபாரம். ஜில்லா, தலைவனை விட இது நல்ல படம். அடுத்த விஜயின் படத்துக்கு நமது பசங்க ரெடி.
 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலி திரைப்படம் சிறுவர்களுக்காக எடுக்கப்பட்டது போல் இருக்கின்றது!:unsure: நம்ம விஜய் ஸார் சிறுவர்களையும் மறந்துவிடவில்லை! :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.